PDA

View Full Version : யார் நீ



இலக்கியன்
09-08-2007, 12:56 PM
http://img119.imageshack.us/img119/1280/normaloviarpugazhenthisfy6.jpg (http://imageshack.us)


கண்கள் இருந்தும்
குருடனாக..............

காது இருந்தும்
செவிடனாக..........

கால்கள் இருந்தும்
முடவனாக.............

உடல் இருந்தும்
முண்டமாக...........

உயிர் இருந்தும்
ஜடமாக................

ஏனெனில்?

..... ஒரு அகதி

ஆதவா
09-08-2007, 01:34 PM
ஒரு அகதி....

நெஞ்சம் அழகு பார்த்த காலங்கள் மறந்து போய் இன்று தஞ்சம் அடைந்தால் போதுமென கெஞ்சும் மானிடர்கள்.... இல்லை இல்லை... கெஞ்சவுமில்லை... காலக் கொடூரனின் சாட்டையில் விழுப்புண் பெற்று ஓடிக் களைத்தவர்கள்..

உடலுண்டு உயிரில்லை....
உறவுண்டு உயிரில்லை...

மேற்கண்ட வரிகளை அகதி மற்றூம் இந்தியா என்று பொருத்திப் பாருங்கள்..

எலும்பு கிழியும் அடி.... வாழ்த்துக்கள்..

இலக்கியன்
09-08-2007, 01:40 PM
ஒரு அகதி....

நெஞ்சம் அழகு பார்த்த காலங்கள் மறந்து போய் இன்று தஞ்சம் அடைந்தால் போதுமென கெஞ்சும் மானிடர்கள்.... இல்லை இல்லை... கெஞ்சவுமில்லை... காலக் கொடூரனின் சாட்டையில் விழுப்புண் பெற்று ஓடிக் களைத்தவர்கள்..

உடலுண்டு உயிரில்லை....
உறவுண்டு உயிரில்லை...

மேற்கண்ட வரிகளை அகதி மற்றூம் இந்தியா என்று பொருத்திப் பாருங்கள்..

எலும்பு கிழியும் அடி.... வாழ்த்துக்கள்..

உங்கள் விமர்சனத்துக்கு மிக்க நன்றி ஆதவா

இனியவள்
09-08-2007, 06:04 PM
அழகிய கவிதை இலக்கியன் வாழ்த்துக்கள்

நீங்கள் கூறியது சோம்பேறிகளுக்கும்
ஒத்து வரும் என நினைக்கிறேன்
இலக்கி...

அமரன்
09-08-2007, 08:16 PM
நிஜம்....சுடுகிறது இலக்கியன்.
பாராட்டுக்கள்.

இலக்கியன்
10-08-2007, 08:31 AM
அழகிய கவிதை இலக்கியன் வாழ்த்துக்கள்

நீங்கள் கூறியது சோம்பேறிகளுக்கும்
ஒத்து வரும் என நினைக்கிறேன்
இலக்கி...

இது சோம்பேறிகளுக்குரிய வரிகள் அல்ல
சட்டங்களால் கட்டுப்பட்ட ஒரு அகதியின் குரல்.
நேற்றுத்தான் எனக்கும் இங்கு இருக்கும் அனுமதி கிடைத்தது
நன்றி இனியவள்

இலக்கியன்
10-08-2007, 08:32 AM
நிஜம்....சுடுகிறது இலக்கியன்.
பாராட்டுக்கள்.

கருவின் நியம் புரிந்து கருத்துத்தந்தீர் நன்றி அமரன்

ஓவியன்
10-08-2007, 09:12 AM
உலகையே ஆண்டவன்
இன்று உலகெங்கும்
அகதியாக.......................

உண்மை சுடுகிறது..............

ஆனால் இலக்கியன், காற்று ஒரு போதும் ஒரே திசையில் வீசாதே.........
நிச்சயமாக திசை மாறும், இல்லாது விடின் திசை மாற வைப்போம், எல்லோரும் ஒன்றிணைந்து...................!

இலக்கியன்
10-08-2007, 06:24 PM
உலகையே ஆண்டவன்
இன்று உலகெங்கும்
அகதியாக.......................

உண்மை சுடுகிறது..............

ஆனால் இலக்கியன், காற்று ஒரு போதும் ஒரே திசையில் வீசாதே.........
நிச்சயமாக திசை மாறும், இல்லாது விடின் திசை மாற வைப்போம், எல்லோரும் ஒன்றிணைந்து...................!

ஆம் நன்றாக சொன்னீர்கள் நன்றி

அக்னி
10-08-2007, 06:42 PM
அகதி..!
கதியிழந்த,
மனிதன் படும்
அவதியின்,
பொழிப்பு...

பாராட்டுக்கள் இலக்கியன்...

ஆதவாவின் அலசல், எதிர்பார்ப்பு அனைவருக்குமே...

ஓவியன் வார்த்தைகள் சூடாக, உயர்ந்து ஒலிக்கிறது...

இளசு
10-08-2007, 07:09 PM
பசி வந்தால் மட்டுமல்ல
அகதி என்ற பட்டம் வந்தாலும்
பத்தும் பறந்துபோகுமே..

மனிதனின் சுயமரியாதையைச் சுடும் எதையும் தாங்கும் நிலை எவர்க்கும்
வரக்கூடாத துயர்நிலை!

அந்தத்துயர் வடித்த துளிகள் இவ்வரிகள்!

காலம் மாறி காயங்கள் ஆறி
ஆனந்தக்கண்ணீரால் கழுவப்படட்டும்!


பாராட்டுகள் இலக்கியன்!

பாரதி
11-08-2007, 01:20 AM
பார்க்க எழுத்துக்கள் உண்டு..
படிக்க வார்த்தைகள் இல்லை...

நெஞ்சைத்தொட்டது நண்பரே.

பாராட்டுக்கள்.

aren
11-08-2007, 02:30 AM
அகதி
உயிரேயில்லை
இந்த வார்த்தையில்
அப்படியானால்
இந்த வார்த்தை
அகராதியில்
எதற்கு!!!

அனைவரும்
மனிதர்களே
இதில் பாகுபாடு
எதற்கு!!!

kalaianpan
11-08-2007, 07:28 AM
கல்லுக்குள் ஈரம்.....
ஒருவரும் அகதியாகாமல் இரருக்க எனது பிரார்த்தனைகள்

அமரன்
11-08-2007, 07:05 PM
அகதி
உயிரேயில்லை
இந்த வார்த்தையில்
அப்படியானால்
இந்த வார்த்தை
அகராதியில்
எதற்கு!!!
அட..அட..அட...அட்டகாசமான கவிதை. பாராட்டுக்கள் ஆரென் அண்ணா.

மனோஜ்
11-08-2007, 07:31 PM
அகதி அது கொடுமை என்பதை
மனதை கல் ஆக்கும் எளிய வரிகள் நன்றி இலக்கியன்