PDA

View Full Version : என் தோழி



இனியவள்
05-08-2007, 02:14 PM
குறையில் நிறை கண்டு
என்னில் உன்னைக் கண்டு
உன்னில் என்னைக் கண்டு
என் இன்பத்தில் இனபம் கண்டு
துன்பதில் துன்பம் கொண்டு
எனக்கு மூன்றாம் கையாய்
விளங்கும் தோழியே..

இசையாய் நான் இருந்தால்
வரியாய் நீ வருகின்றாய்...

மழையாய் நான் வந்தால்
குளமாய் மாறி என்னைத்
தாங்குகின்றாய்...

என் மனதின் காயத்திற்கு
மருந்தாய் உன் அன்பெனும்
தென்றலாய் வந்து வருடிச் செல்கின்றாய்....

காற்றுக்கு வேலி போடுவது போல்
உன் நட்புக்கு வேலி போட முனைந்தேன்
உயிருக்குள் கலந்து விட்டாய்....

பூவின் வாசமாய் எனக்குள் வாசம்
வீசுபவளே ஏழெழு ஜென்மங்கள்
வேண்டும் எனக்கு உன் தோழியாய்
உன் தோள் சாய்ந்திட...

பரந்து விரிந்திருக்கும் பூமியில்
தனித்திருக்கும் என்னோடு
சேர்ந்து பறக்கும் பட்டாம்பூச்சியே
என்றும் உன்னோடு இணைந்திருப்பேன்
என் ஆயுள் வரை....

(என் உயிரிலே கலந்து விட்ட என் இரு தோழிகளுக்கும் இக் கவிதை சமர்ப்பணம்)

ஓவியன்
05-08-2007, 03:13 PM
நட்புக்கு உரிய நாளில் உயிர்த் தோழமைக்காக ஒரு கவிதை.........

இந்த அரிய தோழிகளை பெற்ற நீங்கள் கொடுத்து வைத்தவர் இனியவள்......!

பாராட்டுக்கள் அழகான வரியமைப்புக்கு........:natur008:

இனியவள்
05-08-2007, 05:42 PM
நட்புக்கு உரிய நாளில் உயிர்த் தோழமைக்காக ஒரு கவிதை.........இந்த அரிய தோழிகளை பெற்ற நீங்கள் கொடுத்து வைத்தவர் இனியவள்......!
பாராட்டுக்கள் அழகான வரியமைப்புக்கு........:natur008:

நன்றி ஓவியன்

அன்புரசிகன்
05-08-2007, 05:46 PM
பூவின் வாசமாய் எனக்குள் வாசம்
வீசுபவளே ஏழெழு ஜென்மங்கள்
வேண்டும் எனக்கு உன் தோழியாய்
உன் தோள் சாய்ந்திட...

பரந்து விரிந்திருக்கும் பூமியில்
தனித்திருக்கும் என்னோடு
சேர்ந்து பறக்கும் பட்டாம்பூச்சியே
என்றும் உன்னோடு இணைந்திருப்பேன்
என் ஆயுள் வரை....


பொங்கும் போது தாங்குவதும்
அணையும் போது காப்பதும்
நட்ப்பின் அணிகலங்கள்...
கொடுத்துவைத்தவர்கள் உங்கள் நண்பிகள்...

இணைய நண்பன்
05-08-2007, 07:11 PM
நட்புக்கு இலக்கணமாக அமைந்த கவிதை.பாராட்டுக்கள்

அமரன்
05-08-2007, 07:15 PM
எம்மா தோழி(களு)க்கு ஒரு கவிதையா.....பாராட்டுக்கள் நம்மளமாதிரி தோழர்களுக்கு எழுதமட்டீர்களோ...நீங்க எழுதாவிட்டால் என்ன நான்பதிக்கின்றேன்...(இரண்டாம்முறையாக)


காலம் எய்த அம்புகளாலும்-யுத்த
கலம் செய்த ஜாலங்களாலும்
ஞாலத்தில் இழந்தது எத்தனை?

அன்னையை இழந்தோம்
இன்னோருத்தியை பார்க்கோம்.

தந்தையை பிரிந்தோம்
தாயை தரங்குறைக்கோம்.

ஒருகொடியில் பூத்தவைகளில்
உதிர்ந்தவைகள் எத்தனையோ?

பக்கத்துவீட்டு பகைவரை இழந்தோம்
அவர்தம் பகையையும் இழந்தோம்.

தோள் கொடுத்த சொந்தங்களும்
தோலாக இருந்தோரும்
போன இடம் தெரியவில்லை...

கோடையிலும் மாரியாக இருக்கின்றன
சட்டைகள் மாற்றிய பாம்புகள்..

இடுக்கண்களைவதும் அவைகள்
உடுக்கையாக இருப்பதும் அவைகள்.


கோட்டைகள் வரைந்த
கோடுகள் பிரித்தாலும்
எம்மை யாளும் அரசனை
கவிழ்க்க முடியுமா?

இந்நாள் மட்டுமல்ல
எந்நாளும் நம்நாளே
அவையெல்லாம் நன்நாளே.

விகடன்
05-08-2007, 07:18 PM
நண்பர்கள் தினத்தில் அவர்கள்தம் இயல்பை பெருமையுடன் வடித்திட்ட இனியவளிற்கு பாராட்டுக்கள்.

இன்றைய நன்நாளில் எனது இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இனியவள்
06-08-2007, 08:25 AM
பொங்கும் போது தாங்குவதும்
அணையும் போது காப்பதும்
நட்ப்பின் அணிகலங்கள்...
கொடுத்துவைத்தவர்கள் உங்கள் நண்பிகள்...

நன்றி அன்பு

நான் கொடுத்து வைத்தவள்
அவர்களை நண்பிகளாக
பெற்றதற்கு :nature-smiley-008:

இனியவள்
06-08-2007, 08:25 AM
நட்புக்கு இலக்கணமாக அமைந்த கவிதை.பாராட்டுக்கள்

நன்றி இக்ராம்

இனியவள்
06-08-2007, 08:27 AM
எம்மா தோழி(களு)க்கு ஒரு கவிதையா.....பாராட்டுக்கள் நம்மளமாதிரி தோழர்களுக்கு எழுதமட்டீர்களோ...நீங்க எழுதாவிட்டால் என்ன நான்பதிக்கின்றேன்...(இரண்டாம்முறையாக)
[/COLOR]

அமர் அருமையான கவிதை

கூடிய சீக்கிரம் பதிக்கின்றேன் அமர்
நண்பர்களுக்கும் ஒரு கவிதை

இனியவள்
06-08-2007, 08:28 AM
நண்பர்கள் தினத்தில் அவர்கள்தம் இயல்பை பெருமையுடன் வடித்திட்ட இனியவளிற்கு பாராட்டுக்கள்.
இன்றைய நன்நாளில் எனது இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி விராடன்

இலக்கியன்
06-08-2007, 08:28 AM
இனியவள் அமரன் இருவருக்கும் என் வாழ்த்துக்கள்