PDA

View Full Version : வேற்றுமை



அதிரடி அரசன்
08-08-2007, 01:45 PM
கடவுள்

பலவிதமான மரங்கலை படைத்தான்
ஒரே மாதிரியாக....

பலவிதமான பூக்கள் படைத்தான்
ஒரே மாதிரியாக....

பலவிதமான விலங்கினை படைத்தான்
ஒரே மாதிரியாக.....

பலவிதமான் பறவையை படைத்தான்
ஒரே மாதிரியாக......... ஆனால்

பலவிதமான் மனிதர்கலையும் படைத்தான்
வெவ்வேறு விதமாக........

சுய நலமும் ஒற்றுமையின்மையும்தான் காரணமோ...... :medium-smiley-006:

தீபா
08-08-2007, 01:49 PM
கலை எல்லாம்
களைத்துவிட்டால்
களை" கிடைக்குமே

வெண்தாமரை
08-08-2007, 01:49 PM
ஆமாம் அதிரடி அரசரே பறவைகளை படைத்தானா இல்லை பறவைகலை கடைத்தானா?? விளக்கம் தேவை?

தீபா
08-08-2007, 01:51 PM
மரங்கள் எப்போது
ஒரேமாதிரி?
பூக்கள் விலங்குகள்
பறவைகள்
எல்லாமே எப்போது
ஒரேமாதிரி?

விகடன்
08-08-2007, 01:54 PM
நீங்கள் மனிதர்களை அறிந்து கொண்ட அளவிற்கு வேறொன்றையும் தெரிந்துகொள்ளவில்லை என்பது மட்டும் புலனாகிறது.
முயற்சிக்கு பாராட்டுக்கள்.

இலக்கியன்
08-08-2007, 02:41 PM
கடவுள்

பலவிதமான மரங்களை படைத்தான்
ஒரே மாதிரியாக....

பலவிதமான பூக்களை படைத்தான்
ஒரே மாதிரியாக....

பலவிதமான விலங்குகளை படைத்தான்
ஒரே மாதிரியாக.....

பலவிதமான் பறவைகளை படைத்தான்
ஒரே மாதிரியாக......... ஆனால்

பலவிதமான் மனிதர்களையும் படைத்தான்
வெவ்வேறு விதமாக........

சுய நலமும் ஒற்றுமையின்மையும்தான் காரணமோ...... :medium-smiley-006:

பச்சோந்தி மனிதர்களை சுட்டெரிக்கும் உங்கள் கவிதை நல்ல சிந்தனை தொடரட்டும்

அமரன்
08-08-2007, 02:47 PM
கலை எல்லாம்
களைத்துவிட்டால்
களை" கிடைக்குமே

தாலாட்டுகிறது-தமிழ்
தென்றல்


அதிரடி அரசன்! கருவின் உடன்பாடில்லாது விட்டாலும் கவிதை அழகில் சொக்கினேன்

அதிரடி அரசன்
08-08-2007, 02:48 PM
இப்போது சரியா தென்றல் அவர்களே..
அதாவது பூக்களில் மல்லி, தாமரை,செம்பருத்தி....இன்னும் பல பூக்கள் பார்ப்பதற்கு அனைத்தும் ஒரே மாதிரி தானே இருக்கிறது.
அதே போல் பறவைகளில் காக்கா, அன்னம்,கிளி, மைனா...அவைகலும் பார்க்க ஒரே மாதிரிதானே இருக்கிறது..அது போலதான் மற்றவையையும் யோசித்தேன்....
தவறு இருந்தால் திருத்துங்கள் :icon_rollout:

அதிரடி அரசன்
08-08-2007, 02:51 PM
நீங்கள் மனிதர்களை அறிந்து கொண்ட அளவிற்கு வேறொன்றையும் தெரிந்துகொள்ளவில்லை என்பது மட்டும் புலனாகிறது.
முயற்சிக்கு பாராட்டுக்கள்.

:fragend005: :fragend005: :fragend005:

தீபா
08-08-2007, 02:55 PM
:fragend005: :fragend005: :fragend005:

இக்கருத்துக்கள்
நாளை ஏற்றும்
கவியாசனத்தில்....

வியத்தலும் ஏவலும் ஏற்றோனிங்கே எறியப்படுவதில்லை.
சளைத்தலும் சலித்தலும் ஏற்றோனிங்கே ஏற்கப்படுவதில்லை.

ஷீ-நிசி
09-08-2007, 06:47 AM
அதிரடி அரசரே...

பலவிதமான என்று வரிவந்தபிறகு
ஒரே விதமாக என்று வந்தால் கவிதை அழகு பெறாது....

மரங்கலை அல்ல.. மரங்களை. இந்த 'ளை வரவேண்டும்...

முதல் பகுதியில்
மரங்களை என்று முடித்தது போல...

இரண்டாவது பகுதியில் பூக்கள் என்று முடிக்காமல் பூக்களை என்று முடித்தால்..

கவிதை இன்னும் அழகு பெறும்...

கடைசியில்..
பலவிதமான மனிதர்களை படைத்தான்..
ஒரேமாதிரியாக...

முரணாக இருக்கிறது அல்லவா...

பலவிதம் என்று சொல்லிவிட்டு..ஒரேமாதிரி என்று சொல்வது...

மரங்களை படைத்தான்....
பலவிதங்களில்!

பூக்களை படைத்தான்..
பலவிதங்களில்!

விலங்குகளை படைத்தான்...
பலவிதங்களில்!

பறவைகளை படைத்தான்...
பலவிதங்களில்!

ஆனால்...

மனிதன் மட்டும்...
மூன்றே விதங்களில்!!!

இப்படியும் இருக்கலாம்....

தொடருங்கள்.. பழக பழகத்தானே... பிள்ளை ம்மா விலிருந்து அம்மா என்றழைக்கிறது!