PDA

View Full Version : ரிதுவேந்தர் - புதிய தொடர்கதை



leomohan
06-08-2007, 10:06 AM
முன்குறிப்பு

இந்த கதை கல்ட் Cult என்று சொல்லப்படும் கருத்தை அடிப்படையாக கொண்டது. இதை பற்றி இங்கு படிக்கலாம் http://en.wikipedia.org/wiki/Cult

இதை பற்றி நானும் கதைகளின் நடுவே தகவல் கொடுத்துக் கொண்டிருப்பேன்.

பயந்த சுபாவம் கொண்டவர்கள் சுலபமாக பீதி அடைபவர்கள் இந்த கதையை படிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் (:-) சும்மா சும்மா)

leomohan
06-08-2007, 10:09 AM
வாசகர்கள் படிப்பதற்கு

http://en.wikipedia.org/wiki/Order_of_the_Solar_Temple

http://en.wikipedia.org/wiki/Aum_Shinrikyo

http://w3.cultnews.com/archives/000498.html

இது தயார் செய்யத்தான் உங்களை :-)

leomohan
06-08-2007, 10:10 AM
http://www.au.af.mil/au/awc/awcgate/cpc-conf2000/post/img016.gif

leomohan
06-08-2007, 10:11 AM
http://www.raptureready.com/photo/grave/david_koresh2.jpg

leomohan
06-08-2007, 10:14 AM
Cult Leaders குணாதிசயங்கள்

1. Glibness/Superficial Charm

2. Manipulative and Conning
3. Grandiose Sense of Self
4. Pathological Lying
5. Lack of Remorse, Shame or Guilt
6. Shallow Emotions
7. Incapacity for Love
8. Need for Stimulation
9. Callousness/Lack of Empathy
10. Poor Behavioral Controls / Impulsive Nature
11. Early Behavior Problems / Juvinile Deliquency
12. Irresponsibility / Unreliability
13. Promiscuous Sexual Behavior / Infidelity
14. Lack of Realistic Life Plan / Parasitic Lifestyle
15. Criminal or Entrepreneurial Versatility


http://www.skeptictank.org/hs/cprofile.htm

lolluvathiyar
06-08-2007, 11:13 AM
இன்னும் கதை ஆரம்பிக்கவில்லையே கல்ட்(Cult) அகல்ட் (Occult) இரன்டும் ஒன்று தானா மோகன் அவர்களே

leomohan
06-08-2007, 11:15 AM
Occult means "hidden". It covers practices that are not approved of by God eg, astrology (Isaiah 47:13), casting spells (Deut. 18:11), consulting with spirits (Deut. 18:11), magic (Gen. 41:8), sorcery (Exodus. 22:8), witchcraft (Deut. 18:10), and spiritism (Deut. 18:11). Occult practices such as Ouija boards, tarot cards, astrology charts, contacting the dead, sances, etc. are to be avoided by the Christian and Jews alike.


cult

In religion and sociology, a cult is a group of people (often a new religious movement) devoted to beliefs and goals which may be contradictory to those held by the majority of society. Its marginal status may come about either due to its novel belief system or due to idiosyncratic practices that cause the surrounding culture to regard it as far outside the mainstream.

leomohan
06-08-2007, 11:45 AM
1
மத்திய உளவுத்துறையின் பிராந்திய அலுவலகத்தில் உயர் அதிகாரிக்கு எதிரில் ரமேஷூம் ஜெயாவும் அமர்ந்திருந்தனர். ரமேஷ் தமிழகத்தின், ஏன் இந்தியாவின் தலை சிறந்து உளவு அதிகாரிகளில் ஒருவன். ஜெயா தடவியல் தொழில்நுட்பத்தில் வல்லவள்.

நீங்க மிஷனுக்கு தயாராக இருக்கீங்களா

ஏவரெடி சார்

மிஷனுக்கு பெயர் Certain Death

ஹா ஹா. பேரே பயங்கரமாக இருக்கே

ஆமா. மிஷனும் அதுபோலவே பயங்கரமான மிஷன் தான்

சொல்லுங்க

ஒருவேளை நீங்கள் இருவரும் திரும்பாமல் போகலாம். இல்லை ஒருவர் மட்டும் திரும்பி வரலாம். ஆனால் நீங்கள் இருவருமே திரும்பி வரவேண்டும் என்பதே என் ஆசை. ஒருவேளை உங்களை இழக்க விரும்பாமல் மற்ற அதிகாரிகளை அனுப்பிருந்தால் அவர்கள் கட்டாயம் திரும்ப மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நன்றி சார்

அடுத்த வாரம் நீங்க இரண்டு பேரும் மொரிஷியஸ் போகறீங்க. அதற்கான டிக்கெட் இதோ. இது தான் இந்த மிஷனுக்கு உங்களுடைய கெட்டப். இது உங்களுக்கு ஜெயா. மொரிஷியஸில் ஒரு மாதம் பயிற்சி. நீங்க கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. முதலில் துளு பாஷை கத்துக்கணும். அப்புறம் நீங்க இரண்டு பேரும் கொஞ்சம் நிறத்துல கறுக்கனும்.
சார் நான் ஏற்கனவே கறுப்பாக தான் இருக்கேன் என்றாள் ஜெயா ஹாஸ்யமாக.

மெதுவாக சிரித்துவிட்டு மேலே தொடர்ந்தார் அந்த உயர் அதிகாரி.

இந்த மிஷன் நம்ம மூணு பேருக்கு தவிர சீஃபுக்கு மட்டும் தான் தெரியும். அதனால இதை பத்தி ஏதுவும் பேச வேண்டாம். ஆபீஸ்ல நீங்க டிரெயினிங்க போறதா சொல்லியிருக்கேன். அங்கே போன பிறகு உங்கள் பயிற்சியாளர் என்னென்ன பயிற்சிகள் நீங்க செய்யனும்னு சொல்லுவாரு.

மிஷன் என்ன சார்

கல்ட் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா.

ஆமா சார்.

தமிழகத்தின் தென்மாவட்டத்துல சில வருடங்களாக பிரபலமாக இருக்கும் ஒரு கல்டில் சமீபகாலத்தில் இரண்டு கொலைகள் விழுந்திருக்கு. அதை விசாரணை செய்ய போன ஒரு போலீஸ் அதிகாரியும் கொல்லப்பட்டிருக்காரு.

கொலை நடந்ததுன்னு நேரா போயி அரெஸ்ட் செய்து கேஸ் போடலாமே சார். அதுக்கு ஏன் நம்மகிட்ட வந்திருக்காங்க

நீங்க சொல்றது சரிதான் ரமேஷ். ஆனா அப்படி செஞ்சா அந்த கல்ட்டோட முழு விபரங்களும் அவங்க இயங்கும் விதமும் அவர்களுடைய தொடர்புகளும் தெரியாமல் போயிடும். மேலும் உயிர் சேதம் வருவதை நாங்கள் விரும்பவில்லை. நீங்க உடனே அங்கே போயாகணும் ஆனா நீங்க பயிற்சி இல்லாமல் போனா உங்கள் உயிருக்கும் இந்த வேலைக்கும் ஆபத்து.

சரி சார்.

ரமேஷ் தன்னுடைய உருவத்தை கணினியில் வைத்து அவனை வேறுவிதமாக செய்யப்பட்ட புகைப்படத்தை பார்த்தான். சார், நான் ஒரு போஸ்ட் மேனா

ஆமா

நீங்க என்று ஜெயாவை பார்த்து கேட்டான்.

நான் போஸ்ட் மேனோட நடுத்தர குடும்பத்து பெண்டாட்டி என்றாள்

ஹையா ஜாலி என்றான் கிண்டலாக

ஓகே பாய்ஸ் இந்த கோப்பில் இருக்கும் விபரங்களை நல்லா படிச்சு வையுங்க. ஏதாவது கேள்வி இருந்தா தயங்காம கேளுங்க. இதோ இது தான் நம்ம இன்டெர்னேஷல் மொபைல் எண்கள். இதில் இந்த சிவப்பு நிற பொத்தானை அமுக்கிட்டு பேசினா நம்ம உரையாடல்கள் எல்லாம் encrypt ஆகி விடும். யாராலேயும் கண்டுக் கொள்ள முடியாது.

அது மட்டுமில்ல சைட்டுக்கு போன பிறகு எங்களை எப்படி தொடர்பு கொள்றதுன்னு அப்புறமாக விவரிக்கிறேன். நீங்க இரண்டு பேரும் போகலாம் என்றார்.

யோசனையுடன் இருவரும் வெளியேறி தங்களது அறைக்குள் நுழைந்து கணினியின் முன் அமர்ந்தனர். கூகிளில் பல மணி நேரம் ஆராய்ச்சிகள் தொடர்ந்தன.

leomohan
06-08-2007, 12:07 PM
2

கல்ட் குழுக்களை பற்றி அறிய அவர்களுக்கு பல மணி நேரங்கள் பிடித்தன. உலக நாடுகளில் வளர்ந்த வளராத வளர்ந்துக் கொண்டிருக்கும் நாடுகள் என்று எந்த நாட்டையும் விட்டு வைக்கவில்லை இந்த குழுக்கள்.

ஆச்சர்யப்படும் விஷயம் என்னவென்றால் வளர்ந்த நாடுகளில் இவ்வாறான குழுக்கள் அதிகம் காணப்பட்டன.

பல குழுத்தலைவர்களி பிடிக்கப்பட்டாலும் இன்னும் ஆயிரமாயிரம் பிடி படாத தலைவர்கள் அதிகம் இருந்தனர்.

பதவி வெறி, உலகை ஆளும் நோக்கம், மக்களை கட்டுபடுத்ததுல், தன் வசப்படுத்ததுல், பாலியியல் கொடுமை படுத்துதல், அடிமைகளாக நடத்துததல், பணம் மாற்றம் செய்தல், கொள்ளையடித்தல், ஏமாற்றி பணம் பறித்தல், பெண் வியாபாரம், உடல் உறுப்பு விற்பனை, கள்ளப் பணம், கறுப்பு பணம், ஹவாலா, எண்ணிக்கையில்லா கொலைகள், ரகசியம், இருளில் ஆட்சி என்று அனைத்து வகை சமுதாயத்தின் கொடுமைகளும் வடிகால்களும் கழிவுகளும் இணைந்து பயங்கர சொரூபமாய் இந்த குழுக்கள்.

கல்ட் என்பதை தமிழில் சொல்ல வேண்டுமானால் சமய வழிபாட்டு முறை என்று சொல்லலாம். ஆகல்ட் என்பது ரகசிய மந்திரம், அல்லது ரகசியமாக செய்யும் வித்தைகள். இவற்றை கடவுள் ஏற்காத முறைகள் என்றும் கூறுகிறார்கள்.

ஆனால் இந்த முறையை வைத்துக் கொண்டு படித்த, படிக்காத, பணக்கார, ஏழை என்று சமூகத்தின் அனைத்து சாராரையும் ஆட்டி படைகின்றனர் சில சக்தி வாய்ந்த மக்கள்.

பச்சை குத்தி கொள்வது, விநோதமாக வணக்கம் சொல்வது, விநோதமான பழக்கங்கள், எப்போதும் யாருக்கும் தெரியாமல் ஏதாவது செய்வது, யாருடன் பேசாமல் அமைதியாக இருப்பது, சம்பந்தம் இல்லாமல் அழுவது, தன்னை மற்றவர்கள் தொட்டால் புனிதத்துவம் இழந்துவிடுவோம் என்று நினைப்பது, தான் உலகை காக்க வந்தவர்களில் ஒருவன் என்று நினைப்பது, உலகில் எல்லோரும் கொடியவர்கள் கல்டில் உள்ளவர்களை தவிர என்று நினைப்பது போன்றவற்றை வைத்து ஒருவன் ஏதோ ஒரு கல்டில் மாட்டிக் கொண்டான் என்று கண்டறியலாம்.

இப்படி பல விஷயங்களை சேகரித்த பிறகு சுமார் மாலை 7 மணிக்கு இருவரும் அலுவலகத்தின் கான்பிரென்ஸ் அறையில் காபி கோப்பைகளுடன் சந்தித்தனர்.

leomohan
06-08-2007, 12:22 PM
3

ரமேஷ் பிபிசி இணையதளத்திலிருந்து இது கிடைச்சுது. 1994 48 பேர் தற்கொலை பண்ணிகிட்டு இறந்து போயிட்டாங்க ஜெனேவா பக்கத்துல். இது சூரிய கோவில் எனும் கல்ட்டை சேர்ந்தவங்க.

அனைவரும் பல்வேறு வகையா இறந்திருக்காங்க. சிலர் துப்பாக்கியால சுட்டுகிட்டு, சிலர் தலைக்கு மேலே ப்ளாஸ்டிக் பையை போட்டுகிட்டு. ஆச்சர்யமான விஷயம் என்னென்னா, இவங்க நட்சத்திர வடிவுல படுத்துக் கிடக்காங்க. ஒவ்வொருத்தரும் இன்னொருத்தர் கையை பிடிச்சிகிட்டு இருக்காங்க.

இதுபோலவே 1978ல் கயானாவில் 914 பேரும், டெக்சாஸில் 80 பேரும் இறந்து பேயிருக்காங்க. கேட்கவே பயங்கரமா இருக்கு. இதோ இந்த லிங்கில் வீடியோ இருக்கு பாருங்களேன் என்று ஒரு காகிதத்தில் எழுதி கொடுத்தாள். http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/october/5/newsid_3933000/3933957.stm

இதை பத்தி படிக்க படிக்க பயங்கரமாக இருக்கு ஜெயா. அதுமட்டுமல்ல கலாச்சாரமும் பண்பாடும், அழகான குடும்ப கட்டமைப்பும் இருக்கற நம்ம நாட்டுல எப்படி இதெல்லாம் நுழைஞ்சுதுங்கறது தான் எனக்கு ஆச்சர்யமாக இருக்கு.

இது வளரது நல்லதில்ல ரமேஷ். நம்ம உயிரை கொடுத்தாவது இதை நிறத்தனும். இந்தியா அளவுல முடியாட்டா கூட நம்ம தமிழ் நாட்டை இதிலிருந்து முற்றிலுமாக காப்பாத்தறது நம்ம கடமை என்றாள் உணர்ச்சி வசத்துடன்.

ஆமா ஜெயா. உயிரை கொடுத்து தான் ஆகவேண்டியிருக்கும் அப்படின்னு நான் நினைக்கிறேன். ஏன்னா ரிதுவேந்தரை பத்தி இதுவரையில் கிடைச்சிருக்கற தகவல் மிகவும் பயங்கரமானது.

வாங்க நாம கூகிள் எர்த்தில் போய் பார்ப்போம். மேலும் பல சாட்டிலைட் படங்கள் இருக்கு. அதையும் போய் பார்ப்போம்.

சிறிது நேர அலசல்களில் இராமநாத புரம் மாவட்டத்தில் சுமார் 100 ஏக்கர் நிலபரப்பில் அமைக்கப்பட்டிருந்த அந்த குழு கூடுமிடத்தை பறவையின் பார்வையில் பார்த்தனர். பிறகு அவர்களுக்கு கிடைத்த செயற்கை கோள் புகைப்படங்களை பார்த்தனர். கல்டிலிருந்து தப்பி வந்த சிலரும், சில உறுப்பினர்கள் தடைகளையும் மீறி ஆர்வமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் உளவுத்துறை சேகரித்திருந்தது. அவை அனைத்தையும் இருவரும் பார்வையிட்டனர்.

ஒரு இனம் புரியாத பயம் உடலை தொட்டுச் சென்றது. ரம்மியமான சூழலில் அமைந்திருந்தது அந்த இடம் ரிதுபவன் என்று பெயர். எங்கும் பச்சை பசேல் மரங்கள், செடிகள், கொடிகள், பூக்கள். உறுப்பினர்கள் தங்க பல இயற்கையான பொருட்களுடன் அமைக்கப்பட்ட குடிசைகள் இருந்தன. செயற்கையான ஓடைகள் நடுவில் ஓடிக் கொண்டிருந்தன. பணக்கார உறுப்பினர்களின் கார்கள் வெளியே பல மைல் தொலைவில் விடப்பட்டிருந்தன.

சேகரித்த தகவல் படி விஞ்ஞான ரீதியான முன்னேற்றங்கள் எதுவும் நுழையக்கூடாதாம். செல்போன், கார், டிவி, குளிர்சாதனப்பெட்டி, சமையல் வாயு என்று எதுவும் இல்லையாம். மின்சாரம் கூட கிடையாதாம். இப்படியாக அந்த இடம் பல நூற்றாண்டுகளுக்கு தாண்டி பின்தங்கியிருந்தது.

இந்த குழுவுடன் பல பெரிய புள்ளிகளும் இணைந்திருந்தன. காவல் துறை அதிகாரிகளில் இருந்து, அரசாங்க அதிகாரிகள், சட்டமன்ற, நாடாளமன்ற ஏன் பிரதமரும் கூட இருப்பதாக கிடைத்த தகவல்களால் அவர்கள் அறிய முடிந்தது.

மிஸ்ட்ரி இஸ் டிபனிங்க் என்று சொன்னான் ரமேஷ்.

ஐ பீல் சோ என்றாள் ஜெயா யோசனையுடன்.

leomohan
06-08-2007, 02:45 PM
4
மொரீஷியஸில் வந்து இறங்கியது விமானம். ஏறும் போது காதில் noise suppressor போட்டுக் கொண்டாள். அத்தோடு சரிதான். ரமேஷ் ட்யூட்டி ப்ரீ புத்தகத்தை எடுத்து புரட்டிக் கொண்டிருந்தான். பிறகு மடிக்கணினியில் ஏதோ தட்டிக் கொண்டிருந்தான்.

போர்ட லூயிஸ் சிறிய நகரம். ஆனால் ஊரை தள்ளி கடற்கரையை ஒட்டி இருந்த தனியான பங்களாவிற்கு வந்து அடைந்தது அவர்களை ஏற்றிக் கொண்ட அந்த லிமோஸின்.

உள்ளே நுழைந்ததும் வரேவேற்றார் ரிஷிகேஷ். வணக்கம் நான் தான் உங்களோட துளு டிரெயினர் என்றார்.

ஹை நான் உங்களோட சர்வைவல் டெக்னிக்ஸ் டிரெயினர் என்று சிரித்தபடி உள்ளே நுழைந்தாள் ரீனா. நல்ல உயரம். நல்ல நிறம். வெள்ளைக்காரி போல் இருந்தாலும் ஹிந்தியில் பேசினாள். ஜீன்ஸ் டி-ஷர்டில் ஒரு தேவதை போல் இருந்தாள்.

வாவ் என்றான் ரமேஷ்.

வழியாதீங்க என்றாள் ஜெயா பின்னாலிருந்து.

அனைவரும் மதிய உணவை உண்டு கழித்தனர்.

கடற்கரையை நோக்கியவாறு இருந்த இடத்தில் மூங்கில் கழிகளால் ஆன இருக்கைகளில் நால்வரும் அமர்ந்தனர்.

நீங்க வந்திருக்கிற மிஷன் பத்தி எங்களுக்கு தெரியாது. ஆனால் மிகவும் பயங்கரமான சாலென்ஜிங்க் அஸைன்மென்ட் அப்படின்னு தெரியுது. ஏனென்றால் சி ஐ ஏ பயன்படுத்தும் சர்வைவெல் டெக்னிக்ஸ் சொல்லித்தர எங்களிடம் மிக குறைந்த பேரே வருகிறார்கள் என்றாள் ரீனா.

ஓ அப்படியா

என்னெல்லாம் இருக்கு இதுல என்றாள் ஜெயா.

வெல், சில கடுமையான பயிற்சிகள் இருக்கு. எத்தனை நேரம் தண்ணீருக்குள் இருக்க முடியும், உடலில் பல பாகங்களில் எலெக்டாரனிக்ஸ் கேட்ஜெட்டை பதுக்கி வைப்பது, சாப்பிடாமல் 3-4 எப்படி இருக்க முடியும், உடலை சராசரியான காம உணர்ச்சிகளுக்கு உட்படுத்தாமல் இருக்க முடியும், செயற்கையாக வாந்தி எடுப்பது, மலம் கழிப்பது, சிறுநீர் கழிப்பது, கண்களை பல நிமிடங்கள் திறந்து வைத்துக் கொண்டிருப்பது, மூச்சை அடக்கி வைப்பது ....

போதும், போதும், கேட்கவே கொடுமையா இருக்கே என்றான் ரமேஷ்.
பின்னே ஹனிமூனுக்கா வந்திருக்கோம் என்றாள் ஜெயா.

ஓ. உங்களோட வந்ததால ஹனிமூனுக்கு தான் வந்திருக்கோம்னு நினைச்சேன் என்றான் ரமேஷ்.

என்ன நக்கலா

இல்லை. நிஜமாத்தான். நீங்க தானே எனக்கு பொண்டாட்டி.
ஓ. அப்படி ஒரு நினைப்பிருக்கா. அது மிஷன் ஆரம்பிச்ச பிறகு. இது டிரெயினிங்க செஸ்ஷன் தான்.

ஓகே ஓகே கைஸ். நாளைக்கு காலைலே ஏழு மணிக்கு என்னை நீச்சல் குளத்துல சந்தியுங்கள். உங்கள் பயிற்சி ஆரம்பிக்கும் என்று கூறி விடை பெற்றாள் அந்த நெட்டை அழகி.

ரிஷிகேஷ், உங்க துளு கிளாஸ் எப்போ என்றான்.

நீங்க ஓய்வெடுங்க. நாளைக்கு 9 மணிக்கு ஆரம்பிக்கலாம். ஒரு வாரத்துல நீங்க நல்லா பேச கத்துக்கனும் என்றார்.

என்ன ஒரு வாரத்திலா

ஆமா. நம்ம துறையில் மொழி கத்துக்க நேரம் அவ்வளவு தான் என்று கூறி அவரும் விடைபெற்றார்.

பிறகு இருவரும் பல மணி நேரம் கடலை பார்த்தபடியே மிஷனை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

leomohan
06-08-2007, 03:46 PM
5
அடுத்த சில நாட்கள் மிகவும் கடுமையாக சென்றன இருவருக்கும். ஒருமுறை வாயில் ஒரு குழாய் நுழைத்து தண்ணீருக்குள் அனுப்பி பல நிமிடங்கள் ரமேஷை இருக்கச் செய்தான் ரீனா. உள்ளே சென்று உறங்கிவிட்டான் போலும். யாரோ தட்டி எழுப்பவது போல் இருக்க விழித்தவனை சுற்றி மூவரும்.

என்னாச்சு என்று ஆச்சர்யமாக கேட்டான் ரமேஷ்.

ரமேஷ் நீங்க உள்ளே போய் தூங்கிட்டீங்க. அதெப்படி முடிஞ்சுது உங்களால. இன்னும் கொஞ்ச நேரம் விட்டிருந்தோம்னா நீங்க ஜலசமாதியாகியிருப்பீங்க. நீங்க உள்ளே போய் 30 நிமிடங்கள் ஆனதால நாங்க உங்களோட திறமையை பாராட்டிக்கிட்டு இருந்தோம்

ஓ காட் என்று அலறினான் ரமேஷ். சாவை தொட்டு வந்த உணர்வு ஏற்பட்டது அவனுக்கு.

பல பரீட்சைகள் தொடர்ந்தன. நாசியின் துவாரத்தில் சிறிய கற்களை வைத்துக் கொள்வது, ஆசன துவாரத்தில் பொருட்களை வைப்பது, மூச்சை அடக்கி பல நிமிடங்கள் இருப்பது, உறுப்புகளை கட்டுபடுத்துவது, பொருட்களை விழுங்கி பிறகு வெளியே எடுப்பது, ரத்த பரிசோதனை செய்வது எப்படி போன்ற பல பல கொடுமைகள்.

