PDA

View Full Version : மொபைலுக்கு, 0800ல் இருந்து அழைப்பு வந்தால்...! உ



சுட்டிபையன்
05-08-2007, 05:06 AM
மொபைலுக்கு, 0800ல் இருந்து அழைப்பு வந்தால்...! உஷார் எடுக்காதீங்க, பணம் முழுக்க அம்பேல் தான்

புதுடில்லி : நீங்கள் மொபைல் போன் மூலம் வங்கி கணக்குகளை கையாள்பவரா? அப்படியானால், 0800 எண்ணில் இருந்து எஸ்.எம்.எஸ்., வந்தால் உஷார்! அதை நம்பினால், உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் "0'க்கு வந்துவிடும்.

இன்டர்நெட்டில் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் முக்கிய தகவல்களை, "லவட்ட' போலித்தனமாக "இ மெயில்' கொடுத்து மோசடி செய்வோர், "பிஷ்ஷர்' என்று அழைக்கப்படுவர். அதுபோல, மொபைல் போனில், இப்படி மர்ம எண்ணில் இருந்து தானியங்கி எஸ்.எம்.எஸ்., அளிப்பவர்கள், "விஷ்ஷர்' என்று அழைக்கப்படுவர்.

இந்த "விஷ்ஷர்'கள் தான், இப்போது, மொபைல் போன் மூலம், வங்கிக்கணக்குகளை கையாளும் சிலரிடம் பணத்தை லவட்டுகின்றனர். இவர்கள் படுசாமர்த்தியமாக இந்த மோசடி செயலை செய்கின்றனர்.தங்கள் கம்ப்யூட்டர் இன்டர்நெட் போனில் இருந்து நுற்றுக்கணக்கான மொபைல் போன்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்புவர். "உங்கள் வங்கிக்கணக்கில் பணம் எடுக்கப்பட்டுள்ளது. அது பற்றி அறிய வேண்டுமானால், தொடர்பு கொள்ளுங்கள்' என்று தகவல் இருக்கும். வங்கியின் போன் எண் போல இது இல்லையே என்று நீங்கள் உஷாராகிவிட்டால் நீங்கள் தப்பித்தீர்கள். உங்கள் பணம் பறிபோகாது. ஆனால், இந்த எண், வங்கியுடையதா என்று கூட எண்ணாமல், திரும்ப அந்த எண்ணுக்கு, மொபைல் போனில், அப்படியே "டயல்' செய்தால், நீங்கள் சிக்கிவிட்டீர்கள். உங்கள் வங்கிக்கணக்கில், பணம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதனால், உங்கள் கிரெடிட் கார்டு எண்ணை சொல்லுங்கள், உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருந்தது என்று கேட்பார் மோசடிப் பேர்வழி.

நீங்களும் சொல்லிவிட்டால், போச்சு! உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து பணம் முழுக்க "லவட்ட'ப்படும். உங்கள் கிரெடிட் கார்டு எண் கிடைத்துவிட்டால் போதும், அப்புறம் அவர்கள் போலி கார்டு மூலம் பணத்தை எடுத்துக்கொள்ள வழி கிடைத்துவிடும். இந்த 0800 என்ற எண், "காலர் ஐ.டி' சாதனத்தில் பார்த்தால், நிதி நிறுவனம் என்று மட்டும் வரும். இதனால், மொபைல் போன் வழி வங்கிக்கணக்குகளை கையாள்பவர் நீங்கள் என்றால், இந்த எண் மட்டுமல்ல, எந்த மர்ம எண் மூலம், எஸ்.எம்.எஸ்., வந்தாலும், உஷாராக இருப்பது நல்லது. இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில், "மொபைல் போன் வைத்திருப்பவர்கள் சிலர் தான் உஷாராக இருக்கின்றனர். பெரும்பாலோர் எண்ணை பார்த்து பேசுவதும் இல்லை. எஸ்.எம்.எஸ்., வந்தால், அதற்கு பதிலும் அனுப்பிவிடுகின்றனர். மொபைல் போனில் மட்டுமல்ல, யார் போனில் கூப்பிட்டு, கிரெடிட் கார்டில் உள்ள மூன்று இலக்க, "வெரிபிகேஷன்' எண்ணை கேட்டால், சொல்லவே கூடாது' என்றனர்

நன்றி: தினமலர்

மன்மதன்
05-08-2007, 12:03 PM
உபயோகமான தகவல்.

இணைய நண்பன்
05-08-2007, 12:23 PM
தகவலுக்கு நன்றி

விகடன்
05-08-2007, 12:27 PM
தொலை பேசிகள் எல்லாம் தொல்லைபேசிகளாக மாறிவருகிறது.

தகவலுக்கு நன்றி சுட்டி.