PDA

View Full Version : விண்மீனா

இலக்கியன்
06-08-2007, 09:22 AM
http://img469.imageshack.us/img469/3732/landscapes2020moon20ovexx3.jpg (http://imageshack.us)

இருளினிலே மருளுகின்ற
விண்மீன்கள் கொண்டாட்டம்
இருவிழிகள் கருவிழியால்
விடுகிறதே காதல் தேரோட்டம்

மின்சார விழிகள் இரண்டும்
மின்னி இழுக்கிறது மின்மினியாய்
கயல்விழியே என் இதயம்
காந்தமாகக் கவர்கிறதே

தேவதையே உன் நினைவுகள்
தேய்ந்துவிடாத வளர்பிறையே
தேம்பி அவனும் அழுகின்றான்
தேங்காமல் நீயும் வந்துவிடு

தேனைப்பருக என்று
தேடிவந்த தேனீகூட
தேவி உன் முகம் கண்டு
தேகம் சிலிர்த்ததுவோ

தீண்டவில்லை உன் இதழை
தித்திக்கும் சுவைகண்டும்
தீங்கிழைக்க விரும்பாமல்
தீர்க்கமாய் காத்திருக்கு

தேவலோக கன்னியே
நீயும் வந்துவிடு
தேவனுக்கு அன்பே
நீயும் உன்னைத்தந்துவிடு

lolluvathiyar
06-08-2007, 12:33 PM
ஆஹா கிழவனை ஜொள்ளுவிட விட வைக்கும் பென்மையின் அழகை தூண்டும் வரிகள் இலக்கியரே

இலக்கியன்
06-08-2007, 12:52 PM
ஆஹா கிழவனை ஜொள்ளுவிட விட வைக்கும் பென்மையின் அழகை தூண்டும் வரிகள் இலக்கியரே

நன்றி வாத்தியார்

சிவா.ஜி
06-08-2007, 01:18 PM
தேன் சிந்தும் வரிகளில் ஒரு அழகான கவிதை.தமிழ் விளையாடுகிறது.அழகு மிளிரும் கவிதைக்கு வாழ்த்துக்கள் இலக்கியன்.

இலக்கியன்
06-08-2007, 01:44 PM
தேன் சிந்தும் வரிகளில் ஒரு அழகான கவிதை.தமிழ் விளையாடுகிறது.அழகு மிளிரும் கவிதைக்கு வாழ்த்துக்கள் இலக்கியன்.

உங்கள் கருத்துக்கு நன்றி சிவா.ஜி

ஷீ-நிசி
06-08-2007, 02:28 PM
காதல் பாடல் பாடி அழைக்கிறார்.. கன்னியவள் மனம் இறங்கியதோ! இல்லை காதில் வாங்காமல் அவள் விழிகள் உறங்கியதோ!

இலக்கியன்
07-08-2007, 08:14 AM
காதல் பாடல் பாடி அழைக்கிறார்.. கன்னியவள் மனம் இறங்கியதோ! இல்லை காதில் வாங்காமல் அவள் விழிகள் உறங்கியதோ!

உங்கள் விமர்சனத்துக்கு நன்றி

ஓவியன்
13-08-2007, 02:59 AM
கவி வரிகளால் ஐஸ் வைத்து கன்னியவள் மனம் கனிய வைக்கும் இலக்கியனுக்குப் பாராட்டுக்கள்!.

இலக்கியன்
13-08-2007, 08:36 AM
கவி வரிகளால் ஐஸ் வைத்து கன்னியவள் மனம் கனிய வைக்கும் இலக்கியனுக்குப் பாராட்டுக்கள்!.

கன்னி மனம் கவியவில்லை கனியும் நாள்வரும்::musik010:
நன்றி ஓவியன்

இனியவள்
13-08-2007, 01:29 PM
அழகான கவிதை
வரிகள் ரீங்காரம்
இடுகின்றன படித்ததும்
காதினிலே சீ சீ மனதினிலே

வாழ்த்துக்கள் இலக்கி

இலக்கியன்
13-08-2007, 01:58 PM
அழகான கவிதை
வரிகள் ரீங்காரம்
இடுகின்றன படித்ததும்
காதினிலே சீ சீ மனதினிலே

வாழ்த்துக்கள் இலக்கி

உங்கள் கருத்துக்கள்
படித்து மனதில் பட்டாம் பூச்சி பறக்கின்றது :nature-smiley-006:
நன்றி இனியவள்

அமரன்
13-08-2007, 06:23 PM
அடடா..வர்ணனைகள் பிரமாதம். தேடி வந்ததேனீ கூட சொக்கி நிற்கிறதே..அருமை. பாராட்டுக்கள்.

விகடன்
13-08-2007, 06:30 PM
கடுமையாக வர்ணிக்கிரார் புலவர் இலக்கியன்.
இறுதிவரை கண்டுகொள்ளவே இல்லைப் போலும்

இலக்கியன்
14-08-2007, 08:56 AM
அடடா..வர்ணனைகள் பிரமாதம். தேடி வந்ததேனீ கூட சொக்கி நிற்கிறதே..அருமை. பாராட்டுக்கள்.

உங்கள் கருத்துக்கு நன்றிகள் அமரன்

இலக்கியன்
14-08-2007, 08:57 AM
கடுமையாக வர்ணிக்கிரார் புலவர் இலக்கியன்.
இறுதிவரை கண்டுகொள்ளவே இல்லைப் போலும்

ஆம் அதனால்த்தான் இந்த வர்ணனைகள்
கருத்துக்கு நன்றி விராடன்

பூமகள்
31-08-2007, 02:51 PM
அழகான கவிதை வர்ணிப்புகள்....!! கொஞ்சம் மயங்கித்தான் போனோம் உங்கள் கவி வர்ணனைகளில்...!
வர்ணனைகளின் நாயகி இதற்கு மயங்கினாளா இலக்கியரே...?????????!!!!!!!!!!!!!

வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்..!!:icon_good:
கலக்குங்க இலக்கியரே....................!!

jpl
01-09-2007, 04:49 PM
இருவிழிகள் கருவிழியால்
விடுகிறதே காதல் தேரோட்டம்

மின்சார விழிகள் இரண்டும்
மின்னி இழுக்கிறது மின்மினியாய்
கயல்விழியே என் இதயம்
காந்தமாகக் கவர்கிறதே
கயல்விழிகள் இலக்கியனை ஈர்க்க,
நம்மை இலக்கியனின் இன்னமுத தமிழ்
வரிகள் காந்தமாய் ஈர்க்கின்றனவே...

ஓவியா
01-09-2007, 05:57 PM
http://img469.imageshack.us/img469/3732/landscapes2020moon20ovexx3.jpg (http://imageshack.us)

இருளினிலே மருளுகின்ற
விண்மீன்கள் கொண்டாட்டம்
இருவிழிகள் கருவிழியால்
விடுகிறதே காதல் தேரோட்டம்

மின்சார விழிகள் இரண்டும்
மின்னி இழுக்கிறது மின்மினியாய்
கயல்விழியே என் இதயம்
காந்தமாகக் கவர்கிறதே

தேவதையே உன் நினைவுகள்
தேய்ந்துவிடாத வளர்பிறையே
தேம்பி அவனும் அழுகின்றான்
தேங்காமல் நீயும் வந்துவிடு

தேனைப்பருக என்று
தேடிவந்த தேனீகூட
தேவி உன் முகம் கண்டு
தேகம் சிலிர்த்ததுவோ

தீண்டவில்லை உன் இதழை
தித்திக்கும் சுவைகண்டும்
தீங்கிழைக்க விரும்பாமல்
தீர்க்கமாய் காத்திருக்கு

தேவலோக கன்னியே
நீயும் வந்துவிடு
தேவனுக்கு அன்பே
நீயும் உன்னைத்தந்துவிடு

என்னாங்க மன்றத்திலே இப்படி தேனாறு ஓட விடறீங்க!!!

கவிதை பிரமாதம். தேன் வார்க்கும் வரிகள். வர்ணிப்பு கொஞ்சும் சலங்கைப்போல் கொஞ்சுகிறது. :lachen001:

என்னதான் (சில) ஆண்கள் அப்படி இப்படீனு இருந்தாலும், இந்த பெண்களை கவர்வதில் சீமான்கள்தான் என்பதினை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.

மனதார பாராட்டுகிறேன்.

இலக்கியன்
04-09-2007, 07:52 AM
அழகான கவிதை வர்ணிப்புகள்....!! கொஞ்சம் மயங்கித்தான் போனோம் உங்கள் கவி வர்ணனைகளில்...!
வர்ணனைகளின் நாயகி இதற்கு மயங்கினாளா இலக்கியரே...?????????!!!!!!!!!!!!!

வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்..!!:icon_good:
கலக்குங்க இலக்கியரே....................!!

உங்கள் அழகான பின்னூட்டத்துக்கு நன்றி தோழி
மயங்கினாளோ என அவளைத்தான் கேட்க வேண்டுமே:natur008: :icon_hmm:

இலக்கியன்
04-09-2007, 07:53 AM
கயல்விழிகள் இலக்கியனை ஈர்க்க,
நம்மை இலக்கியனின் இன்னமுத தமிழ்
வரிகள் காந்தமாய் ஈர்க்கின்றனவே...

கருத்துக்கு நன்றி jp1

இலக்கியன்
04-09-2007, 07:54 AM
என்னாங்க மன்றத்திலே இப்படி தேனாறு ஓட விடறீங்க!!!

கவிதை பிரமாதம். தேன் வார்க்கும் வரிகள். வர்ணிப்பு கொஞ்சும் சலங்கைப்போல் கொஞ்சுகிறது. :lachen001:

என்னதான் (சில) ஆண்கள் அப்படி இப்படீனு இருந்தாலும், இந்த பெண்களை கவர்வதில் சீமான்கள்தான் என்பதினை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.

மனதார பாராட்டுகிறேன்.

வணக்கம் ஓவியா உங்கள் அழகான தமிழால் பாராட்டு கிடைத்ததியிட்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி தோழி

அக்னி
06-09-2007, 10:23 AM
பரந்த இருளுக்குள்
சுடரும் விண்மீன்கள்
கண்ணைக் கவருவதுபோல,
உன் கவனிக்காமை என்னும்,
இருளை விலக்கிவிட்டு,
உன்னையே தேடுகின்றேன்...
கண் சிமிட்டுவாயா..?

பாராட்டுக்கள் இலக்கியன்...
வானமெங்கும் நிறைந்த விண்மீன்கள் போல, கவிதையெங்கும் நிறைந்த பிரகாசச்சொற்கள்... கவர்கின்றன...

இலக்கியன்
06-09-2007, 02:13 PM
பரந்த இருளுக்குள்
சுடரும் விண்மீன்கள்
கண்ணைக் கவருவதுபோல,
உன் கவனிக்காமை என்னும்,
இருளை விலக்கிவிட்டு,
உன்னையே தேடுகின்றேன்...
கண் சிமிட்டுவாயா..?

பாராட்டுக்கள் இலக்கியன்...
வானமெங்கும் நிறைந்த விண்மீன்கள் போல, கவிதையெங்கும் நிறைந்த பிரகாசச்சொற்கள்... கவர்கின்றன...

அழகான கவியாக பின்னூட்டம் தந்தீர்கள் நன்றியும் பாராட்டுக்களும்