PDA

View Full Version : உலகை மறப்போம்



அமரன்
08-08-2007, 12:40 PM
எப்படியாவது இன்றைக்கு
கேட்டுவிட வேண்டும்....!

சுமையாக இருகிறதே
முடமா இது
சுட்டெரிக்கின்றனர்...!

சூடு தாங்காது
உயரப் பறந்தால்
இறகை ஒடிக்கின்றனர்...!

ஒடிந்த பறவை
ஒடுங்கி இருக்கையில்
மிதித்து கொல்கின்றனர்....!

எத்தனை நாக்குகள்
பூமிப் பந்துக்கு...!

ஒருவருக்கு உள்ளே
எத்தனைபேர்...!

இரவுகள் மட்டும்தான்
இனிக்கின்றன....!
எனக்குமட்டும்
இரவு பகலாகும்
வரம்தா....!

கண்ணாடி துகள்களும்
காய்ந்த சருகுகளும்
குவிந்திருக்கும் பாதையில்

சத்தங்களால் மரத்தும்
சத்தங்களை மறந்தும்
பயணிப்பவர்களுடன் நானும்.....

இறைவா...!
இரவிலும் என்னை
குருடாக்கு...!
இறையை இறைஞ்சின
கோட்டான்கள்..!

இனியென்ன கேட்பது
மையம் கொண்டது
சுழல் காற்று...!

எனக்கு நீயும்
உனக்கு நானும்
உண்மையாக இருப்போம்.
உலகை மறப்போம்.

அரவணைத்தது
அன்பான குரல் ஒன்று.

சுற்றிப் பார்த்தேன்

பிரபஞ்சமெங்கும்
பூத்து குலுங்கின
வண்ண மலர்கள்.

சிவா.ஜி
08-08-2007, 01:35 PM
மதுவருந்த போன இடத்தைப்பற்றியதான வர்னனையாக இருக்கிறது.அந்த மூன்று வாக்கியங்கள்
கண்ணாடி துகள்களும்
காய்ந்த சருகுகளும்
குவிந்திருக்கும் பாதையில்

அதைத்தான் பிரதிபலிக்கிறது.பகலெல்லாம் இந்த பூமியில் வாழும் இரக்கமற்ற மனிதர்களால் அல்லலுறும் ஒருவன் இரவில் மட்டும் எல்லாம் மறந்து நிம்மதியாக இருப்பதால் இரவை மட்டுமே வரமாய் கேட்கிறான்.அந்த வாழ்வும் அவன் விரும்புவதல்ல...அந்த நேரத்தில் ஒரு பெண் தேவதையைப் போல வந்து அரவணைக்கிறாள்.இவன் உலகமே பூத்துக்குலுங்குகிறது.
அப்படியாயின்,நான் புரிந்து கொண்டது சரியாயின் அதுதான் அன்பின் சக்தி.
அந்த காதலான அணைப்புக்குத்தான் தாழ்விலிருந்து மீட்டுக்கொண்டுவரும் திறன் இருக்கிறது.கவிதையை கவிதையாய் எழுதியிருக்கிறீர்கள் அமரன்.
வாழ்த்துக்கள்

தீபா
08-08-2007, 01:56 PM
நாற்புறக் கால்களால்
உதைபட்டு
இலக்கடைவது பந்தின் வேலை

உதைபடுவதை நினையாது
இலக்கை அடைவது
புத்திசாலித்தனம்

குற்றமிருப்பதால்தான்
சுட்ட ஆளிருக்கிறது.

வண்ண மலர்கள் தூவட்டும்
கவிதையின் மேலே

இலக்கியன்
08-08-2007, 02:38 PM
அழகான கற்பனை வளம் அலட்டல் இல்லாது விடயத்தை சொல்லும் பாங்கு நன்றாக உள்ளது. பந்தியமைப்பு வாசிப்பதற்கு இலகுவாக உள்ளது

அமரன்
08-08-2007, 06:39 PM
நாற்புறக் கால்களால்
உதைபட்டு
இலக்கடைவது பந்தின் வேலை

உதைபடுவதை நினையாது
இலக்கை அடைவது
புத்திசாலித்தனம்


பரந்த பூமியில்
எங்கும் பரந்து
எதனுள்ளும் புகும்
இனிமை அவதாரம்
தென்றல்.

புரிந்தேன்
மீண்டும் ஒருதடவை.

அமரன்
08-08-2007, 06:43 PM
நன்றி சிவா. நன்றி இலக்கியன்.

ஷீ-நிசி
09-08-2007, 06:21 AM
வாழ்ந்தாலும் ஏசும்! தாழ்ந்தாலும் ஏசும்! வையகம் இதுதானடா....

பிழிந்தெடுத்தால் அமரனின் இந்தக் கவி!

ஒருவருக்கொருவர் உண்மையாய் இருப்போம்...

வண்ணமலர்கள் பூத்துக்குலுங்கும்....

வனப்பூங்காவில் அல்ல..
உன் மனப்பூங்காவில்...

வாழ்த்துக்கள் அமரன்...

சமூக கவிதைகளில் உங்கள் வரிகள் கொஞ்சும் சாட்டையாகத்தான் இருக்கின்றன....

சிவா.ஜி
09-08-2007, 11:44 AM
அமரன் இப்போதுதான் இந்த கவிதையை முழுவதுமாக உள்வாங்க முடிந்தது.என்ன செய்வது ஷீ−நிசி எழுதியிருக்கும் இரண்டுவரிதான் நிதர்சனமானது.இருந்தும் நம்பிக்கை என்ற ஒன்று போதும்..உண்மையாய் இருத்தல் என்றுமே நல்லது. வாழ்த்துக்கள் அமரன்.இதைப்போல அழகான வடிவில் என்னால் எழுத முடிவதில்லை.சாதாரண வடிவம்தான் கிடைக்கிறது.இன்னும் என்னை நான் விசாலப்படுத்திக்கொள்ள வேண்டும்.மீண்டும் பாராட்டுக்கள்.

ஆதவா
09-08-2007, 12:27 PM
ஷீ-நிசி சொன்னமாதிரி.... உலகத்தினரை திருப்திபடுத்தவே முடியாது. எத்தனை பெரிய நல்லவனாக இருந்தாலும் அவனுக்கு எதிரிகள் இருக்கவே செய்கிறார்கள்... இவற்றையெல்லாம் நம் வளர்ச்சிக்காக எடுத்துக் கொண்டு நாம் நம் பாதையில் சென்று கொண்டே இருக்கவேண்டும்...

மீண்டுமொருமுறை அழகான கவிதை அமரன்..

வாழ்த்துக்கள்

அமரன்
10-08-2007, 07:25 AM
அட்சர சுத்தமான விமர்சனம் ஷீ. உலகத்தினரை திருப்திப்படுத்துவது என்பது கல்லில் நார் உரிப்ப்பதை போன்றது. எமது மனசாட்சிக்கு நாம் உண்மையாக இருப்போம். சொல்லவந்ததை சரியாக சொல்ல்விட்ட மனமகிழ்வு.
ஷீ,சிவா,ஆதவா மூவருக்கும் மிக்கநன்றி

விகடன்
11-08-2007, 03:23 AM
மனித மனங்களுடன் மல்லுக்கட்டியிருக்கிறீர்கள் அமரன்.
இயற்கையின் யதார்த்தத்தை வடித்த ஒரு கவிதை.
பாராட்டுக்கள்.

aren
11-08-2007, 03:28 AM
மனிதர்களுடன்
தினம் தினம்
போராட்டம்
அதை மறந்திட
செய்திடு இறைவா!!!

கவிதை நன்றாக உள்ளது அமரன். பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

kalaianpan
11-08-2007, 07:52 AM
இரவுகள் மட்டும்தான்
இனிக்கின்றன....!
எனக்குமட்டும்
இரவு பகலாகும்
வரம்தா....!

பிரபஞ்சமெங்கும்
பூத்து குலுங்கின
வண்ண மலர்கள்.

இதுதான் இதுதான் தேவை.....
அழகான வரிகள்....

அமரன்
11-08-2007, 07:36 PM
நன்றி விராடன்.
நன்றி ஆரென் அண்ணா. சிறப்பான குட்டிக்கவிதைக்குப் பாராட்டுக்கள்.
நன்றி கலையன்பன்.

அக்னி
11-08-2007, 07:56 PM
தீண்டிய காற்றும்,
கற்பைப் பறித்திடுமென்பார்...
தொட்ட ஒளியும்,
ரகசியம் அறிந்ததென்பார்...
நிலவின் குளிர்மையில்,
வசியம் அடைந்ததென்பார்...
இரவின் கருமையில்,
திருடன் ஆனதென்பார்...
என்பதெல்லாம்,
நானும் நீயும்...
நாம் உறுதிகொள்வோம்...
பார் உறுதிபெறும்...

பாராட்டுக்கள் அமரன்... கவிதையில் கருத்து ஆழம்... எளிமை கோலம்... சிறப்பு...

மீனாகுமார்
11-08-2007, 08:58 PM
எனக்கு நீயும்
உனக்கு நானும்
உண்மையாக இருப்போம்.
உலகை மறப்போம்.

பிரபஞ்சமெங்கும்
பூத்து குலுங்கின
வண்ண மலர்கள்.

இன்றைக்கு நிலவும் கடின உண்மையை யாதார்த்தமாக வெளிப்படுத்தும் கவிதை. உலகத்தைப் பற்றி நினைத்தாலே நிம்மதி போய்விடுகிறது. நம் மேல் அன்பு செலுத்துபவர்களிடம் நாம் அன்பு செலுத்தி வாழ்ந்தால்தான் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ முடியும்.. இது இன்றைய யதார்த்தம்...

வாழ்த்துக்கள் அமரன்...

இளசு
12-08-2007, 07:09 AM
அமரா

நேசமற்றவரின் பொறாமை,உதாசீன வெப்பங்களால்
நீர் வற்றிய நெஞ்சம் வெடிப்புகளால் ரணமாகும்போதெல்லாம்
ஒவ்வொரு நெஞ்சவயலுக்கும் பிரத்தியேக அன்புமேகம்
எங்கிருந்தோ எப்படியோ வந்து வாய்த்துவிடுகிறது..

இந்த வறட்சி நிவாரணங்கள் இல்லையென்றால்
உலக மனங்கள் எல்லாமே பாலையாகி பற்றி எரிந்திருக்கும்!

மீனாகுமாரும் ஷீ−நிசியும் அழகான பின்னூட்டமிட்ட
வாழ்வியல் ஆவணக்கவிதைக்கு வாழ்த்துகள் அமரனுக்கு!

அமரன்
13-08-2007, 06:25 PM
நன்றி அக்னி.
நன்ரி மீனாகுமார்.
நன்றி அண்ணா.