PDA

View Full Version : ஐகாசை கொள்ளை அடிக்கலாம் வாங்க

ஆதவா
09-08-2007, 02:12 PM
இப்போதெல்லாம் ஐகாஷ் பற்றி அவ்வளவாக நாம் கண்டுகொள்வதில்லை..... ஏன்?

அறிஞர் அநியாயத்திற்கு இருபதினாயிரம் ஐகாஸ் வைத்திருக்கிறார்... அவரிடமிருந்து எப்பாடு பட்டாவது காசைப் பிடுங்கித் தருபவர்களுக்கு அவர் கேட்டது கொடுக்கப்படும் (ஆட்டோவில் வந்தாவது....) ஏற்கனவே என் அக்கா அப்பாவி ஓவியாவிடமிருந்து பதிமூவாயிரமும் தம்பி சுட்டியிடமிருந்து ஐயாயிரமும் மிரட்டி பிடுங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது...

முதலில் அறிவிப்பு இப்படித்தான் இருந்தது புதியவர்களே! அப்பறமா என்னை அறிஞர் தனக்குள் இழுத்துவிட்டார்..( பெட்டி கைமாறியதை ரகசியமாக வைத்திருக்க விரும்புகிறேன்...) பிறகு போகப் போகத்தான் தெரிந்தது நமது மன்றத்தில் அறிஞர் ஒரு பேங்க் என்றும் சுற்றி உள்ளவர்கள் எல்லாரும் பணக்காரர்கள் என்றும்... அதனால் இன்று முதல் என்னுடன் அறிஞரும் மற்ற எல்லாரும் அதிக பணம் உள்ளவர்களை கொள்ளை அடிப்பார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்...

இப்படிக்கு
கொள்ளை கோவிந்தன்..

lolluvathiyar
09-08-2007, 02:17 PM
நான் ரெடி அறிஞரிடம் எப்படி இபணம் பிடுங்குவது சொல்லிதாருங்கள் ஆதவா

மலர்
09-08-2007, 02:17 PM
நானும் ரெடி....

பென்ஸ்
09-08-2007, 02:19 PM
இதில் ஆதவா 13365.71 ஐ−காசும், வாத்தியார் 14465.13 ஐ−காசும் வைத்திருக்காங்க ... இவங்க அறிஞரிடம் பிடுங்க போறாங்களாம்...

ஏழை பிடுங்கினால் களவு
பணக்காரன் பிடுங்கினால் அரசியல் என்று நிருபிக்கிறாங்க....

அன்புரசிகன்
09-08-2007, 02:20 PM
அறிஞரே... பயப்படாதீங்க... அவுங்ககிட்ட ஆட்டோ தான் இருக்கு. நம்ம கிட்ட கிபீர் (மிகை ஒலி வேக தாரை விமானங்கள்) எல்லாம் கிடக்கு...

போட்டிருவமா...? (நமக்கு எவ்வளவு டீல்)

ஆதவா
09-08-2007, 02:22 PM
என்னோடு அறிஞருடன் மோதிட முன்வந்த மலர் மற்றும் வாத்தியாரை பாராட்டுகிறேன் (பின்னே? தைரியம் வேனுமில்ல..??)

வாத்தியாரே! எப்படி பிடுங்கவேண்டுமென்ற ஆலோசனைகள் இங்கே ரகசியமாக நடைபெற்று பிறகுதான் பிடுங்கவேண்டும்..... அறிஞரிடமிருந்து அவ்வளவு சுலபத்தில் பெறமுடியாது..,,,

மதி
09-08-2007, 02:25 PM
யாராச்சும் எனக்கும் கொஞ்சம் கொடுங்கப்பா...

அப்பாவி

ஷீ-நிசி
09-08-2007, 02:25 PM
நானும் ரெடி...... ஆதவா...

(அறிஞரே... தனிமடலில் பேரம் பேசிக்கவும் தயார்)

ஆதவா
09-08-2007, 02:26 PM
இதில் ஆதவா 13365.71 ஐ−காசும், வாத்தியார் 14465.13 ஐ−காசும் வைத்திருக்காங்க ... இவங்க அறிஞரிடம் பிடுங்க போறாங்களாம்...

ஏழை பிடுங்கினால் களவு
பணக்காரன் பிடுங்கினால் அரசியல் என்று நிருபிக்கிறாங்க....

அண்ணா... நீங்க ஒத்துழைச்சீங்கன்னா உங்களுக்கு பங்கு உண்டு... என்ன சொல்றீங்க??

ஆதவா
09-08-2007, 02:28 PM
நானும் ரெடி...... ஆதவா...

(அறிஞரே... தனிமடலில் பேரம் பேசிக்கவும் தயார்)

நீங்க இப்படி டபுள் கேம் ஆடுவீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்... அதனால உங்களை எங்கள் அணியில சேர்த்திக்க மாட்டோம்....:whistling:

பென்ஸ்
09-08-2007, 02:32 PM
நீங்க இப்படி டபுள் கேம் ஆடுவீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்... அதனால உங்களை எங்கள் அணியில சேர்த்திக்க மாட்டோம்....:whistling:

டபுள் கேம் ஆடகூடாதா... அப்ப ஆதவனும் அந்த அணியில் இருக்க முடியாதே....:music-smiley-008: :lachen001:

ஆதவா
09-08-2007, 02:34 PM
யாராச்சும் எனக்கும் கொஞ்சம் கொடுங்கப்பா...

அப்பாவி

தருகிறோம் தருகிறோம்... ஆனால் ஒரு விஷயம்.. நீங்கள் நம்ம ஷீ−நிசி மாதிரி அங்கே போய் போட்டுக்கொடுக்கக் கூடாது ஆமா,,,

அறிஞரே... பயப்படாதீங்க... அவுங்ககிட்ட ஆட்டோ தான் இருக்கு. நம்ம கிட்ட கிபீர் (மிகை ஒலி வேக தாரை விமானங்கள்) எல்லாம் கிடக்கு...

போட்டிருவமா...? (நமக்கு எவ்வளவு டீல்)

ரசிகரே! இதுக்கெல்லாம் ஆட்டோதான் கரீட்டு.... கிபீரா? குபீரா?/ அதெல்லாம் ஒத்துவராது.. (பட்ஜெட் பத்தாது.)..

ஆதவா
09-08-2007, 02:36 PM
டபுள் கேம் ஆடகூடாதா... அப்ப ஆதவனும் அந்த அணியில் இருக்க முடியாதே....:music-smiley-008: :lachen001:

அதெப்படி? நாந்தானே அறிஞரோட பணத்தைப் (?) பிடுங்கிற கூட்டத்துக்கே தலிவன்....

நான் வுட்ட பிட்டில இன்னும் அறிஞர் இந்த பக்கம் எட்டிக்கூட பார்க்கல..... அவ்ளோ பயம்...

மலர்
09-08-2007, 02:43 PM
என்னையும் அணியில் சேர்த்து கொண்ட ஆதவாவிற்கு நன்றி..
ரசிகரே நீங்களும் இங்க வந்து விடுங்கள்...
வந்தா காசு ...
வரலன்னா...

ஷீ-நிசி
09-08-2007, 02:46 PM
டபுள் கேம் ஆடகூடாதா... அப்ப ஆதவனும் அந்த அணியில் இருக்க முடியாதே....:music-smiley-008: :lachen001:

அது,,,,,, எங்க சின்ன தல.. பாயின்ட எப்படி புடிச்சது பார்த்தியா ஆதவா... :lachen001:

மதி
09-08-2007, 02:46 PM
தருகிறோம் தருகிறோம்... ஆனால் ஒரு விஷயம்.. நீங்கள் நம்ம ஷீ−நிசி மாதிரி அங்கே போய் போட்டுக்கொடுக்கக் கூடாது ஆமா,,,

எங்க?

ஆதவா
09-08-2007, 02:50 PM
என்னையும் அணியில் சேர்த்து கொண்ட ஆதவாவிற்கு நன்றி..
ரசிகரே நீங்களும் இங்க வந்து விடுங்கள்...
வந்தா காசு ...
வரலன்னா...

வராட்டி டோஸு தான்...

ஆதவா
09-08-2007, 02:53 PM
அது,,,,,, எங்க சின்ன தல.. பாயின்ட எப்படி புடிச்சது பார்த்தியா ஆதவா... :lachen001:

இதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்ல...

எங்க?

அறிஞர்கிட்டதான்...

இன்னும் அவர் எட்டிப் பார்க்கவில்லை.. கிட்டத்தட்ட தோல்விதான்... எப்படி ஐகாசை வாங்குவது.??? யாராவது தலைவனுக்கு யோசனை சொல்லுங்கப்பா...

மலர்
09-08-2007, 02:57 PM
யாராவது தலைவனுக்கு யோசனை சொல்லுங்கப்பா என்னது யோசனை சொல்லுங்களா...அப்படின்னா இனிமே தான் யோசிக்கவே செய்யணுமா.....

அன்புரசிகன்
09-08-2007, 03:00 PM
என்னது யோசனை சொல்லுங்களா...அப்படின்னா இனிமே தான் யோசிக்கவே செய்யணுமா.....

சொன்னேல்லே....

அவுருக்கு அறிவுன்னா எத்தனை கிலோ என்று கேப்பாரு... :thumbsup:

அறிஞர்
09-08-2007, 03:06 PM
யாரிடம் எப்படி வாங்க வேண்டும் எனக்கு தெரிந்த கலை....

ஹிஹிஹி.. எவ்வளவு கஷ்டப்பட்டு.. சேர்த்து வைத்திருக்கிறேன்....

நல்ல பதிவுகளை கொடுப்பவர்களுக்கு என் இபணம் கொடுக்கப்படும்.

ஆதவா
09-08-2007, 03:08 PM
என்னது யோசனை சொல்லுங்களா...அப்படின்னா இனிமே தான் யோசிக்கவே செய்யணுமா.....

அதுக்காகத்தானே இந்த திரியே ஆரம்பிச்சிருக்கோம்... எல்லாமே யோசிச்சிட்டு வந்தா அப்பறம் தலைவன்ங்கற பதவி எதுக்கு??? :icon_rollout:

சொன்னேல்லே....

அவுருக்கு அறிவுன்னா எத்தனை கிலோ என்று கேப்பாரு... :thumbsup:

நானும் அப்போ இருந்து பார்க்கிறேன்... நீங்க ஒருத்தருதான் நமக்கு சாதகாம வரமாட்டீங்கறீர்... (ஒரு 250 ஐகாசு கொடுக்கிறேன். நம்ம பக்கம் சேர்ந்துடுங்க..)

ஆதவா
09-08-2007, 03:10 PM
யாரிடம் எப்படி வாங்க வேண்டும் எனக்கு தெரிந்த கலை....

ஹிஹிஹி.. எவ்வளவு கஷ்டப்பட்டு.. சேர்த்து வைத்திருக்கிறேன்....

நல்ல பதிவுகளை கொடுப்பவர்களுக்கு என் இபணம் கொடுக்கப்படும்.

மன்றத்தில் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்துவிட்டேன்
எத்தனையோ கவிதைகள் எழுதி என் பேனா மை தீர்ந்துவிட்டது
கணீணியைக் கண்ணில் பார்த்து கண்கள் வலித்து, ஆஸ்பத்திரிக்குப் போய் கண்ணாடி வாங்கி, இத்தனை செலவும் செய்திருக்கிறேன்.
நல்ல பதிவுகள் மட்டுமே கொடுக்கும் எனக்கு என் சேவையை பாராட்டி உடனடியாக ஒரு பத்தாயிரம் வெட்டுங்கள்

அன்புரசிகன்
09-08-2007, 03:14 PM
நீங்க ஒருத்தருதான் நமக்கு சாதகாம வரமாட்டீங்கறீர்... (ஒரு 250 ஐகாசு கொடுக்கிறேன். நம்ம பக்கம் சேர்ந்துடுங்க..)

என் பெயரப்பார்த்தாலே புரியல??? நான் காசுக்கு மயங்கும் ஆளில்ல... :whistling:

அறிஞர்
09-08-2007, 03:15 PM
மன்றத்தில் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்துவிட்டேன்
எத்தனையோ கவிதைகள் எழுதி என் பேனா மை தீர்ந்துவிட்டது
கணீணியைக் கண்ணில் பார்த்து கண்கள் வலித்து, ஆஸ்பத்திரிக்குப் போய் கண்ணாடி வாங்கி, இத்தனை செலவும் செய்திருக்கிறேன்.
நல்ல பதிவுகள் மட்டுமே கொடுக்கும் எனக்கு என் சேவையை பாராட்டி உடனடியாக ஒரு பத்தாயிரம் வெட்டுங்கள்

இந்த டெக்னிக் எல்லாம் சுட்டிப்பையனிடம்... ஹிஹிஹி

மனோஜ்
09-08-2007, 04:45 PM
ஆதவா நான் இப்ப தான் அறிஞர கரட் பன்னி தமிழ்கணபுலிகளுக்கு காசுக்கு ஏற்பாடு பன்நிருக்கேன் அவருகிட்ட இருந்து பணம் கரந்தா அப்பரம் அவரு எனக்கு பணம் தரமாட்டாரு அதனாலே இந்த ஐடியாவ தயவு செய்து மாத்திங்க ஆமா
வேனுன்னா நான் 5 10 தே போட்டு தரரேன்

விகடன்
09-08-2007, 04:53 PM
பலருடைய ஐ−கேசிற்கு வேட்டு உதிரப்போகிறது போலுள்ளது. பாதுகாப்பிற்கு விராடன் வங்கியில் போட்டு வைக்கலாம். 50−50 டீலிங் வைச்சுக்குவம்.

ஆதவா
09-08-2007, 05:46 PM
ஆதவா நான் இப்ப தான் அறிஞர கரட் பன்னி தமிழ்கணபுலிகளுக்கு காசுக்கு ஏற்பாடு பன்நிருக்கேன் அவருகிட்ட இருந்து பணம் கரந்தா அப்பரம் அவரு எனக்கு பணம் தரமாட்டாரு அதனாலே இந்த ஐடியாவ தயவு செய்து மாத்திங்க ஆமா
வேனுன்னா நான் 5 10 தே போட்டு தரரேன்

அட அங்க வாங்கி இங்க தரதுதான்... நாங்க உங்களுக்கு பத்து பதினஞ்சு போட்டு கொடுக்கறேங்க...:spudnikbackflip:

ஓவியா
09-08-2007, 05:56 PM
எனக்கு ஒன்றும் வேண்டாம் ஆனால் முடிந்தால் அந்த 20,000யும் சுடுங்கள். நன்றி.

பாரி வள்ளல் அரசரின் ஆஸ்தான பெண் தளபதி
− ஓவியா

ஆதவா
09-08-2007, 05:59 PM
பலருடைய ஐ−கேசிற்கு வேட்டு உதிரப்போகிறது போலுள்ளது. பாதுகாப்பிற்கு விராடன் வங்கியில் போட்டு வைக்கலாம். 50−50 டீலிங் வைச்சுக்குவம்.

எப்படியெல்லாம் கொள்ளையடிக்ககிறீங்க??????

aren
09-08-2007, 06:01 PM
ஒரு குழு அறிஞரிடமிருந்து பிடுங்கவேண்டும் என்று சொல்கிறது.

இன்னொரு கும்பல் ஆதவா, வாத்தியார் ஆகியோரிடமிருந்து பிடுங்க வேண்டும் என்று சொல்கிறது.

நண்பர்களே ஜாக்கிரதை, அனைத்தையும் பிடுங்கிக்கொண்டு விடப்போகிறார்கள்.

ஆகையால் நான் சொல்வதைச் செய்யுங்கள்.

அறிஞரும், ஆதவாவும், வாத்தியாரும் உங்களிடம் இருக்கும் பணத்தை என்னிடம் கொடுத்துவையுங்கள். யாருக்கும் தெரியாமல் பத்திரமாக இருக்கும். என்ன நான் சொல்றது புரியுதா. எங்கே உடனே அனுப்பிவையுங்கள் பார்க்கலாம்.

lolluvathiyar
10-08-2007, 06:23 AM
எப்படி ஐகாசை வாங்குவது.??? யாராவது தலைவனுக்கு யோசனை சொல்லுங்கப்பா...
நான் சொல்ல*ரே எனுக்கு துனைத*லைவ*ர் போஸ்ட் வேனும்

இனிமே தான் யோசிக்கவே செய்யணுமா.....

யோசிச்சாச்சு விரைவில் யோசனை பதிக்க படும். துனைதலைவர் போஸ்ட்க்கு வெயிட் பன்னீட்டு இருக்கேன்

இது முத*ல் முய*ற்ச்சி

நல்ல பதிவுகளை கொடுப்பவர்களுக்கு என் இபணம் கொடுக்கப்படும்.

அறிஞர் அவர்களே உங்கள் வாக்கை நீங்கள் மீர மாட்டீர்கள் அல்லவா இது நீங்கள் கேட்ட பதிப்பு

நல்ல பதிவு

இப்ப எனக்கு 2500 இபணம் தரலாமல்ல.

ஓவியன்
10-08-2007, 07:10 AM
ஆதவரே!

அ, ஆ கூட்டணி என்று சொல்லி நீங்க தானே எனதருமைத் தம்பியும் என் தானைத்தளபதியுமான சுட்டியின் ஐ−கேசைப் பறிச்சீங்க?

இப்போ எல்லாத்தையும் தலை கீழாக மாற்றியாச்சா? :sport-smiley-013:

ஓவியன்
10-08-2007, 07:39 AM
மன்றத்தின் முதல் பத்து ஐ −கேஸ் முதலைகள் பட்டியல்.........

ஓவியா (27,197.65)
இதயம் (23,543.06)
அறிஞர் (22,642.59)
ஓவியன் (17,687.10) :thumbsup:
அமரன் (17,353.42)
லொள்ளுவாத்தியார் (16,006.55 )
ஆதவன் (15,275.26)
இனியவள் (15,179.65)
விராடன் (15,055.38)
சிவா.ஜி (14,407.76)

அன்புரசிகன்
10-08-2007, 07:47 AM
அறிஞரும், ஆதவாவும், வாத்தியாரும் உங்களிடம் இருக்கும் பணத்தை என்னிடம் கொடுத்துவையுங்கள். யாருக்கும் தெரியாமல் பத்திரமாக இருக்கும். என்ன நான் சொல்றது புரியுதா. எங்கே உடனே அனுப்பிவையுங்கள் பார்க்கலாம்.

குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாக மாறிவிடாதே...

மலர்
10-08-2007, 08:28 AM
தலைவர்.துனைதலைவர் எல்லாரும் எங்க போனிங்க?
மன்றத்தின் முதல் பத்து ஐ −கேஸ் முதலைகள் பட்டியல் ஒவியன் கொடுத்து விட்டார்...

அன்புரசிகன்
10-08-2007, 08:35 AM
மன்றத்தின் முதல் பத்து ஐ −கேஸ் முதலைகள் பட்டியல்.........

ஓவியா (27,197.65)
இதயம் (23,543.06)
அறிஞர் (22,642.59)
ஓவியன் (17,687.10) :thumbsup:
அமரன் (17,353.42)
லொள்ளுவாத்தியார் (16,006.55 )
ஆதவன் (15,275.26)
இனியவள் (15,179.65)
விராடன் (15,055.38)
சிவா.ஜி (14,407.76)

தலைவர்.துனைதலைவர் எல்லாரும் எங்க போனிங்க?
மன்றத்தின் முதல் பத்து ஐ −கேஸ் முதலைகள் பட்டியல் ஒவியன் கொடுத்து விட்டார்...

அட இவுங்க எல்லாம் முதலைங்களா????
அதுல ஓவியர் தம்ஸப் காட்டுறாரே.... அவருதான் முததலயா???

பென்ஸ்
10-08-2007, 08:36 AM
அறிஞரிடம் இருந்து பண*ம் பிடுங்குபவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்....

மேலும், மன்றத்தை தனது அன்பால் கட்டி காத்து செல்லும் அவரது சிறந்த செயலுக்கு அவருக்கு நான், எனது மன்றத்தின் முதல் பொற்கிழியாக இ−பணம் 1000 கொடுக்கிறேன்.

ஓவியன்
10-08-2007, 08:40 AM
அறிஞரிடம் இருந்து பண*ம் பிடுங்குபவர்களை நான் வன்மையாக கண்(அ)டிக்கிறேன்....[/B]

ஹீ!,ஹீ!

பென்ஸ் அண்ணா!
:icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap:

ஓவியன்
10-08-2007, 08:42 AM
அதுல ஓவியர் தம்ஸப் காட்டுறாரே.... அவருதான் முததலயா???

இல்லேப்பா, எனக்கு முன்னே மூன்று தலை இருக்க்கினம்...........! :icon_clap:

ஷீ-நிசி
10-08-2007, 08:44 AM
அறிஞரிடம் இருந்து பண*ம் பிடுங்குபவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்....

மேலும், மன்றத்தை தனது அன்பால் கட்டி காத்து செல்லும் அவரது சிறந்த செயலுக்கு அவருக்கு நான், எனது மன்றத்தின் முதல் பொற்கிழியாக இ−பணம் 1000 கொடுக்கிறேன்.

நாங்கலாம்... ரொம்ப ஏழைங்க..... யாராச்சும் எங்களுக்கு தானம் பன்னுங்கப்பா....

lolluvathiyar
10-08-2007, 08:47 AM
மன்றத்தின் முதல் பத்து ஐ −கேஸ் முதலைகள் பட்டியல்.........

ஓவியா (27,197.65)
இதயம் (23,543.06)
அறிஞர் (22,642.59)
ஓவியன் (17,687.10) :thumbsup:
அமரன் (17,353.42)
லொள்ளுவாத்தியார் (16,006.55 )
ஆதவன் (15,275.26)
இனியவள் (15,179.65)
விராடன் (15,055.38)
சிவா.ஜி (14,407.76)

எனக்கு இந்த டிஜிட் குழப்பமா இருக்கு ரவுண்டா இருந்தா தான் குழப்பமில்லாம இருக்கும் அதனால்
தகவல் தந்த ஓவியருக்கு 006.55 இபனத்தை தந்து விடுகிறேன்

அமரன்
10-08-2007, 08:47 AM
அறிஞர் ஒரு வங்கி. நிதி நிறுவனமல்ல. சேமித்து வையுங்கள். வட்டியுடன் வாங்கிடலாம்.
பென்ஸ் அண்ணா சார்பில்

ஓவியன்
10-08-2007, 08:53 AM
தகவல் தந்த ஓவியருக்கு 006.55 இபனத்தை தந்து விடுகிறேன்

உது உங்களுக்கே கொஞ்சம் ஓவராயில்லை வாத்தியாரே...............! :icon_nono:

lolluvathiyar
10-08-2007, 09:02 AM
ஓவியருக்கு 006.55 இபனத்தை தந்து விடுகிறேன்

உது உங்களுக்கே கொஞ்சம் ஓவராயில்லை வாத்தியாரே

அமாமாம் .55 மட்டும் தந்திருக்கனும் 006.00 ஓவரா தான் தந்து விட்டது ஓவரா தான் தெரியுது.

மலர்
10-08-2007, 09:04 AM
ஆமாம் வாத்தியாரே நீங்கள் 0.55 மட்டும் தந்திருக்கலாம்,,,,
ஒவியனுக்கு ஓவரா தந்ததால
ஓவரா தான் தெரியுது

pradeepkt
10-08-2007, 09:06 AM
நாங்கலாம்... ரொம்ப ஏழைங்க..... யாராச்சும் எங்களுக்கு தானம் பன்னுங்கப்பா....

அதானே என்னய்யா இது அநியாயமா இருக்கு...
இங்கே தொழிலாளிகள் (நம்மை மாதிரி) மன்றத்தில் உழைத்து ஓடாய்ப் போகிறோம்... ஏழையாகவே இருக்கிறோம்... ஓவியா மாதிரி முதலாளித்துவர்கள் எல்லாம் கொள்ளைப் பணத்தோடு இருக்கிறார்களே...

எங்கே சமத்துவம்...??? எங்கே நீதி??? எங்கே நியாயம்???

நியாய தர்மத்தை நிலை நிறுத்துபவர்கள் அனைவரும் ஓடோடி வந்து ஆளுக்கு ஆயிரம் பணம் எனக்கும் ஷீ நிசிக்கும் அளித்தால் செங்கொடியின் போராட்டத்தில் இருந்து உய்வீர்கள்... இல்லையேல்... நீங்கள் பொய்வீர்கள்

ஓவியன்
10-08-2007, 11:25 AM
நியாய தர்மத்தை நிலை நிறுத்துபவர்கள் அனைவரும் ஓடோடி வந்து ஆளுக்கு ஆயிரம் பணம் எனக்கும் ஷீ நிசிக்கும் அளித்தால் செங்கொடியின் போராட்டத்தில் இருந்து உய்வீர்கள்... இல்லையேல்... நீங்கள் பொய்வீர்கள் [/B]

யாரது நம்ம அண்ணாச்சியா?

ஆயிரம்
டொலரா?
ரூபாவா?
திர்ஹாமா?
றியாலா?
யூரோவா?
தினாரா?

கொஞ்சம் க்ளியரா சொல்லி இருக்கிலாமிலே?

ஓவியன்
10-08-2007, 11:27 AM
ஒவியனுக்கு ஓவரா தந்ததால
ஓவரா தான் தெரியுது

ஓவியன் − எங்கே என்னோட துப்பாக்கி
உதவியாளர் − இந்தாங்கோ எஜமான்

ஓவியன் - :waffen093:

aren
10-08-2007, 11:47 AM
முதலில் ஏழைகளாக எங்களுக்கு கொடுங்கப்பா. பின்னர் பார்க்கலாம்.

பென்ஸ்
10-08-2007, 11:50 AM
நாங்கலாம்... ரொம்ப ஏழைங்க..... யாராச்சும் எங்களுக்கு தானம் பன்னுங்கப்பா....

