PDA

View Full Version : இனி பிரிவோம்



ரிஷிசேது
06-08-2007, 04:53 PM
என் எல்லா சுக துக்கங்களிலும்
பங்கெடுத்துக்கொள்வதாகக் கூறித்தானே
என் வளைகரம் பிடித்தாய்?
-இப்போதென்னவாயிற்று?

என் குறைந்தபட்ச கோரிக்கைகளை
(புரிந்துகொள் என் பேச்சினை என குறிப்பிடவில்லை)
கேட்பதற்குக்கூட நேரமில்லாதது போலவும்
என் உணர்வுக்களுக்கு ஓரணுவளவு மதிப்பளித்தால்
உன் ஆண் மமதைக்கு கேவலமாகிவிடுமெனவும்
நீ நடந்துகொள்ளும் விதத்திலிருந்து நானறிகிறேன்
என் சோம்பேரிக் கணவனே....

என்னோடு ஏழடி நடந்து என் கால்
விரலுக்கு மெட்டி மாட்டுகையில்
நீ என்ன நினைத்திருந்தாயோ
எனக்குத் தெரியாது - ஆனால் நான்
எனக்கொரு நண்பன் கிடைத்திருப்பதாகத்தான்
நினைத்திருந்தேன்....

இதற்குமேல் என்னால்
என் எலும்பை ஊடுறுவும்
உன் அமில வார்த்தைகளை
கேட்டுக்கொண்டும்,
உன் ட்ராகுலா வகை
சிரிப்பை ரசித்துக்கொண்டும்
நாய்வால் போலதான் உன்
நடத்தைகளைத் திருத்திக்கொண்டும்
காலம் தள்ளவேண்டிய கட்டாயம்
எனக்கில்லையெனத்தான்
நினைக்கிறேன்....

என்னால் போராட முடியும் உன்னோடு ஆனால் எனக்கு நீ சரியான
எதிரியில்லை - வா என் சுயநல விரும்பி நண்பனே
முடிவுசெய்வோம் எப்போது பிரிவதென
நாளை வரைக்கூட என்னால்
பொருத்திருக்க முடியாது - இப்போதே
இந்தக்குளிர் இரவிலேயே முடிவு செய்வோம்
நீ உன்னை தயார் செய்துகொள்ளும் வரை
என்னால் உன்னோடு வாழமுடியாது
என்னோடு நீயோ உன்னோடு நானோ
இனி ஒத்துப்போவதற்கு சாத்தியமில்லை
என்றானபின்னும் இன்னும் ஏன் தாமதம்

நம் உறவுகள் மீதான பயம் எனக்கில்லை
எனக்கு உண்மைகளை ஒத்துக்கொள்ளும்
தைரியமுண்டு - உனக்கது இன்னும் எளிது
என் மீது எதேனும் பழி சுமத்தி தப்பித்துக்கொள்வாய்
ஒன்றே ஒன்றுதான் உனக்கு
என்னோடு வாழ வேண்டிய கட்டாயத்தை
ஏற்படுத்தியிருக்கமுடியும் - அது
நான் மென்பொருள் வேலை செய்து
கண்ணெரிய சம்பாதிக்கும்
ஐந்திலக்க சம்பளம் தவிர
வேரென்ன?

எழுந்திரு என் சோம்பேரிக்கணவனே
கைகுலுக்கி பிரிவோம்
சட்டங்கள் செய்வதும்,
ஆள்வதும் இனி பாரினில்
பெண்கள்.......
எனவே நாம் கோர்ட்டுக்கெல்லாம்
போக வேண்டியதில்லை....
இதிலாவது ஒத்துப்போ
பிரிவோம்......

அடுத்த நிமிடம் ஒளித்து வைத்திருக்கும்
ஆச்சர்யங்களையும்
எதிர் படும் சம்பவங்களையும்
சமாளித்துக்கொள்ளும்
எல்லையில்லா நம்பிக்கையோடு
இனி பிரிவோம்...

ஓவியன்
06-08-2007, 05:03 PM
யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு யதார்த்தத்தை எதிர் கொள்ளத் துணிந்த ஒருத்தியின் கதை இங்கே − கவிதையாக........

