PDA

View Full Version : இயற்கைஇனியவள்
05-08-2007, 02:02 PM
பூப் பூத்துக் குலுங்கும்
பூங்காவனத்தில் தேடுகின்றன
வண்டுகள் தேன் சிந்தும் பூக்களை...

நடனமாடிக் கொண்டிருக்கின்றன
தென்றல் வந்து தாலாட்டிச் செல்ல
அன்று மலர்ந்த மலர்கள் அன்றே
மடிவதையறியாமல்....

காற்றுக்கு கடிவாளமிட்டு
தன்னோடு கட்டிப்போட முனைந்து
கொண்டிருக்கின்றன மரங்கள்....

இரைதேடிச் சென்ற தாய்ப்பறவையை
எதிர்பார்த்து இசைமீட்டிக் கொண்டிருக்கின்றன
குஞ்சுப் பறவைகள்...

தன்னில் இருந்து உயிர்ப்பெற்ற
வெண்ணிலவை இரவின் பாதுகாவலனாய்
அனுப்ப விரைந்து கொண்டிருந்தது
சூரியன் மலைகளுக்கு நடுவே...

நட்சத்திரங்கள் அணிவகுக்க
பவனி வருகின்றது நிலா
விண்ணைச் சுற்றி...

aren
05-08-2007, 02:29 PM
காலை எழுந்து
எல்லாம் முடித்து
வேலைக்குச் சென்று
ஓயாமல் உழைத்து
மாதம் முடிந்ததும்
சம்பளம் கைக்கு
வந்ததும் காணாமல்
போகிறது
மனிதர்களுக்கு
இதுவும் இயற்கையோ!!!!

இனியவள்
05-08-2007, 02:33 PM
காலை எழுந்து
எல்லாம் முடித்து
வேலைக்குச் சென்று
ஓயாமல் உழைத்து
மாதம் முடிந்ததும்
சம்பளம் கைக்கு
வந்ததும் காணாமல்
போகிறது
மனிதர்களுக்கு
இதுவும் இயற்கையோ!!!!

மனிதன் பூசிய சாயம் அது
அவனால் இயற்கை அழிகின்றது
இயற்கையால் அவன் பாதுக்காக்ப் படுகின்றான்
அழிப்பவனை பாதுகாத்து தன்னை அழிக்கின்றது
இயற்கை

அமரன்
05-08-2007, 04:24 PM
பூப் பூத்துக் குலுங்கும்
பூங்காவனத்தில் தேடுகின்றன
வண்டுகள் தேன் சிந்தும் பூக்களை...

பிறப்புக்கும் இறப்புக்கும்
இடைப்பட்ட கணப்பொழுதில்
இன்சொல் பேசி இனிக்கப்பழகி
இனிமைதேடும் தத்துவம் சொல்கிறதோ?


நடனமாடிக் கொண்டிருக்கின்றன
தென்றல் வந்து தாலாட்டிச் செல்ல
அன்று மலர்ந்த மலர்கள் அன்றே
மடிவதையறியாமல்....

நிலையாமை நினைத்து
கலங்கும் அறியாமையை
கலைக்க கற்றுத்தருகின்றனவோ..!


காற்றுக்கு கடிவாளமிட்டு
தன்னோடு கட்டிப்போட முனைந்து
கொண்டிருக்கின்றன மரங்கள்....

உழைப்பின் உயர்வையும்
முயற்சியின் விளைவையும்
என்னிடம் பயிலுங்கள்
மந்தை மனிதர்களே.என
சாட்டை வீசுகிறனவோ...?


இரைதேடிச் சென்ற தாய்ப்பறவையை
எதிர்பார்த்து இசைமீட்டிக் கொண்டிருக்கின்றன
குஞ்சுப் பறவைகள்...

உறவுகளின் உன்னதமும்
உயிர்ப்பின் இருப்பும்
உணர்வுகளின் உயிரும்
உங்களுக்கு உரைத்தவர்கள் நாமென்கிறனவோ..!


தன்னில் இருந்து உயிர்ப்பெற்ற
வெண்ணிலவை இரவின் பாதுகாவலனாய்
அனுப்ப விரைந்து கொண்டிருந்தது
சூரியன் மலைகளுக்கு நடுவே...

மறைவுகளை எண்ணி
மலைத்திருக்காதே
இன்னொரு பாதை
உனக்கு இருக்கிறது என
தத்துவம் சொல்கிறதோ...!


நட்சத்திரங்கள் அணிவகுக்க
பவனி வருகின்றது நிலா
விண்னைச் சுற்றி...

தனிமரம் தோப்பில்லை
கூடி வாழ்ந்தால்
கோடி நன்மை..
எம்மைப்பார்த்துதான்
எழுதி வைத்தார்கள்
உங்கள முன்னோர்கள் என்கிறனவோ...!

இனியவள்
05-08-2007, 05:39 PM
வாவ் அருமையான பதில்க் கவி
வாழ்த்துக்கள் அமர்

இளசு
05-08-2007, 05:43 PM
மலரும் மரமும் நிலவும்
பெருமித மகிழ்ச்சியில்..
இனியவளின் புதிய பார்வையால்!

இயற்கை, மழலை இவற்றை விஞ்சிய அழகு எங்கு உண்டு?

வாழ்த்துகள் இனியவள்!

(நீங்கள் இதுவரை வாசிக்கவில்லையெனில் பாரதிதாசனின்
''அழகின் சிரிப்பு'' வாசிக்கவும்..
இயற்கையும் தமிழும் ஒரு கவியின் பார்வையும் கலந்தால் விளையும் தெவிட்டா அமுதம் அது)

அன்புரசிகன்
05-08-2007, 05:48 PM
நட்சத்திரங்கள் அணிவகுக்க
பவனி வருகின்றது நிலா
விண்னைச் சுற்றி...

நீ விண்ணைச்சுற்று
நான் உன்னைச்சுற்றுகிறேன்...
உனது உபகோளாக... :icon_wink1:

நல்லதொரு வடிவமைப்பு...

விகடன்
05-08-2007, 06:07 PM
கவிதையும் அவற்றிற்கே உரித்தான உவமானமும் நன்று என்று இனியவளிற்கு சொல்லத்தேவையே இல்லை. ஏனெனில் அந்த அங்கீகாரம் முதலே கிடைத்துவிட்டதி. ஆதலால் அதை விலத்தி,
தன்னில் இருந்து உயிர்ப்பெற்ற
வெண்ணிலவை இரவின் பாதுகாவலனாய்
அனுப்ப விரைந்து கொண்டிருந்தது
சூரியன் மலைகளுக்கு நடுவே...கவிதையில் பல வர்ணனைகளிருந்தாலும் இந்த வரிகள் மட்டும் உண்மையுடன் இருப்பது சிறப்பே. பாராட்டுக்கள்

இனியவள்
06-08-2007, 08:21 AM
மலரும் மரமும் நிலவும்
பெருமித மகிழ்ச்சியில்..
இனியவளின் புதிய பார்வையால்!
இயற்கை, மழலை இவற்றை விஞ்சிய அழகு எங்கு உண்டு?
வாழ்த்துகள் இனியவள்!
(நீங்கள் இதுவரை வாசிக்கவில்லையெனில் பாரதிதாசனின்
''அழகின் சிரிப்பு'' வாசிக்கவும்..
இயற்கையும் தமிழும் ஒரு கவியின் பார்வையும் கலந்தால் விளையும் தெவிட்டா அமுதம் அது)

நன்றி இளசு அண்ணா உங்கள் வாழ்த்துக்கு

(இதுவரை படிக்கவில்லை அண்ணா இனிப் படித்துவிடுவேன்)

இனியவள்
06-08-2007, 08:22 AM
நீ விண்ணைச்சுற்று
நான் உன்னைச்சுற்றுகிறேன்...
உனது உபகோளாக... :icon_wink1:

நல்லதொரு வடிவமைப்பு...

நன்றி அன்பு

உபகோளாக என்னைச் சுற்றி
என்னை உதறித்தள்ளிவிடாதே :grin:

இனியவள்
06-08-2007, 08:23 AM
[COLOR="blue"]கவிதையில் பல வர்ணனைகளிருந்தாலும் இந்த வரிகள் மட்டும் உண்மையுடன் இருப்பது சிறப்பே. பாராட்டுக்கள்

நன்றி விராடன்

சில நேரம் கவிதைக்கு
உண்மை கூட அழகுதான்:nature-smiley-008:

பென்ஸ்
06-08-2007, 08:51 AM
சில கவிதைகளை வாசிக்கும் போது , நேரடி பொருளை விட்டு விட்டு வேறு கருவை பொருத்தி பார்க்கும் மனம்....
அதில் கிடைக்கும் மிக சிறிய வெற்றியில் "நான் நல்ல ரசிகன்" என்று ஒரு பகட்டு பெருமையை சூடி கொள்ள ஆசையும் வரும்....
இப்போது நானும்...

இதில் எல்லாம் நடந்தேயாகவேண்டும்.... அது இயற்கை.
இதுல ஒன்றேனும் நடக்கவில்லை என்றால் பிரச்சினைதானே..!!!???

அக்னி
07-08-2007, 05:04 PM
இயற்கை...
பசுமையாய் எல்லாம் தந்து,
கோரமாய் அழிவும் தருவதேன்..?

பாராட்டுக்கள் இனியவளே... ஆனால், மேலும் பல விடயங்களைக் கோர்த்திருக்கலாம், உங்கள் அழகான முத்து வரிகளால்...
குறுக்கி முடித்து விட்டீர்களே என அங்கலாய்க்கிறது மனம்...

இனியவள்
07-08-2007, 05:12 PM
சில கவிதைகளை வாசிக்கும் போது , நேரடி பொருளை விட்டு விட்டு வேறு கருவை பொருத்தி பார்க்கும் மனம்....
அதில் கிடைக்கும் மிக சிறிய வெற்றியில் "நான் நல்ல ரசிகன்" என்று ஒரு பகட்டு பெருமையை சூடி கொள்ள ஆசையும் வரும்....
இப்போது நானும்...
இதில் எல்லாம் நடந்தேயாகவேண்டும்.... அது இயற்கை.
இதுல ஒன்றேனும் நடக்கவில்லை என்றால் பிரச்சினைதானே..!!!???

ஆஹா பென்ஸ் அண்ணா...

அரிதாக உலாவும் உங்கள்
பின்னூட்டம் என் கவியிலும்
கண்டு உள்ளம் துள்ளுகின்றது:icon_dance:
நன்றிகள் பல

இனியவள்
07-08-2007, 05:13 PM
இயற்கை...
பசுமையாய் எல்லாம் தந்து,
கோரமாய் அழிவும் தருவதேன்..?
பாராட்டுக்கள் இனியவளே... ஆனால், மேலும் பல விடயங்களைக் கோர்த்திருக்கலாம், உங்கள் அழகான முத்து வரிகளால்...
குறுக்கி முடித்து விட்டீர்களே என அங்கலாய்க்கிறது மனம்...

நன்றி அக்னி

குறுகிய நேரத்தில்
எழுதப்படும் கவியில்
நிறைய விடயங்களை
கோர்க்க முடியவில்லை மன்னிக்கவும் அதற்கு

நன்றி அக்னி

அமரன்
10-08-2007, 12:36 PM
பாவேந்தரின் அழகின் சிரிப்பு படிக்க விரும்புகின்றீர்களா...? இதோ சுட்டி.
http://www.tamil.net/projectmadurai/pub/pm0037/pm0037.pdf

இனியவள்
13-08-2007, 06:46 PM
நன்றி அமர்

பதிவிறக்கம் செய்து விட்டேன்
இனித் தான் படிக்க வேண்டும்

இளசு
13-08-2007, 07:16 PM
நன்றி அமரா..

அவதாரம் அளித்தவருக்கு அளித்தாய் நன்றி..நன்று!

இலக்கியன்
14-08-2007, 08:51 AM
ஆக அருமையான கற்பனை வாழ்த்துக்கள் இனியவள்

இனியவள்
15-08-2007, 06:16 PM
ஆக அருமையான கற்பனை வாழ்த்துக்கள் இனியவள்

நன்றி இலக்கியன்

ஓவியன்
19-08-2007, 02:11 AM
இயற்கையை கொஞ்சமும் செயற்கைத் தனமின்றி தமிழிலே வடித்த இனியவளுக்கு பாராட்டுக்கள்............

ஆரென் அண்ணா, அமரன் இளசு அண்ணா ஆகியோரின் பின்னூட்டங்கள் இரசிக்க வைத்தன......

lolluvathiyar
19-08-2007, 07:02 AM
இயற்கையை பற்றி கவிதை என்றுமே ஒரு ஒரு இனிமை தரும் விசயம். அதுவும் இனியவள் மொழியில் வந்தால் பாலும் தேனு கலந்து உண்ட ஒரு உனர்வு

இனியவள்
19-08-2007, 06:59 PM
நன்றி ஓவியன்

நன்றி வாத்தியாரே

க.கமலக்கண்ணன்
20-08-2007, 04:21 PM
இயற்கையை

இனிமையாக படம் பிடித்து காட்டியிருக்கிறாள்

இந்த

இனியவள்...

ஷீ-நிசி
21-08-2007, 03:35 AM
இயற்கைக்கென வடித்த இந்த கவிதையில்.... இனியவளே வார்த்தை சொற்சுவைகள் நிறைய... உள்ளன.. உங்களின் கவிதையில் முன்னேற்றம் தெரிகிறது.... வாழ்த்துக்கள்!