PDA

View Full Version : அக்னித் துளிகள்..!



அக்னி
07-08-2007, 07:26 PM
மனதில் கனலும் உணர்வெனும் நெருப்பு...
அவ்வப்போது பற்றி எரியும்போது,
பதிவுகளாக்குகின்றேன் இத்திரியில்...

அக்னி
07-08-2007, 07:27 PM
என் இதயம் கொண்ட காயம்..,
உன் இதயம் தந்த அடையாளம்..!

என் கண்ணீரின் ஈரம்..,
என் தலையணையின் பாரம்..!

என் மனதோடு நான் கொண்ட காதல்..,
என் விழியோடு நீ தந்த கண்ணீர்..!

உன் விழிகளுக்கு என்னை மறைக்கத் தெரியவில்லை..,
என் விழிகளுக்கு உன்னை மறுக்க முடியவில்லை..!

உன் மடி கண்டதும்..,
நான் மடிவதும் சுகமே..!

உன்னை பார்த்ததும் என் மனது தொலைந்தது..,
என்னை பார்த்ததும் உன் மனது கலைந்ததா..?

அக்னி
07-08-2007, 07:27 PM
கண்ணீர்த் துளிகளுக்குள்,
கட்டிக்கட்டி வெளியே
தள்ளினாலும்,
மீண்டும் மீண்டும்
சுரக்கின்றாய் நீ...

அக்னி
07-08-2007, 07:29 PM
ஜனனித்த கணத்தில்,
ஏதும் தெரியவில்லை
தாயின் வாசம் தவிர...
உணர்ந்தேன் தாயின் வாசம்...
மரணிக்கும் கணத்திலும்
ஏதும் தெரியவில்லை
உனது சுவாசம் தவிர...
சுவாசித்தேன் உனது சுவாசம்...

அமரன்
07-08-2007, 08:13 PM
மரணிக்கும் கணத்திலும்
ஏதும் தெரியவில்லை
உனது சுவாசம் தவிர...
சுவாசித்தேன் உனது சுவாசம்...

என்சுவாசம் உன்னிலிருந்தால்
எப்படி நீ மரணிப்பாய்..
சாவிலாவது
உண்மை இருந்திருக்கலாம்...!

அன்புரசிகன்
07-08-2007, 08:16 PM
மரணிக்கும் கணத்திலும்
ஏதும் தெரியவில்லை
உனது சுவாசம் தவிர...
சுவாசித்தேன் உனது சுவாசம்...

என் மரணத்தில் கலங்காதே...
உண் கண்துடைக்க
நான் எழுந்து வந்துவிடுவேன்...

இனியவள்
07-08-2007, 08:16 PM
கண்ணீர்த் துளிகளுக்குள்,
கட்டிக்கட்டி வெளியே
தள்ளினாலும்,
மீண்டும் மீண்டும்
சுரக்கின்றாய் நீ...

ஊற்றெடுக்கும் கண்ணீர்த்
துளிகளை கரம் கொண்டு
துடைத்திட முடியும்
உயிரினில் கலந்து விட்ட*
நினைவுகளை எதனைக் கொண்டு
துடைத்திட முடியும்


அக்னி உங்கள் கவிப்பயணம் தொடர வாழ்த்துக்கள்

அதிரடி அரசன்
07-08-2007, 08:17 PM
மனதில் கனலும் உணர்வெனும் நெருப்பு...
அவ்வப்போது பற்றி எரியும்போது,
பதிவுகளாக்குகின்றேன் இத்திரியில்...

அருமை ஐயா உனது உணர்வு துளிகள் :209:

அக்னி
07-08-2007, 08:19 PM
என்சுவாசம் உன்னிலிருந்தால்
எப்படி நீ மரணிப்பாய்..
சாவிலாவது
உண்மை இருந்திருக்கலாம்...!

என் சுவாசம்
உன்னிலிருந்தால்,
எனக்கு திணறலான மூச்சு,
உனக்கு வாசமாய்
ஆனதெப்படி..?

நன்றி அமரன்.

அக்னி
07-08-2007, 08:21 PM
என் மரணத்தில் கலங்காதே...
உண் கண்துடைக்க
நான் எழுந்து வந்துவிடுவேன்...

நீ வந்து விட்டால்
எனக்கு ஏது கலக்கம்...
நான் நொந்த போதிலும்,
வர இன்னுமேன் சுணக்கம்..?

நன்றி அன்புரசிகன்.

அக்னி
07-08-2007, 08:23 PM
ஊற்றெடுக்கும் கண்ணீர்த்
துளிகளை கரம் கொண்டு
துடைத்திட முடியும்
உயிரினில் கலந்து விட்ட*
நினைவுகளை எதனைக் கொண்டு
துடைத்திட முடியும்


அக்னி உங்கள் கவிப்பயணம் தொடர வாழ்த்துக்கள்

துடைப்பது
என் கரமானால்,
சுரக்கும் மீண்டும் கண்ணீர்...
உன் கரமானால்,
அதுவே எனக்குப் பன்னீர்...

நன்றி இனியவள்.

அமரன்
07-08-2007, 08:23 PM
என் சுவாசம்
உன்னிலிருந்தால்,
எனக்கு திணறலான மூச்சு,
உனக்கு வாசமாய்
ஆனதெப்படி..?

ஆலத்தை காலமாக்கும்
வித்தை தெரிந்தது
ஆளும் காதல்...!

அக்னி
07-08-2007, 08:24 PM
அருமை ஐயா உனது உணர்வு துளிகள் :209:

மிக்க நன்றி மன்னா...

அக்னி
07-08-2007, 08:25 PM
ஆலத்தை காலமாக்கும்
வித்தை தெரிந்தது
ஆளும் காதல்...!

ஆலகால விடமும்,
காதலின் முன்,
அமிர்தமே...

இனியவள்
07-08-2007, 08:26 PM
ஆலத்தை காலமாக்கும்
வித்தை தெரிந்தது
ஆளும் காதல்...!

ஆளும் காதல் ஆளப்படும்
வரை சுகமானது
அடக்கப்படத் தொடங்கினால்
ரணமானது

இனியவள்
07-08-2007, 08:27 PM
துடைப்பது
என் கரமானால்,
சுரக்கும் மீண்டும் கண்ணீர்...
உன் கரமானால்,
அதுவே எனக்குப் பன்னீர்...



நான் துடைப்பதால்
உனக்கு பன்னீரானது
கண்ணீர்
உன் கண்கள் கண்ணீர்
சிந்துவதால் மெளனம்
கொண்டு அழுகின்றன
என் கண்கள்

அமரன்
07-08-2007, 08:30 PM
ஆளும் காதல் ஆளப்படும்
வரை சுகமானது
அடக்கப்படத் தொடங்கினால்
ரணமானது

காதல்
அடங்கியிருக்கும் வரை
காளை..

கட்டுகளை அறுத்துவிட்டால்
ஜல்லிக்கட்டு.

ரணமாகத்தான் செய்யும்
அடக்க நினைப்பவர்களுக்கு.

அமரன்
07-08-2007, 08:31 PM
ஆலகால விடமும்,
காதலின் முன்,
அமிர்தமே...

அதனால்தானே
உனதுசுவாசம்
அவ*ள் வாசமானது....!

அக்னி
07-08-2007, 08:50 PM
அதனால்தானே
உனதுசுவாசம்
அவ*ள் வாசமானது....!

இரு கருத்துக்கள் அமரா...
*ஆலகால விடம் கூட காதலின் முன்னால் எனக்கு உரமூட்டும் அமிர்தம்...
*காதலின் கொடிதை விட, ஆலகாலவிடம் எவ்வளவோ மேல்... அமிர்தம்போல...

அமரன்
07-08-2007, 08:54 PM
இரு கருத்துக்கள் அமரா...
*ஆலகால விடம் கூட காதலின் முன்னால் எனக்கு உரமூட்டும் அமிர்தம்...
*காதலின் கொடிதை விட, ஆலகாலவிடம் எவ்வளவோ மேல்... அமிர்தம்போல...

புரிந்துதான் பதிலிட்டேன்

இளசு
07-08-2007, 08:57 PM
ஜனனித்த கணத்தில்,
ஏதும் தெரியவில்லை
தாயின் வாசம் தவிர...
உணர்ந்தேன் தாயின் வாசம்...
மரணிக்கும் கணத்திலும்
ஏதும் தெரியவில்லை
உனது சுவாசம் தவிர...
சுவாசித்தேன் உனது சுவாசம்...

தொட*ங்கும் உற*வு − அனைத்தும்
அட*ங்கும் உற*வு..
இர*ண்டையும் இணைத்த*
இக்க*விதை அருமை அக்னி!

திராவ*க*த் துளிக*ளாய் உண*ர்வுக*ளின் திர*வ*த் தெறிப்புக*ள் தொட*ர்க*!

அக்னி
07-08-2007, 08:58 PM
புரிந்துதான் பதிலிட்டேன்

உங்கள் பதிவு காணும்வரை எனக்குப் புரியவில்லையே...
அதுதான் அட எனக்கும் இப்படி வருகின்றதே என்ற ஆச்சரியத்தில் பதிவிட்டேன்...
நான் நினைத்து எழுதியதற்கு, எதிர்க்கருத்தாய் வந்த கவிதையில், கண்டுகொண்ட சந்தோஷம்...

அக்னி
07-08-2007, 09:01 PM
தொட*ங்கும் உற*வு − அனைத்தும்
அட*ங்கும் உற*வு..
இர*ண்டையும் இணைத்த*
இக்க*விதை அருமை அக்னி!

திராவ*க*த் துளிக*ளாய் உண*ர்வுக*ளின் திர*வ*த் தெறிப்புக*ள் தொட*ர்க*!

மிக்க நன்றி அண்ணா...

அக்னி
09-08-2007, 10:51 PM
மலர்ந்த பூ,
புகுந்தவீடு செல்ல,
உடைந்த காம்பில்,
ஒரு துளி சாறு...
காம்பின் கண்ணீராய்...
பூவின்,
வாழ்விற்கான ஆனந்தமா?
ஆயுளிற்கான அழுகையா?

அக்னி
09-08-2007, 11:21 PM
திட்டிய இதழ்களுக்கு,
படபடத்து... துப்பினேன்...
விழிகளால்...

அமரன்
10-08-2007, 12:25 AM
அக்னி இரண்டும் அருமை.
இறுதிக்கவிதையை இப்படி எழுதலாமோ..

திட்டிய இதழ்களுக்கு
வெடவெடத்து உமிழ்ந்தேன்
கண்ணீர்.

ஆதவா
10-08-2007, 12:50 AM
உணர்வுப் பெட்டகம்..

காட்சியால் வடிந்த வரிகளைக் காட்டிலும் உணர்ச்சியால் பிழிந்த வரிகளுக்கு வீரியம் அதிகம்...

பல கவிதைகள் வீரியத்தை உமிழுகின்றன....

வாழ்த்துக்கள்..

அமரன்
10-08-2007, 12:52 PM
ஆமாம் ஆதவா. சில நேரங்களில் குறுங்கவிதைகள் நிறைமாதக் கர்ப்பிணியாகிவிடும். அதுபோல அக்னியின் கவிகளும்

அக்னி
10-08-2007, 06:52 PM
அக்னி இரண்டும் அருமை.
இறுதிக்கவிதையை இப்படி எழுதலாமோ..

திட்டிய இதழ்களுக்கு
வெடவெடத்து உமிழ்ந்தேன்
கண்ணீர்.
அபாரம்... நான் கண்ணீர் என்ற வார்த்தையைத் தவிர்க்க நினைத்தேன்...


உணர்வுப் பெட்டகம்..

காட்சியால் வடிந்த வரிகளைக் காட்டிலும் உணர்ச்சியால் பிழிந்த வரிகளுக்கு வீரியம் அதிகம்...

பல கவிதைகள் வீரியத்தை உமிழுகின்றன....

வாழ்த்துக்கள்..


ஆமாம் ஆதவா. சில நேரங்களில் குறுங்கவிதைகள் நிறைமாதக் கர்ப்பிணியாகிவிடும். அதுபோல அக்னியின் கவிகளும்
நன்றி நண்பர்களே...

அக்னி
10-08-2007, 06:53 PM
குரல்நாண் என்பது,
சரியான காரணப்பெயரே...
நன்றாகத்தான் விடுகின்றாய்,
அம்புகளை... சொற்களால்...

இளசு
10-08-2007, 07:03 PM
மலர் பிரிந்ததால் அழும் காம்பின் மீது
இதழ்கள் இன்னும் அம்பெய்தால்...?

அப்பப்பா! அக்னியின் வெப்பம் என்னையும் சுடுகிறதே!
அண்ணனின் பாராட்டுகள்!
வெப்பம் இன்னும் ஏறட்டும்!

அக்னி
11-08-2007, 05:34 PM
வெப்பம் இன்னும் ஏறட்டும்!

நன்றி அண்ணா...

அக்னி
12-08-2007, 05:37 PM
நெஞ்சின் உள்ளே
தொடர்ந்து விழும் இடிகள்...
எனது இயக்கமா..,
உனது நெருக்கமா..?

அக்னி
14-08-2007, 01:03 PM
பட்டென்று அடித்தேன்,
ஒற்றைக்கண்ணை...
சட்டெனப் பதிந்தேன்,
எந்தன் நெஞ்சில்...
புகைப்படக்கருவி!

அமரன்
14-08-2007, 01:17 PM
கண்மூடித்திறக்கும்
கணபொழுதினில்
கவிதைகளை களவாடும்
கவிஞன்.
புகைப்படகருவி.

மின்னல் வெட்டில் கவிதைகளை பொழியும் அக்னிக்கு வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
14-08-2007, 01:24 PM
ஆஹா...அக்னியின் அனலை இதுவரை உணராமலிருந்து விட்டேனே...
அத்தனையும் அருமை...தெறித்து விழுகிறது வார்த்தைக் கற்கள் ரத்தினங்களாய்.அமரனின் தொடர்ச்சி ஒரு அழகான ஜுகல்−பந்தியாக இனிக்கிறது. வாழ்த்துக்கள் அக்னி...தொடருங்கள்.

அக்னி
14-08-2007, 01:26 PM
நன்றி அமரன்...
நன்றி சிவா.ஜி...

அக்னி
15-08-2007, 01:40 AM
அங்கவீனமுற்றோம்..,
அடிவாங்கி வீக்கமுற்றோம்...
வீங்கிய பாகங்கள்,
ஊனத்தில் முளைத்திருந்தால்,
ஊனமற்றவராய் ஆகியிருப்போம்...

காண்க...
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11090 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11090)

ஓவியன்
15-08-2007, 01:51 AM
ஆலகால விடமும்,
காதலின் முன்,
அமிர்தமே...

அமிர்த்தத்தை
ஆலகாலமாக்குவதும்
இந்தக் காதல் தானே...!

அடடா அமரன் ஏலவே இதே கருத்தில் எழுதிட்டாரா - நன்றி அமர். நன்றி அக்னி!.

ஓவியன்
15-08-2007, 01:54 AM
நெஞ்சின் உள்ளே
தொடர்ந்து விழும் இடிகள்...
எனது இயக்கமா..,
உனது நெருக்கமா..?

இடிகளோ
அடிகளோ
என் இயக்கமே
நீயல்லவா.........

ஓவியன்
15-08-2007, 02:00 AM
அங்கவீனமுற்றோம்..,
அடிவாங்கி வீக்கமுற்றோம்...
வீங்கிய பாகங்கள்,
ஊனத்தில் முளைத்திருந்தால்,
ஊனமற்றவராய் ஆகியிருப்போம்..

நெருடும் வரிகள்.........
நன்றி அக்னி!

இவ்வாறான கவிதைகள் இனியும் கவுஞர்கள் எழுதாமலிருக்கும் ஒரு நிலை வரட்டும்................

அக்னி
15-08-2007, 02:09 AM
இவ்வாறான கவிதைகள் இனியும் கவுஞர்கள் எழுதாமலிருக்கும் ஒரு நிலை வரட்டும்................
உண்மைதான் ஓவியன்...
நாடுகள் சுதந்திரமடைந்து ஆண்டுதோறும் விழாக்கள்...
ஆனால், மக்கள்..?
உண்மையான சுதந்திரம், மக்களின் சமத்துவத்திலேயே...
அந்த நாள் வரும் என்று நம்புவோம்...

அக்னி
24-08-2007, 07:46 PM
பெண்ணழகில்,
அடங்கும் உலகு...
அவள்,
மனதளவில்
அடக்கம் உள்ளவரை...

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=262292&postcount=8 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=262292&postcount=8)

அக்னி
27-08-2007, 11:13 PM
வானம் பார்த்த
நீர்ப்பரப்பில் விழுந்த
நீர்த்துளி.., துள்ளியது...
விழுந்த வலியிலா..?
சேர்ந்த மகிழ்விலா..?

அக்னி
30-08-2007, 09:22 PM
மையம் கொண்ட புயல்,
மனதிலே...
மையல் தந்த கயல்விழி,
மனதினால்...

சாராகுமார்
31-08-2007, 05:43 AM
அழகாய் இருந்தாய்...
அழகாய் சிரித்தாய்...
அழகாய் பேசினாய்...
அழகாய் கை கழவினாய்.

அக்னி அவர்களே,உங்கள் அக்னி கவிதைகள் அருமை.

அக்னி
31-08-2007, 02:15 PM
அக்னி அவர்களே,உங்கள் அக்னி கவிதைகள் அருமை.

நன்றி சாராகுமார்....

lolluvathiyar
31-08-2007, 02:43 PM
நாலு நாலு வரியில் கவிகள்
படைத்து பெயருக்கேற்ற வகையில் நிற்கிறீர்கள்

அக்னி
03-09-2007, 09:46 PM
நாலு நாலு வரியில் கவிகள்
படைத்து பெயருக்கேற்ற வகையில் நிற்கிறீர்கள்

நன்றி வாத்தியாரே...

அக்னி
03-09-2007, 09:50 PM
இன்பமும் துன்பமும்,
முதலும் முடிவும்,
நிறைப்பும் இழப்பும்,
இரண்டானாலும்...
ஒன்றாக
உயிர்ப்பிறப்பு... ஆக...

இளசு
04-09-2007, 06:20 AM
இன்பமும் துன்பமும்,
முதலும் முடிவும்,
நிறைப்பும் இழப்பும்,
இரண்டானாலும்...
ஒன்றாக
உயிர்ப்பிறப்பு... ஆக...

பிறப்பு − இறப்பு என
இரண்டு இதிலும் உண்டே?!

தொடரும் கவித்துளிகளுக்கு வாழ்த்துகள் அக்னி!

சுகந்தப்ரீதன்
04-09-2007, 06:24 AM
அக்னிதுளிகள் தணலாக தகிக்கின்றன அக்னியாரே....!

தீபமாகவும் தீச்சுடராகவும் தொடரட்டும்....வாழ்த்துக்கள்!

சூரியன்
04-09-2007, 06:49 AM
ஒரு அருமையான படைப்பு அக்னி.

அக்னி
05-09-2007, 09:34 PM
பிறப்பு − இறப்பு என
இரண்டு இதிலும் உண்டே?!

தொடரும் கவித்துளிகளுக்கு வாழ்த்துகள் அக்னி!
ஆமாம் அண்ணா...
ஆனால் ஒரு வார்த்தையில் அடங்குவதால் அப்படிக் குறிப்பிட்டேன்...

வாழ்த்துக்கு நன்றி!


அக்னிதுளிகள் தணலாக தகிக்கின்றன அக்னியாரே....!

தீபமாகவும் தீச்சுடராகவும் தொடரட்டும்....வாழ்த்துக்கள்!
நன்றி சுகந்தப்ரீதன்...

ஒரு அருமையான படைப்பு அக்னி.
நன்றி சூரியன்...

அக்னி
05-09-2007, 10:20 PM
தேடிய வாழ்வு...
தேடவில்லை என்று...
தேடாமல் விடலாமோ...

இளசு அண்ணாவின் பரிந்துரைக்கேற்ப...
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=267629&postcount=17 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=267629&postcount=17)
சிறிய மாற்றங்களையும் கவனித்து, உற்சாகம் தரும் அண்ணாவிற்கு,
அளவுகடந்த நன்றிகள்...

ஆதவா
06-09-2007, 08:13 AM
தேடிய வாழ்வு...
தேடவில்லை என்று...
தேடாமல் விடலாமோ...

இளசு அண்ணாவின் பரிந்துரைக்கேற்ப...
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=267629&postcount=17 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=267629&postcount=17)
சிறிய மாற்றங்களையும் கவனித்து, உற்சாகம் தரும் அண்ணாவிற்கு,
அளவுகடந்த நன்றிகள்...

அருமை அருமை.... ஒரு சில அக்னிகள் தீபச்சுடராக இருக்கின்றன.... கொளுந்து விட்டு எரிய விடுங்கள்..... ஊரையே எரிக்கட்டும்....

அக்னி
06-09-2007, 08:17 AM
அருமை அருமை.... ஒரு சில அக்னிகள் தீபச்சுடராக இருக்கின்றன.... கொளுந்து விட்டு எரிய விடுங்கள்..... ஊரையே எரிக்கட்டும்....

அட... உங்களுக்குத்தான் தனிமடலிட்டு வருகின்றேன்...
நீங்களோ எனக்குப் பின்னூட்டம் இட்டிருக்கின்றீர்கள்...
இதுவும் டெலிபதியில் ஒருவகையோ..?
நன்றி ஆதவா...

அக்னி
10-09-2007, 01:23 PM
இரவின்
இரவல் அழகு..,
நிலவு..!

அமரன்
11-09-2007, 06:42 PM
இரவின்
இரவல் அழகு..,
நிலவு..!
பாராட்டுக்கள் அக்னி. தொடருங்கள்.

துளிகளின் நனைவில்
துளிர்த்த தும்மலின்
தூவானமாய் ஒன்று

இரவின் அழகு
நிலவு
இரவல் அழகு
நிலவுக்கு

இளசு
11-09-2007, 08:49 PM
இரவின்
இரவல் அழகு..,
நிலவு..!

அருமை..
ஒளிக்கு உரியவள் வந்தால்
உரிமை பேசி மல்லுக்கட்டாமல்
கட்டுப்பாடாய் மறையும்
கண்ணியமான அழகி!

அக்னி
11-09-2007, 10:53 PM
பாராட்டுக்கள் அக்னி. தொடருங்கள்.

துளிகளின் நனைவில்
துளிர்த்த தும்மலின்
தூவானமாய் ஒன்று

இரவின் அழகு
நிலவு
இரவல் அழகு
நிலவுக்கு
உங்கள் தூவானம்... சில்லிப்பாய்...
பாராட்டுக்கு நன்றி...
கவிக்குப் பாராட்டுக்கள்...

அருமை..
ஒளிக்கு உரியவள் வந்தால்
உரிமை பேசி மல்லுக்கட்டாமல்
கட்டுப்பாடாய் மறையும்
கண்ணியமான அழகி!
இசைந்து போகும் இயற்கை அழகுகள்,
இயற்றுவிக்கும் வரிகள், அழகோ அழகு...
நன்றி கலந்த பாராட்டுக்கள் அண்ணா...

அக்னி
18-09-2007, 05:21 PM
உன் முகத்தை
மாட்டி வைத்தாய்,
என் இதயத்தில்..,
ஆணி அறைந்து...

அக்னி
15-10-2007, 10:38 PM
இதழ்கள் சிவந்தன,
மென்முத்தம்...
பற்கள் சிவந்தன,
வன்முத்தம்...

அக்னி
29-10-2007, 10:30 AM
இருமருங்கும் பூச்செறிவு,
நாசிதொடும் சுகந்தவாசம்,
விரிந்த பாதையில்,
இனிமையான ரசிப்பில்
தொடங்கியது என் பயணம்...

உடல்களைத்து, நிழல்தேடி,
கானல்களின் விலகலில்,
நாணல்களில் நீர்த்துளிதேடி,
சோர்கையில்,
குலுங்கிச்சிரித்தன பூக்கள்...
உயிர்வாயுவை மறைத்தது வாசம்...

நடுவழியில், புரிகிறது வாழ்வு...

அக்னி
29-10-2007, 11:40 AM
பாசம்...
உச்ச விஷம்...
மருந்தாய், மரணமாய்...

அக்னி
31-10-2007, 01:45 AM
வற்றிப்போன என் கண்ணீர்,
காணவோ..,
என் இதயத்தில் வெ(இ)டி
வைக்கின்றாய்..?

வைத்த வெடியில்,
விழிகளில் சுரக்குது,
குருதி...

அக்னி
10-11-2007, 09:19 PM
மனவோட்டங்களின் மரதன்..,
முற்றுப்பெறும் புள்ளி..,
மரணம்...

அக்னி
11-11-2007, 04:14 PM
மரணத் தறு(ரு)வாய்..,
மரணிக்கும்வரை...

அக்னி
20-11-2007, 02:12 AM
காதலித்து,
காதல் அழித்து...

வலிக்கிறது உயிர்வரை...
உயிருள்ளவரை வலிக்கும்,
இந்த..,
காதல் கருக்கலைப்பு...

உறைந்த நிமிடம்..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13339) கவியில் என் பின்னூட்டம் #12 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=299872&postcount=12)...

இளசு
22-11-2007, 05:21 AM
இதழ்கள் சிவந்தன,
மென்முத்தம்...
பற்கள் சிவந்தன,
வன்முத்தம்...

முத்தம் ---
இதழ்கள் வெளுத்தன
விழிகள் சிவந்தன..
நிறம் இடமாற்றம்!

(கருத்து - கவியரசு கண்ணதாசனுடையது..
அக்னி கவிதை கணடதும் சட்டென நினைவாடியது)

இளசு
22-11-2007, 05:26 AM
மனவோட்டங்களின் மரதன்..,
முற்றுப்பெறும் புள்ளி..,
மரணம்...

உண்மைதான் அக்னி..

நெருப்பை நெருப்பே வெல்லும்!


அணையா மனவிளக்கு..
அணைக்கத்தேவை
அந்திம சுடலைத்தீ!

இளசு
22-11-2007, 05:31 AM
பாசம்...
உச்ச விஷம்...
மருந்தாய், மரணமாய்...

பெண்ணின் பார்வையும்தான்..
ஒரு பார்வை நோய் தருமாம்.. அவள்
மறுபார்வை மருந்தாகுமாம்..
சொன்னவன் - வள்ளுவன்!

இளசு
22-11-2007, 05:36 AM
...

நடுவழியில், புரிகிறது வாழ்வு...

நேற்று தெளிந்தது இன்று குழம்பியும்
இன்று மறைந்தது நாளை தோன்றியும்
என்றும் மாறா மாற்ற சுவாரசியம்..
இந்த வாழ்க்கை என்னும் விறுவிறு புத்தகம்..

வாசிப்பும் ரசிப்பும் வாழ்க்கைக்குப் பின்னூட்டப்பதிவும்..
வளரட்டும்...தொடரட்டும் அக்னி!

அக்னி
23-11-2007, 10:57 AM
எதிர்பார்க்காதபோது வந்த இன்பப் பின்னூட்டங்கள்...

மேற்கோள்கள் மிக பொருத்தமாக, ரசிப்பாக...

மிக்க நன்றிகள் அண்ணா...

அனுராகவன்
17-02-2008, 02:52 AM
மனதில் கனலும் உணர்வெனும் நெருப்பு...
அவ்வப்போது பற்றி எரியும்போது,
பதிவுகளாக்குகின்றேன் இத்திரியில்...

அக்னியின் தீப்பொறி கவிதையில் தெரிகிறது.
ம்ம் என் நன்றி

அக்னி
21-02-2008, 04:31 AM
மிக்க நன்றி அனு அவர்களே...

பா(ர்)வை குத்தியது,
இதயத்தில் ஓட்டை.
(ம)ரணம் நிச்சயம்...

அமரன்
21-02-2008, 07:12 AM
மிக்க நன்றி அனு அவர்களே...

பா(ர்)வை குத்தியது,
இதயத்தில் ஓட்டை.
(ம)ரணம் நிச்சயம்...

ஓட்டை
சல்லடை ஆகட்டும்.
மூச்சுக்காற்றால்
புல்லாங்குழலிசை கேட்கும்..!

ரணங்களின் தளும்புகள்
நிலைத்திருக்கட்டும்
ஆபத்தைக் குறைக்கும்
வேகத்தடையாக..!

அக்னி
21-02-2008, 07:26 AM
அபாரம் அமரன்...
நிகழ்வுகளை சாத்தியமாக்கினால் சாதனை படைக்கலாம் என்பதை, அழகுபடுத்தியிருக்கிறீர்கள்...
பாராட்டுக்கள்...

வேகத்தடை
வேதனைத் தடையானது...
தேங்கியது வேதனை
எனக்குள் மட்டும்...
உனக்குள் மட்டுமே
வேதனை தடுக்கப்பட்டது...

இளசு
21-02-2008, 07:32 AM
ரணமளிக்க ஒருத்தி
ரணசிகிச்சை அளிக்கும் நட்பு

களைகட்டுகிறது அக்னித்துளி.. பிரவகிக்கட்டும்!

அமரன்
21-02-2008, 08:49 AM
வேகத்தடை
வேதனைத் தடையானது...
தேங்கியது வேதனை
எனக்குள் மட்டும்...
உனக்குள் மட்டுமே
வேதனை தடுக்கப்பட்டது...

தடைமேவிப் பாயும்
வேதனை உனக்குள்!!
தடுத்து அடைக்கப்பட்ட
வேதனை எனக்குள்!!

உன் தேக்கத்தின்
கால்வாய்களும் வடிகால்களும்
வாழ்க்கைப் பாசனத்துக்காய்..
எனக்கோ
வாழ்க்கையின் பாச ஆசனமாய்!!!

ஓவியன்
21-02-2008, 10:04 AM
பா(ர்)வை குத்தியது,
இதயத்தில் ஓட்டை.
(ம)ரணம் நிச்சயம்...

மனதின்
(ம)ரணத்தைக்
குத்தி எடுத்ததும்
ஒரு
பா(ர்)வை...!!

இல்லையா அக்னி.....??? :)

அமரன்
21-02-2008, 10:33 AM
மனதின்
(ம)ரணத்தைக்
குத்தி எடுத்ததும்
ஒரு
பா(ர்)வை...!!

இல்லையா அக்னி.....??? :)
அனுபவமில்லீங்கோ!
அனுபவஸ்தர் சொன்னால் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்.
இல்லையா அக்னி!

ஓவியன்
21-02-2008, 10:46 AM
அனுபவமில்லீங்கோ!
அனுபவஸ்தர் சொன்னால் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்.
இல்லையா அக்னி!

அக்னிக்கும் உம்மைப் போல அனுபவம் இல்லைனு யார் சொன்னது.....??? :icon_wink1:

அக்னி
13-03-2008, 01:51 PM
கவிச்சமரில் வந்த கவிதை...

உன்னை ஏமாற்ற,
காத்திருந்தேன்...
என்னை ஏமாற்றி,
காத்திருக்கின்றேன்...
வந்திருக்க வேண்டியது உண்மையில் இப்படி...

உன்னையே மாற்ற,
காத்திருந்தேன்...
என்னையே மாற்றி,
காத்திருக்கின்றேன்...

அக்னி
17-03-2008, 01:02 PM
தமிழ் மன்றம்..!
வளர்த்து வெளித்தள்ளாமல்,
உள்வாங்கி வளர்க்கும்,
கருவறை...

சிவா.ஜி
17-03-2008, 02:13 PM
வித்தியாசமான பார்வை...உள்வாங்கும் கருவறை....அருமை அக்னி..தொடர்ந்து துளிகளைச் சிந்துங்கள்.....கவித்தேனாய் சுவைக்கட்டும்.

அக்னி
17-03-2008, 03:27 PM
வித்தியாசமான பார்வை...உள்வாங்கும் கருவறை....அருமை அக்னி..தொடர்ந்து துளிகளைச் சிந்துங்கள்.....கவித்தேனாய் சுவைக்கட்டும்.
நன்றி சிவா.ஜி...

நான்
உருவமா... அருவமா...
உருவமானால்,
உயிரின்றி உடலேது..?
அருவமானால்,
உடலின்றி உயிரேது..?
நான்..,
எனக்கே புரியாத புதிர்...

அக்னி
17-03-2008, 03:38 PM
வாதை... வந்தால் போதை...
போதை... போனால் வாதை...

அக்னி
14-06-2008, 10:40 AM
எனது நினைவில்
நீ ஏறி மிதித்ததை
உன் காலடித் தடம் என்று
சந்தோஷித்தேன்...
தொடர்கின்றது சந்தோஷம்...

அக்னி
30-06-2008, 07:11 AM
என் உறவைப் பார்த்து,
எத்தனை காலம்...
என் நகரைப் பார்த்து,
எத்தனை காலம்...

பார்க்க வைத்திருக்கிறார்கள்
இணையத்தில்..,
சிதையும்.., சிதைவுகளுமாய்...

அகால மரணம்....!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16346) பார்த்த, என் மன ரணம்...
இப்படிப் பார்க்க வேண்டாம் என்று, வரம் வேண்டுது என் மனம்...

பூமகள்
30-06-2008, 07:35 AM
வலி சொல்லும் வரிகள்..!!

வலிக்கிறது என்
விரல்களும்..
தட்டச்சால் அல்ல..
தடயத்தால்...!!

உற்றாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் அக்னி அண்ணா..!!

அக்னி
30-06-2008, 07:58 AM
உற்றாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் அக்னி அண்ணா..!!

இது எனக்குக் கிட்டிய அனுபவமல்ல பூமகள்...
ஆனால், தினம்தினம் இந்த அனுபவத்தைப் பெறுவோர் எத்தனையோ பேர்...
அவர்கள் நிலையில், அவர்கள் வேதனையில், வந்த வரிகள்...

உறவாய் இருந்தால் மட்டுமே வேதனை என்றில்லை.
உறவாய் இல்லாதபோது வேதனையில் சிறு ஆறுதல்.

இங்கு,

தினம் காலையில் எழுந்து,
கணினியை எழுப்பி,
தினச்செய்தி பார்த்ததும்,
வலிக்கும் செய்திகளும் தரும் ஒரு ஆறுதல்,
இன்று உன் சொந்தங்கள் நலம் என்று...

செய்தி பார்த்து முடித்து, மூடிய நொடியில்,
மனதில் மீண்டும் சலனம்;
இன்று ஏது நடக்குமோ என்று...

குறிப்பிட்டது போல,
தினசரிச் செய்தி பார்க்கும் வரையில், தவிக்கும் மனதோடு,
பார்த்து முடித்த பின்னரும், தொடரும் தவிப்போடு,
புலம்பெயர்ந்து வாழும் நாம்...

ஓவியன்
30-06-2008, 08:20 AM
என் உறவைப் பார்த்து,
எத்தனை காலம்...
என் நகரைப் பார்த்து,
எத்தனை காலம்...

பார்க்க வைத்திருக்கிறார்கள்
இணையத்தில்..,
சிதையும்.., சிதைவுகளுமாய்...

சிதைத்தவர்கள் சிதைக்கப் படுவார்கள்
வதைத்தவர்கள் வதைக்கப் படுவார்கள்
என்ற முடிவு நாம் அறிந்ததாயினும்
முடியவில்லை சில விடயங்களை ஜீரணிக்க.....!!

நாகரா
02-07-2008, 10:02 AM
நான்
உருவமா... அருவமா...
உருவமானால்,
உயிரின்றி உடலேது..?
அருவமானால்,
உடலின்றி உயிரேது..?
நான்..,
எனக்கே புரியாத புதிர்...

நான்
உருவ அருவ
ஒருமை
உணர்த்தும்
பெருவாழ்வின்
பெருமை

அக்னித் துளிகள்
ஒவ்வொன்றும்
அருமை
இதயம் உருக்கும்
வெம்மை

வாழ்த்துக்கள் அக்னியாரே!

பூமகள்
20-07-2008, 07:31 AM
கன்னங்கள் காட்டினேன்..!
அடித்தது ஏன்
என் இதயத்தில்...??!!

அக்னி
20-08-2008, 03:03 PM
வாழ்த்துக்கள் அக்னியாரே!
நன்றி நாகரா அவர்களே...

கன்னங்கள் காட்டினேன்..!
அடித்தது ஏன்
என் இதயத்தில்...??!!
இதயத்தைக் காட்டினேன்...
அடித்தது ஏன்
என் கன்னத்தில்..?

அமரன்
20-08-2008, 07:10 PM
நன்றி நாகரா அவர்களே...

இதயத்தைக் காட்டினேன்...
அடித்தது ஏன்
என் கன்னத்தில்..?

குடியிருந்த சாமியை
நொடியில் விரட்டிய தப்புக்கு
கன்னத்தில் போட்டாளோ..

இளசு
23-08-2008, 09:41 PM
தமிழ் மன்றம்..!
வளர்த்து வெளித்தள்ளாமல்,
உள்வாங்கி வளர்க்கும்,
கருவறை...


சபாஷ் அக்னி!

சிறகுகள் முதிர்ந்தும்
பறவைகள் திரும்பும்
தாய்வனம்!

அக்னி
23-08-2008, 09:49 PM
குடியிருந்த சாமியை
நொடியில் விரட்டிய தப்புக்கு
கன்னத்தில் போட்டாளோ..
தன் கன்னத்திற் போட்டால்,
தன் தப்புக்கு...
என் கன்னத்திற் போட்டால்,
தான் தப்பிக்கவா...???


சிறகுகள் முதிர்ந்தும்
பறவைகள் திரும்பும்
தாய்வனம்!
உற்சாகத்துக்கு நன்றி அண்ணா...

சிறகுகள் உதிர்ந்தாலும்,
அரவணைக்கும்
தமிழ்மன்றம்...

இளசு
23-08-2008, 09:52 PM
சிறகுகள் உதிர்ந்தாலும்,
அரவணைக்கும்
தமிழ்மன்றம்...

உண்மை அக்னி!

தாயை விஞ்சிய
செவிலி இல்லை!

தோலை மிஞ்சிய
ஆடை இல்லை!!

(அன்னையில்லாப் பிள்ளைகளுக்கும்
வெந்த புண்ணால் தோலிழந்தவர்களுக்கும்
சொன்ன வரிகளின் உண்மை புரியும்..)

Mother is the first nurse
Skin is the best dressing..

இவை இரண்டும் மருத்துவ உண்மைகள்!

அக்னி
25-08-2008, 07:01 PM
கவிச்சமரின் விள்ளல் ஒன்று...

அந்த எலும்புக் குவியலுக்குள்
கிளறிப்பார்...
காணாமலடிக்கப்பட்ட
உன் உறவும்
காணக்கிடைக்கலாம்
மண்டையோடாய்...

மீண்டும் உலகைப் பார்த்த
சந்தோஷச் சிரிப்போடல்ல...

சாகடிக்கப்பட்டபோது
வலியில் அழுந்திய பற்களின்,
இன்னமும் விலகாத நெறிப்போடு...

அமரன்
25-08-2008, 07:32 PM
செம்மண் பூமி எங்கும்
செம்மணிப் "புதை"குழிகள்..
புதைத்த விதைகளாய்
எலும்பு கூடுகள்..

இனவழிப்பு எச்சங்களுடன்
இனமோதல் மிச்சங்களையும்
அடுத்த தலைமுறைக்கு
எடுத்துச் செல்லும் தடயமாக
கண்டெடுத்த மண்டையோடுகள்..
..

அக்னி
25-08-2008, 08:05 PM
(அன்னையில்லாப் பிள்ளைகளுக்கும்
வெந்த புண்ணால் தோலிழந்தவர்களுக்கும்
சொன்ன வரிகளின் உண்மை புரியும்..)

நிஜம்தான் அண்ணா...

தாயில்லாமலும்
தோலில்லாமலும்
பிறக்கத்தான் இயலுமா...



அடுத்த தலைமுறைக்கு
எடுத்துச் செல்லும் தடயமாக
கண்டெடுத்த மண்டையோடுகள்..
எலும்புக்கூடுகளும் சிதைந்து போயிருந்தால்,
புதைந்தே போயிருக்கும்
இந்தப் புதைகுழிகளும்...

அக்னி
01-12-2008, 07:59 PM
இறந்த காதலுக்காய்த், தவி.
இறப்பித்த காதலுக்காய்த், தகி.

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=390806#post390806 (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=390806#post390806)
இப்பதிவிலிருந்ததை, மெருகுற வைத்த சாம்பவி அவர்களுக்கு நன்றி...

அக்னி
19-07-2009, 03:54 PM
கண்கள் வெளியேற்ற மறுக்கும்
கண்ணீர்,
உள்மனமெங்கும்
ஈரப்பதனாகப் போனதால்..,

ஆழ்மனத் துயரத் துவாரங்களில்
வடிந்து தேங்கிய உயிர்,
காய்ந்து வற்றிப் போகுதில்லை...

அக்னி
13-03-2010, 07:00 AM
உன் மனம் முழுவதும்
வானமாய் நான்...

வானம்...
பெயர் மட்டும் கொண்ட
வெறுமை...

சிவா.ஜி
13-03-2010, 08:06 AM
மீண்டும் சிந்தத் தொடங்கிய அக்னித் துளிகளைக் கண்டு மகிழ்ச்சி.

மனம் முழுதும் வானமாய் இருந்து பயனென்ன? வெறும் பெயர் மட்டுமேக் கொண்ட வெறுமையில் காதலைக் காணவில்லையே....

வாழ்த்துக்கள் அக்னி ஐயா.

govindh
13-03-2010, 08:39 AM
மன வானம் வெறுமையாய் இருந்து பயனில்லை..
காதல் வனமாக வேண்டும்..
அக்னி அவர்களுக்கு பாராட்டுக்கள்..

கலையரசி
13-03-2010, 09:16 AM
அடடா! இன்று தான் அக்னித் துளிகளைத் தரிசித்தேன்.
நெருப்பாய்ச் சுட்டுப் பொசுக்கின சில;
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சின சில;
ஆறாத ரணத்திற்கு களிம்பு தடவின சில:
மனச்சோர்வுக்கு மருந்தாகின சில;
அழகுக்கு அழகு சேர்த்தன சில;
வியப்பில் புருவத்தை உயர வைத்தன பல;
பாராட்டுக்கள் அக்னி அவர்களே!
தொடருங்கள்.

நாகரா
13-03-2010, 09:23 AM
உன் மனம் முழுவதும்
வானமாய் நான்...

வானம்...
பெயர் மட்டும் கொண்ட
வெறுமை...
சுத்த வெளியின் வெறு மை
சித்த மெல்லாம் எழுதும்
அன்பின் வெண்மை!

சிந்திக்க வைத்த வானத்துக்கும், வெறுமைக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் அக்னி.

அக்னி
15-03-2010, 08:09 AM
முத்தத்திற்குத் தேவையா
கைச்சாத்து...

வலிக்கின்றது
கன்னம்...

இந்தப் (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=460627#post460627) பதிவிலிருந்து ஒரு துளி...

அக்னி
02-04-2010, 02:04 PM
தடை தாண்ட முடியாமற்
தவித்தது மனம்...

தீண்டல் தடுத்துப்
பார்வை மறைக்கும்
தடையுடைக்க முடியாமற்
தளர்ந்து போகின்றேன்...

காதலிற் காற்றும்
பெருந்தடைதான்...

மஞ்சுபாஷிணி
02-04-2010, 03:07 PM
ஸ்பரிசம் கொடுக்கும் காற்று சில சமயம் தடையும் செய்யும்போல...

அழகான வரிகள் அக்னி... நன்றிகள்...

அக்னி
15-11-2010, 07:39 AM
எதுவுமே
எமக்கு இழப்பில்லை...
பெற்றிருந்தாற்தானே இழக்க...
பெறாமலேயே இழக்கும் வலி,
பெற்றிருந்தபோதும்
இழந்து போகுதில்லை...

ஆதவா
15-11-2010, 09:25 AM
எதுவுமே
எமக்கு இழப்பில்லை...
பெற்றிருந்தாற்தானே இழக்க...
பெறாமலேயே இழக்கும் வலி,
பெற்றிருந்தபோதும்
இழந்து போகுதில்லை...

எதைங்க அக்னி கொண்டு வந்தோம்? இழக்கறதுக்கு???
நல்லா இருக்குங்க... அப்பப்ப மன்றத்தையும் இழக்காம இருங்க. :icon_b:

அக்னி
06-01-2011, 08:46 PM
பார்த்துப் பார்க்கவைத்து...
என்று வரை..?
கலங்கலாக்கி மறைத்துச்
சாட்சிக்கான இந்தக் காட்சிகள்
என்று வரை..?
நீதி வழங்கத் துணிவில்லா உலகே..,
என் தமிழச்சிகளின்
உடலங்கள் போர்த்தச்
சிறு துணி வழங்கக்கூடத்
துப்பில்லையா உனக்கு..?

பாதவிரல்களின் வடிவம் கூட,
பூமியின் பதிவிற்தானே
புருஷனுக்கும் முழுமையாய்த்
தெரியவரும்...

ஆங்காங்கே,
நம் கலாச்சாரத்தைத் தின்னும்
கலாச்சாரங்கள் இருந்தாலும்,
பண்போடுதானே இருந்தது
நம் பண்பாடு...

பிணமானபின்னும் புணரும்
வெறிச்செயலின் சாட்சிகளான
இக்காட்சிகள் கூட
உலகின் மனச்சாட்சியை
உசுப்பவில்லை என்பது,
உலக, மனித மாட்சிக்கே
பெருங்கறையன்றோ...

குற்றவாளிகள் தப்பித்தாலும்,
நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது
என்று அறிவுறுத்தும் உலக நியதி..,
இங்கு மட்டும்,
மரணச்சாட்சிகளின்
நிர்வாணத்தைக் கூடக்
கண்டுகொள்ளாதது என்ன நீதி...

புதைகுழி தோண்டி,
மண்ணாற்கூட
உங்களை மூடமுடியாமைக்கு
வெட்கித்து,
மனக்குழிகளில் உங்களை
ஆழப்புதைக்கின்றோம்...
மன்னித்துவிடுங்கள்...

கீதம்
06-01-2011, 10:00 PM
மனக்குழியில் ஆழப்பதித்த வேதனைவிதை
இங்கே வெறுங்கவிதையாய்த் தோற்றம் காட்டினாலும்
அடக்கப்பட்ட வலியும் துயரும்
ஊடே சொல்லிக் குமுறும் எரிமலையின்
அக்கினித் திராவகத் துளிகள்!

அக்னி
07-01-2011, 07:07 AM
எரிமலைக்கும் இனிப்
பயப்படத் தேவையில்லை...
அக்கினிக் குழம்பைக்
கக்கத் தொடங்கையில்,
அதன் சீற்ற வாயில்,
இக்காட்சிகளைத் தூவுங்கள்...
உடனுறைந்து போய்விடும்...

நன்றி கீதம் அவர்களுக்கு...

அக்னி
11-02-2011, 05:03 PM
புரிந்து கொள்ளாத மனது..,
புரிந்து கொல்கின்றது...

எனது என்னும் என் மனதோடு,
எனது என்று மோத முடியாமல் நான்...

அக்னி
11-02-2011, 05:09 PM
இங்கிருந்து... (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=505880#post505880)

சொரியும் பூக்களின் அழகை
ரசிக்கின்றேன்..,
அவற்றின் மரண உதிரலை உணராமலே...

அக்னி
11-02-2011, 05:15 PM
நினைவில்
சிற்பமாய்
காயம்
சிற்பமாய்
நினைவில்

அமரன்
12-02-2011, 11:34 AM
நினைவு இல்
சிற்பமாய்க்
காயம்
சிற்பமாய்
நினைவு இல்.

எப்பூடி...?

அக்னி
12-02-2011, 12:16 PM
நினைவு இல் சிற்ப(ம்) மாய்க்காயம்...

இப்பூடி...?

அக்னி
28-02-2011, 09:48 PM
போகாமலே எப்படித் தொலைந்தது...
வாழ்வு
முடியுமிடத்தில்
வாழ்வு

அக்னி
30-03-2011, 12:59 PM
உன்
முகபாவம் ரசித்தேன்...
உன்
அகபாகம் வரத் தவித்தேன்...
உன்
அகம்பாவம் சகித்தேன்...
உன்
அகபாவம் வரத் தகிக்கின்றேன்...

கீதம்
31-03-2011, 04:51 AM
உன்
முகபாவம் ரசித்தேன்...
உன்
அகபாகம் வரத் தவித்தேன்...
உன்
அகம்பாவம் சகித்தேன்...
உன்
அகபாவம் வரத் தகிக்கின்றேன்...

அடப்பாவம்
என்று நினைத்தேன்.
ஐயோபாவம்
என்று ரசித்தேன்.:)

அக்னி
21-07-2011, 03:34 PM
மனம் பதிந்த வடுக்கள்,
எத்துணை முயன்றும்
தடுக்க முடியுதில்லை...


வகைதொகை
வரையறை
தங்குதடை
தடங்கல்மடங்கல்
இன்றி வன்முறை...

வற்றிவறண்டு
வாடிவதங்கி
சவண்டுதுவண்டு
சாகப்பிழைக்க
நம் தலைமுறை...

Nivas.T
21-07-2011, 04:14 PM
மனம் பதிந்த வடுக்கள்,
எத்துணை முயன்றும்
தடுக்க முடியுதில்லை...

இதற்குத்தான் கேட்கிறேன்
ஒரு கால எந்திரம் :frown:

அக்னி
21-04-2012, 05:24 PM
அழகைத் தேடினேன்,
என் கன்னத்தோடு
ஈரத்தைப் பகிர்ந்துகொள்ள...

ஒரு விரல் தன்னும்
கிட்டவில்லை,
என் கன்னம்தாண்டியும்
கண்ணீர் தட்ட...

அழ கை தேடிய
என்னைப்பார்த்து
சிரிக்கின்றது
அழுகை...

கீதம்
22-04-2012, 01:14 AM
அழுகை வரும்போது அழு.
கை வரும்.
போதும் அழுகை எனச்
சிரிக்கும்போதும் அழு.
கண்ணீர் இனித்துக் கரிக்கும்.

jayanth
22-04-2012, 02:41 AM
அழகு...!!!

கலைவேந்தன்
22-04-2012, 03:31 AM
வார்த்தை விளையாட்டுகள் மிக நன்று..!!

அக்னி
16-05-2012, 05:18 PM
நன்றி அன்பு உறவுகளே...

அக்னி
16-05-2012, 05:28 PM
யாரையும் வேதனைப்படுத்த நான் நினைப்பதில்லை...
இது வேதனைக்கு ஏனோ புரியவில்லை...

சிவா.ஜி
16-05-2012, 07:20 PM
அப்படித்தான் அக்னி....புரியாவிட்டாலும் தொடர்ந்து வாழும் வாழ்க்கைக்குத்தான் அர்த்தமிருக்கிறது. தொடருங்கள்....அருமையான வரிகள்.

lenram80
29-06-2012, 12:49 PM
அக்னித் துளிகள் அல்ல! - இவை
சமூகத்தை திருத்த கட்டப்படும்
மக்கள் மன்றத்தின்
அக்னித் தூண்கள்!

இவை அக்னி துளிகள் அல்ல!
இந்த சமூகத்தின் மீது
சிந்தப்படும் கண்ணீர் துளிகள்!

சிந்துக இன்னும் கவிதைத் துளிகளை!
ஏனென்றால், அக்னிக்கு மட்டும் தான்
குஞ்சென்றும், மூப்பென்றும் இல்லை!

அக்னி
13-07-2012, 06:12 PM
எனக்கு என்றாகையில்
தவறித் தாண்டிய தருணங்கள்
என்றானது..,

என்னால் என்றாகையில்
தவறில் தாண்டிய தருணங்கள்
என்றானது...

Hega
13-07-2012, 06:16 PM
எனக்கு எனும் போதும் என்னால் எனும் போதும் நம் பார்வையே ஒரே கணத்தில் மாறுபடுவதை ஒரே எழுத்தில் வேறுபடுத்தி காட்டிய அக்னித்துளிகள் அருமை அக்னி சார்.

சுகந்தப்ரீதன்
13-07-2012, 07:29 PM
எனக்கு என்றாகையில்
தவறித் தாண்டிய தருணங்கள்
என்றானது..,

என்னால் என்றாகையில்
தவறில் தாண்டிய தருணங்கள்
என்றானது...

வார்த்தை விளையாட்டில் ஒரு வாழ்வியல் நியதி...!!
அகநோக்கும் புறநோக்கும் சமநோக்கானால் சரியாகிவிடும் இது..!!:)

ஆழ்ந்த கருத்துசெறிவு கொண்ட அக்னிதுளிகள்.. அசத்துங்கப்பு...!!:icon_b:

தாமரை
13-07-2012, 08:27 PM
என்+ அக்கு; இங்கே அக்கு - சிறிய பாகம்...

என்+ஆல்; இங்கே ஆல் - விரிந்து பரந்தது..

அதுதான் அக்னி வித்தியாசம்..