நம் உறவுகள் மீதான பயம் எனக்கில்லை
எனக்கு உண்மைகளை ஒத்துக்கொள்ளும்
தைரியமுண்டு - உனக்கது இன்னும் எளிது

இந்தக் கவிதையின் மூல அஸ்திவாரமே இந்த வரிகள் தானோ?, உண்மைகளை ஒத்துக் கொள்ள தைரியம் வந்ததால் எடுத்த முடிவு தான் இதோ?, இந்த முடிவுக்கு இந்த வரிகள் கூடக் காரணமாயிருக்கலாம்

கண்ணெரிய சம்பாதிக்கும்
ஐந்திலக்க சம்பளம் தவிர
வேரென்ன?


இப்படி நடைமுறை யதார்தங்களை அலசி கவி படைத்த உங்களுக்கு என் வாழ்த்துக்களும் ஆயிரம் இ-பணங்களும் ரிஷி!!! :nature-smiley-002:

அக்னி
06-08-2007, 05:11 PM
சகித்துக்கொண்டு வாழ,
தாம்பத்தியம்..,
பத்தியமல்ல...

சிறப்பான கவிதை...
ஆனால், கவிதையின் வடிவில், இன்னமும் மெருகூட்டல் இருப்பின் சிறப்பு, இன்னும் ஈர்க்கும்.
பாராட்டுக்கள் ரிஷிகேது...

ஆனாலும், தமக்குள் பேசி பிரிவுகள் ஏற்படத் தொடங்கிவிடுமானால்,
உலகம் இன்னமும் நரகமாகிவிடும்...
தருணத்தே ஏற்படும் சிறு பிரச்சினைகளும் பிரிவில் முடிந்துவிடும் அபாயம் சாதாரணமாகிவிடும்.
மணவிலக்கு, சட்டத்தின் பிடியில் இருப்பது, விலக்களிக்க என்பதைவிட, இணைத்துவைக்க ஏதுவான முயற்சிகளுக்காக என்பதே உண்மை.

ஓவியன்
06-08-2007, 05:20 PM
ஆனாலும், தமக்குள் பேசி பிரிவுகள் ஏற்படத் தொடங்கிவிடுமானால்,
உலகம் இன்னமும் நரகமாகிவிடும்...
தருணத்தே ஏற்படும் சிறு பிரச்சினைகளும் பிரிவில் முடிந்துவிடும் அபாயம் சாதாரணமாகிவிடும்.
மணவிலக்கு, சட்டத்தின் பிடியில் இருப்பது, விலக்களிக்க என்பதைவிட, இணைத்துவைக்க ஏதுவான முயற்சிகளுக்காக என்பதே உண்மை.

உண்மைதான் அக்னி!, அவரது கவிதையில் இந்த புள்ளி இல்லைதான், ஆனால் இந்த வரிகளை அதற்கான காரணமாக ரிஷி கொடுத்திருந்தார் போலத் தெரிகிறது.

நீ உன்னை தயார் செய்துகொள்ளும் வரை
என்னால் உன்னோடு வாழமுடியாது

அக்னி
06-08-2007, 05:26 PM
உண்மைதான் அக்னி!, அவரது கவிதையில் இந்த புள்ளி இல்லைதான், ஆனால் இந்த வரிகளை அதற்கான காரணமாக ரிஷி கொடுத்திருந்தார் போலத் தெரிகிறது.

நீ உன்னை தயார் செய்துகொள்ளும் வரை
என்னால் உன்னோடு வாழமுடியாது


பிரிந்து போய் எதிர்பார்த்துக் காத்திருப்பதிலும்,
சேர்ந்திருந்து, இயைந்து வாழ்ந்து, புரிந்து கொள்ளுதலே சாத்தியமானது...

அவரது வரிகளைக் கவனித்திருந்தேன்...
ஆனாலும்,
பிரிதலும் சேர்தலும்,
உனக்குள்ளும் எனக்குள்ளும்
இருப்பின்,
அது தொடர்ச்சி...
சட்டத்தின் பின்னிருப்பின்,
அது, உறுதி அல்லவா..?

இனியவள்
06-08-2007, 05:33 PM
திருமணத்தில் இணைந்த
இரு உள்ளங்கள் ஓர்
உள்ளமாக மாறாததால்
பிரிவு என்னும் பாதையத்
தெர்ந்தெடுத்து விட்டார்களோ

வாழ்த்துக்கள் ரிஷி
மீண்டும் ஒரு அழகிய
கவிதையை எமக்கு
படைத்தமைக்கு:aktion033:

ரிஷிசேது
06-08-2007, 07:23 PM
இது பெண்ணியத்தின் மீதான வர்க திரிபு . எல்லா ஆண்களும் கெட்டவர்களில்லை எல்லா ஆண்களும் உழைத்துண்பவர்களுமில்லை. கவிதைக்காட்சியில் எல்லை மீறிப்போன ஆண் ஒரு கல்வியிலும் பொருளாதாரசுதந்திரத்திலும் குறைவிலா பெண் எடுக்கும் ஒரு முடிவாகவே காட்டியிருக்கிறேன். இது தீர்வல்லவெனினும் ஒத்துபோதல் நீட்டிக்க முடியவில்லை எனவே பிரிவோம் எதிர்கால நம்பிக்கையோடு ....

இது அக்னிக்காக கொடுக்கப்பட்ட விளக்கம்.
விமர்சித்த அனைவருக்கும் நன்றி

ஆதவா
06-08-2007, 08:20 PM
விவாகரத்து பற்றீய ஒரு விவாதத்தில் எனது கருத்தைக் கொடுத்துள்ளேன். சுட்டி கீழே

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11394

இதையே கவிதைக்கான எனது கருத்தாக தருகிறேன்.

புரிந்துகொண்டு பிரியும் விவாகரத்தை வரவேற்கிறேன்.

aren
06-08-2007, 08:29 PM
பிரிவிற்குமுன்
உன் பக்கம் இருக்கும்
வாத்ததை எடுத்து
வைத்தாயா

பிரிவு என்று சொல்வது எளிது
அதை பின்னர் அனுபவிப்பது எளிதல்ல

எல்லாம் முடிந்தது என்று சொல்வது எளிது
அதை ஏற்று வாழ்வது எளிதல்ல

தப்பு நடக்கலாம்
அதை புரியவைத்து
மாற சந்தர்பம் கொடுப்பது
மனித இயல்பு

அந்த சந்தர்பம்
கொடுக்கப்படவில்லை
இந்த நீதிமன்றத்தில்

கணவன் கெட்டவன்
அது கணவனுக்கு தெரியுமா
அதை கணவனுக்கு
புரிய வைப்பவளே
மனைவியாவாள்!!!!

இந்த கவிதையின் கருத்தில் இருந்து கொஞ்சம் மாறுபடுகிறேன். இருந்தாலும் கவிதை அழகாக இருக்கிறது. வார்த்தைகளில் கோர்ப்பு அருமை. பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஷீ-நிசி
07-08-2007, 03:03 AM
ரிஷி! கவிதையின் கரு அருமை... எடுத்துக்கொண்ட வார்த்தை நிகழ்வுகள் அருமை! ஆனால் கவிதையில் கவிதைத்தனம் இல்லாதிருப்பதுபோல் உள்ளது... வார்த்தைகளில் இன்னும் ஜாலம் செய்தால், நல்ல சமூக சிந்தனையான இதுபோன்ற கவிதைகள் படிக்கிறவர்களை எளிதில் சென்றடையும்! உங்கள் கவிதையில் மேன்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்!

இலக்கியன்
07-08-2007, 08:00 AM
ரிஷி! கவிதையின் கரு அருமை... எடுத்துக்கொண்ட வார்த்தை நிகழ்வுகள் அருமை! ஆனால் கவிதையில் கவிதைத்தனம் இல்லாதிருப்பதுபோல் உள்ளது... வார்த்தைகளில் இன்னும் ஜாலம் செய்தால், நல்ல சமூக சிந்தனையான இதுபோன்ற கவிதைகள் படிக்கிறவர்களை எளிதில் சென்றடையும்! உங்கள் கவிதையில் மேன்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்!

ஷீ-நிசி உங்கள் கருத்து ஆக்கபூர்வமானது
ரிஷிசேது உங்கள் படைப்புக்கள் தொடர என் வாழ்த்துக்கள்

அமரன்
07-08-2007, 09:11 AM
ஆண்வர்க்கத்தில் இருக்கும் சில சிங்கங்களுக்காக எழுதப்பட்ட கவிதை. இந்தக்கோணத்தில் பார்க்கும்போது ஏற்றுக்கொள்ளக்கூடியது. புந்துணர்வுடனான பிரிவு என்பது சிறப்பானது. சட்டத்தின் மூலமான பிரிவுக்கு முன்னதான ஒரு வருடகாலம் கூட அப்படித்தானே. பாராட்டுக்கள் ரிஷி.

mythili
07-08-2007, 09:23 AM
ஒரு பெண்ணின் ஆழ்மனக் குமுறலை வெளிப்படுத்திய விதம் அருமை..

அன்புடன்,
மைத்து

ரிஷிசேது
07-08-2007, 05:13 PM
பிரிவிற்குமுன்
உன் பக்கம் இருக்கும்
வாத்ததை எடுத்து
வைத்தாயா

பிரிவு என்று சொல்வது எளிது
அதை பின்னர் அனுபவிப்பது எளிதல்ல

எல்லாம் முடிந்தது என்று சொல்வது எளிது
அதை ஏற்று வாழ்வது எளிதல்ல

தப்பு நடக்கலாம்
அதை புரியவைத்து
மாற சந்தர்பம் கொடுப்பது
மனித இயல்பு

அந்த சந்தர்பம்
கொடுக்கப்படவில்லை
இந்த நீதிமன்றத்தில்

கணவன் கெட்டவன்
அது கணவனுக்கு தெரியுமா
அதை கணவனுக்கு
புரிய வைப்பவளே
மனைவியாவாள்!!!!

இந்த கவிதையின் கருத்தில் இருந்து கொஞ்சம் மாறுபடுகிறேன். இருந்தாலும் கவிதை அழகாக இருக்கிறது. வார்த்தைகளில் கோர்ப்பு அருமை. பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்


ந*ன்றி ஆரென்,
க*ருத்து சிதைவு ஏற்ப*டுவ*தை த*விர்த்திருக்கிறேன் , அவ*ள*து பொருமையை மீறிய* செய்கையாக*வே நிக*ழ்ந்த* ஒரு பிரிவு அது.
இது ந*ட*க்கிற*து இதை த*விர்திருக*க*லாம்தான், க*ண*வ*ன் , ம*னைவி ம*ட்டும் வசிக்குமொரு சூழ*லில் முடியாம*ல் போன* ஒரு அனிச்சை நிக*ழ்வு அது .
த*வ*றாயின் ம*ன்னிக்க*வும்
ரிஷி

ரிஷிசேது
07-08-2007, 05:17 PM
ஷீ-நிசி உங்கள் கருத்து ஆக்கபூர்வமானது
ரிஷிசேது உங்கள் படைப்புக்கள் தொடர என் வாழ்த்துக்கள்

தங்களது கருத்தை ஆமோதிக்கிறேன் , வார்த்தைகளின் வேகத்தில் கவித்துவமான வார்த்தைகள் சிக்கவில்லை, மேலும் மேலும் முயல்கிறேன்
நன்றி ஷி நிசி, இலக்கியன்

ரிஷிசேது
07-08-2007, 05:19 PM
ஆண்வர்க்கத்தில் இருக்கும் சில சிங்கங்களுக்காக எழுதப்பட்ட கவிதை. இந்தக்கோணத்தில் பார்க்கும்போது ஏற்றுக்கொள்ளக்கூடியது. புந்துணர்வுடனான பிரிவு என்பது சிறப்பானது. சட்டத்தின் மூலமான பிரிவுக்கு முன்னதான ஒரு வருடகாலம் கூட அப்படித்தானே. பாராட்டுக்கள் ரிஷி.

நன்றி அமரன் மிக சரியாக புரிந்துகொண்டமைக்கு

அக்னி
07-08-2007, 05:21 PM
இது அக்னிக்காக கொடுக்கப்பட்ட விளக்கம்.
விமர்சித்த அனைவருக்கும் நன்றி

புரிந்து கொண்டேன் உங்கள் கவிதையிலேயே...
ஆனாலும் என் மனதில் தோன்றியதையே கூறினேன்...
விளக்கத்திற்கும், மீண்டுமொருமுறை சிறந்த கவிதைக்கும் மிக்க நன்றி...