PDA

View Full Version : எங்கே போகிறாய்?

இலக்கியன்
08-08-2007, 08:36 AM
http://img167.imageshack.us/img167/6935/naamloosoj5.png (http://imageshack.us)

வெளிநாட்டில் தமிழனுடனும்
தமிழில்பேச வெட்கப்படுகிறாய்
எங்கே போகிறாய் தமிழா
எங்கேபோகிறாய்.........

வேற்று மொழிபேசி நீயும்
உன் தாய்மொழி மறந்து நீ
எங்கே போகிறாய் தமிழா
எங்கேபோகிறாய்.........

காதில தோடுபோட்டு
எடுப்பாக நடந்து நீயும்
எங்கே போகிறாய்
தமிழா எங்கேபோகிறாய்..........

தலை முடிக்கு சாயம்பூசி
குதிரைகால் செருப்புபோட்டு
எங்கே போகிறாய் தமிழா
எங்கேபோகிறாய்..........

வெளிநாட்டில் வந்து உன்
பண்பாடு மறந்து நீயும்
எங்கே போகிறாய்
தமிழா எங்கேபோகிறாய்..........

தமிழின் சமயம் விட்டு
தாவிக்குதித்து நீயும் எங்கே
போகிறாய் தமிழா
எங்கேபோகிறாய்..........

வெள்ளையன் நடையைபார்த்து
அவனைப்போல நடந்துகொண்டு
எங்கே போகிறாய் தமிழா
எங்கேபோகிறாய்..........

ஊரில் உள்ள உறவை−தாய்
நாட்டை மறந்து
எங்கே போகிறாய்
தமிழா எங்கேபோகிறாய்..........

புலம் பெயர்ந்த தமிழர்கள் புலம் பெயர் நாடுகளில் அவர்கள் காலாச்சாரம் பண்பாடு என்பவற்றில் ஏற்படும் மாற்றம் எதிர்காலத்தில் தமிழனின் அடையாளத்தை தனிப்படுத்தி காட்டுமா? என்கின்ற எண்ணப்பாட்டில் பிறந்தது இந்தக்கிறுக்கல்

விகடன்
08-08-2007, 08:48 AM
"எங்கே போகிறாய்?"

இது புலம்பெயர்ந்த சமூகத்திடம் மட்டுமல்ல சினிமாப் பாக்கின்ற அனைவரிடமும் கேட்கப்படவேண்டியது.

நீங்கள் சொன்னதுபோல வெளினாடுகளிலிருக்கும் குடும்பத்தில் உள்ள பிள்ளைகள் கதைக்கவும் மாட்டார்கள் கதைத்தாலும் எழுதத்தெரியாது தமிழை.

தமிழ் அழிந்து போகிறதா என்றும் ஒரு ஆராச்சி நடத்தினார்களாம்.
அது அழிந்து போகவில்லை. அழிக்கப்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

அடடா. எனது புலம்பலில் ஒன்றை மறந்திட்டேன்

கவிதை நன்று இலக்கியன். பாராட்டுக்கள்

இலக்கியன்
08-08-2007, 08:54 AM

விராடன் அழகான கருத்துதந்தீர்கள் தமிழை வளர்க்கும் மன்றத்துக்கு சிறப்பான வாழ்த்துக்கள்.

அமரன்
08-08-2007, 09:00 AM
புலம்பெயர்ந்த் நாடுகளில் இருக்கும்
ஒவ்வொரு தமிழனின் நெஞ்சங்களிலும்
ஒருநொடியில் எத்தனை கேள்விகள்.....?

வந்தமொழியாலும் வாழிடமொழியாலும்
தாய்மொழி மாயமாகுமா..?
கேட்டகேள்விக்கு- இல்லையென
பொட்டில் அறைந்தது தமிழ்பள்ளி.

சாயப்பூச்சும் வாய்சுவிங்கமும்
தாயக பண்பாட்டை காயமாக்குமா?
சிந்திய கண்ணீரை சிதறடித்தது
கலைபண்பாட்டு சலங்கைஒலி...!

இளைய தலைமுறைக்குள் இருக்கும் தீ- சில
பழைய தாள்களில் இன்னும் பற்றவில்லை.

பற்றவைக்க வேண்டியவர்கள் பதுங்குவதும்
பதுங்க வேண்டியவர்கள் பற்றுவதுமான
முரண்களை பல இடங்களில் காண்கிறேன்.

எல்லாம பனிப்புலத்தின் புகார்கள்.
புரிந்துகொள்வார்கள்... தமிழையும்..
மாயைகள் விலகும் இலக்கியன்.
அருமையான பகிர்வு.
பாராட்டுக்கலந்த நன்றி.

இலக்கியன்
08-08-2007, 09:04 AM
புலம்பெயர்ந்த் நாடுகளில் இருக்கும்
ஒவ்வொரு தமிழனின் நெஞ்சங்களிலும்
ஒருநொடியில் எத்தனை கேள்விகள்.....?

வந்தமொழியாலும் வாழிடமொழியாலும்
தாய்மொழி மாயமாகுமா..?
கேட்டகேள்விக்கு- இல்லையென
பொட்டில் அறைந்தது தமிழ்பள்ளி.

சாயப்பூச்சும் வாய்சுவிங்கமும்
தாயக பண்பாட்டை காயமாக்குமா?
சிந்திய கண்ணீரை சிதறடித்தது
கலைபண்பாட்டு சலங்கைஒலி...!

இளைய தலைமுறைக்குள் இருக்கும் தீ- சில
பழைய தாள்களில் இன்னும் பற்றவில்லை.

பற்றவைக்க வேண்டியவர்கள் பதுங்குவதும்
பதுங்க வேண்டியவர்கள் பற்றுவதுமான
முரண்களை பல இடங்களில் காண்கிறேன்.

எல்லாம பனிப்புலத்தின் புகார்கள்.
புரிந்துகொள்வார்கள்... தமிழையும்..
மாயைகள் விலகும் இலக்கியன்.
அருமையான பகிர்வு.
பாராட்டுக்கலந்த நன்றி.

உங்கள் எண்ணங்களை சிறப்பாக வெளிப்படுத்தினீர்கள் அமரன் நன்றி

ஆதவா
08-08-2007, 09:05 AM
அமரனின் விளக்கக் கவிதைக்குப் பிறகு நான் என்ன விமர்சனம் செய்ய? அருமை இலக்கியன்.... அருமை அமரன்....

வாழ்த்துக்கள்..

இலக்கியன்
08-08-2007, 09:08 AM
அமரனின் விளக்கக் கவிதைக்குப் பிறகு நான் என்ன விமர்சனம் செய்ய? அருமை இலக்கியன்.... அருமை அமரன்....

வாழ்த்துக்கள்..

உங்கள் கருத்துக்கு நன்றி ஆதவா

தீபா
08-08-2007, 03:05 PM
கலாச்சார மாறுபாடும்
பண்பாட்டு ஒழுக்கலும்
உருவாக்கிக் கொண்டிருக்கும்
சமுதாயம்.

சமுதாய சறுக்கலை
நம் கிறுக்கலால்
நேர்படுத்த முடியுமா?

முடியும் என கோடிடும்
கவிதை...

இனியவள்
08-08-2007, 03:15 PM
இலக்கியன் கவிதை நன்று வாழ்த்துக்கள்...அமரின் பின்னூட்டக் கவிதை சிறப்பு வாழ்த்துக்கள் அமர்

எமது பண்பாடு மொழி
அனைத்து அழிந்து வரவில்லை
அழிந்து வருவது போன்ற
மாயை சூழ்ந்து கிடக்கின்றது
மாயைகள் விலகும் தெளிவு பிறக்கும்

குந்தவை
08-08-2007, 03:19 PM
உண்மை தான்.
ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..
என் அலுவ*ல*க*த்தில்.. வ*ட*மொழியின*ர் தேவையில்லாம*ல் ஆங்கில*த்தில் பேச* மாட்டார்க*ள்...அரைகுறை இந்தி ம*ட்டுமே தெரிந்த* என*க்கு இது ச*ங்க*ட*மாக* இருந்த*து..

ஒரு ச*ந்திப்பின் போது, மிக* உய*ர்ந்த* ப*த*வியில் இருக்கும், என் அதிகாரியுட*ன் ம*திய* உண*வு உட்கொண்டிருந்தேன்..

த*மிழ*ரான* அவ*ர் ம*ருந்துக்குக் கூட* ஒரு த*மிழ் வார்த்தை பேச*வில்லை....

அன்று நான் மிக*வும் ம*ன*ம் நொந்தேன்....

உங்க*ள் க*விதை அதையே உண*ர்த்துகிற*து...

உண்மை தான்...

இலக்கியன்
08-08-2007, 07:12 PM
கலாச்சார மாறுபாடும்
பண்பாட்டு ஒழுக்கலும்
உருவாக்கிக் கொண்டிருக்கும்
சமுதாயம்.

சமுதாய சறுக்கலை
நம் கிறுக்கலால்
நேர்படுத்த முடியுமா?

முடியும் என கோடிடும்
கவிதை...

சமுகத்தின் மாற்றத்தை கவிதையாக கோடுட்டுக்காட்டமுடியும்.
நன்றி தென்றல்

இலக்கியன்
08-08-2007, 07:15 PM
உண்மை தான்.
ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..
என் அலுவ*ல*க*த்தில்.. வ*ட*மொழியின*ர் தேவையில்லாம*ல் ஆங்கில*த்தில் பேச* மாட்டார்க*ள்...அரைகுறை இந்தி ம*ட்டுமே தெரிந்த* என*க்கு இது ச*ங்க*ட*மாக* இருந்த*து..

ஒரு ச*ந்திப்பின் போது, மிக* உய*ர்ந்த* ப*த*வியில் இருக்கும், என் அதிகாரியுட*ன் ம*திய* உண*வு உட்கொண்டிருந்தேன்..

த*மிழ*ரான* அவ*ர் ம*ருந்துக்குக் கூட* ஒரு த*மிழ் வார்த்தை பேச*வில்லை....

அன்று நான் மிக*வும் ம*ன*ம் நொந்தேன்....

உங்க*ள் க*விதை அதையே உண*ர்த்துகிற*து...

உண்மை தான்...

நன்றி இனியவள்
மிகவும் நன்றாக சொன்னீர்கள் குந்தவை நன்றி
தமிழ் நாட்டிலே இந்த நிலை என்றால் இங்கு எப்படி இருக்கும்

ஷீ-நிசி
09-08-2007, 06:07 AM
உங்கள் ஆதங்கம் உண்மைதான்....

ஆனால் இவையெல்லாம் செய்வது மிகப்பெரும் தவறென்று இல்லை... மனதிலிருக்கும், கலாச்சாரம், பண்பாடு மறக்காமல் இருந்தால் போதுமானது....

இந்தக் கவிதை அப்படி மறந்த ஒவ்வொருவருக்கும் பொருந்தும்...

வாழ்த்துக்கள் நண்பரே!

பூமகள்
26-08-2007, 03:55 AM
அன்பு நண்பரே..
எம் ஆதங்கத்தை அழகாக வடிவாக்கி கவியாக்கி இருக்கிறீர்கள். இங்கு தமிழ் நாட்டின் நிலையும் அப்படித்தான் போய்க் கொண்டு இருக்கிறது..
நம் கலாச்சாரம் மறந்து அந்நிய நாட்டில் மோகத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் அனைத்து இளைஞர்களும் படித்து சிந்திக்க வேண்டிய கவி படைத்தீர்.

வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் இலக்கியன்......!! :schnelluebersicht_k

இலக்கியன்
29-08-2007, 06:14 PM
உங்கள் ஆதங்கம் உண்மைதான்....

ஆனால் இவையெல்லாம் செய்வது மிகப்பெரும் தவறென்று இல்லை... மனதிலிருக்கும், கலாச்சாரம், பண்பாடு மறக்காமல் இருந்தால் போதுமானது....

இந்தக் கவிதை அப்படி மறந்த ஒவ்வொருவருக்கும் பொருந்தும்...

வாழ்த்துக்கள் நண்பரே!

உங்கள் பின்னுட்டத்துக்கு நன்றி நண்பரே

இலக்கியன்
29-08-2007, 06:16 PM
அன்பு நண்பரே..
எம் ஆதங்கத்தை அழகாக வடிவாக்கி கவியாக்கி இருக்கிறீர்கள். இங்கு தமிழ் நாட்டின் நிலையும் அப்படித்தான் போய்க் கொண்டு இருக்கிறது..
நம் கலாச்சாரம் மறந்து அந்நிய நாட்டில் மோகத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் அனைத்து இளைஞர்களும் படித்து சிந்திக்க வேண்டிய கவி படைத்தீர்.

வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் இலக்கியன்......!! :schnelluebersicht_k

தோழி உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி