PDA

View Full Version : சந்தேகம் எண் 1001 - tv tuner card



குந்தவை
08-08-2007, 02:50 PM
நான் <compaq laptop> வைத்திருக்கிறேன். எனக்கு <tv tuner card> பற்றி விளக்கம் தேவை. <plug and play> முறையில் உபயோகிக்க கூடிய <> இருக்கிறதா? விலை என்ன இருக்கும்?
பெங்களூரில் எங்கு கிடைக்கும்?


யாராவ*து விள*க்குங்க*ளேன்....

அன்புரசிகன்
08-08-2007, 04:58 PM
எனக்கு பெங்களூரில் கிடைக்குமா இல்லையா என தெரியாது.. ஆனால் ஏறத்தாள 900-1500-2000 ரூபாய் இந்தவகையில் வரும். கத்தாரில் 90இல் இருந்து 150 கத்தாறி றியால் வரை வரும்... இது External Card...

விகடன்
08-08-2007, 05:50 PM
வணக்கம் குந்தவை.

டி.வி.ரியூனர்(இன்ரேனல்) வாங்கும் எண்ணத்தை கைவிடுங்கள். அது உங்களின் கணினிக்கு நன்மைபயக்குவதாக அமையும். ஏனெனில், எப்படியும் அந்த ரியூனரை அன்ரனாவுடன் இணைத்துப் பாவிக்கப்போகிறீர்கள். தற்செயலாக மின்னல் தாக்கினால் அந்த சிறிய ஏற்றமும் உங்கள் கணினியின் மொத்த பாகங்களுக்கும் பாதகமானதாக அமையலாம். சற்றே முன்னெச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை கணினியை கணினியாகவும் தொலைக்காட்சியை தொலைக்காட்சியாகவும் பயன்படுத்துவதே சாலச்சிறந்தது.

azesjaffar
08-08-2007, 06:00 PM
என்னுடைய கருத்து SKYSTAR 2 பயன்படுத்தவும்....

க.கமலக்கண்ணன்
09-08-2007, 09:42 AM
வணக்கம் குந்தவை pixel VIew என்ற நிறுவனத்தின்

வளமான எக்ஸ்டனலை மட்டும் வாங்கவும் அது மிக அருமையாக இருக்கும்

வன்பெருள் உள்ளே இருந்தல் பிரச்சனைகள் அதிகமாகும்.... விலை 4750/- பெங்களூரில்...

சராஜ்
09-08-2007, 11:46 AM
எனக்கு அப்படியே உல்டா...
அதாவது... லேப் டாப் டூ தொலைக்காட்சி... அதற்கு ஏதேனும் விஷேஷ கார்ட் உண்டா?... ஏனென்றால் சில பல சிடிக்க/ளை சிடி ப்ளேயர் ஒப்புக் கொள்ள மறுக்கிறது...
உதவி ப்ளீஸ்..ஸ்ஸ்ஸ்
ஸ்

குந்தவை
09-08-2007, 01:15 PM
பதிலளித்த அனைவருக்கும் நன்றி.


விராடன் அண்ணா,
நீங்கள் சொல்வது உண்மைதான் என்றாலும், தற்காலிக தேவைக்கு அது பயனுள்ளதாக இருக்குமே என்றுதான் யோசிக்கிறேன்...

குந்தவை
09-08-2007, 01:19 PM
சராஜ், உங்கள் கணிணியில் உள்ள "S1 வீடியோ o/p"லிருந்து ஒரு கேபிளைக் கனெக்ட் செய்தால், உங்கள் பிரச்னை தீர்ந்துவிடும்...

ஆனால், அதன் விலை மற்றும் தரம் பற்றி எனக்கு தெரியாது.

சராஜ்
09-08-2007, 01:26 PM
நன்றி :)
என்னிடம் ஒரு S வீடியோ ஒஅவுட்க்கான கேபிள் உள்ளது. இதை ரிவியில் இணைத்தால் போதுமாங்கோ???

குந்தவை
09-08-2007, 01:31 PM
அது converடெர் திறன் கொண்டதா என்று விசாரித்துவிட்டு, முயற்சி செய்து பாருங்கள்...

பி.கு:

கற்றதை சொன்னேன். விளைவுகளுக்கு, நான் பொறுப்பில்லீங்கோ....

saguni
11-08-2007, 06:46 AM
சராஜ் s-video outபுட் உங்களுக்கு வீடியோ மட்டுமே கொடுக்கும். ஆகையால் நாம் சத்தங்களைக்கேட்பதற்காக ஹெட்போன் இடும் இடத்திலிருந்து ஒரு அவுட் எடுத்து தொலைக்காட்சியில் இடவேண்டும். அதற்கான வயர் கணினி கடைகளில் கிடைக்கும். கத்தாரில் அது 5ரியால் ஆகும். இந்தியாவில் 50ருபாய் ஆகலாம். நான் எப்பொழுதும் என்னுடைய லேப்டாப்பிலிருந்து தொலைக்காட்சியில் படம் பார்ப்பேன்.