PDA

View Full Version : ஏன் செய்யத் தவறிவிட்டாய்!!!

aren
11-08-2007, 02:16 AM
அழகை
பெண்ணிற்குக் கொடுத்தாய்
அவர்களின் மேல்
ஆசையை
ஆணுக்குக் கொடுத்தாய்

எங்களுக்குள்
பிணக்கங்கள்
ஆரம்பிக்கும் முன்
கைலாசம் சென்று
கங்கையுடன்
சங்கமாமானாய்

கங்கையுடன்
சுமூகமாகி
நீ அவளை
உன் தலையில்
வைத்து கூத்தாடுகிறாய்

பெண்கள் மேல்
ஆசைவர
கற்றுக்கொடுத்த நீ
பெண்களிடம்
சுமூகமாவதை
ஏன் கற்றுக்கொடுக்க
தவறிவிட்டாய்

எங்களுக்கும்
கற்றுக்கொடுத்திருந்தால்
நாங்களும்
பெண்களை எங்கள்
காலடியில்
வைத்திருப்போமே
நீ கங்கையை
உன் தலையில்
வைத்திருப்பதுமாதிரி

ஏன் செய்யத் தவறிவிட்டாய்!!!!

அசரீரியின் குரல் மேலிருந்து:
தலையில் பெண்களை வைத்துக்கொள்ளும் அளிவிற்கு தலையில்
முடியில்லை அதான் காலடியில் வைத்துக்கொள்கிறேன் என்பதை நாசூக்ககாக சொல்லும் மனிதனே உன்னை
மெச்சுகிறேன்.

பென்ஸ்:
எல்லாம் நம்பளை மாதிரிதான் போலிருக்கிறது என்று தலையை தடவுகிறார்.

விகடன்
11-08-2007, 03:43 AM
தலைமுடி இல்லாததன் காரணந்தன் காலடியில் வைத்திருப்பதாகச் சொன்னதா?
நாசூக்காகச் சொல்வதற்கு இந்த முறையைப் பார்க்கிலும் நேரடியாகவே சொல்லியிருக்கலாம்.

நான் மேலுலகத்திலிருப்பேனாகில் சொல்லியிருப்பேன் இல்லை இல்லை,
கேட்டிருப்பேன்,
"உன் ஆணாதிக்கத்தை இன்னுமா பேணுகிறாய்" என்று...

கவிதை மிக மிக நன்றாக செதுக்கியிருக்கிறீர்கள்.

இருந்தாலும்,
அடுத்தவன் பெண்டாட்டியையும் அவர்கள் குடும்ப வாழ்க்கையையும் பார்ப்பது அவ்வளவு சரியாக படவில்லை. சொல்லுறதை சொல்லிப்போட்டேன். இனி நீங்களாச்சு அவர்களாச்சு ;)

kalaianpan
11-08-2007, 07:31 AM
ஆகா..!!!!
எவ்வளவு பெரிய ஆதங்கம்.......
நியாயமானதுதான்.......

சிவா.ஜி
11-08-2007, 07:37 AM
பெண்களிடம் சுமுகமாவது ஒன்றும் பெரிய காரியமில்லை. எதுவும் பேசக்கூடத் தேவையில்லை. மண்டையை மட்டும் இடம் வலமாக ஆட்டாமல்,எப்போதுமே மேலும் கீழுமாக மட்டுமே ஆட்ட வேண்டும்.பிரச்சினையே இல்லை. கவிதை சுவை அதிகம் இல்லையென்றாலும் சொல்லிய விதம் ரசிக்க வைத்தது.(பின் குறிப்பு பிரமாதம்)வாழ்த்துக்கள் ஆரென்.

அன்புரசிகன்
11-08-2007, 08:03 AM
உங்கள் கவிதையில் ஏக்கமும் தெரிகிறது.... நளினமும் தெரிகிறது...

