PDA

View Full Version : அகதி

இலக்கியன்
07-08-2007, 08:29 AM
அகதிகளாகி
அலைகடல்-ஏறி
அக்கரை சேர்ந்த
ஓடங்களே....

உடமைகள்-இழந்து
உறவினைப்-பிரிந்து
உடல்களைச்-சுமந்த
ஜீவன்களே....

உங்கள் அழுகையின்
கண்ணீர் கடலுடன்-கலந்து
உப்பாய் போனதோ
சொல்லுங்களேன்....

இடை நடுவில்
பகையது வந்து
கதையை முடிக்குது
பாருங்களேன்....

அவர்கள் உதிரங்கள்-பெருகி
கடலுடன் கலந்து
மீன்களும் கலங்குதோ
சொல்லுங்களேன் ....

கரைகள் சேர்ந்த
உயிர்கள் கூட
சுகந்திரமின்றி
முடங்கி இருக்குது
பாருங்களேன்

அகதிகாளாக தமிழ்நாட்டுக்கு வரும் மக்கள் பற்றி இந்த புலம் பெயர்ந்த அகதியின் குரல்

அன்புரசிகன்
07-08-2007, 08:45 AM
நம் சொந்தங்கள் பல அனுபவித்த சோகக்கதையிது...
மனதில் ஆறாத வடுவாக....

சொந்த நாட்டில் அகதியான பெருமை ஈழத்தமிழருக்கு உண்டு... அதை அரங்கேற்றியபெருமை இலங்கை அரசுக்கு...

உணர்ச்சிபூர்வ வரிகளுக்கு பாராட்டுக்கள் இலக்கியன்...

ஆதவா
07-08-2007, 08:49 AM
ஈழத்து மக்களின் உணர்வுக் கவிதை மேலும் ஒன்று. அழகான கவிதை இலக்கியன்.

இடையில்-நடுவில் கிட்டத்தட்ட இரண்டுமே ஒரே அர்த்தம்தானே?

கடலில் கலந்த உதிரப்பெருக்கு
சுதந்திரமில்லா சுவாசம். ஆகியவை அருமை மிகுந்த வரிகள்.

பாராட்டுக்கள் இலக்கியன்.

இலக்கியன்
07-08-2007, 08:50 AM
நம் சொந்தங்கள் பல அனுபவித்த சோகக்கதையிது...
மனதில் ஆறாத வடுவாக....

சொந்த நாட்டில் அகதியான பெருமை ஈழத்தமிழருக்கு உண்டு... அதை அரங்கேற்றியபெருமை இலங்கை அரசுக்கு...

உணர்ச்சிபூர்வ வரிகளுக்கு பாராட்டுக்கள் இலக்கியன்...

உங்கள் விமர்சனத்துக்கு நன்றி அன்புரசிகன்

சிவா.ஜி
07-08-2007, 08:53 AM
எத்தனை சோகமென்றாலும் சொல்லித்தீர்க்கத்தானே வேண்டும்.
அழகான கவிதை நடையைக் கையாண்டிருப்பது பராட்டுக்குரியது.
சொன்ன கருத்து சோகம் நிறைந்தது,சொல்லிய விதம் சிறப்பானது.
பாராட்டுக்கள் இலக்கியன்

இலக்கியன்
07-08-2007, 08:53 AM
ஈழத்து மக்களின் உணர்வுக் கவிதை மேலும் ஒன்று. அழகான கவிதை இலக்கியன்.

இடையில்-நடுவில் கிட்டத்தட்ட இரண்டுமே ஒரே அர்த்தம்தானே?

கடலில் கலந்த உதிரப்பெருக்கு
சுதந்திரமில்லா சுவாசம். ஆகியவை அருமை மிகுந்த வரிகள்.

பாராட்டுக்கள் இலக்கியன்.

உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்கு நன்றி
பேச்சு மொழியிலே அப்படி பேசுவது வழமை அதனால் அப்படி எழுதினேன்.

அமரன்
07-08-2007, 08:54 AM
ரத்தத்தின் ரத்தங்கள் வடிக்கும் செங்கண்ணீர் துளிகளில் ஒரு துளி இலக்கியனின் வரிகரிளில்...நெகிழ்வு.

இலக்கியன்
07-08-2007, 08:56 AM
எத்தனை சோகமென்றாலும் சொல்லித்தீர்க்கத்தானே வேண்டும்.
அழகான கவிதை நடையைக் கையாண்டிருப்பது பராட்டுக்குரியது.
சொன்ன கருத்து சோகம் நிறைந்தது,சொல்லிய விதம் சிறப்பானது.
பாராட்டுக்கள் இலக்கியன்

உங்கள் விமர்சனத்துக்கு நன்றி சிவா.ஜி

இலக்கியன்
07-08-2007, 08:58 AM
ரத்தத்தின் ரத்தங்கள் வடிக்கும் செங்கண்ணீர் துளிகளில் ஒரு துளி இலக்கியனின் வரிகரிளில்...நெகிழ்வு.

உங்கள் விமர்சனத்துக்கு நன்றி

இனியவள்
07-08-2007, 05:23 PM
அழகிய கவிதை என்று சொல்வதா
இல்லை ஒர் அகதியின் மனம்
வடிக்கும் இரத்தக் கண்ணீர்
வடித்த கவிதை என்று கூறுவதா..

வாழ்த்துக்கள் இலக்கியன்

இலக்கியன்
08-08-2007, 08:00 AM
அழகிய கவிதை என்று சொல்வதா
இல்லை ஒர் அகதியின் மனம்
வடிக்கும் இரத்தக் கண்ணீர்
வடித்த கவிதை என்று கூறுவதா..

வாழ்த்துக்கள் இலக்கியன்

காலக்கண்ணாடியாக இந்தக்கிறுக்கல்
நன்றி இனியவள்