PDA

View Full Version : இது காதல் காலம்..!இதயம்
07-08-2007, 10:58 AM
ஆதவன் போகிற போக்கில் என்னை கவி எழுதச் சொல்லி கல்லை வீசிவிட்டு போயிருக்கிறார். ஒரு சத்திய சோதனைக்கு என்னை நானே உட்படுத்தி எழுதிய க(வி)தை இது. படித்துவிட்டு பக்குவம் சொல்லுங்கள். ஆத்திரம் வந்தால் ஆதவனை நாடுங்கள்..!!:icon_dance:

இது காதல் காலம்:

என் மன சாலை ஓரமெங்கும்
இறைந்து கிடக்கும் கனவுப்பூக்கள்
மீண்டும், மீண்டும் பொங்கி சிதறி
சீண்டி சிரிக்கும் கோடி வர்ண சிதறல்கள்

பசித்து புசித்த எனக்கு
ருசிக்க உணவிருந்தும் பசிக்கவில்லை
விழிகள் திறந்திருந்தும் உள்ளுக்குள்
வழிந்தோடும் கனவு ஜாலங்கள்
மொழி கொண்டு சொல்ல இயலாததை
விழி கொண்டு உணர்த்த துடிப்பு

தனிமை பிடிக்கிறது
இருளும் இனிக்கிறது
எழுதி நிறைக்க ஏக்கப்படும் விரல்கள்
புழுதி பறக்க மறையும் உணர்வுகள்
இலக்கை தொட்டுவிட்ட நினைப்பு
இன்னும் முழுமையடையா தவிப்பு

வாழ்க்கை வண்ணமயமாகி போனது
வசந்தத்தின் வாசம் எங்கும் நிறைந்தது

தன் மண்ணை பிரிந்த தமிழனை போல்
உன்னை காணா நொடிகள் நரகம்..!

இப்படி சிலிர்ப்பும், தவிப்பும், துடிப்பும்
இம்சையாய் மாறி.. மாறி..என்னுள்..!
என்ன நேர்ந்தது எனக்கு?

ஒரு சொல்
வாழ்வை பூக்க வைத்தது
வசந்தத்தின் வாசல் திறந்தது

"விரும்புகிறேன்" என்று நீ சொன்ன
ஒற்றை சொல்லின் வித்தையா இவை?

இது தான் காதலா..?

ஆஹா..!
இது எனக்கு காதல் காலம்..!

ஷீ-நிசி
07-08-2007, 11:07 AM
மிக நன்றாகவே உள்ளது! இதயம்... நீங்கள் கவிதையிலும் கலக்கலாமே!
வாழ்த்துக்கள்!

இதயம்
07-08-2007, 11:51 AM
ஆஹா..! காதல் கவி இளவரசனிடம் பெற்ற பாராட்டு என்னை குதூகலிக்க வைக்கிறது..! உங்களுக்கு உண்மையிலேயே பெரிய மனசு தான் ஷீ-நிசி. உங்களுடைய கவிப்புலமைக்கு முன்னால் வைத்து நான் எழுதியதை நன்றாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறீர்கள். இந்த ஊக்கம் என்னை நிச்சயம் உற்சாகப்படுத்தி எழுத வைக்கும். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..!

அமரன்
07-08-2007, 11:59 AM
இளசு அண்ணா ஒரு பதிவில் குறிப்பிட்டு இருப்பார். கவிதைக்குழந்தைகள் நடைபயில்வது காதல் கவிதைகளில். அதுபோல இதயமும் கன்னிக்கவிதையை கன்னியின் ஒற்றைசோல்லில் படைத்து அமர்க்களமாக தனது கவிப்பயணத்தை ஆரம்பித்துள்ளார். அதற்காக அவரை வாழ்த்தி கவிக்களத்திற்கு வரவேற்கின்றேன்.

காதல் வந்தால் என்ன என்ன நடக்கும்.
பாகல் இனிக்கும் கரும்பு கசக்கும்.
பாம்பு சிரிக்கும் பல்லி சீறும்.
இரவு நீளும் பகல் குறையும்....
அத்துடன் இதயமும் சிலவற்றை சேர்த்துள்ளார்.
தனிமை பிடிக்கிறது இரவு இனிக்கிறது.
எண்னக்குதிரை சிட்டாக பின்னால் பறக்க
கைவிரல் துடிக்கிறது கவிதை எழுத.
கடிவாளம் போடாது தொடர்ந்து எழுதுங்கள் இதயம்.
அதனையும் இக்கவிதையும் நான் விரும்புகின்றேன்.

சிவா.ஜி
07-08-2007, 12:04 PM
அட்டகாசமான ஆரம்பம். அசத்திட்டீங்க. எல்லோரும் இதயம் சொல்வதைத்தான் காதலாய் சொல்வார்கள்..இங்கு இதயமே நேரடியாக தன் காதலை கவி வடித்துள்ளது.
அழகான சொற்கோவை, வித்தியாசமான புலம் பெயர்ந்த தமிழரின் உவமை,எதுகைகளும் மோனைகளுமாக தளும்பித் துடிக்கும் செம்மையான ஒரு கவிதை.வாழ்த்துக்கள். மேலும் தொடருங்கள்.

அன்புரசிகன்
07-08-2007, 12:06 PM
உங்க காதல் ஓகே ஆகிட்டுதா?
இப்போ நல்லா பசிக்கு சாப்பிடுகிறீர்களா?
இரவில் நித்திரை வருகிறதா?.....
இப்போதே தூங்கி எழுந்துவிடுங்கள்.
சாப்பிட்டு ஆறுங்கள்...
நம்ம அக்னி சொன்னாரு.... அப்புறமா ஒன்னுமே செய்யமுடியாதாம்....

(சும்மா...)

எனக்கு புரியும் படி எழுதியிருக்கிறீர்கள். அதுக்கு ஒரு O...

பாராட்டுக்கள் இதயமே

இதயம்
07-08-2007, 12:12 PM
இளசு அண்ணா ஒரு பதிவில் குறிப்பிட்டு இருப்பார். கவிதைக்குழந்தைகள் நடைபயில்வது காதல் கவிதைகளில். அதுபோல இதயமும் கன்னிக்கவிதையை கன்னியின் ஒற்றைசோல்லில் படைத்து அமர்க்களமாக தனது கவிப்பயணத்தை ஆரம்பித்துள்ளார். அதற்காக அவரை வாழ்த்தி கவிக்களத்திற்கு வரவேற்கின்றேன்.

காதல் வந்தால் என்ன என்ன நடக்கும்.
பாகல் இனிக்கும் கரும்பு கசக்கும்.
பாம்பு சிரிக்கும் பல்லி சீறும்.
இரவு நீளும் பகல் குறையும்....
அத்துடன் இதயமும் சிலவற்றை சேர்த்துள்ளார்.
தனிமை பிடிக்கிறது இரவு இனிக்கிறது.
எண்னக்குதிரை சிட்டாக பறக்க
கைவிரல் துடிக்கிறது கவிதை எழுத.
கடிவாளம் போடாது தொடர்ந்து எழுதுங்கள் இதயம்.
அதனையும் இக்கவிதையும் நான் விரும்புகின்றேன்.

அய்யய்யோ..!! எனக்கு புல்லரிக்குது..!! கவிதைன்னு நான் எழுதினதுக்கு இவ்வளவு வரவேற்பா..? அதுவும் அமரனிடமிருந்தா..?? இளசு அவர்கள் சொன்னது சரிதான். கவி எழுத கன்னி முயற்சியை நினைக்கும் போது மண்டைக்குள் மணி அடிப்பது காதல் பற்றி எழுத தான்.:209: அது ஏன்னு தெரியலை.!! அதை பற்றி எழுதினால் யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதாலா..?

கவிக்குதிரையின் கடிவாளம் முன்பே கழற்றி போடப்பட்டுவிட்டதால் என்னை விடு என்று முன் கால் இரண்டை தூக்கி பாய துடிக்குது..!! யார் யாரெல்லாம் பாதிக்கப்பட போறாங்களோ? பாவம்..!! நன்றி அமரன்..!!