ஆகா... எங்கோ கேட்ட குரல்.... :1:

பதில்: சில்லறை இல்லப்பா...:icon_shades:

மலர்
10-08-2007, 11:54 AM
ஓவியரே....
ஹீ ஹீ இந்த பொம்மை துப்பாக்கிகெல்லாம்...
பயப்பட மாட்டேன்....

பென்ஸ்
10-08-2007, 11:55 AM
ஓவியரே....
ஹீ ஹீ இந்த பொம்மை துப்பாக்கிகெல்லாம்...
பயப்பட மாட்டேன்....

தோ பாருங்க கரப்பான்பூச்சி....

aren
10-08-2007, 11:57 AM
ஆகா... எங்கோ கேட்ட குரல்.... :1:

பதில்: சில்லறை இல்லப்பா...:icon_shades:

கரெக்டாத்தான் சொல்லியிருக்கீங்க. நீங்களும் எங்கள் குழுவில்தான் இருக்கனும் போலிருக்கு.

மலர்
10-08-2007, 12:00 PM
கரப்பான்பூச்சிக்கும் தான் பயப்பட மாட்டேனே....

பென்ஸ்
10-08-2007, 12:03 PM
கரெக்டாத்தான் சொல்லியிருக்கீங்க. நீங்களும் எங்கள் குழுவில்தான் இருக்கனும் போலிருக்கு.

அதுதான் அரென்.... சில்லறை இல்லன்னு சொல்லுவோம்...
ஏன் நோட்டு இருக்குதா... அதுவும் இல்லையே :smartass:

பென்ஸ்
10-08-2007, 12:04 PM
கரப்பான்பூச்சிக்கும் தான் பயப்பட மாட்டேனே....

உங்க முகத்தில் எதோ ... அது என்னானு பாருங்க...

rocky
10-08-2007, 12:10 PM
ஐய்கேஷ் னா என்னங்னா எனக்கு தெரியலே கொஞம் சொல்லுங்க

மலர்
10-08-2007, 12:16 PM
தெரியாமலா 1633.70 வச்சிருக்கிங்க...
நம்ப முடியலையே...

பென்ஸ்
10-08-2007, 12:18 PM
ஐய்கேஷ் னா என்னங்னா எனக்கு தெரியலே கொஞம் சொல்லுங்க

என் பதிவுக்கு பக்கதில் "donate me" என்று ஒரு சுட்டி இருக்கும் , அதை சொடுக்கினால் ஒரு பக்கம் வரும் , அதில் முதல் கட்டதில் 1000 என்றும் அடுத்த கட்டத்தில் "பென்ஸ்" என்றும் எழுதி, கீழே இருக்கும் "donate" புத்தானை அமுத்துங்கள் பதில் கிடைக்கும்....

மலர்
10-08-2007, 12:21 PM
ஐயயோ இங்க அநியாயம் நடக்குது....
ஒரு பச்ச புள்ளைய இப்படியா ஏமாத்துறது...
இத கேட்க யாருமே இல்லையா...

mania
10-08-2007, 03:09 PM
ஏம்ப்பா ஆதவா , ஷிநிசி.........இப்படி தும்பை விட்டுட்டு வாலை பிடிக்கிறீங்க......ஆட்டோ சர்விஸ் முதலாளியே இங்கே இருந்தாரேப்பா.....அப்போ வீட்டுட்டு இப்போ சும்மா புலம்பினா எப்பிடி....????? நாம தான் சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திசச்சோமே...?????சரி சரி ஏதோ கிடைக்கறதுல நமக்கும் கொஞ்சம் காசு வெட்டுங்க....ஹி....ஹி....ஹி.... ஆனா எனக்கு என்னமோ நம்பிக்கையில்ல......வராத சொத்துக்கு 100 பேரு வேற பங்கு......பேசாமா அறிஞரோட ஒரு டீல் போடலாமான்னு யோசிக்கிறேன்......
அன்புடன்
சேம் சைட் ஸ்பெஷலிஸ்ட்
மணியா.....

ஓவியா
10-08-2007, 03:43 PM

சரியான நேரத்தில்தான் வந்துள்ளீர்கள் அங்கிள்.

ஆமா ஆட்டோ சர்வீஸ் முதலாளி யார்?? :icon_shades: :icon_shades: :icon_shades:

அறிஞர்
10-08-2007, 03:52 PM
சரியான நேரத்தில்தான் வந்துள்ளீர்கள் அங்கிள்.

ஆமா ஆட்டோ சர்வீஸ் முதலாளி யார்?? :icon_shades: :icon_shades: :icon_shades:

ஓவியா தாங்கள் எனக்கு கொடுக்க வேண்டிய 7000 இபணம் பாக்கி இருக்கிறது. எப்பொழுது தருகிறீர்கள்

அறிஞர்
10-08-2007, 03:53 PM
பேசாமா அறிஞரோட ஒரு டீல் போடலாமான்னு யோசிக்கிறேன்......
அன்புடன்
சேம் சைட் ஸ்பெஷலிஸ்ட்
மணியா.....

மணியா எவ்வளவு வேணும்...

அமரன்
10-08-2007, 03:54 PM
சரியான நேரத்தில்தான் வந்துள்ளீர்கள் அங்கிள்.

ஆமா ஆட்டோ சர்வீஸ் முதலாளி யார்?? :icon_shades: :icon_shades: :icon_shades:

அவர் சிங்கப்பூரில் இருக்காருங்கோ..

ஓவியா
10-08-2007, 04:12 PM
ஓவியா தாங்கள் எனக்கு கொடுக்க வேண்டிய 7000 இபணம் பாக்கி இருக்கிறது. எப்பொழுது தருகிறீர்கள்

:1: :1: :1: :1:

ஒரு அப்பாவி பெண்ணை ஏமாற்றி 20,000 ஐகேஸ் அடித்த குற்றதிற்க்காக உங்களுக்கு இலவச மாமியார் வீட்டு சாப்பாடு அடுத்த வாரம் வீடு தேடி வரும்.

− பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்று பாடவா :sport-smiley-014: :sport-smiley-014:

namsec
10-08-2007, 04:21 PM
:1: :1: :1: :1:

ஒரு அப்பாவி பெண்ணை ஏமாற்றி 20,000 ஐகேஸ் அடித்த குற்றதிற்க்காக உங்களுக்கு இலவச மாமியார் வீட்டு சாப்பாடு அடுத்த வாரம் வீடு தேடி வரும்.

− பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்று பாடவா :sport-smiley-014: :sport-smiley-014:

மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள் உடனே நடவடிக்கை

அன்புரசிகன்
10-08-2007, 04:25 PM
ஒரு அப்பாவி பெண்ணை ஏமாற்றி 20,000 ஐகேஸ் அடித்த குற்றதிற்க்காக உங்களுக்கு இலவச மாமியார் வீட்டு சாப்பாடு அடுத்த வாரம் வீடு தேடி வரும்.

அக்கா.... ஏமாற்றி இருபதாயிரமா... நம்பமுடியவில்லை....

விகடன்
10-08-2007, 04:28 PM
ஓவியாக்கா ஏமாந்துவிட்டாரா!!!

ஓவியா
10-08-2007, 04:40 PM
ஆமாம் என்னை ஏமாற்றிய ஒரே அறிவாளி (பேர பாருங்க தெரியும்) ஹி ஹி ஹி அவர்தான்....... என் 20,000 கொளையடித்த ஆபீசர்.

இது நேற்றய கனவின் வசனம்.

ஓவியா
10-08-2007, 04:41 PM
மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள் உடனே நடவடிக்கை

அண்ணா, இங்கே மகளீர் போலிஸ், தாதா மற்றும் அனைத்தும் இனியவளே!!!

அப்பாடா இனியவளுக்கு புதிய பட்டம் ரெடி. :ernaehrung004:

அன்புரசிகன்
10-08-2007, 04:43 PM
சரி சரி போனாப்போகுது.. எவ்வளவு தியாகம் செய்துவிட்டீர்கள்... இது வெறும் 20,000 தானே.... வுடுங்கள்...

அக்னி
10-08-2007, 04:46 PM
ஓவியாக்கா ஏமாந்துவிட்டாரா!!!

ஆமா..
காக்கா ஏமாந்து விட்டது வடையை...
ஓவியாக்கா ஏமாந்து விட்டார் ஐகாஷை...

ஓவியா
10-08-2007, 05:01 PM
ஆமா..
காக்கா ஏமாந்து விட்டது வடையை...
ஓவியாக்கா ஏமாந்து விட்டார் ஐகாஷை...

ஆமாம், ஆனாலும் என*க்கு ஒரு சாத*னை ப*டைக்க* ஆசை இருக்கு, அடுத்த*வார*ம் சொல்லுகிறேன். :smilie_abcfra:

சரி சரி போனாப்போகுது.. எவ்வளவு தியாகம் செய்துவிட்டீர்கள்... இது வெறும் 20,000 தானே.... வுடுங்கள்...

அதானே பாரி வள்ளலிம் மரு பிறப்புதான் ஓவியாவாம். :icon_shok:

மனோஜ்
10-08-2007, 05:12 PM
பாரிவள்ளல் ஓவியா வாழ்க

அக்னி
10-08-2007, 05:13 PM
ஆமாம், ஆனாலும் என*க்கு ஒரு சாத*னை ப*டைக்க* ஆசை இருக்கு, அடுத்த*வார*ம் சொல்லுகிறேன். :smilie_abcfra:
:icon_shok:

சாதனை பிறகு... இப்போதைக்குத் தொடுங்கள் 30000 ஐ...

அன்புரசிகன்
10-08-2007, 05:22 PM
Join Date: 27 Apr 2006
Location: LONDON
Posts: 6,489
iCash: 30082.75

திருட்டுப்போயும் பில்கேட்ஸாக ஜொலிக்கும் அக்கா.... வாழ்க.........

ஓவியா
10-08-2007, 05:23 PM
சாதனை பிறகு... இப்போதைக்குத் தொடுங்கள் 30000 ஐ...

பாரி வள்ளலின் தம்பி என்பதை ஆணியடித்தாற்போல் காட்டி விட்டாய்.

வாழ்க ஓவியா எனட் தம்பிஸ் ஃபெமிலி.

நன்றி மக்கா.

ஆதவா
10-08-2007, 05:34 PM
ஆமாம் என்னை ஏமாற்றிய ஒரே அறிவாளி (பேர பாருங்க தெரியும்) ஹி ஹி ஹி அவர்தான்....... என் 20,000 கொளையடித்த ஆபீசர்.

இது நேற்றய கனவின் வசனம்.

30000 இருக்கு.... உங்க கிட்டதான் கொள்ளை அடிக்கனும் போல இருக்கே....

அறிஞர்
10-08-2007, 06:55 PM
30000 இருக்கு.... உங்க கிட்டதான் கொள்ளை அடிக்கனும் போல இருக்கே....

சரி ஆரம்பிப்போமா.. ஆதவா.. நம் தொழிலை...

அக்னி
10-08-2007, 06:56 PM
அ ஆ...
இதுதானோ...
தொடங்கீட்டாங்க... ஓடியாங்கோ படம் பார்க்க...

ஓவியன்
10-08-2007, 06:58 PM
சரி ஆரம்பிப்போமா.. ஆதவா.. நம் தொழிலை...

ஓ ரெண்டு பேரும் சேர்ந்து தான் நடத்துறீங்களா இந்த விளையாட்டை? :icon_shok:

அறிஞர்
10-08-2007, 06:59 PM
அ ஆ...
இதுதானோ...
தொடங்கீட்டாங்க... ஓடியாங்கோ படம் பார்க்க...

என்னப்பா.. உம் கிட்ட பணம் கொஞ்சமா இருக்கு.... அக்கா கிட்ட இருந்து வாங்க வழி பாருங்க...

ஆதவா
10-08-2007, 07:04 PM
சரி ஆரம்பிப்போமா.. ஆதவா.. நம் தொழிலை...

அறிஞரே நமக்குள்ள எதுக்கு வீண் வம்பு.. பேசாம நான் தலைப்பை மாத்திடட்டுமா?

ஆதவா
10-08-2007, 07:05 PM
ஓ ரெண்டு பேரும் சேர்ந்து தான் நடத்துறீங்களா இந்த விளையாட்டை? :icon_shok:

ஹி ஹி.. இப்படித்தானே தம்பி சுட்டிப்பையனிடமிருந்து சுட்டினோம்... :liebe028:

aren
11-08-2007, 01:56 AM
சரி ஆரம்பிப்போமா.. ஆதவா.. நம் தொழிலை...

சேர்த்து வைத்திருகும் பணத்தைப் பார்த்தாலே தெரியுது, உங்கள் தொழில் நல்லாவே நடக்குதென்பது. எல்லாம் நல்லா இருந்தா சரிதான். தொடருங்கள்.

விகடன்
11-08-2007, 03:57 AM
Join Date: 27 Apr 2006
Location: LONDON
Posts: 6,489
iCash: 30082.75

திருட்டுப்போயும் பில்கேட்ஸாக ஜொலிக்கும் அக்கா.... வாழ்க.........

அக்காவிடம் இருப்பது அமுதசுரபி போன்று ஒன்றாக்கும். கொடுக்கக் கொடுக்க கூடுமே அன்றி குறையாது. :sport-smiley-018:

விகடன்
11-08-2007, 03:59 AM
பாரிவள்ளல் ஓவியா வாழ்க

வள்ளன் என்று திடீரென்று புகழுகிறீரே. ஏதாச்சும் வள்ளலிடமிருந்து...

lolluvathiyar
11-08-2007, 06:05 AM
இங்க என்ன நடக்குது யாராவது சொல்ல முடியுமா

ஆதவா
11-08-2007, 06:14 AM
இங்க என்ன நடக்குது யாராவது சொல்ல முடியுமா

ஒரு கொள்ளை நடக்குது.. ஆனா அது யார்கிட்ட இருந்துன்னு எனக்கே தெரியலை..

விகடன்
11-08-2007, 06:16 AM
முதல்ல கொன்சல்ட்டன்ட் சார்ஜ்சா 5000 ஐ வெட்டும் வாத்தியாரே. அப்புறமா சொல்லுறன் பதிலை (விளக்கத்தை) உம்முடைய லொள்ளுக்கு

ஓவியா
11-08-2007, 04:45 PM
நான் இன்னும் ஒரு வாரத்திலே 100,000.00 ஐகேஸ் அடையனும் என்று வேண்டியிருக்கேன், இது நடந்தா லண்ட*ன் மாரியாத்தாலுக்கு கூழ் ஊத்தறதா நேந்துகிட்டேன். என் ஐகேஸில் கை வச்சீங்க அப்புரம் அது தெய்வ குத்தாமா போயிடும். கவனம்.

அன்புரசிகன்
11-08-2007, 04:48 PM
தமிழ்மன்ற பில்கேட்ஸி வாழ்க.........

ஆமா.... சாமிக்குற்றம்... கவனம்...
(வேணுமுன்னா சாமிக்கு பரதஷ்டை அடித்து 100 காசு புடுங்கலாம்)

lolluvathiyar
12-08-2007, 06:51 AM
இது நடந்தா லண்ட*ன் மாரியாத்தாலுக்கு கூழ் ஊத்தறதா நேந்துகிட்டேன்.

இருங்க இருங்க வென்கட்ட வர சொல்லரேன்

ஓவியன்
12-08-2007, 06:58 AM
ஆமா வெங்கட் நல்லா கூழ் ஊத்துவாரா?

ஆதவா
12-08-2007, 07:10 AM
நான் இன்னும் ஒரு வாரத்திலே 100,000.00 ஐகேஸ் அடையனும் என்று வேண்டியிருக்கேன், இது நடந்தா லண்ட*ன் மாரியாத்தாலுக்கு கூழ் ஊத்தறதா நேந்துகிட்டேன். என் ஐகேஸில் கை வச்சீங்க அப்புரம் அது தெய்வ குத்தாமா போயிடும். கவனம்.

அதையும் பாத்திருவோம்... அறிஞரே! கவனிக்கவும்.. நீங்கள் என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ எனக்குத் தெரியாது... 30000 ஐகாசையும் பிடுங்கவேண்டும்.... அதற்கு எத்தனை ஆயிரம் செலவழிந்தாலும் சரி... (அண்ணன் இளசு பொறுப்பேற்பார். :D)

aren
12-08-2007, 08:07 AM
நான் இன்னும் ஒரு வாரத்திலே 100,000.00 ஐகேஸ் அடையனும் என்று வேண்டியிருக்கேன், இது நடந்தா லண்ட*ன் மாரியாத்தாலுக்கு கூழ் ஊத்தறதா நேந்துகிட்டேன். என் ஐகேஸில் கை வச்சீங்க அப்புரம் அது தெய்வ குத்தாமா போயிடும். கவனம்.

பணத்தை பத்திரமா வைத்துக்கொள்ளுங்கள். இல்லைன்னா அவ்வளவுதான் எல்லாம் அதோகதிதான். கொஞ்சம் ஜாக்கிரதை.

ஆமாம் உங்களுக்கு எப்படி அவ்வளவு பணம் கிடைத்தது. நம்ம ஐ.டி. டிபார்ட்மெண்ட் மாதிரி உங்களை மடக்க வேண்டியதுதான்.

ஓவியா
13-08-2007, 01:02 AM
இருங்க இருங்க வென்கட்ட வர சொல்லரேன்

வென்கட் அவர்களுக்கு மட்டும் கப்பில் ஊத்தாமல் குடத்தில் ஊத்துறேன்னு சொல்லுங்க, :icon_08::icon_08:

ஓவியா
13-08-2007, 01:04 AM
பணத்தை பத்திரமா வைத்துக்கொள்ளுங்கள். இல்லைன்னா அவ்வளவுதான் எல்லாம் அதோகதிதான். கொஞ்சம் ஜாக்கிரதை.

ஆமாம் உங்களுக்கு எப்படி அவ்வளவு பணம் கிடைத்தது. நம்ம ஐ.டி. டிபார்ட்மெண்ட் மாதிரி உங்களை மடக்க வேண்டியதுதான்.

ஒரு அப்பாவி பெண்ணை பார்த்து கொள்ளைக்காரி கின்ஸிராணி அளாவிற்க்கு கேள்வியை தொடுக்கின்றீர்களே!! ஈஷ்வரா எனக்காக இதை தட்டிகேட்க ஒரு ஆளும் மன்றதிலே இல்லையா :icon_hmm:

ஆதவா
13-08-2007, 01:13 AM
ஒரு அப்பாவி பெண்ணை பார்த்து கொள்ளைக்காரி கின்ஸிராணி அளாவிற்க்கு கேள்வியை தொடுக்கின்றீர்களே!! ஈஷ்வரா எனக்காக இதை தட்டிகேட்க ஒரு ஆளும் மன்றதிலே இல்லையா :icon_hmm:

அதிருக்கட்டும், எங்கே ஐகாசில் ஆராயிரம் குறைகிறது??

ஓவியா
13-08-2007, 01:16 AM
ஆராயிரமில்ல 10,000. அனுப்பிவிட்டேன்.

ஆதவா
13-08-2007, 01:37 AM
ஆராயிரமில்ல 10,000. அனுப்பிவிட்டேன்.

எங்கே?

ஓவியா
13-08-2007, 01:46 AM
திருசெந்தூர் முருகனுக்கு தானம் பண்ணிட்டேன்.

அறிஞர்
13-08-2007, 09:06 PM
என் இ−பணம் விரைவில் காலியாக இருப்பதால்.... மூத்த உறுப்பினர்கள் மூவருக்கு (மணியா, பாரதி, இளசு) 5000 கொடுக்கிறேன்.

என்ன மக்கா சந்தோசமா...

அக்னி
13-08-2007, 09:09 PM
என்ன மக்கா சந்தோசமா...

50000 வரை வரிவிலக்கு என்று கதை அடிபடுகின்றதே...
அவசரப்பட்டுவிட்டீர்களோ..?

அமரன்
13-08-2007, 09:11 PM
50000 வரை வரிவிலக்கு என்று கதை அடிபடுகின்றதே...
அவசரப்பட்டுவிட்டீர்களோ..?

கொடுக்க கொடுக்கத்தான் ஊறும் அக்னி.

ஓவியா
13-08-2007, 09:17 PM
என்ன மக்கா சந்தோசமா...

அனைவருக்கும் சந்தோஷம், என்னை தவிர....................

ஏனேன்றால் இவை என் ஐகேஸ் :sport-smiley-014::sport-smiley-014:

எனக்கு ஒரு 10,000 அனுப்பி வைக்கவும், 1பையசா குறைந்தாலும் எனக்கு அய்கேஸ் வேண்டவே வேண்டாம்

ஆதவா
08-09-2010, 03:34 PM
இவற்றையெல்லாம் படிக்கும் பொழுது,

மலரிடமும் பூமகளிடமும் ஐகாஷை ஏமாற்றி வாங்கியது நினைவுக்கு வந்தது!!!!
அதிலும் மலர் அநியாயத்துக்கு ஐகாஷை கொடுத்ததை நினைக்கும் பொழுது சிரிப்பு சிரிப்பாக வருகிறது :lachen001::lachen001::lachen001:

சூரியன்
08-09-2010, 03:37 PM
எனக்கும் மலர் அக்கா நிறைய கொடுத்தாங்க.:icon_rollout:

ஆதவா
08-09-2010, 03:39 PM
எனக்கும் மலர் அக்கா நிறைய கொடுக்தாங்க.:icon_rollout:

என்ன அடி யா? :aetsch013:

சூரியன்
08-09-2010, 03:43 PM
என்ன அடி யா? :aetsch013:

இப்படியெல்லம் வதந்தி கிளப்பாதீங்க.:sprachlos020:

Ravee
08-09-2010, 04:06 PM
ஒரு அப்பாவி பெண்ணை பார்த்து கொள்ளைக்காரி கின்ஸிராணி அளாவிற்க்கு கேள்வியை தொடுக்கின்றீர்களே!! ஈஷ்வரா எனக்காக இதை தட்டிகேட்க ஒரு ஆளும் மன்றதிலே இல்லையா :icon_hmm:

அட விடுங்க அக்கா யாரை எங்க தட்டணும் என்று சொல்லுங்க , சரியா தட்டுறேன். ஒரு தட்டுக்கு ஆயிரம் ஐ கேஸ் டீல் ஓ.கே யா? :sport-smiley-002:

ஓவியா
09-09-2010, 10:29 AM
அட விடுங்க அக்கா யாரை எங்க தட்டணும் என்று சொல்லுங்க , சரியா தட்டுறேன். ஒரு தட்டுக்கு ஆயிரம் ஐ கேஸ் டீல் ஓ.கே யா? :sport-smiley-002:

சரி உங்களே என் ஆட்டோ கிலின்டரா சேற்த்துக்கொள்கிறேன், :violent-smiley-010::violent-smiley-010: போடுவதற்க்கு டூட்டி வந்தா சொல்லியனுப்பறேன்.

ஒரு காலத்தில் நான் ஒன்றரை லட்சம் ஐகேஸ் வைத்திருந்தேன்... நிறைபேருக்கு ஐகேஸை வாரிவாரி வலங்கிய வள்ளல் நான்.

ஆதவா
09-09-2010, 10:34 AM

ஆமாம், அதில் ஒரு லட்சம் நாந்தானே கொடுத்தேன்..... கொள்ளையடித்து!!!

ஆதி
09-09-2010, 10:46 AM
இப்ப எனக்கு அமர், ஆதவா, சிவாஜி அண்ணா இவங்க ஐ*கேஷ் மேலத்தான் கண்ணு... தட்டனும்.. எப்படியாவது தட்டனும்..

அன்புரசிகன்
09-09-2010, 11:47 AM
இப்ப எனக்கு அமர், ஆதவா, சிவாஜி அண்ணா இவங்க ஐ*கேஷ் மேலத்தான் கண்ணு... தட்டனும்.. எப்படியாவது தட்டனும்..

அதுக்கு ஒரு வழியிருக்கு. ஆனா நான் சொல்லமாட்டேனே........ :icon_rollout:

வேணும் என்றால் விபுளடீன் இணையத்தளத்தில் சென்று படியுங்கள். :D (வழி மட்டும் சொல்லலாம். தேடிப்பிடிப்பது உங்கள் திறமை)

Ravee
09-09-2010, 12:04 PM
சரி உங்களே என் ஆட்டோ கிலின்டரா சேற்த்துக்கொள்கிறேன், :violent-smiley-010::violent-smiley-010: போடுவதற்க்கு டூட்டி வந்தா சொல்லியனுப்பறேன்.

ஒரு காலத்தில் நான் ஒன்றரை லட்சம் ஐகேஸ் வைத்திருந்தேன்... நிறைபேருக்கு ஐகேஸை வாரிவாரி வலங்கிய வள்ளல் நான்.

தலைவி யார் தலைன்னு சொல்லி அனுப்புங்க தலை கிள்ளி கொண்டு வருகிறேன் :icon_b:

அன்புரசிகன்
09-09-2010, 12:06 PM
தலைவி யார் தலைன்னு சொல்லி அனுப்புங்க தலை கிள்ளி கொண்டு வருகிறேன் :icon_b:

தலை என்றாலே நம்ம மணியா அண்ணா தானே... :eek: அவர் பூனைப்படையுடன் இருக்கார். கவனம்...

பென்ஸ்
09-09-2010, 03:54 PM
சரி உங்களே என் ஆட்டோ கிலின்டரா சேற்த்துக்கொள்கிறேன், :violent-smiley-010::violent-smiley-010: போடுவதற்க்கு டூட்டி வந்தா சொல்லியனுப்பறேன்.

ஒரு காலத்தில் நான் ஒன்றரை லட்சம் ஐகேஸ் வைத்திருந்தேன்... நிறைபேருக்கு ஐகேஸை வாரிவாரி வலங்கிய வள்ளல் நான்.

விளங்கிரும்...

அமரன்
09-09-2010, 08:31 PM
இப்ப எனக்கு அமர், ஆதவா, சிவாஜி அண்ணா இவங்க ஐ*கேஷ் மேலத்தான் கண்ணு... தட்டனும்.. எப்படியாவது தட்டனும்..

ஆமாதி... தட்ட தட்ட உங்கள் கணக்கும் உயரும்.