PDA

View Full Version : தோழியே எனக்குள் நீ



இனியவள்
09-08-2007, 01:49 PM
உன்னைக் கண் கொண்டு
பார்க்கவில்லை உயிர் கொண்டு
பார்க்கின்றேன்....

மரத்தில் பறிக்க பறிக்க மலரும் மலரல்ல
உன் மேலான என் நட்பு
பறித்தால் திருப்பி முளைக்காத
மரம் என் நட்பு...

கண்கள் செய்யும் சிறு தவறுக்கு
இதயம் அனுபவிக்கும் ஆயுள்
தண்டனை காதல்...
ஆனால் ஆயுள் வரை சுகமான
வதிவிடம் உன் நட்புள்ளம்..
நட்பை காதலிக்கின்றேன்
உன்னை சுவாசிக்கின்றேன்...

அனுமதி கேட்கவும் இல்லை
அனுமதி வாங்கவும் இல்லை
அனுமதியில்லாக் குடியிருப்பு
உன் இதயத்துக்குள் என் இதயம்....

வாழ்க்கையில் சந்தோஷம் வேணும்
என்றால் காதலை நேசி...

சந்தோஷமே வாழ்க்கையாக மாற
வேண்டும் என்றால் நட்பை நேசி

நான் உன்னை நேசிக்கின்றேன்
உன் நட்பை சுவாசிக்கின்றேன்...

தோழியே என் இரு விழிகள்
ஓர் இதயம் தவம் இருப்பது
உன் வரவுக்காகவே.....

இலக்கியன்
09-08-2007, 01:58 PM
அனுமதி கேட்கவும் இல்லை
அனுமதி வாங்கவும் இல்லை
அனுமதியில்லாக் குடியிருப்பு
உன் இதயத்துக்குள் என் இதயம்....

நட்பின் இலக்கணம் இதுதானோ உங்கள் தோழி வரவு நிச்சயம் கிட்டும் அழகான கவிதை வாழ்த்துக்கள்.
இனியவள்

ஆதவா
09-08-2007, 02:03 PM
தோழிக்குள் ஒரு காதல் மூட்டை.. நன்கு ரசித்தேன் இனியவள் அவர்களே உங்களின் பாட்டை..

பறித்தால் மலர் மலராது.. (தனிமலரைச் சொல்லுகிறேன்)
பறித்தால் (வெட்டினால்) மரம் முளைக்கும்.. முரண்பாடுகளை சரி செய்யுங்கள்..

காதல் மயமான கவிதைகள் கொடுக்கும் உங்களுக்காக ஒரு சிறு போட்டி நடத்தப் போகிறேன்.... கலந்து கொள்ளவும்... :)

இனியவள்
09-08-2007, 06:00 PM
நட்பின் இலக்கணம் இதுதானோ உங்கள் தோழி வரவு நிச்சயம் கிட்டும் அழகான கவிதை வாழ்த்துக்கள்.
இனியவள்

நன்றி இலக்கியன்

இனியவள்
09-08-2007, 06:02 PM
தோழிக்குள் ஒரு காதல் மூட்டை.. நன்கு ரசித்தேன் இனியவள் அவர்களே உங்களின் பாட்டை..

பறித்தால் மலர் மலராது.. (தனிமலரைச் சொல்லுகிறேன்)
பறித்தால் (வெட்டினால்) மரம் முளைக்கும்.. முரண்பாடுகளை சரி செய்யுங்கள்..

காதல் மயமான கவிதைகள் கொடுக்கும் உங்களுக்காக ஒரு சிறு போட்டி நடத்தப் போகிறேன்.... கலந்து கொள்ளவும்... :)

நன்றி ஆதவா....

நான் கூறியது ஒரு மரத்தில்
பூக்கும் மலர்களை ஆதவா
மரதில் பறிக்க பறிக்க
பூக்கள் மலரும்
ஆனால் அந்த மரத்தையே
பறித்து விட்டால் அதாவது
பிடுங்கி விட்டால் மீண்டும்
முளைக்குமா??
அதைத் தான் கூறினேன்
கூறிய விதத்தில் தளம்பல்
இருக்கும் என நினைக்கின்றேன்
நன்றி ஆதவா..

நிச்சயமாய்ய் கலந்து கொள்வேன் ஆதவா :icon_rollout:

அமரன்
09-08-2007, 08:28 PM
நட்பை சொல்லும் இன்னொரு கவிதை. இனியவளின் இனிக்கும் வரிகளில். பாராட்டுக்கள்.

அறிஞர்
09-08-2007, 09:01 PM
வாழ்க்கையில் சந்தோஷம் வேணும்
என்றால் காதலை நேசி...

சந்தோஷமே வாழ்க்கையாக மாற
வேண்டும் என்றால் நட்பை நேசி
.....

தோழியே அருமையான வரிகள்..

காதலுக்கும், நட்புக்கும் மற்றொரு விளக்கம்....

ஓவியன்
09-08-2007, 10:25 PM
நட்பு!
காதல்!
கடவுள் மனிதரினுள் ஒஅடைத்து விட்ட அருமையான இரு உணர்வுகள்.......

இரண்டில் எது பெரிதென்றால் விடை காண்பது கடினம்..........
தாயா, தந்தையா பெரியவர் என்பது போல.................

அந்த புள்ளியை வைத்து வரையப்பட்ட கவிதை...........

நட்புக்குச் சிந்து பாடிய இனியவளுக்கு என் பாராட்டுக்கள்!.

ஷீ-நிசி
10-08-2007, 05:22 AM
மரத்தில் பறிக்க பறிக்க மலரும் மலரல்ல
உன் மேலான என் நட்பு
பறித்தால் திருப்பி முளைக்காத
மரம் என் நட்பு...


