PDA

View Full Version : உங்கள்.....!



அமரன்
06-08-2007, 03:15 PM
மன்ற நண்பர்கள் சிலருடன் அலைபேசியிலும், இணையதூதுவர்கள் உதவியுடனும் அளவளாவியதன் விளைவாக இக்கவிதை...

உறவுகளைப் பிரிந்து
உருகிய என் உயிருக்கு
உணர்ச்சியூட்டி-புது
உத்வேகம் அளித்து-என்
உணர்வுடன் கலந்துவிட்ட
உன்னத உள்ளங்களே..!

மென்பொருள் ஓவியர்கள்
மெருகேற்றிய முகங்களில்-உம்
மேனிகளை உருவகித்தேன்.

உம்விரல்களின் நுனிகள்
உந்திச்சொன்ன வரிகளில்
உங்களை வரித்தேன்.

கோடுகள் தாண்டி வாழும் நீங்கள்
கொட்டிய எண்ணங்களை
கொண்டுவந்து சேர்த்தது
கொட்டிய வானம்.

காதில் வீழ்ந்த துளிகளில்
கானலான வர்ணங்களுடனும்
கணினி தூதுவரின் உளிகளால்
கற்சிலையான கற்பனைகளுடனும்

ஒலிவார்த்தைகள் ஒழித்துவிட
ஒளிவார்த்தைகள் ஒலிக்குமந்த
ஒளிமயமான காலத்துக்காய்
தவமிருக்கிறான் உங்கள்,

ஷீ-நிசி
06-08-2007, 03:34 PM
கன்னிப்பேச்சினைவிடவும், இந்த கணிணிப்பேச்சில் சொக்கிப்போன அமரனின் கவி வரிகள்... அழகாகவே உள்ளன! வாழ்த்துக்கள்!

ரிஷிசேது
06-08-2007, 04:55 PM
அழகான கவிதை பாராட்டுக்கள் அமர்
ரிஷிசேது

அக்னி
06-08-2007, 04:56 PM
அலைகள் சுமந்து வந்த,
மனங்களைச் சுமக்கும்,
உருவங்களை காணும்,
தருணங்கள் கைகூடும்...
காலம் பார்த்து,
எதிர்பார்த்திருப்போம்...
காலம் கனிந்ததும்,
பார்த்துக் களிப்போம்...

கணினிக்கு நன்றி...
அமரனுக்குப் பாராட்டுக்கள்...

இனியவள்
06-08-2007, 05:46 PM
வாழ்த்துக்கள் அமர் அழகான கவிதைக்கு :aktion033:

உயிரோட்டமாய் உங்கள் உணர்வுள்
சிற்பம் போல் செதுக்கி இருக்கின்றீர்கள்
கவர்ந்திழுக்கும் வரிகளை

ஓவியன்
06-08-2007, 06:05 PM
அடடே இப்படிக் கூட கவி எழுதலாமோ???

அருமை அமரா அருமை............!

விகடன்
06-08-2007, 06:15 PM
அலைபேசியில் அளவளாவிதையே கவிதையாக வரையும் வல்லமை படைத்த அமரா
உமக்கும் உமது அலைபேசிக்கும் எனது வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும்.

ஆதவா
06-08-2007, 07:36 PM
வாழ்த்துக்கள் அமரன்...

கவிதை வடிவமைப்பில் நல்ல தூரத்திற்கு வந்துவிட்டீர்கள்.. என்னால் இது மட்டுமே சொல்லமுடியும். இன்னும் எட்டப்பிடிக்க பல உண்டு... முயன்று பெறுங்கள்...

அமரன்
06-08-2007, 07:46 PM
கருத்துரைத்து உரமிட்ட அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றி.

ஆதவா..ஆரம்பாகாலத்தில் நீங்கள் சொன்னது இப்போது மட்டுமல்ல எப்போதும் என்மனதில் பசுமரத்தாணிபோல் இருக்கும்.


இன்னும் எழுதுங்கள்.
எழுதியதை படியுங்கள்.
மெருகேற்றுங்கள்.
எழுதுவதற்காகவும் படியுங்கள்.
உங்கள் எழுத்துகளில் திருப்தி அடையாதீர்கள்.

இது இளசுஅண்ணனும் நீங்களும் சொன்னவை. கவிதைக்கும் கொஞ்சம் மாற்றினால் வாழ்க்கைக்கும் பொருந்தக்கூடியது.

aren
06-08-2007, 07:50 PM
அருமை அமரன். நண்பர்கள்தான் உலகம் என்று சொல்லும் அழகான கவிதை. பாராட்டுக்கள்.