இதயம்
07-08-2007, 12:15 PM
அட்டகாசமான ஆரம்பம். அசத்திட்டீங்க. எல்லோரும் இதயம் சொல்வதைத்தான் காதலாய் சொல்வார்கள்..இங்கு இதயமே நேரடியாக தன் காதலை கவி வடித்துள்ளது.
அழகான சொற்கோவை, வித்தியாசமான புலம் பெயர்ந்த தமிழரின் உவமை,எதுகைகளும் மோனைகளுமாக தளும்பித் துடிக்கும் செம்மையான ஒரு கவிதை.வாழ்த்துக்கள். மேலும் தொடருங்கள்.

கவிக்கணைகளால் இடைவிடாது தாக்குபவர் சிவா.ஜி. அவருடைய கற்பனை திறனும், கவித்திறனும் நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் போவதை ஒரு வித அச்சத்துடன் பார்ப்பேன். அவரிடமிருந்தும் இக்கவிதைக்கு பாராட்டு..! இதயம் நீ எங்கேயோ போயிட்டே..! :sport-smiley-019:

உங்கள் பாராட்டிற்கு நன்றி சிவா.ஜி..!

ஆதவா
07-08-2007, 01:14 PM
கன்னிக்கவிதை என்பதை ஏற்கமுடியாது. முதல் நான்கு வரிகள் சொல்லிவிடுகிறது. நன்கு எழுதி பழக்கப்பட்ட கவிஞன் என்று.. (அதெப்படிங்க கவிஞன் அப்படீங்கும்போதே பொய் பேச ஆரம்பிக்கிறீங்க?)

சுண்டி இழுக்கும் வெயிலைப் பொருட்படுத்தாது வானில் ஓடித் திரியும் காதலர்களுக்கு வாகனமாய், குடையாய், விழி மீதமர்ந்து செல்லும் இமையாய் காதல் கவிஞர்கள் வலம் வருகிறார்கள்.. கவிஞர்கள் காதல் கவிதை எழுதலாம். ஒரு இதயமே காதல் கவிதை எழுதினால்?

சீண்டி சிரிக்கும் கோடி வர்ண சிதறல்கள்

காதல் சிதறிய பூக்களை காதலி பொறுக்கிக் கொள்ளுவது போல வரிகள் சிதறிய வார்த்தைகளை அள்ளி எடுத்துக் கொள்கிறேன்.

ஆங்காங்கு எதுகை இலக்கணங்கள் எடுபட கவிதை நிலவை பொடிபட வைக்கிறது.

எழுதி நிறைக்க ஏக்கப்படும் விரல்கள்
புழுதி பறக்க மறையும் உணர்வுகள்

உவமைகளில் தெளிவும், ஆழமும்.. உணர்வுகளைக் கொட்டி தனித்தனியே பிரித்தெடுக்கும் விதமும் வரியமைத்து சொல்லிய பாங்கும் மெச்சத் தகுந்தவை. வெறும் வார்த்தைகள் நாற்புறமும் இழைந்தோடும் கவிதைகள் பல கண்டதுண்டு. தேன் ஒழுகும் துளிக்குள்ளே பொத்திய கவிதை இங்கே காண்கிறேன் இதயம் அவர்களே.

தன் மண்ணை பிரிந்த தமிழனை போல்
உன்னை காணா நொடிகள் நரகம்..!

மனம் மறக்காமல் சுட்டுகிறது.... சுடுகிறது. மண்ணை ஒருமுறையாவது முத்தமிடு என்று உண்மைத் தமிழன் உரக்கச் சொல்லுவதாகவே தோன்றுகிறது. என் விடியல் தமிழ்நாடாக இருக்கவேண்டும் என்று ஆதவனை நோக்கிய கட்டளையாகவே தென்படுகிறது.

"விரும்புகிறேன்"

அவள் இதழ் வழி ஒழுகிய அமிர்தம் அல்லவா.. அப்படித்தான் இருக்கும். (பருகத் தேனாம் பருகிய பின் வீணாம்; சிலர் சொல்லுகிறார்கள்) காதல் காலம் உங்களுக்கு மட்டுமல்ல காதல் குடிசையில் கஞ்சி குடிக்கும் பச்சைவர்ண கண்ணர்களுக்கும் அவன் எச்சில் தின்று மடியமர்ந்த ராதைகளுக்கும் தான்....

இனி இதயத்தின் இதமான கவிதைகள் நிறைய காணலாம் என்று நினைக்கிறேன்..

வாழ்த்துக்கள் இதயம்... (உண்மையிலேயே சிலிர்த்துவிட்டேன்.)

ஓவியன்
07-08-2007, 02:18 PM
ஆகா இதயம் உங்கள் மேல் எனக்கு ஒரே கோபம்.........
இந்த வரிகளை இதுவரை உங்களுடனும் உங்கள் காதம் மனைவியுடனும் மட்டும் ஒளித்து வைத்திருந்தமைக்காக............
வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஆதவனுக்கு:nature-smiley-008: நன்றிகள் கோடி........

எழுதி நிறைக்க ஏக்கப்படும் விரல்கள்
புழுதி பறக்க மறையும் உணர்வுகள்

ஆகா இதயம்!, அருமை!
தேர்ந்தெடுத்த உவமைகள் சொல்கின்றன தேர்ந்தெடுதவரின் லாவகம்.........

இலக்கை தொட்டுவிட்ட நினைப்பு
இன்னும் முழுமையடையா தவிப்பு

பெரும்பாலான காதலர்களின் எண்ணவோட்டம் மிகத் துல்லியமாக சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.

ஒரு சொல்
வாழ்வை பூக்க வைத்தது
வசந்தத்தின் வாசல் திறந்தது

இந்த ஒரு சொல்லாலே வசந்தத்தின் வாயிலைத் திறப்பதற்காக எத்தனை பேர் தவமிருக்கின்றனர், ஆனால் எல்லோருக்கும் அந்த சாவி கிடைப்பதில்லை.

ஆனால் சாவி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் காதல் மட்டும் சாவதில்லை........!

மனதார பாராட்டுகிறேன் இதயம் ஓர் அருமையான காதற் கவிதைக்கு.........
இன்னும் இன்னும் நிறைய எழுதுங்க இதயம்..........! :4_1_8:

இதயம்
07-08-2007, 02:45 PM
ம்ஹூம்..! எனக்கு என்னவோ இது நல்லா படலே..! என்னை சுத்தி யாரோ சதி வலை பின்னுற மாதிரியும், முதுகுக்கு பின்னாடி திருப்பாச்சி அருவாள சொறுகி வச்சிக்கிட்டு என்னையே முறைக்கிற மாதிரியுமே தெரியுது.! ஒரு மனுஷனை சாய்க்க இத்தனை பேரா..? புழு கூட்டை கலைக்க புல்டோசரா..?? வேணாம்.. மக்கா..!! இப்படி ஏத்திவிட்டு, ஏத்தி விட்டு காதல் கவிஞன் பட்டம் கொடுத்து, தாடை சொறிய யோசிக்க சொல்லி, தாடி வளக்க வச்சி என்னை காலி பண்ணத்தானே இத்தனை கங்கணமும்..?!!

ஐயா ஆதவா..மக்களை கவிதை எழுத வெச்சா இவ்வளவு பணம்னு யாராவது ஏதாவது டெண்டர் எதுவும் விட்டிருக்காங்களா உங்ககிட்ட..! ஏன் இப்படி கண்ணுல பாக்குறவனையெல்லாம் கவிஞனாக்கிறனும்னு கொலை வெறில அலையறீங்க..! விட்டா நம் மன்றத்துல கீழ உள்ள மாதிரி ஒரு புது திரி ஒண்ணு கொளுத்திருவீங்க போலிருக்கே..!

திரியோட பேரு: நீங்கள் கவிஞனாக வேண்டுமா..?
திரியின் உள்ளே: இங்கே ஆர்டரின் பேரில் உங்களை சிறந்த முறையில் கவிஞனாக்கப்படும். தகுதி எதுவும் தேவையில்லை. உரிமை: ஆதவா.

இந்த அயிரை மீனுக்கு அண்ட்ராயர் போட்டுவிடுறவரு என்னடான்னா ஓவரா அள்ளி விட்ருக்கார். அவர் சொன்ன பிறகு தான் எனக்கு அந்த கவிதைல அத்தனை அர்த்தம் இருக்குன்னு தெரிய வந்துச்சு..!! இதுக்கெல்லாம் மயங்கற ஆளில்லை நான். உங்களைப்பத்தி தெரியாது...? அயிரை மீனை அபேஸ் பண்றதுக்கு முன்னாடி மைக் பிடிக்காத குறையா "என் இனிய அயிரை மீனே"ன்னு அட்டகாச உரை நிகழ்த்துவீங்க..!!

என்னவோ போங்க... இன்னைக்கு என் தூக்கம் போச்சு.. இதானே உங்களுக்கு வேணும்..?!! இப்ப திருப்தியா..??

aren
07-08-2007, 02:47 PM
காதல் வந்தால்
கவிதையும் தானாக வரும்
உங்களுக்கு காதல் வந்ததால்
கவிதை வந்ததில் தவறேது

அருமையாக எழுதுகிறீர்கள். இன்னும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். நீங்களும் கவிச்சமரில் வந்து கலக்குங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஓவியன்
07-08-2007, 03:25 PM
இந்த அயிரை மீனுக்கு அண்ட்ராயர் போட்டுவிடுறவரு என்னடான்னா ஓவரா அள்ளி விட்ருக்கார். அவர் சொன்ன பிறகு தான் எனக்கு அந்த கவிதைல அத்தனை அர்த்தம் இருக்குன்னு தெரிய வந்துச்சு..!! இதுக்கெல்லாம் மயங்கற ஆளில்லை நான். உங்களைப்பத்தி தெரியாது...? அயிரை மீனை அபேஸ் பண்றதுக்கு முன்னாடி மைக் பிடிக்காத குறையா "என் இனிய அயிரை மீனே"ன்னு அட்டகாச உரை நிகழ்த்துவீங்க..!!.??

ஹீ!,ஹீ!

அது யாருங்க இதயம்!

நம்ம அமரன் தானே! :sport-smiley-018:

இனியவள்
07-08-2007, 05:20 PM
அருமை இதயம்

கன்னிக் கவிதை
அள்ளி எடுத்துச் சென்று
விட்டது எங்கள் இதயங்களை


வாழ்த்துக்கள் இதயம்
முதற்கவி முத்தாய்
கோர்த்துச் சென்று
விட்டது வைரமாலையை

theepa
08-08-2007, 10:00 PM
ஆகா அருமை அருமை உங்கள் கவி பாராட்டுக்கல் நண்பரே காதல் காலம் துடங்கிவிட்டது உங்கள் மனதில் இனி ஒரே கவியாய் கிருக்கி தள்ள போரீர்கள் போல வாழ்த்துக்கள் தொடர்ந்து இன்னும் படையுங்கள் புதுசு புதுசாக

ஓவியா
09-08-2007, 04:36 AM
அடடா!!!!!!!!!!!!! கவிதை தூள்.


நாளை வந்து விமர்சிக்கிறேன்.

இதயம்
09-08-2007, 04:52 AM
மிக நன்றாகவே உள்ளது! இதயம்... நீங்கள் கவிதையிலும் கலக்கலாமே!
வாழ்த்துக்கள்!

உங்களிடம் நான் வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவசியம் ஒன்று இருக்கிறது. இந்த கவிதையை எழுதி 2,3 நாட்களுக்கு பிறகு தான் எனக்கு முன்பே ஏறக்குறைய இதை தலைப்பில் (காதல் காலம்) அருமையான கவிதையை வடித்திருந்தீர்கள் என்பது தெரியவந்தது. உங்கள் தலைப்பை அனுமதியில்லாமல் நான் சுட்டது போன்ற குற்ற உணர்ச்சியை எனக்கு ஏற்படுத்திவிட்டது. அதைப்பற்றி பொருட்படுத்தாமல், என் கவிதைக்கு முதல் பின்னூட்டம் இட்ட உங்கள் பெருந்தன்மை என்னை வியப்பிலாழ்த்துகிறது.

உங்களுடைய அன்பிற்கு என் நன்றிகள் ஷீ−நிசி..!

