PDA

View Full Version : பிரிண்டரால் மனிதனுக்கு ஆபத்து



தங்கவேல்
11-08-2007, 01:19 AM
மெல்போர்ன்: நீங்கள் அடிக்கடி கம்ப்யூட்டர் பிரின்ட்டரை பயன்படுத்துபவரா? அப்படியானால், இனி குறைத்துக் கொள்ளுங்கள்!

சிகரெட் புகையை சுவாசித்தால் ஏற்படும் பாதிப்பு, கம்ப்யூட்டர் பிரின்ட்டர் நெடியிலும் உள்ளது என்று, ஆஸ்திரேலிய மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக நிபுணர்கள், இதுகுறித்து ஆராய்ச்சி நடத்தி சில தகவல்களை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிகரெட் பிடிப்பவர்களுக்கு, அவர்கள் சுவாசிக்கும் நிகோடின் புகையால், நுரையீரல் பாதிக்கிறது. புகை பிடிப்பவர்கள் விடும் புகையால், மற்றவர்களுக்கும் பாதிப்பு வருகிறது. சிகரெட் புகையால் ஏற்படும் பாதிப்புக்கு சமமான பாதிப்பு, கம்ப்யூட்டர் பிரின்ட்டர் நெடியால் ஏற்படுகிறது. பிரின்ட்டர் இயங்கும் போது கிளம்பும், புறஊதா கதிர்கள், மனிதர்களின் நுரையீரலில் போய்ச்சேருகிறது. பிரின்ட்டரில் உள்ள "டோனர்' சாதனத்தின் மூலம் கிளம்பும் நெடி, சுவாசக்குழாய் வழியாக நுரையீரலை எளிதில் போய்ச்சேருகிறது. சிகரெட் புகை துகள்கள் போல, கம்ப்யூட்டர் பிரின்ட்டர் புகை, நுரையீரலில் பாதிப்பை தருகிறது. கேன்சர் அளவுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். சுவாசக்குழாயில் எரிச்சலையும் ஏற்படுத்தும். ஆபீசில் வேலை செய்யும் போது, பிரின்ட்டரை அடிக்கடி பயன்படுத்தினால், அந்த அறையில் உள்ளவருக்கு, இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

சாதாரண அளவில் பயன்படுத்தப்படும் "டோனர்' சாதனங்களால், பெரிய பாதிப்பு வராது. ஆனால், கிராபிக்ஸ் உட்பட பல தொழில்நுட்ப பணிகளுக்கு சக்தி வாய்ந்த "டோனர்' பயன்படுத்தப்படுவதால், ஆபத்து அதிகமாகிறது.

இவ்வாறு நிபுணர்கள் கூறினர்.

நன்றி : தினமலர்

aren
11-08-2007, 02:42 AM
இப்படி எல்லா விஷயத்திலும் பிரச்சனையென்றால் மக்கள் எப்படித்தான் வாழ்வது.

விகடன்
11-08-2007, 03:11 AM
ஆமாம் தங்கவேல். நானும் கேள்விப்பட்டிருந்தேன். அதேவேளை போட்டோ பிரதி தொடர்ந்து எடுக்கும் போடோ அல்லது பிரின்ரரை அருகில் வைத்து அதிக அளவில் தொடர்ச்சியாக பிரிண்ட் பண்ணும்போதோ தலையிடியை உணருவேன்.


அதே வேளை இன்னொரு தகவலும் அறிந்திருந்தேன். இந்த பிரின்டர் டோனரில் இருக்கும் பௌடரோ போட்டோ பிரதி எடுக்கை பயன்படுத்தும் பௌடரோ கண்ணில் பட்டால் கண் தெரியாமல் போகும் என்றும் பின்னர் சத்திர சிகிச்சை செய்த்த்தால்த்தான் உலகத்தை பார்க்க முடியும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். இதை ஏன் சொல்கிறேன் என்றால், ரோனர் விக்கிற விலைக்கு 4−5 காலி ரோனரை சேகரித்து அதனுள் தேங்கியிருக்கும் மீதி துகள்களை ஒன்றினுள் ஒன்று திரட்டி அதை ஒரு ரோனராக பாவிக்கும் பழக்க வழக்கம் நம்மில் பலரிற்கு இருக்கும். அவர்கள் குறுகிய இலாபத்திற்காகத்தான் இதை செய்கிறார்கள். எப்படி? என்று கேட்டீர்களேயானால்,

ஒரு ரோனர் வாங்கும் செலவையும் எதிர்காலத்தில் கண் சத்திர சிகிச்சை என்று ஒரு கட்டாயம் வந்துவிட்டால் அதற்கு செலவிடப்பட வேண்டி வரக்க்கூடிய தொகையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்!!!

