PDA

View Full Version : இதில் என்ன நியாயம்



சுட்டிபையன்
05-08-2007, 02:42 PM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11378
இந்த திரியை பூட்டுவது எந்த வகையில் நியாயம்?

உதாரணமாக சீனாவில் கூகிள் பார்க்கமுடியாது
இலங்கையில் பல செய்திதளங்கள் பார்வையிடமுடியாது
சில வேலைத்தளங்களில் தமிழ்மன்றம் உட்பட பல தளங்கள் பார்வையிடமுடிவதில்லை.


அப்படியான இடங்களில் உள்ளவர்கள் உதவி கேட்பதிலும் உதவி செய்ய்வதிலும் ஏதும் பிரச்சினைகள் இருப்பதாக தெரியவீல்லையே................?

இளசு
05-08-2007, 02:47 PM
சுட்டி

வருந்தவேண்டாம்..

அந்தவகை உதவிகளை தனியே பெற அத்திரியில் மோகன் முன்வந்துள்ளார்..

நீங்களும் உதவியிருக்கிறீர்கள்..

இத்தோடு நிறுத்தலாம் என எண்ணியே பூட்டப்பட்டது.

நல்லவர்கள் நல்லவற்றுக்காகக் கேட்பது − அல்லாதவற்றுக்கு
வீணே பயனாக்கக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவ்வளவே..

இதை நீண்டநாளாக மன்றத்தில் முடிந்தவரை கடைப்பிடிக்கிறோம் சுட்டி..

உங்கள், நண்பர்கள் மனம் வருத்தப்பட்டால் மன்னியுங்கள்..

leomohan
05-08-2007, 02:47 PM
இல்லை சுட்டிப்பையன்

சட்டத்திற்கும் அதற்கான உடைப்பிற்கும் சொல்லித்தரும் இடமாக மன்றம் மாறக்கூடாது என்பது தான் நிர்வாகத்தின் நோக்கம்.

இதை ஊக்குவிப்பது சரியல்ல என்றே படுகிறது.

ஒருவேளை நாங்கள் இங்கு சொல்லித்தரும் வழிகளை கடைபிடித்து சிலருடைய வேலைக்கு உலைவைக்குமாறு ஆகிவிட்டால் நமக்கு வருத்தம் தானே.

இளசு
05-08-2007, 02:48 PM
நன்றி மோகன்..

அன்புரசிகன்
05-08-2007, 03:06 PM
கத்தாரில் இவ்வாறான bypass இணையங்கள் பல தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறான விடையங்களை நமது மன்றத்தில் உள்ளதென கண்டறிந்தால் கத்தாரில் மன்றத்தையே தடைசெய்யும் வாய்ப்புக்கிட்டலாம்...

google ஆனாது நண்பர் ஒருவர் கூறியது போல் free to expression... அங்கு நீங்கள் பிழைகளை கண்டுபிடித்து பிரயோசனமில்லை..

சட்டவிரோதத்திற்கு வழிகோலுவதும் சட்டவிரோதமே...