PDA

View Full Version : அணைந்து போன காதல்..



rambal
01-06-2003, 06:06 PM
அணைந்து போன காதல்..

ஊதிவிட்ட
சிகரெட்டின் புகையாய்
நம் காதல்..

இழுத்து
சுவாசிக்க
குறைகிரது
என் ஆயுளில்
20 நொடிகள்..

கொஞ்சம் கொஞ்சமாய்
அரித்து
இறுதியில்
என்னையே அரித்து..
நசுக்கி அணைக்கப்பட்ட
சிகரெட் போலவே
அணைந்து போய்விட்டது
நம் காதலும்..

prabha_friend
02-06-2003, 08:17 AM
"தம்" இல்லாமல் காதல் செய்தால் இதுதான் முடிவு .

Nanban
02-06-2003, 09:18 AM
"தம்" இல்லாமல் காதல் செய்தால் இதுதான் முடிவு .

நல்ல timing சென்ஸ்...

Nanban
02-06-2003, 09:31 AM
சிகரெட் புகையை
வாங்கிக் கொள்ளலாம் -
உன்னை விற்பார்களா
கடைகளில் சிகரெட்டாக?
வாங்கிப் புகைக்காமலே
அரிக்கிறாய் நெஞ்சத்தை -
புகைக்கலாமா? வேண்டாமா?
சாய்ஸ் உண்டு சிகரெட்டிற்கு -
நீ தருவாயோ?
உன்னைவிட சிகரெட் தேவலாம் -
புகைக்கும் இன்பம் தந்ததே!