PDA

View Full Version : காதலுக்கே காதல்

இனியவள்
07-08-2007, 05:11 PM
பூமியின் சுழற்சியில்
சுழன்று கொண்டிருக்கின்றது
காலமும் வாழ்க்கைச் சக்கரமும்
உன் சுழற்ச்சியில் சுழன்று
கொண்டிருக்கிறது எனது வாழ்வின்
அஸ்திவாரம்...

சூரியனின் உதயத்தில் தாவரங்களின்
ஜீவனம்..
உன் உற்சாகத்தில் என் வாழ்வின்
ஜீவன்...

மழையை தாங்கும் பூவிதழ்கள் போல்
உன் புன்னகையை தாங்குகின்றது
என் புன்னகைகள்....

இயற்கையில் இருந்து பெரும் வர்ணங்கள் போல்
உன்னில் இருந்து பெற்ற இனிமைகளைக்
கொண்டு மாளிகை செய்கின்றேன் நீ
இனிதாய் வசித்திட....

கண்ணின் கருமணியாய்
நாளங்களின் துடிப்பாய்
எனக்குள் வீற்றிருக்கின்றாய்...

பனித்துளிகளை தாங்கும் புல்நுனியின்
அழகில் மயங்கிய வேளையில் என்னை
உன் அன்பென்னும் ஆயுதம் கொண்டு
என்னை மயக்க வந்த மாயக் கண்ணனே...

காற்றின் உருவம் கூட தெரிகின்றதே
உன்னைக் கண்டவுடன்...

சூரியன் வானத்தில் ஒர் புள்ளியாய்
நீயோ என் வாழ்வின் புள்ளியாய்...

பூவுக்கே பூக் கொடுக்க நான் என்ன
முட்டாளா என்கின்றாய் என்னிடம்
காதலுக்கே காதலைக் கொடுக்க
நான் ஒன்றும் அறிவிலி இல்லையே...

என் காதலே நீயானபோது
எப்படி என் காதலை உன்னிடம்
கொடுக்க முடியும்....

என் விழியோரத்தில் அரும்பும்
புன்னகை என் காதலை உன்னிடம்
கூற உன் மெளனம் உன் காதலை
உரக்கச் சொல்லிச் சென்று விட்டது
என்னிடம்....

மெளனமே என்னோடு உரக்கப் பேச
நான் பேசும் வார்த்தைகள் அனைத்தும்
கரைந்து சென்றன காற்றோடு - உன்
மெளனத்திற்கு முன்னால்....

அக்னி
07-08-2007, 05:18 PM
என் வாழ்வில் நீ புள்ளியாய் போனாய்...
என் வசந்தத்திற்கே ஆனாய்
முற்றுப்புள்ளியாய்...
உன் வாழ்வில் நான் புல்லாய்ப் போனேன்...
உன் மிதிகளை ஏந்திப் பசுமையாய்ப்
பூரிப்பேன்...
என் மனம் மட்டும் புள்ளாய்...
உன் மௌனம் கரைந்த,
காற்றில் சிறகுவிரித்து, காதல் தேடி...
பறந்துகொண்டே...

பாராட்டுக்கள் இனியவளே...

ஓவியன்
07-08-2007, 05:19 PM
அடடே வித்தியாசமான கற்பனை இனியவள்!

பூவுக்கே பூ!
காதலுக்கே காதல்!

எப்படி இனியவள் உங்களாலே இப்படியெல்லாம் எழுத முடிகிறது!

கவிதை அழகு − அதைப் படைத்த உங்களுக்கு பத்தாயிரம் இ−பணங்கள் பரிசு!. :sport-smiley-019:

அன்புரசிகன்
07-08-2007, 05:22 PM
மெளனமே என்னோடு உரக்கப் பேச
நான் பேசும் வார்த்தைகள் அனைத்தும்
கரைந்து சென்றன காற்றோடு - உன்
மெளனத்திற்கு முன்னால்....

ஒலிபெருக்கியில் கேட்க்காது
மெளன மொழியில் கேட்க்கிறது...
காதலின் சிறப்பம்சம்...
காதலை காதலித்த இனியவளுக்கு ஒரு O.

அக்னி
07-08-2007, 05:23 PM
கவிதை அழகு − அதைப் படைத்த உங்களுக்கு பத்தாயிரம் இ−பணங்கள் பரிசு!. :sport-smiley-019:

நானும் ஏதோ கிறுக்கியுள்ளேன்... எனக்கேதுமில்லையா..?

அன்புரசிகன்
07-08-2007, 05:25 PM
நானும் ஏதோ கிறுக்கியுள்ளேன்... எனக்கேதுமில்லையா..?

