PDA

View Full Version : சும்மா இருங்கள்



சிவா.ஜி
09-08-2007, 10:47 AM
முயல்பவனைத் தடையும்
முட்டுக்கட்டையாளர்களே....

ஏற்றிவிடும் ஏணியாய்
இருக்கவேண்டாம்
ஏறுபவனை
எட்டித்தள்ளாமலிருங்கள்!

கரையேற்றும் தோணியாய்
இருக்க வேண்டாம்
துடுப்பையாவது
உடைக்காமலிருங்கள்!

நடை பழகித்
தரவேண்டாம்
நடைவண்டியை
திருடாமலிருங்கள்!

பயணப்படும் அவனை
பாவம் விட்டுவிடுங்கள்
எதையாவது செய்து
எப்படியாவது உயர்வான்

உதவ முடியாதெனில்
தயவுசெய்து
ஒன்றை மட்டும் செய்யுங்கள்
சும்மா இருங்கள்

வெண்தாமரை
09-08-2007, 10:52 AM
நன்றாக சொன்னீர்கள். கவிதை நடையில்.. வாழ்க்கையில் நிறைய பேர் இப்படிதான் உதவி செய்கிறேன் பேர்வழி என்று உபத்திரம் தான் செய்கிறார்கள்;..

சிவா.ஜி
09-08-2007, 10:55 AM
நன்றி வெண்தாமரை.இன்று ஒருவன் உயர்வதற்கு பலர் உதவினாலும் இப்படிப்பட்ட தடைசொல்லும் ஆசாமிகளால் அவன் தளர்ந்து விடுகிறான்.அவர்களுக்கான என் ஆதங்கம்.

அன்புரசிகன்
09-08-2007, 10:58 AM
உதவி வேண்டாம் இடைஞ்சலும் வேண்டாம்... தகுந்த வேண்டுகோள்...

வரிகளுக்குப்பாராட்டுக்கள்.

சிவா.ஜி
09-08-2007, 11:02 AM
நன்றி அன்பு.இப்போதெல்லாம் அரட்டையிலேயே அதிக நேரம் கழிந்து விடுகிறது என்று நினைக்கிறேன்(அங்கேயும் கலக்கிட்டுத்தான் இருக்கிறீர்கள்)

அமரன்
09-08-2007, 11:15 AM
சிவா..என்னுள் இருப்பதை உங்கள் வரிகளில் காண்கின்றேன். அதிகம்சொல்லவேண்டிய தேவை இல்லை. கவிதையே எல்லாவற்றையும் தெளிவாக சொல்லி விட்டது. (இப்போது எனது நெற்றைய கவிதையைப் படியுங்கள்).
பாராட்டுக்கள் சிவா.

சிவா.ஜி
09-08-2007, 11:19 AM
நன்றி அமரன். நேற்றய கவிதையா? எப்படி அதனைத் தவறவிட்டேன். ஓ அந்த கவிதையை சொல்கிறீர்களா..? மன்னிக்கவும் அமரன் நான் சரியாக புரிந்து கொள்ளவில்லை.காதல் கவிதையென்று நினைத்துவிட்டேன்.

ஆதவா
09-08-2007, 11:25 AM
என்னால் சும்மா இருக்க முடியவில்லை.... அதான் விமர்சனம் பண்றேனே...

சிவா.ஜி
09-08-2007, 11:29 AM
ஆதவா விமர்சனம் என்பது வளரும் எந்த கலைஞனுக்குமே துடுப்போடு கூட்டு சேர்ந்த நேர்திசைக்காற்று போன்றது.இன்னும் இன்னும் முன்னே கொண்டு செல்லும்.அதை மிகவும் நேர்த்தியாகவே நீங்கள் செய்கிறீர்கள்.நன்றி.

அமரன்
09-08-2007, 11:32 AM
சிவா ஆதவாவின் பதிவை அவரும் ஒரு கவிஞர் என்ற அடிப்படையில் பாருங்கள். பதிவின் இன்னொரு முகம் தெரியும்.

இலக்கியன்
09-08-2007, 12:51 PM
சிவா உங்கள் கருமிகவும் நன்றாக உள்ளது இப்படியான பல மனிதர்கள் உண்டு

சிவா.ஜி
09-08-2007, 12:53 PM
நன்றி இலக்கியன்.எல்லோரோடும்,எல்லாவற்றோடும் போராடித்தானே முன்னேற வேண்டியுள்ளது.

இலக்கியன்
09-08-2007, 12:59 PM
நன்றி இலக்கியன்.எல்லோரோடும்,எல்லாவற்றோடும் போராடித்தானே முன்னேற வேண்டியுள்ளது.

வாழ்க்கை என்பது ஒரு போராட்டம் பிறந்து விட்டோம் போரடத்தானே வேண்டும்

வெண்தாமரை
09-08-2007, 01:03 PM
சரியாக சொன்னீர்கள்.. போராட்டம் என்பது பிறக்கும்போது எழுதிய விதி..

சிவா.ஜி
09-08-2007, 01:12 PM
நேரிடையான எதையும் போராடி ஜெயித்து விடலாம்,ஆனால் நம்மைச்சுற்றி கண்ணுக்குத்தெரியாத எத்தனை எதிரிகள்,எத்தனை சூழ்ச்சிகள். மிகக்கடினமான சூழலில் வாழ்வதால்,போராட்டத்தையும் தீவிரமாக்கவேண்டிய நிலையில் இருக்கிறோம்.

இலக்கியன்
09-08-2007, 01:15 PM
நேரிடையான எதையும் போராடி ஜெயித்து விடலாம்,ஆனால் நம்மைச்சுற்றி கண்ணுக்குத்தெரியாத எத்தனை எதிரிகள்,எத்தனை சூழ்ச்சிகள். மிகக்கடினமான சூழலில் வாழ்வதால்,போராட்டத்தையும் தீவிரமாக்கவேண்டிய நிலையில் இருக்கிறோம்.

:aktion033: ஆம் உண்மை கொஞ்சம் அசந்தால் அவ்வகளவுதான்

ஆதவா
09-08-2007, 01:38 PM
ஆதவா விமர்சனம் என்பது வளரும் எந்த கலைஞனுக்குமே துடுப்போடு கூட்டு சேர்ந்த நேர்திசைக்காற்று போன்றது.இன்னும் இன்னும் முன்னே கொண்டு செல்லும்.அதை மிகவும் நேர்த்தியாகவே நீங்கள் செய்கிறீர்கள்.நன்றி.
முய*ன்றுகொண்டுதான் இருக்கிறேன் சிவா அவ*ர்க*ளே! வெற்றிக்கு அருகாமையில் இருப்ப*தைப் போல* உங்க*ள் ப*தில் இருக்கிற*து... ந*ன்றி

சிவா ஆதவாவின் பதிவை அவரும் ஒரு கவிஞர் என்ற அடிப்படையில் பாருங்கள். பதிவின் இன்னொரு முகம் தெரியும்.

ந*ன்றி அம*ர*ன்....

ஷீ-நிசி
09-08-2007, 02:36 PM
சும்மா இருங்கள்!

உதவாமல் இருந்தாலே அவன் உயர்ந்து விடுவான்...உயர்த்துகிறேன் என்று சொல்லி தள்ளாதிருங்கள்... நல்ல ஆக்கம்.. கவிதைத்தனம் கொஞ்சம் குறைவாக உள்ளது....

சிவா.. தொடருங்கள்.... வாழ்த்துக்கள்!

இனியவள்
09-08-2007, 06:00 PM
ஏற்றிவிடும் ஏணியாய்
இருக்கவேண்டாம்
ஏறுபவனை
எட்டித்தள்ளாமலிருங்கள்!


இது தான் சிவா இப்பொழுது
கூடுதலாக நடக்கிறது உலகத்தில்..

தாங்களும் ஏறமாட்டார்கள்
ஏறுபவர்களின் காலையும்
தட்டி விடுபவர்கள் அதிகம்
பாரினிலே

வாழ்த்துக்கள் சிவா அழகிய
தத்துவத்தை இல்லை உண்மையை
கூறும் கவிக்கு

சிவா.ஜி
11-08-2007, 05:11 AM
சும்மா இருங்கள்!

உதவாமல் இருந்தாலே அவன் உயர்ந்து விடுவான்...உயர்த்துகிறேன் என்று சொல்லி தள்ளாதிருங்கள்... நல்ல ஆக்கம்.. கவிதைத்தனம் கொஞ்சம் குறைவாக உள்ளது....

சிவா.. தொடருங்கள்.... வாழ்த்துக்கள்!

நன்றி ஷீ..இதை எழுதும்போது உண்மையிலேயே சிறிது கோபம் மனதில் இருந்ததால் கவிதைத்தனத்தில் கவனம் குறைந்து விட்டது.

சிவா.ஜி
11-08-2007, 05:13 AM
நன்றி இனியவள். விதைத்தபின் வெந்நீர் ஊற்றாமல் இருந்தாலே போதும் மழை நீரில் அது மரமாய் வளரும்.ஆனால் சிலர் வெந்நீர்தான் ஊற்றுகிறார்கள்.அதையும் தாண்டி பல விதைகள் பிழைத்து செழித்து வளர்ந்து விடுகிறது. அப்படிப்பட்ட விதையாய் இருக்கவேண்டும்.

தளபதி
11-08-2007, 05:20 AM
சும்மா இருப்பவன் மனது
பிசாசின் கொத்தளம்.
சும்மா இருப்பவனால் சும்மாவே இருக்கமுடியாது.
எனவே, அவனை என்ன செய்யலாம் ?????

சிவா.ஜி
11-08-2007, 05:34 AM
அந்த பிசாசே அவனைக் கொத்தலாம்,அதனால் அவனை அதனிடமே விட்டுவிடலாம்.

kalaianpan
11-08-2007, 07:38 AM
முயல்பவனைத் தடையும்
முட்டுக்கட்டையாளர்களே....

ஏற்றிவிடும் ஏணியாய்
இருக்கவேண்டாம்
ஏறுபவனை
எட்டித்தள்ளாமலிருங்கள்!

கரையேற்றும் தோணியாய்
இருக்க வேண்டாம்
துடுப்பையாவது
உடைக்காமலிருங்கள்!


[/B]

த*ற்போது நாங்கள் ப*டும் அவஸ்த்தை.....
அனுப*வித்து வாசித்தேன்.......

சிவா.ஜி
11-08-2007, 07:45 AM
நன்றி கலையன்பன்.பெரும்பாலான இளைஞர்களின் பிரச்சினை இப்போது இதுதான்.தானாகவே வளர விட்டால் அவர்கள் ஒருநாள் மகா விருட்சமாய் வளர்ந்து நிற்பார்கள்.ஆனால் எங்கே விடுகிறார்கள்...?

kalaianpan
11-08-2007, 07:47 AM
அப்பழுக்கற்ற உண்மை....
:confused: :confused: :confused: :confused: