PDA

View Full Version : மீண்டும் சந்திப்போம்

சிவா.ஜி
07-08-2007, 07:27 AM
நெரிசலான சாலையில்
ஒடிசலான தேகம் ஒடுக்கி
ஓராமாய் ஒதுங்கி
கொஞ்சமாய் நடுங்கி
நடந்த என்னை உரசி
காற்றாய் கடந்தது
டாட்டா லாரியொன்று
அதிர்ந்து நின்ற என்னைப்பார்த்து
சிரித்தது லாரியின் பின்னால்
எழுதப்பட்ட வாசகம்
"மீண்டும் சந்திப்போம்"

அமரன்
07-08-2007, 07:41 AM
நமக்கு பின்னாடி எத்தனை விடயங்கள் இருகின்றன. லாரியின் பின்னால் இருந்த வாசகம்கூட அவற்றைத்தான் சொல்கின்றன போலும்.

சின்ன சம்பவம். அதை முத்துச்சொற்கள் சேர்த்து ஒரு கவிமாலை ஆக்கிவிட்டீர்கள். பாராட்டுக்கள்.

சிவா.ஜி
07-08-2007, 07:44 AM
நன்றி அமரன்.ஏற்பட்ட அனுபவத்தை அதன் தாக்கம் குறைந்த பின் ஒரு நகைச்சுவையாய் எழுதியது.

விகடன்
07-08-2007, 07:51 AM
ஆயுள் கெட்டியப்பு உங்களுக்கு.
அடுத்த முறை லாறிக்கு முன்னால் உள்ள வாசகத்தை படிக்க மறந்திடாதீர்.

கவிதை...... மயிரிழையில் உயிர்தப்பியதை மீட்கும் படலம்

அமரன்
07-08-2007, 08:18 AM
நன்றி அமரன்.ஏற்பட்ட அனுபவத்தை அதன் தாக்கம் குறைந்த பின் ஒரு நகைச்சுவையாய் எழுதியது.

கருத்துள்ள நகைச்சுவை சிவா..
மீண்டும் சந்திப்போம் அதற்கு முன் செய்யவேண்டியவற்றை செய்துவிடு என்று சொல்வதாக உணர்ந்தேன். நன்றி.

இலக்கியன்
07-08-2007, 08:20 AM
நல்ல சிந்தனை உங்கள் கவிதையின் பாங்கு நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் சிவா.ஜி

சிவா.ஜி
07-08-2007, 08:22 AM
ஆயுள் கெட்டியப்பு உங்களுக்கு.
அடுத்த முறை லாறிக்கு முன்னால் உள்ள வாசகத்தை படிக்க மறந்திடாதீர்.

கவிதை...... மயிரிழையில் உயிர்தப்பியதை மீட்கும் படலம்

எல்லாம் உங்க ஆசீர்வாதம் தானுங்கப்பு.லாரிக்கு முன்னால் உள்ள வாசகத்தைப் படிப்பதற்கு முன்னால்,படித்தது மூளைக்கு போகுமுன் நான் எங்கு போவேனோ....

சிவா.ஜி
07-08-2007, 08:49 AM
நல்ல சிந்தனை உங்கள் கவிதையின் பாங்கு நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் சிவா.ஜி

நன்றி இலக்கியன்.

அன்புரசிகன்
07-08-2007, 09:11 AM
வாகனத்தை மொக்குத்தனமாக ஓட்டுவதெப்படி என்ற கேள்விக்கு பதில் எழுதச்சொன்னால் மத்தியகிழக்கு நாட்டவர் 100க்கு 100 புள்ளிகள் எடுப்பர்....

ஏதோ அந்த டாட்டா லொறியின் புண்ணியத்தால் ஒரு கவிதை வந்ததே....

கண்டால் அந்த லொறியை ... நன்றி கூறிடுங்கள். என்சார்பாக...

கவிதைக்கு பாராட்டுக்கள்..

mythili
07-08-2007, 09:33 AM
உயிர் போய் வந்த பயத்தில் இருக்கும்போது எப்படி உங்களுக்கு படிக்க தோன்றியது?

இருந்தாலும் க்யூட்டான கவிதை...

அன்புடன்,
மைத்து

சிவா.ஜி
07-08-2007, 09:38 AM
நூற்றுக்கு நூறு சர் அன்பு.இங்கே எல்லாம்(மத்தியக்கிழக்கில்தான்) ரோட்டைவிட ஆட்களின் மீது ஓட்டுவதுதான் அதிகம். எனக்கு ஏற்பட்ட அனுபவம் நம்ம நாட்டுல.அதுவும் சிங்காரச் சென்னையில.அங்கதான் போகப்போறீங்க பாத்து கவனமா இருந்துக்கிடுங்க.

