PDA

View Full Version : தர்மயுத்தம் நடப்பதற்காக பான்டவர் - கௌரவரĮmgandhi
07-08-2007, 07:40 AM
தர்மயுத்தம் நடப்பதற்காக பான்டவர் - கௌரவர்கள் வகுத்த நெறிமுறைகள்


1. சூரியன் உதித்த பிறகுதான், போர் தெடங்க வேண்டும்.

2. சூரியன் மறையும் போது போர் உடனடியாக நிருத்தப்படவேண்டும்.

3. பலபோர் வீரர்கள் ஒரே சமயத்தில் ஒரு வீரரைத்தாக்க கூடாது.

4. வெகுநேரம் இருவர் ஒருவரை யொருவர் தாக்கிகொண்டால், அவர்கள் சம ஆயுதம் படைத்தவர்களாக இருக்க வேண்டும்.

5. சரண்டைந்த ஒருபோர் வீரரைக் கொல்லக் கூடாது.

6. ஆயுதம் அற்றவரைத் தாக்க கூடாது.

7. நினைவிழந்த போர் வீர்ரைத் தாக்க கூடாது.

8. போரில் பங்குபெறாத எவரையும் கொல்லக் கூடாது.

9. புறமுதுகிட்டு ஓடும் எவரையும் கொல்ல கூடாது.

10. பெண்களை தாக்க கூடாது.

அந்தந்த ஆயுதப் பயிற்சிக்குரிய இலக்கணங்களை மீறக் கூடாது

நன்றி கல்கி

lolluvathiyar
07-08-2007, 08:13 AM
அந்த காலத்தில் போர் யுக்திகளை இப்படி வகுக்க காரனம் அப்பாவி மக்கள் யாரும் பாதிக்க பட கூடாது என்று உயர்ந்த நோக்கத்தில்.
இதே நெரிமுரைகளை நாம் கடைசி வரை கடைபிடித்த காரனத்தினால் தான் முஸ்லீம் மன்னர்களிடமும் ஆங்கிலேயர்களிடமும் தோற்று போனோம். காலம் எப்படி மாறி விட்டது

இன்று பாருங்கள் எதிரி படையுடன் மோதாமல் கோழைதனமாக
1. ஹிரிசிம்மா மக்கள் மீது அனுகுண்டு போட்டது
2. ஈராக் நகரில் அப்பாவி மக்கள் மீது குண்டுமழை பொழிகிறது
3. தீவிரவாதம் என்ற மெர்சினரி அமைப்பின் மூலம் சிறிய நாடுகளில் உள்ள அப்பாவி மக்களை குண்டு வைத்து கொல்வது.

வீரத்தை விட இன்று கோழைதனம் தான் வெற்றி பெருகிறது

mgandhi
07-08-2007, 08:21 AM
அந்த காலத்தில் போர் யுக்திகளை இப்படி வகுக்க காரனம் அப்பாவி மக்கள் யாரும் பாதிக்க பட கூடாது என்று உயர்ந்த நோக்கத்தில்.
இதே நெரிமுரைகளை நாம் கடைசி வரை கடைபிடித்த காரனத்தினால் தான் முஸ்லீம் மன்னர்களிடமும் ஆங்கிலேயர்களிடமும் தோற்று போனோம். காலம் எப்படி மாறி விட்டது

இன்று பாருங்கள் எதிரி படையுடன் மோதாமல் கோழைதனமாக
1. ஹிரிசிம்மா மக்கள் மீது அனுகுண்டு போட்டது
2. ஈராக் நகரில் அப்பாவி மக்கள் மீது குண்டுமழை பொழிகிறது
3. தீவிரவாதம் என்ற மெர்சினரி அமைப்பின் மூலம் சிறிய நாடுகளில் உள்ள அப்பாவி மக்களை குண்டு வைத்து கொல்வது.

வீரத்தை விட இன்று கோழைதனம் தான் வெற்றி பெருகிறது


நீங்கள் செல்வது அனைத்தும் உண்மை

விகடன்
07-08-2007, 08:27 AM
மஹாபாரதத்தை பற்றி என்றதும் ஓடோடி வந்தேன். மிக்க கழிப்புமுற்றேன். நன்றி.