கங்கையுடன்
சுமூகமாகி
நீ அவளை
உன் தலையில்
வைத்து கூத்தாடுகிறாய்

தலையில் வைத்ததற்கு
கூத்தாடுகிறாய் நீ
நெஞ்சில் வைத்துப்பார்
காரணம் புரிவாய் நீ... :D :D :D

வாழ்த்துக்கள் அண்ணா...

அன்புரசிகன்
11-08-2007, 08:06 AM
பெண்களிடம் சுமுகமாவது ஒன்றும் பெரிய காரியமில்லை. எதுவும் பேசக்கூடத் தேவையில்லை. மண்டையை மட்டும் இடம் வலமாக ஆட்டாமல்,எப்போதுமே மேலும் கீழுமாக மட்டுமே ஆட்ட வேண்டும்.பிரச்சினையே இல்லை. கவிதை சுவை அதிகம் இல்லையென்றாலும் சொல்லிய விதம் ரசிக்க வைத்தது.(பின் குறிப்பு பிரமாதம்)வாழ்த்துக்கள் ஆரென்.

சுமூகத்திற்கு புது இலக்கணம்... ஆனால் உங்கள் சுமூகம் தி.பி....

தி.மு என்றால் என்ன செய்யவேண்டும்... (காதலிக்கும் காலத்தில்... கலாப்பிரியர்களுக்கு உதவும்...)

அமரன்
11-08-2007, 07:31 PM
ஆரென் அண்ணா..நல்ல கவிதை. வார்த்தைகள் சிலவற்றைக்குறைத்தால் இன்னும் மெருகேறி ஜொலிக்கும்.
பட்டை தீட்ட தீட்ட வைரம் ஜொலிக்கும். எழுத எழுதத்தான் கவிதை கவினாகும். இப்போது உங்கள் எழுத்துகள் பிரமாதம்.

திருவிளையாடலில் சிவாஜி ஒரு வசனம் சொல்வார். 'ஒருத்தி பாதியை வாங்கிக்கொண்டு இம்சிக்கிறாள். இன்னொருத்தி தலையில் இருந்து இம்சிக்கின்றாள்.(இது அவ்வசனத்தின் சாரம்.) அவர் என்ன கஸ்டப்படுகிறாரோ யாருக்குத் தெரியும்.
அசரீரீ கீழுலகிலிருந்து: பலருக்கு தலையில் முடிபோனதே பெண்களால் தானே...-ஈஸ்வரா.
பென்ஸண்ணா:!!!!!!?????

aren
12-08-2007, 02:05 AM
தலைமுடி இல்லாததன் காரணந்தன் காலடியில் வைத்திருப்பதாகச் சொன்னதா?
நாசூக்காகச் சொல்வதற்கு இந்த முறையைப் பார்க்கிலும் நேரடியாகவே சொல்லியிருக்கலாம்.

நான் மேலுலகத்திலிருப்பேனாகில் சொல்லியிருப்பேன் இல்லை இல்லை,
கேட்டிருப்பேன்,
"உன் ஆணாதிக்கத்தை இன்னுமா பேணுகிறாய்" என்று...

கவிதை மிக மிக நன்றாக செதுக்கியிருக்கிறீர்கள்.

இருந்தாலும்,
அடுத்தவன் பெண்டாட்டியையும் அவர்கள் குடும்ப வாழ்க்கையையும் பார்ப்பது அவ்வளவு சரியாக படவில்லை. சொல்லுறதை சொல்லிப்போட்டேன். இனி நீங்களாச்சு அவர்களாச்சு ;)

நன்றி விராடன். இதை நான் கவிதையில் பகுதியில் பதித்திருக்கிறேன் ஆனால் நான் எழுதுவது கவிதை என்ற அர்த்தத்தில் அல்ல. இன்னும் எழுதி பழகிய பிறகுதான் அது கவிதை என்ற ஒப்புதல் கிடைக்கும்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
12-08-2007, 02:23 AM
ஆகா..!!!!
எவ்வளவு பெரிய ஆதங்கம்.......
நியாயமானதுதான்.......

நன்றி கலையன்பன் அவர்களே.

aren
12-08-2007, 02:24 AM
பெண்களிடம் சுமுகமாவது ஒன்றும் பெரிய காரியமில்லை. எதுவும் பேசக்கூடத் தேவையில்லை. மண்டையை மட்டும் இடம் வலமாக ஆட்டாமல்,எப்போதுமே மேலும் கீழுமாக மட்டுமே ஆட்ட வேண்டும்.பிரச்சினையே இல்லை. கவிதை சுவை அதிகம் இல்லையென்றாலும் சொல்லிய விதம் ரசிக்க வைத்தது.(பின் குறிப்பு பிரமாதம்)வாழ்த்துக்கள் ஆரென்.

நன்றி சிவா அவர்களே. உங்களுக்கு சொந்த அனுபவம் நிறையவே இருக்கிறது என்று தெரிகிறது. நீங்கள் தப்பித்துக்கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன்.

இந்த திரியை நான் எழுதியது ஒரு நகைச்சுவைக்காகத்தான்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
12-08-2007, 02:25 AM
உங்கள் கவிதையில் ஏக்கமும் தெரிகிறது.... நளினமும் தெரிகிறது...

கங்கையுடன்
சுமூகமாகி
நீ அவளை
உன் தலையில்
வைத்து கூத்தாடுகிறாய்

தலையில் வைத்ததற்கு
கூத்தாடுகிறாய் நீ
நெஞ்சில் வைத்துப்பார்
காரணம் புரிவாய் நீ... :D :D :D

வாழ்த்துக்கள் அண்ணா...

நன்றி அன்புரசிகன். இன்னும் கொஞ்சம் யோசித்து எழுதியிருந்தால் சுவை கூடியிருக்கும் என்றே தோன்றுகிறது. அடுத்த சந்தர்பத்தில் முயற்சி செய்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
12-08-2007, 02:27 AM
ஆரென் அண்ணா..நல்ல கவிதை. வார்த்தைகள் சிலவற்றைக்குறைத்தால் இன்னும் மெருகேறி ஜொலிக்கும்.
பட்டை தீட்ட தீட்ட வைரம் ஜொலிக்கும். எழுத எழுதத்தான் கவிதை கவினாகும். இப்போது உங்கள் எழுத்துகள் பிரமாதம்.

திருவிளையாடலில் சிவாஜி ஒரு வசனம் சொல்வார். 'ஒருத்தி பாதியை வாங்கிக்கொண்டு இம்சிக்கிறாள். இன்னொருத்தி தலையில் இருந்து இம்சிக்கின்றாள்.(இது அவ்வசனத்தின் சாரம்.) அவர் என்ன கஸ்டப்படுகிறாரோ யாருக்குத் தெரியும்.
அசரீரீ கீழுலகிலிருந்து: பலருக்கு தலையில் முடிபோனதே பெண்களால் தானே...-ஈஸ்வரா.
பென்ஸண்ணா:!!!!!!?????

நன்றி அமரன். ஏதோ நீங்களெல்லாம் அழகாக எழுதிகிறீர்கள் நாமும் எழுதிப்பார்க்கலாம் என்ற நினைப்பில் போட்டுக்கொண்ட கோடுகள். இன்னும் அனுபவம் வேண்டும். வரும் என்றே நினைக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

ரிஷிசேது
12-08-2007, 01:40 PM
நல்ல ஏக்கம்..வார்த்தை பிரயோகம் அருமை. பாராட்டுக்கள்

அக்னி
12-08-2007, 01:41 PM
கங்கையைத் தலையில் கொண்ட
சிவன் நனைந்ததில்லை...
கண்ணில் பெண்ணைக் கொண்ட
ஆண் வரண்டதில்லை...

கவிதை நன்று...
பென்ஸ் அண்ணாவை வம்புக்கிழுப்பதே தொழிலாகிவிட்டது...
பாராட்டுக்கள் ஆரென் அவர்களே...

விகடன்
12-08-2007, 01:45 PM
ஆனால் நான் எழுதுவது கவிதை என்ற அர்த்தத்தில் அல்ல. இன்னும் எழுதி பழகிய பிறகுதான் அது கவிதை என்ற ஒப்புதல் கிடைக்கும்.

மிக்க நன்றி அண்ணா.

இந்தளவு நாட்களும் இப்படி இருந்தால்த்தான் கவிதை என்றிருந்துவிட்டேன். நீங்கள்தான் எனது மடமையினை சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள்.
இது கவிதை இல்லை என்று தெரிந்து உங்களுக்கு கவிதை கட்டாயம் தெரிந்திருக்கும். தயவு செய்து இந்த தம்பிக்கும் ஒரு மாதிரியை தருவதுடன் கவிதைக்கு இருக்கவேண்டிய இலட்சணங்களையும் சொல்லிவிட முடியுமா??? :medium-smiley-029:

ஆதவா
12-08-2007, 01:51 PM
அண்ணா,. என்னைப் பொருத்தவரை நீங்கள் சொன்னதுபோலவே இன்னும் கொஞ்சம் முயற்சித்திருக்கலாம்....

ஆனால் நீங்கள் என்ன சொல்ல்வருகிறீர்கள் என்பது சற்றேனும் புலப்படவில்லை. தலையைச் சுற்றி காலைத் தொடுவதுபோல...

தலையில் இடமில்லை எனில் காலில்தான் வைக்கப்படவேண்டுமா? நீங்கள் இறுதி பின்குறிப்பில் நகைச்சுவையாக சொல்லிவிட்டீர்கள்.. ஆனால் என்னால் அப்படி எடுத்துக் கொள்ள முடியவில்லை..

கால் அப்படியென்ன மோசமான பகுதியா? இல்லை.. இருந்தாலும் உயர்வு தாழ்வு இப்படித்தானே பிரிக்கப்படுகிறது... (இன்னும் சொல்லப்போனால் பாதத்தில்தான் எல்லா நரம்புகளும் சங்கமமாகிறதாம்.. )

கவிதை நடை அழகு, ஆனால் என் மனதில் தோன்றியவரை கரு எனக்கு உகந்ததாக இல்லை... மன்னிக்கவும்...

பென்ஸ் அண்ணா????:: இதை நீங்கள் சும்மா விடக்கூடாது... ஆரென் அண்ணாவை ஒரு பிடி பிடியுங்கள்....

இளசு
12-08-2007, 01:53 PM
ஆஹா ஆரென்...

பாதியைச் சக்திக்குக் கொடுத்துவிட்டு
ஆதியில் கங்கையைச் சுமந்துகொண்டு
ஆலாய்ப் பறக்கும்
ஆலாலகண்டனிடமா உங்கள் மனு????

நகைச்சுவைத்தேன் − கொஞ்சம்
நகைச்சு வைத்தேன்! பாராட்டுகள்!

சிவா.ஜி
12-08-2007, 01:53 PM
சுமூகத்திற்கு புது இலக்கணம்... ஆனால் உங்கள் சுமூகம் தி.பி....

தி.மு என்றால் என்ன செய்யவேண்டும்... (காதலிக்கும் காலத்தில்... கலாப்பிரியர்களுக்கு உதவும்...)

அது இன்னும் சுலபம் அன்பு...மூன்று வார்த்தைகள்
'வாவ்" "க்யூட்" "எப்படீப்பா..."
முகத்தில் உணர்ச்சியோடு சொல்லவேண்டும்.

rocky
13-08-2007, 08:20 AM
ஆரென் அண்ணனுக்கு கவிதை மிகவும் நன்றாக* இருந்த*து. நீங்க*ள் சொல்வ*து போல் ஆனும் பெண்னும் இண*க்க*மாக* இருக்க* க*ற்றுக்கொடுத்துவிட்டால் க*டவுளுக்கு இங்கு வேளையே இருக்காது என்று எண்ணியே அவ*ர் க*ற்றுக்கொடுக்காம*ல் விட்டிருப்பார் என்று எண்ணுகிறேன். இது ச*ரியா என்று நீங்க*ளே சொல்லுங்க*ள்.

இலக்கியன்
13-08-2007, 08:26 AM
நல்ல கற்பனை தொடரட்டும் நண்பனே

இனியவள்
13-08-2007, 04:15 PM
ஆரென் அண்ணா சூப்பர்

அது சரி நீங்கள் இப்படி கவிதை
எழுதினது மேலே இருக்கும்
சிவனுக்கு தெரியுமோ :confused:

ஷீ-நிசி
14-08-2007, 08:36 AM
நகைச்சுவை கலந்து உள்ளது... தொடருங்கள் ஆரென்....

aren
14-08-2007, 08:47 AM
நல்ல ஏக்கம்..வார்த்தை பிரயோகம் அருமை. பாராட்டுக்கள்

நன்றி ரிஷி. உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
14-08-2007, 08:48 AM
கங்கையைத் தலையில் கொண்ட
சிவன் நனைந்ததில்லை...
கண்ணில் பெண்ணைக் கொண்ட
ஆண் வரண்டதில்லை...

கவிதை நன்று...
பென்ஸ் அண்ணாவை வம்புக்கிழுப்பதே தொழிலாகிவிட்டது...
பாராட்டுக்கள் ஆரென் அவர்களே...

நன்றி அக்னி. நான் எங்கே பென்ஸை வம்புக்கு இழுத்தேன். உண்மையைச் சொன்னாலும் இந்த உலகத்தில் தப்பா படுதே. என்ன செய்வது.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
14-08-2007, 08:49 AM
மிக்க நன்றி அண்ணா.

இந்தளவு நாட்களும் இப்படி இருந்தால்த்தான் கவிதை என்றிருந்துவிட்டேன். நீங்கள்தான் எனது மடமையினை சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள்.
இது கவிதை இல்லை என்று தெரிந்து உங்களுக்கு கவிதை கட்டாயம் தெரிந்திருக்கும். தயவு செய்து இந்த தம்பிக்கும் ஒரு மாதிரியை தருவதுடன் கவிதைக்கு இருக்கவேண்டிய இலட்சணங்களையும் சொல்லிவிட முடியுமா??? :medium-smiley-029:

நான் எழுதியதைத்தான் கவிதையில்லை வெறும் எழுத்துக்கள் என்று சொன்னேன். நீங்கள் எழுதியதைப் பற்றி சொல்லவில்லையே.

aren
14-08-2007, 08:51 AM
அண்ணா,. என்னைப் பொருத்தவரை நீங்கள் சொன்னதுபோலவே இன்னும் கொஞ்சம் முயற்சித்திருக்கலாம்....

ஆனால் நீங்கள் என்ன சொல்ல்வருகிறீர்கள் என்பது சற்றேனும் புலப்படவில்லை. தலையைச் சுற்றி காலைத் தொடுவதுபோல...

தலையில் இடமில்லை எனில் காலில்தான் வைக்கப்படவேண்டுமா? நீங்கள் இறுதி பின்குறிப்பில் நகைச்சுவையாக சொல்லிவிட்டீர்கள்.. ஆனால் என்னால் அப்படி எடுத்துக் கொள்ள முடியவில்லை..

கால் அப்படியென்ன மோசமான பகுதியா? இல்லை.. இருந்தாலும் உயர்வு தாழ்வு இப்படித்தானே பிரிக்கப்படுகிறது... (இன்னும் சொல்லப்போனால் பாதத்தில்தான் எல்லா நரம்புகளும் சங்கமமாகிறதாம்.. )

கவிதை நடை அழகு, ஆனால் என் மனதில் தோன்றியவரை கரு எனக்கு உகந்ததாக இல்லை... மன்னிக்கவும்...

பென்ஸ் அண்ணா????:: இதை நீங்கள் சும்மா விடக்கூடாது... ஆரென் அண்ணாவை ஒரு பிடி பிடியுங்கள்....

