PDA

View Full Version : எனக்கும் கவிதை எழுதவேண்டும்



aren
05-08-2007, 08:11 AM
என் நண்பர்களுக்கு
காதலிகள் இருக்கிறார்கள்
என் கூட படிப்பவர்களுக்கு
காதலிகள் இருக்கிறார்கள்
என் சொந்தக்கார பசங்களுக்கு
காதலிகள் இருக்கிறார்கள்
ஏன் எனக்குமட்டும்
காதலி இன்னும் கிடைக்கவில்லை

நான் நன்றாகவே படிக்கிறேன்
நான் பார்பதற்கு நன்றாகவே இருக்கிறேன்
நான் நல்ல குடும்பத்தில்
இருந்து வந்திருக்கிறேன்
நான் நன்றாகவே கிரிக்கெட் விளையாடுவேன்
பின்னர் ஏன் என்னை யாரும்
இன்னும் காதலிக்கவில்லை

எனக்கு கூச்சம் கிடையாது
எனக்கு தயக்கம் கிடையாது
எனக்கு பயம் கிடையாது
பின்னர் ஏன் என்னை யாரும்
இன்னும் காதலிக்கவில்லை

இப்படி என் நண்பனிடம்
கேட்டேன்
கவிதை எழுதத் தெரியுமா
என்று கேட்டான்
தெரியாது என்றேன்
அதான் என்று சொல்லிவிட்டு
போய்விட்டான்

அதானா?
எனக்கு கவிதை
எப்படி எழுதுவது
என்று சொல்லித் தருகிறீர்களா
என்று நண்பர்களிடம் கேட்டேன்
சொந்தக்காரர்களிடம் கேட்டேன்
கூட படிப்பவர்களிடம் கேட்டேன்
யாருமே சொல்லித்தரவில்லை

என் நண்பன் சொன்னான்
கவிதை சொல்லிக்கொடுத்தால்
அவர்கள் காதலிகளை
நீ அபேஸ் செய்துவிடுவாய் என்று
அதானா?

அதனா?
நீங்கள் எனக்கு எப்படி கவிதை
எழுதுவது என்று சொல்லித் தருகிறீர்களா
நான் உங்கள் காதலிகளை
ஒன்றும் செய்யமாட்டேன்

எங்கே ஓடுகிறீர்கள்
நில்லுங்கள்
நில்லுங்கள்

ஐயகோ
ஓடிவிட்டார்களே!!!

இதைப் படிக்கும்
நண்பர்களே
நீங்கள் எனக்கு
எப்படி கவிதை எழுதுவது
என்று சொல்லித் தருகிறீர்களா!!!

எங்கே ஓடுகிறீர்கள்
நில்லுங்கள்!!!!

leomohan
05-08-2007, 09:50 AM
முதல்ல உங்களுக்கு கல்யாணம் ஆகட்டும் அப்புறம் கவிதை எழுத சொல்லிதரோம் :icon_v:

அமரன்
05-08-2007, 11:01 AM
என்னாதிது.. நான் எழுதவேண்டியதை அண்ணா எழுதிவிட்டார்...கலக்கல் அண்ணா பாராட்டுக்கள்.

பொய் பேசியதால்
எட்டப்போய்
கவிதைகள் சொன்னதும்
எட்டிவந்தது...
வேடிக்கை காதல்?

பென்ஸ்
05-08-2007, 01:22 PM
இப்படி உண்மை எல்லாம் விளம்புகிறிர்கள்... :whistling:
உங்களுக்கு கவிதை சூடுபோட்டாலும் வராதே...:lachen001: :lachen001:

இளசு
05-08-2007, 05:39 PM
கவிதை வந்தால் காதல் வருமா?
காதல் வந்தால் கவிதை வருமா?
கண்ணதாசன் மீண்டும் வந்தால்தான்
எங்கள் ஆரென் கவலை தீரும்!

இனியவள்
05-08-2007, 05:41 PM
எண்ணத்தைக் கருவாக்கி
வார்த்தைகளை கோர்த்து
விடுங்கள் கவிதை உயிர்ப்பெற்று
விடும்

ஆரென் அண்ணா என்ன இப்படி
கேட்கிறீங்கள் உங்களுக்குள்ளையே
ஒரு கவிஞனை வைத்துக்கொண்டு:icon_nono:

ஓவியா
06-08-2007, 01:50 AM
நன்கு சிரித்தேன், வாய்விட்டு சிரித்தேன்.

கவிதை மற்றும் அனைத்து பின்னூட்டமும் அருமை.

ஆரேன் அண்ணாவின் கவலை தீர உடனே ஒரு ஈ−காதலி ஏற்ப்படு செய்ய வேண்டும். ஒரு காதலுக்காக ஒரு ரெடிமேட் காதலி தேவை!! பலே.

ஷீ-நிசி
06-08-2007, 06:22 AM
நன்கு சிரித்தேன், வாய்விட்டு சிரித்தேன்.

கவிதை மற்றும் அனைத்து பின்னூட்டமும் அருமை.

ஆரேன் அண்ணாவின் கவலை தீர உடனே ஒரு ஈ−காதலி ஏற்ப்படு செய்ய வேண்டும். ஒரு காதலுக்காக ஒரு ரெடிமேட் காதலி தேவை!! பலே.

ஹா! ஹா! ஈ−காதலியா... ஒரு பொன்(வண்டு) ஈ புடிச்சி அனுப்பிடலாமா...


ஆரெனின் ஆதங்கங்கள்! கவிதையாய்... கலக்கிபுட்ட தலீவா...:grin:

அரசன்
06-08-2007, 06:39 AM
முதல்ல உங்களுக்கு கல்யாணம் ஆகட்டும் அப்புறம் கவிதை எழுத சொல்லிதரோம் :icon_v:

கல்யாணம் ஆனபிறகு எங்கிருந்து காதல் கவிதைகள் வரும். பார்ப்போம்.