Log in

View Full Version : கலங்காதே........

இலக்கியன்
10-08-2007, 08:23 AM
http://img519.imageshack.us/img519/2792/calfc8jjpk8gf6.jpg (http://imageshack.us)

இருள் என்று இருந்தால்
உன் வாழ்வில் பகலும் வரும்
இதயமே கலங்காதே...

அமாவாசையாக இருந்தால்
பௌர்ணமி நிச்சயம் வரும்
உயிரே கலங்காதே...

சூரியனாக துன்பங்கள்
உன்னை சுட்டாலும்
சந்திரன் வருவான்
நண்பனே கலங்காதே...

வறண்டுபோன நிலம் போல்
உன்வாழ்வு இருந்தாலும்
வரும் நதியவன் மழை
கொண்டு வருவான்
அன்பே கலங்காதே...

கலக்கம்தான்
உன் வாழ்வு அல்ல
எதிர் நீச்சல்
போடு கலங்காதே

அமரன்
10-08-2007, 08:39 AM
இரவு பகல் போல கோடையும் மாரியும் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை. கோடையில் கலங்கி சக்தியை விரயமாக்காது மாரியில் விவேகமான வேகத்துடன் பாயவேண்டும். நல்ல கருத்து கவிதை. தொடருங்கள் இலக்கியன்.

இலக்கியன்
10-08-2007, 08:42 AM
இரவு பகல் போல கோடையும் மாரியும் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை. கோடையில் கலங்கி சக்தியை விரயமாக்காது மாரியில் விவேகமான வேகத்துடன் பாயவேண்டும். நல்ல கருத்து கவிதை. தொடருங்கள் இலக்கியன்.

அழகான விமர்சனம் தந்தீர்கள் அமரன்

ஓவியன்
10-08-2007, 09:06 AM
இருட்டுவதே ஒரு விடியலுக்காகத் தானே............!

அழகான கரு தொட்டு அருமையான இலக்கியக் கவி படைத்த இலக்கியனுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..................!

இலக்கியன்
10-08-2007, 09:08 AM
இருட்டுவதே ஒரு விடியலுக்காகத் தானே............!

அழகான கரு தொட்டு அருமையான இலக்கியக் கவி படைத்த இலக்கியனுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..................!

கருத்துக்கு நன்றி ஓவியன்

விகடன்
11-08-2007, 03:25 AM
மனதால் நொந்து நம்பிக்கையிழந்தவனை ஊக்கப்படுத்தும் வரிகள்.

பாராட்டுக்கள் இலக்கியன்

aren
11-08-2007, 03:30 AM
வாழ்க்கயில்
ஒரு நாள்
துக்கம் வந்தால்
மறுநாள்
நல்லது வரும்
கலங்காதே
வாழ்க்கையில்
பிரச்சனையை
எதிர்நோக்கு
அவை உனக்கு
தானாகவே
மாலையிட்டு
மரியாதை
செய்யும்!!!

சிவா.ஜி
11-08-2007, 07:41 AM
இன்பமோ துன்பமோ,எப்போதும் எண்ணவேண்டியது ஒன்றுதான்....
இதுவும் கடந்து போகும்.....எதிலுமே நிலைத்து விடாமல் ஆற்றொழுக்காய் வாழ்வை நடத்திக்கொண்டு போக வேண்டும்.எதிர்நீச்சல் என்பது எதிலும் உள்ளது.துவளாமல் துணிந்தால் வெற்றி நிச்சயம். நல்ல கருத்து சொன்ன இலக்கியனுக்கு வாழ்த்துக்கள்.

kalaianpan
11-08-2007, 07:45 AM
மிகவும் பொருத்தமான கவிதை.
எம்மைப் போல் தொலைதூரத்தில் கலங்ககுபவர்களுக்கு
நன்றி....

அக்னி
12-08-2007, 05:36 PM
தொலைதூரத்தில் கானல் தேடி,
அலைவதை விடுத்து,
காலடியில் ஊற்றைத் தோண்டி,
நனைவதே,
வாழ்விலும் தரும் வெற்றி...

மூடிப்போகும் தற்காலிக,
தடங்கல்களும்,
வாடவைக்கும் மாய
வித்தைகளும்,
மனதை வாட்டாதவரை,
துவளாது மனதும், வாழ்வும்...

கவிதைக்கும், அதன் பொருள் தரும் புத்தூக்கத்திற்கும் வாழ்த்துக்கள்...

இலக்கியன்
13-08-2007, 08:44 AM
மனதால் நொந்து நம்பிக்கையிழந்தவனை ஊக்கப்படுத்தும் வரிகள்.

பாராட்டுக்கள் இலக்கியன்

ஆம் நண்பனே என்னை நானே தேற்றி வரைந்த கவிதை

இலக்கியன்
13-08-2007, 08:45 AM
வாழ்க்கயில்
ஒரு நாள்
துக்கம் வந்தால்
மறுநாள்
நல்லது வரும்
கலங்காதே
வாழ்க்கையில்
பிரச்சனையை
எதிர்நோக்கு
அவை உனக்கு
தானாகவே
மாலையிட்டு
மரியாதை
செய்யும்!!!

ஆம் நண்பரே

இலக்கியன்
13-08-2007, 08:46 AM
இன்பமோ துன்பமோ,எப்போதும் எண்ணவேண்டியது ஒன்றுதான்....
இதுவும் கடந்து போகும்.....எதிலுமே நிலைத்து விடாமல் ஆற்றொழுக்காய் வாழ்வை நடத்திக்கொண்டு போக வேண்டும்.எதிர்நீச்சல் என்பது எதிலும் உள்ளது.துவளாமல் துணிந்தால் வெற்றி நிச்சயம். நல்ல கருத்து சொன்ன இலக்கியனுக்கு வாழ்த்துக்கள்.

கவிதை புரிந்து அழகான கருத்துதந்த உங்களுக்கு நன்றி

இலக்கியன்
13-08-2007, 08:47 AM
மிகவும் பொருத்தமான கவிதை.
எம்மைப் போல் தொலைதூரத்தில் கலங்ககுபவர்களுக்கு
நன்றி....

கருத்துக்கு நன்றி கலையன்பன்

இலக்கியன்
13-08-2007, 08:48 AM
தொலைதூரத்தில் கானல் தேடி,
அலைவதை விடுத்து,
காலடியில் ஊற்றைத் தோண்டி,
நனைவதே,
வாழ்விலும் தரும் வெற்றி...

மூடிப்போகும் தற்காலிக,
தடங்கல்களும்,
வாடவைக்கும் மாய
வித்தைகளும்,
மனதை வாட்டாதவரை,
துவளாது மனதும், வாழ்வும்...

கவிதைக்கும், அதன் பொருள் தரும் புத்தூக்கத்திற்கும் வாழ்த்துக்கள்...

கவிதையாக அழகான கருத்துதந்த உங்களுக்கு நன்றி

பிச்சி
13-08-2007, 01:08 PM
கவிதை அருமை அண்ணா

இலக்கியன்
13-08-2007, 01:11 PM
கவிதை அருமை அண்ணா

புதிய தமிழ் சொற்களால் கவிதை படைக்கும் பிச்சியின் வாழ்த்துகிடைத்ததையிட்டு மகிழ்வு நன்றி

இனியவள்
13-08-2007, 01:18 PM
கவிதை அருமை இலக்கி

உன் வெற்றியில் இன்னொருவன்
தோல்வி
உன் தோல்வியில் இன்னொருவன்
வெற்றி..:sport-smiley-018:

இலக்கியன்
13-08-2007, 02:08 PM
கவிதை அருமை இலக்கி

உன் வெற்றியில் இன்னொருவன்
தோல்வி
உன் தோல்வியில் இன்னொருவன்
வெற்றி..:sport-smiley-018:

நன்றி இனியவள் உங்கள் கருத்துக்கு