PDA

View Full Version : மீண்டும் நண்பனின் ஹைகூக்கள்......5 எண்ணம்.



Nanban
02-06-2003, 09:16 AM
முன்மாதிரி

எரிபொருள் சேமிப்பு
கூட்டத்திற்கு முதன்மந்திரி -
ஆயிரம் வாகனங்களில்.

....

Nanban
02-06-2003, 12:56 PM
பாம்பு.

காதலி கண்ணீரில்
காதலன் புதியவளின் மடியில் -
பாம்பு சட்டையுடன்..

Nanban
02-06-2003, 12:57 PM
ப(ட்ட)ணம்.

குடிதண்ணிக்குப் பணம்?
வாயைப் பிளந்தான் கிராமவாசி -
சாராய நகரம்.

Nanban
02-06-2003, 12:58 PM
சிறை.

பாய்ந்து வந்த மீன்
விழுங்கி விடுதலையைக் கொடுத்தது -
தூண்டில் புழுவிற்கு.

Nanban
02-06-2003, 12:58 PM
பொய்மை.

கோயில் விழா இரவில்
பகலென ஹேலோஜென் விளக்குகள் -
சூர்யகாந்தி மலர்ந்தது.

rambal
02-06-2003, 04:02 PM
4வதாக சொல்லி இருக்கும் சிறை அழகு..
அதில் இருக்கும் அராஜகமானஒப்பியல் எந்த இசம் என்று சட்டென்று மனதிற்கு வரவில்லை..
இருந்தாலென்ன.. இசங்களாகப் பார்ப்பதைக்காடிலும் கவிதைகளாகப் பார்த்தல் நலம்..

(ஹைக்கூ இலக்கணம் சரியாக அமைந்துள்ளதா.. இல்லையெனில் நண்பன் எனும் நண்பர் ஆராயத் தொடங்கிவிடுவார்.. சும்மா லுலுலயிக்கு....)

Nanban
03-06-2003, 04:19 PM
Symbolism - மீன் மனிதனின் குறியீடு. தூண்டில் - உலக இச்சைகள். புழு - நம் பேராசைகள். நம் பேராசைகளை நாமே விழுங்கி, உலக இச்சைகளில் மாட்டிக் கொண்டு, சிறைப்படுகிறோம் - நம் பேராசைகளை நிறைவேற்ற நாம் செலவிடுவது நம்மை. மீன் பிடிக்கும் ஒரே காட்சி தான் கண்ணுக்குத் தெரியும் - image - படிமம். இந்தப் படிமத்தின் வழியே குறியீட்டுத் தன்மை கொண்ட கவிதை.

Imagism என்ற வகையிலும் சேர்க்கலாம்.

மேலும், haikuவின் இலக்கணத்தை முற்றிலுமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று முயற்சித்து எழுதியது. 5/7/5 அசைகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது நியதி அல்லவா? அசை பிரித்துப் பாருங்கள். அந்த விதிகளை மீறாத கவிதை. கொஞ்சம் சவாலான விஷயம். முயற்சிக்க முயற்சிக்க எல்லாமே பிடிபடும்.

சிறை

பாய்ந்-து வந்-த மீன்
விழுங்-கி விடு-தலை-யைக் கொடுத்-தது -
தூண்-டில் புழு-விற்-கு.

Narathar
06-06-2003, 07:02 AM
நண்பா!
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
தொடரட்டும் உன் பணி!

நிலா
06-06-2003, 09:16 PM
பாராட்டுக்கள் நண்பரே!

gankrish
07-06-2003, 05:44 AM
அருமை நண்பா அருமை... முதலும் ..ஐந்தாவதும் சூப்பர்

puthusu
07-06-2003, 08:26 PM
நன்பன்... நல்ல கவிதைகளின் நண்பன்..
அருமை நண்பனே
சிறை அருமையிலும் அருமை.
பாராட்டுக்கள்

kavidha
09-06-2003, 12:34 PM
நண்பரே இன்றுதான் இங்கு வர நேரம் கிடைத்தது. எனது ஆக்கத்தைப்போடுவதை விட இதை வாசித்து கருத்துச் சொல்வதே நன்றென நினைத்தேன்.
அருமையான குறும்பாக்கள்
தூண்டில் துயரம் அபாரம்
கவிதா

cidruvan
09-06-2003, 05:55 PM
மலை வெடித்துச் சிதறும் பாறையாக வீழ்ந்து கிடக்கும் கல் அழகானது என்றாலும் அதை செதுக்கி வைப்பதும் இன்னும் நல்ல அழகு தான். கவிதைக்கு இலக்கணமும் கிடைத்துவிட்டால், நன்றாகத் தான் இருக்கிறது.........

Nanban
10-06-2003, 06:57 PM
வா..வ்..

உங்கள் அனைவரின் அன்பும், ஆசியும் உற்சாகமூட்டுகிறது......... நன்றிகள் பல..........

ஆதவா
08-07-2007, 05:07 AM
இதையும் கொஞ்சம் படியுங்க மக்களே!!! நண்பனின் ஹைக்கூ புல்லரிக்கூ!!!

அக்னி
08-07-2007, 11:26 AM
சிறை

பாய்ந்து வந்த மீன்
விழுங்கி விடுதலையைக் கொடுத்தது -
தூண்டில் புழுவிற்கு.

நண்பனின் ஹைக்கூ வும் அருமை....
அதற்கான விளக்கமும் தெளிவு...
மீண்டும் இவர்களெல்லாம் வந்து எமக்கெல்லாம் இன்பம் தருவார்களா என்ற எதிர்பார்ப்பு..,
ஹைக்கூ போல சிறிதாகவல்ல, தொடர் கவிதைபோல தொடராக நீள்கின்றது...
உங்கள் மனங்களைத் தட்டும், எங்கள் ஏக்கம் என்ற எதிர்பார்ப்புக்களுடன்...

அமரன்
25-08-2007, 09:46 AM
மக்களே! நமது மன்றத்தின் சொத்து நண்பனின் விருந்தின் சுவைக்கு கட்டியம் கூறும் ஒரு பருக்கை இத்திரி. படித்து மகிழுங்கள்: என்னைபோன்றோர் கற்று தெளியுங்கள். (நன்றி ரசிகன்)

உங்களுக்காக.

சிவா.ஜி
25-08-2007, 09:54 AM
இந்த வரிகளை விமர்சிக்க தகுதியில்லாமல் வியந்து நிற்கிறேன்.எப்படிப்பட்ட கருத்துக்கள்..ஆஹா..சுவைக்கிறது...நன்பரை காணாததுதான் வலிக்கிறது.

ஆதி
06-01-2010, 10:21 AM
திரியின் சுட்டிக் கொடுத்தமைக்கு நன்றி அமர்..

அனைத்துமே அழகிய கவிதைகள்..

எல்லாத்திலும் எனக்கு அதிகம் பிடித்தது சிறை கவிதைதான்..

//பாய்ந்து வந்த மீன்
விழுங்கி விடுதலையைக் கொடுத்தது -
தூண்டில் புழுவிற்கு.//

ஹைகூவின் அத்தனை இலக்கணங்களும் பொருந்திய கவிதை இது என்பது இன்னொரு சிறப்பு..

ஹைகூ கவிதையின் முதன்மை இலக்கணம், கவிதை கற்பனையாக இருக்க கூடாது, ஒரு நிகழ்வாக இருக்க வேண்டும், அந்நிகழ்வோடு நமக்கு நேரடியாக தொடர்ப்பிருக்க வேண்டும், அந்த நிகழ்வையும் எந்த வர்ணிப்பும் இன்றி சொல்ல வேண்டும்..

இதை செய்துவிட்டாலே ஹைகூ எழுதுவதில் பெரும் வெற்றி கிட்டவிட்டதாக அர்த்தமாகிறது..

சிறை கவிதையில் நண்பன் அவர்கள் இதை செம்மையாக செய்திருக்கிறார்..

பாராட்டுக்கள் நண்பன் அவர்களுக்கு..