PDA

View Full Version : கண்ணீர் எழுதும் காவியம்



இனியவள்
06-08-2007, 07:22 PM
கண்ணீர் எழுதும் காவியமிது
நிஜத்தில் நிழலாய்ப் போனவனை
நினைத்து துடிக்குது மனது...

மனதில் உறைந்து விட்டவன்
நினைவுகளை - நிஜங்கள்
கழட்டிவிட முனைகின்றன
தண்ணீரை வெட்டமுனையும்
கத்திகள் போல்....

கரங்கள் கொண்டு வரைந்த
ஓவியத்தை கரங்களே அழிப்பதைப்போல்
அன்பு கொண்டு வரைந்த
அவன் உருவத்தை உயிர் கொண்டு
அழிக்க முயன்று தோற்றுப்போகின்றேன்
அவன் பின்னே உயிர் சென்றதனை மறந்து....

நினைவுகள் இனிமை காதல் கரங்களை
விடுவித்து திருமணம் என்னும்
வசந்த காலத்தில் பயணிப்பவர்களுக்கு....

பிரிவு நினைவைப் பரிசளிக்க
துன்பம் என்னும் சிலுவை சுமந்து
நரகம் என்னும் வாழ்க்கை வட்டத்தில்
பயணிக்கின்றேன்.....

இறந்து போனது என் வசந்த காலம்
இறந்த காலத்தைப் போல்...

அமரன்
06-08-2007, 07:41 PM
வசந்தகாலத்தில்
காற்றில் பறந்த மகரந்தம்
கண்களில் துருவாகி
நித்தமும் உறுத்துகிறதோ...?
கண்களில் தெரிகிறதே
'கா'விரி....!

பாராட்டுக்கள் இனியவள்..!
(இப்போது எல்லாம் ஓவியங்களை கணினியில்தான் வரைகிறார்கள். பட்டென்று வரைகிறார்கள் சட்டென்று அழிக்கிறார்கள் தற்காலக் காதலைப்போல்)

aren
06-08-2007, 07:56 PM
இப்படி காதலனுக்கு
அழும் ஒரு அப்பாவிப் பெண்ணை
எப்படித்தான் மறந்து மறுத்து
போனானோ அந்த ஆண்மகன்
அவன் ஆண்மகனா
கேள்விக்குறியுடன்???

அருமை இளையவள். வார்த்தைகள் அப்படியே வந்து விழுகின்றன உங்கள் கவிதைகளில். தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஷீ-நிசி
07-08-2007, 02:55 AM
வசந்தகாலம் மீண்டும் துளிர்க்கும் இனியவளே! வாழ்த்துக்கள்!

இலக்கியன்
07-08-2007, 08:02 AM
கரங்கள் கொண்டு வரைந்த
ஓவியத்தை கரங்களே அழிப்பதைப்போல்
அன்பு கொண்டு வரைந்த
அவன் உருவத்தை உயிர் கொண்டு
அழிக்க முயன்று தோற்றுப்போகின்றேன்
அவன் பின்னே உயிர் சென்றதனை மறந்து....

அழகானவரிகள் இனியவள் தொடரட்டும்

அக்னி
07-08-2007, 04:56 PM
நிழலும் தடக்குகின்றது...
நிஜமாய் தடக்கிய காதல்,
சுமந்தது என்னை சுகமாய்...
நிழலாகப் போனதும்,
தடக்கி தள்ளுகின்றதே...
காதலில்,
நிழலும் தடக்கும்...

பாராட்டுக்கள் இனியவளே...

இனியவள்
07-08-2007, 05:14 PM
வசந்தகாலத்தில்
காற்றில் பறந்த மகரந்தம்
கண்களில் துருவாகி
நித்தமும் உறுத்துகிறதோ...?
கண்களில் தெரிகிறதே
'கா'விரி....!
பாராட்டுக்கள் இனியவள்..!
(இப்போது எல்லாம் ஓவியங்களை கணினியில்தான் வரைகிறார்கள். பட்டென்று வரைகிறார்கள் சட்டென்று அழிக்கிறார்கள் தற்காலக் காதலைப்போல்)

நன்றி அமர்....

கணனியில் ஓவியம் வரைவதற்கு
கூட கைகள் தேவையே அமர் :sport-smiley-019:

இனியவள்
07-08-2007, 05:15 PM
அருமை இளையவள். வார்த்தைகள் அப்படியே வந்து விழுகின்றன உங்கள் கவிதைகளில். தொடருங்கள்.
நன்றி வணக்கம்
ஆரென்

நன்றி ஆரென் அண்ணா

இனியவள்
07-08-2007, 05:15 PM
வசந்தகாலம் மீண்டும் துளிர்க்கும் இனியவளே! வாழ்த்துக்கள்!

நன்றி ஷீ..

இனியவள்
07-08-2007, 05:16 PM
அழகானவரிகள் இனியவள் தொடரட்டும்

நன்றி இலக்கியன்

இனியவள்
07-08-2007, 05:17 PM
நிழலும் தடக்குகின்றது...
நிஜமாய் தடக்கிய காதல்,
சுமந்தது என்னை சுகமாய்...
நிழலாகப் போனதும்,
தடக்கி தள்ளுகின்றதே...
காதலில்,
நிழலும் தடக்கும்...
பாராட்டுக்கள் இனியவளே...

நன்றி அக்னி

அர்த்தங்கள் பல தொனிக்கும் கவிக்கு பாராட்டுக்கள் :sport-smiley-018: