PDA

View Full Version : என்னவளே...!



வசீகரன்
11-08-2007, 06:06 AM
அந்த வானத்து நீளத்தில்
ஒரு புடவை வேண்டும்
அதில் வானவில்லில் நெய்த
ஜ*ரிகை வேண்டும்...

வெண் முத்துகலால் செய்த
ஒரு அட்டிகை வேண்டும்
அதில் சில நட்சத்திரங்களை
சேர்த்து கோர்த்திட வேண்டும்...

மாசற்ற தங்கத்தால் செய்த
ஒரு காப்பு வேண்டும்
அதில் சில வைரங*களை
இட்யே பதித்திட வேண்டும்...

மணக்கும் சந்தனத்தில் குழைத்த
ஒரு அஞ்ஞனம் வேண்டும்


மல்லியொடு மறிக்கொழுந்து சேர்த்த
ஒரு சாரம் வேண்டும்
அதை உன் கூந்தலில் சூடிட
நீ வேண்டும் !

kalaianpan
11-08-2007, 07:25 AM
சுவயான கவிதை..
தொடரட்டும் சேவை.....

அமரன்
11-08-2007, 07:03 PM
காதலர்கள் கனவு காண்பார்கள்.அதில் சில நடந்து விடும்.பல கானலாகி விடும்.அப்படியான சில கனவுகளை வசீகரனின் கவிதையில் காண்கின்றேன்.வானத்தின் நீளத்துக்கு புடவை..கலப்பில்லா தங்கம், நடக்குமா.அப்படித்தானோ காதலியும் என எண்ண வைக்குது கவிதை. பாராட்டுக்கள்