PDA

View Full Version : பார்வையிட ஏன் அனுமதிப்பது இல்லை



இலக்கியன்
05-08-2007, 04:09 PM
தமிழ் மன்றத்துக்கு என் இனிய வணக்கம். தமிழ் மன்றத்தை உறுப்பினர் அல்லாதோர் பார்வையிட ஏன் அனுமதிப்பது இல்லை.புதிய உறுப்பினராக பதிவு செய்தாலும் ஏன் உங்களுடன் தொடர்பு கொண்டால் மட்டுமே உள் புக அனுமதிக்கிறீர்கள். இதனால் கணனி பற்றிய அறிவு குறைந்தவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் :icon_wacko:

அமரன்
05-08-2007, 04:38 PM
வணக்கம் இலக்கியன். உங்கள் வினா நிர்வாகிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. காத்திருங்கள்.
நன்றி

இளசு
05-08-2007, 04:56 PM
நன்றி இலக்கியன்..

நீங்கள் சொன்ன வசதி முன்பு நம் மன்றத்தில் இருந்ததுதான்..

நம் நண்பர்களே விருந்தினர்களாக மாறி லாகின் ஆகாமலேயே எல்லாவற்றையும் படித்துவிட்டு, பின் சாவகாசமாக நான் அப்பவே படித்தேனே எனச் சொல்லிக்கொண்ட காலம் அது.

ஒரு மின்னஞ்சல் முகவரி தந்து பதிந்தால் மட்டுமே படிக்க முடியும் என்ற முறை பின்னர் நிர்வாகி இராசகுமாரனால் கொண்டுவரப்பட்டது.

ஒரு முனைப்பைக் காட்டி பின் உறுப்பினராக வாருங்கள் எனச் சொல்லும் யுக்தி இது. சாதகம் −பாதகம் இரண்டும் உள்ளது இதில்...

ரோபோக்கள் தன்னால் உறுப்பினராகி கடனே என மன்றம் எங்கும் அலைவதைத் தடுக்க, இப்போது விருப்பம் தெரிவித்தவர்களின் விவரம் பார்த்த பிறகே − தமிழ்வாசம் பயனர் பெயரில் உள்ளதா − என அறிந்தபிறகே− நிர்வாகம் அனுமதிக்கிறது. இந்த இரண்டாவது கட்டுப்பாடு அவசியமே!

பத்து, பதினைந்து தமிழ்ப்பதிவுகள் இட்ட ஆர்வமான உறுப்பினருக்கு இன்னொரு அங்கீகாரமாய் ''பண்பட்டவர் அனுமதி'' என்ற பகுதி திறந்துவிடப்படும்.

மற்றும் பதிவுகள் எண்ணிக்கையை வைத்து பட்டங்கள் வழங்குவதும் நடைமுறை..

இவை தடைகள் அல்ல..

ஒரு மின்னஞ்சல், அதில் தமிழ் வாசம், முனைப்பு, ஆர்வம், தமிழ்த்தட்டச்ச நேசம் இவை வளர்க்க தூண்டுகோல்கள்...


உங்கள் கருத்துக்கு நன்றி,,, மற்றவர்கள் கருத்தையும் அறிய ஆவல்!

விகடன்
05-08-2007, 05:27 PM
இளசு அண்ணா கூறியது மன்றத்திற்கு கட்டாயம் தேவையான ஒன்று. எனது கருத்துப்படி அங்கத்தவர்களின் பட்டங்களிற்கேற்ப ஒவ்வொரு மன்றத்திலேயும் பதிவுகளை மேற்கொள்ள அனுமதித்தால் (பார்வையிட அனுமதிக்கலாம்) இன்னும் அழகாக இருக்குமோ? என்ற ஒரு நப்பாசையும் இருக்கிறது. தங்கள் கருத்து எப்படியோ?

இளசு
05-08-2007, 05:29 PM
நன்றி விராடன்..

