PDA

View Full Version : அப்பாவின் பெயர்



mania
02-06-2003, 07:28 AM
தன்னை விட அறிவாளி எவரும் இல்லை என்று நினைக்கும் ஒருவன் ஒரு நாள் தன் நண்பனை
ஒரு தானியங்கி பதில் சொல்லும் இயந்திரத்திடம் கூட்டிச்சென்று,'' இப்போ இந்த மெஷின் ஒரு
ஏமாத்து வேலை என்று நிரூபிக்கிறேன்'' என்று சொல்லி ஒரு பத்து ரூபாயை அதில் போட்டுவிட்டு,'' என்
அப்பா இப்போது என்ன செய்துகொண்டு இருக்கிறார்?'' என்று கேட்டான். ஒரு நிமிடத்தில் ஒரு கடித துண்டில்'
''உன்னுடைய அப்பா இப்போது ஒரு ரோடரி மீட்டிங்கில் பேசிக்கொண்டு இருக்கிறார்''என்று பதில் வந்தது.
அவன் வெற்றிகரமாக சிரித்துக்கொண்டே மெஷினில் இருந்து கீழே இரங்கி '' என்னுடைய அப்பா, ஒரு கார் விபத்தில்
இறந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது ? !!'' என்று கொக்கரித்து விட்டு, ''இன்னும் வேடிக்கை பாரு'' என்று சொல்லி
மீண்டும் அந்த மெஷினில் ஏறி இன்னும் ஒரு பத்து ரூபயைப் போட்டு விட்டு,'' என் அம்மாவின் கணவர் இப்போது என்ன
செய்கிறார்/'' என்று கேட்டான். ஒரு நிமிடத்தில் இன்னும் ஒரு துண்டில்,'' உன் அம்மாவின் கணவர் ஒரு கார் விபத்தில்,
பத்து வருடம் முன்பே இறந்து விட்டார். இன்னும் உன் அப்பாவின் பேர் தெரிய வேண்டுமானால் இன்னும் ஒரு பத்து ரூபாய்
போடு?"" என்று பதில் வந்த போது அவன் முகத்தைப் பார்க்கவேண்டுமே !!!

poo
02-06-2003, 09:28 AM
என்ன சொல்றது?!!!!!!!!!!!!!!1

தஞ்சை தமிழன்
02-06-2003, 09:56 AM
சூப்பர் மெஷினாக இருக்கே........

suma
02-06-2003, 03:08 PM
அதுக்கு தான் இந்த மாதிரி எடக்கு மடக்கான கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது என்பது.

இளசு
02-06-2003, 09:55 PM
கொஞ்சம் ஏடாகூடமான "சிரிப்பு" இது....

Dinesh
03-06-2003, 09:52 AM
கேள்வி கேட்டவனின் முகம் போன போக்கை பார்த்திருக்கவேண்டுமே!!!
நல்ல நகைச்சுவை மணியா அவர்களே!
வாழ்த்துக்கள்.

தினேஷ்.

விகடன்
11-08-2007, 09:06 AM
அவனிற்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். இனி அவன் நண்பனின் கடியிலிருந்து தப்பிக்க என்னமாதிரியெல்லாம் கஸ்டப்படுகிறானோ!!!

தளபதி
11-08-2007, 09:15 AM
நல்ல நகைச்சுவை.

aparajithc.achan
04-05-2009, 08:26 AM
அப்பு...இயந்திரம்னு நினைச்சா இம்சைதான் கொடுக்கும்...தோழன்னு நினைச்சா தோள் கொடுக்கும்... வாழ்த்துக்கள்.

நேசம்
04-05-2009, 10:30 AM
நேற்று கூட அசத்த போவது யாரு நிகழ்ச்சியில் கூட இந்த சிரிப்பை வேறு வடிவத்தில் ஒருத்தர் சொன்னார்..ரசிக்க கூடிய ஏடாலகூடான சிரிப்பு.

பரஞ்சோதி
05-05-2009, 09:19 AM
ஹி ஹி

ஏடாகூடமான சிரிப்பு தான்.

எடக்கு மடக்கு ஆட்களுக்கு இது தான் பதில்.

அமரன்
05-05-2009, 11:43 AM
தலை இதை எல்லாம் அசை போடுற வயசு ஆச்சா உங்களுக்கு.

லேட்டஸ்டா எதையும் நீங்க ரிலீஸ் பண்ணக் காணலையே.

மன்மதன்
07-05-2009, 09:47 AM
லேட்டஸ்டா எதையும் நீங்க ரிலீஸ் பண்ணக் காணலையே.


எதை கேட்கறீங்க....:rolleyes::rolleyes::D

ஓவியன்
12-06-2009, 01:30 PM
போகிற போக்கைப் பார்த்தா இந்த திரி பண்பட்டவர் பகுதிக்குப் போயிடும் போலிருக்கே....!! :D:rolleyes::D