PDA

View Full Version : சிலுவைகள் சுமக்கின்றோம்

இலக்கியன்
06-08-2007, 09:48 AM
காற்றோடு காற்றாக
பறந்து செல்லும்
வெற்றுக் காகிதங்கள்
நாங்கள் அல்ல

எழுதப்பட வேண்டிய
புதுக்கவிதைகள் நாம்

உறவுகளை இழந்து
உணர்வுகளைப் புதைத்து

முற்களின் பாதையில்
நடக்கின்ற சிட்டுக்
குருவிகள் நாம்

`அ` எழுத வேண்டிய
பிஞ்சுக்கைகள்
பழுத்து சிவப்பாக

புத்தகம் சுமக்கும்
வயதிலே..
சிலுவைகள்
சுமக்கின்றோம்

அன்னையவள் அன்பு
முத்தம் எங்கே?
அணைத்திடும் தந்தை
கைகள் எங்கே?
கண்ணீர் துடைத்திடும்
தங்கை எங்கே?

அன்புக்கு ஏங்கும்
இதயங்களாக நாம்

உறங்கிட முற்றமில்லை
பசித்திடின் புசிக்கவில்லை
மானம்காகாக்க உடைகூட இல்லை

பசி எமக்கு நண்பன்
தரை எமக்கு மெத்தை
மழை எமக்கு குளியல்

எம் இருள் களைந்து
ஒளியேற்ற
உதவிக்கரம் தந்திடுவீர்

ஓவியன்
06-08-2007, 09:58 AM
நெஞ்சம் கனக்க வைத்த வரிகள் இலக்கியன்.........

கவிதை நன்றாக இருக்கிறது என்று கூட சொல்ல முடியாத நிலமையில் நான்.........
உண்மையில் இப்படியான கவிதைகளை எழுதும் நிலை எம்மைப் போன்றவருக்கு வரவே கூடாது......
அப்படி பிஞ்சுகளை வருத்தி, எம் கவிகளிலும் கருணைக்காக ஏங்க வைத்த இறைவன் கொடியவனே.....?
என்ன செய்வது இறுதியாக நாம் வைவது ஆண்டவனைத் தானே − அது மிகவும் இலகுவான காரியமென்பதனால்........

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம் இலக்கியா!
காற்று ஒரு போதும் ஒரே திசையில் வீசாது, காற்றும் திசை மாறி எம் கனவுகள் எல்லாம் நிச்சயமாகக் கை கூடும் ஒரு பூபாள விடியலில்.....

அதற்கான எம் உழைப்பை மாத்திரம் கைவிடாமல் ஒரே இலக்கில் பயணிக்க வேண்டியதே நம் பணி − அதனை எல்லோரும் ஓர் மனதாக இணைந்து செய்து முடிப்போம்.

அமரன்
06-08-2007, 10:12 AM
நெஞ்சைக் கனமாக்கும் கருவும் வரிகளும். அகதி வாழ்க்கையை அப்பட்டமாக இயம்பும் கவிதை. இந்நிலை மாறும் இலக்கியன். உதவி என நீட்டும்கரங்கள் உதவிக்கரங்களாக மாறும் நிலை வரும்.காத்திருப்போம்

சிவா.ஜி
06-08-2007, 10:19 AM
உதவி என்ற ஒற்றை சொல்லில் எல்லா உணர்வுகளும் அடங்கிவிடாது.இந்த சோகம் ஒருநாள் தீரும் சுகம் மலரும் என்ற நம்பிக்கையை நாளும் விதைத்திடும் உறவு வேண்டும்.அந்த உறவுக்கரங்கள் எங்கள் சகோதரர்களுக்கு என்றும் உண்டு. ஓவியன் சொன்னதைப்போல் கவிதை நன்று என்று மட்டும் சொல்லி முடித்துவிட முடியாமல் வேதனை உணர வைத்த வரிகள்.

இலக்கியன்
06-08-2007, 11:52 AM
நெஞ்சம் கனக்க வைத்த வரிகள் இலக்கியன்.........

கவிதை நன்றாக இருக்கிறது என்று கூட சொல்ல முடியாத நிலமையில் நான்.........
உண்மையில் இப்படியான கவிதைகளை எழுதும் நிலை எம்மைப் போன்றவருக்கு வரவே கூடாது......
அப்படி பிஞ்சுகளை வருத்தி, எம் கவிகளிலும் கருணைக்காக ஏங்க வைத்த இறைவன் கொடியவனே.....?
என்ன செய்வது இறுதியாக நாம் வைவது ஆண்டவனைத் தானே − அது மிகவும் இலகுவான காரியமென்பதனால்........

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம் இலக்கியா!
காற்று ஒரு போதும் ஒரே திசையில் வீசாது, காற்றும் திசை மாறி எம் கனவுகள் எல்லாம் நிச்சயமாகக் கை கூடும் ஒரு பூபாள விடியலில்.....

அதற்கான எம் உழைப்பை மாத்திரம் கைவிடாமல் ஒரே இலக்கில் பயணிக்க வேண்டியதே நம் பணி − அதனை எல்லோரும் ஓர் மனதாக இணைந்து செய்து முடிப்போம்.