அக்னி
11-08-2007, 05:32 AM
தகவலுக்கு நன்றி தங்கவேல் & விராடன்...
எச்சரிக்கையாக இருப்போம்...

பார்த்திபன்
11-08-2007, 12:04 PM
உண்மை அண்ணா...

அலுவலகத்தில் A/C Return Duct diffuser இனைச் சுற்றிபடிந்திருக்கும் கறுப்புத்துதூள்கள் டோனரில் இருக்கும் பௌடரே......

இவை மீண்டும் எமது நுரையீரலுக்கு திரும்பும்போது?????

இணைய நண்பன்
11-08-2007, 12:27 PM
இப்படியே போனால் என்ன செய்யவது...நல்ல தகவலுக்கு நன்றி

அமரன்
11-08-2007, 07:59 PM
அச்சு இயந்திரத்திலும் ஆபத்தா? நன்றி தங்கவேல் விராடன்.

வெண்தாமரை
12-08-2007, 04:55 AM
ஆபத்தா ஐய்யோ.. எங்கள் அலுவலகத்தில் ஐந்து லேசர் பிரிண்டர்களை யூஸ் பண்ணுகிறோம்.. ஏ.சி இருப்பதால் நான் இதுவரை எந்த பாதிப்பையும் நான் உணர்ந்ததில்லை..

namsec
12-08-2007, 04:58 AM
தகவல் தந்த தங்கவேலுவுக்கு நன்றி

மன்மதன்
12-08-2007, 06:40 AM
அய்யோ.. என்ன கொடுமை சார் இது.. எல்லா சாதனங்களுமே ஒரு விதத்தில் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கிறதே..

lolluvathiyar
12-08-2007, 08:08 AM
பிரின்டரால் உடல் நல கேடு
ஏசியா உடல் நல கேடு
வாகன புகையால் உடல் நல கேடு (கார்பன் மொனொக்சைட்)
ரெபெரிஜேட்டரால் உடல் நல கேடு (சிஎச் 2)
தொழிர்சாலைகளால் சுற்று புர சுகாரத்துக்கு கேடு
பனத்தை தேடி தேடி அலைந்து சம்பாரித்து நிம்மதி இல்லாமல் வாழ்ந்து கடைசிய்ல் ஆஸ்பத்திரி செலவுக்கு கடன் வாங்க வேண்டும் ப்ல்ல இருக்கு

பேசாம தோட்டத்துக்கு போய் பால் கறந்து புலச்சுகலாம் போல இருக்கு

சிவா.ஜி
12-08-2007, 08:14 AM
அங்கேயும் ஒரு ஆபத்து வாத்தியாரே...மாடு உதைக்குமே...ஹீ..ஹீ..

தளபதி
12-08-2007, 10:31 AM
இந்த அவசர உலகில் எதையுமே வேண்டாம் என்று சொல்லமுடியாது. என்ன செய்வது?? அளவுடன் பயன்படித்தி கேடுகளை குறைப்போம்.

ஜெயாஸ்தா
11-09-2007, 03:54 PM
ஒவ்வொரு விளைவுக்கு ஒரு எதிர் விளைவு உண்டு. வேறு வழியில்லை. உபயோகப்படுத்தித்தானே ஆக வேண்டும்

suraj
11-10-2007, 04:09 PM
போட்டோ பிரிண்ட் எடுக்கும் போது இப்படியும் பிரச்சனையா?

புதுசு புதுசா கிளப்புறாங்களே!

leomohan
14-10-2007, 03:19 PM
தகவலுக்கு நன்றி தங்கவேல். எங்கள் அலுவலகத்தில் பிணைய பிரிண்டரை உபயோகப்படுத்துகிறோம். அது தனி அறையில் இருக்கும். பிரிண்ட் தட்டிவிட்டு சில நிமிடங்களுக்கு பிறகு சென்று பெற்றுக் கொள்வோம்.

என் தனியறையில் இருக்கும் பிரிண்டரில் நான் ஸ்கானிங்காக மட்டுமே பயன்படுத்துகிறேன்.