PDA

View Full Version : மழலை



இலக்கியன்
09-08-2007, 05:49 PM
http://img338.imageshack.us/img338/1571/puttingyourbabytosleepqa3.gif (http://imageshack.us)

வண்ண எழில்
வதனமடி
வான் வெளியில்
பனிச்சாரலடி

கண்களிலே கருமைக்
காந்தமடி
பார்வையிலே பவள
மின்னலடி

இதழ்களில் தேன்
கிண்ணமடி
சிரிக்கிறதே பால்
வெண்மையடி

பேசுகின்றதே கிள்ளை
மொழியடி
இனிக்கிறதே அதன்
இனிமையடி

கால்கள் பஞ்சு
மெத்தையடி
மிதிக்கின்றதே அது
சொர்க்கமடி

ஒரு தாய் தன் தாய்மை உணர்வை வெளிப்படுத்தும் பாங்கில் எழுதப்பட்டது

இணைய நண்பன்
09-08-2007, 05:52 PM
தாய் பாசத்தை அழகான கவிநடையில் சொல்லி இருக்கிறீர்கள்.நன்றி

இலக்கியன்
09-08-2007, 05:52 PM
தாய் பாசத்தை அழகான கவிநடையில் சொல்லி இருக்கிறீர்கள்.நன்றி

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி இக்ராம்

அன்புரசிகன்
09-08-2007, 05:54 PM
[
கால்கள் பஞ்சு
மெத்தையடி
மிதிக்கின்றதே அது
சொர்க்கமடி

பெற்றவளுக்கே உரித்தான வரிகள்...
சொர்க்கமது என்னை அணைத்தது
உன்னை அணைத்தபடி தூங்குகையில்
பாராட்டுக்கள் கவிக்கு...

இனியவள்
09-08-2007, 05:58 PM
பேசுகின்றதே கிள்ளை
மொழியடி
இனிக்கிறதே அதன்
இனிமையடி

கால்கள் பஞ்சு
மெத்தையடி
மிதிக்கின்றதே அது
சொர்க்கமடி


அருமையான வரிகள் இலக்கியன்
மிகவும் ரசித்தேன் வாழ்த்துக்கள்
தோழரே

அமரன்
09-08-2007, 08:21 PM
முதல் ஐந்து பத்திகளும் காதலியையும் குழந்தையையும் நினைக்கவைத்தன. இருதி நான்கு வரிகள் கவிதையின் கருவைச் சொல்லின. நயமான சொற்கள். பாராட்டுக்கள்.

ஓவியா
09-08-2007, 11:27 PM
மனதை கொள்ளை கொள்கின்றது உங்கள் வைர வரிகள், பிரமாதம்.

பெற்றவளை போற்றினாள் சொர்க்கம் நிச்சயம்.

இப்படி ஒரு பிள்ளையை ஈன்றதற்க்கு உங்கள் அன்னையை போற்றுகின்றேன். அவருக்கு பாராட்டுக்கள்.

ஷீ-நிசி
10-08-2007, 05:02 AM
பிள்ளைக்கவி அழகுதான் நண்பரே! தொடருங்கள்!

இலக்கியன்
10-08-2007, 08:02 AM
பெற்றவளுக்கே உரித்தான வரிகள்...
சொர்க்கமது என்னை அணைத்தது
உன்னை அணைத்தபடி தூங்குகையில்
பாராட்டுக்கள் கவிக்கு...

நன்றி அன்புரசிகன் உங்கள் கருத்துக்கு

இலக்கியன்
10-08-2007, 08:07 AM
அருமையான வரிகள் இலக்கியன்
மிகவும் ரசித்தேன் வாழ்த்துக்கள்
தோழரே

உங்கள் விமர்சனத்துக்கு நன்றி இனியவள்

இலக்கியன்
10-08-2007, 08:08 AM
முதல் ஐந்து பத்திகளும் காதலியையும் குழந்தையையும் நினைக்கவைத்தன. இருதி நான்கு வரிகள் கவிதையின் கருவைச் சொல்லின. நயமான சொற்கள். பாராட்டுக்கள்.

உங்கள் கருத்தை அழகாக சொன்னீர்கள் அமரன் நன்றி

இலக்கியன்
10-08-2007, 08:10 AM
மனதை கொள்ளை கொள்கின்றது உங்கள் வைர வரிகள், பிரமாதம்.

பெற்றவளை போற்றினாள் சொர்க்கம் நிச்சயம்.

இப்படி ஒரு பிள்ளையை ஈன்றதற்க்கு உங்கள் அன்னையை போற்றுகின்றேன். அவருக்கு பாராட்டுக்கள்.

உங்கள் கருத்துக்கள் என் நெஞ்ஞை தொட்டன நன்றி சகோதரி

இலக்கியன்
10-08-2007, 08:39 AM
பிள்ளைக்கவி அழகுதான் நண்பரே! தொடருங்கள்!

உங்கள் கருத்துக்கு நன்றி ஷீ-நிசி

ஓவியன்
10-08-2007, 09:15 AM
மழலையே அழகு
அதன் மொழி இன்னும் அழகு
அவற்றுக்கு கவி படைத்த
இலக்கிய வரிகள்
அழகோ அழகு...................!

இலக்கியன்
10-08-2007, 06:23 PM
மழலையே அழகு
அதன் மொழி இன்னும் அழகு
அவற்றுக்கு கவி படைத்த
இலக்கிய வரிகள்
அழகோ அழகு...................!

விமரசனத்துக்கு நன்றி ஓவியன்

விகடன்
11-08-2007, 03:36 AM
பெற்றவளின் நிலையில் இருந்து படைத்த கவி, இது குழந்தைகளுக்கு ஒரு தாலாட்டாக இருக்கும் அன்னை பாடும்போது.

இலக்கியனின் பாட்டுவரிகளி இறுதி நாங்கும் வரிகளும் மிக மிக அருமை.

பாராட்டுக்கள்

kalaianpan
11-08-2007, 07:42 AM
மழலை என்றால்
கல் நெஞ்சும் கரையும்.....
இனிமை...............................
:smartass: :smartass: :smartass: