PDA

View Full Version : தமிழ் (முதல் கவிதை)



அதிரடி அரசன்
07-08-2007, 08:21 PM
மனமே மயங்காதே

காதல் சுகமானது
......அதைக் காணாத வரை
கற்பு அற்புதமானது.
....அதைத் தவறாதவரை
அன்பு புனிதமானது,
.....தாயைப் பிரியாதவரை
எனக்கு இன்பமானது
.....தமிழைப் பிரியாதவரை..... :love-smiley-008:

leomohan
07-08-2007, 08:24 PM
மனமே மயங்காதே

காதல் சுகமானது......அதை கானாத வரை
கற்பு அற்புதமானது.....அதை தவராதுவரை
அன்பு புனிதமானது,.....தாயை பிரியாதவரை
எனக்கு இன்பமானது.....தமிழை பிரியாதவரை..... :love-smiley-008:

நல்ல முதல் கவிதை அரசரே. தொடருங்கள் உங்கள் கவி மழையை.

கவிதை இனிமையானது - எழுதிக் கொண்டிருக்கும் வரை

அமரன்
07-08-2007, 08:28 PM
கன்னிக்கவிதையிலெயே காதல்,கற்பு,அன்னை,அன்னைத்தமிழென உன்னத கருக்களை சொன்ன அதிரடியாரே! வாழ்த்துக்கள் தொடருங்கள்.

இனியவள்
07-08-2007, 08:28 PM
கவிதை இனிமையானது - எழுதிக் கொண்டிருக்கும் வரை

காதல் இனிமையானது
அடிவாங்காத வரை

இனியவள்
07-08-2007, 08:29 PM
கவிதையிலும் தொடங்கட்டும்
உங்கள் அதிரடி வாழ்த்துக்கள்
அரசரே

அக்னி
07-08-2007, 08:37 PM
உங்களுக்கு இன்பமானது,
தமிழைப் பிரியாதவரை...
தமிழுக்குப் சிறப்பானது,
தொடரப்போகும்
உங்கள் கவிதைகளின் தொடர்ச்சி...

கன்னிக்கவிதைக்கும், உங்கள் ஆர்வத்திற்கும் பாராட்டுக்கள்...
தொடர்ந்தும் கவிதையில் கலக்கவேண்டும்...

அதிரடி அரசனின் கன்னிக் கவிதைக்கு 200 iCash.

இளசு
07-08-2007, 09:28 PM
முதல் கவிதைக்கு வாழ்த்துகள்... பாராட்டுகள் அ.அ. அவர்களே!

தொடர்ந்து எழுதுங்கள்..

மன்றத்தின் கவிதைப்பட்டறை பக்கம் அடிக்கடி உலாவுங்கள்!

அதிரடி அரசன்
08-08-2007, 02:49 AM
முடிந்த வரை முயற்ச்சி செய்து எழுதுகிறேன்

பாராட்டுகலுக்கு நன்றி தோழர்கலே :sport-smiley-014:

விகடன்
08-08-2007, 03:19 AM
காதல் இனிமையானது
அடிவாங்காத வரை
ஆரம்பத்தில ரொம்ம இனிச்சிச்சோ காதல்......:icon_clap:

விகடன்
08-08-2007, 03:22 AM
அடடா,
அதிரடி எல்லாவற்றிலும் அதிரடியாகவே இறங்கி அசத்தியும் விடுகிறார். பாராட்டுக்கள்.

.

ஷீ-நிசி
08-08-2007, 03:54 AM
கவிதையும் காதல் போலத்தான் போல...
எல்லோரையும் வசீகரிக்கிறதே!

அரசன் மட்டும் விதிவிலக்கா என்ன.....

வாழ்த்துக்கள் நண்பரே!

சிவா.ஜி
08-08-2007, 04:24 AM
அதிரடியின் இன்னொரு அதிர்வேட்டு. முதல் கவிதையை முத்தாகப் படைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள் அரசரே.

ஆதவா
08-08-2007, 04:54 AM
மனமே மயங்காதே

காதல் சுகமானது
......அதைக் காணாத வரை
கற்பு அற்புதமானது.
....அதைத் தவறாதவரை
அன்பு புனிதமானது,
.....தாயைப் பிரியாதவரை
எனக்கு இன்பமானது
.....தமிழைப் பிரியாதவரை..... :love-smiley-008:

முதல் கவிதை... இப்போதுதான் முதல் அடி (கொடுத்திருக்கிறீர்கள்) வைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்..

பெரும்பாலும் முதல் கவிதை எழுதுபவர்கள் காதலில் தொடங்குவார்கள். சிலர் வாழ்த்தில் தொடங்குவார்கள்.. ஒருசிலர் சமூக கருத்துக்களில் தொடங்குவார்கள்.... ஆனால் ஒரே பாதையில் செல்லுபவர்களே மிக அதிகம்...

உங்களுக்கென்று ஒரு பாதை வகுத்துக் கொள்ளுங்கள். உங்கள் கவிதை தனியே தெரியவேண்டும். கருத்துக்களில் புதுமை இருக்கவேண்டும். புதுமை இல்லாத கவிதைகள் பெரும்பாலும் ஒதுக்கப்பட்டுவிடும்... காதலுக்குள்ளேயே சுற்றாமல் பல ரகப்பட்ட கவிதைகள் கொடுங்கள்....

கருத்துக்கள் தோன்றாவிடில் தேடுங்கள்.. நிச்சயம் கிடைக்கும். சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்ற பழமொழி எத்தனை பொருத்தம் என்பதை உணருங்கள்.. மன்றக் கவிஞர்கள் பூ, ஷீ-நிசி, நண்பன், பிரியன், தாமரை, இன்னும் பலர் கவிதைகளை எடுத்து படித்துப் பாருங்கள்....

வெற்றி நிச்சயம்...

அதிரடி அரசன்
08-08-2007, 06:13 AM
நன்றி ஆதவா....எல்லோருக்கும் என்னுடைய நன்றிகல்
இம்ம்ம்...எப்படி எழுதுவதென்றே தெரியவில்லை...இருந்தாலும் முயற்ச்சிக்க்ரேன். :icon_give_rose:

இலக்கியன்
08-08-2007, 07:53 AM
அதிரடி அரசன் கன்னிக்கவிதையே அசத்தல் தொடருங்கள்

தீபா
08-08-2007, 02:01 PM
மன்றம் தவிக்கிறது
உமது அடுத்த கவி காணாதவரை....