PDA

View Full Version : விளக்கம் தாருங்கள் நண்பர்களே...

தீபன்
06-08-2007, 07:04 PM
பொதுவாக வசதியானவர்களின் வீடுகளில் தொலைக்காட்சி பெட்டியை மின் இணைப்பிலிருந்து முற்றாக துண்டிக்காமல் றிமோட் கொன்றோல் மூலமாகவே ஸ்ராண்ட்பைஜில் நாள் கணக்கில் நிப்பாட்டி பயன்படுத்துகிறார்கள்.
இது அந்த உபகரணத்திற்கு நல்லதா..? இதனால் பாதிப்பு ஏற்படாதா..?
இதில் எந்த வகையான பாவனை சிறந்தது..?
ஸ்ராண்ட்பைஜில் விடுவதால் சிறிதளவாஜினும்கூட மின்சாரம் விரையமாகாதா..?

விளக்கம் தாருங்கள் நண்பர்களே...

அன்புரசிகன்
06-08-2007, 07:10 PM
அவ்வாறு விடுவதால் ஏற்படும் மின்சார இழப்பை நீங்கள் கணக்கில் எடுக்காமல் விடலாம். ஆனால் சிலவேளை மாறான விளைவுகளை தரும்....

உங்கள் மின்சாதனங்கள் இதனால் வெப்பமாகலாம். இவ்வாறான மறைமுக விளைவுகளை நிவர்த்திசெய்துகூட தற்காலங்களில் மின்சாதனங்கள் வந்துவிட்டது. முடிந்தவரை முற்றாக அணைத்தல் நன்று...

விகடன்
06-08-2007, 07:14 PM
இலத்திரனியல் பொருட்களை நிறுத்தி பின்னர் இயக்குவதால் அதில் இருக்கும் பொருட்களில் ஏற்படும் தேய்மானம், அதை அப்படியே விடுவதில் இருக்காது. சில வேளைகளில் சிறிய பொருளாக இருக்கும். ஆனால் இலகுவில் பெற முடியாததாக இருக்கலாம். ஆகையால் பூரணமாக மின்னை துண்டிப்பதும் துண்டிக்காமல் வைத்திருப்பதும் அவரவர் பாவனை, மற்றும் வீட்டில் இருப்போரின் சுபாவம் என்பவற்றில் தங்கியிருக்கிறது.

தீபன்
08-08-2007, 07:00 PM

நன்றி நண்பர்களே... ஆனால் நான் கேட்டது பாவிக்கும் முறையை பற்றியல்ல... பாவனையால் ஏற்படும் குறையை பற்றியே...
ஏன்..? எப்படி..? என விளக்கம் தர முடியுமா...?

raj144
20-09-2007, 05:53 PM
ஸ்ராண்ட்பய்யில் இடுவதால் உங்களுக்கு < 3 வாட்ச் பவர்தான் சிலவாகும் அதனால் ந்ல்ல கம்பனி டிவிகள் பாதிக்கப்படது.எந்தக் காரணம் கொன்டும் பவர் ச்ப்ளையில் அல்லது ப்ளக்கில் லுஸ் கனெக்ஸ்சன் இருக்க கூடாது. அப்படி வைப்பதில் தவறு ஒன்ரும்மில்லை இதனால் கரண்ட் பில் ஒன்ரும் கூடாது.வெளியுர் செல்லும்போது ஆப் செய்து போவது நலம். இடி மின்னல் இருக்கும் பொது பவரை எடூத்து விடுவது நால்லது

என்னவன் விஜய்
20-09-2007, 06:23 PM
பொதுவக நீங்கள் மின்னோட்டத்தை நிறுத்திவிடுவதே நல்லது.
அவை வேலை செய்யும் போது எடுக்கும் சக்தியின் 7% னை அவை உள்ளுறையும் போது எடுக்கின்றன.
சிறு துளி பெரு வெள்ளம்