PDA

View Full Version : இலச்சினையாய் ஒரு கவிதை



பிச்சி
10-08-2007, 09:20 AM
இசையெழுப்பிய சலனத் துளிகளை
குறத்தியின் விழி ஈர்ப்பில் குழைத்து
குளிர்காலக் கவிதை ஒன்றை
உதிர்க்கிறாய்.
உணர்ந்த மருட்சியில்
மதியிழக்கிறது மலை.

மூச்சுபட்டு கழைக்கூத்திடும்
மூங்கில் துளைகளால்
முல்லைக் குழலில்
ராகம் கீறுகிறாய்.
கோவர்த்தனர்கள்
குவிகிறார்கள்.
மரணிக்கிறது குயில்கள்.

வைகறைக் காற்றை
நெஞ்சில் விதைத்து
உழத்தியர் ஒருத்தியை
ஓரக் கண்ணிடுகிறாய்
பயிர் வகிர்ந்த கைகளால்
உயிர் வகிர,
நெளிந்தோடுகிறது நாணம்.

புன்னைக் கிளையில்
முறுக்கி வைத்த வலையை
வலைச்சியர் கண்களுக்காக
நளினமாக விரிக்கிறாய்.
அலை திரளும் காட்சிகள்
நீட்சியடைகின்றன.

இளவேனில் காலத்தில்
பூத்த கள்ளிப்பூவை
கள்ளி அவள் பறிக்க
கொள்ளை கொள்கிறாய்
பூவோடு அவளையும்
இதய இலச்சினையாய்
இக்கவிதையையும்.

இலக்கியன்
10-08-2007, 09:28 AM
மூச்சுபட்டு கழைக்கூத்திடும்
மூங்கில் துளைகளால்
முல்லைக் குழலில்
ராகம் கீறுகிறாய்.
கோவர்த்தனர்கள்
குவிகிறார்கள்.
மரணிக்கிறது குயில்கள்.

அழகான கவிதை தமிழ் நளினம் புரிகிறது வாழ்த்துக்கள் பிச்சி

பிச்சி
10-08-2007, 09:29 AM
மிக நன்றி இலக்கியன்.

அமரன்
10-08-2007, 09:31 AM
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்
நானிலங்களில் பெண்ணின் வண்ணம்.
கடைச் சப்தங்கள் சொல்கின்றன
கவிதை பெண்ணின் எண்ணம்.
பஞ்சாமிர்த்த சுவைதந்த பிச்சிபிரமா(பா)வை
வஞ்சனையின்றி வாழ்த்துகின்றேன்.


(அப்படியே கவிதைபோட்டி 09 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11366) ஐப் பார்கிறது)

பிச்சி
10-08-2007, 09:36 AM
ரொம்பவும் நன்றின்க்க அம்ரன் அண்ணா.

சிவா.ஜி
11-08-2007, 05:27 AM
அழகு தமிழ் கொஞ்சும் வரிகளில் சுவையூட்டும் தனிக்கவிதை.
நாநிலங்களும் நானிவளிடம் என்று குதிபோட்டு குதூகலிக்கின்றன.
இசையும் இசைகிறது இவளிடம்.
இதய இலட்சினைக்கு ஏற்ற இலக்கியக் கவிதை.
வாழ்த்துக்கள் பிச்சி.

ஷீ-நிசி
11-08-2007, 06:17 AM
என்னா வரிகள்!

எப்பவுமே பிச்சியின் கவிதைகள் இப்படித்தான். தமிழ் அகராதி இல்லாமல் சுவைக்க முடியாது.. புரிந்து படித்தால் சுவை அதிகமாக தெரியும்.. தொடருங்கள் பிச்சி... வாழ்த்துக்கள்!

kalaianpan
11-08-2007, 07:35 AM
உங்கள் எழுத்தாற்றலை கொஞ்சம் சொல்லித்தரலாமே....
என்ன வரிகள்.....
நன்றாய் உள்ளது...

அக்னி
11-08-2007, 10:52 PM
இலச்சினையாய் வந்த கவிதை...
பிச்சியின் தமிழ்ச்சுனையின் தொடரூற்று...

தொடர வாழ்த்துகின்றேன்... பாராட்டுக்கள்...

பிச்சி
13-08-2007, 12:45 PM
அழகு தமிழ் கொஞ்சும் வரிகளில் சுவையூட்டும் தனிக்கவிதை.
நாநிலங்களும் நானிவளிடம் என்று குதிபோட்டு குதூகலிக்கின்றன.
இசையும் இசைகிறது இவளிடம்.
இதய இலட்சினைக்கு ஏற்ற இலக்கியக் கவிதை.
வாழ்த்துக்கள் பிச்சி.

நன்றி சிவா அண்ணா. இதில் ஐந்து நிலமும் வருகிறதே?:icon_give_rose:

பிச்சி
13-08-2007, 12:46 PM
என்னா வரிகள்!

எப்பவுமே பிச்சியின் கவிதைகள் இப்படித்தான். தமிழ் அகராதி இல்லாமல் சுவைக்க முடியாது.. புரிந்து படித்தால் சுவை அதிகமாக தெரியும்.. தொடருங்கள் பிச்சி... வாழ்த்துக்கள்!

மிகவும் நன்றி அண்ணா.

பிச்சி
13-08-2007, 12:47 PM
உங்கள் எழுத்தாற்றலை கொஞ்சம் சொல்லித்தரலாமே....
என்ன வரிகள்.....
நன்றாய் உள்ளது...


இலச்சினையாய் வந்த கவிதை...
பிச்சியின் தமிழ்ச்சுனையின் தொடரூற்று...

தொடர வாழ்த்துகின்றேன்... பாராட்டுக்கள்...

மிக்க நன்றிங்க அண்ணாக்களே:icon_03:

இனியவள்
13-08-2007, 01:24 PM
ஜந்நிலங்களில் ஜொலிக்கிறது
பிச்சியின் இக்கவிதை
வாழ்த்துக்கள் பிச்சி :4_1_8:

பிச்சி
13-08-2007, 01:27 PM
ஜந்நிலங்களில் ஜொலிக்கிறது
பிச்சியின் இக்கவிதை
வாழ்த்துக்கள் பிச்சி :4_1_8:

மிக்க நன்றி இனியவள்

ஓவியன்
24-08-2007, 06:48 AM
மலை போன்ற குறத்தியர்
மனதைச் சரித்ததை
குறிஞ்சி நிலக் காதலையும்......

புல்லாங்குழல் இராகத்தால்
குயில்களை மரணிக்க வைத்த
முல்லை நிலக் காதலையும்......

பயிர் வகிர்ந்த கைகளால்
உயிர் வகிர வைத்த நாணம் தந்த
மருத நிலக் காதலையும்.......

மீன்களுக்கு மட்டுமன்றி
வலைச்சியருக்கும் வலை விரிக்கும்
நெய்தல் நிலக் காதலையும்.......

கள்ளிப் பூவை கொய்ய வந்த
கள்ளியை கொள்ளையடிக்கும்
பாலை நிலக் காதலையும்.......

அழகாக வரிகளிலேற்றி இலட்சினையாகப் படைத்த பிச்சிக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

பூமகள்
24-08-2007, 07:21 AM
அப்பப்பா....தமிழில் இத்தனை அழகிய சொற்கள் உண்டா...... எதை மேற்கோள் காட்டுவது என்றே புரியாமல் தவிக்கும் அளவிற்கு அத்தனை அழகு வார்த்தைக்கு வார்த்தை...

பிச்சி உங்களின் தமிழ் புலமை அழமாய்த் தெரியும் இக்கவியில்... வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் சகோதரி..!!

ஐநிலம் கொண்டு கவி பாடிய பிச்சி மலருக்கு 500 இபணங்கள் அன்பளிப்பு..

பிச்சி
25-08-2007, 05:15 AM
மிகவும் நன்றி ஓவியன் அண்ணா, பூமகள் அக்கா.