Log in

View Full Version : ரொம்ப நாளாச்சு கவிதை எழுதி



umakarthick
09-08-2007, 06:28 AM
ரொம்ப நாளாச்சு கவிதை எழுதி எல்லாரையும் பாடாபடுத்தி :)

ஏதாவதொரு பத்திரிக்கைக்கு கவிதைகள் அனுப்பினால் ரிஜெக்ட் பண்ணிராங்க,நார்மலான எளிமையான வார்த்தைகளாலான் கவிதைகளுக்கு மதிப்பில்லை இப்போது.சரி நாமும் யாருக்கும் புரியாத மாதிரி (எனக்கும் தான்) கவிதைகள் எழுதி பார்க்கலாம் என எடுத்த முயற்சி இது..

கவிதை புரிய வில்லை என்றால் உங்களுக்கு தமிழில் அந்த அளவு அறிவில்லை என அர்த்தமாம், இந்த மாதிரி கவிதைகளுக்கு குறந்த பட்ச தகுதிகள், புனைப் பெயர் இருக்க வேண்டும், பெண்ணாக இருக்க வேண்டும் கவிஞர் அப்புறம் முக்கியமாக சில வார்த்தைகள் சூன்யம் , யோனி, புணர்தல், சுயநல மனிதர்கள் முக்கியமாக ஆண்கள் இவையெல்லாம் மஸ்ட்(must).

உதாரணம்.



தோல்வியில் மகிழும்
ஆழ்மன இச்சைகளின் அடங்கல்
ஒளித்து ஒளித்து பதுக்கியதில்
திரைகள் மறையும் அந்தரத்தில்
காற்றுடனான
சங்கேதப் பரிமாறல் மட்டும்
என் கைவசத்தில் நீர்த்துப்போகுதலற்று!

இன்னொன்று...............



ஒடிந்துவிடும் உறவுக் கிளைகளுடன்
சேர்ந்து விழுந்து அடிபடும் வாழ்வு
பற்றுதல்களின் பாரம் தாங்காது.
முன்பறியத் தெரியாது
தோற்றுக்கொண்டிருக்கும்,
நம்பிக்கை முட்களில்
விழுந்து விழுந்து
கிழிபடும் நினைவுகளோ
வனத்திற்குப் போவென
விரட்டியடித்தாலும்
கூண்டிற்கே திரும்பி வந்து
குந்திக்கொள்ளும் பறவைகள்!

சரி இப்போ என்னோடது பாருங்க..












கண் பொத்தி கைப்பிடித்து
அழைத்து செல்கிறது உன் சிரிப்பு
மூங்கில் நிறைந்த மலைகள் கடந்து
பிராணிகள் புணரும் காடு கடந்து..

கண் திறந்து விட்டு சுழன்றடிக்கும்
புயலின் பின்னால் ஓடுகிறாய்
திரும்ப வர வழித் தெரியாமல்
உன் சுவடுகள் மறைவதை கவனியும் போது
என் மேல் வந்து விழுகிறது
திசைத் தெரியாமல் பறக்கும்
ஒரு பறவையின் இறகு......



எப்படி படமா???(என்ன கொடுமை சார் இது!!)


சரி அதெல்லாம் விடுங்க இப்போ என்னுடைய வழக்கமான கவிதைகள் சில , புதிதாக கிறுக்கியவை..




அன்று
தோன்றியவற்றையெல்லாம் எழுதினேன்
என்னமாய் எழுதுகிறான் என்றார்கள்..

இன்று
உயிர் பிழிந்து எழுதினேன்
"கொஞ்சம் புகழ் கிடைத்தவுடன்
கிறுக்க ஆரம்பித்து விட்டான் பாரு என்கிறார்கள்!!"

umakarthick
09-08-2007, 06:29 AM
1.

உயிரியல் புத்தகத்தில்
'முத்தமிடல் நோய் பரவுவதற்கு முக்கிய காரணம்'
என்ற வரியில் முத்தமிடல் என்ற வார்த்தையை
அடிக்கோடிட்டு இருந்தாய்.


அன்றை தினம் இரவில் இந்த விஷயத்தை
நீ தொலைபேசியில் சொல்லி என்னிடம்
கேட்ட போது

உன்னிடன் புத்தகம் கடன் வாங்கிய
நான் அந்த வரியிலேயே அன்று முழுவதும்
நின்றிருந்ததை மறைத்து


'அப்படியா..? கவனிக்க வில்லையே' என்றேன்
நினைவிருக்கிறதா.....?


2.என் அக்காவுடன் பொருட்காட்சி நீ
சென்ற அந்த நாளில்
எங்கே உன்னுடன் வந்தால் நாம்
இருவரும் நண்பர்களாகி விடுமோ
இவள் என் காதலியாக தானே வரவேண்டும்
என்பதற்காக வேண்டுமென்றே
டியூசன் போகிறேன் என்று
ஓடி ஒளிந்தேன் நினைவிருக்கிறதா?



.கடன் அன்பை முறிக்குமாம்
எங்கே திருப்பிக் கொடு பார்க்கலாம்
நான் கொடுத்த முத்தத்தை

2.நெடு நாளுக்கு பின்னர் என்னை
பார்த்த போது உன்னகேற் பட்ட வெட்கம்

இளம் வயதில் உன் அம்மா
என்னையும் உன்னையும்
ஆடைகளின்றி ஒன்றாய் குளிப்பாட்டிய போது
நீ வெட்கப் பட்டதை நினைவூட்டியதை
நான் எப்படி சொல்வேன் உன்னிடம்..!!

3.
எல்லாருடம் சேர்ந்து ஆடும்
கண்ணாமூச்சி ஆட்டத்தில்
நானும் நீயும் மட்டும் எப்போதும்
ஒன்றாய் ஒளிந்து கொள்ளும்
அந்த நெற்குதிரின் மறைவில்
இன்று என் அக்கா குழந்தைகள் ஒளிந்து
விளையாடும் போது நின்று ரசிக்காமல்
போக முடிய வில்லை என்னால்

4.நீ வயதுக்கு வந்த போது
உன்னை எல்லாரும் மாய்ந்து மாய்ந்து
கவனித்ததை கண்டு எரிச்சலுற்ற என்னிடம்

'எல்லாம் உனக்காக' தாண்டா என
உன் அம்மா சொல்லியதற்க்கு
அர்த்தம் புரிந்திருக்க வில்லை
எனக்கு அப்போது....

5.சிறு வயதில் நீ என் வீட்டிற்க்கு
விடுமுறைகளில் வந்து தங்கி விட்டு
கிளம்பும் போது வருத்தம் கொண்டு
உன்னை வழியனுப்ப வராமல்
அறைக்குள்ளே நான் முடங்கி கிடந்ததை
சொல்லி பளிப்பு காட்டுகிறாய்

பேருந்தில் ஊருக்கு போகும் வழியெல்லாம்
என்னை நினைத்து நீ தேம்பியழுது தூங்கி
போவது தெரிந்திருந்தும் பேசாமலிருக்கிறேன் நான்

umakarthick
09-08-2007, 06:29 AM
3. "ஆண்டு விழாவில் ஆடிய உன் நடனப் புகைபடங்களை
ஆசிரியர் அறையில் இருந்து எடுக்க(திருட) முயன்று
வசமாக சிக்கிக் கொண்ட என்னை ஒரு வாரம்
வகுப்பிலிருந்து தள்ளி வைத்திருந்தார்கள்..

அந்த நாள் இரவு தொலைபேசியில் எனை அழைத்து..

'ஆசிரியர் அறையிலிருந்து என் புகப்படங்களை
எடுக்க தைரியம் இருக்கிறது....
நீ என்னை காதலிக்கிறேன் என்று சொல்ல தைரியம்மில்லையா.!!!என்று

செல்லமாக எனை கடிந்து கொண்டாயேநினைவிக்கிறதா..........???"


4. " பார்வை பறிமாற்றங்கள் மட்டுமே நிகழ்ந்து கொண்டிருந்த
அந்த ஆரம்ப நாட்களில்..
என்னுடைய இன்னொரு நண்பனும் உனை காதலிக்கிறான்
ன்பதை அறிந்து நான் ஒதுங்கி கொள்கிறேன் என அவனிடம் கூறியதை
உன் தோழி மூலம் தெரிந்து கொண்ட நீ
நேராக என்னிடம் வந்து என் சட்டயை பிடித்து
'நம் காதலை விட்டுக் கொடுக்க நீ யாரடா ....ராஸ்கல்"
என்று ஒரு உலுக்கு உலுக்கி விட்டுப் போனாயே.
நினைவிருக்கிறதா......?"

-------------------------தொடரும்

5." உன் பிறந்த நாளுக்கு என்ன பரிசு வேண்டும்
என்று உன்னிடம் நான் கேட்ட போது
'என்ன பரிசாகயிருந்தாலும் அது உன்னுடயதாக
நாளை உலகத்தில் பிறந்ததாக இருக்க வேண்டும்' என்றாய்.

நீ பரிசாய் கேட்டது என் கவிதைகளை
தான் என்பதை புரியாமல்
அன்றிரவு முழுவதும் யோசித்து விட்டு
ஒன்றும் தோனாமல் மறுநாள் உன்னிடம் சொன்னேன்

அதற்கு நீ எனக்காக யோசித்து தூங்காமல்
சிவந்த விழிகளும் வாடிய இந்த முகமும் தான்
என் பிறந்த நாள் பரிசென்று என் முகத்தை உன் கைகளில் தாங்கி

இரண்டு கண்களுக்கும் முத்தமிட்டாயே நினைவிருக்கிறதா........?









6."நம் காதல் விஷயம் பள்ளியில் பரவ
ஆரம்பித்த சில நாட்களில் பள்ளியின் ஆண்டுவிழா வந்தது..'

கலைநிகழ்ச்சியில் அடுத்ததாக
தனி நடனம் -பரதநாட்டியம்'
என்று உன் பெயரை அறிவித்த உடனே
பள்ளி மாணவர்கள மட்டுமின்றி
ஆசிரியர்களும் என்னை திரும்பி பார்த்தார்களே நினைவிருக்கிறதா......?"



7.

தூரத்தில் என்னை பார்த்த உடனே
நீ தலைகுனிந்து நடக்க ஆரம்பிப்பாய்
நான் உனை கடந்து செல்லும்
அந்த ஒரு விநாடியில் சட்டென தலை நிமிர்ந்து
எனை பார்ப்பாய்
அந்த இடைவெளியும் உஷ்ணமும் நொடியும்
நம் இருவரின் டைரியிலும் அன்றையத் தினத்திற்க்கான
பக்கத்தில் நிரப்பப் பட்டிருக்கும்.


8.

அசிங்கமாய் முடிவெட்டிக் கொண்ட நாட்களிளும்
இஸ்திரி பண்ணாத சட்டை அணியும் நாட்களிளும்
வகுப்பின் முதல் வரிசையில் அமராமல்
ஏதாவதொரு மூலையில் அமர்ந்திருப்பேன்
எனைக் கண்களால் தேடித் தேடி
நீ சளைக்கும் அழகைநான் ஒளிந்திருந்து ரசிப்பேன்....
கடைசியாக எனை நீ கண்டு பிடிக்கும்
அந்த நொடியில் மலரும் உன் முகம்
அந்த நொடிக்கு முந்தைய நொடிவரையிலுமிருந்த
என் நினைவுகளை ஒரேடியாக மறக்கச் செய்யும்.............



11.பேருந்தில் பயணிக்கும் சமயங்களில்
எழும் அடுத்த கவிதை பற்றிய யோசனைகளை

முன்னிருக்கையில் முதுகு காட்டி
அமர்ந்திருக்கும் ஒரு அம்மாவின் தோளில்
சாய்ந்த படி எனை பார்த்து சிரிக்கும்
குழந்தையின் சிரிப்போ..

அமர இடமில்லாமல் நின்ற படியே
தலைக்கு குளித்த ஈரக் கூந்தலை
அள்ளி முடியும் இளம்பெண்ணின் வனப்போ..

மூக்குரசும் நெருக்கத்தில் அமர்ந்து காதல்
பேசும் ஜோடிகளின் கிசுகிசுப்போ
கலைத்து விடும் எப்போதும்..!


12.என் அக்காவுடன் முதன் முதலில்
என் வீட்டிற்க்கு வந்தாய் நீ
எல்லா அறைகளும் சுற்றிப் பார்த்து விட்டு
கடைசி அறைக்கு வந்தாய் ..

அங்கே அலமாரியில் இருந்த ஒரு சிறுமியின்
புகைபடத்தை உனக்குக் காட்டி
'இவள் தான் என் அத்தை மகள் 'என்றேன்.

அப்போது எந்த வித உணர்ச்சியும் வெளிபடுத்தாமல்
அரை சிரிப்பு மட்டும் சிரித்து வைத்தாய்...

அடுத்த நாள் பள்ளியில் என்னை வேதியியல் அறைக்கு
வருமாறு சைகை காட்டி சென்றாய்..

அங்கு என்னிடம் அந்த அத்தை பெண்ணைப் பற்றி
ஏதும் கேட்பாய் என ஆவலுடன் வந்தேன்

ஆனால் நீயோ ஒரு புகைப்படத்தை கைப்பையிலிருந்து
எடுத்து இவன் தான் என் அத்தைப் பையன் என்று
பதிலடி கொடுத்தாயே நினைவிருக்கிறதா..?

9.அந்த ஆரம்ப நாட்களில்
உன்னிடம் தொலைப்பேசியில்
நிறைய கதைத்திருக்கிறேன்..

நம் காதலை மோப்பம்
பிடித்து விட்ட கணித ஆசிரியை

என்னை பற்றி உன் வகுப்பில்
பெருமையாக பேசும் தமிழாசிரியர்

என எல்லாக் கதைகளும் பேசி விட்டு
தொலைபேசியை வைக்கும் சமயத்தில்
சரி நான் வைக்கிறேன் பார்க்கலாம் என்பாய்..
நான் உடனே எப்போ பார்க்கலாம் என்பேன்.
கூடிசீக்கிரம் என்பாய்...

இதே கேள்வியை நான் கேட்பேன்
என உனக்கும் அதே பதிலைத் தான்
நீயும் சொல்வாய் என எனக்கும் தெரியும்..

ஆனாலும் அந்தக் கேள்வியும் பதிலும் இல்லாமல்
முடிந்ததில்லை நம் கதையாடல்..!



10. நீ தாவணி அணிந்தால் எனக்கு பிடிக்காது
அது உனக்கும் தெரியும்.

ஆனால் அன்று டியூசனுக்கு வேண்டுமென்றே
தாவணி அணிந்து வந்திருந்தாய்.

உனைக் கண்டு கொள்ளாமலேயே இருந்த
என் கவனம் கவர அடிக்கடி எனைக்கடந்து சென்றாய்

உனை நான் பார்க்கும் போதெல்லாம்
இதழ்களை ஈர்ப்படுத்தியவாறே கண்சிமிட்டினாய்
நான் பார்க்க மறுத்தால்
எனைக்கூப்பிட்டு பளிப்புக் காட்டுவாய்

அட கண்டுக் கொள்ளாமலிருந்தால்
ரசிக்கும் படியாய் இவ்வளவு சேஷ்டை பண்ணுவாளா
இவளென மனதிற்க்குள் நினைத்துக் கொண்டேன்

டியூசன் முடிந்த அந்த நேரத்தில்
என்னை கடந்து நீ போன போது

உன்னிடம் நான்
'நீ தாவணி அணிந்தால் எனக்கு பிடிக்காது'
என்றேன் மீண்டும்...!



1.சகபையன்கள் உச்சி எடுத்து தலை வாரியிருக்க
பலமுறை என் சுருள் முடியை நேராக்க
முயன்றிருக்கிறேன்

என் நண்பர் கூட்டம் சுஜாதாவை படிக்க
அவசரமாக அம்புலிமாமாவையும் கோகுலத்தையும்
விசிறி எறிந்திரிக்கிறேன்

விடலை பருவத்தில் சகாக்கள் புகைப்பிடிக்கக் கண்டு
நானும் உள்ளிழுத்து தொண்டை வலிக்க
இருமியிருக்கிறேன்

ஆளுக்கொரு பெண்ணைத் தேடிப்பிடித்த காதலிக்க
கிறுக்குத்தனமாய் கடிதம் கொடுத்து நண்பியை
இழந்திருக்கிறேன்

இன்று இப்போது வந்து விட்டுப் போன
நண்பன் பைக் வாங்கியிருப்பதாகச் சொல்ல
வேகமாக லோன் போட போகிறேன்
வங்கிக்கு

வழிவிடுங்கள் எனக்கு உங்களிடம் பேச நேரமில்லை...!

ஆதவா
09-08-2007, 11:15 AM
இப்படி ஒரே மூச்சில் கொடுத்தால் எப்படிங்க பொறுமையா படிக்க? ஒவ்வொன்னா கொடுங்க.... விமர்சனம் கொடுக்கிறோம்....