PDA

View Full Version : இனியது இது



theepa
08-08-2007, 10:11 PM
இனியது இது


உயிரில்லா உள்ளம் கொண்டு
பெற்ற மனம் தாம் மறந்து
வாசனையால் யுகம் கலந்து
சிறகடிக்க ஒரு உறவு...
கள்ளமற்ற இதயத்தினுள்
கடுகளவு இடமின்றி ஒரு
உணர்வு......
இன்பமில்லா உலகினுள் இனியதாய்
வளம் வர இளையோர் முதல்
முதியோர் வரை புனிதத்தின்
மனங் கொண்டு வரத்தால் பெற்ற
ஒரு வரவு காதல்....!!!


காதல் அழிவதில்லை கடல் அலைபோல் ஓய்வதில்லை


அன்புடன்
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

அறிஞர்
08-08-2007, 11:08 PM
கள்ளமற்ற இதயத்தினுள்
கடுகளவு இடமின்றி ஒரு
உணர்வு......

காதலை பற்றி பல புது பரிமாணங்கள்....

இன்னும் கொடுங்கள்... தோழியே...

theepa
09-08-2007, 01:16 AM
நிச்சயமாக கொடுப்பேன் நண்பரே நன்ரி உங்கள் ஊக்கத்திர்க்கு

அமரன்
09-08-2007, 08:53 AM
காதலின் மகத்துவத்தை சொல்லும் கவிதை. அழகாகவே உள்ளது. பாராட்டுக்கள் லதுஜா.

இலக்கியன்
09-08-2007, 02:06 PM
காதல் அழிவதில்லை கடல் அலைபோல் ஓய்வதில்லை
வாழ்த்துக்கள் லதுஜா.

இனியவள்
09-08-2007, 05:44 PM
வாழ்த்துக்கள் லது அழகிய கவிதைக்கு :icon_b:

kalaianpan
09-08-2007, 06:33 PM
இன்பமில்லா உலகினுள் இனியதாய்
வளம் வர இளையோர் முதல்
முதியோர் வரை புனிதத்தின்
மனங் கொண்டு வரத்தால் பெற்ற
ஒரு வரவு காதல்....!!!
லதுஜா


இப்படி ஒரு காதல் கிடைக்க கடவுள் அருள் நிச்சயம் அவசியம்....

அருமை......

ஓவியன்
09-08-2007, 10:55 PM
எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
ஓருயிர்
ஈருடலாக்கி
வரத்தெரிந்த காதல்
வாழ்க்கையின்
ஒரு வரமே.........

அழகு வரிகளுக்கு வாழ்த்துக்கள் லதுஜா!.

ஓவியா
09-08-2007, 11:17 PM
ஆமாம் லதுஜா, காதல் ஒரு வரமே, கிடைக்காத மக்களும் பாரில் இருக்கின்றனர் கிடைத்து மகிழ்சியில் நீந்தும் மக்களும் பரில் இருக்கின்றனர்.

நல்ல அழகிய க*விதை பாராட்டுக்கள்.

அக்னி
09-08-2007, 11:27 PM
இதயத்துக்குள்
குடியிருக்கவந்த காதல்..
தந்த வாடகையா...
மாரடைப்பு..?

பாராட்டுக்கள்... லதுஜா...

வசீகரன்
10-08-2007, 02:01 PM
இனியது இது


உயிரில்லா உள்ளம் கொண்டு
பெற்ற மனம் தாம் மறந்து
வாசனையால் யுகம் கலந்து
சிறகடிக்க ஒரு உறவு...
கள்ளமற்ற இதயத்தினுள்
கடுகளவு இடமின்றி ஒரு
உணர்வு......
இன்பமில்லா உலகினுள் இனியதாய்
வளம் வர இளையோர் முதல்
முதியோர் வரை புனிதத்தின்
மனங் கொண்டு வரத்தால் பெற்ற
ஒரு வரவு காதல்....!!!


காதல் அழிவதில்லை கடல் அலைபோல் ஓய்வதில்லை


அன்புடன்
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா
ஜீவனுள்ள வரிகள்....! காதலுக்கு மகுடம் சூடும்ஆழ்ந்த வரிகள்...!
பாராட்டுகள் தோழி,,,

இறைவன் உலகத்தை படைத்தான்....! இயர்க்கையை படைத்தான்... மனிதர்களை படைத்தான்...! அவர்களுள் உணர்ச்சிகளை விதைத்தான்... உணர்ச்சிகளில் உச்சமான "அன்பு " என்னும் மகத்துவததை நாம் நம்மில் விதைத்துக்கொண்டோம்....! அதை நண்பர்களிடம் உற்றவர்களிடம்
பெற்றோம்...! அன்பு என்னும் அருமருந்தே இல்வாழ்வின்...ஆதாரம்....!
உலக சுழற்சிக்கு உண்மையான காரணி....! அதன் அதிகப்படியான வெளிப்பாடுதான் ஆண் பெண் இருபாலாரின்
இதயங்களில் காதலாக விளைகிறது....!

அன்பன்
வசீகரன்

சிவா.ஜி
11-08-2007, 04:44 AM
அழகிய வரிகளில் ஒரு மனம் கவரும் காதல் கவிதை.மெருகேறி வரும் உங்கள் எழுத்துக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் லதுஜா.

விகடன்
11-08-2007, 04:55 AM
கதலை புது புது பரிமானங்களில் சிந்தித்து கவி வடிவில் த்ருவிக்கும் லதுஜாவிற்கு பாராட்டுக்கள்.

சாம்பவி
31-05-2008, 05:13 AM
இதயத்துக்குள்
குடியிருக்கவந்த காதல்..
தந்த வாடகையா...
மாரடைப்பு..?



வாவ்.... அக்னி..... கலக்கல்ஸ்.... !!!!!!