இவற்றுள் எத்தனை இறுதிவரை கடைப்பிடிக்கப்பட்டன என்றும் சொல்ல முடிந்தால்

அமரன்
07-08-2007, 09:02 AM
இதைப்படித்ததும் பெருமூச்சுத்தான் விட முடிகிறது. இப்படியா சில நல்ல விடயங்களில் நாம் பழஞ்சோறாகவே இருந்திருக்கலாமே...பகிர்வுக்கு நன்றி காந்திஅண்ணா.

ஓவியன்
10-08-2007, 11:42 AM
இந்த விதிகளை மகா பாரதத்திலேயே சரிவர எல்லோரும் கடைப்பிடிக்கவில்லை............

விதிகளை மாற்ற தில்லு முல்லு செய்தார்கள்...........
அந்தக் காலத்திலேயே அப்படியென்றால்...............
இப்போது − நினைச்சுப் பார்க்கவே முடியலையே....................~:icon_shok:

விகடன்
11-08-2007, 04:34 AM
அந்தக் காலத்திலேயே அப்படியென்றால்...............
இப்போது − நினைச்சுப் பார்க்கவே முடியலையே....................

என்ன சொல்ல வருகிறீர்கள் ஓவியரே?
அந்தக்காலத்தில் இருந்தவர்கள் ஒழுக்க சீலர்கள். இந்தக்காலத்தில் அதற்கு எதிர்ப்பண்புடையோர் என்றும்,
அவர்கள் மத்தியிலேயே இப்படியென்றால் இந்தக் காலத்தில் சொல்லவே தேவையில்லை என்றுமா சொல்கிறீர்கள்..

"நான் அப்படி சொன்னேனா? நீர் அப்படி நினைப்பதற்கு நான் என்ன செய்யலாம்" என்று சொல்லி தப்பித்து விடாதீர். கருத்துக்களை தாராளமாக விளக்கத்துடன் தந்தால் நாமும் படித்து விளங்கிக்கொள்ளலாம் அல்லவா? :icon_shades:

ஓவியன்
11-08-2007, 09:22 AM
விதிக்கப்பட்ட விதிகளை சரி வர பின்பற்ற கடவுள்களாகவும் தேவ அவதாரங்களாக கருதப் பட்டவர்களாலும் (போரில் ஈடு பட்ட இரு சாராரும்) முடியவில்லை எனும் போது இந்த கால சாதாரண மக்கள் எம்மாத்திரம் என்ற பொருள் படவே நான் மேலுள்ள பதிவைப் பதித்தேன்.

தங்கவேல்
11-08-2007, 09:27 AM
யாரு ஒழுக்க சீலர்கள் மஹாபாரத வாசிகளா ? நன்றாக நக்கல் செய்கின்றீர்கள் விராடன்... அதர்மம் தலைதூக்கும் போது தர்மம் கடவுள் உருவிலே வந்து அழிக்கும் என்று வேதங்கள் சொல்லுகின்றன. அதனால் இன்று உள்ளவர்களை விட மஹாபாரத காலத்தில் அயோக்கியர்கள் அதிகம் என்கிறேன். இந்த உலகில் தான் இன்னும் கடவுள் மனிதனாக வரவில்லையே. அதனால் நாமெல்லாம் நல்லவர்கள்.. என்ன சொல்லுகின்றீர்கள்.

விகடன்
11-08-2007, 09:30 AM
பாண்டவர்கள் தேவர்களின் கிருபையால் பிள்கைகளாக இருவகிக்கப்பட்டவர்களே அன்றேல் அவதாரங்கள் என்று சொல்லிவிட முடியாது நண்பனே.

உண்மைதான் சாதாரண மனிதனிற்கும் தேவர்களின் கிருபையால் பிறந்தவர்களுக்கும் சற்றேனும் வித்தியாசமிருந்திருக்க வேண்டும். அப்படியிருந்தும் அவர்களால் அத்துமீறல்களிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை என்றால் இக்காலம் எம்மாத்திரம் என்று சொல்லும் கூற்று வரவேற்கத்தக்கதே.

இன்னும் பார்க்கப்போனால் அத்துமீறல்களும் அடாவடித்தனங்களும் இன்றி வெற்றியெனும் கனியை எட்டுவது கடினம் என்றும் கருதலாமோ???

ஓவியன்
11-08-2007, 09:35 AM
பாண்டவர்கள் தேவர்களின் கிருபையால் பிள்கைகளாக இருவகிக்கப்பட்டவர்களே அன்றேல் அவதாரங்கள் என்று சொல்லிவிட முடியாது நண்பனே.

ஏன் அவர்களை வழி நடத்திய கிருஸ்ணர் அவதாரமாகக் கருதப் படவில்லையோ?

நான் பாண்டவர் என்று தனியே கூறவில்லை, மகா பாரதத்தில் ஈடு பட்ட எல்லோரையும் சேர்த்துத் தான் கூறினேன்.

விகடன்
11-08-2007, 09:39 AM
ஏன் அவர்களை வழி நடத்திய கிருஸ்ணர் அவதாரமாகக் கருதப் படவில்லையோ?

நான் பாண்டவர் என்று தனியே கூறவில்லை, மகா பாரதத்தில் ஈடு பட்ட எல்லோரையும் சேர்த்துத் தான் கூறினேன்.

இந்த இடத்தில்த்தான் நீங்கள் மஹாபாரத்தையே தவறாக புரிந்துள்ளீர்கள் என்று புலனாகிறது.

ஏனெனில்,
பாண்டவர்கள் விடுத்து கௌரவர்கள் தர்மத்தின் பாதையில் நடந்திருப்பார்களேயேகில் கிருஸ்ணர் கௌரவர் பக்கம் நின்றிருப்பார். ஆக மொத்தத்தில் கிருஸ்ணர் தர்மத்தின் பக்கம் துணை போனாரே தவிர பாண்டவர் பக்கம் அல்ல.

ஓவியன்
11-08-2007, 09:45 AM
இங்கே கிருஸ்ணர் தருமத்தின் பக்கமோ இல்லை அதர்மத்தின் பக்கமோ நின்றார் எனபதல்ல பிரச்சினை நண்பரே?

நீர் நான் மகாபாரதத்தில் வந்தோர் அவதார புருசர்கள் என்றதை இல்லை பாண்டவர் தேவருக்கு பிறந்தவரே அன்றி அவதார புருசர் அல்ல என்றீர், அதற்கு விளக்கமளிக்கவே நான் பாண்டவர் என்று தனியே கூறவில்லை, பொதுவாகவே கூறினேன் மகா பாரதக் கண்ணன் கூட மகாபாரத பாத்திரம் தானே அவர் அவதாரம் இல்லையா என்று கேட்டேன்.

அதனையும் தவறாகப் புரிந்து கொண்டு என்னைத் தவறாகப் புரிந்து கொண்டேன் என்று கூறும் உமக்கு நான் என்ன சொல்ல...........?

விகடன்
11-08-2007, 09:54 AM
விதிக்கப்பட்ட விதிகளை சரி வர பின்பற்ற [COLOR="Red"]கடவுள்களாகவும் தேவ அவதாரங்களாக கருதப் பட்டவர்களாலும் (போரில் ஈடு பட்ட இரு சாராரும்) முடியவில்லை எனும் போது இந்த கால சாதாரண மக்கள் எம்மாத்திரம் என்ற பொருள் படவே நான் மேலுள்ள பதிவைப் பதித்தேன்.

கடவுள்களாலும் என்று எழுதியிருக்க முயற்சித்திருக்கிறீர்கள் என்று கருதினேன். அதன்படியே...

நீரே கடவுள் என்றும் தேவ அவதாரங்களாக கருதப்பட்டவர்களாகவும் என்று இரண்டு வேறுபட்ட சொல்லை பயன்படுத்தியிருக்கிறீர். இவ்விடத்தில் கண்ணன் கடவுள் என்னும் வகைக்குள் அடங்குகிறான் ஒத்துக்கொள்கிறேன். அதன்னெ பின்னால் வரும் தேவ அவதாரங்கள்.?


[COLOR="Red"]ஏன் அவர்களை வழி நடத்திய கிருஸ்ணர் அவதாரமாகக் கருதப் படவில்லையோ?

இதற்குத்தான் அந்த அவதாரன் பாண்டவர் பக்கம் என்றோ கௌரவர் பக்கம் என்றோ பார்க்கவில்லை,. தர்மம் என்றே பார்த்தது என்று சொன்னேன்.

இன்னொரு விடயம் ஓவியன். பாரதத்தில் ஒரு விடயத்தை கூறும்போது பத்தைக்குள் அடிக்கும் விளையாட்டை தயவுசெய்து விட்டுவிடுங்கள். அப்படி எழுதுவீர்களாக இருப்பின் விளங்காதவர்கள் அந்தவழியிலேயும் விளக்கமுடையோர் த்ம் விளங்கி வைத்திருந்ததன் போக்கில் உங்கள் கருத்தை இட்டுச் சென்றுவிடுவர்.

ஓவியன்
11-08-2007, 09:57 AM
தம்பி விராடா!

என்னைப் பற்றைக்குள் பந்து அடிப்பவர் என்றா கூறுகிறீர்?

நன்றி விளங்கிக் கொண்டமைக்கு.......................

விகடன்
11-08-2007, 10:03 AM
கோபுக்காதீர் ஓயியனே!
அவதாரம் என்றால் என்ன?
இறைவனின் ஒரு வடிவமே. உலகில் ஏதோ ஒரு குறிக்கோலிற்காக பிறப்பெடுத்தலே. அதுவுன் இறவந்தான். அந்தவகையில் நாராயணனே அவதாரமாகிரார் கண்ணனாக.

விகடன்
11-08-2007, 10:11 AM
தம்பி விராடா!

என்னைப் பற்றைக்குள் பந்து அடிப்பவர் என்றா கூறுகிறீர்?

நன்றி விளங்கிக் கொண்டமைக்கு.......................

இதை எப்படி எடுத்துக்கொள்ளவ்து அண்ணே.:icon_clap:

அடக்குமுறையா?

அல்லது

நழுவலா?

ஓவியன்
11-08-2007, 10:19 AM
என்னைப் மகாபாரதம் பற்றி பற்றைக்குள் பந்து அடிப்பவர் என்றீர்,

முன்பு என்ன நடந்தது?

மகாபாரதம் இலக்கியமா, ஆன்மிகமா என்ற சர்ச்யையில் மன்றத்தின் வித்துவான்களான செல்வன், ராகவன், மோகன் முதலியோர் என் கருத்துடன் ஒத்திசைந்தே இருந்தனர். அத்துடன் இப்போது இந்த திரி தொடக்கப் பட்டிருப்பது இலக்கியப் பகுதியாக இருக்க..............


அப்படிப் பட்ட என்னை குருட்டாம் போக்கில் கதைப்பவனாக விமர்சித்த உம்முடன் விவாதமிடுவது ஆரோக்கியமாக இருக்காது என்றே விலகுகிறேன், வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க.......

இதனை நீர் எப்படியும் எடுத்துக் கொள்ளும் எனக்குக் கவலை இல்லை.

தளபதி
11-08-2007, 11:06 AM
தர்மயுத்த விதிமுறைகள் படிக்க நன்றாக இருந்தது.
இப்போது உள்ள போரின் விதிமுறைகள் ??!!!!!!!!!!!!

lolluvathiyar
11-08-2007, 11:33 AM
இங்கே தர்ம்யுத்ததை யார் பின்பற்றினார்கள் என்று விவாதிக்க வேண்டிய அவசியமில்லை.
பொதுமக்களை சொத்துகளை தாக்கும் இன்றைய காலத்துக்கும் மக்களையும் ஸ்திரிகளையும் தாக்க கூடாது என்று ஒரு அக்ரிமென்ட் போட்டு முடிந்த வரையில் பொது மக்களுக்கு இம்சை தரவில்லையே. அந்த வகையில் பாராட்டகூடியது தானே

விகடன்
11-08-2007, 12:48 PM
என்னைப் மகாபாரதம் பற்றி பற்றைக்குள் பந்து அடிப்பவர் என்றீர்,

முன்பு என்ன நடந்தது?

மகாபாரதம் இலக்கியமா, ஆன்மிகமா என்ற சர்ச்யையில் மன்றத்தின் வித்துவான்களான செல்வன், ராகவன், மோகன் முதலியோர் என் கருத்துடன் ஒத்திசைந்தே இருந்தனர். அத்துடன் இப்போது இந்த திரி தொடக்கப் பட்டிருப்பது இலக்கியப் பகுதியாக இருக்க..............வீண் வாதங்கள் தேவையில்லை. அந்தத்திரியை பொறுத்தவரை முற்ருமுழுதாக இலக்கியமென்றோ ஆன்மீகமென்றோ முடிவெடுக்கப்படவில்லை, ஆனால் எந்தப்பக்கம் அதனை சொல்லலாம் என்பதே வாதம் அதன்படி இலக்கியம் என்பதை நானும் ஒத்துக்கொண்டேன். அதுவும் என்பக்கம் சற்று உருதிப்படுத்திக்கொண்டே ஒத்துக்கொண்டேன், அதை இலக்கியப் பகுதியில் கதைப்பதுதான் சாலச் சிறந்தது என்று...

அதற்காக ஆன்மீகத்தை சாரவே இல்லை என்று சொல்வது முட்டாள்த்தனம். அன்று நடந்த ஒருவிடயத்தினை வைத்து என்றுமே ஓவியன் சொல்வது சரி என்று மார்தட்டிக்கொண்டிருந்தால் ஆகாது. சரியாக இருக்கலாம்.

ஆனால் இங்கு நடந்தது என்ன. அதற்கும் இதற்கும் எப்படி முடிச்சுப் போடுகிறீர். சற்றே பின் சென்று பாரும்.
விளங்கும்.

வீண் பிரச்சினைகளை தவிர்க்க ... என்று ஓர் நொண்டிச் சாட்டு தேவை இல்லை. உம்மை பிடித்து தின்னப் போவதில்லை.

மீண்டும் இந்தத்திரியில் இருக்கும் குழப்பத்திற்கு வருகிறேன்.

இறைவன் , அவதாரம் இரண்டும் கிருஸ்ணனே. அவர்களுடன் இருந்ததால் பாண்டவரையோ அல்லது தேவர்களின் கிருபையால் ஜெனித்தமையால் அவதாரமாகவோ கருதமுடியாது. இதுதான் வாதம். இதற்கு மாற்று கருத்திருப்பின் சொல்லவும். இல்லையென்றால் எமக்கும் உமக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. இருவருமே ஒரே கருதைத்தான் வைத்திருக்கிறோம்.

விகடன்
11-08-2007, 12:51 PM
இங்கே தர்ம்யுத்ததை யார் பின்பற்றினார்கள் என்று விவாதிக்க வேண்டிய அவசியமில்லை.
பொதுமக்களை சொத்துகளை தாக்கும் இன்றைய காலத்துக்கும் மக்களையும் ஸ்திரிகளையும் தாக்க கூடாது என்று ஒரு அக்ரிமென்ட் போட்டு முடிந்த வரையில் பொது மக்களுக்கு இம்சை தரவில்லையே. அந்த வகையில் பாராட்டகூடியது தானே

உண்மைதான் வாத்தியார். பார்க்கப்போனால் நீங்கள் சொல்வதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். ஆனால் அவர்கள் விதவைகளாக்கப்பட்டுவிட்டனரே. அது ஒரு தீங்காக கணக்கிடமுடியாதா?

விகடன்
11-08-2007, 01:03 PM
அப்படிப் பட்ட என்னை குருட்டாம் போக்கில் கதைப்பவனாக விமர்சித்த உம்முடன் விவாதமிடுவது ஆரோக்கியமாக இருக்காது என்றே விலகுகிறேன், வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க.......

இதனை நீர் எப்படியும் எடுத்துக் கொள்ளும் எனக்குக் கவலை இல்லை.

உவமானத்தை தூக்கி வைத்து குழந்தைப்பிள்ளை போல் அடம்பிடிப்பவர்களுடன் எப்படி ஒரு கருத்தை கதைக்கலாம்.

அதுமட்டுமின்றி

உம்மோடு எனக்கு என்ன விரோதம்?

உமக்கும் எனக்கும் மஹாபாரதற்திற்கும் என்ன தொடர்பு?

ஆக, பிழையான கருத்து ஒன்று உருவாவதை தவிர்க்கும் பொருட்டே எனது வாதமிருந்தது. அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவமோ அதற்கேற்ப கதைக்கும் திறமை இருந்தால் நன்று.

மீண்டும் புரியாமலிருப்பின் வாதத்திற்கு காரணமாக இருந்த கரு,

அவதாரம் ஒன்றுதான். அது கிருஸ்ணந்தான். இறைவனின் ஒரு அவதரிப்பே அவதாரமாக இருக்க முடியும்.

இதற்கு மேல் உமக்கு விளங்கப்படுத்தவும் முடியாது. ஆகையால் இத்தோடு முடிக்கிறேன் உம்முடன் எனது வாதத்தை.

ஓவியன்
11-08-2007, 01:10 PM
உவமானத்தை தூக்கி வைத்து குழந்தைப்பிள்ளை போல் அடம்பிடிப்பவர்களுடன் எப்படி ஒரு கருத்தை கதைக்கலாம். .

பொருத்தமில்லா உவமானங்களை முன்வைப்பவர்களுடன் விவாதம் செய்ய எனக்குப் பிடிக்கவில்லை என்று எடுத்துக் கொள்ளும்......... (பொருத்தமில்லா உவமானங்களை முன்வைப்பவர்களுடன் விவாதமிடுவது எப்படி ஆரோக்கியமானதாக அமையும்?)

நன்றி!.

ஆதவா
11-08-2007, 02:08 PM
நண்பர்களே! வாதம், விதன்டாவாதம் ஆகும் அளவுக்கு கொன்டுசெல்பவர் வாதத் திறமை அற்றவர் என்று சொல்வார்கள்... வீண் விவாதம் செய்பவர்கள் விவாதத்தில் ஓரளவு பழக்கம் உள்ளவர்கள் என்று சொல்வார்கள். இதில் வெற்றியும் இன்றி தோல்வியுமின்றி முடித்தால் அது அந்த வாதத்தின் வெற்றி, ஏதேனும் ஒருபக்கம் முடிந்தால் அது வாதியின் வெற்றி...

நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கும்.. கருத்து மோதல் வேண்டாமே...

நன்றி
ஆதவன்..

ஓவியன்
11-08-2007, 02:12 PM
ஆகட்டும் ஆதவா!

கருத்திற் கொள்கிறேன்.................!

lolluvathiyar
11-08-2007, 02:47 PM
ஆனால் அவர்கள் விதவைகளாக்கப்பட்டுவிட்டனரே. அது ஒரு தீங்காக கணக்கிடமுடியாதா?

விதவைகள் என்பது இந்த காலத்தில் தான் பர்டனாக கருத பட்டது. மகாபாரத காலத்தில் அல்ல.

யாரெல்லாம் போர் வீரன் ஆக வேண்டும் என்று ஒரு மரபு இருகிறது.

வீட்டுக்கு ஒரு ஆண்மகன் போருக்கு வரவேண்டும். ஆனால் அதில் சில விதிவிலக்கு காலகாலமாக கடைபிடிக்க பட்டது

இதோ இவர்கள் போருக்கு வரகூடாது
ஆண் பிள்ளை இல்லாத குடும்பத்தின் கனவன் போருக்கு போக கூடாது குடும்பத்தை காக்கும் பொருப்பு இருகிறது.
ஒரு பெண்ணுக்கு இரண்டு மகன்கள் இருந்தால் ஒரு மகனை மட்டுமே அனுப்ப வேண்டும். இன்னொருவன் குடும்பத்தை காக்க வீட்டில் இருக்க வேண்டும்.
இளம் வயதினர் போருக்கு வர கூடாது

இப்படி சில மரபுகளை வைத்திருந்தார்கள் குடும்பத்தை காக்க*