PDA

View Full Version : ஹார்ட் டிஸ்க் இடத்தைச் சுத்தமாக வைத்திரு



சுட்டிபையன்
05-08-2007, 02:08 PM
ஹார்ட் டிஸ்க் இடத்தைச் சுத்தமாக வைத்திருங்கள்

நீங்கள் இந்த வழிகளை அடிக்கடி கேட்டிருப்பீர்கள். கம்ப்யூட்டர் புதிதாய் வாங்கியபின் அதனை இன்ஸ்டால் செய்பவர் சொல்லியிருப்பார். எப்போதாவது கம்ப்யூட்டரில் பிரச்னை ஏற்பட்டு அதை மெக்கானிக் செய்பவர் சரி செய்த பின் அவர் உங்களுக்குச் சொல்லியிருப்பார். ஆனால் நாமோ அப்படி சொன்ன வழிகளை ஒரு முறை செய்து பார்த்துவிட்டு பின் "நம் கம்ப்யூட்டர் இனி சரியாக இயங்கும். எதற்கு இந்த பராமரிக்கும் வேலை" என்று பாராமுகமாய் இருப்பீர்கள்.

அல்லது எடுத்துச் சொன்ன வழிகளை மறந்திருப்பீர்கள். இந்த வழிகளை ஒரு பிரிண்ட் எடுத்து எச்சரிக்கையாகக் கம்பயூட்டரை இயக்குமிடத்தில் வைத்திருப்பது நல்லது தானே. இதோ, அந்த வழிகளையும் குறிப்புகளையும் தருகிறோம். கவனமாக எடுத்து ஒட்டி வைத்து பின்பற்றவும்.

1. வைரஸ் ஸ்கேன்: குறைந்தது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது வைரஸ் ஸ்கேன் செயல்பாட்டை மேற்கொள்ள வேண்டும். இந்த செயல்பாட்டைக் கூட கம்ப்யூட்டரில் செட் செய்து விட்டால் தானாகவே அது ஸ்கேன் செய்திடத் தொடங்கும். அநேகமாக அனைத்து வைரஸ் பாதுகாப்பு தொகுப்புகளிலும் ஸ்கேன் செய்வதற்கான தேதி, காலம் செட் செய்வதற்கு வசதிகள் தந்திருப்பார்கள். அதே போல உங்கள் கம்ப்யூட்டரை எப்போதும் வைரஸ் பாதுகாப்பு கவசத்தில் இருக்கும்படி அந்த தொகுப்பை இயக்கும் வழியும் தரப்பட்டிருக்கும். இதனை அதtணிகணூணிtஞுஞிt எனக் கூறுவார் கள். இதனை இயங்கும்படி அமைத்திட வேண்டும். அதே போல வைரஸ் பைல் ஒன்று தென்பட்டால் என்ன செய்திட வேண்டும். அழிக்க வேண்டுமா? இயலாவிட்டால் குவாரண்டைன் செய்திட வேண்டுமா? என்று பல ஆப்ஷன்ஸ் இருக்கும். இதனையும் நம் விருப்பத்திற்கேற்றபடி தேர்ந்தெடுத்து அமைத்திட வேண்டும். அதே போல வைரஸ் தொகுப்பு ஒன்றினைப் பதிந்த பின்னர் அதனை அவ்வப்போது மேம்படுத்த வேண்டும். இணைய தொடர்பு கொண்டு அதற்கான செயல்பாட்டை மேற்கொள்ள தொகுப்பிலேயே வசதி இருக்கும். இதனை ஃடிதிஞு க்ணீஞீச்tஞு எனக் கூறுவார்கள். இதனை தினந்தோறும் கூட செயல்படுத்தலாம். அல்லது வாரம் அல்லது மாதம் ஒருமுறை மேற்கொள்ளலாம்.

கம்ப்யூட்டரில் இருக்க வேண்டிய இன்னொன்று ச்ஞீதீச்ணூஞு/ண்ணீதூதீச்ணூஞு ணீணூணிஞ்ணூச்ட் என்ப தாகும். இது வைரஸ் பாதுகாப்பு தொகுப்பு போல அவ்வளவு சீரியஸான விஷயம் இல்லை என்றாலும் இது இருப்பதுவும் நல்லது. அப்போது தான் உங்கள் கம்ப்யூட்டரை வேவு பார்க்கப் பிறர் அனுப்பும் புரோகிராம்களை இது கண்டுபிடித்து உங்களுக்குச் சொல்லும். ஙூணிணஞுஅடூச்ணூட் போன் றவை இலவசமாகக் கிடைக் கின்றன. எனவே அவசியம் இதனை இறக்கிப் பதிந்து செயல்படுத்தவும்.

அடுத்ததாக உங்கள் கம்ப்யூட்டரில் தேவையற்ற வகையில் சில பைல்கள் டிஸ்க் இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும். இதனைக் கம்ப்யூட்டரே கண்டுபிடித்துக் காலி செய்து உங்கள் டிஸ்க்கில் இடத்தை வீணாக்காமல் பார்த்துக் கொள்ளும். இதற்கு நீங்கள் ஞீடிண்டு ஞிடூஞுச்ணதணீ என்ற செயல்பாட்டை மேற்கொள்ள வேண்டும். சி டிரைவ் சென்று அதில் வலது பக்கம் கிளிக் செய்து பின் கணூணிணீஞுணூtடிஞுண் என்னும் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். உடன் உங்களுக்குச் சிறிய அளவிலான பை சார்ட் என்னும் வரை படம் வட்டமாகக் கிடைக்கும். இதில் டிஸ்க்கில் எவ்வளவு இடம் இன்னும் காலி உள்ளது என்ற தகவல் தெரியும். அந்த வரை படம் அருகேயே ஈடிண்டு இடூஞுச்ணதணீ என்ற சொற்கள் தெரியும் கட்டத்தில் கிளிக் செய்தால் உங்கள் டிஸ்க் கிளீன் செய்யும் பணி தொடங்கும். முதலிலேயே உங்கள் டிஸ்க்கில் எவ்வளவு இடம் காலி செய்யப்படும் என்ற தகவலும் கிடைக்கும். நீங்களே ஆச்சரியப்படும் வகையில் தேவையற்ற பைல்கள், அல்லது அவற்றின் நகல்கள் எவ்வளவு இருந்தன என்பதனைக் கண்டு கொள்ளலாம். இந்த செயல்பாட்டுடன் இன்னொன்றையும் மேற்கொள்ள வேண்டும். நாம் அடிக்கடி பல சிறிய புரோகிராம்களை ஆர்வத்தில் கம்ப்யூட்டரில் பதிந்து வைப்போம். காலண்டர்கள், டைரிகள், விளையாட்டுக்கள் போன்றவை இதில் அடங்கும். ஆனால் இவற்றை ஓரிரு முறை இயக்கிய பின்னர் அப்படியே மறந்துவிடுவோம். இவற்றை அவ்வப்போது கம்ப்யூட்டர் டிஸ்க்கில் இருந்து காலி செய்திட வேண்டும். அதற்கு குtச்ணூt, இணிணtணூணிடூ கச்ணஞுடூ சென்று அதில் உள்ள பிரிவுகளில் அஞீஞீ/கீஞுட்ணிதிஞு என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து பட்டன் கிளிக் செய்தால் அங்கு உங்கள் கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள புரோகிராம்கள் வரிசையாகப் பட்டியலிட்டுக் காட்டப்படும். இவற்றை ஒவ்வொன்றாகக் காலி செய்திடக் கட்டளை கொடுத்தால் அவை காலி செய்யப்பட்டு அந்த இடம் உங்களின் பயன்பாட்டிற்குக் கிடைக்கும். இந்த பட்டியலில் ஒரு புரோகிராமை நீங்கள் இறுதியாக என்று பயன்படுத்தினீர்கள் என்ற விபரமும் கிடைக்கும். இதை வைத்தே அந்த புரோகிராம் உங்களுக்கு எவ்வளவு தேவையற்றது என்பதனை நீங்கள் உணரலாம். அதே போல சில பைல்களை நீங்களே தணிக்கை செய்திடலாம். உங்களின் ஸ்கூல் ரிகார்டைக் கூட நீங்கள் அழிக்காமல் வைத்திருக்கலாம். யாருக்காகவோ எழுதிய கடிதங்கள் இருக்கலாம். இவை எல்லாம் தேவை இல்லை என்று எண்ணினால் உடனே அழித்து விடலாம். டிஸ்க் இடம் கிடைக்கும். இந்த வேலை யினை வாரம் ஒரு முறை செய்திட வேண்டியதில்லை. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மேற்கொண்டால் போதும். இதே போல் என்றோ வந்த மின்னஞ்சல் கடிதங்களை இன் பாக்ஸிலும் ட்ராஷ் பாக்ஸிலும் வைத்திருக்க வேண்டிய தில்லை. இவற்றையும் காலி செய்திட லாம். இதே முறையில் உங்களுடைய பிரவுசரில் உள்ள ஹிஸ்டரி (ஏடிண்tணிணூதூ) பகுதிக்குச் சென்று பல மாதங்களுக்கு முன் பார்த்த தளங்களின் பெயர்ப் பட்டியலைக் (இடூஞுச்ணூ ஏடிண்tணிணூதூ) காலி செய்திடலாம். அத்துடன் இணைந்த குக்கிகளையும் பைல்களையும் அழித்திடலாம். பிரவுசரைத் திறந்து கூணிணிடூண், ஐணtஞுணூணஞுt Oணீtடிணிணண் சென்று அங்கே உள்ள கூஞுட்ணீணிணூச்ணூதூ ஐணtஞுணூணஞுt ஊடிடூஞுண் என்ற பிரிவில் ஈஞுடூஞுtஞு இணிணிடுடிஞுண் மற்றும் ஈஞுடூஞுtஞு ஊடிடூஞுண் என்ற பிரிவுகளைக் கிளிக் செய்திட வேண்டும்.

