PDA

View Full Version : மானோ



இலக்கியன்
07-08-2007, 08:41 AM
http://img339.imageshack.us/img339/4006/naamlooslq2.png (http://imageshack.us)

மார்கழி மாதத்து
மாலை நேரத்தில்
மலர்விழி உன்னை
மலர்த்தோட்டம்தனில் கண்டேன்.....

மழைத்துளியில் நீயும்
மயங்கி விளையாடி
மலர்க்கூந்தல் கலைந்து
மயங்கிநின்ற வேளையில்.....

மலர்க்கூட்டங்களில்
மறைந்திருந்து பார்த்தேன்....
மலர்போன்ற உன் அழகை
மரகதமே உன்னையடி.....

மறக்கவே முடியவில்லை
மயில் போன்ற உன் நடையும்
மல்லிகைக்கொடியிடையும்

மன்மதன் அவன் உன் அழகில்
மயங்கிய நின்று...

மதியென விழித்துவிட்டேன்
மான்விழியாள் உனைக்கண்டு.....

புள்ளிமான் போல
நாணம் கொண்டு
ஓடியே மறைந்துபோனாள்
என் இதயம் திருடிக்கொண்டு
தேடினேன் காணவில்லை

மாரிசன் மாறிவந்த
பொன்மான் அவள்தானே?

அமரன்
07-08-2007, 08:50 AM
மாரீசன் மாறி வந்த மாயமானா அவள்.
மலர்ச்சோலையில் கண்ட ஒரு மலரைத்தேடும் இலக்கியன் படைத்த கவிதை அழகு.

இலக்கியன்
07-08-2007, 09:03 AM
மாரீசன் மாறி வந்த மாயமானா அவள்.
மலர்ச்சோலையில் கண்ட ஒரு மலரைத்தேடும் இலக்கியன் படைத்த கவிதை அழகு.

உங்கள் அழகான விமர்சனத்துக்கு நன்றி அமரன்

இனியவள்
07-08-2007, 04:44 PM
கவிதை அழகு இலக்கியன் வாழ்த்துக்கள்

இலக்கியன்
08-08-2007, 07:58 AM
கவிதை அழகு இலக்கியன் வாழ்த்துக்கள்

உங்கள் கருத்துக்கு நன்றி இனியவள்

தீபா
08-08-2007, 01:59 PM
மயிலையும்
மல்லிக் கொடியையும்
வம்புக்கிழுத்ததும் போதும்
புதுமை தேடுங்கள்.

மகர மோனைகள்
மயக்குகின்றன
படிக்கும்போதே..

இலக்கியன்
08-08-2007, 02:49 PM
மயிலையும்
மல்லிக் கொடியையும்
வம்புக்கிழுத்ததும் போதும்
புதுமை தேடுங்கள்.

மகர மோனைகள்
மயக்குகின்றன
படிக்கும்போதே..

நன்றி புதுமைக்கவிதைகளும் படைக்க முயற்சிக்கின்றேன்
எங்கே போகின்றாய் தமிழா என்ற கவிதை பார்க்கவும்

kalaianpan
11-08-2007, 08:29 AM
சுருங்கச் சொன்னால்....

அழகு....

தொடரட்டும் பணி...

ஓவியன்
13-08-2007, 02:57 AM
இராமயணம் தொடங்கி மதி மயக்கி விதி வசப்படுத்துவதோ இந்த மாங்களின் தொழில்............! :nature-smiley-002:

வாழ்த்துக்கள் இலக்கியன் தொடர்ந்து அசத்துங்கள்!.

இலக்கியன்
13-08-2007, 08:39 AM
சுருங்கச் சொன்னால்....

அழகு....

தொடரட்டும் பணி...

உங்கள் கருத்துக்கு நன்றி கலை அன்பன்

இலக்கியன்
13-08-2007, 08:40 AM
இராமயணம் தொடங்கி மதி மயக்கி விதி வசப்படுத்துவதோ இந்த மான்களின் தொழில்............! :nature-smiley-002:

வாழ்த்துக்கள் இலக்கியன் தொடர்ந்து அசத்துங்கள்!.

ஆம் நண்பனே :icon_good:
கருத்துக்கு நன்றி