இந்த இடத்தில் சின்ன மாற்றம்

பிடுங்கினால்
மீண்டும் மலரும் பூவல்ல
உன் மேலான என் நட்பு

பிடுங்கினால்
என்றுமே வளராத மரம்தான்
உன் மேலான என் நட்பு


கண்கள் செய்யும் சிறு தவறுக்கு
இதயம் அனுபவிக்கும் ஆயுள்
தண்டனை காதல்...

மிக மிக அழுத்தமான வரிகள்!


தோழியே என் இரு விழிகள்
ஓர் இதயம் தவம் இருப்பது
உன் வரவுக்காகவே.....

எங்கோ படித்தது...

வழிமீது விழிவைத்து
காத்துகொண்டிருக்கிறேன்..
என் விழிகளை
மிதித்துக்கொண்டாகிலும்
வந்து சேர்ந்துவிடு....

வாழ்த்துக்கள் இனியவள்...
கவிதையின் வரிகளில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.. நேரம் எடுத்துகொள்ளுங்கள். மெருகூட்டுங்கள் வரிகளை...
சொற்சுவை கூடும்......

விகடன்
11-08-2007, 03:20 AM
"மரத்தில் பறிக்க பறிக்க மலரும் மலரல்ல
உன் மேலான என் நட்பு
பறித்தால் திருப்பி முளைக்காத
மரம் என் நட்பு..."


இந்த இடம்தான் நட்பின் தாற்பரியத்தையே சற்று சலனிக்க வைக்கிறது. மற்றும்படி உங்கள் கவிதையில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை இனியவள்.

பாராட்டுக்கள்.

aren
11-08-2007, 03:23 AM
நட்பு
ஈடு இணையற்றது
அதை அழகான கவிதை வரிகளில் சொல்லி அசத்திவிட்டீர்கள். பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

kalaianpan
11-08-2007, 07:55 AM
நட்பு..........
பெறுமதி வாய்ந்த மிகப்பெரிய சொத்து...........
கல்க்கிட்டீங்க......
நண்பி.......

இனியவள்
13-08-2007, 06:41 PM
நட்பை சொல்லும் இன்னொரு கவிதை. இனியவளின் இனிக்கும் வரிகளில். பாராட்டுக்கள்.

நன்றி அமர்


தோழியே அருமையான வரிகள்..

காதலுக்கும், நட்புக்கும் மற்றொரு விளக்கம்....

நன்றி தோழரே

இனியவள்
13-08-2007, 06:42 PM
நன்றி ஓவியரே

நன்றி விராடன்

இனியவள்
13-08-2007, 06:43 PM
நட்பு..........
பெறுமதி வாய்ந்த மிகப்பெரிய சொத்து...........
கல்க்கிட்டீங்க......
நண்பி.......

நன்றி கலையன்பன்

இனியவள்
13-08-2007, 06:43 PM
நட்பு
ஈடு இணையற்றது
அதை அழகான கவிதை வரிகளில் சொல்லி அசத்திவிட்டீர்கள். பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

நன்றி ஆரென் அண்ணா

இனியவள்
13-08-2007, 06:44 PM
நன்றி ஷீ

நீங்கள் கூறிய மாற்றம் நன்றாக
இருக்கிறது ஷீ நன்றிகள்

அக்னி
13-08-2007, 08:12 PM
நட்பு, சுவாசம்...
காதல், வாசம்...
வாசம் இன்றி இருக்கலாம்...
சுவாசமின்றி இயங்கவும் முடியாது...

பாராட்டுக்கள் இனியவளே...

அமரன்
13-08-2007, 08:13 PM
நட்பு, சுவாசம்...
காதல், வாசம்...


சிலருக்கு இரண்டுமே கவசம் அக்னி.
பாராட்டுக்கள்.

அக்னி
13-08-2007, 08:16 PM
சிலருக்கு இரண்டுமே கவசம் அக்னி.
பாராட்டுக்கள்.
அது எமக்கு கவசம்...
நாம் என்றும் அதன் வசம்...
உண்மையானால் பாசம்...
பொய்மையானால் கொடு விசம்...

அமரன், சிறிதே தூண்டினால், மனம் மகிழ்ந்தே போகின்றது... இல்லையா..?

இனியவள்
13-08-2007, 08:16 PM
நன்றி அக்னி

ம்ம் அமர் சொல்வது
சரிதான் சிலருக்கல்ல
பலருக்கு

அமரன்
13-08-2007, 08:19 PM
நல்ல சொல்லாடல் அக்னி. நீங்கள் சொல்வது சதவீத உண்மை. நான் சொல்ல வந்தது..

காதலை
தட்டிக்கழிக்க விளைவோருக்கு
நட்பு ஒரு கவசம்.

நட்பைத்
தட்டிப்பறிக்க நினைப்"போரு"க்கு
காதல் ஒரு கவசம்

இனியவள்
13-08-2007, 08:22 PM
திரியைத் தூண்ட தூண்ட
மிளிரும் விளக்குபோல்

ஒரு சொல்லை தூண்ட தூண்ட
பல கவிகள் பிறக்கின்றனவே
இங்கு

வாழ்த்துக்கள் அமர் மற்றும் அக்னி

அக்னி
13-08-2007, 08:23 PM
இந்தக் கோணத்தில் நான் பார்க்கவில்லை...
உண்மையிலேயே, வித்தியாசமான பார்வை...

காதலும் நட்பும்
வித்தியாசமானவை...
ஆனால்,
சந்தர்ப்பவாதிகளால்,
இவை
ஒன்றாக்கப்படுவதும், வேறாக்கப்படுவதும்
இரண்டின் புனிதத்தையுமல்லவா,
மழுங்கடித்துப் பார்க்கின்றது..?