PDA

View Full Version : தாவூத் பிடிபடவில்லை



leomohan
10-08-2007, 06:55 AM
தாவூத் இப்ராஹிம் பிடிபடவில்லை என்று ஒரு பாகிஸ்தானின் அதிகாரி கூறியுள்ளார். இதற்கு முன் அல் ஜசீரா தொலைகாட்சியில் தாவூத் பாகிஸ்தானில் கைதி செய்யப்பட்டதாக தகவல் வெளியிட்டது.

இந்தியா மீண்டும் மீண்டும் பாகிஸ்தானிடம் சுமார் 20 முக்கிய குற்றவாளிகளை கேட்டுவருகிறது. அதில் முதலில் இருப்பவன் தான் தாவூத் இப்ராஹிம்.

மேலும்

http://www.khaleejtimes.com/DisplayArticle.asp?xfile=data/subcontinent/2007/August/subcontinent_August286.xml&section=subcontinent

http://indiamonitor.com/images/dawood.jpg

தங்கவேல்
10-08-2007, 07:37 AM
அட்டகாசமான நாடகம் பாகிஸ்தானால் நடத்தப்பட்டது.. சும்மா கேலிகூத்து.. பட்டயக்கிளப்பினால் எல்லாம் சரியாகிவிடும்.

lolluvathiyar
11-08-2007, 12:49 PM
பிடிபட்டாலும் தாவுத் இந்தியாவிடம் ஒப்படடைக்கபடமாட்டான்
அமெரிக்காவிடம் வேண்டுமானாலும் ஒப்படைக்க படலாம்.

ஆனால் அரபு நாட்டுகளின் வர்த்தம் சிலது தாவுத் இன் கட்டுபாட்டில் இருப்பதால் அவரை எந்த நாடும் தொட அஞ்சும்.

தளபதி
11-08-2007, 12:59 PM
கெட்டவன் அழிவான் என்பார்கள். எப்போது???
ஆனாலும், பொறுமையுடன் இருப்போம்.
நாம் நிச்சயம் காண்போம்.!!!
"கெடுத்தவனும் கெட்டவனும் அழிவதை".

சிவா.ஜி
11-08-2007, 01:05 PM
இவன் கெட்டவனா இல்லையா என்று தெரியுமுன்னே எப்படி நீங்கள் இவனை கெட்டவன் என்று சொல்லலாம்...?உங்களுக்கு கெட்டவனாகத்தெரியும் இவன் மற்றவர்களுக்கு நல்லவனாகத் தெரியலாம் அல்லவா..? இவன் கெட்டவன் என்று சொல்ல என்ன ஆதாரம் இருக்கிறது..? இப்படியெல்லாம் கேட்டுக்கொண்டு யாராவது வந்துவிடுவார்கள்....அதனால் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருப்போம்.

தளபதி
11-08-2007, 01:10 PM
ஆகாககாக!!
இப்படியெல்லாம் கேள்வி வருமா???
"காக்க காக்க கனகவேல் காக்க"

lolluvathiyar
11-08-2007, 02:32 PM
இவன் கெட்டவன் என்று சொல்ல என்ன ஆதாரம் இருக்கிறது..? இப்படியெல்லாம் கேட்டுக்கொண்டு யாராவது வந்துவிடுவார்கள்....அதனால் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருப்போம்.

ஒவர் நக்கலா தெரியது சிவா ஜி

சிவா.ஜி
11-08-2007, 02:36 PM
ஒவர் நக்கலா தெரியது சிவா ஜி

வாத்தியார் உண்மையிலேயே மனம் வெறுத்துதான் அதை எழுதினேன். ஏன் தெரியுமா..? என்னுடன் பணி புரிந்த சிலர் அவனை ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு தூக்கிவைத்துப் பேசினார்கள்.இந்திய போலிஸாரால் தலைகீழாக நின்று தண்ணி குடித்தாலும் எங்கள் ஹீரோவை(சத்தியமாக இப்படித்தான் சொன்னார்கள்) பிடிக்க முடியாது....என்று சொல்பவர்களும் இருப்பதால் அப்படி எழுதினேன்.

ஓவியா
11-08-2007, 03:05 PM
ஆமாம் என் பாகிஸ்தான் தோளர்களும் இப்படிதான் சொல்லுகின்றனர். இது நடக்கத விசயமாம்.

இதயம்
12-08-2007, 04:45 AM
தாவூதை நல்லவன் என்று சொல்பவராக இருந்தால் சிவா.ஜியின் வார்த்தைகள் நக்கல் என சொல்லலாம். ஆனால், அது இல்லை இது.! ஒரு சர்வதேச பயங்கரவாதியை, தன்னுடைய நலனுக்காக தாய்நாட்டில் கலவரங்களை ஏற்படுத்தி, பெரும் அழிவை நிகழச்செய்து, தான் சார்ந்த மதத்தவர்களையும் தவறான கண்ணோட்டத்தில் மற்றவர்கள் பார்க்கும்படி செய்த ஒரு கிரிமினலை பிடிக்க முடியாத இந்திய காவல்துறையினரின் கையாலாகாத தனத்தின் மீது ஏற்பட்ட வெறுப்பை தான் அப்படி சொல்லியிருக்கிறார்.