அதுக்கு முதலில் உங்களிடம் உள்ள 4000 சொச்சத்தை அவருக்கு கொடுத்தால் அப்படியே திருப்பி அனுப்புவார். :icon_shout:

அக்னி
07-08-2007, 05:27 PM
அதுக்கு முதலில் உங்களிடம் உள்ள 4000 சொச்சத்தை அவருக்கு கொடுத்தால் அப்படியே திருப்பி அனுப்புவார். :icon_shout:
ஓஓஓஓ....
அதுவா இது...?

ரிஷிசேது
07-08-2007, 05:28 PM
கண்ணின் கருமணியாய்
நாளங்களின் துடிப்பாய்
எனக்குள் வீற்றிருக்கின்றாய்...

மிக அருமையான கவிதை வரிகள்...
வாழ்த்துக்கள்

ஓவியன்
07-08-2007, 05:30 PM
அதுக்கு முதலில் உங்களிடம் உள்ள 4000 சொச்சத்தை அவருக்கு கொடுத்தால் அப்படியே திருப்பி அனுப்புவார். :icon_shout:

ஹீ!,ஹீ!
அக்னி உம்மோட இ−பணம் எல்லாத்தையும் அப்படியே அனுப்பி வையும் ஒரு பைசா குறையாம திருப்பி அனுப்பி வைக்கிறேன்!. :icon_dance:

அமரன்
07-08-2007, 07:33 PM
கணப்பொழுதில் நீங்கள் பதிக்கும் கவிதைகளுக்கு பின்னூட்டமிட்டே எனது விரல் ரேகைகள் தேய்ந்துசெல்கின்றன. அழகிய கவிதை வாழ்த்துக்கள். (மன்னிக்கவும் மேலோட்டமாகவே கவிதையைப் படித்தேன், ஆழ்ந்து படிக்கமுடியாத நிலை, இத்திரியில் மீண்டும் சொல்வேன்)

இனியவள்
08-08-2007, 07:25 AM
பாராட்டுக்கள் இனியவளே...

நன்றி அக்னி

பதில் கவிதைக்கு வாழ்த்துக்கள் அக்னி :nature-smiley-002:

இனியவள்
08-08-2007, 07:28 AM
அடடே வித்தியாசமான கற்பனை இனியவள்!

பூவுக்கே பூ!
காதலுக்கே காதல்!

எப்படி இனியவள் உங்களாலே இப்படியெல்லாம் எழுத முடிகிறது!

கவிதை அழகு − அதைப் படைத்த உங்களுக்கு பத்தாயிரம் இ−பணங்கள் பரிசு!. :sport-smiley-019:

நன்றி ஓவியரே

ஹீ ஹீ ஓவியரே இது நல்லா இல்லை இப்படி குடுத்ததைத்
தந்திட்டீங்களே

இனியவள்
08-08-2007, 07:30 AM
ஒலிபெருக்கியில் கேட்க்காது
மெளன மொழியில் கேட்க்கிறது...
காதலின் சிறப்பம்சம்...
காதலை காதலித்த இனியவளுக்கு ஒரு O.

நன்றி அன்பு

ஓஓ போட்டு ஓவன்னா
போட மறந்திட போறியள்

இலக்கியன்
08-08-2007, 07:51 AM
அழகான வார்த்தை ஜாலங்கள் விளையாடுகின்றது
உவமானங்கள் மிகவும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

இனியவள்
09-08-2007, 06:13 PM
மிக அருமையான கவிதை வரிகள்...
வாழ்த்துக்கள்

நன்றி ரிஷி...

இனியவள்
09-08-2007, 06:15 PM
கணப்பொழுதில் நீங்கள் பதிக்கும் கவிதைகளுக்கு பின்னூட்டமிட்டே எனது விரல் ரேகைகள் தேய்ந்துசெல்கின்றன. அழகிய கவிதை வாழ்த்துக்கள். (மன்னிக்கவும் மேலோட்டமாகவே கவிதையைப் படித்தேன், ஆழ்ந்து படிக்கமுடியாத நிலை, இத்திரியில் மீண்டும் சொல்வேன்)

நன்றி அமர்..

கவலை வேண்டாம் அமர் மாற்றுக் கை பொருத்தி விடலாம் :whistling:

இன்னும் ஒரு வாரத்திற்கு
மன்றத்திற்கு சமூகம் அளிக்க முடியாது என்று
நினைக்கின்றேன்

இனியவள்
09-08-2007, 06:16 PM
அழகான வார்த்தை ஜாலங்கள் விளையாடுகின்றது
உவமானங்கள் மிகவும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

நன்றி இலக்கியன்

உங்கள் கவிகளில் இருந்து
நிறைய கற்றுக்கொள்ள
வேண்டும்

kalaianpan
11-08-2007, 08:20 AM
காதல்
இதை தோண்டத் தோண்ட புதயலாக வருகிறதே!!!!!
அழகான வரிகள்......
நன்றி.......

இனியவள்
13-08-2007, 06:39 PM
நன்றி கலையன்பன்