PDA

View Full Version : காதல் விண்ணப்பம்



சிவா.ஜி
09-08-2007, 05:42 AM
எண்ணமெழுதி காதலுக்கு
விண்ணப்பிக்கிறேன்
கண்ணே உன்
கண்ணசைவுக்கு
காத்திருக்கிறேன்!

ஆயிரம் பெண்கள்
உள்ளது இந்த உலகு
யாரேனும் ஒருவரோடு பழகு
இப்போது நீ விலகு!

பெண்கள் இங்கு பல்லாயிரம்
கண்கள் சொல்லும் சொல்லாயிரம்
இதயம் தேடியது உன்னை
எப்போதடைவாய் என்னை?

என்னையேன் சுற்றுகிறாய் கோளாய்
நான் உரைப்பதைக் கேளாய்
வீணாய் வருத்தாதே
நானாய் வரும்வரை!

கிரகமாய் கவர்ந்துவிட்டு
கோளாய் சுற்றாதே என்கிறாய்..
என்ன செய்தால்−நீ
என்னவள் ஆவாய்..?

நான் விரும்பும்
ஒருவனல்ல என் தேவை
ஊர் விரும்பும்
ஒருவனுக்கே இப்பாவை!

நாளையறிவாய் நீ
நான் யாரென்பதை
நான் சொல்லியல்ல,இந்த
ஞாலம் சொல்லி!
உருவானதும் வருவேன்,
கருவான இக்காதலை
கலைக்காமல் காத்திரு!

அமரன்
09-08-2007, 09:55 AM
என்னால் ஒருவன் ஜெயிக்க/பிரபல்யமாக வேண்டும் என்ற நல்ல எண்ணமோ அல்லது ஜெயித்த/பிரபல்யமான ஒருவனை அடையாவேண்டும் என்பதோ நாயகியின் திண்ணம். (சில பொண்ணுங்க தட்டிக்கழிப்பதற்கு இப்படி வெட்டியாக ஏதாவது சொல்லுவார்கள்.) அதை அழகாக சொல்லி ஒருவன் பிரகாசிப்பதுக்கு ஒரு உரசலைக்கொடுத்துள்ளது இக்கவிதை. பாசிட்டிவ் திங்கை கவிதைகளில் கொடுப்பது மிகவும் நல்ல செயல். பாராட்டுக்கள் சிவா.

கவிதையின் அமைப்பில் ஒரு நளினம் தெரிகிறது.
நான் விரும்பும்
ஒருவனல்ல என் தேவை
ஊர் விரும்பும்
ஒருவனுக்கே இப்பாவை!
இவை ஒரு ரகமானது. தேவை -பாவை என்ற வகையில் முடிந்து ரம்மியம் கொடுக்கின்றது. இதுபோல் சில இன்னும்.எஞ்சிய வரிகளில் விஞ்சிநிற்கின்றன எதுகைகளும் மோனைகளும்.
மொத்தத்தில் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டிய ஒன்றை புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் சொன்ன சிவாவுக்கு பலத்த கைதட்டல்கள்.

இதயமே..இதைக்கொஞ்சம் கவனியுங்கள்.

இதயம் தேடியது உன்னை
எப்போதடைவாய் என்னை?

சிவா.ஜி
09-08-2007, 09:58 AM
அடடா அழகான ஒரு பின்னூட்டம்.அதோடு தட்டிக்கழிக்கும் சில தாடகைகளுக்கும் ஒரு குட்டு. வரிகளை ரசித்து வாசித்து பின்னூட்டமிட்ட அமரனுக்கு மன்மார்ந்த நன்றிகள்.

இலக்கியன்
09-08-2007, 02:03 PM
என்னால் ஒருவன் ஜெயிக்க/பிரபல்யமாக வேண்டும் என்ற நல்ல எண்ணமோ அல்லது ஜெயித்த/பிரபல்யமான ஒருவனை அடையாவேண்டும் என்பதோ நாயகியின் திண்ணம். (சில பொண்ணுங்க தட்டிக்கழிப்பதற்கு இப்படி வெட்டியாக ஏதாவது சொல்லுவார்கள்.) அதை அழகாக சொல்லி ஒருவன் பிரகாசிப்பதுக்கு ஒரு உரசலைக்கொடுத்துள்ளது இக்கவிதை. பாசிட்டிவ் திங்கை கவிதைகளில் கொடுப்பது மிகவும் நல்ல செயல். பாராட்டுக்கள் சிவா.

கவிதையின் அமைப்பில் ஒரு நளினம் தெரிகிறது.
நான் விரும்பும்
ஒருவனல்ல என் தேவை
ஊர் விரும்பும்
ஒருவனுக்கே இப்பாவை!
இவை ஒரு ரகமானது. தேவை -பாவை என்ற வகையில் முடிந்து ரம்மியம் கொடுக்கின்றது. இதுபோல் சில இன்னும்.எஞ்சிய வரிகளில் விஞ்சிநிற்கின்றன எதுகைகளும் மோனைகளும்.
மொத்தத்தில் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டிய ஒன்றை புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் சொன்ன சிவாவுக்கு பலத்த கைதட்டல்கள்.

இதயமே..இதைக்கொஞ்சம் கவனியுங்கள்.

இதயம் தேடியது உன்னை
எப்போதடைவாய் என்னை?

வாழ்த்துக்கள் சிவா. அமரன் அழகான விமர்சனம் கொடுத்துள்ளார்

இனியவள்
09-08-2007, 05:47 PM
சிவா கவிதை அருமை வாழ்த்துக்கள்
அமரின் பின்னூட்டமும் அருமை வாழ்த்துக்கள்

சிவா.ஜி
11-08-2007, 04:41 AM
நன்றி இலக்கியன்,நன்றி இனியவள்.

ஆதவா
22-08-2007, 05:06 AM
ஆயிரமாயிர விண்ணப்பங்கள் இருந்தாலும் கண்ணசைவொன்றே காதலுக்குப் பச்சைக் கொடி. விண்ணப்ப தூதுக்கள் மனதைத் துளைத்தெடுக்கும் என்பது காதலர்களின் எண்ணம். ஆனால் அது நிசமல்ல.. விண்ணப்பம் யார்வேண்டுமானாலும் இடலாம். ஆனால் தகுதி வேண்டுமல்லவா.. ஒரு வேலையில் சேருவதற்குக் கூட... :)

சில முரண்கள் தென்படுகின்றன கவிதையில்...

இங்கே நீ என்பது ஒரு காதலியைத்தானே குறிக்கிறது?

ஆயிரம் பெண்கள்
உள்ளது இந்த உலகு
யாரேனும் ஒருவரோடு பழகு
இப்போது நீ விலகு!

அந்த பெண்ணை ஆயிரம் பெண்களில் ஒருவரோடு பழகி தற்போது விலகச் சொல்வது ஏன்?


ஊர் விரும்பும்
ஒருவனுக்கே இப்பாவை!

மூன்றாம் நபரிடம் சொல்வதைப் போல "இப்பாவை" என்று சொல்லுவது ஏன்?

கருவான இக்காதல "கலைக்காமல்" என்று எழுதினால் எப்படியிருந்திருக்கும்?

சிவா.ஜி
22-08-2007, 05:21 AM
ஆதவா..முதலில் காதலன் பேசுவது போலவும்,பின் காதலி மறுமொழி கூறுவதுபோலவும் அமைத்துள்ளேன்.
அதனால்தான் இரண்டாவது பத்தியில் காதலி சொல்கிறாள் ஆயிரம் பேருண்டு அவர்களில் யாரையாவது காதலி..என்னை ஏன் சுற்றி வருகிறாய் என்று.
ஊர் விரும்பும் ஒருவனுக்கே இப்பாவை
இவள் உனக்குத்தான் என்று தன்னை தருகின்றவள் சொல்வதில்லையா..அப்படி எழுத முயன்றேன்.

நீங்கள் சொல்லியிருப்பதைப்போல இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.மாற்றி விடுகிறேன். மிக்க நன்றி ஆதவா.சந்தோஷமாக இருக்கிறது.

இளசு
22-08-2007, 06:02 AM
''பகைவர் போலே பேசுவதும்
பருவம் செய்யும் கலையல்லவா?''


ரம்மியமான காதல் கவிதை..
அதில் ஊடாய் ஆண் −பெண் எண்ண எதிர்பாப்புகள்..
ஆண் −பெண் உரசல் −ஊக்கங்கள்..
அதனால் வரும் ஆக்க விளைவுகள்..

கவிதை என்னை மிகவும் கவர்ந்ததில் ஆச்சரியமென்ன?


பாராட்டுகள் சிவா..

( நான் இதுபோல் பதிக்கும்போது
ஆணுக்கு நீலம், பெண்ணுக்கு ரோஜா என வண்ணம் தந்து பதித்துவிடுவேன்... குழப்பமின்றி வாசகர் வாசிக்க)

சிவா.ஜி
22-08-2007, 07:01 AM
ஆஹா..அருமையான யோசனை.மிக்க நன்றி இளசு உங்கள் பின்னூட்டத்திற்கும் நல்ல யோசனைக்கும்.

அக்னி
27-08-2007, 02:19 PM
கெஞ்சிய காதலை...
தள்ளும் இதயங்கள்...
பஞ்சாய் இருந்தாலும்,
பாரமாய் நடிக்கும்,
ஊடல் சுகங்கள்...

பாராட்டுக்கள் சிவா.ஜி...
புதிய வடிவில், ஒரு டூயட் கவிதை... புதுமை...

சிவா.ஜி
27-08-2007, 02:22 PM
நன்றி அக்னி...சும்மா ஒரு சிறு முயற்சிதான்.எல்லாம் நம் மன்ற உறவுகளின் மேலுள்ள மிகப்பெரிய நம்பிக்கையில்.

சாராகுமார்
27-08-2007, 02:24 PM
சிவ சிவ சிவா.ஜி.கவிதை அருமை.

சிவா.ஜி
27-08-2007, 02:32 PM
சிவ சிவ சிவா.ஜி.கவிதை அருமை.

சாராகுமாருக்கு ஏமாற்றம் நேரா வகையில் கவிதை அமைந்தது என் பாக்கியமே...மிக்க நன்றி சாராகுமார்.