PDA

View Full Version : கிட்னி பாதிப்பு???rama
07-08-2007, 06:45 AM
'கிட்னி' பாதிப்பு எவ்வாறு அறிவது?


அனைவருக்கும் அன்பான வணக்கம்.

"கிட்னி"" பாதிப்பு எவ்வாறு அறிவது? அதன் நிலைகள் யாவை? அதை குறைக்க முடியுமா? எவ்வாறு? இனிப்பு நீர் நோய் உள்ளவர்களுக்கு எவ்வாறு தற்காக்கலாம்?

என் தாயாருக்கு 'கிட்னி' பிரச்சனை அரம்ப கட்டத்தில் உள்ளது. அவருக்கு இனிப்பு நீர் மற்றும் இருதய நோய் உள்ளது. அவரின் வயது 59.

தங்களின் பதில் பலருக்குப் பயன் தரும்.


இக்கண்,

இராமகிருஷ்ணன்.
மலேசியா.
இன்பமே சூழ்க! என்னோரும் வாழ்க!

ஓவியா
09-08-2007, 04:07 AM
வணக்கம் ராமகிருஷ்ணன்.

உங்களுடைய பிரச்சனைக்கு மன்றத்தின் சார்பில் வருத்தங்கள்.

நமது மன்ற நண்பர் டாக்டர். இளசு அவர்கள், நேரம்கிடைக்கும் பொழுது உங்கள் கேள்விக்கு பதிலளிப்பார்.

நன்றி
வணக்கம்.

விகடன்
09-08-2007, 04:23 AM
மிகவும் கடினமான ஒரு கேள்விக்கு விளக்கம் கேற்கின்றீர்கள். இதற்கு எழுந்தமானமாக ஏதாவது வாழ்க்கையில் கண்ட கேட்ட அநுபவங்களை வைத்து ஏதாவது சொல்லிவிட முடியும். ஆனால் அது அழகல்ல. தரும் விளக்கங்கள் சிறப்புடன் அமைய வேண்டும். ஆகையால் சிறந்த விளங்கந்தரும் பலர் இருக்கின்றனர். அவர்கள் வரும் வரை சற்று பொறுத்திருங்கள். நான் தற்காலிகமாக விடை பெறுகிறேன்.

pradeepkt
09-08-2007, 05:02 AM
எனக்கு என் தந்தைக்கு இருந்தது என்ற அளவில்தான் தெரியும்.
சர்க்கரை வியாதி இதனைத் தூண்டும். அதைக் கட்டுப்படுத்தினால் கிட்னி வியாதி குறையும் என்று கேட்டிருக்கிறேன். ஆரம்ப நிலையில் இருப்பதால் பிரச்சினைகள் எதுவும் இருக்காது என்றே நம்புகிறேன்.
மற்றபடி மன்ற வல்லுநர்கள் வந்து சொல்லட்டும்.
உங்கள் அன்னைக்காகப் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

karikaalan
09-08-2007, 11:38 AM
நண்பரே!

மன்ற மருத்துவர் விளக்குவார் என்று நம்புகிறேன்.

அடியேனுக்குத் தெரிந்தவகையில், சர்க்கரையைக் கட்டுப்படுத்தாவிடில், கண், கால், கிட்னி இவைகள் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.

சர்க்கரை நோய் பீடித்துவிடின் அவ்வப்போது சோதனை செய்துகொள்வது அவசியம். இரத்தத்தில் Creatinine என்பது எவ்வளவு இருக்கிறது என்று ஆய்வு செய்து, கூடவோ குறைவாகவோ இருப்பின் (அளவு 0.5 − 1.3 mg/dl) மருத்துவர்கள் மருந்து கொடுத்து சரி செய்ய முயல்வார்கள் −− முயல வேண்டும். அளவுக்கு மிக அதிகமாகிவிடின், சிறுநீரக மாற்று சிகிச்சை ஒன்றுதான் வழி. டையாலிஸிஸ் அதிக நாள் செய்வது சரிப்பட்டு வராது −− சர்க்கரை நோய் இருப்பதனால்.

மேலும் விவரங்களுக்கு சரியான மருத்துவர்களை -- Nephrologists −− அணுகவும்.

===கரிகாலன்

இளசு
09-08-2007, 07:03 PM
நண்பருக்கு,

மெல்ல வந்து தொடர்ந்து அதிகமாகும் சிறுநீரகக் கோளாறுகளுக்கு பல காரணங்கள் −

தலையானவை − இரத்த உயரழுத்தம், சர்க்கரை (நீரிழிவு)நோய்.

இப்போது சிறுநீர் நுண்புரத அளவு (மைக்ரோஅல்புமின்), சிறுநீரக நீர்பிரிப்பு வேகம் ( குலோமுருலார் ஃபில்ட்ரேஷன் ரேட்) ஆகியவற்றால்
அண்ணல் சொன்ன கிரியேட்டினின் அளவு அதிகமாகும் முன்னமே ஆரம்ப கட்ட சிறுநீரகப் பாதிப்பை அறியலாம்.. தொடர்ந்து கண்காணிக்கலாம்.

1) உணவுமுறை, மாத்திரைகள், இன்சுலின்(தேவையென மருத்துவர் பரிந்துரைத்தால்) − இக்க்கூட்டணியால் நிரந்தரமாய் இரத்தச் சர்க்கரை அளவை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும்..
ஹீமோகுளோபின் ஏ1−சி என்ற சோதனை இதை வழிநடத்தும்.

2) உயர் இரத்த அழுத்தத்தை எப்பாடு பட்டாவது குறைக்கணும்.. எவ்வளவு குறைக்க முடியுமோ அந்தளவுக்கு..(மயக்கம், கிரக்கம் வராதவரை)

உப்பு குறைத்தல், உடல் எடை குறைத்தல், நடைப்பயிற்சி இவற்றோடு தேவையான மாத்திரைகள்..
இவற்றில் ஏசிஇ − இன்ஹிபிட்டர்கள் என்னும் வகை மருந்துகள் − ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் அடிக்கும். இரத்தழுத்தம் குறைக்கவும், சிறுநீரக செயல் இழப்பை மட்டுப்படுத்தவும்.

3) வேறு தொல்லைகளுக்காக புதிய மாத்திரைகள் உட்கொள்ளுமுன்
சிறுநீரகங்களுக்கு அவை கேடுதருமா என ஆலோசனை பெறவும்..

4) என்ன ஏதென்று தெரியாத சூரணங்கள், லேகியங்கள் தவிருங்கள்..
அவற்றில் அடர் உலோகங்கள் இருந்தால் ஆபத்து..

5) ஆற்றில் தொடர்ந்து ஓடும் நீரில் ஒரு கை அள்ளி ருசி பார்ப்பது போன்றது − இரத்த சர்க்கரை அளவு..
மணிக்கு மணி மாறுவது அது... தொடர்ந்து சீராக சர்க்கரை அளவை வைத்திருப்பதே முக்கியம்.மாதத்துக்கு ஒரு முறை சோதனை அன்று மட்டும் வரும் முடிவுகள் − ஒரு கணநேரப் பார்வை போன்றவையே..

ஹீமோகுலோபின் ஏ1சி −யும், நல்ல நீரிழிவு மருத்துவரின் பொறுப்பான வழிகாட்டலும் இதை வெல்ல உதவும்..

அம்மாவுக்கு எங்கள் அன்பும்..பிரார்த்தனைகளும்!

ஓவியா
09-08-2007, 07:09 PM
அருமையான விளக்கம்.

ஒரு கேள்வியுண்டு, இது பரம்பரையாக தொடருமா??

நன்றி இளசு சார்.

இளசு
09-08-2007, 07:12 PM
நன்றி ஓவியா

சர்க்கரை நோய் குடும்பத்தில் மற்றவருக்கு இருந்தால் நமக்கு வரும் வாய்ப்பு பலமடங்கு அதிகம்!

வருமுன் காக்க − வாயைக் கட்டணும்! அடிக்கடி நடையைக் கட்டணும்!!

ஓவியா
09-08-2007, 07:15 PM
மீண்டும் நன்றி இளசு,

கேள்வியை விளங்கா வண்ணம் கொடுத்தமைக்கு, அடியேனை மன்னிக்கவும்.

நான் கேட்டது "கிட்னி"" பாதிப்பு பரம்பரையாக தொடருமா??

இளசு
09-08-2007, 07:19 PM
நேரடி சிறுநீரக நோய்கள் சில உண்டு.. அவை மிக அபூர்வமானவை. அவை பரம்பரையாய் வரும்.. பெரும்பாலும் சிறுவயதிலேயே..

மற்றபடி இரத்த அழுத்தம், சர்க்கரை போன்றவை மரபில் அதிகம் வருவதால், அவை வந்தால் மட்டுமே நாட்பட்டு பின்னால் சிறுநீரகப்பாதிப்பு வரும்..

ஓவியா
09-08-2007, 07:22 PM
நன்றி,

இன்னுமொரு கேள்வி, ஒரு கிட்னி பாதிக்கப்பட்டிருந்தால் அடுத்ததும் பாதிக்கும் அபாயம் அதிகமா, குறைவா இல்லை அறவே இல்லையா?

நன்றி டாக்டர்.

இளசு
09-08-2007, 07:27 PM
இரத்த அழுத்தம், சர்க்கரை, ஆபத்தான மருந்துகள் போன்றவை இரு சிறுநீரகங்களையும் சம அளவில் ஒரே நேரத்தில் தாக்கும்..இரண்டும் மெல்ல ஒரே சீராக பழுதுபடும்..

சிறுநீரகக்கல், கட்டிகள், அதற்குப் போகும் இரத்தக்குழாய் அடைப்பு போன்றவை உள்ள அந்தப்பக்கத்து சிறுநீரகத்தை மட்டும் தாக்கும்..

(கேள்விகள் உற்சாகம் தருகின்றன ஓவியா... மருத்துவக்கல்லூரியில் வகுப்பு எடுப்பது போல் ஒரு புத்துணர்ச்சி..நன்றி!)

ஓவியா
09-08-2007, 07:32 PM
எங்கே தங்களை தொந்தரவு செய்கிறேனோ என்று பயந்துதான் பதிவிட்டேன், நன்றி.

அப்படியென்றால் ஒரு சிறுநீரகங்கத்தை காக்க (மறைமுகமாக) இன்னொன்றை நாம் விஞ்ஞானமே பழுதடைய வழி வகுக்கின்றனவா?

அறிஞர்
09-08-2007, 07:37 PM
இளசு மற்றும் இதர நண்பர்களின் கருத்துக்களை பார்க்கும்பொழுது சக்கரை நோய் வராமல் பார்த்துக்கொள்வதே சாலச்சிறந்தது எனப்படுகிறது.
அதிகமான மருத்துகளை உட்கொள்ளும்போது கிட்ணி பாதிக்கப்படும் எனக்கேள்வி பட்டுள்ளேன்.

ஓவியா
09-08-2007, 07:43 PM
அதிகமான மருந்துக்களை உண்ணுவதினால், மனித உடலில் முதலாவதாக பாதிக்கபடும் உறுப்பு ஈரலாமே!! (நுரைஈரலாம்). சரியா டாக்டர்?

ஓவியன்
09-08-2007, 07:56 PM
சிறு நீரகத்தினை காக்கும் வழிவகைகளை அலசிய அண்ணாவுக்கு நன்றிகள்!.