தினமும் இவ்வாறு பல மணி நேரம் செல்ல நன்றாக மாலையில் மொரிஷீயஸ் காற்று வாங்கி அயர்ந்து உட்கார்ந்தனர் இருவரும். துளு வேறு போட்டு அவர்களை துவைத்தது. இவ்வளவு கடினமான மொழி இருக்குமா என்று யோசித்தனர்.

ஆனால் ஒவ்வொரு நாள் பயிற்சியும் அவர்களை கடினமாக்கி கொண்டிருந்தது. அவர்கள் சந்திக்கப் போகும் ஆபத்திற்கு தயாராக்கிக் கொண்டிருந்தது.

அவனுடைய பிரத்யேக கைபேசியில் அவனுடைய மேலதிகாரியின் அழைப்பு வந்தது.
என்க்ரிப்ட் ப்ளீஸ் என்றார்.

உடனே சிவப்பு பொத்தானை அழுத்தி பேசத்துவங்கினான்.

சொல்லுங்க சார்.

ரமேஷ், ஒரு பாட் நியூஸ், ரிதுவேந்தரை பார்க்க போன ஒரு அமெரிக்கர் மாயமாயிட்டாரு. இதுவரையில் தொலைஞ்சி போயிருக்காருன்னு தான் அமெரிக்கன் எம்பாஸிக்கு தெரியும். ஆனால், அவர் கொல்லப்பட்டிருக்கலாம்னு நாங்க சந்தேகப்படறோம். பிரச்சனை வலவாகறதுக்கு முன்னாடி நீங்க அங்கே போய் துப்பு துலக்கறது நல்லது.

ஆனா சார், பயிறசி முடிய இன்னும் 10 நாள் இருக்கே.

தெரியும் ரமேஷ். நீங்க திறமைசாலி. தமிழ் நாட்டின் ஜேம்ஸ் பாண்ட்டுன்னு சும்மாவா சொல்றோம். கிடைச்ச பயிற்சியை வைச்சிகிட்டு உடனே கிளம்புங்க. ஏன்னா, ரிதுபவனுக்கு உள்ள நுழையறதுக்கு முன்னாடியும் உங்களுக்கு பல வேலைகள் இருக்கு.

ஆமா சார். ஓகே. நாளைக்கு காலையில் நான் சென்னை வரேன். உடனே டிரெயினை பிடிச்சு ராம்நாட் போறேன்.

மறக்காம டிரெயின் டிக்கெட்டை கோபால் ராணி அப்படிங்கற பேர்ல எடுங்க. அதுதான் உங்க டிஸ்கைஸ் நேம் என்றார்.

அவசியம் சார். பை

பை என்று இணைப்பை துண்டித்தார் அந்த மேலதிகாரி.

leomohan
06-08-2007, 05:46 PM
6

ரிதுபவனின் மூன்று மைல்கல் தொலைவில் இருந்த அந்த கிராமத்தின் தபால் நிலையத்தை சென்று அடைந்தனர் கோபால்-ராணி தம்பதியர்.

வழியில் துளுவில் பேசிக் கொள்ள முயன்றனர். அடிக்கடி ஒருவர் சொன்னதை இன்னொருவர் புரிந்துக் கொள்ளாததால் தமிழ் படுத்தி பேச வேண்டியிருந்தது.

எடுத்துக் கொண்ட காரியம் கடினம் என்பதைவிட இந்த மொழி பிரச்சனை அவர்களுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது.

ஆசனவாயில் கல்வைத்து எடுக்க முயன்ற அவன் பின்புறம் ரணமாகியிருந்தது. உட்கார முடியாமல் தவித்தான்.

வருவதற்கு முன்பு ஒரு சர்ஜரி வேறு. இரண்டு பேருடைய இடது மணிக்கட்டில் ஒரு சிறிய ஜிபிஸ் சிப் வைத்து தைத்தனர்.

இது நீங்கள் எங்கே போகறீங்கன்னு சாட்டிலைட்டில் நாங்க கண்டுபிடிக்கறதுக்கு. இது மெடல் டிடெக்டரில் கண்டுபிடிக்க முடியாது.

சார் இந்த ஆபேரேஷனோட தழும்பு இருக்குமா என்று கேட்டாள் ஜெயா.

இருக்காது. கவலை படாதீங்க. உங்க கல்யாணத்துக்கு முன்னாடி வேண்டுமானாலும் ஒரு காஸ்மெடிக் சர்ஜரி பண்ணிடலாம்.

மொரிஷியஸில் கடைசியாக நடந்த உரையாடல்கள் அவர்களுடைய மனதில் வந்து சென்றன.

மிகவும் எளிமையான துணிமணிகளாக பார்த்து சரவணா ஸ்டோர்ஸில் வாங்கியிருந்தார்கள். கால்களில் ஹவாய் செருப்புகள். மொரிஷியஸில் இன்னொரு பயிற்சி உடல் கறுப்பதற்கு. தினமும் வெயிலில் பல மணி நேரம் ஒரு மருந்து தடவிக் கொண்டு படுத்திருக்க வேண்டும். ரமேஷூம், ஜெயாவும் நிறைய கருத்திருந்தனர். ரமேஷ் தபால்காரனின் உடைகள் தைத்துக் கொண்டான்.

நேராக தபால் நிலையத்திற்கு சென்று பொறுப்பேற்றுக் கொண்டான் கோபால். பிறகு போஸ்மாஸ்டரிடம் இங்கே ஏதாவது வீடு கிடைக்குமா என்று கேட்டான்.

கவலைப்படாதீங்க கோபால் நம்ம க்ளாஸ்போர் ஜெயபால் எல்லா ஏற்பாடும் செய்வார் என்றார்.

இவருக்கு மிஷன் பற்றி தெரியுமா இல்லை இவரை பொருத்த வரையில் தான் நிஜமான தபால்காரனா என்று தெரியவில்லை. பாஸிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

அந்த சந்தடி மிக்க சிறிய ஊரின் முக்கிய வீதியில் பல வீடுகளை காட்டினான் ஜெயபால். அதில் தேனீர் கடையின் அருகில் இருந்த அதிக சந்தடி மிக்க அந்த வீட்டை தேர்ந்தெடுத்தனர் தம்பதியர்.

1000 ரூபாய் அட்வான்ஸ் 200 வாடகை என்று சுருக்க பேசினார் அந்த வீட்டின் உரிமையாளர். புதியவர்கள் வருவதை அந்த ஊரில் யாரும் விரும்பவில்லை என்பது மட்டும் அவர்களுடைய சுருக்கமான பேச்சுகளால் இருவருக்கும் புரிந்தது. ஆனால் அனைவரும் பரிவாக இருந்தார்கள்.

ஜெயபால் சென்றதும் இருவரும் கடைத் தெருவிற்கு சென்று அலுமினிய பாத்திரங்கள் மற்றும் சமையல் அடுப்பு இதர வீட்டு சாமான்களை வாங்கி வந்து வீட்டை அமைத்துவிட்டு, கொண்டு வந்த நவீன மின்-அணு கருவிகளை வீட்டில் அங்கங்கு பதுக்கி வைத்தனர்.

பிறகு அருகிலிருந்து சிறிய உணவகத்தில் உண்டுவிட்டு பேசாமல் உறங்கச் சென்றனர்.

மறுநாள் காலையில் ராணி ஒரு நல்ல நடுத்தர குடும்ப மனைவியை போல காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு சாணி தெளித்து காலை சிற்றுண்டியை செய்தாள்.

கோபாலும் நடுத்தர குடும்பத்து உழைப்பாளி போல குளித்து முடித்து சாப்பிட்டுவிட்டு நேராக தபால் நிலையம் சென்றான்.

கோபால், இன்னிக்கு உங்களுக்கு சிதம்பரம் துணையா வருவார். ரிதுபவன் இருக்கறதால இங்க நிறைய தபால்கள் வர ஆரம்பிச்சிடுச்சு, அதனால் இரண்டு தபால்காரங்க வேண்டும்னு கேட்டிருந்தோம். அதனால பீட் பார்த்து இரண்டு பேரும் வேலை செய்யனும்.

சைக்கிள் இருக்கா

இல்லை சார். இப்பதான் வந்திருக்கேன். அடுத்த மாசம் சம்பளம் கிடைச்சதும் வாங்கிடறேன்.

பரவாயில்லை. போஸ்டாபீஸ்ல ஸ்பேர் வண்டி இருக்கு.

சரி சார்.

ரிதுபவனுக்கு தபால் போட போகும்போது ஜாக்கிரதையா இருக்கனும். அதிகம் பேசக்கூடாது. தபால் வெளியில் இருக்கற பெட்டியில் போட்டுட்டு வந்திடனும். யாராவது உள்ளே கூப்பிட்டா போயிடாதீங்க. எது கொடுத்தாலும் வாங்கிக்காதீங்க. சில பிரச்சனைகள் இருக்கு இந்த ஊர்ல. அது தான் தமிழ் நாட்டிலேர்ந்து யாரையும் எடுக்காம தமிழ் பேசத் தெரிஞ்ச ஆனா வெளி மாநிலத்து ஆளா உங்களை மங்களூர்லேர்ந்து வரவழைச்சிருக்கோம். போக போக தெரிஞ்சிப்பீங்க என்று பீடிகையுடன் பேசினார்.

ஆஹா. இவருக்கு நம்மை பத்தி எதுவும் தெரியாது என்று முடிவு செய்துக் கொண்டான்.

வேலை முடித்து வீட்டுக்கு போகும் முன் தேனீர் கடைக்கு சென்று அண்ணே இங்கே அது கிடைக்குமா என்றான்.

எது

அதான்னே பாக்கெட்டு

பால் பாக்கெட்டா

இல்லைண்ணே சரக்கு

சரக்கா

ஆமா

அட நீ சாராயக் கடையை கேட்கறீயா. உனக்கு அந்த பழக்கம் எல்லாம் இருக்கா

ஐயோ போஸ்ட் மாஸ்டர் கிட்டே சொல்லிடாதீங்க. வெறும் ராவுக்கு மட்டும்தான் என்றான் கோபால் நெளிந்தபடியே.

அட இதுக்கு போயி. இந்த தெருக்கோடியில் வலது பக்கம் ஒரு சந்து இருக்கு. அதுல போனின்னா ஒரு தென்னந்தோப்பு வரும். அதுக்கு நடுவில இருக்கு. 7 மணிக்கு தான் தொறக்கும். இப்பவே போயிடாதே என்றார் அந்த டீக்கடைக்காரர்.

சரி என்று மண்டையாட்டிவிட்டு அங்கே உட்கார்ந்தான்.

என்னப்பா வீட்டுக்கு போயேன் என்றார்.

என்ன வீடு அண்ணே. வீட்டுக்கு போனா ஒரு சண்டை தான்.

அப்படியா என்னப்பா பிரச்சனை.

அட போங்கண்ணே. முதல் நாளே சோக கதை சொல்றதுக்கு கஷ்டமா இருக்கு.

அட சொல்லுப்பா. ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலா இருக்கலாம்ல

அண்ணே, எங்களுக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆச்சு. இன்னும் கொழந்தையே பொறக்கலை. தினம் சாயந்திரமானா அழுவ ஆரம்பிச்சிடும். நானும் சமாதானம் பண்ணுவேன். அப்புறம் சண்டையாயிடும். அது அதோட தங்கச்சிய கட்டிக்கோன்னு சொல்றா அண்ணே. எப்படி முடியும் என்றான் கோபால் அப்பாவியாக.

சரிதாம்பா நீ சொல்றது. அத்தோட கஷ்டமும் பார்த்தா பாவமா தான் இருக்கு. இந்தா டீ சாப்புடு

அவர் பரிவாக கொடுத்த டீயை வாங்கி குடித்தான்.

பிறகு ஏழு மணி ஆனதும் சாராயக் கடையை நோக்கி நடந்தான்.

leomohan
06-08-2007, 06:04 PM
7

ரமேஷ், கல்ட் ஆரம்பிக்கறவங்க ஒருத்தரா ஆரம்பிக்கிறாங்களா இல்லை ஒரு குழுவாக ஆரம்பிக்கிறாங்களா.

இரண்டு வகையும் இருக்காங்க ஜெயா. சில பேர் தன்னிடம் மக்களை கவரும் சக்தி இருக்கறதை தெரிஞ்சிகிட்டு தனியாக தைரியமா இறங்கராங்க. இவங்க மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்கள். பணமோ, காமமோ இல்லை வேறு பல காரணங்களுக்காக மக்களை ஆக்ரமிக்க ஆரம்பிக்கிறாங்க.

சிலர் நண்பர்கள் சமுதாயத்தால சந்திக்கும் ஒரு மாதிரியான துன்பங்களால் சமுதாயத்தை எதிர்த்து இது மாதிரி குழுக்கள் ஆரம்பிக்கிறாங்க.

இந்த குழுக்களை சட்ட விரோதமா அறிவிக்க முடியாதா

கஷ்டம். சட்டத்திற்கு புறம்பா ஏதாவது நடக்கதுன்னு ஆதாரத்தோட நிரூபிச்சா தான் அது முடியும். இல்லாட்டி மத நம்பிக்கைகளில் குறுக்கிடுது அரசு அப்படின்னு பிரச்சனை வந்துடும். மேலும் கூட்டு பிராத்தனைகள் தப்புன்னு சட்டம் சொல்லலை.

மக்கள் ஏன் முட்டாள் மாதிரி இவங்க கிட்டே மாட்டிக்கிறாங்க.

இது பாருங்க ஜெயா எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை. பணம் இருக்கறவங்க கிட்டே மனசு நிம்மதி இருக்கறதில்லை, ஏழைங்க கிட்டே பணம் இருக்கறதில்லை, சிலருக்கு உடம்பில் நோய், சிலருக்கு உறவுகளில் பிரச்சனை, சிலருக்கு சமுதாயத்தின் மேல் வெறுப்பு இப்படி கஷ்டப்படற மனிதர்கள் தான் அதிகம். அப்படி இருக்கும் போது ஆறுதலா யாராவது பேசனாலோ அல்லது ஏதாவது கூட்டு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டாலோ லேசாக உணர்றாங்க மக்கள். அதை இந்த மாதிரி குழுக்கள் நல்லா பயன்படுத்திக்கிறாங்க. இதுல முழுசா மாட்டிக்கிட்டோம் அப்படின்னு அவங்க உணர்வதற்கு முன்னாலே பணம், கற்பு, உடல் உறுப்புகள் இப்படி பலவற்றை இழந்துடறாங்க.

ச்சோ ச்சோ. இதுக்கு என்ன தீர்வு.

சமநிலை இல்லாத சமுதாயம் தான் இதுக்கெல்லாம் காரணம் ஜெயா. பணக்காரன் என்னதான் பணக்காரனா ஆனாலும், தங்க தட்டில் சாப்பிட்டாலும் அவனால மூணு ரொட்டிக்கு மேல சாப்பிட முடியாது. தாதாக்களால தொல்லை, அரசியல் கட்சிகள் லஞ்சம், வரி ஏய்ப்பு எப்படி பண்ணனும், மனைவி-குடும்பம் இவர்களுடன் உறவு சரியில்லாம இருக்கறதுன்னு அவனோட பிரச்சனைகள்.

ஏழைக்கோ பிள்ளைகளை படிக்க வைக்க முடியலை, வீடு கட்ட முடியலை, உடம்பு சரியானா மருத்து வசதி பார்க்க முடியலை இப்படி கஷ்டங்கள்.

இதற்கு தீர்வு சுலபமானது அல்ல.

அப்ப வளர்ந்த நாடுகள்ல....

வளர்ந்த நாடுகள்ல வேறு பிரச்சனைகள். பெரும்பான்மையான பிரச்சனைகள் உடைந்த குடும்பங்களால வருது. தாய் ஒருபக்கம், தந்தை ஒருபக்கம், பிள்ளை இன்னொரு தந்தையை தந்தையாக ஏத்துகிட்டு வளருது. இல்லை தாய் வேறு யாரோடு உறவு வைத்துக் கொள்கிறாள். அவன் இந்த பிள்ளையை கேவலமாக நடத்துகிறான். இப்படி மன அமைதியில்லாம இருக்கறதால அதிகப்படியான கல்ட்டுகள் மேலை நாடுகளில் உருவாகின்றன. மேலும் இந்த மாதிரி கல்ட்டுகளில் கொண்டுவரப்படும் புதுமையான பழக்கங்கள் இவர்களை கவர்கின்றன.

சட்டத்தாலே மட்டுமே இதை தீர்க்க முடியாதுன்னு தோணுது ரமேஷ்.

ஆமா ஜெயா. பெரிய அளவுல மக்கள் மனசுல மாத்தம் வரணும். அதுக்கு மக்கள் தனக்கு கிடைச்சதை வைச்சி சந்தோஷமா வாழ கத்துக்கனும். இல்லை தனக்கு கிடைக்க வேண்டியதும் நியாமான வகையில் கிடைக்க வேண்டும் அப்படிங்கற மனப்பக்குவம் வரணும். மத்தவனை மிதிச்சு யாரும் முன்னுக்கு வர முடியாது.

சரியா சொன்னீங்க ரமேஷ்.

இவ்வாறாக நேற்று மதியம் சென்னை இரயில் நிலையத்தில் நின்றவாறு அவர்கள் இருவரும் பேசியதை நினைவுப்படுத்திக் கொண்டிருந்தாள் ராணி.

இரவு சமையலை புத்தகத்தை பார்த்து சமைத்திருந்தாள். கோபால் எங்கே. முதல் நாளே தன் வேலையை ஆரம்பிச்சிட்டானா. நம்ம ரோல் எப்போ.

குடித்துவிட்டு உள்ளே நுழைந்தான் கோபால். அவனால் பட்டை சாராயத்தை அடிக்க முடியவில்லை. பாதி குடித்துவிட்டு பாதி தன் உடலில் கொட்டிக் கொண்டான். அவன் உள்ளே நுழையும் போது துர்நாற்றம் தாங்க வில்லை.

உள்ளே வந்ததும் கண்ணடித்தான்.

அவள் ஜோராக அழ ஆரம்பித்து துளுவில் ஏதேதோ உளறினாள்.

அவனும் சற்று நேரம் துளுவில் உளறினான். பிறகு ஏண்டி உனக்கு சொன்னா புரியாதா கழுதை கழுதை, செத்து தொலையேன்டி, ஏன் என் உசிரை வாங்கற

இவ்வாறாக சராசரி நிலை குடும்ப சண்டை ஒரு 10 நிமிடம் நடந்தது. அவள் அழுதுக் கொண்டே வீட்டின் சொந்தகார வீட்டு வாசலில் வந்து அமர்ந்து விசும்பி அழுதாள். உள்ளேயிருந்து எட்டிப் பார்த்த அவர், பேசாமல் கதவை சாற்றிக் கொண்டார்.

leomohan
06-08-2007, 07:34 PM
8

http://mkmohan.etheni.com/rithuvendhar-chapter8-pic1.JPG

http://mkmohan.etheni.com/rithuvendhar-chapter8-pic2.JPG

மொரிஷியஸில் ஒரு மாலை நேரத்தில் அவனுடைய குறிப்பேட்டில் இருந்ததை படித்துவிட்டு ஜெயா சொன்னாள். நல்ல கம்பேரிசன்.


தாங்கஸ் ஜெயா. நாம் எப்போதும் அறிவோட மூலத்தை அதாவது source தான் குறை சொல்கிறோம். ஆனால் அறிவின் மூலம் source எதுவாக இருந்தாலும் அதன் பயன்பாடு, அதாவது application தான் சரியாகவோ தவறாகவோ ஆகிறது. அதை யோசித்து தான் இதை தயாரித்தேன்.

ஆனால் ஒன்னு விட்டுட்டீங்க.

என்ன

போலி மதவாதிகள், போலி சாமியார்கள், போலி மருத்துவர்கள், போலி ஜோதிடர்கள், இன்னும் பல போலிகள். வக்கீல்களும், ஏன் பல அரசாங்க அதிகாரிகளும் கூட போலி பட்டம் சான்றிதழ்களை கொண்டுதானே வேலைக்கு சேரராங்க.

ஆமா ஜெயா. நல்ல பாயிண்ட் சொன்னீங்க. நான் இந்த சார்ட்ல படிச்சவங்களை மட்டுமே எடுத்துக்கிட்டேன். ஆனால் போலிகளை கணக்கில் எடுத்துக்கலை.

இப்ப இந்த கல்ட் லீடர்கள் எப்படி உருவாகறாங்க.

சரி இந்த சார்ட்டை வேறுவிதமாக ஆராய்வோம்

அவளுடைய ஆழந்த சிந்திக்கும் அறிவை கண்டு வியந்தவாறு கவனித்தான். அந்த அருமையான மொரீஷியஸ் மாலை, நல்ல காற்று ஒரு இன்பமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தது. பகல் முழுவதும் பட்ட கடினங்கள் அவள் அருகில் இருக்கும் போது லேசாவது போல் உணர்ந்தான் ரமேஷ்.

யூ ஹாவ் அ சார்ம் என்றான்.

என்ன சைட் அடிக்கிறீங்களா

நானா சைட்டா இல்லவே இல்லையே. வேலைக்கு வந்திருக்கோம்மா. அதுவும் பெண்டாட்டியை யாராவது சைட் அடிப்பாங்களா.

ஹா ஹா என்று சின்னதாக அளவாக சிரித்துவிட்டு தொடர்ந்தாள்.

நாம பாக்க வேண்டிய இன்னொரு கோணம் போலி மதவாதிகளால் ஏமாற்றப்பட்டு அவர்களை அழிக்கப்புறப்படுபவர்கள். போலி டாக்டர்ஸ், லாயர்ஸ், அரசியல்வாதிகள், பணக்காரர்களால் வஞ்சிக்கப்பட்டவர்கள், சமுதாயத்தால் அவமானப்படுத்தப்பட்டவர்கள் இப்படி பல பேர் கல்ட் அமைக்க காரணமாக இருக்கலாம் இல்லையா.

அதுவும் நல்ல பாயிண்ட் தான். அவர்களை இந்த சார்டில் எப்படி கொண்டுவருவது.

கொஞ்ச நேரம் வீட்டுக்காரரின் வீட்டிற்கு முன் அழுவது போல் நடித்துக் கொண்டிருந்த ராணிக்கு இந்த பேச்சுகள் நினைவில் வந்து சென்றன. சிறிது நேரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டோம் என்று உறுதி செய்துக் கொண்டு உள்ளே சென்று உறங்கினாள். மக்களுக்கு எந்த சந்தேகமும் வரக்கூடாது என்பதற்காக ஒரே அகல பாயில் இரு தலைகாணிகள் வைத்துக் கொண்டு ஆளுக்கு ஒரு புறமாக உறங்கினார்கள். மெத்தை படுக்கை கடமைக்காக சிமெண்டு மெத்தையாக மாறியிருந்தது.

அன்புரசிகன்
07-08-2007, 05:36 AM
மிகவும் வித்தியாசமானதொரு கதை....
உங்களின் தனித்தன்மையில்...

இடையிடையே ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையான நெருடல்கள்...

அருமையாக உள்ளது. நிறைய பொதுவிடையம் அறியலாம் என எண்ணுகிறென்.

தொடருங்கள்....