இதற்கு மேலும் பல உலகங்கள் உள்ளன வாழ்க்கைப் பாடம் கற்கும்பொழுது. அதையும் கொஞ்சம் பார்வையிட்டு அலசுங்கள், பல உண்மைகள் புலப்படும். அதற்கு என் வாழ்த்துக்கள்.

தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

சிவா.ஜி
07-08-2007, 04:56 AM
இதுதான் அமரன் என்று சொல்லவைக்கும் கவிதை. எல்லோரும் எல்லோருடனும் பேசுகிறார்கள்,சில மறக்கப்படுகின்றன,சில மறைக்கப்படுகின்றன,சில மனதில் நிற்கின்றன,சில அசைபோட வைக்கின்றன ஆனால் அமரனைக் கவிதை எழுத வைக்கின்றன. வார்த்தைகளை கையாண்டவிதம் அருமை. சந்தங்கள் கொஞ்சுகின்றன.அதில் ஏக்கங்கள் மிஞ்சுகின்றன.எதிர்பார்ப்புகள் நிறைவேறும்போது கிட்டப்போகும் மட்டற்ற மகிழ்ச்சி மற்றுமொரு மகத்தான கவி வரிகளாக உருவெடுக்கும் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள் அமரன்.

இதயம்
07-08-2007, 05:10 AM
உணர்வாய் உணர்ந்ததை கவிதையாய் சொல்லிவிட்டீர்கள். கை வந்த கலையாக இருக்கும் உங்களின் கவிப்புலமையின் மேல் நான் கை வைத்தால் மட்டும் கை வந்த"கொலை"யாய் மாறிவிடுகிறது. ச்ச்சீய்.. ச்ச்சீய்.. இந்த பழம் புளிக்கும்..!!

அற்புத கவிக்கு பாராட்டுக்கள்..!!

ஆதவா
07-08-2007, 05:42 AM
அமரன்.. நன்றாக புரிந்துவைத்திருக்கிறீர்கள். திருப்தி அடையக்கூடாத சில விஷயங்கள் இருக்கிறது.. கவிதைகள் அந்த மாதிரிதான்.. முழுமை அடையும் வரை தாகம் இருந்துகொண்டே இருக்கவேண்டும். அதிலும் கொடும் தாகம். தண்ணீர் ஊற்ற ஊற்ற வளரவேண்டும் தாகம்... இந்த மாதிரியான முரண்களை ஏற்று வருவதானால் கவிதைகள் என்ற உலகத்தில் அரசனாக அல்லாவிடினும் இளவரசனாக ஊர்சுற்றலாம்.

முயற்சி திருவினையாக்கும்

இலக்கியன்
07-08-2007, 07:54 AM
கணனி பேச்சினால் பிறந்தகவிதை நன்று

அமரன்
07-08-2007, 08:44 PM
நன்றி ஆரென் அண்ணா. கண்டிப்பாக அலசுவேன் அண்ணா.
நன்றி சிவா...அழகிய பின்னூட்டம். பொன்னாளுக்கு காலம் வழிசமைக்க பிரார்த்திப்போம்.
நன்றி இதயம்-இனிமையாகவும் கொலைசெய்யலாம். கவிதைக்கொலைகள் இனிமையானவை.
மீண்டும் நன்றி ஆதவா. மூச்சிருக்கும் வரை முயற்சிப்போம் ஒவ்வொருவரும்.
நன்றி இலக்கியன்.

இளசு
07-08-2007, 09:12 PM
நவீன யுகம் தந்த
சுகமான அவஸ்தைகளில்
முகம் காணா நட்பும் ஒன்று!

அதை இத்தனை சொல்நயத்தில்
ஆழ்மனம் உணர்ந்தபடி வடிக்க
அமரனால் மட்டுமே இயலும்!

முன்னெல்லாம் பென்ஸ் விமர்சனம் பார்த்தால்
என் விமர்சனமா இது என மயங்குவேன்!
சிவாவும் இதயமும் இப்போது அந்த இனிய பட்டியலில்!

இனிய பென்ஸ்!
நம் ஒத்த அலைவரிசை இப்போது அகலப்பாட்டையில் (பிராட் பேண்ட்)

மகிழ்ச்சி ஆழப்பாதையில்!