நம்மில் பலர் பல புரோகிராம்களின் ஐகான்களை டெஸ்க் டாப்பில் வைத்திருப் போம். வெள்ளரிக்காய் தரையில் படர்ந்து காய்த்திருப்பது போல இவை நம் மானிட்டர் திரையில் பரவிக் கிடக்கும். இவற்றை நீக்குவதால் அவை இயக்கும் புரோகிராம்கள் அழிக்கப்பட மாட்டாது. ஆனால் ஐகான்களை நீக்கினால் நம் ஹார்ட் டிஸ்க்கில் இடம் கிடைக்கும்.

அடுத்ததாக உங்கள் ரீசைக்கிள் பின் என்னும் குப்பைத் தொட்டியில் உள்ள அழித்த பைல்களை அவ்வப்போது காலி செய்வதும் நல்லது. ஒரு பைலை அழிப்பதாலேயே அது வைத்திருந்த டிஸ்க் இடம் நமக்குக் கிடைக்காது. அழித்த பின் அது செல்லும் ரீசைக்கிள் பின்னிலிருந்தும் அதனை நீக்க வேண்டும். இதற்கு ரீசைக்கிள் பின் ஐகானில் மீது வலது புறமாகக் கிளிக் செய்து அதில் கிடைக்கும் மெனுவில் உட்ணீtதூ கீஞுஞிதூஞிடூஞு ஆடிண என்பதைக் கிளிக் செய்திடவும்.



நன்றி தினமலர்

விகடன்
05-08-2007, 04:12 PM
வள*மான தகவல்கள் தந்தீர்கள் சுட்டி.

மேலதீகமாக ஹார்ட் டிஸ்க்கில் மூன்றில் ஒரு பகுதியேனும் வெறுமையாக இருக்குமாயின் கணினி அதன் வேகத்திலேயே இயங்கும். அதற்கு மேல் குறையும்போது அதன் வேகம் மங்கும்.

இளசு
05-08-2007, 05:47 PM
நன்றி சுட்டி

சில தகவல்கள் வேறு எழுத்துருவில் உள்ளனவே − ஆங்கிலச் சொற்களாக இருக்கலாம்.. சரி செய்ய இயலுமா?

அக்னி
11-08-2007, 05:25 PM
சுட்டி, அண்ணா பதிவில் சுட்டியதைக் கவனத்திற்கொள்க.
கணினி தொடர்பான முக்கியமான தகவல், சில சொற்களினால், தெளிவற்று உள்ளது.

நன்றி சுட்டி

சில தகவல்கள் வேறு எழுத்துருவில் உள்ளனவே − ஆங்கிலச் சொற்களாக இருக்கலாம்.. சரி செய்ய இயலுமா?

நன்றி!

அமரன்
11-08-2007, 06:14 PM
மிகவும் பயனுள்ள தகவல்கள் சுட்டி. பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி

இணைய நண்பன்
11-08-2007, 06:19 PM
நன்றி சுட்டி

மாதவர்
29-08-2007, 04:41 AM
நல்ல செய்தி