பாராட்டுக்கள்.

gayathri.jagannathan
07-08-2007, 05:45 AM
'Cult' பத்தின பல தகவல்களை, தனது "மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்" புத்தகத்தில் சுவையாக/எளிமையாக* தந்துள்ளார் மதன்(கார்ட்டூனிஸ்ட்/சிந்தனையாளர்/பத்திரிக்கையாளர்....)...

"சிறு வயதில் ஏற்படும் கசப்பான அனுபவங்கள், சக வயதுக் குழந்தைகளின்/தாய்/தந்தை/ யின் புறக்கணிப்பு, என்பன போன்ற காரணங்களால் "கல்ட்" இன் தலைவன்/தலைவி உருவாகின்றனர்.. " என்பது ஆராய்ச்சியில் கண்ட உண்மை என்று எழுதியுள்ளார் மதன்...

leomohan
07-08-2007, 06:21 AM
9

மறுநாள் வழக்கம் போல பீட்டுக்கு சென்று அனைத்து கடிதங்களையும் பட்வாடா செய்தான். ஆனால் ரிதுபவனுக்கு போக வழி கிடைக்கவில்லை இன்னமும்.

டீக்கடையில் நட்பான சிரிப்பு கிடைத்தது.

சாராயக்கடையில் கைதூக்கி வரவேற்பும் கிடைத்து. மறுபடியும் பாதி குடித்து மீத துணிமணிகளில். எப்படித்தான் குடிக்கிறார்கள் இந்த கருமத்தை.

கடைத்தெருவில் மேலும் சில நட்புகள் ஏற்படுத்த முயன்று தோற்றான்.

ராணிக்கு மிகவும் போர் அடித்தது. தடாலடியாக வேலைகள் செய்து பழகியவள் இப்போது சிறையில் அடைத்த உணர்வு. போகும் வழி தெரியாமல் தவித்தாள். ஆனாலும் இந்து ரிதுபவன் ஆராய்ச்சி எத்தனை மெதுவாக நடந்தாலும் நல்லது என்று நினைத்தாள்.

வந்து சில நாட்களில் ஊரை தள்ளிப் போனால் தான் மொபைலில் சிக்னல் கிடைக்கும் என்பதை உணர்ந்தான்.

மாலையில் வேலை முடிந்ததும் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஊரைச் சுற்றி சென்று அளவெடுத்தான்.

நடுத்தர மற்றும் ஏழைகள் இருக்கும் இடம். வெளிநாட்டவர் ரிதுபவனுக்கு செல்லும் வழியில் நின்று தண்ணீர் பாட்டில் குளிர்பானம் குடிக்க நிறுத்துவதோடு சரி.

ஆனாலும் பெரிய மனிதர்கள் வந்து சென்றவண்ணம் இருப்பதை கண்டான். அவர்களுடைய கார்களின் எண்கள், மற்றும் கண்ணில் தெரியும் புதியவர்களை விரைவாக குறித்து, படங்கள் வரைந்து மாலையில் செல்லும் தபால் மூட்டையில் ஒளித்து வைக்க இவன் பெயர் சம்பந்தமில்லாமல் கடிதம் வரும். அதில் அவனுடைய மேலதிகாரிக்கு அவன் அனுப்பியவைகளுக்கு சங்கேத மொழியில் ஆனால் சரளமாக தோன்றும் மொழியில் பதிலும் வந்தது. சரி வேலை நடக்கிறது என்று ஆறுதல் அடைந்தான்.

அவன் எதிர்பார்த்த நாளும் வந்தது. சக தபால்காரர் அன்று வராததால் ரிதுபவன் பீட்டும் அவனிடம் வந்தது. மூன்று மைல் சைக்கிளில் மிதித்து அந்த வெயிலில் சற்று களைப்புடனே சென்று அடைந்தான்.

அந்த ரிதுபவனுக்கு வெளியில் பெரிய காம்பௌண்ட் சுவர் இருந்தது. வெளியில் தபால்கள் என்று போட்டு ஒரு பெரிய சிவப்பு பெட்டி இருந்தது. கண்ணுக்கு பட்டெதல்லாம் விநோதமாக இருந்தது.

முதலில் தூரத்தில் உள்ளே கண்ணுக்கு பட்ட மனிதர் அவனுக்கு அதிர்ச்சியை தந்தது. முற்றிலும் கண் புருவத்தை மழித்திருந்தான் அவன். இவனை கண்காணிப்பது போல் தோன்றியது. அதிக நேரம் செலவிடாமல் தபால்களை அங்கு போட்டுவிட்டு திரும்பினான். அதற்கு முன் பென் ஸ்கானர் மூலம் அவற்றை ஸ்கான் செய்து வைத்துக் கொண்டான். திறந்ததை தெரியாமல் கடிதங்களை திறக்கும் வகையும் சொல்லிக் கொடுத்திருந்தாள் ரீனா.

சிக்னல் கிடைக்கும் போது எம்எம்எஸ் அனுப்பினான் தலைமையகத்திற்கு.

வீட்டிற்கு வந்து மீண்டும் சண்டை நாடகம். இந்த முறை ராணி நேரடியாக டீக்கடைக்கு சென்று அழுதாள். 15 நிமிடங்கள் குறுக்கிடாத அந்த கடைக்காரர்

என்னம்மா ஏன் அழுவறே

பாருங்கண்ணே என்று உரிமையாடு ஆரம்பித்தாள் ராணி. பாருங்கண்ணே எனக்கு குழந்தையே பொறக்கமாட்டேங்குது. என் தங்கச்சியை கட்டிக்கோன்னா கேட்கமாட்டேங்குது என் வூட்டுக்காரன்.

சே. நீயே உன் வாழ்கையை இப்படி நாசாமாக்கிப்பியா

அதுல்லைண்ணே. அது தினமும் குடிக்குது. குழந்தை பொறக்கலைன்னு அதுக்கு துக்கம் தான். என் மேல உசிரையே வைச்சிருக்கு. அதனால ரெண்டாங்கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்குது. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை.

ஏம்மா ஏதாவது வைத்தியர்கிட்டே காண்பிக்க வேண்டியது தானே.

மங்களூர்ல நிறைய பார்த்தாச்சு ஒன்னும் சரியாகலை.

கவலை படாதேம்மா. இந்த ஊரல் ரிதுவேந்தர்னு ஒரு பெரிய மகான் இருக்காரு. ஒரு தடவை அவரை வந்து பாரு எல்லாம் சரியாகிடும்.

ஓ நீதான் அவனோட ஏஜென்டா என்று நினைத்துக் கொண்டு விடாமல் அழுதாள்.

நெசம்மாவா.

அட நெசம்மாதாம்மா. நீ கூட பாத்திருப்பியே. இதே தெருவ தாண்டி தான் எல்லா ஊர்லேர்ந்து பெரிய பெரிய மனுஷங்க மகானை பார்க்க வந்துட்டு போறாங்க.

அப்படியா அண்ணே. என்னையும் அழைச்சிகிட்டு போங்க. ரொம்ப புண்ணியமா போகும்.

சரிம்மா. நாளைக்கு ராத்திரி 11.30 மணிக்கு போகலாம்.

ஐயோ ராத்திரியிலா. அது திட்டுமே.

பேசாம உம் புருஷனை அழைச்சிகிட்டு வா. கோவிலுக்கு அழைச்சிகிட்டு போறேன்னு சொல்லு.

ராவுக்கா

ஆம் ராத்திரி பூஜை நடக்கும் போது போனா தான் விசேஷம்.

சரி அண்ணை. என்று நன்றாக மூக்கை சிந்தி கீழே போட்டுவிட்டு நடிகையர் திலகமாய் அவள் வீட்டினுள் நுழைந்தாள்.

அவன் கை கொடுத்து வெல் டன் என்று வாழ்த்தினான்.

leomohan
07-08-2007, 06:22 AM
10

இன்று பிரவேசம் என்று சங்கேத மொழியில் ஒரு குறுந்தகவல் அனுப்பிவிட்டு செல்போனை அனைத்து மறைவிடத்தில் வைத்தான்.

இரவு சாப்பாடு சற்று மிகுதியாகவே சாப்பிட்டு வைத்தனர் இருவரும். அடுத்த சாப்பாடு எப்போது கிடைக்கும் என்ற குழப்பத்தில்.

11.30 மணிக்கு கிராமமே இரண்டாம் ஆட்டம் காண செல்வது போல் பலரும் நடந்தும் சைக்கிளிலும் கூட்டமாக ரிதுபவனை நோக்கிச் சென்றார்கள்.

எங்குமே மின்சாரம் இல்லை. சில தீப்பந்தங்கள் மட்டும் எரிந்துக் கொண்டிருந்தன.

காம்பௌண்டில் நுழைவதற்கு முன்பே அனைவரும் சைக்கிளை கைவிட்டனர். பிறகு உள்ளே நுழையும் 100 அடிக்கு முன் அனைவருடை கையில் பச்சை நிறத்தில் ஒரு பட்டை கட்டப்பட்டது. அதில் எண்கள் இருந்தன. நூறடி தாண்டி பெரிய கதவில் நுழையும் போது அனைவருக்கும் ஒரு சிறிய பாலதீன் பை கொடுக்கப்பட்டது. முன்னால் இருந்தவர்கள் செய்வது போல் அதில் எச்சிலை துப்பி அங்கு நீல நிற உடைகளில் இருந்த ரிதுவேந்தர்கள் என்று அழைக்கப்பட்ட உதவியாளருக்கு கொடுக்க அவர்கள் அந்த கவரில் கொடுத்தவருடைய பட்டையில் இருக்கும் எண்ணை எழுதி உள்ளே வைத்துக் கொண்டார்கள்.

இதுவெல்லாமே விந்தையாக இருந்தது இருவருக்கும். வெளிச்சமில்லாததால் யாருடைய முகமும் சரியாக தெரியவில்லை. வெளியில் கும்மிருட்டு.

ராணிக்கு சற்றும் எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. அடுத்த கதவில் நுழையும் முன் அவர்களுக்கு முன்னால் இருந்தவர்கள் அனைவரும் முழுக்க ஆடைகளை அகற்றி ஒரு பையில் வைத்து உதவியாளர்களிடம் கொடுத்துவிட்டு முற்றிலும் நிர்வாணமாக உள்ளே நுழைந்தார்கள்.

ராணி சட்டென்று கோபாலை பார்த்து கண்களால், என்ன நடக்குது, நான் துணியை அவிழ்க்கமாட்டேன் என்று சாடை காட்டினாள்.

கோபால் கண்களால் அவளை அமைதிபடுத்தினான்.

சங்கடமாக துணிகளை அவிழ்த்துவிட்டு பையில் போட்டுவிட்டு உள்ளே நுழைந்தனர். ஜெயாவுக்கு மிகவும் கோபமாக இருந்தது. இந்த மிஷனில் இந்த பிரச்சனை இருக்கிறது என்று பாஸூக்கு தெரியும். இருந்தும் ஏன் நம்மிடம் சொல்லவில்லை. தெரிந்திருந்தால் இங்கு வந்திருக்க மாட்டேனே என்று நினைத்துக் கொண்டாள்.

உள்ளே ஒரு பிரம்மாண்டமான அறையிருந்தது. வெளியில் இருந்ததை விட நிறைய தீப்பந்தங்கள் இருந்தன. சற்று வெளிச்சமாக இருந்தது. முடிந்த அளவு அவனருகில் இருக்க முயன்றாள். அவளுக்கு தெரியாதவர்கள் தன்னை பார்ப்பதை விட கோபால் பார்த்துவிடுவானோ என்று சங்கடம் அதிகமாக இருந்தது. கோபாலும் அவள் கண்களை மட்டுமே பார்த்து சாடைகள் செய்து முடிந்த அளவிற்கு அவளை அமைதியாக வைக்க முயன்றுக் கொண்டிருந்தான்.

அங்கிருந்த உதவியாளர்கள் கிராமத்து உடலமைப்புகைளை விட இவள் செழிப்பாக இருந்ததை கண்டிருந்தார்கள். கண்களால் அவளை அளந்துக் கொண்டிருக்க முடிந்த அளவிற்கு அவள் சக பெண்களுக்கு பின்னால் மறைந்துக் கொண்டிருந்தாள்.

எதிரே மிகப்பெரிய மேடை தென்பட்டது. சிவப்பு நீல நிறங்களில் மிகப்பெரியதாக ஏதோ கிறுக்கப்பட்டிருந்தது. தாங்கமுடியாத ஒரு நெடி அங்கிருந்தது. இருவரும் பயிற்சியின் போது சந்திக்காத புதிய கடினங்களை சந்தித்துக் கொண்டிருந்தனர்.

இன்னும் போகப்போக என்ன வரும் என்ற பயம் ராணிக்கு ஏற்கனவே ஏற்படத் தொடங்கியிருந்தது. இந்த மிஷின் சாதாரணமானவர்களுக்கு அல்ல. உன்னைப் போன்ற திறமைசாலிகளுக்கும் தைரியசாலிகளுக்கு மட்டும் தான். நீ அப்பாவி மக்களை காப்பாற்ற வந்திருக்கிறாய். உன் உயிரை கொடுத்தாவது இதை செய்ய வேண்டும் என்று தன்னிடமே சொல்லிக் கொண்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

அன்புரசிகன்
07-08-2007, 06:38 AM
இப்படியெல்லாம் நடக்கிறதா?

என்ன கொடுமைசார்...

தொடருங்கள்.

leomohan
07-08-2007, 07:02 PM
11

அடுத்த நிகழ்ந்த நிகழ்வுகள் மிகவும் பயங்கரமானவை.

நிர்வாணமாக உள்ளே நுழைந்தவர்களுக்கு ஒரு சிறிய கண்ணாடி கோப்பைகளில் ஒரு விதமான திரவம் வழங்கப்பட்டது. கோபால் மூக்கினுள் இருந்த காலியான மருந்து குப்பிகளை கீழை குனிவது போல் குனிந்து சட்டென்று அந்த திரவத்தை அதில் நிரப்பிக் கொண்டான். சோதனை கூடத்திற்கு இதை அனுப்பி இதில் என்ன கண்றாவி இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

சிறிது மட்டும் அதிலிருந்து அருந்திவிட்டு, சே சாராயத்தைவிட மோசமாக இருக்கும் போலிருக்கே என்று எண்ணியவாறு மீதமிருந்ததை மெதுவாக யாரும் பார்க்காத வண்ணம் கீழே கொட்டினான்.

அனைவரும் வந்து முடித்தவுடன் பெரிய கதவு மூடப்பட்டது. ஒவ்வொருவரும் அமர ஒரு மர பலகை போடப்பட்டிருந்தது. மனிதரின் வேர்வை மற்றும் ஆணின் உயிர்திரவங்கள், சாராயம், மருந்து, தீ பந்ததினால் வரும் புகை போன்று பலவும் கலந்த துர்நாற்றங்கள் ராணியை படாதபாடு படுத்திக் கொண்டிருந்தன. இதோ இப்போது வரும் வாந்தி என்று பயம் காட்டிக் கொண்டிருந்தது அவளுக்கு.

ரிதுவேந்தா, ரிதுவேந்தா என்று மக்கள் திடீரென்று ஓலமிட்டனர். எதிரே இருந்த மேடையின் பெரிய கறுப்பு திரை மெதுவாக விலக, ஓலம் அதிகரித்தது.

உள்ளே இருந்து ஒரு உருவம் காற்றில் மிதந்தபடியே முன்னால் வந்து மேடையின் விளிம்பில் வந்து நின்றது.

சீப் டிரிக் என்று மனதில் நினைத்துக் கொண்டான். அவனுடைய கண்களில் இருந்த நைட் விஷன் கான்டாக்ட் லென்ஸ் மூலம் ரிதுவேந்தர் வந்தது ஒரு கறுப்பு நிற கன்வேயர் பெல்டில் என்று நன்றாக தெரிந்தது. அது மட்டுமல்லாமல் அவன் பின்னால் தோன்றிய ஆரோ மாத்திரம் மலிவான ஓளி விளையாட்டு. ஆனால் திடமான திரவம் மூலம் மூளை மந்தமாகி போன மந்திகள் அந்த சித்துவேலையை பார்த்து மகிழந்துக் கொண்டிருந்தனர்.

இரண்டு நீல நிற ஆடை அணிந்த கண் புருவம் மழிக்கப்பட்டு ரிதுவேந்தர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் அந்த கைகூலிகள் மேடையின் மேல் ஏறி எல்லோரும் பிம்ப தரிசனதுக்கு வாங்க என்று கூக்குரலிட்டனர்.

மக்கள் வரிசையாக நின்று ஒரு கண்ணாடி மூலம் இரண்டு கைகளையும் தலையின் இரண்டு பக்கங்களில் சிறிய மேசையில் வைத்துக் கொண்டு ரிதுவேந்தரை தரிசனம் செய்துவிட்டு அவரவர்களுடைய பலகைகளில் வந்து அமர்ந்த வண்ணம் இருந்தனர்.

ராணிக்கு அது ஐரிஸ் ஸ்கானர் எனும் கண்களின் அமைப்பை படம் எடுக்கும் கருவி என்பதையும் கை வைக்கும் இடம் கைரேகைளை பதிக்கும் கருவி என்றும் உடனடியாக அறிந்தாள். இது ரிதுவேந்தரின் விசுவாசிகளின் டேட்டாபேஸ் செய்ய என்பதையும் உணர்ந்தாள். வாயில் நாக்கின் கீழ் மறைத்து வைத்திருந்த பப்பிள் கம்மை எடுத்து கைகளில் வைத்துக் கொண்டு, கண்ணாடி பெட்டிக்குள் முகத்தை விடும் முன் கூந்தலால் முகத்தை மறைத்துக் கொண்டாள்.

பிறகு ஒரு பெரிய தங்கத்தட்டு எடுத்துக் கொண்டு ஒவ்வொருவரிடமும் வந்தனர். ஒவ்வொருவரும் அந்த தட்டில் கை வைக்க வேண்டும். அவ்வாறு வைக்கும் போது சிறிய கண்ணாடி குடுவை ஒன்றை தனித்தனியாக வைத்த வண்ணம் வந்தான் ஒரு கைக்கூலி.

ரமேஷ் அந்த தட்டில் கைவைத்ததும் சுரீரென்று கையில் ஒரு ஊசி துளைத்தது போல் இருந்தது. ஜெயா அங்கிருந்து உதட்டை அசைத்து ப்ளட் டெஸ்ட் என்றாள்.

இந்த நாடகங்களை பார்க்க மிகவும் வெறுப்பாக இருந்தது இருவருக்கும். படுபாவிகள் விஞ்ஞான மருத்துவ மேம்பாடுகளை பயன்படுத்தி ஒரு இனத்தையே அழிக்க பார்க்கிறார்களே என்று நினைத்துக் கொண்டனர்.

பிறகு ஒவ்வொருவரும் சென்று ரிதுவேந்தரின் கால் கட்டை விரலை முத்தமிட்டு சென்று அமர்ந்தனர். அவனும் காலை நீட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான். சே இவன் காலுக்கு முத்தமிடுவதா என்று எரிச்சல் அடைந்தாள் ராணி.

நேராக அவனிடம் சென்று பட்டும் படாமலும் முத்தமிட்டு திரும்பினாள். ஆனால் ரிதுவேந்தரின் கண்களுக்கு அவள் பட்டுவிட்டாள்.

அன்புரசிகன்
08-08-2007, 03:37 AM
மிகவும் அட்வான்ஸான பாதகர்களாக இருக்கிறார்கள்....
தொடருங்கள் மோகன்...

ஷீ-நிசி
08-08-2007, 04:01 AM
கதை செம சஸ்பென்ஸாக போகிறது.. தொடருங்கள்!

மாதவர்
08-08-2007, 04:15 AM
பயங்கரமான முயற்சி வாழ்த்துக்கள்

leomohan
08-08-2007, 05:01 AM
12

இந்த அசிங்கங்கள் நடந்து முடிந்ததும் ரிதுவேந்தர் பேசத்துவங்கினான். அங்குமிங்கும் மைக்கை ஒளித்து வைத்திருப்பார்கள் என்று இவர்களுக்கு தெரிந்தது. ஆனால் அந்த அப்பாவி மக்கள் அவனுடைய கணீர் குரலுக்கு செவிமடுத்தனர்.

இங்கு வந்திருக்கும் விசுவாசிகளே, நீங்கள் மட்டுமே உலகத்தை காப்பாற்ற இறைவனால் அனுப்பப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் மட்டுமே சுத்தமானவர்கள். உங்களை சுற்றி இருக்கும் வெளி உலகத்து மக்கள் அசுத்தமானவர்கள். அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் பாவிகள்.

உங்களை ஏன் நிர்வாணமாக அழைத்து வந்தோம். எமக்கு காம க்ரோதம் லோபம் மதம் மாஸ்ச்சர்யம் என்று எதுவும் இல்லை. நாம் கடவுளின் குழந்தை. நாம் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர்.

காமக் குரோதங்களுடன் சாதாரண வாழ்கை வாழ வேண்டுமென்றால் நாமும் பாவிகள் போன்ற திருமண வாழ்கை நடத்தியிருப்போம்.

நீங்கள் அனைவரும் எம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். நீங்கள் உலகை மீட்க வந்திருக்கும் ரிதுவேந்தர்கள். உங்களெக்கென்று பெரும்பணி காத்திருக்கிறது.

நீங்கள் இந்த உடலுடன் மேல் உலகம் செல்லலாம். இறைவனை பார்க்கலாம். வெளியே இருக்கும் பாவிகளால் முடியாதது. அவர்கள் பேராசை பிடித்தவர்கள். அவர்கள் இறைவனை காண முடியாது. வெளியே இருக்கும் அனைத்து மத கோவில்களும் அசுத்தமானவை. ஏனென்றால் அங்கே பாவிகள் நுழைந்துவிட்டனர். உலகத்தில் சுத்தமான, புனிதமான இடம் இந்த ரிதுபவனம் மட்டும் தான்.

இங்கு இறைவன் குடியிருக்கிறார். அதனால் இங்கு வருபவர்கள் எம்மை வணங்குபவர்களுக்கு எந்த குறையும் இருப்பதில்லை. ஏழ்மை இல்லை, எந்த உடல் உபாதைகளையும் இல்லை, கஷ்டமில்லை.

நீங்கள் பாவிகளுடன் இருப்பதால் உங்களுக்கு உடல் சுகவீனம் அடைந்திருந்தால் ரிதுவேந்தரின் பிரசாதம் உண்ட உடம் குணமாகிவிடுவீர்கள்.

ரிதுவேந்தர்கள் அழுவதில்லை, சிரிப்பதில்லை. அவர்களுக்கு உலக விஷயங்களில் எந்த ஆர்வமும் இல்லை. ஒரு ரிதுவேந்தர் இன்னொரு ரிதுவேந்தரை காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்யலாம். கொலையும் செய்யலாம். தப்பில்லை. கடவுள் அவரை காப்பாற்றுவார். இந்த நாட்டின் சட்டமோ எந்த நாட்டின் சட்டமோ உங்களை ஒன்றும் செய்ய முடியாது.

பணம் தான் பாவிகளாக்குகின்றன உம்மை. அந்த பணத்தை ரிதுபவனில் இருக்கும் பாவக்குழியில் போட்டுவிடுங்கள். அதை கடவுள் புனிதமாக்குவான். தங்க வெள்ளி நகைகளும் அங்கே போடுங்கள். இவை மனிதரால் செய்யப்பட்ட பாவச் சின்னங்கள்.

உங்களுக்கு தேவை உடலில் ஆரோக்யம், மனதில் உறுதி, இறைவனின் ஆசி. நீங்கள் வேலை செய்வது இந்த பாப உடலுக்கு தீணி போட மட்டுமே. அதற்கு மேல் சம்பாதிக்கும் செல்வம் பாவ சுமைகளை கொண்டு வந்து கொட்டும் உங்களிடம்.

ரிதுவேந்தர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்ற பாவிகளுடன் பேசக்கூடாது. புதியவர்களுடன் பேசக்கூடாது. ரிதுபவனை பற்றி கேட்பவர்களுக்கு பதில் சொல்லாதீர்கள். அவர்களை சாத்தான் அனுப்பியுள்ளான். இறைவனை வேவு பார்க்கும் சாத்தான்கள். அவர்கள் உங்கள் வழியில் குறுக்கிட்டால் கொன்றுவிடுங்கள்.
கணவன் மனைவி மகள் மகன் அண்ணன் தம்பி போன்ற உறவுகள் பாவிகளுக்கு தான். இங்கு யாரும் பாவிகள் இல்லை. எல்லோரும் ரிதுவேந்தர்கள். வாருங்கள் யார் வேண்டுமானாலும் யாரோடு வேண்டுமானாலும் கலந்து இன்புறுங்கள்.

சிறிது நேரத்தில் நான் இரவு பூஜை முடிந்ததும் அனைவருக்கும் பிரசாதம் வழங்குவேன். அந்த பிரசாதம் உங்கள் நோய்களை தீர்க்கும். உங்களை புனிதமாக்கும்.

நான் சொன்னதை மறக்க வேண்டாம். யாருக்கு எந்த பிரசாதம் தரப்படுகிறதோ அவர்கள் மட்டும் அதை சாப்பிட வேண்டும். இது இறைவனால் அனப்பப்பட்டது. மாற்றி சாப்பிட்டால் அவனுக்கு கோபம் வந்துவிடும்.

உடலை மறந்து உன்னத உறவுகளில் ஈடுபடுங்கள்

இவ்வாறு அவன் சொல்லி முடித்ததும் மேடை இருண்டது. மீண்டும் அவன் மெதுவாக உள்ளே சென்று மறைந்தான். பெரிய இசை எந்த பாடலும் இல்லாமல் எங்கிருந்தோ ஒலித்தது. அங்கு ஒரு கோரக் காட்சி. மனிதர்கள் ஆண் பெண் என்று வித்தியாசம் இல்லாமல் யாரோடு வந்தோம் யாரோடு உறவுக்கொண்டோம் என்பதை அறியாமல் மிருகங்களாக, கலாச்சாரங்கள் கழிந்து, இரவு நேர டிஸ்கவரி சானலில் விலங்குகளின் இனப்பெருக்க நிகழ்ச்சியை அரங்கேற்றினர்.

தலைசுத்தி வாந்தி வரும்போல் இருந்தது ராணிக்கு. யாரிடமோ மாட்டிக் கொள்ளாமல் இருக்க கோபாலை நோக்கி ஓடி வந்து அனைத்துக் கொண்டாள். அங்கு போதையில் இருந்த மிருகங்களுக்கு நடுவே போதையில்லாத இரண்டு இளம் உள்ளங்கள் கூனி குறுகி உடல் உறவு கொள்வது போல் நடித்துக் கொண்டிருந்தன. ராணியின் உடல் பதைபதைத்தது, பயத்தாலும், வெட்கத்தாலும். மொரீஷியஸ் பயிற்சி உதவிக்கு வந்தது. இருவரும் மரக்கட்டையாக உடலை ஆக்கிக் கொண்டார்கள்.

leomohan
08-08-2007, 05:02 AM
13

இந்த கோரக்கூத்து முடிந்ததும் அனைவரும் பலகையில் அமர்ந்தனர். ரிதுவேந்தா, ரிதுவேந்தா என்று மீண்டும் மக்கள் ஓலமிட அவன் அனைவரின் முன் தோன்றினான்.

இப்போது உங்கள் உடல் சுத்தப்படுத்தப்படும் என்று அவன் கூற மேலிருந்து நீர் கொட்டியது. உடல் சிலிர்த்துக் கொண்டனர் கோபாலும் ராணியும். அங்கிருந்த மந்தைக்கோ ஒரு பெரிய மாற்றம் இல்லை.

பிறகு உங்களின் மேல் சாத்தானின் சாயல் ஓட்டப்படும் என்று அவன் கூற பலகைகள் ஆடின. அனைவருடைய உடல்களும் தடதடவென ஆடியது.

சீப் டிரிக், கீழே இருந்து மின் அலைகள் வருகின்றன என்று சொல்லிக் கொண்டான் கோபால்.

பிறகு ஒவ்வொருவரும் வர அவர்களுடைய கைபட்டையில் இருக்கும் எண்ணிற்கு தகுந்தவாறு ஒரு பிரசாத பை வழங்கப்பட்டது. பிறகு அனைவரும் மெதுவாக வெளியேறி உடைகளை அணிந்துக் கொண்டு தங்கள் கைகளில் இருந்து காசுப் பணத்தை பாவக்குழியில் போட்டுவிட்டு ஊர் திரும்பினர். சுமார் 3 மணி ஆகியிருந்தது காலையில்.

மிகவும் களைத்து போன இருவரும் வீட்டிற்கு சென்றனர். ரமேஷ் வீட்டினுள் நுழைந்ததும் அவளை அணைத்துக் கொண்டான். அவள் அழுகையை நிறுத்த முடியாமல் பல நிமிடங்கள் அழுதாள்

ரமேஷ் அவள் கைகளை ஆறுதலாக பிடித்து ஜெயா, நீ எதுக்காகவும் கூனி குறுக வேண்டாம். நம்மை சுத்தி இருந்தவங்க மிருகங்க. நான் உன்னோட நாடகப் புருஷன் மட்டுமல்ல, உன்னை கல்யாணம் பண்ணிக்கப்போற புருஷனும் கூட என்றான்.

அவள் மனதில் அமைதி நிலவியது. அவனை இறுக அணைத்துக் கொண்டாள். உளவாளியென்றால் ஹாலிவுட் படத்தில் வருவது போலவா. உள்ளிருந்த தமிழ் பெண் அவளை வாட்டி எடுக்க இதோ அவளை காப்பாற்ற ஒரு தமிழ் மகன்.

ஜெயா, நாம வந்திருக்கறது ஒரு பெரிய விஷயத்திற்காக. இன்னிக்கு நடந்தது ஆரம்பம் தான். நீ மனசு தளரக்கூடாது. உனக்கு எதுவுமாக நான் விடமாட்டேன். உன் உடலோட, உள்ளத்தோட பாதுகாப்பிற்கு நான் உத்திரவாதம். ஆனால் ஒன்னு நீயும் தைரியமாக இருக்கனும். ஒருவேளை நானும் நீயும் தனியா மாட்டிக்கிட்டா நீயே உன்னை காப்பாத்திக்கிற அளவுக்கு உன்னை பக்குவப்படுத்திக்கனும்.

அவள் அமைதியடைந்திருந்தாள். அவளுக்கு சங்கடங்களை சந்திப்பது புதிதல்ல. இந்த தொழிலில் இது சகஜம். பல முறை சிக்கல்களில் மாட்டி தன்னுடைய கராத்தே மூலம் தப்பி வந்திருக்கிறாள். இன்று காயப்பட்டது அவளுடைய உடல் அல்ல, டின்சர் போட்டு சரி செய்வதற்கு. மனது. அந்த மனதிற்கு ரமேஷ் ஆறுதல் அளித்ததும் அவள் தன்னை உறுதிப்படுத்திக் கொண்டாள்.

ரமேஷ், இது ஆபரெஷன் செர்டைன் டெத்து தான். நமக்கில்லை. அந்த நாய்க்கு என்றாள் கோபமாக.

தட்ஸ் த ஸ்பிரிட் என்று அவள் தலையை தட்டினான்.

இனிமேலும் அந்த பாயில் ஒவ்வொரு பக்கம் பார்த்தவாறு உறங்கும் அவசியம் ஏற்படவில்லை.

leomohan
08-08-2007, 05:02 AM
14

அடுத்த நாள் தபால் நிலையத்தை அடைந்தவனுக்கு அவனை சிறந்த தபால் துறை ஊழியனாக தேர்ந்தெடுத்திருப்பதாகவும் அவனை உடனடியக சென்னைக்கு வரவேண்டும் என்றும் பிஎம்ஜி நாளை மறுநாள் அவனுக்கு பரிசளிப்பதாகவும் தகவல் காத்திருந்தது.

இது பாஸோட வேலையாக தான் இருக்கும். தன்னிடம் சேர்ந்திருக்கும் பொருட்களை சோதனை செய்வதற்கும் மேலும் தகவல்களை நேரடியாக ரிப்போர்ட் தருவதற்கும் சென்னை வருவதற்கு வழி தேவை என்று கேட்டிருந்தான்.

இன்னிக்கு ராத்திரியே கிளம்பி போங்க கோபால் என்றார் போஸ்ட் மாஸ்டர்.

சரி சார் என்று சொல்லிவிட்ட தபால் பட்டுவாடாவை ஆரம்பித்தான்.

மாலையில் ராணியிடம் வந்து நான் இன்னிக்கு ராத்திரியே போகனும் என்றான்.

போயிட்டு வாங்க. என்னை பத்தி கவலைப் படாதீங்க. ஐ வில் டேக் கேர் ஆஃப் மைஸெல்ப் என்றாள்.

அது அவனுக்கு மிகுந்த நம்பிக்கை கொடுத்தது. துப்பாக்கியே எடுத்து செல்ல முடியாத இடத்தில் கயவர்கள் மத்தியில் சிக்கிக் கொண்டால் தைரியத்தை தவிர வேறு எந்த ஆயுதமும் துணைக்கு வராதல்லவா. அவளுடைய தைரியத்தை பாராட்டினான். திரு உளவாளிக்கு ஏத்த திருமதி உளவாளி தான் நீ என்றான் புன்னகையுடன்.

அட ஊருக்கு போயிட்டு வாங்க மச்சான் என்றாள்.

சென்னை சென்றடைந்ததும் நேராக வீட்டிற்கு சென்று ஒரு குளியல் போட்டு, வீட்டிற்கு வந்திருந்த தபால்களை பார்வையிட்டான். பிறகு அப்பா அம்மாவுடன் தொலைபேசியில் பேசினான்.

பிறகு பைக்கை எடுத்துக் கொண்டு உளவுத்துறை பிராந்தி தலைமை செயலகத்திற்கு சென்றடைந்தான்.

அங்கு அவனுடைய உயர் அதிகாரி தயாராக இருந்தார்.

ரமேஷ், ஆளுங்கட்சி கோஷ்டி தகாறுர்ல உள்துறை அமைச்சருக்கு எதிரா செயல்பட்ட தியாகராஜன் ஒரு சாலை விபத்துல கொல்லப்பட்டாரு. அதுல உயிர்போன லாரி டிரைவர் உங்க ஊரைச் சேர்ந்தவன்.

ஓ. கட்டாயம் அவன் ஒரு ரிதுவேந்தரா தான் இருக்கனும் சார்.

மேலும் ஒரு தகவல். நீங்க கொடுத்த கார் எண்களை வைத்து பார்த்தால் தமிழ் நாட்டில் உள்ள பல விவிஐபிக்களும் ரிதுபவன் போய் வந்திருக்காங்கன்னு தெரியுது.

ஆமா சார். இது ஒரு பெரிய ஆபாயகரமான நெட்வொர்க்.

இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் கேளுங்க. அதுல முதல் நாள் நீங்க அனுப்பின கார் எண் நம்ம உள்துறை அமைச்சர் மச்சானுடையது.

ஓ காட்.

ஹா. இதுக்கே அசந்துட்டீங்க. அவரு போயிட்டு வந்து பொட்டி வாங்கிட்டு வந்திருப்பார் போலிருக்கு ரிதுவேந்தர்கிட்டே. அதுக்கு சரியா மூணாவது நாள் அவரோட மச்சான் ராம்நாடில் ஒரு புது டோயோட்டா இன்னோவா வாங்கியிருக்காரு. அதுவும் காஷ் பேமென்ட்.

அடப்பாவி. சார், இவரு பணம் கொடுத்து அவர்கட்சியில் இருக்கற எதிராளி கொல்றதுக்கு வேண்டுமானாலும் லாஜிக் இருக்கு. ரிதுவேந்தரே ஏன் கொலை செய்ய ஆளும் கொடுத்து பணமும் கொடுத்திருக்கனும். லாஜிக் உதைக்குதே.

ரமேஷ், பொட்டி கொடுத்தது ஒரு பெரிய காரியத்திற்காக இருக்கனும். ரிதுவேந்தர் தற்கொலை படை இவரோட எதிராளியை கொன்னது ஒரு போனஸ் கிஃப்ட். அதனால பெரிசா ஏதோ நடக்குது. இன்னொரு ஆங்கிள்ல பார்த்தோம்னா ரிதுவேந்தர் வெளிநாட்டு சக்தியோட உதவியோட வேலை செய்யறாரோன்னு கூட தோணுது. துபாயிலிருந்து கடந்த வாரம் மட்டும் 3 கால் வந்திருக்கு. அதுவும் ஒரு சில நிமிட இடைவெளியில்.

ஓ. எனக்கென்னமோ நாம் ரொம்ப ஜாக்கிரதையா செயல்படனும்னு தோணுது சார்.

சரி நீங்க போயிட்டு வந்த விவரம் சொல்லுங்க.

அவன் விபரங்களை கூற கூற அவருடைய கண்கள் சிவந்தன.

பாஸ்டர்ட்ஸ் என்றார் கோபமாக.

சார், இந்த குப்பியில் இருக்கற திரவத்தை உடனடியா லாப் டெஸ்ட் பண்ணனும். அதோட இந்த பிரசாத கருமத்தையும்.

உடனடியாக தொலைபேசியில் ஒருவரை அழைத்து அந்த காரியத்தை ஒப்படைத்தார்.

சார், அங்கு போற வரவங்களொடு கம்ப்ளீட் டேட்டாபேஸ் தயாராகுது. கண், ரத்த வகை, ஸ்பூட்டம் கலெக்ஷன், கைரேகையின்னு ஒரு ஆங்கில படத்திற்கு இணையா இருக்கு சார் அங்க நடக்கற வேலைகளெல்லாம்.

சே. தமிழ் நாட்டில் இது நடப்பது தான் நம்ம துறைக்கே அவமானம். எப்படி நாம் இதை வளரவிட்டோம். இந்த அமெரிக்கன் தொலைஞ்சி போயிருக்காட்டா இந்த ரிதுவேந்தர் கூட்டம் நாட்டைய அழிச்சி சின்னாபின்னமாக்கியிருக்குமே.

சார், அந்த ஊர் மக்கள் எல்லோரும் மெஸ்மெரைஸ் பண்ணவங்க மாதிரி இருக்காங்க. அங்கே யாரும் யார்கிட்டேயும் அதிகமா பேசறதில்லை. வாரத்துக்கு மூணு நாள் ராத்திரி பூஜைன்னு அந்த கருமத்துக்கு போயிடறாங்க. மத்த மூணு நாளு விஐபி வருகை. ஒரு நாள் அந்த நாய்க்கு ஓய்வு வேற.

ஜெயா எப்படி இருக்காங்க ரமேஷ். நீங்க சொன்னதை பார்த்தா மனசு கஷ்டப்படுது.

சார், அவங்க உங்க மேலே ரொம்ப கோபமா இருக்காங்க. இந்த நிர்வாண பூஜை பத்தி சொல்லலைன்னு ரொம்ப வருத்தப்பட்டாங்க.

வேற என்ன சொன்னாங்க

முன்னாலே தெரிஞ்சிருந்தா வந்திருக்க மாட்டேன்னு சொன்னாங்க

அது தான் சொல்லலை. ரமேஷ், உங்களுக்கு தெரியும் இந்த மாதிரி கல்ட்ல பொம்பளைங்க ஆம்பிள்ளைங்களை விட சுலபமா உள்ளே நுழைய முடியும்னு. அதனால தான் சொல்லலை. நம்ம கிட்டே இருக்கற பெண் உளவாளிகளிலே ரொம்ப தைரியசாலியே அவங்க தான். அவங்களே இப்படி சொல்லியிருந்தா மத்த பெண்களோட கதி என்னவாயிருக்கும்னு நினைச்சுப் பாருங்க.

ஆமா சார். ஆனா நான் சமாதானப்படுத்திட்டேன்

ஒரு நல்ல புருஷனோட வேலையை தான் செஞ்சிருக்கீங்க என்றார் சிரித்தப்படியே.

ஆமா சார் ஒரு நல்ல புருஷனோட வேலையை தான் செஞ்சிருக்கேன் என்றான் மெதுவாக புன்னகைத்தப்படி.

அன்புரசிகன்
08-08-2007, 05:34 AM
மிகவும் சுவாரசியமாகப்போகிறது.... தொடருங்கள்...

ஷீ-நிசி
08-08-2007, 06:27 AM
அடுத்து ஆவலுடன்.....

பார்த்திபன்
08-08-2007, 07:03 AM
ஒரு மர்மம் மற்றும் திகில் நாவலின் தன்மையுடன்
வீறு நடை போடுகிறது..

விரைவில் அடுத்த பகுதிகளை பதியுங்கள் அண்ணா...
ஆர்வம் தாங்கமுடியவில்லை....................

lolluvathiyar
08-08-2007, 08:53 AM
உங்கள் காதல் கதை படித்து முடித்த வுடன் அறிவியலும் மனோதத்துவமும் கிரிமினிலசமும் கலந்த ஒரு டிடெக்டிவ் நாவல் படித்த உனர்வு இருகிறது.
சீக்கிரம் தொடருங்கள்
நான் ஆண்மீக, கட்சி, மதமாற்ற கூட்டங்களுக்கு போயிருகிறேன், கவனமாக கவனித்து இருகிறேன் அங்கு மான்மெஸ்மரிசம் வேலை நடக்கும். ஆனால் அவை கலட் நோக்கமில்லாமல் இருகிறது.

அடுத்ததது உங்கள் பாத்திரம் ரிதுவேந்தர் கூறும் சில கருத்துகள் ஏற்க முடியாவிட்டாலும் என் மனதில் நியாமக்கவும் படுகிறது.
ரிதுவேந்தரின் நோக்கம் தான் வேறாக இருகிறது

leomohan
08-08-2007, 10:00 AM
ஒரு மர்மம் மற்றும் திகில் நாவலின் தன்மையுடன்
வீறு நடை போடுகிறது..

விரைவில் அடுத்த பகுதிகளை பதியுங்கள் அண்ணா...
ஆர்வம் தாங்கமுடியவில்லை....................


நன்றி பார்த்திபன் அவர்களே.

leomohan
08-08-2007, 10:01 AM
உங்கள் காதல் கதை படித்து முடித்த வுடன் அறிவியலும் மனோதத்துவமும் கிரிமினிலசமும் கலந்த ஒரு டிடெக்டிவ் நாவல் படித்த உனர்வு இருகிறது.
சீக்கிரம் தொடருங்கள்
நான் ஆண்மீக, கட்சி, மதமாற்ற கூட்டங்களுக்கு போயிருகிறேன், கவனமாக கவனித்து இருகிறேன் அங்கு மான்மெஸ்மரிசம் வேலை நடக்கும். ஆனால் அவை கலட் நோக்கமில்லாமல் இருகிறது.

அடுத்ததது உங்கள் பாத்திரம் ரிதுவேந்தர் கூறும் சில கருத்துகள் ஏற்க முடியாவிட்டாலும் என் மனதில் நியாமக்கவும் படுகிறது.
ரிதுவேந்தரின் நோக்கம் தான் வேறாக இருகிறது

நன்றி வாத்தியார். ஆம் அவன் சொல்வதெல்லாம் convincing ஆக இருக்கும். ஆனால் மக்களை பிரச்சனையில் மாட்டிவிடும். அது தான் இது போன்ற கல்ட் தலைவர்களின் தந்திரமே.

leomohan
08-08-2007, 10:01 AM
நன்றி ஷீ, நன்றி அன்புரசிகன்.

சிவா.ஜி
08-08-2007, 10:44 AM
கொஞ்சம் தாமதமாக இந்த திரிக்கு வருவதற்குள் 11 அத்தியாயங்கள் முடிந்துவிட்டிருந்தது. அத்தனையும் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன்.மிகவும் சுவரசியமாகவும்,அதே சமயத்தில் புதிய பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் விதத்திலும் கதை செல்கிறது. வாழ்த்துக்கள் மோகன்

leomohan
08-08-2007, 07:52 PM
15

மறுநாள் காலையில் அலுவலகம் வந்த ரமேஷ் விரைவாக வேலையை முடித்துக் கொண்டு திரும்பும் அவசரத்தில் இருந்தான். அவளை தனியாக விட்டு வந்து அந்த கவலையில் இருந்தான். சக உளவாளியாக மட்டுமே இருந்திருந்தால் இத்தனை கவலை பட்டிருப்பானா என்பது சந்தேகம் தான். இப்போது ஒரு புதிய உறவு உருவாகியிருந்தது.

ரமேஷ் உட்காருங்க. ஒரு கதை உருவாகியிருக்கு. மருத்து சோதனை முடிவுகள் வந்துருக்கு. ரிதுபவன் உள்ளே நுழையறவங்களோ ரத்தம், எச்சில் எல்லாம் இரண்டு மணி நேரத்துக்குள்ளே சோதிக்கிறாங்க. அப்புறம் நீங்க சொன்ன மாதிரி பட்டையில் இருக்கற எண்ணை வைச்சிகிட்டு ஆங்கில மருந்தை கலந்து ஏதோ ஒரு மூலிகையை கலந்து கொடுத்திடறாங்க. உங்களுக்கு அன்னிக்கு டெம்பரேச்சர் இருந்திருக்கு போலிருக்கு. உங்களுக்கு கொடுத்த பையில் க்ரோசின் கலந்து கொடுத்திருக்காங்க. இதனால அங்க தலைவலி வயித்துவலி ஜொரம்னு வர்றவங்க இரண்டு நாள்ல சரியாயிடறாங்க. அதனால மக்களோட நம்பிக்கை அவங்க மேல இன்னும் வலுக்குது.

ஓ. இப்படி நல்ல காரியம் எல்லாம் செய்யறானா அவன்.

நல்ல காரியமா. முழுசா கேளுங்க. மருந்து ஸ்டாங்க் டோஸ். அதனால உடனடியா சரியாகும். ஆனா அது லாங்க ரன்ல ரொம்ப ஆபத்து. அது மட்டுமில்லை இதோட ஒரு ஸ்லோ பாயிசனும் தராங்க. இதனால மனிதனோட சிந்திக்கிற திறன் கொஞ்சம் கொஞ்சமாக குறையுது. இதனால் அவங்களை கட்டுப்படுத்தறது ரொம்ப சுலபமாயிடுது. அவங்க கொஞ்ச நாள் ரிதுவேந்தரோட ரோபோவா மாறிடறாங்க.

ஓ காட். சார் எனக்கு ஒரு யோசனை தோணுது. இப்படி செய்யறதுக்கு பின்னாடி ஒரு மருத்துவ குழு இருக்கனும். இல்லையா. கடைசி 20 வருஷத்துல யார் யாரெல்லாம் மருத்துவம் படிச்சிருக்காங்க. அவங்க இப்ப எங்கே வேலை செய்யறாங்க, தனியா ப்ராக்டீஸ் பண்றாங்களா, அரசாங்க மருத்துவமனையில் வேலை செய்யறாங்களா, வெளிநாட்டுக்கு போயிட்டாங்களா, இல்லை தனியார் மருத்துவமனையில் இருக்காங்களா. இதுபோலவே லாப் ஸ்பெஷலிஸ்ட்ஸ், நர்ஸஸ் எல்லாரோட டேட்டாவும் சேர்க்கனும். கட்டாயம் ஒரு 50 பேராவது மறைவா இவன் பின்னாடி இருப்பாங்க. அவங்க வேலையை விட்டுட்டு அங்க தான் இருக்கனும். அதுக்கு அவங்களுக்கு நிறைய பணம் கிடைச்சிகிட்டு இருக்கனும். இந்த தகவல் சேகரிக்க முடியுமா

என்ன சொல்றீங்க ரமேஷ். நாம் உளவுத்துறையில் இருக்கோம். இந்தியாவோட எல்லா நெட்வொர்க்கும் நம்மோட இணைச்சிருக்கு. 24 மணி நேரத்துல இந்த தகவல் சேகரிக்கலாம். ஆனால் அதை சேகரிச்சு என்ன பண்ணப்போறீங்க.

சார், நாம பத்திரிக்கையில் பெரிய விளம்பரம் கொடுக்கனும். எல்லா டாக்டர்ஸ், நர்ஸஸ், லாப் டெக்னிஷியன்ஸ் இவங்களை இந்திய மருத்துவ கௌன்சில் 4 வாரத்துக்குள்ள மறுபதிவு செய்யனும் படி சொல்லனும். அந்த நாலு வாரத்தில இப்படி கணக்கில் வராம மாயமாபோன ரிதுவேந்தரோட மருத்துவர்களும் வருவாங்க. அங்கே வச்சி அவங்களை கப்புன்னு பிடிக்கனும்.

அதெல்லாம் சரி ரமேஷ். அவங்களை மட்டும் பிடிச்சி என்ன பிரயோஜனம். அவன் வேற டாக்டர்ஸ் ரெக்ரூட் பண்ணிப்பான்.

சார், இந்த ஆட்டம் ரொம்ப நாளைக்கு நடக்காது. அதனால அந்த ஊர் மக்களையும் டாக்டர்ஸையும் உடனே அங்கிருந்து விலக்கனும்.

சரி ரமேஷ், உடனடியா இதுல இறங்கலாம். மறுபடியும் நாளைக்கு காலையில் பார்ப்போம்.

இன்னொரு நாள் இங்கு தங்க வேண்டுமா என்று தயக்கமாக யோசித்தப்படி அங்கிருந்து விலகினான்.

leomohan
08-08-2007, 07:52 PM
16

இரண்டு நாட்கள் அவன் இல்லாமல் எப்படியோ சமாளித்திருந்தாள் ராணி. தினமும் அந்த டீக்கடைக்காரர் இன்னிக்கு வரலையா என்று கேட்டு தொந்தரவு தந்துக் கொண்டிருந்தார்.

ரிதுவேந்தரின் கைகூலிகளில் இருவர் அவளை ருசிக்க அவனுக்கு ஆணை இட்டிருந்தார்கள்.

இன்று வந்து மிகவும் தொந்தரவு செய்தான். ஒரு வருஷத்ல உனக்கு குழந்தை பொறந்துடும்மா. இன்னிக்கு விசேஷ பூஜை. கட்டாயம் வரனும் என்று வற்புறுத்தினான்.

சரிதான் நேரம் வந்துவிட்டது. முறத்தால் புலியை அடித்து விரட்டிய தமிழ் பெண்ணின் தைரியத்தின் பாரம்பர்யத்தை காக்கும் நேரம் வந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டாள்.

சரிண்ணா. இன்னிக்கு வரேன் என்றாள்.

அவன் வெற்றியுடன் அங்கிருந்து விலகினான்.

இரவும் வந்தது. கூட்டத்துடன் நடந்து ரிதுபவன் சென்றடைந்தாள் ராணி.

வழக்கமான அசிங்கங்கள் முடிந்து மிருக காட்சியும் வந்தது. இரண்டு நீல ஆடை அணிந்தவர்கள் அவளிடம் வந்து இன்னிக்கு எங்க இரண்டு பேருக்கும் நீ காணிக்கை என்றார்கள்.

ஒன்றும் பேசாமல் அவனுடன் நடந்தாள் ராணி. கையில் இருந்த மதுகோப்பையை இறுக பிடித்துக் கொண்டாள். ரிதுவேந்தர் அமரும் மேடைக்கு பின்னால் ஒரு திரையை தாண்டி அங்கிருந்த சிறிய குடிசைக்குள் அவளை அழைத்துச் சென்றனர் இருவரும். அவளை ஒரு கட்டிலில் படுக்க வைத்தனர். இரண்டு மிருகங்களும் உடைகளை மெதுவாக கழற்றிவிட்டு அவளருகில் நுழைந்தன. மிகுந்த குறைந்த வெளிச்சம். தீப்பந்தம் சற்று தூரத்தில் எரிந்துக் கொண்டிருந்தது.

முதலில் ஒருவன் அவள் மேல் குனிய சட்டென்று கால்களை வேகமாக அவனுடைய ஆணறுப்பில் ஒரு உதை கொடுத்தாள். அவன் ஹம்மா என்று அலறி கீழே விழ, சுதாரித்துக் கொண்ட இன்னொருவன் அவளை ஓங்கி அறைய முயன்றான். சட்டென்று அவள் கீழே உருண்டு, கையில் இருந்த கோப்பையை கீழே அடித்து உடைத்து, அதன் கூரிய முனையால் அவன் கண்களை குத்தினாள்.

மாறி மாறி இருவருடைய தலைகளையும் தரையில் அடித்து நொறுக்கினாள். இருவரும் பரலோகம் போய்விட்டனர் என்பதை உறுதி செய்துக் கொண்டு சட்டென்று அவர்களை ஓரத்தில் போட்டு, அவர்கள் மேல் துணிகளை போற்றி, துணியின் ஓரத்தில் பற்ற வைத்துவிட்டு திரையின் பின்னாலிலிருந்தே உருண்டுக் கொண்டு மந்தைகளின் நடுவில் படுத்துக் கொண்டாள்.

சரியாக ஒரு நிமிடத்தில் தீ பகபகவென பற்றிக் கொண்டது. அங்கிருந்த குடிசையும் பற்றிக் கொண்டது. எங்கும் பதற்றம் உண்டாக சில ரிதுவேந்தர்கள் மேடையில் ஏறி, இன்னிக்கு பூஜை முடிந்சுது, இறைவன் ரிதுவேந்தரோட பேச வந்திருக்காரு, எல்லோரும் போகலாம் என்று கூக்குரலிட கூட்டம் மெதுவாக வெளியே வரத்துவங்கியது. கூட்டத்துடன் அவளும் மெதுவாக வெளியேறினாள்.

உள்ளே பீதி நிலவியிருந்தது. நீல ஆடைகள் இங்கும் அங்கும் ஓட, ரிதுவேந்தர் எங்கும் தென்படவில்லை.

அன்புரசிகன்
08-08-2007, 08:04 PM
முதலாவது செங்கல்லை பெயர்த்திருக்கிறாள் விரப்பெண்மணி...

அப்புறம்...

leomohan
08-08-2007, 08:23 PM
17

வீட்டிற்கு வந்ததும் ஆனது ஆகட்டும் என்று மொபைலில் தொடர்பு கொண்டு எல்லாவற்றையும் கூறினாள் ராணி.

அதை கேட்டதும் கலவரமடைந்துவிட்டான். நான் உடனே வரட்டுமா என்று கேட்டான்.

இப்ப எப்படி வருவீங்க. பரவாயில்லை. நாளைக்கு என்ன நடக்குதுன்னு பார்க்கலாம். ஆனால் சீக்கிரம் வந்துடுங்க. எதுவும் நடக்கலாம்.

ஓகே. யூ டேக் கேர். பி அலர்ட். அண்ட டோன்ட் மெஸ் வித் தெம் டில் ஐ கம் பேக். (ஜாக்கிரதையா இரு. நான் திரும்பி வரும் வரையில் அவர்களுடன் வேறு வம்பு வைத்துக் கொள்ளாதே).

ஓகே என்று இணைப்பை துண்டித்தாள்.

அவளுடைய ஜன்னலில் யாரோ எட்டிப்பார்த்து போல் இருந்தது. வீடு முழுவதும் உள்ளிருந்து நன்றாக பூட்டிவிட்டு சென்று படுத்தாள். அமைதியில்லாத அந்த இரவு, பகலையும் தாண்டிய பிறகே கண் விழித்தாள்.

சார், இது தான் ஜெயாகிட்டேர்ந்து செய்தி. நான் உடனடியாக போகனும் என்றான்.

அதுக்கு நான் ஏற்பாடு பண்றேன். ஏர் டிராப் பண்றேன். அதுக்கு முன்னாடி உங்களோட அடுத்த நடவடிக்கை என்ன, உங்களோட திட்டம் என்னன்னு சொல்லுங்க. நாளை மறுநாளே மருத்து கௌன்சிலில் இருந்து விளம்பரம் வந்துடும். அதுமட்டுமில்லாம டிவி ரேடியோ எல்லாத்துலேயும் விளம்பரம் கொடுக்க ஏற்பாடு செஞ்சிட்டேன்.

நீங்க கொடுத்த கார் எண்கள் எல்லாம் டிரேஸ் பண்ணிட்டோம். பல பெரிய தலைகள் உருளும். அதனால் அவங்க எச்சரிக்கைய ஆயிட்டாங்கன்னா உங்க ரெண்டு பேர் உயிருக்கும் ஆபத்து.

ஆமா சார். அதனால இவங்களை படிப்படியாக அணுகறதை விட தடாலடியாக ஏதாவது செய்தாகனும் என்றான். பிறகு வெள்ளை பலகைக்கு சென்று மார்க்ர் எடுத்துக் கொண்டு தன் திட்டத்தை விளக்க ஆரம்பித்தான்.

கேட்க கேட்க அந்த உயர் அதிகாரியுடை கண்கள் விரிந்தது.

இது ஒரு டாரிங்க் மிஷன். உங்களோட கேஸ்கள்ல இது டாப் ஆஃப் த லிஸ்டில் இருக்கும். வாழ்த்துக்கள் என்றார்.

நன்றி என்று கூறி வெளியே வந்தான்.

அங்கு நின்றிந்த அம்பாஸிடர் அவனை விரைவாக அழைத்துக் கொண்டு அருகில் இருந்த ஹெலி பேடுக்கு சென்றது. அங்கு தயாராக இருந்த ஹெலிகாப்டரில் எறி காதில் ஒலிதடுப்பானை எடுத்து அணிந்துக் கொண்டு, பெல்ட் மாட்டிக் கொண்டு சிறிய மைக்கின் மூலம் பைலட்டிடம் நான் ரெடி என்றான். உடனடியாக உயரம் பிடித்து வேகம் பிடித்து இராமநாதபுரம் மாவட்டம் நோக்கி ஹெலிகாப்டர் பறந்தது.

நேற்றே அவனுடைய மேல் அதிகாரிக்கு அவன் கேட்ட அனைத்து தகவல்களும் கிடைத்துவிட்டது. மேலும் ஒரு நாள் தாமதப்படுத்தினாள் தான் ராணி அந்த ரிதுபவனத்தில் தனியாக நுழைவாள் என்றும் அவள் நுழைந்தாள் தான் இன்னும் பல விபரங்கள் தெரியும் என்று அவர் நம்பினார். இந்த தொழிலில் திறமைசாலிகளை இழக்கக்கூடாது தான். ஆனால் அவர்கள் மக்களை பாதுகாக்க வேண்டியவர்கள். அதனால் அவர்களை பாதுகாத்து பிரயோஜனமில்லை. அதே நேரத்தில் அவர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் தகுதி இருக்கும். இருக்க வேண்டும். இதையும் மீறி சில பேரை இழக்க நேரிடுகிறது. அது தவிர்க்க முடியாத ஒன்று. இந்த வேலைக்கு வரும் முன் இதில் உள்ள பயங்கரங்களை அறிந்து தான் வருகின்றனர்.

சிலருக்கு விபரீதங்களுடன் விளையாடுவது பிடிக்கும். சிலர் சேவை மனப்பான்மையுடன் தம் தைரியத்தையும் காட்டும் ஒரு வாய்ப்பாக கருதி இதனை தேர்ந்தெடுக்கின்றனர்.

எப்படி இருந்தாலும் ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு இதுபோன்ற சீருடை அணியாத சாகசஸ காவல் துறையினர் தேவை தான்.

leomohan
08-08-2007, 08:47 PM
18

நடந்து போகும் தூரத்தில் அவனை இறக்கிவிட்டு அந்த ஹெலிகாஃப்டர் பறந்தது. களைப்பாக வீடு வந்து சேர்ந்தான்.

எப்படி இவ்வளவு சீக்கிரமா வந்தீங்க.

ஏர் டிராஃப்.

அவசரத்தில் துளுவில் பேசவேண்டும் என்பதை மறந்தாள்.

உள்ளே நுழைந்ததும் அவனை இறுக அணைத்துக் கொண்டாள். துன்பமான நேரத்தில் தைரியம் உருவாவதும் ஆறுதலாக அருகில் யாராவது இருந்தால் தாம் செய்ததை நினைத்தே பயந்துபோவதும் பலருடைய சுபாவம். அதற்கு இவள் விதிவிலக்கல்ல. அதே நேரத்தில் மறுபடியும் அதே துன்பத்தை மீண்டும் சந்திக்கும் தைரியமும் உண்டு அவர்களிடம்.

ஐ திங்க் வீ ஆர் அப்ரோச்சிங்க த எண்ட் ஆப் திஸ் ஸ்டோரி (எனக்கென்னமோ இந்த கதை முடிவுக்கு வந்துகிட்டு இருக்குன்னு தோணுது)

ஓ. சீக்கிரம் இந்த கேஸ் முடிஞ்சா நல்லா இருக்கும். நேத்து நான் செஞ்ச கூத்து எப்படி பூதாகரமா உருவாகும்னு தெரியலை. நேத்து ராத்திரியே என்னை யாரோ வேவு பார்த்தமாதிரி இருந்தது.

கவலைப்படாதே உன் புருஷன் வந்திட்டான்ல, தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்...

யாரு ஜெயஷங்கர் தானே

இல்லை, ஜெயாவோட ஷங்கர் என்றான்.

ஹா ஹா என்று சிரித்தாள். பல நாட்களுக்கு பிறகு இப்போது தான் சிரிக்கிறோம் என்பதையும் உணர்ந்தாள்.

மறுநாள் வேலையில் சேர்ந்தான் கோபால்.

பரிசு கிடைச்சுதா என்றான்.

கிடைச்சுது சார்.

என்ன என்று கேட்டார். தபால் நிலையத்தில் யாரும் இல்லை.

அது ... என்று பதில் அளிக்க நேரம் எடுத்துக் கொண்டான்.

எல்லா டாக்டர்ஸோட டேட்டாபேஸ் கிடைச்சுதா

சார் என்றார்

அவர் சிறிய காகித்தை எடுத்து நான் பணியில் இருக்கிறேன் மத்திய உளவுத்துறையின் பணியில் என்று எழுதி அவனிடம் காண்பித்து விட்டு அந்த காகித்தை வாயில் போட்டுக் கொண்டார்.

சார் என்றான்

அவர் கண்ணடித்தப்படியே, இன்னொரு காகிதத்தில் நேத்து ராத்திரி ராணிக்கு நான் தான் பாதுகாப்பா இருந்தேன். உங்க வீட்டை நோட்டம் பார்த்தும் நான் தான். அவங்க பத்திரமா வந்து சேர்ந்திட்டாங்களான்னு தான். ஏன்னா, ரிதுபவனில் அந்த மாதிரி ஒரு காரியம் செஞ்சிட்டு உயிரோட தப்பறது ரொம்ப ஆச்சர்யம் தான். இதுக்கு முன்னாடி எப்படியோ காமிராவை மறைச்சி எடுத்துட்டு வந்து போட்டோ எடுத்தான்னு தான் அந்த அமெரிக்கனோட கதையை முடிச்சாங்க என்று விரைவாக எழுதி காட்டினார்.

அவன் படித்துவிட்டு அவர் அதை மறுபடியும் வாயில் போட்டுக் கொள்வதற்குள் அதை பிடுங்கி, இது என்னோட ப்ரேக்பாஸ்ட் என்று சிரித்தபடி சொல்லிவிட்டு சாப்பிட்டான்.

கோபால் இந்த தபால் யாருக்கு என்றவாறே இன்னொரு காகிதத்தை எடுத்து இதுவரையில் அவர்களுக்கு யார் மேலும் சந்தேகம் வரவில்லை. ஆனால் இன்னிக்கு பூஜைக்கு அழைப்பு வந்ததுன்னா கட்டாயம் போங்க என்று எழுதினார்.

அவசியம் என்று கண்களால் செய்கை காட்டினான்.

இன்னொரு துணையிருப்பது ஆறுதலாக இருந்தது. இந்த இடத்தில் இவரை பல மாதங்களாக போஸ்ட் மாஸ்டராக அமர வைத்த அவனுடைய உளவு துறையின் மேலதிகாரியின் திட்டமிடுதலை கண்டு வியந்தான். அமெரிக்கன் எப்படி இறந்திருப்பான்னு அவருக்கு முன்பே தெரிந்திருந்தும் அவனுடைய கொலை வழக்கை தன்னை கண்டுபிடிக்க அனுப்பியிருந்ததாக தன்னிடம் சொன்னதை நினைத்து சிரித்துக் கொண்டான்.

ஒருவேளை ராணி நேற்று யாரோ வேவு பார்த்தாங்கன்னு சொல்லி பயந்ததை பார்த்துட்டு தான் இவர் தான் யாருன்னு நமக்கு சொல்லியிருக்காரு போலிருக்கு. நாம அநாவசியமா பயந்து ஏதாவது தப்பான நடவடிக்கை எடுக்கக்கூடாதுன்னு போலிருக்கு. அப்படின்னா நம்ம வீட்ல வேவு கருவிகள் இருக்கா. அப்ப ராணியோட ரொமான்டிக் பேச்சுகளை குறைக்க வேண்டும். இப்படியெல்லாம் அவனுடைய மனதில் ஓடியது.

கவலைப்படாதீங்க கோபால், நாங்க ரொமான்டிக் படங்கள் பார்ப்பதில்லை என்றார் பலமாக சிரித்துவிட்டு.

எப்படி மனதில் இருந்ததை அப்படியே சொல்ல முடிகிறது. இது தான் இந்த தொழிலின் சக்தி. வருடம் ஆக ஆக நானும் இந்த நிலையை அடைவேன். நான் ஒரு நாட்டை காக்கும் பணியில் இருக்கிறேன். நான் ஒரு காவல்காரன், ராணுவ வீரன் இவர்களுக்கு சமமானவன். இந்த வேலை செய்வதை நான் பெருமையாக நினைக்கிறேன் என்று நினைத்துக் கொண்டு பட்டுவாடா செய்ய வேண்டிய தபால்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து விலகினான்.

மதிய உணவிற்கு வீட்டிற்கு சென்ற பிறகு அவளிடம் சொல்லலாமா வேண்டாமா என்று நினைத்து சொல்வதை தவிர்த்தான். சஸ்பென்ஸா இருக்கட்டும் அவளுக்கு, அப்போது தான் காப்பாற்ற யாருமே இல்லை என்று பார்த்து பார்த்து நடவடிக்கைகள் எடுப்பாள் என்று நினைத்தான்.

பிறகு மதிய உணவை முடித்து இரண்டாவது பீட்டிற்கு சென்று விட்டு, வழக்கம்போல சாராயக்கடை நோக்கி போனான்.

அங்கு நேற்று இரவு பூமியை பிளந்து நெருப்பு பிழம்பில் கடவுள் வந்து ரிதுவேந்தருக்கு தரிசனம் கொடுத்து சென்றதை பற்றித் தான் பேச்சு. இன்று விசேட பூஜைக்கு அழைப்பு வந்திருப்பதாகவும், கடவுளுடன் தான் பேசிய பேச்சுக்களை மற்ற ரிதுவேந்தர்களுக்கு பகிர்ந்துக் கொள்ளப்போவதாகவும் தலைமை ரிதுவேந்தர் அழைப்பு விடுத்திருந்தார்.

இது அந்த இருவரின் கொலையில் யாருடைய கை இருக்கிறது என்பதை வேவு பார்க்கத்தான் போலும் என்று நினைத்துக் கொண்டான்.

பிறகு வீட்டிற்கு திரும்பாமல், ரிதுபவனை சுற்றிக் கொண்டு பின்புறம் வந்தடைந்தான். கும்மிருட்டு இருந்தது. இருப்பினும் யாரோ நம்மை பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டான். பிறகு பட்வாடா பையில் இருந்த அந்த கரடியின் ஆடையை எடுத்து அணிந்துக் கொண்டான். பிறகு தலைபாகத்தை வாயால் ஊதி அதையும் எடுத்து அணிந்துக் கொண்டான். கொண்டு வந்த பொருட்களை உலுக்கி கலக்கி ஒரு சிறிய ரைபில் தயாரித்தான். அதில் குண்டுகளுக்கு பதிலாக சிறிய மைக்ரோபோன் சிப்புகள்.

முள்ளால் செய்த பின்வேலியின் அருகே மறைந்துக் கொண்டான். சட்டென்று பார்ப்பவர்களுக்கும் நல்ல வெளிச்சத்தில் பார்ப்பவர்களுக்கும் கூட அந்த அடர்ந்த காட்டில் ஒரு கரடி படுத்திருப்பது போன்று தோன்றும். தண்ணீர் பாக்கெட்டில் இருந்த நீர் அருந்திவிட்டு அமைதியாக படுத்துக் கொண்டான்.

மதி
09-08-2007, 03:18 AM
அட்டகாசமாய் போகிறது கதை....
சீக்கிரம் அடுத்த பாகங்களையும் கொடுங்கள்.

ஓவியா
09-08-2007, 03:52 AM
அட்டகாசமாய் போகிறது கதை....
சீக்கிரம் அடுத்த பாகங்களையும் கொடுங்கள்.

ஓவியா, காலை எழுந்தவுடன் தமிழ் மன்றம் சுற்றுவது,
மதி, காலை எழுந்தவுடன் தமிழ் மன்றத்தில் தொடர்கதை படிப்பது.


நல்ல குடும்பம் நம்ம குடும்பம். :sport-smiley-014: :sport-smiley-014:

pathman
09-08-2007, 04:52 AM
கதை மிகவும் அருமையாக போகினறது கடந்த நேற்றும் இன்றும் நான் தமிழ் மன்றம் வந்தவுடன் படிப்பது இந்த தொடர் கதையே

பொதுவாக எனக்கு இது போன்ற கதைகள் வாசிப்பதில் விருப்பம் அதிகம். இது போல கதைகள் எழுதி வரும் லியோ மோகனுக்கு நன்றிகள் பல :nature-smiley-002::icon_good:

leomohan
09-08-2007, 06:06 AM
அட்டகாசமாய் போகிறது கதை....
சீக்கிரம் அடுத்த பாகங்களையும் கொடுங்கள்.


நன்றி ராஜேஷ்.

leomohan
09-08-2007, 06:07 AM
[QUOTE=ஓவியா;252106]ஓவியா, காலை எழுந்தவுடன் தமிழ் மன்றம் சுற்றுவது,
மதி, காலை எழுந்தவுடன் தமிழ் மன்றயத்தில் தொடர்கதை படிப்பது.


நல்ல குடும்பம் நம்ம குடும்பம். :sport-smiley-014: :sport-smiley-014:[/QUOTஏ

ஹா ஹா எங்கு சுற்றினாலும் பெவிலியனுக்கு வரத்தானே வேண்டும்.

leomohan
09-08-2007, 06:07 AM
கதை மிகவும் அருமையாக போகினறது கடந்த நேற்றும் இன்றும் நான் தமிழ் மன்றம் வந்தவுடன் படிப்பது இந்த தொடர் கதையே

பொதுவாக எனக்கு இது போன்ற கதைகள் வாசிப்பதில் விருப்பம் அதிகம். இது போல கதைகள் எழுதி வரும் லியோ மோகனுக்கு நன்றிகள் பல :nature-smiley-002::icon_good:

நன்றி பாத்மேன் அவர்களே.

ஓவியா
09-08-2007, 06:10 AM
[QUOTE=ஓவியா;252106]ஓவியா, காலை எழுந்தவுடன் தமிழ் மன்றம் சுற்றுவது,
மதி, காலை எழுந்தவுடன் தமிழ் மன்றயத்தில் தொடர்கதை படிப்பது.


நல்ல குடும்பம் நம்ம குடும்பம். :sport-smiley-014: :sport-smiley-014:[QUOTE]

ஹா ஹா எங்கு சுற்றினாலும் பெவிலியனுக்கு வரத்தானே வேண்டும்

.

இன்று காலையில் மன்றமே படு ஜாலி மூடில் இருக்கு, நீங்களும் வந்தும் பி,யூ, சின்னப்பா போல் சிரித்து நக்கலடிகின்றீர்கள்.

நடத்துங்க நடத்துங்க.

leomohan
09-08-2007, 06:18 AM
[QUOTE=leomohan;252198][QUOTE=ஓவியா;252106]ஓவியா, காலை எழுந்தவுடன் தமிழ் மன்றம் சுற்றுவது,
மதி, காலை எழுந்தவுடன் தமிழ் மன்றயத்தில் தொடர்கதை படிப்பது.


நல்ல குடும்பம் நம்ம குடும்பம். :sport-smiley-014: :sport-smiley-014:

இன்று காலையில் மன்றமே படு ஜாலி மூடில் இருக்கு, நீங்களும் வந்தும் பி,யூ, சின்னப்பா போல் சிரித்து நக்கலடிகின்றீர்கள்.

நடத்துங்க நடத்துங்க.

என்ன ஓவியா வந்தததற்காக உறுப்பினர்கள் விழா எடுக்கறாங்களா ;−)

ஓவியா
09-08-2007, 06:29 AM
[QUOTE=ஓவியா;252202][QUOTE=leomohan;252198]

என்ன ஓவியா வந்தததற்காக உறுப்பினர்கள் விழா எடுக்கறாங்களா ;−)

அய்க்கோ மோ, எனக்கு சிரித்து சிரித்து இதயமே வலிக்குது!!! ஒரு டிராயல்தானாம், மேய்ன் பிச்சர் இன்னும் ரெடியாகலையாம்.....

இது எப்பிடி இருக்கு!!!!!

அன்புரசிகன்
09-08-2007, 08:51 AM
மிகவும் விறுவிறுப்பாக போகிறது...

கொடுத்த பயிற்சிகளை நேர்தியாகவும் அதற்கு மேலாகவும் பயிற்சி செய்கிறார்கள் போலும்...
தொடருங்கள்... சஸ்பென்ஸ் தாங்கல...

மதி
09-08-2007, 10:02 AM
ஓவியா, காலை எழுந்தவுடன் தமிழ் மன்றம் சுற்றுவது,
மதி, காலை எழுந்தவுடன் தமிழ் மன்றத்தில் தொடர்கதை படிப்பது.


நல்ல குடும்பம் நம்ம குடும்பம். :sport-smiley-014: :sport-smiley-014:

நம்ம ஃபேமிலியே இப்படி தானுங்கோ.... :icon_clap:

leomohan
09-08-2007, 11:03 AM
19

போன புருஷனின் தகவல் தெரியவில்லை. அது சரி நிஜ புருஷனா இருந்தா கண்டிக்கலாம் என்று நினைத்துக் கொண்டே இரவு பூஜைக்கு கூட்டத்துடன் சென்றடைந்தாள்.

அனைவரும் உள்ளே நுழையும் வரை அமைதியாக இருந்த கோபால் எழுந்தமர்ந்து சிறிய ரப்பர் குமிழ்களை மைக்ரோபோனின் பின்பக்கம் இணைத்தான். வெற்றிடம் கொண்டு பற்றிக்கொள்ளும் திறன் படைத்தவை இந்த ரப்பர் குமிழிகள். பிறகு மெதுவாக நகர்ந்து ஒவ்வொரு இடத்திலிருந்தும் குறி பார்த்து பெரிய பெரிய குடிசைகளின் ஜன்னல் பக்கத்தில் போய் பற்றிக் கொள்ளும்படி அந்த மைக்ரோபோன்களை குண்டு போல் பாவித்து சுட்டுக் கொண்டிருந்தான்.

ஒவ்வொரு முறையும் சுட்ட பிறகும் தன்னுடைய ரீசீவரில் அதே அலைவரிசையில் வைத்து பார்த்து ஏதாவது ஒலி கிடைக்கிறதா என்று பார்த்தான். இவ்வாறாக தன்னிடம் இருந்த 20 மைக்ரோபோன்களையும் பொருத்தி முடித்தான். மீண்டும் தொடங்கிய இடத்திற்கு வந்து படுத்துக் கொண்டான்.

உள்ள பூஜை களை கட்டிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் இரண்டு நீல கயவர்கள் வந்து அவளை அழைத்தனர். இன்னிக்கு ரிதுவேந்தருக்கே உன்னை படைக்கப்போறோம் வா என்றனர்.

சரிதான் கண்டுபிடித்துவிட்டார்களோ, இல்லை அந்த பக்கிப்பையன் அன்னிக்கு பார்த்தை நினைவில் வைச்சிகிட்டு இன்னிக்கு கூப்பிட்டனுப்பறானோ என்றெல்லாம் நினைத்தாள்.

மெதுவாக அவர்கள் பின் நடந்து சென்றாள். மேடைக்கும் பின்னால் இருந்த திரையையும் தாண்டி பின்னால் இருந்த இன்னொரு குடிசைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். முன்பு தான் செய்த சாகஸம் நடந்த இடத்தை பார்த்தாள். அங்கு எரிந்ததாகவோ இரண்டு கொலைகள் நடந்ததாகவோ எந்த அறிகுறியும் இல்லை. மௌனமாக தொடர்ந்தாள்.

அவளை ஒரு இருக்கையில் அமர்த்திவிட்டு அந்த இரு கயவர்களும் வெளியேறினர். அந்த அறையில் மின்சார விளக்கு நீல நிறத்தில் எரிந்துக் கொண்டிருந்தது.

உள்ளே வந்த கயவர்களின் தலைவன் ரிதுவேந்தர் மெதுவாக நெருங்கி அவள் மார்பகங்கள் மீது கை பதித்தான். பிறகு அவளுடைய கையை தன் கையில் எடுத்துக் கொண்டான். உடலை மரக்கட்டையாக ஆக்கிக் கொண்டாள் ராணி. இவனை எங்கு உதைக்கலாம், அல்லது ஒரேடியாக கொன்றுவிடலாமா. இல்லை உயிருடன் பிடிக்க வேண்டுமா என்றெல்லாம் யோசித்தவாறு இருந்தாள். சட்டென்று அவளுடைய கைகளை கீழே போட்டான் ரிதுவேந்தர். கதவை திறந்து வெளியே சென்று அங்கிருந்து இரண்டு நீல நிறை ஆடைகளிடம் டாக்டரை கூப்பிடு என்று சுருக்கமாக சொன்னான்.

சில நிமிடங்களில் நேராக உள்ளே நுழைந்த டாக்டர் ஒருவரை பார்த்து கண் அசைத்தான்.

அவளுடைய கையில் இருந்து வடுவை சோதித்துவிட்டு, பாஸ், இவ கையில டிரான்ஸிமிட்டரோ அல்லது ஜிபிஸ் சிப்போ பொருத்தியிருக்காங்க. இவ ஒரு உளவாளியா தான் இருக்கனும்.

கடும் கோபம் வந்தது ரிதுவேந்தருக்கு. அவளை நெருங்கி ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்தான். நிலை குலைந்து போன அவள் எழுந்து மீண்டும் அமைதியாக அமர்ந்தாள்.

யார் நீ. நீ சிஐடியா

ஆம் என்றாள் அமைதியுடன்.

நாங்க சிசிடிவியில் பார்த்தோம். உன் உடலமைப்பு வைச்சி நீ தான் அந்த கொலை பண்ணியிருக்கனும்னு புரிஞ்சிகிட்டோம். உன்னை வரவழைக்க தான் இந்த விசேஷ பூஜை என்று கத்தினான் அவன்.

பிறகு, உள்துறை அமைச்சருக்கு போன் போடு. என்ன ஒரு சைடு பிரெண்டிஷிப்புன்னு சொல்லி இன்னொரு சைட் போட்டுக் கொடுக்கறானா என்று கூவினான். அவனுடைய அழக தமிழ் பேருரைகளிலிருந்து வித்தியாசமாக லோக்கல் தமிழ் வெளியே தெரிந்தது. நேரமும் வந்துவிட்டதே.

பாதி உறக்கத்தில் இருந்த அமைச்சர் ரிதுவேந்தரிடமிருந்து போன் வந்ததும் நடுநடுங்கி எழுந்தார்.

இல்லை பாஸ். நாங்க யாரையும் அனுப்பலை. அப்படி அனுப்ப விடுவேனா.

பின்ன என்ன நடக்குது இதெல்லாம். மெடிக்கல் கௌன்சில் எல்லா டாக்டர்களையும் நேராக வந்து பதிப்பை புதுபிச்சிக்கனும்னு விளம்பரம் கொடுக்கப்போறாங்களாம். இரண்டு ரிதுவேந்தர்களை அடிச்சியே கொன்னிருக்கா இவ. இன்னிக்கு கையிலே சிப்போட உளவு பார்க்க வந்திருக்காளா.

பாஸ். கொஞ்சம் அமைதியா இருங்க. அவளை கொன்னுட்டீங்கன்னா பெரிய பிரச்சனையாயிடும். அவளை பிணைய கைதியா வைச்சிருங்க. எத்தனை பேரு உளவு பார்க்க வந்திருக்காங்க, என்ன விபரம் கேட்டு நான் காலையில சொல்றேன். அதுவரையில் அவளை ஒன்னும் பண்ணிடாதீங்க என்று மன்றாடினார்.

இன்னும் 24 மணி நேரத்துல எல்லா போலீஸ் சிஐடி நாயுங்களும் என் ஊரைவிட்டு போகனும். இல்லை நீ உயிரோட இருக்க மாட்டே என்று கத்திவிட்டு போனை துண்டித்தான்.

டாக்டரை அழைத்து அந்த சிப்பை ஆபரேஷன் பண்ணி எடுத்துடு. அவளை அடைச்சு வை. அப்புறம் பாத்துக்கலாம் என்று விலகினான்.

அவனை பார்த்து மெதுவாக புன்னகைத்தாள் ராணி. அவன் கடுகடுப்புடன் வெளியேறினான்.

அநஸ்தீஷியா கொடுத்து அவளுடைய கையில் இருந்த சிப்பை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்தனர். ஆனால் மொரிஷீயஸில் கிடைத்த பயிற்சியில் எவ்வாறு நினைவுகளை தக்க வைத்துக் கொள்வது என்றும் சொல்லிக் கொடுத்தனர். சிகிச்சை மட்டும் நடந்தது.

பிறகு அந்த பெரிய குடிசைக்கும் பின்னால் சற்று தனியாக இருந்த இன்னொரு குடிசையில் அவளை அடைத்து வைத்தனர். ஜன்னலுக்கு அருகில் கோபால் பொருத்தியிருந்த மைக்ரோபோன் இருந்தது. எங்கு எதை பார்க்க வேண்டும் என்று சொல்லித் தந்திருந்தது அவர்களுடைய பயிற்சி. மெதுவாக அந்த மைக்ரோபோனை பார்த்து பேசினாள். கோபால் ஒலி சிக்னல்கள் வருவதை அறிந்து மெதுவாக காது கொடுத்து கேட்டான்.

பிறகு விடியும் முன் அங்கிருந்து நழுவி தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

சிவா.ஜி
09-08-2007, 11:07 AM
கிளமாக்ஸ் பரபரப்பு ஆரம்பித்துவிட்டது. வெகு விறு விறுப்பாய் கதையை நகர்த்துகிறீர்கள் மோகன்.வாழ்த்துக்கள்.

leomohan
09-08-2007, 11:29 AM
20

வீட்டுக் கதவை பலமாக தட்டும் சத்தம் கேட்டது.

திறந்து பார்த்தால் டிக்கடைக்காரர் நின்றிருந்தார்.

என்னப்பா நீ நேத்திக்கு பூஜைக்கு வரலை. ரிதுவேந்தர் ரொம்ப வருத்தப்பட்டாரு.

ரிதுவேந்தருக்கு என்னை தெரியுமா.

பின்னே ஊருக்கு யார் புதுசா வந்தாலும் அவருக்கு தெரியாம இருக்குமா

அப்படியா

சரி நீ ஏன் வரலை அதை சொல்லு

இல்லைண்ணே நேத்து கொஞ்சம் ஓவரொ குடிச்சிட்டேன். அதனால் நிலை தடுமாறி தென்னந்தோப்புல விழுந்து கெடந்தேன். சூரிய கண்ணுல குத்தின பிறகு தான் எழுந்து வந்தேன்.

இப்படிய யாராவது குடிப்பாங்களா.

அண்ணே இன்னொரு பிரச்சனை அண்ணே. ராத்திரி பூஜைக்கு போன என் பொண்டாட்டி இன்னும் வீட்டுக்கு வரலை.

அதுக்கு தான்பா நான் வந்திருக்கேன். அவளுக்கு வைத்தியம் நடக்குது. உன்னையும் கையோட கூட்டிக்கிட்டு வரச்சொன்னாரு ரிதுவேந்தர்.

அண்ணே உங்களுக்கு ஒரு விசேஷ வைத்தியம் வைச்சிருக்கேன் நானு என்றான் கோபால்.

என்ன எனக்கு வைத்தியமா என்றான் அந்த டீக்கடைக்காரன் சற்று குழப்பத்துடன்.

இது தான்ணே அது என்று ஓங்கி அவன் முகத்தில் குத்துவிட்டான். பிறகு அவனை உருட்டி பிரட்டி எடுத்து கையில் கட்டுப்போட்டு தூணுடன் கட்டி வைத்தான்.

ஏண்டா நாயே அப்பாவி மக்களை ஏமாத்தறதுக்கு ஒரு கூட்டம். அதுக்கு நீ தான் ப்ரோக்கரா என்று மீண்டும் ஓங்கி ஒரு அறைவிட்டான்.

யார் நீ. எதுக்காக இதுமாதிரியெல்லாம் பேசறே. யாரு ஏமாத்தற கூட்டம். யார் ப்ரோக்கரு என்று எதுவும் தெரியாத மாதிரி ஒரு நாடகம் போட்டான்.

மீண்டும் ஒரு அறை.

உங்களோட ஆட்டத்தை முடிக்கத்தான் நாங்க வந்திருக்கோம்டா என்று சொல்லி அவனை ஒரு பெரிய மரப்பெட்டியில் தூக்கிப் போட்டான். க்ளைமாக்ஸ் வரைக்கும் அப்படியே கிட. இந்தா தண்ணி பாட்டில். தாகம் எடுத்தா குடிச்சிக்கோ. பெட்டி மேலே பாம் வைச்சிருக்கேன். அதனால ரொம்ப புத்திசாலித்தனமா ஏதாவது பண்ணி பழைய வீட்டை இடிக்க வைச்சிடாதே. அத்தோட உன்னோட சதையும் பிஞ்சி பிசிறு பிசிறாயிடும் என்று எச்சரித்துவிட்டு அந்த பெட்டியை மூடி, டிக் டிக் என்று ஒலி வரும் அந்த கடிகாரத்தை மேலே வைத்துவிட்டு வீட்டை நன்றாக பூட்டிவிட்டு தபால் நிலையத்திற்கு கிளம்பினான்.

leomohan
09-08-2007, 11:30 AM
நன்றி சிவா.

அன்புரசிகன்
09-08-2007, 11:48 AM
இவனை அடைத்து வைத்ததால் சில அப்பாவி புதியவர்கள் தப்பித்தார்கள். :D :D...

அவுங்க கதி என்னமாதிரி?

kalaianpan
09-08-2007, 06:14 PM
சும்மா பின்னனுறீங்க சார்....
தொடரட்டும் பணி.....


:icon_b:

இனியவள்
09-08-2007, 06:20 PM
நன்றாகப் போகின்றது மோகன் அண்ணா உங்கள்
தொடர்கதை வாழ்த்துக்கள்...

சஸ்பென்ஸ் தாங்கமுடியேலை சீக்கிரம்
அவிழ்த்து விடுங்கள் ரகசிய
முடிச்சை

leomohan
09-08-2007, 07:02 PM
நன்றி அன்புரசிகன், கலையன்பன், இனியவள்

pathman
10-08-2007, 03:37 AM
நன்றி பாத்மேன் அவர்களே.

இன்னா பாஸ் நம்ம பெயரையே மாத்திடீங்க Bat Man என்று சொல்லி இருந்தாலும் ஒகே

மாதவர்
10-08-2007, 04:41 AM
ஆஹா சற்றே இளைப்பாறினேன் அதற்குள் 15 பாகம்
விடுவேனா ஒரே மூச்சில் படித்துவிட்டேன்
அற்புதம் வாழ்த்துக்கள்
மோகன் அவர்களே!!!

leomohan
10-08-2007, 07:57 AM
21

அந்த கார் உளவத்துறையின் பிராந்திய தலைமை அலுவலகத்தை நோக்கி பறந்துக் கொண்டிருந்தது. முன்னும் பின்னும் பல அரசாங்க அம்பாஸிடர்கள். அந்த காரின் உள் உள்துறை அமைச்சர் மற்றும் கமிஷனர் அமர்ந்திருந்தனர்.

கமிஷனர் நீங்க இந்த ரிதுபவன் கேஸை கையில் எடுத்துக்கோங்க. உளவுத்துறைக்கு போயிட்டா நம்ம கட்டுப்பாட்டில் இருக்காது. நம்மால ரிதுவேந்தரை காப்பாத்தா முடியாது.

என்ன பண்ணலாம்னு சொல்றீங்க சார்.

நீங்க அங்கே ரெயிட் செய்யப்போறதாகவும் ஏதாவது தகவல் கிடைச்சா கொடுங்கன்னு அவங்க கிட்டே கேளுங்க.

சரி சார்.

அந்த வாகனம் அலுவலகத்தை அடைந்ததும் நின்றது. இருவரும் விரைந்து உள்ளே நுழைந்தார்கள்.

வழியில் பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு வரவேற்பறையில் அமர்த்தப்பட்டனர். பிறகு அனுமதி கிடைத்ததும் உள்ளே நுழைந்தனர்.

ரமேஷின் உயர் அதிகாரி, வாங்க சார் வாங்க என்று அன்புடன் வரவேற்றார்.

சார், கமிஷனர் ஏதோ முக்கியமான விஷயம் பேசனும்னு சொன்னாரு. அதனால அழைச்சிகிட்டு வந்தேன்.

குட்மார்னிங் கமிஷனர் சார். சொல்லுங்க.

சார், எங்களுக்கு ரிதுபவன்ல சட்ட விரோத காரியங்கள் நடக்கறதா தகவல் வந்திருக்கு. அதனால அதில் ரெயிட் பண்ணலாம்னு இருக்கோம்.

ரிதுபவனா, எங்கே இருக்கு அது.

என்ன சார் தெரியாத மாதிரி கேட்கறீங்க. ராமநாதபுரத்துல இருக்கு. சமீபத்தில் கூட ஒரு அமெரிக்கர் அங்கு வந்துட்டு காணாமல் போயிட்டாரே.

சார், எங்க துறைக்கு இந்த கேஸ் எதுவும் வரலையே

என்ன சொல்றீங்க. அப்ப அங்கே ஒரு உளவுத்துறை அதிகாரி மாட்டிகிட்டதா தகவல் வந்திருக்கே.

என்ன சொல்றீங்க. நாங்க யாரையும் அனுப்பலையே.

கமிஷனரும் அமைச்சரும் ஒருவரை ஒருவர் குழப்பமாக பார்த்து விட்டு, அப்ப அது வேற யாராவது தனியார் துப்பறியும் நிறுவனமா இருக்குமா என்று கேட்டுக் கொண்டனர்.

சரி சார். யார் அங்கே ஒரு உளவுத்துறை அதிகாரி மாட்டிகிட்டதா தகவல் கொடுத்தாங்க.

இந்த கேள்விக்கு சற்றுத் தடுமாறித்தான் போனார் கமிஷனர். அது.. எங்களோட இன்பார்மர் அங்கே இருக்காரு.

அப்ப, ரொம்ப நாளா இந்த ரிதுபவனை வாட்ச் பண்றீங்களா

ஆமாம்.

அப்ப ஏன் இன்னும் அந்த அமெரிக்கன் கேஸ் சால்வ் ஆகலை.

இன்னும் ரிதுபவனை சம்பந்தப்படுத்தி ஒன்னும் கிடைக்கலை.

இப்ப மட்டும் என்ன ஆதாரம் கிடைச்சுது.

இந்த கேள்வி மழைகளில் சற்றே கலவரம் அடைந்த இருவரும் எழுந்தனர்.

சரி சார், ஏதாவது கிடைச்சா சொல்லுங்க. இந்த கேஸை தமிழக காவல் துறையே பார்த்துக்கும் என்றார் கமிஷ்னர்.

ஒரு நிமிஷம் சார். எங்க தகவல் சேகரிக்கும் துறையில் ஏதாவது ரிதுபவனை பத்தி கிடைக்குதான்னு பார்க்கறேன்.

அவர்கள் மீண்டும் அமர்ந்தனர். ரமேஷின் மேல் அதிகாரி, தொலைபேசியில் யாரையோ அழைத்தார். கதவு திறந்து 4 அதிகாரிகள் வந்தனர். கையில் விலங்குகள்.

இவங்க ரெண்டு பேரையும் அரெஸ்ட் பண்ணுங்க என்றார்.

என்ன என்று அதிர்ந்து நின்றனர் இருவரும்.

ஏன் ஏன் ஏன் கைதி பண்றீங்க எங்களை.

ரிதுவேந்தரோட சம்பந்தம் இருந்ததால

என்ன விளையாடறீங்களா. நான் மினிஸ்டரு. இவரு கமிஷ்னர். எங்களை அத்தனை சுலபத்துல கைதி செய்ய முடியாது.

நீங்க சொல்றது சரிதான். மன்னிச்சுக்குங்க. நீங்க போகலாம் என்றார்.

அவர்கள் குழுப்பத்துடன் எழுந்து கதவை நோக்கி நடக்க முயல,

சார், இன்னொரு வழி இருக்கு.

என்ன என்று காட்டமாக கேட்டார் மந்திரி. அவருக்கு அங்கிருந்து போனால் போதும் என்றிருந்தது.