ஆதவன்,

கொஞ்சன் நகைச்சுவையாக ஏதாவது எழுதவேண்டும் என்ற நினைப்பிலேயே இதை எழுதினேன். ஆனால் கொஞ்சம் ஆரம்பித்தவுடன் எப்படி முடிப்பது என்பதில் கொஞ்சம் குழம்பிவிட்டேன்.

பென்ஸைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்களா. பாவம் அவரே உங்களுடைய பதிவைப் பார்த்துவிட்டு இந்த் பக்கமே வரவில்லை.

aren
14-08-2007, 08:53 AM
ஆஹா ஆரென்...

பாதியைச் சக்திக்குக் கொடுத்துவிட்டு
ஆதியில் கங்கையைச் சுமந்துகொண்டு
ஆலாய்ப் பறக்கும்
ஆலாலகண்டனிடமா உங்கள் மனு????

நகைச்சுவைத்தேன் − கொஞ்சம்
நகைச்சு வைத்தேன்! பாராட்டுகள்!

நன்றி இளசு அவர்களே. நீங்கள் ஆரன் எழுதியதற்காக கொஞ்சம் நகைச்சு வைத்தீர்கள். அடுத்தமுறை கொஞ்சம் யோசித்து எழுதிகிறேன். ஏதாவது நகைச்சுவையாக எழுதவேண்டும் என்ற நினைப்பில் வந்த வரிகள் இவை.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
14-08-2007, 08:55 AM
அது இன்னும் சுலபம் அன்பு...மூன்று வார்த்தைகள்
'வாவ்" "க்யூட்" "எப்படீப்பா..."
முகத்தில் உணர்ச்சியோடு சொல்லவேண்டும்.

காதலியைப் பார்த்தவுடன் எப்படி முகத்தில் உணர்ச்சி வரும். ஒரு அசடு கலந்த சிரிப்புதானே வருகிறது.

aren
14-08-2007, 08:56 AM
ஆரென் அண்ணனுக்கு கவிதை மிகவும் நன்றாக* இருந்த*து. நீங்க*ள் சொல்வ*து போல் ஆனும் பெண்னும் இண*க்க*மாக* இருக்க* க*ற்றுக்கொடுத்துவிட்டால் க*டவுளுக்கு இங்கு வேளையே இருக்காது என்று எண்ணியே அவ*ர் க*ற்றுக்கொடுக்காம*ல் விட்டிருப்பார் என்று எண்ணுகிறேன். இது ச*ரியா என்று நீங்க*ளே சொல்லுங்க*ள்.

நன்றி ராக்கி. எல்லாம் உங்கள் அனுபவம் பேசுகிறது. நான் எப்படி இதை எதிர்த்துசொல்லமுடியும்.

aren
14-08-2007, 08:56 AM
நல்ல கற்பனை தொடரட்டும் நண்பனே

நன்றி இலக்கியன்.

aren
14-08-2007, 08:57 AM
ஆரென் அண்ணா சூப்பர்

அது சரி நீங்கள் இப்படி கவிதை
எழுதினது மேலே இருக்கும்
சிவனுக்கு தெரியுமோ :confused:

நன்றி இனியவள். அந்த சிவனுக்குத் தெரியுமா என்று தெரியாது ஆனால் நம்ம கவியரசன் சிவா.ஜி அவர்களுக்குத் தெரிந்துவிட்டது.

aren
14-08-2007, 08:58 AM
நகைச்சுவை கலந்து உள்ளது... தொடருங்கள் ஆரென்....

நன்றி ஷீ−நிசி. சிரிக்கமுடிந்ததா, அதுவே சந்தோஷம்.

lolluvathiyar
19-08-2007, 07:24 AM
ஆண்டவனை வேண்டுவதில் இதுவும் ஒரு வகை
அழகை பென்னுக்கு கொடுத்து ஆசையை ஆணுக்கு கொடுத்தார்

ஆனால் உன்மையில் பெண்ணுக்கு அதிக ஆசையை கொடுத்து கூடவே சிறிது அகம்பாவத்தையும் தந்து விட்டு அவர் தப்பித்து விட்டார்