PDA

View Full Version : காலைப்பொழுது



இலக்கியன்
08-08-2007, 08:51 AM
http://img521.imageshack.us/img521/3556/naamloosbbbbvf1.png (http://imageshack.us)

ஆதவன் தேரிலே
அரியணை ஏறியே
அகிலம் ஒளிரவே
அக்கினி சுரந்தனன்

பகலவன் செங்கதிர்
பங்கயம் தீண்டவே
பனிபட்ட இதழது
பகலாய் முகிழ்ந்தது

களிறின் பிளிறல்
சங்காக முழங்கிட
செவிகள் இரண்டும்
சாமரை வீசவே
துதிக்கையால் துதித்தது
தூயவன் ஞாயிறை

இளம் குளிர் காற்று
இதயத்தை நனைக்க
இன்பம் பொங்கிட
இனிமையாய் புலர்ந்தது

காக்கையின் கரைதலும்
குயிலின் பாடலும்
மஞ்ஞையின் அகவலும்
காதில் ஒலித்திட
கரைந்தது இருள்
மலர்ந்த்து பகல்

ஆதவன், பகலவன்−சூரியன்
அகிலம்−உலகம்
பங்கயம்−தாமரை
களிறு− யானை
மஞ்ஞை−மயில்

அமரன்
08-08-2007, 01:08 PM
விடியல் எப்போதும் ரம்மியமானது
உற்சாகம் தருவது..இலக்கியன்
உங்கள் கவிதையும் அப்படியே.
இதை நான் வெறும் காட்சியின்
வர்ணனையாக பார்க்கவில்லை...
என்னுள் உங்களுள் இருக்கும்
எதிர்பார்ப்பாக அவாவாகவே பார்கின்றேன்.

அதிரடி அரசன்
08-08-2007, 01:46 PM
கலக்கிட்டிங்க இலக்கியன்

தீபா
08-08-2007, 01:52 PM
இலக்கிய வார்த்தைகள்
இலக்கிய கவிதை
இலக்கியனிடமிருந்ந்து
வாழ்த்துக்கள்

சிவா.ஜி
08-08-2007, 01:57 PM
சுவை சொட்டும் இனிய கவிதை. ஆஹா...என்ன தமிழ்...அழகு
வர்னனைகள் அபாரமாக இருக்கிறது.வாழ்த்துக்கள் இலக்கியன்

இதயம்
08-08-2007, 01:59 PM
http://img521.imageshack.us/img521/3556/naamloosbbbbvf1.png (http://imageshack.us)

ஆதவன் தேரிலே
அரியணை ஏறியே
அகிலம் ஒளிரவே
அக்கினி சுரந்தனன்

பகலவன் செங்கதிர்
பங்கயம் தீண்டவே
பனிபட்ட இதழது
பகலாய் முகிழ்ந்தது

களிறின் பிளிறல்
சங்காக முழங்கிட
செவிகள் இரண்டும்
சாமரை வீசவே
துதிக்கையால் துதித்தது
தூயவன் ஞாயிறை

இளம் குளிர் காற்று
இதயத்தை நனைக்க
இன்பம் பொங்கிட
இனிமையாய் புலர்ந்தது

காக்கையின் கரைதலும்
குயிலின் பாடலும்
மஞ்ஞையின் அகவலும்
காதில் ஒலித்திட
கரைந்தது இருள்
மலர்ந்த்து பகல்

ஆதவன், பகலவன்−சூரியன்
அகிலம்−உலகம்
பங்கயம்−தாமரை
களிறு− யானை
மஞ்ஞை−மயில்


ஆஹா.. பெயருக்கேற்ற கவிதை..எனக்கு பள்ளிக்காலங்களில் படித்த சங்ககால இலக்கிய பாடல்கள் நினைவுக்கு வந்து விட்டன. உங்க கவிதையெல்லாம் படிப்பேன் என்று முன்பே தெரிந்திருந்தால் நான் பள்ளி வகுப்பிலிருந்து பாஸாகி கல்லூரி வந்திருக்க மாட்டேன். :innocent0002:

சுவையான கவிதைக்கு பாராட்டுக்கள் இலக்கியன்..!

இலக்கியன்
08-08-2007, 02:43 PM
விடியல் எப்போதும் ரம்மியமானது
உற்சாகம் தருவது..இலக்கியன்
உங்கள் கவிதையும் அப்படியே.
இதை நான் வெறும் காட்சியின்
வர்ணனையாக பார்க்கவில்லை...
என்னுள் உங்களுள் இருக்கும்
எதிர்பார்ப்பாக அவாவாகவே பார்கின்றேன்.

காலைக்காட்சியின் அழகை நான் தாயகத்தில் இரசித்ததை மனக்கண்ணில் கொண்டு வந்தேன் நன்றி அமரன்

இலக்கியன்
08-08-2007, 02:44 PM
கலக்கிட்டிங்க இலக்கியன்

கருத்துக்கு நன்றி

இலக்கியன்
08-08-2007, 02:45 PM
இலக்கிய வார்த்தைகள்
இலக்கிய கவிதை
இலக்கியனிடமிருந்ந்து
வாழ்த்துக்கள்

தென்றலாக வந்த உங்கள் கருத்து
தென்றாலாக எனை வருடிச்சென்றது
நன்றி

இலக்கியன்
08-08-2007, 02:46 PM
சுவை சொட்டும் இனிய கவிதை. ஆஹா...என்ன தமிழ்...அழகு
வர்னனைகள் அபாரமாக இருக்கிறது.வாழ்த்துக்கள் இலக்கியன்

உங்கள் விமர்சனத்துக்கு நன்றி சிவா.ஜி

இலக்கியன்
08-08-2007, 02:47 PM
ஆஹா.. பெயருக்கேற்ற கவிதை..எனக்கு பள்ளிக்காலங்களில் படித்த சங்ககால இலக்கிய பாடல்கள் நினைவுக்கு வந்து விட்டன. உங்க கவிதையெல்லாம் படிப்பேன் என்று முன்பே தெரிந்திருந்தால் நான் பள்ளி வகுப்பிலிருந்து பாஸாகி கல்லூரி வந்திருக்க மாட்டேன். :innocent0002:

சுவையான கவிதைக்கு பாராட்டுக்கள் இலக்கியன்..!

இலக்கியன் என பெயரை வைத்து விட்டேன் அதனால் இப்படி ஒரு கவிதை எழுத வேண்டும் என்கின்ற ஆர்வத்தில் புனைந்தது இந்தக்கிறுக்கல்

lolluvathiyar
08-08-2007, 03:05 PM
இயற்கையை போற்றி பாடுவதே ஒரு அழகு
அதிலும் சூரியனை போற்றுவது இனையில்லா அழகு
உங்கள் கவிதை வரிகள் சூரியனை விட ஜொலித்தது
பாராட்டுகள் இலக்கியன்

குந்தவை
08-08-2007, 03:05 PM
அருமை இலக்கியன்..
இன்றைய அவசர கதியில் நாம் மறந்து போன காலைப் பொழுதின் ரம்மியத்தை மிக அழகாக உணர வைத்திருக்கிறீர்கள்...

இனியவள்
08-08-2007, 03:18 PM
சுறுசுறுப்பற்றவனைக் கூட
உற்சாகப் படுத்திவிடும்
காலைக் காட்சியும்
உங்கள் கவிதையும்
வாழ்த்துக்கள் இலக்கியன்

ஷீ-நிசி
09-08-2007, 06:29 AM
இரவிலிருந்து பகல் மாறும் பொழுது....

கவிதையானது....

வார்த்தைகள் பலவும் புதிது எனக்கு...

தொடருங்கள் தோழரே!

இலக்கியன்
09-08-2007, 01:10 PM
வாத்தியார்.குந்தவை. இனியவள்.ஷீ-நிசி அணைவரின் விமர்சனத்துக்கும் நன்றி

ஆதவா
09-08-2007, 01:41 PM
ஒருவிடியலின் இலக்கிய வார்த்தைப் படையல்.

மிக நன்றாகவே இருக்கிறது இலக்கியன்.. வாழ்த்துக்கள் .

இணைய நண்பன்
09-08-2007, 01:44 PM
கவிதைக்கு பின்னனி படமும் அழகு சேர்க்கிறது.கவிதை நன்றாக இருக்கிறது

இலக்கியன்
09-08-2007, 01:44 PM
உங்கள் விமர்சனத்துக்கு மிக்க நன்றி ஆதவா

இலக்கியன்
09-08-2007, 01:46 PM
உங்கள் கருத்துக்கு நன்றி இக்ராம்

ஓவியன்
13-08-2007, 03:02 AM
விடியலுக்காய் வடித்த வரிகள் அழகு!

பாராட்டுக்கள் இலக்கியன்!.

விகடன்
13-08-2007, 03:25 AM
கவிதையின் முதலிரண்டு பந்திகளிலும் ஆரம்ப எழுத்துக்கள் ஒரே எழுத்தாக அமையப்பற்றிருப்பதும் கவிதைக்கு வழங்கப்பட்ட சொல்லின் ஒத்தகருத்துள்ள அதேவேளையில் பரீட்சையமான சொற்களையும் இறுதியில் இட்டு கவிதையின் கருத்துக்கு தெளிவை புகட்டிய முறை அதனிலும் மேலாக பண்டைக்கால கவி ந*டையில் காலைப் பொஅழுதில் காட்சிதனை சொல்லியவிதௌ திறமை.

பாராட்டுக்கள் இலக்கியன்.

இலக்கியன்
13-08-2007, 08:32 AM
விடியலுக்காய் வடித்த வரிகள் அழகு!

பாராட்டுக்கள் இலக்கியன்!.

நன்றி ஓவியன்

இலக்கியன்
13-08-2007, 08:34 AM
கவிதையின் முதலிரண்டு பந்திகளிலும் ஆரம்ப எழுத்துக்கள் ஒரே எழுத்தாக அமையப்பற்றிருப்பதும் கவிதைக்கு வழங்கப்பட்ட சொல்லின் ஒத்தகருத்துள்ள அதேவேளையில் பரீட்சையமான சொற்களையும் இறுதியில் இட்டு கவிதையின் கருத்துக்கு தெளிவை புகட்டிய முறை அதனிலும் மேலாக பண்டைக்கால கவி ந*டையில் காலைப் பொஅழுதில் காட்சிதனை சொல்லியவிதௌ திறமை.

பாராட்டுக்கள் இலக்கியன்.

அழகான் விமரசனம் தந்த விராடனுக்கு நன்றி
இந்தக்காலைப்பொழுது நான் வன்னியில் இருந்த போது இரசித்த காட்சி
அதனை வரிகளாக்கினேன்