இதயம்
09-08-2007, 05:05 AM
காதல் வந்தால்
கவிதையும் தானாக வரும்
உங்களுக்கு காதல் வந்ததால்
கவிதை வந்ததில் தவறேது

அருமையாக எழுதுகிறீர்கள். இன்னும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். நீங்களும் கவிச்சமரில் வந்து கலக்குங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

நிச்சயமாக..! காதல் என்பது ஒரு அற்புத உணர்வு. கவியரசு வைரமுத்து சொன்ன "காதலித்து பாருங்கள், கவிதை வரும்" என்பது மிக சத்தியமான வார்த்தைகள்.! இந்த காதல் என்பது திருமணத்திற்கு முந்தையது பற்றியது மட்டுமல்ல. திருமணத்திற்கு பிறகும் அந்த காதல் தொடர வேண்டும். அப்படி காதலித்தால் நிச்சயம் கவிதை வரும். காதல் கவிதை எழுத வார்த்தைகளை தேட வேண்டியதில்லை. மனம் கவர்ந்தவளை இதயத்தில் இருத்தி, மனதில் பட்டதை மானாவாரியாக கிறுக்குங்கள். அதை படித்துப்பாருங்கள். அட.. கவிதை..! அப்படியான ஒரு கிறுக்கல் தான் கவிதையாக உங்கள் முன் ஊர்வலம் வருகிறது.

உங்களின் அங்கீகாரத்திற்கு என் அன்பு கலந்த நன்றிகள்..!

இதயம்
09-08-2007, 05:06 AM
ஹீ!,ஹீ!

அது யாருங்க இதயம்!

நம்ம அமரன் தானே! :sport-smiley-018:

சிம்ரனோடு சிலோனில் லூட்டியடித்தவரை அப்படி தவறாக சொல்லாதீர்கள்..!!:sport-smiley-014: :sport-smiley-014:

அமரன்
09-08-2007, 09:41 AM
சிம்ரனோடு சிலோனில் லூட்டியடித்தவரை அப்படி தவறாக சொல்லாதீர்கள்..!!:sport-smiley-014: :sport-smiley-014:

சிம்ரனா.....ஓல்டுமங் வேணாங்க...

இதயம்
09-08-2007, 09:51 AM
சிம்ரனா.....ஓல்டுமங் வேணாங்க...

அவர் மட்டும் புதுசாக்கும்..??:medium-smiley-029: !!

ஓவியா
15-08-2007, 12:28 AM
இது காதல் காலம்:

என் மன சாலை ஓரமெங்கும்
இறைந்து கிடக்கும் கனவுப்பூக்கள்
மீண்டும், மீண்டும் பொங்கி சிதறி
சீண்டி சிரிக்கும் கோடி வர்ண சிதறல்கள்

பசித்து புசித்த எனக்கு
ருசிக்க உணவிருந்தும் பசிக்கவில்லை
விழிகள் திறந்திருந்தும் உள்ளுக்குள்
வழிந்தோடும் கனவு ஜாலங்கள்
மொழி கொண்டு சொல்ல இயலாததை
விழி கொண்டு உணர்த்த துடிப்பு

தனிமை பிடிக்கிறது
இருளும் இனிக்கிறது
எழுதி நிறைக்க ஏக்கப்படும் விரல்கள்
புழுதி பறக்க மறையும் உணர்வுகள்
இலக்கை தொட்டுவிட்ட நினைப்பு
இன்னும் முழுமையடையா தவிப்பு

வாழ்க்கை வண்ணமயமாகி போனது
வசந்தத்தின் வாசம் எங்கும் நிறைந்தது

தன் மண்ணை பிரிந்த தமிழனை போல்
உன்னை காணா நொடிகள் நரகம்..!

இப்படி சிலிர்ப்பும், தவிப்பும், துடிப்பும்
இம்சையாய் மாறி.. மாறி..என்னுள்..!
என்ன நேர்ந்தது எனக்கு?

ஒரு சொல்
வாழ்வை பூக்க வைத்தது
வசந்தத்தின் வாசல் திறந்தது

"விரும்புகிறேன்" என்று நீ சொன்ன
ஒற்றை சொல்லின் வித்தையா இவை?

இது தான் காதலா..?

ஆஹா..!
இது எனக்கு காதல் காலம்..!


கவிதை பிரமாத*ம். மிகவும் ரசித்தேன். அழகிய தமிழ். சொன்ன விதம் அப்படியே காதலை உணர்ந்து எழுதிய வைரவரிகள் போல் ஜொலிக்கின்றது. ந*ன்றி.


கடைவார் தன் விழிக் கொண்டு − உன்
இதயத்தில் பார்வையாலே கடைய
சட்டியில் இருக்காது, அகப்பையில் வராது
ஆனால் அமிரதம் உயிரில் கசியுமாம்
கண்களுக்கும் தெரியாது, வாய்க்குள்ளும் போகாது
ஆனால் நாவில் இனிக்குமாம். :icon_give_rose::icon_give_rose:

இலக்கியன்
15-08-2007, 08:41 AM
ஆகா அழகான வரிகள் நளினம் செய்கின்றது தொடரட்டும் வாழ்த்துக்கள்

பூமகள்
20-09-2007, 04:50 AM
அற்புதம் இதயம் அண்ணா.
உங்களின் அழகான இதயத்தில் இப்படி ஒரு கவிதையை இத்தனை நாள் ஒளித்துவைத்துவிட்டீர்களே???!!!
அபாரமான வார்த்தைக் கையாடல்... இதை உங்களின் கன்னிக்கவி என்றால் யாரும் நம்புவது கடினமே..!!
தொடர்ந்து கலக்குங்க அண்ணா.

பென்ஸ்
20-09-2007, 05:01 AM
காதல்...
காதல்...
சொல்லும் போதே எத்துனை அழகான ஒரு உணர்வு..
இந்த உணர்வு வந்துவிட்டால்
தீயில் குளிக்கலாம்
தீயதையும் ரசிக்கலாம்

பல் தேய்ப்பது கூட கவிதையாகும்...
இந்த நோய் வந்துவிட்டால், மருந்து ... தெரியலையேபா..!!!

இந்த நோய் உங்கள் கவிதை வழி என்னை தொற்றும் முன் ...

வாழ்த்துகள் கூறி விடை பெறுவது

சுகந்தப்ரீதன்
26-09-2007, 03:41 AM
வாழ்த்துக்கள் ஆதவரே... ஒளிந்து க்டந்த கவி இதயத்தை வெளியே வரவைத்ததற்க்கு.... அருமையான கவிதிறன் உள்ளது எங்களின் கவி இதயமே... தொடருங்கள்... வாழ்த்துக்கள்...!

மயூ
26-09-2007, 04:04 AM
காதல்...
காதல்...
சொல்லும் போதே எத்துனை அழகான ஒரு உணர்வு..
இந்த உணர்வு வந்துவிட்டால்
தீயில் குளிக்கலாம்
தீயதையும் ரசிக்கலாம்

பல் தேய்ப்பது கூட கவிதையாகும்...
இந்த நோய் வந்துவிட்டால், மருந்து ... தெரியலையேபா..!!!

இந்த நோய் உங்கள் கவிதை வழி என்னை தொற்றும் முன் ...

வாழ்த்துகள் கூறி விடை பெறுவது
ஆகா.. ஓஹோ.. இப்படி விமர்சனம் வாசிப்பதே தனி சந்தோஷம்தான்....

இதயம்... ஆதவனால் கவிஞரானவர் பட்டியலில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்!!! :icon_b:

ஓவியன்
26-09-2007, 04:09 AM
இதயம்... ஆதவனால் கவிஞரானவர் பட்டியலில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்!!! :icon_b:

உண்மைதான் மயூ இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகட்டும்....!! :)

ஜெயாஸ்தா
07-10-2007, 10:51 AM
பொதுவிவாதங்கள் அலசல்களின் மூலம்தான் முதன் முதலாய் உங்களை அடையாளம் கண்டுகொண்டேன். அங்கே தங்களின் சரளமான எழுத்து, கருத்து, சொல்லாட்சி ஆகியவைகளில் பிரமித்துப்போயிருக்கிறேன்.

காதல் கவிதையில் கலக்கியிருக்கிறீர்கள் இதயம். எப்போது நிகழ்ந்த சுக நினைவுகளை மீண்டுமொருமுறை அசைபோட வைத்துவிட்டீர்கள்.