ஆறுதலான வார்த்தைகள். யுத்தம் என்பது வாழ்க்கையாகிவிட்டது அந்த மக்களுக்கும் சிறுவர்களுக்கு புலம் பெயர் நாடுகளில் வாழும் உலகத்தமிழர்களும் தாய்த்தமிழகமும் உதவி செய்யவேண்டும் என்ற என்னப்பாட்டில் வடிக்கப்பட்டவரிகள் இது காலத்தின் கண்ணாடி

இலக்கியன்
06-08-2007, 11:57 AM
நெஞ்சைக் கனமாக்கும் கருவும் வரிகளும். அகதி வாழ்க்கையை அப்பட்டமாக இயம்பும் கவிதை. இந்நிலை மாறும் இலக்கியன். உதவி என நீட்டும்கரங்கள் உதவிக்கரங்களாக மாறும் நிலை வரும்.காத்திருப்போம்

அகதி வாழ்வில் சிக்கியவன் நான் அதனால் அந்த உணர்வுகள் பிரதிபலிக்கத்தான் செய்யும். நன்றி அமரன்

இலக்கியன்
06-08-2007, 11:58 AM
உதவி என்ற ஒற்றை சொல்லில் எல்லா உணர்வுகளும் அடங்கிவிடாது.இந்த சோகம் ஒருநாள் தீரும் சுகம் மலரும் என்ற நம்பிக்கையை நாளும் விதைத்திடும் உறவு வேண்டும்.அந்த உறவுக்கரங்கள் எங்கள் சகோதரர்களுக்கு என்றும் உண்டு. ஓவியன் சொன்னதைப்போல் கவிதை நன்று என்று மட்டும் சொல்லி முடித்துவிட முடியாமல் வேதனை உணர வைத்த வரிகள்.

உங்கள் உணர்வுகளை பகிர்ந்தமைக்கு நன்றி சிவா.ஜி

lolluvathiyar
06-08-2007, 12:41 PM
உன்மையை காட்டியது . வேதனையால அனைத்தும் இழந்து உனர்ச்சிகள் அனைத்தும் வடிந்தபின் வெறும் உயிர் மட்டும் மிஞ்சியிருக்கும் உடல் வடிக்கும் கவிதை இது.
படிப்பவர்களின் உனர்வை நிறுத்தி வைத்து விட்டது

இலக்கியன்
06-08-2007, 12:58 PM
உன்மையை காட்டியது . வேதனையால அனைத்தும் இழந்து உனர்ச்சிகள் அனைத்தும் வடிந்தபின் வெறும் உயிர் மட்டும் மிஞ்சியிருக்கும் உடல் வடிக்கும் கவிதை இது.
படிப்பவர்களின் உனர்வை நிறுத்தி வைத்து விட்டது

உங்கள் உணர்வுபூர்வமான கருத்துக்கு நன்றி

ஷீ-நிசி
06-08-2007, 01:04 PM
சிலுவைகள் சுமக்கின்றோம்.... பொருத்தமான தலைப்பு....
தொட*ருங்க*ள் தோழ*ரே!

இலக்கியன்
06-08-2007, 01:40 PM
சிலுவைகள் சுமக்கின்றோம்.... பொருத்தமான தலைப்பு....
தொட*ருங்க*ள் தோழ*ரே!

வணக்கம். நன்றி நண்பனே
உங்கள் கவிதகளின் இரசிகன் நான்

இனியவள்
06-08-2007, 01:51 PM
அருமையான கவிதை இலக்கியன்...

வாழ்த்துக்கள் தோழரே

ஆதவா
06-08-2007, 05:40 PM
காலங்கள் ஆயினும் காட்சிகள் மாறுவதில்லை. கவிதைகள் ஆயிரம் பொறிக்கப்பட்டும் கவிஞர்களே உதவ வருவதில்லை..

எழுதப்பட வேண்டிய புதுக்கவிதைகளாய் அவர்கள், எழுதத்தான் கவிஞர்கள் இல்லை. புதைக்குழியில் கண்களை மூடினாலும் தகுமே தவிர உணர்வுகளை புதைத்தலும் உறவுகளைத் தொலைத்தலும் தகுமா?

நல்ல வரிகள் இலக்கியன்.

அனைவரின் நிலைகளையும் எடுத்துரைத்த நீங்கள் உதவிக்கரம் நீட்டுவதேன்...?.

ஓவியன்
06-08-2007, 05:44 PM
எழுதப்பட வேண்டிய புதுக்கவிதைகளாய் அவர்கள், எழுதத்தான் கவிஞர்கள் இல்லை. புதைக்குழியில் கண்களை மூடினாலும் தகுமே தவிர உணர்வுகளை புதைத்தலும் உறவுகளைத் தொலைத்தலும் தகுமா?

தகவே தகாது ஆதவா..........!

ஆதலினால் தான் அங்கே பொங்குகிறது மக்கள் சேனை புதுப் பிராவகமாக................

இலக்கியன்
07-08-2007, 08:15 AM
அருமையான கவிதை இலக்கியன்...

வாழ்த்துக்கள் தோழரே

நன்றி இனியவள் உங்கள் கருத்துக்கு

இலக்கியன்
07-08-2007, 08:17 AM
காலங்கள் ஆயினும் காட்சிகள் மாறுவதில்லை. கவிதைகள் ஆயிரம் பொறிக்கப்பட்டும் கவிஞர்களே உதவ வருவதில்லை..

எழுதப்பட வேண்டிய புதுக்கவிதைகளாய் அவர்கள், எழுதத்தான் கவிஞர்கள் இல்லை. புதைக்குழியில் கண்களை மூடினாலும் தகுமே தவிர உணர்வுகளை புதைத்தலும் உறவுகளைத் தொலைத்தலும் தகுமா?

நல்ல வரிகள் இலக்கியன்.

அனைவரின் நிலைகளையும் எடுத்துரைத்த நீங்கள் உதவிக்கரம் நீட்டுவதேன்...?.

ஆதவா ஓவியன் இருவர் விமர்சனத்துக்கும் நன்றி