சிவா.ஜி
07-08-2007, 09:40 AM
உயிர் போய் வந்த பயத்தில் இருக்கும்போது எப்படி உங்களுக்கு படிக்க தோன்றியது?

இருந்தாலும் க்யூட்டான கவிதை...

அன்புடன்,
மைத்து
நன்றி மைதிலி. நானா படித்தேன் அதிர்ச்சியில முழிச்சுக்கிட்டு நின்னப்ப முன்னாடி தெரிஞ்ச லாரியோட பின்னாடி எழுதியிருந்ததுதான் அது.

ஓவியன்
09-08-2007, 10:38 PM
உண்மைதான் சிவா!

சில மறக்க முடியாத அதிர்ச்சிகள் நடைபெறுகையில், நாம் காணும் சில சம்வங்கள் நம்மை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விடும்............

ஓர் நாள் இப்படித்தான் ஊரில் ஒரு வீதியில் வேகமாக சைக்கிளில் ஓடி சென்ற போது ஒரு அழகான பொமரேனியன் நாய் சைக்கிளுக்குக் குறுக்கே வர நிலை தடுமாறி விழுந்து எழுந்தேன்..............

அந்த வீட்டுக்காரி ஓடிவந்து கேட்டார்.........

அடி பலமாக இல்லையே என்று, பரவாயில்லை என்று பதிலளித்து எழுந்த போது தானே தெரிந்தது அவர் என்னைக் கேட்கவில்லை, தன் நாயைக் கேட்கிறார் என்று................! :lachen001:

அனுபவக் கவிதைக்குப் பாராட்டுக்கள் சிவா!.

சிவா.ஜி
11-08-2007, 05:01 AM
பிரமாதமான அனுபவம் ஓவியன்.பாவம் நீங்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
அதனினும் அரிது பணக்கார வீட்டில்
பாமரேனியனாகப் பிறத்தல்.......
நன்றி ஓவியன்

aren
11-08-2007, 05:04 AM
நெரிசலான சாலையில்
ஒடிசலான உங்களை
எப்படி
அந்த லாரியால் உரசமுடியும்
மீண்டும் சந்திப்போம்
என்று எழுதியிலிருந்தே
அந்த லாரி உங்களை
ஒன்றும் செய்யமாட்டேன் என்று
சொல்லாமல் சொல்கிறதே!!!

பயம் தெளிந்தவுடன் நகைச்சுவையாக எழுதப்பட்ட கவிதை உங்கள் கை வண்ணத்தில் மின்னுகிறது. பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

தளபதி
11-08-2007, 05:13 AM
அந்த லாரி கடந்த போது
உங்கள் மனம் எந்த அளவு பாதிக்கப்பட்டிருக்கும். !!
அதில் "மீண்டும் சந்திப்போம்" வேறு..
கவியரசர்கள் அவர்கள் அனுபவத்திலிருந்து
எழுதும் போது அது மிகவும் அழுத்தம் கொண்டதாக இருக்கும்.
ஆனாலும், இந்த அனுபவம் உங்களுக்கு
"மீண்டும் வேண்டாம்".

சிவா.ஜி
11-08-2007, 05:17 AM
நெரிசலான சாலையில்
ஒடிசலான உங்களை
எப்படி
அந்த லாரியால் உரசமுடியும்
மீண்டும் சந்திப்போம்
என்று எழுதியிலிருந்தே
அந்த லாரி உங்களை
ஒன்றும் செய்யமாட்டேன் என்று
சொல்லாமல் சொல்கிறதே!!!

பயம் தெளிந்தவுடன் நகைச்சுவையாக எழுதப்பட்ட கவிதை உங்கள் கை வண்ணத்தில் மின்னுகிறது. பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்
அதுதான் ஆரென் விதி.தேடி வந்து உரசுகிறது.மீண்டும் சந்திப்போம் என்றால் இந்த முறை தப்பிவிட்டாய் மவனே அடுத்த வாட்டி பாத்துக்கறேன்னு சொல்லிவிட்டு நக்கலாய் டாட்டா காட்டி போயிருகிறது அந்த டாட்டா லாரி. பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஆரென்.

சிவா.ஜி
11-08-2007, 05:18 AM
உங்கள் பாராட்டுக்கும், அதற்கும் மேலான உங்கள் அக்கறைக்கும் என் அன்பான நன்றி குமரன்.

விகடன்
11-08-2007, 05:22 AM
எல்லாம் உங்க ஆசீர்வாதம் தானுங்கப்பு.லாரிக்கு முன்னால் உள்ள வாசகத்தைப் படிப்பதற்கு முன்னால்,படித்தது மூளைக்கு போகுமுன் நான் எங்கு போவேனோ....

முன்னால் உள்ள வாசகத்தைத்தானே படிக்கச் சொன்னேன். அதற்காக வீதியின் நடுவே நின்றா பார்ப்பது?

தெரியாமல்த்தான் கேற்கிறேன். பின்னாலிருக்கும் வாசகத்தை வீதியின் நடுவே நின்றுதான் பார்த்தீர்களாக்கும். அப்படியென்றால் அந்த வாகனத்திற்கு பின்னர் ஒரு வாகனமும் வரவில்லையோ.

aren
11-08-2007, 05:26 AM
ஊரில் ஒரு வீதியில் வேகமாக சைக்கிளில் ஓடி சென்ற போது !.

ஆமாம் எப்படி வேகமாக சைக்கிளில் ஓடமுடியும்.

சிவா.ஜி
11-08-2007, 05:33 AM
முன்னால் உள்ள வாசகத்தைத்தானே படிக்கச் சொன்னேன். அதற்காக வீதியின் நடுவே நின்றா பார்ப்பது?

தெரியாமல்த்தான் கேற்கிறேன். பின்னாலிருக்கும் வாசகத்தை வீதியின் நடுவே நின்றுதான் பார்த்தீர்களாக்கும். அப்படியென்றால் அந்த வாகனத்திற்கு பின்னர் ஒரு வாகனமும் வரவில்லையோ.

நானே சிவனேன்னு ஓரமா போய்க்கிட்டிருந்தேன்.அந்த லாரிக்காரந்தான் கோடுதாண்டி வந்தான். மற்றவர்களெல்லாம் அவரவர் பாதையில் போனதால் பின்னால் எந்த வாகனமும் இல்லை விராடன்.நான் எங்கப்பா நடுவீதியில நின்னேன்..அதுவும் சென்னையில நடுவீதியில நின்னா சங்குதான்.

kalaianpan
11-08-2007, 07:13 AM
நல்லவேளை அதில்.
am i driving safely.....
என்று எழுதிருக்கவில்லையே......

ஷீ-நிசி
11-08-2007, 10:33 AM
நல்ல குறுங்கவி சிவா...

நான் முன்பு எழுதியது.....

அடுத்தவன் உயிரைக் காப்பாற்ற
ஆம்புலன்ஸிற்கு வழிவிட்டான்!!

தன்னுயிரைக் காப்பாற்றிகொள்ள
தண்ணீர் லாரிக்கு வழிவிட்டான்!!

சிவா.ஜி
11-08-2007, 02:47 PM
ஆஹா...அசத்தலான வரிகள். ஒரு சென்னைவாசியைத்தவிர யாரால் இப்படி"உணர்ந்து" எழுத முடியும்.நான்கே வரிகளில் அழுத்தமான நிகழ்வைச் சொல்லியிருக்கிறீர்கள் ஷீ.வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

இளசு
18-08-2007, 06:57 AM
பய −சோகத்துக்கும் நகைச்சுவைக்கும் மயிரிழை இடைவெளியே..

சிவாவின் கவிதை இதை மீண்டும் நிரூபிக்கிறது..

ஓவியனின் நாய்க்காரி கரிசனமும்
ஷீயின் சென்னை வேதமும்... நச்!

அனைவருக்கும் பாராட்டுகள்!

சுவையான திரி!

பூமகள்
01-09-2007, 03:08 PM
அன்பு சிவா அண்ணா....
லாரியை பார்க்கும் போதெல்லாம் உள்ளத்தில் பயம் மேலிடும்.
ஆனால்... உங்களின் கவி அதையும் தாண்டி ரசிக்கவைத்தது.
இனி லாரி பார்க்கையில் நிச்சயம் பின் வாசகத்தை தேடும் என் கண்கள்.

கவி கோர்த்த விதம் அருமை.
வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் சிவா அண்ணா. :thumbsup:

மனோஜ்
01-09-2007, 03:27 PM
ஓ லாரி கூட சிவாவுக்கு கவிதை ஆனாது அருமை

ஓவியா
01-09-2007, 03:40 PM
நெரிசலான சாலையில்
ஒடிசலான தேகம் ஒடுக்கி
ஓராமாய் ஒதுங்கி
கொஞ்சமாய் நடுங்கி
நடந்த என்னை உரசி
காற்றாய் கடந்தது
டாட்டா லாரியொன்று
அதிர்ந்து நின்ற என்னைப்பார்த்து
சிரித்தது லாரியின் பின்னால்
எழுதப்பட்ட வாசகம்
"மீண்டும் சந்திப்போம்"

கவிதையை இரண்டு முரை வாசித்து, ரசித்தேன்.

அந்த சூழ்நிலைலயை நினைத்தாலே நடுங்குது.............யப்பா என்ன பயமா இருக்குதுலே!!

அப்படியே நடுங்கும் வண்ணமாகவே வரிகளை அமைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். பலே.

எனக்கும் இது போல் ஒரு சம்பவம் சிறு வயதில் உண்டு,

இப்படிதான் ஒரு நாள் நானும் டியூஷன் வகுப்பு முடிந்து வீடு வருகையில், என் அப்பா ஆசையாய் வாங்கி கொடுத்த சில்க் குடை பாவாடையை அணிந்துக்கொண்டு, ஹையா நடந்து வர, அருகில் காற்றை கிழித்து சென்றலாரின் வேகத்தில்...............பாவாடை குடைபிடிக்க........மானம் போனதே!! :D:D:D:D:D

சிவா.ஜி
02-09-2007, 04:34 AM
பய −சோகத்துக்கும் நகைச்சுவைக்கும் மயிரிழை இடைவெளியே..

மிகச்சரியான கருத்து.நிகழ்ந்து முடிந்து அதன் தாக்கம் குறைந்ததும்....அந்த நிகழ்வின் அசைபோடல் ஒரு மெல்லிய நகைச்சுவையை தருவதென்னவோ முற்றிலும் உண்மை.மிக்க நன்றி இளசு.

சிவா.ஜி
02-09-2007, 04:37 AM
இனி லாரி பார்க்கையில் நிச்சயம் பின் வாசகத்தை தேடும் என் கண்கள்.
:thumbsup:

அக்கம் பக்கம் கவனத்தோட பாக்கனும்மா...அப்புறம் அந்த வாசகம் படிச்சு முடிக்கறதுக்குள்ள பின்னாடி ஒரு வண்டி உரசிட்டு போயிடும்....நம்ம ஊரூ ட்ராஃபிக் படு டேஞ்சர்.பாராட்டுக்கு நன்றி பூமகள்.

சிவா.ஜி
02-09-2007, 04:38 AM
ஓ லாரி கூட சிவாவுக்கு கவிதை ஆனாது அருமை

மன்றம் வந்த பிறகு கை கால் உடைந்தாக்கூட கவிதை வரும் போலத்தெரிகிறது மனோஜ். நன்றி.

சிவா.ஜி
02-09-2007, 04:40 AM
எனக்கும் இது போல் ஒரு சம்பவம் சிறு வயதில் உண்டு,

இப்படிதான் ஒரு நாள் நானும் டியூஷன் வகுப்பு முடிந்து வீடு வருகையில், என் அப்பா ஆசையாய் வாங்கி கொடுத்த சில்க் குடை பாவாடையை அணிந்துக்கொண்டு, ஹையா நடந்து வர, அருகில் காற்றை கிழித்து சென்றலாரின் வேகத்தில்...............பாவாடை குடைபிடிக்க........மானம் போனதே!! :D:D:D:D:D
ஐய்யோ பாவம் அந்த குட்டிப் பெண் ஓவியாவின் நிலையை நினைத்தால் பாவமாக இருக்கிறது.எப்படியோ உரசாமல் போனதே....மிக்க நன்றி ஓவியா ரசிக்க வைக்கும் பின்னூட்டத்திற்கு.

lolluvathiyar
09-09-2007, 12:39 PM
நல்ல வேலை லாரி என்பதா இந்த அளவுக்கு தப்பித்தீர்கள்.
இதே அரசு பஸ்சாக இருந்தால் தங்கள் கடமை ஒழுங்காக செய்து விட்டு தான் போயிருப்பாங்க. மீண்டும் சந்திக்கவே முடியாதபடி

சிவா.ஜி
09-09-2007, 12:46 PM
நல்ல வேலை லாரி என்பதா இந்த அளவுக்கு தப்பித்தீர்கள்.
இதே அரசு பஸ்சாக இருந்தால் தங்கள் கடமை ஒழுங்காக செய்து விட்டு தான் போயிருப்பாங்க. மீண்டும் சந்திக்கவே முடியாதபடி

ரொம்ப ரொம்ப சரி வாத்தியாரே....ஏதோ முன் ஜென்மத்துல செஞ்ச புண்ணியமாக இருக்கும்...லாரியாக இருந்தது...அரசு பஸ் யப்பா அந்த டிரைவர்ங்களப்பாத்தாலே எருமை மேல ஏறிக்கிட்டு வர்ற எமன் மாதிரியே இருக்கு.....