PDA

View Full Version : காத்திருக்கும் நிஜம்



இனியவள்
08-08-2007, 03:11 PM
எனக்கு ஜனனம் நீ தந்தது
உன் நாட்களை நான் வாழ்கின்றேன்
என் நாட்களை நீ வாழ்கின்றாய்....

இருள் இல்லாவிடின் சூரியனின் அருமை
தெரிவதில்லை
பிரிவொன்று நேராவிடின் உன் அருமை
தெரிந்திராதே எனக்கும்...

இருளில் இருளாய்க் கலந்து
என்னைத் தொடர்கின்றாய்...

சூரியனைக் காணாவிடின் இதழ் மூடும்
தாமரை போல் உன்னைக் காணாத இக்
கண்கள் வேறெதனையும் காணப் பிடிக்காது
தாழ்போட்டுக்கொள்கின்றன....

உணவின் அருமை பசியில் தெரிகின்றது
உனதருமை பிரிவில் தெரிகின்றது...

கடல் அலைகள் போல் துள்ளித் துள்ளி
வருகின்றேன் கரையாய் இருக்கும் உன்னைத்
தொட்டுவிட...

தங்கத்தை உருக்கும் தனலாய்
என்னை உருக்குகின்றாய் உன்
அன்புகொண்டு...

மலராய் நான் மாற தேனாய் இருக்கும்
என் அன்பைப் பருக வண்டுபோல்
வட்டமிடுகின்றாய் என்னை.....

உன் நினைவுகளை என் காதல் நெஞ்சில்
வீசி தூக்கத்தைக் கலைக்கின்றாய்...

என் கனவுகளைக் கலைக்கின்றது
விடியும் விடியல்
எனக்காய் காத்திருக்கும்
நிஜத்திற்காய்....

காத்திருக்கின்றேன் விதையாய் இருக்கும்
நம் காதல் விருட்சமாய் மாறுவதற்கு

அமரன்
08-08-2007, 05:16 PM
பிரசவிப்பவள் தாய்
குளவியானாலும்
காதலானாலும்.

உருக்க உருக்கத்தான்
பொலிவாகிறாள்
தங்கமகள்.

இரவுக்கனவுகளை
நிஜமாக்க பிறப்பதுதான்
விடியல்..
நற்சிந்தனை வளம்

பாராட்டுக்கள் இனியவள்.

காதலை விட்டு
கொஞ்சம் வெளியே வாருங்கள்.
சொல்ல முடியாது.

பதிலுக்குப்
பதிலில்லை என்னிடம்.
காதலுக்குள் நீங்கள்
வந்துபாருங்கள்....????

விகடன்
08-08-2007, 05:48 PM
காதலில் தவிப்பை தாராளமாக உணர்ந்து சொல்லியிருக்கிறீர்கள்.
அனைத்து வரிகளும் பாராட்டலிற்குரியவையே.

இலக்கியன்
08-08-2007, 07:10 PM
அழகான கற்பனை இனியவள்

ஷீ-நிசி
09-08-2007, 06:16 AM
விதையாய் இருக்கும் காதல் விருட்சமாய் மாற....

காலங்கள் கொஞ்சம் ஆகத்தானே செய்யும்..

வெயிலின் அருமை நிழலில்தான் தெரியும்..

உணவின் அருமை பசியில் தான் தெரியும்....

ஆம்! நாம் நேசிக்கும் உறவுகளின் அருமை!
அவர்களை காணாத கணங்களில் தான் தெரியும்....

நல்ல காதல்வலி நிறைந்த கவி!

வாழ்த்துக்கள்!

சமூக கவிதைகளும் கொஞ்சம் எழுதுங்க இனியவளே!

இனியவள்
09-08-2007, 06:06 PM
பதில்க் கவிதை அருமை அமர் வாழ்த்துக்கள்:thumbsup:

இனியவள்
09-08-2007, 06:06 PM
காதலில் தவிப்பை தாராளமாக உணர்ந்து சொல்லியிருக்கிறீர்கள்.
அனைத்து வரிகளும் பாராட்டலிற்குரியவையே.

நன்றி விராடன்


அழகான கற்பனை இனியவள்

நன்றி இலக்கியன்

இனியவள்
09-08-2007, 06:08 PM
நல்ல காதல்வலி நிறைந்த கவி!

வாழ்த்துக்கள்!

சமூக கவிதைகளும் கொஞ்சம் எழுதுங்க இனியவளே!

நன்றி ஷீ உங்கள் வாழ்த்துக்கு...

முயற்சி செய்கின்றேன் ஷீ
வரமாட்டன் என்கின்றதே
என்ன பண்ணலாம் :shutup:

kalaianpan
09-08-2007, 07:04 PM
ரசம் சொட்டுகிறது இங்கே.....
வாருங்கள் தமிழ் நண்பர்களே......
நீங்களும் அருந்துங்கள்...................


:icon_drunk: :icon_drunk: :icon_drunk: :icon_drunk: