PDA

View Full Version : வாழ்க சாப்பாடுlolluvathiyar
09-08-2007, 04:07 PM
வாழ்க சாப்பாடு

என்னுடைய* அன்றாட உணவு பழக்கவழக்கங்கள் பற்றி விளக்கவுள்ளேன். நான் என்ன காந்தியா பழக்க வழக்கங்களை பற்றி கூறி அதை நீங்கள் அறிவதற்க்கு. இருந்தாலும் இவை என் சுவையான அனுபவங்கள் அல்லவா?

நான் தினமும் காலையில் 5 மனிக்கு விழித்து விடுவேன். ஆனால் படுக்கையை விட்டு எழுந்திருக்க ஒரு பத்து நிமிடம் ஆகும்.
எழுந்தவுடன் சிறிது நீட்டி நெழித்து பிறகு விக்கோ பவுடரில் பல் விளக்குவேன். காலையில் கையில் தான் பல்லு விளக்கும் பழக்கம் எனக்கு.
பிறகு தன்னீர் ஒரு சொம்பு குடிப்பேன். அப்புரம் ஒரு ஐந்து நிமிடம் கழித்து முதல் காலை கடனை முடிப்பேன்.
பிறகு நாட்டு கோழி முட்டை ஒன்றை உடைத்து குடித்து விடுவேன்.
வெள்ளி கிழமை, புரட்டாசி மாதங்களில் முட்டை க்கு பதில் பச்சை நிலகடலை கொஞ்சம் சாப்பிடுவேன்.
சரியாக என் மனைவி எனக்கு காபி போட்டு கொடுப்பாள். அதை குடித்து விட்டு, மொட்டை மாடிக்கு சென்று ஒரு நிதானமாக ஒரு தம் அடித்து விட்டு கீழே வருவேன். பிறகு நான் அரை மனி நேரம் வாக்கிங் போவேன். வயசாயிடுச்சுல தொந்தியும் வந்துருச்சல்ல அதான் தினமும் வாங்கிங் போக சொல்லி என் மனைவி நச்சல். சில சமயங்களில் குழந்தைகளும் உடன் வருவார்கள்.குழந்தைகளும் காலையில் சத்துமாவு கூளும் கொடுப்போம்.
வாக்கிங் முடித்து வந்தவுடன் சிறிது உடற்பயிற்ச்சி செய்வேன். எல்லாமே மெதுவா தான் செய்வேன். எனக்கு எந்த செயலையும் அவசரமா செய்யரத் பிடிக்காது. நான் போய் எந்த ரயிலையும் பிடிக்க போரதில்ல. அப்பரம் மெதுவா சவரம் செய்து விட்டு குளிக்க போவேன்.
என்னுடைய காலை குளியல் மற்றவர்களை போல இருக்காது.
மெதுவா குளிப்பேன். எத்தனை குளிர்காலமாக இருந்தாலும் மூக்கில் சளி ஒழுகினாலும் நான் குளுந்தன்னியில் தான் குளிப்பேன்.
காலை குளியலில் சும்மா தான் தேய்த்து குளிப்பேன். சோப்பு சாம்பு அரப்பு எல்லாம் போடுவது கிடையாது. முகத்துக்கு மட்டும் சோப்பு போடுவேன். சுருக்கமா சொல்லனும்னா காக்கா குளியல்னு சொல்லுவாங்கல்ல அதுதான். குளித்து முடித்தவுடன் டைனிங்க் டேபிளில் அமர்வேன்.

என்னுடைய காலை உணவு
கேரட், பீட்ரூட், வெள்ளரி போண்ற காய்கறிகளை சிறிது சிறிதாக நறுக்கி பச்சையாக தான் சாப்பிடுவேன். சாப்பிட்டு முடிக்க அதிக நேரம் ஆகும்.
பிறகு ஒரே இட்லி சாப்பிட்டுவிட்டு. ஒரு இளநீர் சாப்பிட்டுவிட்டு,
குழந்தைகளை பள்ளிக்கு தாட்டிவிட்டு ஒரு தம் அடித்து விட்டு வண்டியை எடுத்து
8 மனிக்கு பேக்டரிக்கு வந்துரனும். 10 மனிக்கு உள் வேலைகள் எல்லாம் முடிந்து விடும்.
பிறகு வடையுடன் ஒரு டீ + தம் அடித்து விட்டு வெளி வேலைகள் கவனிக்க சென்று விடுவேன்.