ஒரு பலம் வாய்ந்த, மிகப்பெரிய அரசின் சட்டக்கரங்களுக்கு அகப்படாமல் தனியொருவனாய் நின்று தண்ணி காட்டும் இது போன்ற குற்றவாளிகள் ஹீரோவைப்போல் போற்றப்படுவது அவனின் கொடும் செயல்களுக்காக அல்ல. அகப்படாத அவனின் தந்திரத்திற்கும், புத்திகூர்மைக்கும் தான். அப்படியென்றால், இந்தியப்போலீஸ் திறமையற்றவர்களா..? நிச்சயமாக இல்லை. அவனை பிடிப்பது என்பது இந்திய அரசுக்கு ஒரு நாள் வேலை. ஆனால், அதை செய்ய மாட்டார்கள். காரணம், அவனைக்கொண்டு ஜீவனம் நடத்தும் நிறைய கருப்பு ஆடுகள் அரசுத்துறைகளில் இருக்கிறார்கள். அவன் இடும் பிச்சையில் வாழும் எச்சைகள் நிறைய இருக்கிறார்கள்.

இவன் ஏற்படுத்திய மும்பை கலவரம் முஸ்லீம்களுக்கு ஆதரவாக, இந்துக்களுக்கு எதிராக செய்யப்பட்டது என்று நம்மில் நிறைய பேர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் அந்த சூழ்நிலையை பயன்படுத்தி, அவன் ஒப்புக்கொண்ட வேலைக்கு பயன்படுத்திக்கொண்ட சூழ்நிலை தான் அது என்பது நிதர்சன உண்மை. அந்த கலவரத்தில் உதவியவர்களில் இந்துக்களின் பெரும்பங்கும் இருக்கிறது. மிகமுக்கியமாக மும்பை குண்டு வெடிப்பிற்கு காரணமான ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகளை கடத்திவர உதவியாக இருந்த கஸ்டம்ஸ் அதிகாரி ஓர் இந்து தான். அவர் இப்போது சட்டத்தின் பிடியில் அகப்பட்டு மரணதண்டனை கிடைத்தும், புற்றுநோயால் அவர் பீடிக்கப்பட்டிருப்பதால் தண்டனையை நிறைவேற்றமுடியாமல் கிடக்கிறார். அவர் நினைத்திருந்தால் இதை அரசுக்கு சொல்லி குண்டுவெடிப்பையே செயலிழக்க செய்திருக்க முடியும். ஆனால், அவர்தான் அதற்கு பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்தார். அங்கு அவர் நாட்டை பற்றி யோசித்தாரா..? தன் மத மக்களை பற்றி யோசித்தாரா..? இல்லையே..! ஏன்..? காரணம், அங்கு அவர் கண்களில் அப்போது தெரிந்தது பணம் மட்டுமே. சமீபத்தில் இந்த வழக்கு தொடர்பில் கைதாகி உள்ளே போன சஞ்சய்தத்திற்கும் இஸ்லாமிற்கும் என்ன சம்பந்தம்..? சுயநலம் கொண்டு அடுத்தவர்க்கு தீங்கு செய்ய நினைக்கும் எவனும் தன் நாடு, மதம், இனம் பற்றி யோசிப்பதில்லை. அப்பாவி மக்களை துண்டாட இது போன்ற சமூக விரோதிகள் கையிலேந்தும் ஆயுதம் தான் மதவாதம்.!

தாவுத் பிடிபட்டால் மட்டும் என்ன நடக்கப்போகிறது..? வருடக்கணக்கில் விசாரணை நடக்கும். அதற்குள் அவன் வயது போய்விடும். அதன் பிறகு தான் உயிரோடு இருப்பதை விட இறப்பது மேல் என்று நினைக்கும் காலத்தில் ஆயுள் தண்டனையோ, அல்லது அரிதாக மரணதண்டனையோ கிடைக்கும். அதற்குள் அவன் சாட்சிகளை, தடயங்களை தன் பணம் கொண்டு கலைத்துவிட்டால் மாசுமருவற்ற மனிதனாக வெளியே வருவான்.!! அரசாங்கத்தின் இயலாமையை அப்பாவி மக்களின் மேல் திணிப்பதில் எந்த ஒரு பயனும் இல்லை.

சிவா.ஜி
12-08-2007, 04:52 AM
முற்றிலும் உண்மை இதயம். அந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை ஆதாயமாக்கிகொண்ட எத்தனையோ அரசியல்வாதிகள் மும்பையில் உண்டு. இவர்களுக்கு இருப்பதெல்லாம் ஒரே மதம்....அது பணம்...மேலும் பணம்.அப்பாவி மக்கள் இறப்பதைப் பற்றி யாருக்கும் கவலையில்லை.இந்த தாவூத் கைதே அழகாக திட்டமிடப்பட்ட நாடகம்தான்.க்றுப்பு ஆடுகள் ஒழியும் வரை..நாம் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் இருக்க வேண்டும்.