கமிஷ்னர் சார் காலையில் ஷேவ் பண்ணும்போது ப்ளேடு கழுத்துல பட்டு கழுத்து கீழே விழுந்துடுத்து. விபத்து தான். உள்துறை அமைச்சர் ரிதுவேந்தர் சொல்லிக் கொடுத்த யோகா பண்ணும் போது ஆசனவாயில் ப்ராணவாயு போய் மூச்சடைத்து செத்துப்போயிட்டாரு. பாவம், இன்னொரு எதிர்பாராத விபத்து.

என்ன மிரட்டறீங்களா. ரிதுவேந்தர் யாருன்னு தெரியாம விளையாடறீங்க. அவருக்கு அமெரிக்காலேர்ந்து அமிஞ்சிக்கரை வரை ஆளுங்க இருக்காங்க. ஆழம் தெரியாம கை விடாதீங்க.

எனக்கும் ஜார்ஜ் புஷ்ஷை தெரியும். ஆனால் அவருக்கு என்னை தெரியாது என்றார் நக்கலாக அந்த அதிகாரி.

அவருடைய விவேக் நகைச்சுவையை ரசிக்க முடியாமல் அமைச்சர் முறைத்தார்.

போடா என்றார் அதிகாரி. இவங்களை இழுத்துட்டு போய், போலீஸ்காரனுக்கு நமக்கும் என்ன வித்தியாசம்னு காட்டுங்க என்றார்.

இருவரும் பொருமிக் கொண்டே அந்த அதிகாரிகளுடன் வெளியேறினர்.

leomohan
10-08-2007, 08:12 AM
22

ரிதுபவனத்தில் பூஜை முடிந்தும் யாரும் வீட்டுக்கு அனுப்பப்படவில்லை. பெரிய கதவு பூட்டப்பட்டிருந்தது. ஆட்டு மந்தையாக மாறிய மனிதர்கள் அங்கே படுத்து உறங்கினர். இரவு அவர்களுக்கு காலை உணவும் வழங்கப்பட்டது.

வீட்டுக்கு போகவேண்டும், வேலைக்கு போக வேண்டும் என்று சொன்ன ஒரிரு உறுப்பினர்கள் தனியறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்க கைகளாலும் கால்களால் அடித்து புரியவைத்தனர்.

தனியறையில் பூட்டப்பட்ட ஜெயாவுக்கு ரமேஷிடம் தகவல் போய் சேர்ந்திருக்கும் என்று நம்பிக்கை இருந்தது.

அவளை கவனிக்க வந்த ஒரு பெண் மருத்துவரின் கைகளை பிடித்துக் கொண்டு, நான் உளவுத்துறையிலேர்ந்து வரேன். உங்களையும் மக்களையும் ரிதுவேந்தர் கிட்டேர்ந்து காப்பாத்த தான் இப்படி மானத்தையும் விட்டு உயிரையும் பணையம் வைச்சி வந்திருக்கேன் என்றாள் உருக்கமாக.

அந்த மருத்தவ பெண்மணி, கதவுக்கு முதுகை காட்டி நின்றவாறு, தன் வயிற்று பகுதியில் கை வைத்து தொலைகாட்சி பெட்டி போல் சைகை செய்தாள். ஓ இந்த அறை சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறதா என்று கண்களால் கேட்டப்படியே அவருடைய கையில் இருந்த மருந்து நிறைந்த ஊசியை எடுத்து சட்டென்று குனிந்து எழுந்த அந்த காமிராவின் மூலம் பீச்சி அடைத்தாள்.

பிறகு ஒலிபதிவு இயந்திரத்தையும் பழுது செய்ய அந்த ஊசியை எடுத்து அங்கிருந்து வொயரின் நடுவே குத்தி வைத்தாள்.

இப்ப சொல்லுங்க என்றாள் அங்கிருந்த காகிதங்களை எடுத்து கிழித்துக் கொண்டே. வெளியே இருந்து கேட்டால் அவர்கள் பேசுவது தெளிவில்லாமல் இருக்க.

என்ன சொல்றது மேடம். நல்ல சம்பளம்னு இங்கே வந்தோம். இங்கே ஜெயில் மாதிரி இருக்கு. வெளியிலும் போக முடியலை. ஒரு வருஷத்துக்கு ஒருவாரம் தான் சொந்த ஊருக்கு போகமுடியும். அப்பவும் யாராவது எங்களை உளவு பார்த்துகிட்டே இருப்பாங்க. இங்கே நடக்கற அந்நியாயத்தை பார்த்தால் மனசுக்கு கஷ்டமா இருக்கு. அப்பாவி மக்கள் ஏமாறாங்க.

புற்றுநோயோட வரவங்க மேடையில் வைச்சி வயித்துலேர்ந்து கான்சரை எடுக்கறேன் சொல்லிட்டு ரத்தம் தோய்ந்த ஆட்டு சதையை கையில் எடுத்து காட்டறாரு அந்த ரிதுவேந்தர். அதை பார்த்து மக்கள் அசந்து போயிடறாங்க. வந்துட்டு போன நோயாளி கொஞ்ச நாள்ல செத்துபோயிடறாங்க. அந்த நியூஸ் இந்த மக்கள் கிட்டே வர்றதே இல்லை.

அதுமட்டுமில்லை மேடம் சட்டப்புத்தகத்துல இருக்கற எல்லா சட்டங்களையும் மீறி செயல்கள் நடக்குது இங்கே.

இன்னிக்கு கூட யாரையும் போகவிடலை. நீங்க மாட்டிக்கிட்டதால இன்னும் பிரச்சனை பயங்கரமாயிடுத்து. நீங்க அவங்களை காப்பாத்த வந்தீங்க. ஆனா நீங்க தான் இவங்க எல்லாரோட சாவுக்கு காரணமாயிட்டீங்க.

என்ன சொல்றீங்க என்றாள் ஜெயா அதிர்ச்சியுடன்.

ஆமா. இன்னிக்குள்ள இந்த ஊர் மக்கள் எல்லாரையும் விஷ வாயு போட்டு கொல்லப்போறாங்க. அப்புறம் இந்த கூடாரம் வேறு ஒரு ஊருக்கு போகும். அங்கேயும் எல்லா காரியமும் நடக்கும்.

டாக்டர் எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா.

சொல்லுங்க மேடம். இனி உயிரே போனாலும் இங்க இருக்கக்கூடாதுன்னும் முடிவு பண்ணிட்டேன். எங்களை காப்பாத்தறுதுக்காக மானத்தையும் விட்ட பல மணி இந்த ஆண்களுக்கு மத்தியில் உடையே இல்லாம நீங்க கஷ்டபடறதை பார்த்தும் எனக்கு தைரியம் வரலைன்னா என்ன அர்த்தம்.

சரி நான் சொல்ற மாதிரி செய்யுங்க என்று அவளுக்கு தன் திட்டத்தை விளக்கினாள். கதவு திறந்து ஒரு ரிதுவேந்தர் வர, சில நிமிடங்கள் அவன் நரகத்திற்கு அனுப்பப்பட்டான் இரண்டு வீர பெண்மணிகளின் உதவியுடன்.

அன்புரசிகன்
10-08-2007, 08:18 AM
முக்கிய கட்டத்திற்கு வந்துவிட்டாள்....

மக்களை காக்குமம் காவல் துரோகத்தனங்களுகக்கு துணைபோகிறது.

மதி
10-08-2007, 08:25 AM
சீக்கிரம் அடுத்த பாகத்தை வெளியிடவும்..

leomohan
10-08-2007, 08:36 AM
23

ரமேஷ் நேராக தபால் நிலையத்திற்கு சென்று போஸ்ட் மாஸ்டரிடம் தன் திட்டத்தை விவரித்தான். இருவரும் அவருடைய டிவிஎஸ்ஸில் நகரத்தை சென்று அடைந்தனர்.

அங்கு கடற்படை அதிகாரியை பார்த்து பேசினர். அவருக்கு ரமேஷின் மேல் அதிகாரியிடமிருந்து எல்லா உதவிகளையும் செய்யும் படி ஆணை வந்திருந்தது.

சார், எனக்கு ஒரு ஹெலிகாப்டர் வேணும், பைலட்டோட. சின்ன பாம் டெலிவர் பண்ற திறன் இருக்கனும். இல்லைன்னா ஒரு சிறிய ரக விமானம் இருந்தா கூட போதும் என்றான்.

ஏற்பாடு பண்ணிடலாம் சார். நீங்க உட்காருங்க.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அவன் கேட்டது தயாராக இருந்தது. ஒரு தனி அறையில் தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக பணி புரிந்து உளவு அதிகாரியும், ரமேஷூம், விமானியும் அந்த கடற்படை அதிகாரியும் அமர்ந்தனர்.

சார், கடலை ரோந்து செய்ய பயன்படற ஹெலிகாப்டரை உங்களுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கோம். அம்யூனிஷனும் ரெடி என்றார்.

ஓகே. இப்ப இது தான் நம் திட்டம். ஹெலிகாப்டரை ரிதுபவன் கிட்டே எடுத்துகிட்டு போய் முதல்ல ஒரு பாமை ரிதுபவனின் வட-கிழக்கு முனையில் இருக்கற உணவு கிடங்கி மேலே போடறோம். பீதி அடைஞ்சி வெளியே ஓடி வரவங்களை அரஸ்ட் பண்றோம். 50 தீயணைப்பு எந்திரங்கள் ரிதுபவனை சுத்தியிருக்கனும். தீ அணைக்கறது மட்டுமில்லாமல் மக்களை காப்பாத்தறதுக்கு ரிதுவேந்தர்களை கைதி பண்றதுக்கும் தான்.

சார், நாம ஏன் நேரா போய் கைது பண்ணக்கூடாது.

ரிதுபவனில் ஏதாவது பெரிய பிரச்சனை நடந்தா தான் சட்டமோ காவல் துறையோ உள்ளே நுழைய முடியுங்கற நிலைமை. அதுமட்டுமல்ல இந்த குண்டுவெடிப்பால் மீடியா உள்ளே நுழையனும். அவங்க வழக்கத்தைவிட சொந்த மசாலா அதிகம் போட்டு இந்த நியூஸை ஒரு மாசத்திற்கு சொல்லனும். அப்போ தான் மக்களுக்கு அவேர்நெஸ் கிடைக்கும். இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம்னு சொல்லிக்கிட்டு அவங்களே இன்னும் நோண்டி பல தகவல்களை எடுத்துக் கொடுப்பாங்க.

ஒருவேளை ரிதுவேந்தர்கள் ஏதாவது முட்டாள்த்தனமா செய்ய முற்பட்டாலோ அல்லது தற்கொலை பண்ணிக்க முடிவு பண்ணாலோ இந்த குண்டு வெடிப்பு ஒரு அலர்ட் மாதிரி, எல்லாரையும் பீதி அடையச் செய்யும். அவங்களும் வெளியே வருவாங்க.

குண்டு வெடிச்ச பிறகு உள்ளே நுழையற காவல் துறையோட எல்லா நடவடிக்கைகளையும் மீடியா நேரா இருந்து கவனிக்கும். அதனால காவல் துறை ரிதுவேந்தரை காப்பாத்த முடியாது.நான் ஏற்கனவே கிட்டே இருக்கற எல்லா ஊர்களிலிருந்தும் பயர் என்ஜின் வரவழைச்சிட்டேன். ஒருவேளை ரிதுவேந்தர்கள் நம்மோட சண்டைக்கு வந்தாங்கன்னா, இன்னொரு பாமை அவங்க தலைமேலே போடுவோம் என்றான்.

எத்தனை மணிக்கு இந்த பாமிங் என்றார் அந்த கடற்படை அதிகாரி.

சாயங்காலம் நாலு மணிக்கு.

அப்ப இப்போ கிளம்பினா சரியா இருக்கும்.

ஓகே என்று அனைவரும் ஹெலிபேடை நோக்கி நடந்தனர்.

கடற்படை அதிகாரி ஒரு நிமிஷம் சார். நான் டாய்லெட் போயிட்டு வந்திடறேன் என்றார்.

சரி என்று சொல்லி மற்ற மூவரும் ஹெலிகாப்டரில் சென்று அமர்ந்தனர்.

கடற்படை அதிகாரி உள்ளே வந்து அமர்ந்ததும் ரமேஷ், சார் ஒரு போன் பண்ணிக்கலாமா. உங்க மொபைல் கொடுங்க. என் மொபைல்ல சார்ஜ் போயிடுத்து என்றான்.

அவரு கொடுப்பதற்கு முன் ஏதோ பொத்தான்களை அமுக்க முயல அவரிடம் இருந்து போனை பிடிங்கி லாஸ்ட் டயல்ட் நம்பரை பார்த்தான். ஆர் என்று இருந்தது. ஏதேர்சையாக தவறவிடுவதை போல் போனை கீழே தவறவிட்டான். விமானியை நோக்கி, நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க என்றான்.

சார், என் மொபைல் கீழே விழுந்திட்டுது. நிறுத்துங்க என்றார்.

பரவாயில்லை சார். ரிதுவேந்தருக்கு தான் நீங்க மெஸேஜ் கொடுத்தாச்சே. 4 மணி தானே சொன்னீங்க. ஹா, ஒரு சின்ன திருத்தம் இப்போ இரண்டே முக்காலுக்கே பாம் போடப்போறோம். உணவு கிடங்கியில் இல்லை, உங்க ரிதுவேந்தரோட தலைமேலை என்றான்.

அவர் முகம் வெளீறியது. சார்,..... என்று அதிர்ந்தார்.

நீங்க கடற்படை அதிகாரி. தேசத்தோட பாதுகாப்புக்கு முக்கியமான அங்கம். நீங்களே இது மாதிரி போலிகளுக்கு துணை போனா, நாட்டு மக்களை யாரு காப்பாற்ற முடியும்.

அவரு கூனி குறுகி போனார்.

சார் இப்ப இரண்டு வகையில உங்களை டீல் பண்ணலாம். மொபலை கீழே போட்டது போல் கீழே போடலாம். இல்லை மனம் திருந்தி நாட்டுக்காக உழைக்கிறேன்னு சொன்னீங்கன்னா, இந்த ரிதுவேந்தர் கேஸ்ல உங்க பேரை வராம பார்த்துக்கறேன்.

சார், ரொம்ப தாங்கஸ் என்றார். அவர் கண்களில் நீர் வழிந்தோடியது.

lolluvathiyar
10-08-2007, 08:41 AM
கதை வித்தியாசமாக சென்று கொன்டிருகிறது.
நல்ல கற்பனை சக்தி உங்களிடம் இருக்கிறது

சில சந்தேகம்
ஆரம்பத்தில் கல்ட் பற்றியது என்று ஆரம்பித்து பிறகு வேறு மாதிரி போகிறதே. மாபியா தீவிரவாதம் போண்ற ரேஞ்சுக்கு போகிறது. அரசியல் கலக்கிறது. கல்ட் க்கு சம்மந்தம் இல்லாமல் போவதாக ஒரு பீளிங்ஸ் வருகிறது. மர்ம கதை அப்படி தான் திசை மாரி கொண்டே வருமோ
தொடருங்கள்

leomohan
10-08-2007, 08:50 AM
24

உள்துறை அமைச்சர் போன் எடுக்கவில்லை. கமிஷ்னர் போன் எடுக்கவில்லை. ரமேஷை தந்திரமாக அழைத்து வரச் சென்ற டீக்கடைக்காரர் திரும்பவில்லை. ரிதுவேந்தருக்கு உள்ளே மணி அடித்தது.
இந்த கடற்படை அதிகாரியின் தொலைபேசி வேறு வந்து அவனை பீதியடைய செய்திருந்தது.

தன்னுடைய நம்பிக்கையான ஆட்களை அழைத்து, நாம் ரிதுபவன காலி பண்றோம். எல்லா மக்களையும் பூட்டி வைச்சி விஷ வாயுவை திறந்துவிட்டுடுங்க. அந்த பொண்ணையும் கூட்டத்தோடு கட்டிவிட்டுடங்க.
4 மணிக்கு இங்கே பாமிங்க பண்ணப்போறாங்களாம். எப்படியாவது மூண மணிக்குள்ளே இங்கிருந்து கிளம்பிடனும். சரியா என்றான்.

சரியென்று தலையாட்டி விட்டு அந்த கூட்டம் வேலையில் இறங்கியது. அந்த பெரிய தரிசன அறையில் இருந்த பெரிய குழாய்களுடன் பின்னறையில் இருந்த விஷவாயு சிலிண்டருடன் இணைக்ப்பட்டன. பாவக்குழியில் இருந்த பணம், நகைகள் பெட்டிகளில் நிரப்பப்பட்டன. அடித்தளத்தில் இருந்த பெரிய வாகனத்தில் அவை அனைத்தும் நிரப்பி எல்லாம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

உணவு உண்டுவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல் மக்கள் அங்கே மாக்களாக மாறி அமர்ந்திருந்தனர்.

ஒரு நீல ஆடை வந்து விசுவாசிகளே, எல்லோரும் கவனமா கேளுங்க. இன்னிக்கு மூணு பணிக்கு நாம எல்லோரும் இந்த உடலோட கடவுளை தரிசனம் பண்ணப்போகறோம். ரிதுவேந்தரும் நம்மோட வருவார். அதனால எல்லாரும் எங்கேயும் போகாம இங்கே இருந்து ரிதுவேந்தரை பிராத்தனை செஞ்சிகிட்டே இருங்க என்று சொல்லி விலகினான்.



ராணி தரதரவென்று ரிதுவேந்தரிடம் அழைத்து வரப்பட்டாள். எல்லாத்துக்கும் நீ தான் காரணம் என்று சொல்லி ஓங்கி அறைவிட்டான்.

இல்லை. நான் மட்டும் இல்லை. உன்னோட நீல நிற ஜோக்கர்களில் ஒருத்தனும் தான் டிடெக்டிவ் என்று ரீல் விட்டாள் ஜெயா.

என்ன சொல்றே. யார், யாரு என்றான்.

நீ எப்படியிருந்தாலும் என்னை கொல்லப்போறே. உனக்கு சொல்றதால எனக்கு என்ன லாபம்.

சிறிது நேரம் யோதித்துவிட்டு ரிதுவேந்தர் சொன்னான், எப்படியிருந்தாலும் உன்னை கொல்லப்போறேன். ஓடிப்போகும் போது இந்த கைக்கூலிகளையும் கூட்டிட்டு போற அளவுக்கு நான் பைத்தியக்காரனா. என்கிட்டே இருக்கற சக்தியை வைச்சிகிட்டு நான் எத்தனை விசுவாசிகளையும் உருவாக்க முடியும். இன்னும் கொஞ்ச நேரத்துல எனக்காக அவங்களை சாவ சொல்லுவேன். ஏவன் என் பேச்சை கேட்கலையோ அவன் தான் உன் ஆளு. அவனை நான் கொன்னுடுவேன். அதனால நீ ரொம்ப புத்தசாலின்னு நினைச்சுக்காதே என்றான்.

அவள் மெல்ல சிரித்தாள். போகறதுக்கு முன்னாடி கொஞ்ச நேரம் ஜாலியாக இருக்கலாமே என்றாள் நக்கலாக.

அவன் அவளை நெருங்கி ஓங்கி அறைந்தான். பிறகு அந்த அறையிலிருந்து அவசரமாக வெளியேறினான்.

நீல ஆடைகள் அவளை இழுந்து வந்து மற்ற விசுவாசிகளுடன் அமரவைத்தனர். அவளை மட்டும் கட்டிவைத்தனர்.

விஷவாயு சிலிண்டர்கள் திறக்கப்பட்டன. ரிதுவேந்தர்கள் முகத்தில் மாஸ்க் அணிந்துக் கொண்ட அவசர அவசரமாக வெளியேற தயாரானார்கள்

அன்புரசிகன்
10-08-2007, 08:53 AM
அப்போ மலசலகூடம் சென்றவரும் ரிதுவேந்தரின் கைக்கூலியா.... என்னகொடுமை... பணம் எங்கெல்லாம் விளையாடுகிறது... தொடருங்கள்...

leomohan
10-08-2007, 08:53 AM
கதை வித்தியாசமாக சென்று கொன்டிருகிறது.
நல்ல கற்பனை சக்தி உங்களிடம் இருக்கிறது

சில சந்தேகம்
ஆரம்பத்தில் கல்ட் பற்றியது என்று ஆரம்பித்து பிறகு வேறு மாதிரி போகிறதே. மாபியா தீவிரவாதம் போண்ற ரேஞ்சுக்கு போகிறது. அரசியல் கலக்கிறது. கல்ட் க்கு சம்மந்தம் இல்லாமல் போவதாக ஒரு பீளிங்ஸ் வருகிறது. மர்ம கதை அப்படி தான் திசை மாரி கொண்டே வருமோ
தொடருங்கள்

கல்ட் என்பதே ஒரு தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு குற்றம் புரிவதற்கு ஒரு போர்வையாக பயன்படுத்துகிறார்கள் என்பதே இதன் திரி. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தகாத உறவுகள், பணம் மாற்றம், ஹவாலா, தற்கொலை படை, அரசியல்வாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும், ஸ்மக்லர்களுக்கும் உதவுவதான் இந்த கல்டுகளின் நோக்கம். அந்த கல்டுகளை பாதுகாப்பதும் இது போன்றவர்கள் தான்.

leomohan
10-08-2007, 09:21 AM
25

சரியாக 2.50 முதல் குண்டு திட்டமிட்டபடி உணவு கிடங்கியின் மேல் வீசப்பட்டது. எதிர்பார்த்தபடி மக்கள் பீதியடைந்து வெளியே ஓடி வந்தனர். இதில் மருத்துவர்களும் மக்களும் அடங்கும்.

இரண்டாவது குண்டு சற்றே அந்த பெரிய குடிசைக்கு தள்ளி விழுமாறு போடக் கோரினான் ரமேஷ். அதுபோலவே பெரிய சத்தத்துடன் அந்த குண்டும் வெடித்தது. மக்கள் கூக்குரலிட்டப்படி அங்கும் இங்கும் ஓடினார். தீயணைப்பு வண்டிகள் ரிதுபவனத்தின் கதவுகளை உடைத்துக் கொண்டு நால் புறமும் உள்ளே நுழைந்தன.

100 ஏக்கர் பரப்பளவில் இருந்த அந்த ரிதுபவனின் தென் கோடியின் எல்லையில் கீழே ஒரு பெரிய கதவு திறந்து அந்த வாகனம் அடித்தளத்திலிருந்து வெளியேறியது.

ஹெலிகாப்படரை அதன் முன் இறங்க செய்தான் ரமேஷ். நான்கு புறமும் தீயணைப்பு எந்திரங்கள் அந்த வாகனத்தை சூழ்ந்துக் கொண்டன. உள்ளிருந்து தீயணைப்பு அதிகாரிகளுக்கு பதிலாக காவல் துறை அதிகாரிகள் வெளியே வந்தனர்.

ஹனிமூனுக்கு எங்கே போகலாம்.

சைப்ரஸ் போகலாமா

போகலாம். அதுக்கு முன்னாடி உங்க கையில் இருக்கற சிப்பை எடுக்க சொல்லுங்க. இல்லாட்டி நம்ம பாசுக்கு நாம் எங்கெல்லாம் போறோம்னு தெரிஞ்சிகிட்டே இருக்கும். ஆஃப்டர் ஆல் இட்ஸ் அவர் பர்செனல் மிஷன் என்றாள் ஜெயா வெற்றி களிப்புடன்.

ஓ. அதை மறப்பேனா என்று சொல்லியபடியே அவளை அணைத்தான் ரமேஷ்.

முற்றும்

தமிழ் திரைபட பாணியில் முழுக்கதையையும் பார்த்து பழகியவர்களுக்கு. இப்படி கற்பனை செய்துக் கொள்ளுங்கள். படத்தில் பங்கேற்றவர்களின் பெயர்கள் வலது புறம் ஓடிக் கொண்டிருக்கின்றன. இடது புறத்தில் சிறிய சதுரத்தில் இந்த காட்சிகள் வருகின்றன.

1. மருத்துவ பெண்மணியிடம் ஜெயா கேட்ட உதவி விஷ வாயு சிலிண்டருக்கு பதிலாக அந்த இணைப்பை ப்ராணவாயுவின் சிலிண்டருடன் இணைப்பது.
2. ரிஷிவேந்தருடன் தப்பித்த ரிதுவேந்தர்கள் தீயணைப்பு வண்டிகள் சூழ்ந்ததும் சயனைட் அருந்தி உயிரை விட்டனர். ஆனால் சராசரியாக உயிருக்கு பயந்து, அதே நேரத்தில் எப்படியும் தப்பிவிடலாம், இந்தியாவின் சட்டமா எனக்கு தெரியாது என்று நினைத்தவாறு ரிதுவேந்தர் அமைதியாக கைதானான்.
3. பாவக்குழியின் அருகில் ஒரு கதவு கண்டுபிடிக்கப்பட அது நேராக ரிதுவேந்தர் இருந்த பெரிய குடிசைக்கு வழிகாட்டியது. அங்கு எடுத்துக் கொண்டது போக எக்கச்சக்கமான பணம், நகைகள் இருந்தன. தளவாடங்கள், குண்டுகள் என்று ஒரு ஊரைய அழிக்கவல்ல ஆயுதங்களும் இருந்தன.
4. உள்துறை அமைச்சர், ரிதுவேந்தர் மற்றும் கமிஷனரை உலுக்கியதில் பல பெரிய தலைகள் மாட்டின. உள்நாட்டு கூலிகளை கைது செய்தது காவல்துறை. வெளிநாட்டு பெரிய தலைகளுக்காக இன்டர்போலில் விண்ணப்பித்தும் உள்ளனர்.
5. நீல நிறக் கூட்டத்தில் யாரும் உளவாளி இல்லை. ஜெயா நேரம் கடத்த செய்த டைம்பாஸ் அது.
6. அங்கீகரிக்கப்பட்ட மத வழிபாடு இடங்கள் தவிர்த்து வேறு இடங்கள் மக்கள் கூடக்கூடாது என்று புதிய சட்டம் உருவாக்கப்பட்டது.
7. அமெரிக்கர் கொல்லப்பட்ட விஷயம் அமெரிக்க தூதரகத்திற்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
8. ரிதுவேந்தரின் மருந்துகளால் பாதிக்கப்பட்ட அந்த ஊரின் மக்களுக்கு அரசாங்கம் மருத்துவ வசதி அளித்தது.
9. ரமேஷ்-ஜெயா திருமணம் நவம்பர் மாதம் நிச்சயிக்கப்பட்டது.
10. மீடியாக்களுக்கு இன்னொரு கூத்து கிடைக்கும் வரை கூத்தடிக்க ரிதுவேந்தர் சப்ஜெக்ட் கிடைத்தது.

நிஜமாகவே முற்றும்

அன்புரசிகன்
10-08-2007, 09:29 AM
இறுதியில் விரைவாக முடித்துவிட்டீர்களே...............
முற்றும் இற்கு பின் வந்த 10 குறிப்புக்களும் அசத்தல்
பாராட்டுக்கள் மோகன்......

pathman
10-08-2007, 09:32 AM
அப்பாடா ஒரு வழியாக முடிந்தது காலையில் இருந்து நீங்கள் கதை பதிக்க பதிக்க வாசித்து கொண்டிருந்தேன் இதை தந்திருக்கும் லியோ அவர்களுக்கு நனறிகளும் இன்னம் இது போன்ற கதைகள் எழுத எனது வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கின்றேன்

leomohan
10-08-2007, 09:37 AM
இறுதியில் விரைவாக முடித்துவிட்டீர்களே...............
முற்றும் இற்கு பின் வந்த 10 குறிப்புக்களும் அசத்தல்
பாராட்டுக்கள் மோகன்......



நன்றி அன்புரசிகன். இது போன்ற கதைகளை இழுப்பது சுவாரஸ்யத்தை குறைத்துவிடும். கீழே தந்த 10 புள்ளிகளுக்கும் 10 அத்தியாயம் எழுதலாம். ஆனால் அதில் இதே டெம்போ மெயின்டைன் செய்வது கடினம்.

leomohan
10-08-2007, 09:38 AM
அப்பாடா ஒரு வழியாக முடிந்தது காலையில் இருந்து நீங்கள் கதை பதிக்க பதிக்க வாசித்து கொண்டிருந்தேன் இதை தந்திருக்கும் லியோ அவர்களுக்கு நனறிகளும் இன்னம் இது போன்ற கதைகள் எழுத எனது வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கின்றேன்

மிக்க நன்றி நண்பரே. உங்கள் பெயரை எப்படி உச்சரிப்பது.

கதைகள் பகுதியில் கடைசி பேட்டி, கறுப்பு வரலாறு போன்றவை இதே பாணியில் இருக்கும். நேரமிருந்தால் படிக்கவும். நன்றி.

அன்புரசிகன்
10-08-2007, 09:48 AM
நன்றி அன்புரசிகன். இது போன்ற கதைகளை இழுப்பது சுவாரஸ்யத்தை குறைத்துவிடும். கீழே தந்த 10 புள்ளிகளுக்கும் 10 அத்தியாயம் எழுதலாம். ஆனால் அதில் இதே டெம்போ மெயின்டைன் செய்வது கடினம்.

உண்மை தான்... :aktion033: அடுத்த கதை எப்போது???

மதி
10-08-2007, 10:39 AM
நல்ல விறுவிறுப்புடன் முடிந்தது கதை...
நல்ல வேகம்...
பாராட்டுக்கள் மோகன்..

lolluvathiyar
10-08-2007, 02:07 PM
கதை முடிந்து விட்டது வருத்தமான செய்தி.
இறுதி பாகம் வெகு வேகமாக சென்று விட்டது

இது போன்ற கதைகளை இழுப்பது சுவாரஸ்யத்தை குறைத்துவிடும். கீழே தந்த 10 புள்ளிகளுக்கும் 10 அத்தியாயம் எழுதலாம். ஆனால் அதில் இதே டெம்போ மெயின்டைன் செய்வது கடினம்.

மோகன் உன்மையை வெளிபடையாக கூறி எங்களை சமாதனம் செய்து விட்டார்.
இந்த கதை ரிதுபவன் கல்ட் என்று ஒரு கற்பனையில்
1. அரசியல் பாசரைகள்
2. தீவிரவாதி முகாம்கள்
3. மாபியா கூட்டங்கள்
4. போலி தொழில் சங்கங்கள்
5. மதமாற்று பிரச்சாரம் இயக்கங்கள்
6. போலி ஆன்மீக கூட்டங்கள்

செய்யும் தில்லுமுல்லகளை ஒருங்கே கூட்டி படம் பிடித்து காட்டிவிட்டது.
நமது மோகன் அவர்கள் நம் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட உளவு பிரிவிலும், போலிஸிலும், பத்திரிக்கை துரையிலும், ரானுவத்திலும் குரைந்த சில நல்ல திறமையான அதிகாரிகள் இருக்கும் வரை நாட்டை யாரும் ஒன்றும் பன்ன முடியாது என்று எத்தனை அழகான கதையாக நமக்கு தந்திருகிறார்.
சிறந்த கதை படைக்கும் மோக*னுக்கு நான 250 இப*ண*ம் தந்து பாராட்டுகிறேன்.


ஒரு ஆதங்கம் நம் நாட்டில் இன்று திறமையான
உளவு பிரிவும், போலிஸும், பத்திரிக்கையும், ரானுவமும் இன்று டம்மிகளாக்கி விட்டனர். வருங்காலத்தில் உங்கள் கதைபோல் திறமை ஜெயிக்குமா என்பது சந்தேகமே. ஆனால் இத்தனை நாட்களாக துனை புரிந்த ஆண்டவன் நமக்கு மீண்டும் துனை புரிவான்.

பார்த்திபன்
10-08-2007, 07:51 PM
"கிளைமக்ஸ்" வேகமாக முடிந்துவிட்டது அண்ணா...

நல்லதொரு கதையை தந்ததற்கு நன்றியும் பாராட்டுக்களும்......

leomohan
10-08-2007, 08:58 PM
பார்த்திபன், வாத்தியார், அன்புரசிகன், மதி அனைவருக்கும் என் நன்றிகள்.

க்ளைமாக்ஸ் இப்படி இருந்ததற்கு காரணம் 24ன் மேல் தொடர்ந்தால் ரிதுவேந்தர் தப்பிவிடுவான். மீண்டும் அவனை பிடிப்பது பாகம் 2 போல் ஆகிவிடும்.

சிவா.ஜி
11-08-2007, 01:46 PM
மிக அருமையான தொடர் மோகன். வெறும் வார்த்தைக்காக சொல்லவில்லை,ஒரு திறமையான கதைசொல்லியின் கதையைப் படித்ததில் மிகத் திருப்தி. விறு விறுப்புக்கு பஞ்சமில்லை,அதே சமயம் நிறைய புது விஷயங்களை கதையினூடே புகுத்தி,படிப்பவர்களையும் புத்திசாலிகளாக்கிய உங்கள் தொடர் மிக அருமை. பாராட்டுடன் 500 இ−பணம்.

leomohan
11-08-2007, 03:13 PM
மிக அருமையான தொடர் மோகன். வெறும் வார்த்தைக்காக சொல்லவில்லை,ஒரு திறமையான கதைசொல்லியின் கதையைப் படித்ததில் மிகத் திருப்தி. விறு விறுப்புக்கு பஞ்சமில்லை,அதே சமயம் நிறைய புது விஷயங்களை கதையினூடே புகுத்தி,படிப்பவர்களையும் புத்திசாலிகளாக்கிய உங்கள் தொடர் மிக அருமை. பாராட்டுடன் 500 இ−பணம்.

மிக்க நன்றி சிவா. அடுத்து ஒரு புரட்சி கதை.

அக்னி
11-08-2007, 11:53 PM
மோகன்...
கதைகள் என்றால், இலகுவில் நான் அடிமையாகிவிடுவேன். அதுவும் இதுபோன்ற கதைகள் என்றால் சொல்லவே வேண்டாம்.
எமது நகரத்தின் பொதுநூலகத்தில், மணிக்கணக்காக, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா ஆகியோரின் நாவல்களை வாசித்த காலம் நிழலாடுகின்றது.
கதையின் போக்கு, விறுவிறுப்பு, கதை சொல்லும் சேதி, முடிவு என்று அனைத்து அம்சங்களும் மனதைக் கவர்கின்றது.
பாராட்டுக்கள்...

சிறந்த எழுத்தாற்றலுக்கு 1000 iCash.

மாதவர்
12-08-2007, 02:48 AM
நல்ல முயற்சி
மோகன் உண்மையில் ஒரு சகல கலா வல்லவர்
வாழ்த்துக்கள்
பாராட்டுக்கள்

இளசு
12-08-2007, 07:27 AM
எண்பதுகளில் சுஜாதா கதைகள் வாசிக்கும்போது − இவர் இன்னும் இருபதாண்டுகளுக்குப் பிறகு வருபவருக்காகவும் எழுதுகிறாரோ எனப் பிரமிப்பு வரும்..

மோகனின் இக்கதையும் அதே உணர்வுகள் தந்தன..
சில இடங்களில் பண்பட்டவர் எல்லைக்குள் போகும் அளவுக்கு விவரணைகள் இருந்தன. பலநேரம் கதையை மீறி, கதாசிரியர் வாசகனைக் கவரக் கையாளும் அறிவார்ந்த உத்திகள் ஜொலித்தன..

ஆசிரமங்கள் தழைப்பது பதியம்போட்ட வெளிவரவுகளால்தான்..
அக்கம்பக்கக் கிராமமே அடிமையாய் இருப்பது???

கோர்வையாய்ச் சொல்லி படிக்கும் பலரையும் நம்பவைக்கும் திறமை இருப்பதால், நல்ல கதையாசிரியர்களும் ரிதுவேந்தர்களே அல்லவா?

நல்ல '' ரிதுவேந்தர்'' மோகனுக்குப் பாராட்டுகள்!

leomohan
12-08-2007, 08:45 AM
எண்பதுகளில் சுஜாதா கதைகள் வாசிக்கும்போது − இவர் இன்னும் இருபதாண்டுகளுக்குப் பிறகு வருபவருக்காகவும் எழுதுகிறாரோ எனப் பிரமிப்பு வரும்..

மோகனின் இக்கதையும் அதே உணர்வுகள் தந்தன..
சில இடங்களில் பண்பட்டவர் எல்லைக்குள் போகும் அளவுக்கு விவரணைகள் இருந்தன. பலநேரம் கதையை மீறி, கதாசிரியர் வாசகனைக் கவரக் கையாளும் அறிவார்ந்த உத்திகள் ஜொலித்தன..

ஆசிரமங்கள் தழைப்பது பதியம்போட்ட வெளிவரவுகளால்தான்..
அக்கம்பக்கக் கிராமமே அடிமையாய் இருப்பது???

கோர்வையாய்ச் சொல்லி படிக்கும் பலரையும் நம்பவைக்கும் திறமை இருப்பதால், நல்ல கதையாசிரியர்களும் ரிதுவேந்தர்களே அல்லவா?

நல்ல '' ரிதுவேந்தர்'' மோகனுக்குப் பாராட்டுகள்!

ஹா ஹா நன்றி இளசு. நான் எழுதியது மாத்திரம் 1 சதவீதம் தான். நான் ஆரம்பத்தில் கொடுத்த தொடுப்பில் உள்ள கல்ட் லீடர்கள் பல கொடுமைகளையும் செய்துள்ளனர். இன்னும் பலர் செய்துக் கொண்டிருக்கின்றனர். நேரம் ஒதுக்கி இதை படித்ததற்கு ஆயிரம் நன்றிகள்

leomohan
12-08-2007, 08:45 AM
நல்ல முயற்சி
மோகன் உண்மையில் ஒரு சகல கலா வல்லவர்
வாழ்த்துக்கள்
பாராட்டுக்கள்

நன்றி மாதவர்.

leomohan
12-08-2007, 08:46 AM
மோகன்...
கதைகள் என்றால், இலகுவில் நான் அடிமையாகிவிடுவேன். அதுவும் இதுபோன்ற கதைகள் என்றால் சொல்லவே வேண்டாம்.
எமது நகரத்தின் பொதுநூலகத்தில், மணிக்கணக்காக, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா ஆகியோரின் நாவல்களை வாசித்த காலம் நிழலாடுகின்றது.
கதையின் போக்கு, விறுவிறுப்பு, கதை சொல்லும் சேதி, முடிவு என்று அனைத்து அம்சங்களும் மனதைக் கவர்கின்றது.
பாராட்டுக்கள்...

சிறந்த எழுத்தாற்றலுக்கு 1000 iCash.

நன்றி அக்னி. என் கதை பாண்டவர்கள் கொடுத்த தர்மம் போல் ஆகிவிட்டது. நான் மெனக்கெட்டு 1000, 1000 மாக இபணம் கொடுத்து காலி செய்ய முயன்றால் நீங்கள் மீண்டும் கொடுத்துவிட்டீர்கள்.

அக்னி
12-08-2007, 12:47 PM
நன்றி அக்னி. என் கதை பாண்டவர்கள் கொடுத்த தர்மம் போல் ஆகிவிட்டது. நான் மெனக்கெட்டு 1000, 1000 மாக இபணம் கொடுத்து காலி செய்ய முயன்றால் நீங்கள் மீண்டும் கொடுத்துவிட்டீர்கள்.

என்னைப் பொறுத்தவரையில், iCash இன் பெறுமதி அதிகரிக்க வேண்டும்.
அதன் தொகை பார்த்தே, மன்றத்தில் பங்களிப்பும், திறமையும் வெளிப்படவேண்டும்.
மனதில் நிரவும் படைப்புக்களுக்கு, சிறிய மரியாதை செய்ய, iCash உதவுகின்றது.
அதனால், அளித்தேன்.
பாராட்ட வேறு வகையேது...
வார்த்தைகளோடு இணைகிறது iCash உம்...

gayathri.jagannathan
13-08-2007, 06:03 AM
நல்ல கதை படித்த திருப்த்தி ஏற்பட்டது மோகன்... நன்றி.. வாழ்த்துக்கள்...

ஆரம்பத்தில் நிதானமாக நிறைய விஷயங்களுடன் வந்த கதை..

பிறகு கதைப்போக்கின் காரணமாக குதிரை மேல் பயணித்து விரைவாக முடிவை சென்றடைந்து விட்டது...
முடிவதற்கு சில அத்யாயங்களுக்கு முன்பே கதை முடியப்போகிறது என்று தெரிந்து விட்டதால் சுவாரசியம் குறைந்து விட்டது போல் எனக்கு ஒரு எண்ணம்...

வாழ்த்துக்கள் மோகன்.. ஒரு நல்ல கதையைத் தந்ததற்கு...

gayathri.jagannathan
13-08-2007, 06:09 AM
இன்னும் நிறைய தகவல்களை எதிர்பார்த்தேன்...

தாங்கள் கொடுத்த சுட்டியில் போதுமான தகவல்கள் இருந்தாலும்... கதையின் போக்கில் விஷயத்தைக் கொடுத்தால் அது என்றென்றைக்கும் நினைவில் நிற்குமல்லவா?

மறுபடி ஒரு சூப்பர் ஸ்மார்ட் ஹீரோ...சில இடங்களில் இக்கால பிரபல கதை எழுத்தாளர்களின் தாக்கம்...ஆனாலும் கதையின் நடையில் அங்கங்கே தங்களுக்கே உரிய உவமான உவமேயங்கள், கதைக்கு நல்ல சப்போர்ட் கொடுக்கின்றது...

வாழ்த்துக்கள் மோகன்...

leomohan
13-08-2007, 07:16 AM
நல்ல கதை படித்த திருப்த்தி ஏற்பட்டது மோகன்... நன்றி.. வாழ்த்துக்கள்...

ஆரம்பத்தில் நிதானமாக நிறைய விஷயங்களுடன் வந்த கதை..

பிறகு கதைப்போக்கின் காரணமாக குதிரை மேல் பயணித்து விரைவாக முடிவை சென்றடைந்து விட்டது...
முடிவதற்கு சில அத்யாயங்களுக்கு முன்பே கதை முடியப்போகிறது என்று தெரிந்து விட்டதால் சுவாரசியம் குறைந்து விட்டது போல் எனக்கு ஒரு எண்ணம்...

வாழ்த்துக்கள் மோகன்.. ஒரு நல்ல கதையைத் தந்ததற்கு...

நன்றி காயத்ரி. தர்மமே வெல்லும் எனும் தமிழ் பட பார்மூலாவின் படி கடைசி அத்தியாயங்கள் துப்பறியும் சிங்கள் வெற்றியை நோக்கி செல்லவே அவ்வாறு தோன்றியிருக்கலாம். மீண்டும் ஒரு நல்ல முயற்சி செய்கிறேன்.

leomohan
13-08-2007, 07:21 AM
இன்னும் நிறைய தகவல்களை எதிர்பார்த்தேன்...

தாங்கள் கொடுத்த சுட்டியில் போதுமான தகவல்கள் இருந்தாலும்... கதையின் போக்கில் விஷயத்தைக் கொடுத்தால் அது என்றென்றைக்கும் நினைவில் நிற்குமல்லவா?

மறுபடி ஒரு சூப்பர் ஸ்மார்ட் ஹீரோ...சில இடங்களில் இக்கால பிரபல கதை எழுத்தாளர்களின் தாக்கம்...ஆனாலும் கதையின் நடையில் அங்கங்கே தங்களுக்கே உரிய உவமான உவமேயங்கள், கதைக்கு நல்ல சப்போர்ட் கொடுக்கின்றது...

வாழ்த்துக்கள் மோகன்...

நன்றி காயத்ரி. நான் தமிழ் நாவல்கள் படித்து 18 வருடங்கள் ஆகிறது. இருந்தாலும் சிறு வயதில் படித்த ஒரு சில க்ரைம் நாவல்களின் தாக்கம் அங்கும் இங்கும் இருப்பதை உணருகிறேன். முற்றிலும் இந்த தாக்கங்களை விலக்கி என் பாணியில் எழுத வேண்டும் என்பதே என் அவா.

இளசு ஐயா சொன்னது போல பலரும் சுஜாதா நாவல் போல் இருக்கிறது என்கிறார்கள். சுவாரஸ்யமாக, நான் சுஜாதா நாவல்கள் படித்ததே இல்லை. ஒரே முறை அவர் எழுதிய தொடர்கதை குமுதத்தில் படிக்க நேர்ந்தது. விக்ரம் படத்தின் கதையை எழுதி வந்தார்.

இந்த கல்ட் பற்றி பல தகவல்கள் சேகரித்து வந்தேன். ஆனால் செய்தி களத்தில் செய்தி போட்டாலும் வந்து பிரச்சனை செய்கிறார்கள். அப்படி இருக்க ஏதாவது பிரச்சனை ஆகி இந்த திரியும் மூடப்பட்டால் கதை எப்படி முடிப்பது. கருத்து சுகந்திரம் சிலருக்கு மட்டும் தான் கிடைக்கும்.

SathishVijayaraghavan
14-08-2007, 12:22 PM
நல்ல விறுவிறுப்பான* கதை...
பாராட்டுக்கள் மோகன்..

leomohan
14-08-2007, 12:44 PM
நல்ல விறுவிறுப்பான* கதை...
பாராட்டுக்கள் மோகன்..

நன்றி சதீஷ். தொடர்ந்து தங்கள் பங்கு மன்றத்தில் இருக்க வேண்டுகிறேன்.

மனோஜ்
23-08-2007, 03:41 PM
அன்பு மோகன் சார் அருமையான அடுத்த கதை கொடுத்தமைக்கு நன்றி இந்த தொடர் எழுதும் பொழுது நான் வாசிக்க வில்லை கடைசியா படிக்கலாமுன்னு இருந்தேன் இப்ப படித்து வி்ட்டேன்

விருவிருப்பான கதை சூழ்நிலைகளை கண்ணில் கொண்டுவருவது உங்கள் பாணி கல்ட் பற்றி முன்னமே கேள்வி பட்டதுன்டு கதையின் மூலம் அதிகமாகவே அறிந்து கொன்டேன்ன
வாழ்த்துக்கள் தொடர்ந் கதைகளை தர நன்றி

leomohan
23-08-2007, 08:44 PM
அன்பு மோகன் சார் அருமையான அடுத்த கதை கொடுத்தமைக்கு நன்றி இந்த தொடர் எழுதும் பொழுது நான் வாசிக்க வில்லை கடைசியா படிக்கலாமுன்னு இருந்தேன் இப்ப படித்து வி்ட்டேன்

விருவிருப்பான கதை சூழ்நிலைகளை கண்ணில் கொண்டுவருவது உங்கள் பாணி கல்ட் பற்றி முன்னமே கேள்வி பட்டதுன்டு கதையின் மூலம் அதிகமாகவே அறிந்து கொன்டேன்ன
வாழ்த்துக்கள் தொடர்ந் கதைகளை தர நன்றி

மிக்க நன்றி மனோஜ் உங்கள் ஊக்கத்திற்கு.