மதியம் அதிகமா ஹோட்டல் சாப்பாடுதான். டவுனில் இருந்தால் அன்னபூர்னாவில் வயிரு முட்ட சாப்பிட்டு விடுவேன்.
சில சமயம் வீட்டுக்கும் போய் சாப்பிடுவேன். மத்தியான சாப்பாடு நான் சாப்படரத யாரும் கன்னில் பார்க்க கூடாது. ஆமாம்
திட்டி பட்டுரும்னு என் மனைவி சொல்லுவா? அப்படி வலிச்சு வலிச்சு சாப்பிடுவேன்.

பருப்பு எனக்கு அதிகமா பிடிக்காது கொஞ்சமா தான் சாப்பிடுவேன். குழம்புனா ஒரு கட்டு கட்டி விடுவேன்.
ரசத்த எனக்கு நல்லா கலக்கி ஊத்தனும். முழுக்க கையில் வலித்துதான் சாப்பிடுவேன். ருசித்து சாப்பிடும்போது நான் எத்தன பேரு இருந்தாலும் நாகரீகம் பார்பதில்லை. யார் இருந்தாலும் சரி யார் வீட்டில் சாப்பிட்டாலும் சரி வட்டல தூக்கு மீதி ரசத்த குடிக்காம இருக்க மாட்டேன்.
அடுத்தது தயிர் சாப்பாடு. அதில் சாப்பாடு கம்மியா தான் இருக்கும் ஆனா பொறியல் தான் அதிகமா இருக்கும். நான் ஒரு பொறியல் பிரியன்.
அப்பரம் கண்டிப்பா ஒரு வாழைபழம் சாப்பிடுவேன். இத்தனையும் சாப்பிட்டு விட்டு பின்னாடி ஒரு தம் அடித்து விடுவேன்

ஒருவேல பேக்டரியிலே இருக்க வேண்டி இருந்தா பக்கத்துல ஹோட்டல் கிடையாது. எல்லாம் சின்ன டீகடைதான்.
ஒரு தயிர் சாப்பாடு பொட்டனம் வாங்கிட்டு ரூமுக்கு போய் அதுல மாதுலம்பழமும் நிலகடலையும் கலந்து பினைந்து சாப்பிடுவேன்.

வீடா இருந்தா சிறிது நேரம் தூக்கம். ஆபீஸா இருந்தா சேரிலேயே ஒரு குட்டி தூக்கம் போடுவேன்.
பிறகு சில வேலைகளை முடித்து விட்டு சாய்ந்திரம் 6 மனிக்கு ஏதாவது தேங்கா பன், பிஸ்கட் போண்ற ஸ்னேக்ஸ் சாப்பிடுவேன்.
அப்புரம் ஒரு டீயுடன் ஒரு தம். ஒருவேல டவுனி சுத்தீட்டு இருந்தனா, இங்கு பேமஸ் ஹொட்டலுல் லெமன் டீ கிடைக்கும் சும்மா ஜம்முனு இருக்கும்.

இரவு வீடு போக 10 மனி ஆயிடும். அது வரைக்கும் வெளியில் தான் சுத்தீட்டு இருப்பேன்.
மீண்டும் ஒரு முரை பல்லு விளக்குவேன். இந்த முரை பிரஸில் பேஸ்ட் போட்டு விளக்குவேன்.
இரவு மீண்டும் ஒருமுரை டைலெட் போகும் பழக்கம் உள்ளவன்.
இரவு தான் சூப்பர் குளியல் எடுப்பேன். ஆம் எனக்கு இரவு குளியலில் தான் சோப்பு சாம்பு எல்லாம் போடும் பழக்கம்.
ஏனா ஊர் குப்பை + வாகன் புகைகள் எல்லாம் அப்பதான் என் மேனிய அழகு படுத்தி இருக்கும்.

பிறகு இரவு சாப்பாடு எப்படினு பாப்போம்
இட்லி, சப்பாத்தி, தோசை எதுவானாலும் ஒன்னு தான் சாப்பிடுவேன்.
அப்புரம் சீசனுக்கு கிடைக்கிற பழங்கள் ஒரு குண்டா நிரைய போட்டு சாப்பிடுவேன். பழத்துலயே வயித்த நப்புவேன்.
அப்புரம் பொடுசுகள அமுத்தி தூங்க வக்கனும்.
அப்புரம் மொட்டை மாடிக்க போய் ஒரு தம். அப்புரம் சிறிது நேரம் ஏதாவது புக். சம்டைம்ஸ் டீவி பாப்பேன்.
எதுவுமே இல்லீனா சம்சாரத்தோடா ஏதாவது வேண்டாத சண்டை பிடித்து சமாதனம் பன்னுவேன்
பிறகு தான் தூக்கம்.

என் உனவு முரையே அளவு குரைவு ஆனா காய் பழங்கள் அதிகம். (கூடவே தம்மும் உண்டு)

சனி கிழமை இரவு டோட்டல் சேஞ்சு என் உணவு. ஏனா எல்லா சனிகிழமையிலும் நன்பர்களுடன் பாருக்கு போகும் பழக்கம் உண்டு.
ஓவரா குடிக்கர பழக்கம் இல்ல. ஆனா கொஞ்சம் குடிப்பேன். (அழவெல்லாம் கேட்க கூடாது)
ஞாயிரு வாக்கிங் எக்ஸைஸ் எல்லாத்துக்கும் லீவு. காலையில் 10 மனிக்கு மேல தான் எந்திருப்பேன். பேப்பர் அப்படி இப்படி காலை சாப்பாடு போயிடும்.
கறி வாங்கி கொடுத்து விட்டு டவுனு சுத்த வந்துடுவேன். மதியம் வீட்டுக்கு போய் அசைவம் ஒரு கை பிடிப்பேன். எவ்வளவுனு அளவெல்லாம் கிடையாது.
வூட்டுகாரி நல்ல ருசியா வறுவல் செய்து போடுவா. பிரியானி எங்க வீட்டில் அதிகம் இடம்பெறாது. எனக்கு வருவல் பிரை பன்னாம அப்படி குழம்புல போடரது தான் அதிகமா பிடிக்கும். முடியர எழும்பையும் கடிச்சு சாப்பிடுருவேன்.
(அசைவம்னா பெரும்பாலும் மீன், கருவாடு, மட்டன் ,கோழி (நாட்டு கோழிதான் போண்டாஸ் கோழி பிடிக்காது) தான்.
வேற ஊர்வன ஐயிட்டங்கள் எல்லாம் கிடையாது. எங்கள் சாதி குணபடி மாடு சாப்பிடும் பழக்கம் சுத்தமா இல்ல.
எங்கள் சாதிஉட்பிரிவின் வழக்கபடி சில பறவைகள் சாப்பிடும் பழக்கம் கிடையாது)

அப்புரம் கொஞ்சம் ரெஸ்ட். இரவும் மதிய குழம்ப வச்சு சப்பாத்தி தோசை ஒரு கட்டு கட்டுவேன். திங்க கிழமை காலைல எந்திரிக்க கொஞ்சம் கஸ்டமா இருக்கும்.
இப்படி தானுங்க என் வாழ்கை ஓடிட்டு இருக்கு.

நான் சாப்பாடுக்கு அடிக்டுங்க அதனால் தான் எனக்கு வெளியூரில் வேலை கிடைச்சாலும் போரதில்ல. குரைந்த சம்பளமா இருந்தாலும் என் மனைவி கூட இருந்து சமச்சு போடனும். குரைவா சாப்பிட்டாலும் நிரைவா சாப்பிடர குணம் உள்ளவனுங்க. சாப்பாடு ரசித்து ருசிச்சு தான் சாப்பிடும் குணம் உள்ளவன்.
என்ன பொருத்தவரைக்கும் ஒரு மனிதனின் சாதனை எல்லாம் பன்னரத விட திருப்தியா சாப்படனும். சாப்பாட்ட என்ஜாய் பன்னனும்.

அதுவும் விருந்து சாப்பாடுனா கூச்சபடாம வலிச்சு வலிச்சு சாப்பிடனும். நாலு பேரு பாத்த என்ன நினைப்பாங்க நு நினைக்க கூடாதுங்க
சாப்பாடு சாப்பிடும்போது சும்மா பின்னிரனும். ஐயோ தொ ந்தி போட்டுருமோ, ஊதிடுவமோனு எல்லா பாக்க கூடாது.
எனக்கு முக்கியமான கெட்ட வார்த்தை இந்த டைட் நு காதுல கேக்கரது. பிறந்ததே சாப்பிடதானே. அப்புரம் எதுக்கு டைட்.
எட போட்டுதுனா வாக்கிங் எக்ஸைஸ் போய் கொழுப்ப கரைங்க சாப்பாட்ட குரைக்காதீங்க.
டாக்டர் சொன்னா அரோக்கியத்துக்கு ஆகாத ஐட்டத்த வேனும்னா குரைங்க

வேற எதுக்குங்க நாம வாழந்து பிரியோஜம்.


லொள்ளுவாத்தியாருக்கு தெரிந்த அட்வைஸ் வாழ்கைக்கு எது முக்கியம்
தினமும் 3 வேல சாப்பாடு
தினமும் 2 வேல டாயிலெட் / குளியல் / பல் விளக்குதல்

என்ன*வோ தோனுச்சு எழுதீட்டேன்
இந்த திரிய அனைவரின் உனவு பழக்கத்த பற்றி தெரிவிக்கர திரியா வச்சுகலாம்னு எனக்கு தோனுது.


வாழ்க சாப்பாடு

ஓவியன்
09-08-2007, 07:38 PM
ஹா, ஹா!

வாத்தியாரே உங்கள் சாப்பாட்டு முறைகள்
சிரிக்க வைத்தன..............
வியக்க வைத்தன...........
ஏன் அதிரக் கூட வைத்தன்..................! :thumbsup:

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

அறிஞர்
09-08-2007, 07:41 PM
இப்படிப்பட்ட வழிமுறையை கைக்கொள்ளும் நம் நண்பரை நேரில் சந்தித்து இருக்கலாமே...

உங்க ஊரில் போன வாரம் இருந்தேன்.

அமரன்
09-08-2007, 07:57 PM
வாத்தியாரே பகிர்வுக்கு நன்றி. நல்ல உணவு முறை. உங்களைப் பற்றி நீங்கள் சொன்னதை (தொப்பை)வைச்சுப்பார்க்கும்போது உங்க அவதார் பொருத்தமானது. தப்பா எடுத்துக்காதீங்க வாத்தியாரே...

இனியவள்
09-08-2007, 07:59 PM
ஆஹா வாத்தியாரே கலக்கல் பதிவு :lachen001:

நீங்கள் சொல்வதும் சரிதான் வாத்தியாரே
உடலைக் குறைப்பதற்காய் உணவைக் குறைத்து
நோயைக் கூட்டிக் கொள்கின்றனர்...

உங்கள் உணவுப்பழக்கம் நன்று

மீனாகுமார்
09-08-2007, 08:02 PM
வாத்தியாரைய்யா... உங்கள் தினசரி வாழ்க்கை நல்ல பாடமாக உள்ளது..
உங்கள் சொந்த வாழ்க்கையைப் பகிர்ந்து சொந்த அண்ணன் போல் ஆகிவிட்டீர்கள்...

நீவிர் வாழ்க*...........

விகடன்
09-08-2007, 08:10 PM
உணவுப் பழக்கத்தில் ஒரு சாதனையே படைத்துவிட்டீர்கள். பகிர்விற்கு நன்றி.

பதிலிற்கு எம்முடைய உணவு பழக்கவழக்கத்தையும் கேற்கிரீர்கள். அதை சொன்னால் இந்த திரி எனக்கு அறிவுரை வழங்கும் திரியாக மாறினாலும் அதிசயிக்கத்தேவையில்லை. அப்படிப்பட்டது. ஆகையால் வழிவிடுகிறேன் மற்றவர்களிற்காக...

ஆதவா
09-08-2007, 08:34 PM
அருமை வாத்தியாரே! மறைக்காமல் அனைத்தையும் சொன்னது மேற்சொன்ன காந்திய முறைப்படியே இருந்தது... வாழ்த்துக்கள்...

உணவு முறையில் நமக்கு இஷ்டமில்லை.... எதுகிடைத்தால் தின்பது நம் வேலை.....

விகடன்
09-08-2007, 08:41 PM
அருமை வாத்தியாரே! மறைக்காமல் அனைத்தையும் சொன்னது மேற்சொன்ன காந்திய முறைப்படியே இருந்தது... வாழ்த்துக்கள்...

உணவு முறையில் நமக்கு இஷ்டமில்லை.... எதுகிடைத்தால் தின்பது நம் வேலை.....

எப்படி ஆதவா?

ஓடுகிற ரெயிலையும் பறக்கிற விமானத்தையும் நீந்திர கப்பலையும் தவிர்த்து அனைத்தையுமா?

ஆதவா
09-08-2007, 09:15 PM
ஹி ஹி..

எனது பழைய சாப்பாட்டு முறைகளே வித்தியாசம் விராடன். (வீட்டில் இருந்தவரை)

பொதுவாக என் வீட்டில் காலை உணவு நிச்சயம் சேமியா, உப்புமா, இட்லி அல்லது சில ரக சாப்பாடுகளாக இருக்கும். என் அம்மா தேங்காய், மாங்காய் பாகல், கேரட், முட்டைக்கோசு சாதம் எல்லாம் செய்வார்... காலையில் மட்டுமே..

தேங்காய் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். இனிப்பாகவே இருக்கும். எனக்குப் பிடிக்காதது பாகற்காய், உப்புமா சேமியா ஆகியன.. இட்லி சமைக்கும்போது நிச்சயம் எனக்காக தோசைக்கு மாவு வைத்திருப்பார்கள்.. தோசை சமைத்தால்தான் சாப்பிடுவேன் என்று தெரிந்துகொண்டே சமைப்பார்கள்.. தோசைக்கு நிச்சயம் ஏதாவது குருமா, தேங்காய் அரைத்து ஊற்றிய குருமா, இல்லையென்றால் சாம்பார், சட்னி வைப்பார்கள். எங்கள் வீட்டில் ருசியாகவே தின்று பழகிவிட்டபடியால் எல்லாமே காரம் தான்.. சட்னி சாப்பிட்டீர்கள் என்றால் நாக்கு வீங்கும் அளவிற்கு காரம் சேர்க்கப்பட்டிருக்கும்..

இது ஒரு பக்கம் இருக்க, மதிய உணவு ஒரேவிதமாகத்தான் என் அம்மா செய்வார்,.

கீரை என்றால் பீட்ரூட்
பச்சைப் பயறு என்றால் பீன்ஸ்
துவரை சாம்பார் அதாவது கத்திரி, உருளைக்கிழங்கு, முருங்கை சாம்பார் என்றால் முட்டைக் கோசு பொறியல் என்று சட்டம் வகுத்த விதிமாதிரி ஒரேமாதிரி சமைப்பார்கள்...

இரவு அதேசாப்பாடு... இருவேளை மட்டுமே சமையல். அரிதான நாட்களில் மூன்றுவேளை சமையல் நடக்கும்.. ஞாயிறு அன்று ஒருவேளைமட்டுமே..

ஞாயிறு எப்போதுமே ஸ்பெசல். சிக்கன் சிந்தாமணி செய்வார்கள்.. (இதைப்பற்றிய பதிவு விரைவில்..) நாட்டுக் கோழி தான்... போண்டா கோழியில் சிந்தாமணி செய்யமுடியாது.. அல்லது செய்தால் சுவையாக இருக்காது. உயிருடன் கோழி வாங்கி வந்து உரித்து அறுத்து சமைப்பதற்குள் மூன்று மணி ஆகிவிடும். சுவையோ மிக அருமையாக இருக்கும்... இது வெளியே எங்கும் கிடைக்காது.

சுமார் ஐந்துவருடங்கள் சுத்த சைவனாக இருந்ததில் வீட்டு சமையலைத் தவிர வேறெதுவும் தொடாமல் இருந்திருக்கிறேன். பெரும்பாலும் பச்சைக் காய்,கனிகளை உண்டு வந்தேன். உடல் எடை குறைந்ததிலிருந்து சாப்பாடு போன்றவை சேர்த்திக் கொண்டேன்... எண்ணெயில் கொழுப்பு இருப்பதாகச் சொல்ல, வேண்டா வெறுப்பாக சாதம் சாப்பிட்ட அனுபவங்கள் உண்டு..

இதில் சாதனை என்னவென்றால் பால் பொருள்கள் எதுவுமே கிட்டத்தட்ட மூன்றுவருடங்கள் சாப்பிடவில்லை.... ஓரிருமுறை எல்லை தாண்டிய பழக்கமுண்டு...

இன்றைக்கும் மது, புகை ஆகிய பழக்கம் இல்லை... ஆகையால் அதைப் பற்றீ சொல்லவேண்டிய அவசியமுமில்லை.

இப்போது வீட்டுக்குச் செல்லுவது வாரமொருமுறை அல்லது இருமுறை என்பதால் கடை சாப்பாடுதான்..(எடுப்பு சாப்பாடு கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இங்கே அந்த முறை உண்டு)

எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்....

lolluvathiyar
11-08-2007, 07:48 AM
சிரிக்க வைத்தன..............
வியக்க வைத்தன...........
ஏன் அதிரக் கூட வைத்தன்

சாப்பாடு சாப்பரது சிரிக்க வியக்க அதிர வைக்கிறது என்று சொல்வது தானே வியப்பாக இருகிறது.
அது சரி ஓவியரே உங்கள் சாப்பாட்டு பழக்கத்தை கூறவில்லையே

சிவா.ஜி
11-08-2007, 08:11 AM
ரசனையான ஆளுங்க நீங்க வாத்தியாரய்யா...ஆனா தொப்பைதான் கொஞ்சம் இடிக்குது. உங்க தினசரி வாழ்க்கையில உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்கலையா?
தினம் ஒரு 25 முறை சிட்−அப்ஸ் செஞ்சா கூட போதும் தொப்பை வராம தடுத்திடலாம்.மத்தபடி உங்க வாழ்க்கை முறையும்,சாப்பாட்டு முறையும்.நெசமாவே என்னை பொறாமைபட வெக்குது.....ஹீம்....இதுக்கெல்லாம் கொடுப்பினை வேணும்.

அக்னி
11-08-2007, 10:02 PM
சுவாரசியமான திரி...
வாத்தியாரின் அன்றாட வாழ்க்கை வரலாறு சுவையாகவே உள்ளது...

ஆதவா...
அந்த சீவகசிந்தாமணியை... ச்சே...
சிக்கன் சிந்தாமணியை எப்படியாவது கூட்டிவந்து மன்றத்தில் விடுங்கள்...
முயற்சி பண்ணிப் பார்க்க...

அக்னி
11-08-2007, 10:20 PM
புலம்பெயரமுன்னர்...
அம்மா சமையல்... அதனால் இருந்த திமிர்...
எதை சமைத்து வைத்திருந்தாலும் இல்லாத ஒன்றைக் கேட்பது...
கூடவே விருப்பமில்லாதது போல உண்டுவிடுவது...

புலம்பெயர்ந்தபின்னர்...
நானே சமையல், நானே பந்தி...
காலையில் 06:00 மணிக்கு எழுந்து, காலைக்கடன்கள் முடித்தபின்னர்,
சுவையாக ஒரு கோப்பி, அல்லது தேநீர்... பால்கலந்து...
கூடவே... பிஸ்கெட், கேக், அல்லது, இதுபோன்ற பண்டங்கள் உட்செல்ல...

மதியம், பிரெட் சான்விச்சஸ் உண்பேன்...

மாலை... 19:30 மணிக்கு சாப்பிட்டுவிடுவேன். (மன்றம் வந்த பின்னர் நேரம் பிந்துவதுண்டு)
அசைவ உணவுகள்தான்.
அவற்றுடன், சோறு, பிரெட், நூடில்ஸ், சலாட், ரொட்டி ஏதாவதொன்றை சேர்த்துக்கொள்வேன்.

அதிகம் சாப்பிட முடிவதில்லை. சுவை இல்லாவிட்டால் சாப்பிடவே முடிவதில்லை. உறைப்பு என்னை அழவைக்கும், வியர்க்கவைக்கும் விரோதி.

கொக்ககோலா எனக்குப் பிடித்த குளிர்பானம். நிறையவே குடிப்பேன்.

தம் அடிப்பதுண்டு. குறைத்துவிட்டேன் மன்றத்தில் கிடைத்த அறிவுறுத்தல்களின்படி. முழுதாக நிறுத்திவிட முடியுமோ தெரியவில்லை.

இரவில், இனி வெளியே போக வேண்டியதில்லை என்ற நிலையில், கூடுதலாக 23:00 மணிக்கு குளியல் போட்டு,
அடுத்த நாளின் விடியலை புத்துணர்ச்சியோடு வரவேற்கத் தயாராவேன்.

நித்திரை வரும்வரை மன்றம், வேலைகள் இருப்பின் கணினியோடு இரவும் கரையும்...

நன்றி!

lolluvathiyar
16-08-2007, 02:28 PM
உங்க ஊரில் போன வாரம் இருந்தேன்.

கோவையிலா, தூனிலும் இருப்பீர் துரும்பிலும் இருப்பீரோ

mukilan
31-07-2008, 09:28 PM
வாழ்க சாப்பாடு


இரவு தான் சூப்பர் குளியல் எடுப்பேன். ஆம் எனக்கு இரவு குளியலில் தான் சோப்பு சாம்பு எல்லாம் போடும் பழக்கம்.
ஏனா ஊர் குப்பை + வாகன் புகைகள் எல்லாம் அப்பதான் என் மேனிய அழகு படுத்தி இருக்கும்.

எதுவுமே இல்லீனா சம்சாரத்தோடா ஏதாவது வேண்டாத சண்டை பிடித்து சமாதனம் பன்னுவேன்
பிறகு தான் தூக்கம். :D:D


வாழ்க சாப்பாடு


உண்மையான லொள்ளு வாத்தியார்தான். உங்களின் சாப்பாட்டு முறையையும் வாழ்க்கைமுறையையும் பார்த்தால் எனக்கும் இதுக்கெல்லாம் கொடுப்பினை வேணும்னுதான் தோணுது. தொப்பையாவது ஒன்னாவது அகப்பையால அள்ளிச் சாப்பிடுங்க வாத்தியாரய்யா.

பென்ஸ்
10-08-2008, 04:07 AM
அட வாத்தியாரே.... கலக்குறிங்க போங்க....

சாப்பாடை ரசிச்சு ருசிச்சு சாப்பிடனும்ங்கிற உங்க அதே பாணிதான் என்னுடையதும்....

நமக்குள்ள ஒரே வித்தியாசம்....
நான் பறக்குறது விமானம்
ஊர்வதில்- ரயில்
தண்ணியில் இருப்பதில் -கப்பல்
இதை தவிர எல்லாம் சாப்பிடுவேன்

மனுசனா இருந்தாலும், அது மனுச கறி என்று சொல்லாம கொடுங்க (தாமரை சொன்னதுங்க இது) ... அதையும் ஒரு கட்டு கட்டுவேன்....

நல்ல இனிமையான பதிவு... ரசித்து வாசித்தேன்.