இன்னும் பல பகுதிகளால் மன்றம் விரியும்போது
அப்படி பல அடுக்கு அங்கீகார அனுமதி முறை வைக்கலாம்..
(மற்றவர்களும் விரும்பினால்)

இலக்கியன்
06-08-2007, 12:13 PM
உங்கள் விளக்கங்களுக்கு நன்றி

aren
06-08-2007, 01:23 PM
இந்த யுக்தியால் தமிழார்வம் இருப்பவர்கள் நிச்சயம் மன்றத்தில் உறுப்பினராவார்கள். அதனால் நம் மன்றமும் வளரும் அவர்களும் விருப்பத்துடன் நம் மன்றத்தில் பங்களிப்பார்கள்.

இப்பொழுது இருக்கும் முறையே சிறந்தது என்பது என் கருத்து.

நன்றி வணக்கம்
ஆரென்

ஷீ-நிசி
06-08-2007, 01:28 PM
மிக தெளிவான விளக்கம் இளசு அவர்களே! புதியவர்களுக்கு அனைவரும் தெளிவடையும் வண்ணம் இந்த விளக்கம் பாப்−அப் ஆகலாம் புதியவர்கள் உள்ளே நுழைந்தவுடன்....

அமரன்
06-08-2007, 01:29 PM
இப்ப்போது இருக்கும் முறையே சிறப்பானது. எப்படி இணைந்துகொள்வது என்ற திரி ஒன்றை ஏற்படுத்தி அதை உறுப்பினர் இல்லாதோரும் படிக்கக்கூடிய வகையில் அமைக்கலாம். அத்திரியில் பினருவன இருந்தால் சிறப்பு.

எப்படி பதிவுசெய்வது

பதிவுசெய்தபின் அறிமுகப்படுத்துவதினை எடுத்துக்கூறுவது.(அறிமுகப்படுத்திய பின்னர் மற்றைய பகுதிகளை பார்வையிடும்/பதிக்கும் வசதி அமைத்தால் இன்னும் சிறப்பு.)

அவர்கள் சந்தேகங்களை எப்படிக்கேட்பது.

தனிமடல் போன்ற முக்கிய விடயங்களின் விளக்கம்.

நன்றி.

அன்புரசிகன்
06-08-2007, 05:25 PM
அமரன் கூறுவதை நடைமுறைப்படுத்தலால் நன்மை பயக்கும் என்பது எனது எண்ணம்.

இலக்கியன்
07-08-2007, 08:47 AM
இப்ப்போது இருக்கும் முறையே சிறப்பானது. எப்படி இணைந்துகொள்வது என்ற திரி ஒன்றை ஏற்படுத்தி அதை உறுப்பினர் இல்லாதோரும் படிக்கக்கூடிய வகையில் அமைக்கலாம். அத்திரியில் பினருவன இருந்தால் சிறப்பு.

எப்படி பதிவுசெய்வது

பதிவுசெய்தபின் அறிமுகப்படுத்துவதினை எடுத்துக்கூறுவது.(அறிமுகப்படுத்திய பின்னர் மற்றைய பகுதிகளை பார்வையிடும்/பதிக்கும் வசதி அமைத்தால் இன்னும் சிறப்பு.)

அவர்கள் சந்தேகங்களை எப்படிக்கேட்பது.

தனிமடல் போன்ற முக்கிய விடயங்களின் விளக்கம்.

நன்றி.


இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நல்லவிடயம் முன்வைத்தீர்கள்

இளசு
07-08-2007, 09:05 PM
அமரனின் யோசனை மிக அருமை!

விரைவில் செயலாக்கலாம்..

நன்றி அமரனுக்கும் மற்ற கருத்தாளர்கள் அனைவருக்கும்!

அறிஞர்
15-08-2007, 01:51 PM
உள்ளே வருகிறவர்களை இனங்காண இந்த முறை வைத்துள்ளோம். புதியவர்களுக்கு முடிந்தளவு.. உடனே... அனுமதி கொடுக்கிறோம். தாங்கள் கூறும் கருத்துக்களை விரைவில் செயல்படுத்த முயலுகிறோம்.