PDA

View Full Version : ஓவியா - இது என்ன உறவோ!!!ஓவியா
05-08-2007, 04:48 AM
என் 5000 பதிவு.


என் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அனுபவ கட்டுரையாக இங்கு பதிக்கிறேன்...


இது என்ன உறவோ!!!


"அம்மா பசிக்குதே, தாயே பசிக்குதே, ச்சே தட்டிக் கேட்க ஆளில்லைனா இப்படிதானா?, சமயலறை பக்கமே போக மாட்டோமா, சரியா சமைக்கத் தெரியாம, கல்யாணம் முடிந்து வீட்டில் கஞ்சியா வைத்து குடிக்கபோகிறோம்? கடவுளே!! காப்பாற்று! என்னை அல்ல அவனை முதலில் காப்பாற்று!" மெல்ல மனம் சிரித்தது.

ஆமாம் ஒரு ஆளுக்கு என்னாத்த சமைக்க, அதுவும் சொந்த சமயல சாப்பிடுற கொடுமைய விட வேற என்ன இருக்கு உலகத்திலே? என்ன கொடுமை சரவணன் இது?

ஒரு மொட்டைக்கை குர்த்தாவும், ஜீன்சும் போட்டுக் கிட்டு, புத்தகப்பை தோளில் மாட்டிகிட்டு, காதில் வாக்மேனில் சநி சப நி பக 'நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்பக் கனா' , 'இளமாலை நேரம் வந்தாள்; இதழோடு ஏதோ சொன்னாள்' என்று என்னை விஸ்வனாதன் அங்கிளும் பாலாவும் மயக்க, பஸ் விட்டு இறங்கி காலேஜ் முடிந்து வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தேன்,

மலேசியாவில் சில ஓட்டுக்கடைகள் கூறை மட்டும் வைத்து காற்றோட்டமாக இருக்கும், உடனுக்குடன் சமையல் செய்து கொடுப்பார்கள், கொஞ்சம் சுத்தமாகவும் இருக்கும். 'மாமாக் கடை' என்று சொல்லுவார்கள். மாமாக் என்றால் மலாய் அல்லாத முஸ்லீம் மக்கள் என்று அர்த்தம். 'மாமாக்'கடை என்றால், இந்திய முஸ்லீம் மக்களின் கடை, ஆனால் தற்பொழுது தமிழ் மக்களின் கைவசத்தில்தான் அதிக கடைகள் உள்ளன. சம்பளம் குறைச்சலுக்காக வேலையாட்கள் தமிழ் நாட்டிலிருந்து இறக்குமதியாகும். சைவ உணவுகளும் இருக்கும். அசைவத்தில் கோழி, ஆடு, மீன் மற்றும் முட்டை மட்டுமே சமைப்பார்கள். மற்ற இறைச்சிகள் சமைக்க மாட்டார்கள்.

சலித்து கொண்டே வீட்டிற்க்கு கீழே, (நான் தங்குவது மாடி கட்டிடம் வீடு) அனுதினமும் அமரும் அதே மாமாக்கடையில் இன்றும் வந்து 'அப்பாடா' என்று உட்கார, தமிழ் நாட்டு பசங்க பறந்து கட்டிகிட்டு வந்து, சுகமா?, சௌகியமா?, நலமா?னு விசாரிக்க கௌண்டரில் அமர்ந்திருந்த ரூபிணியக்கா கண்ணாலே சிரித்தாள். எல்லாம் வயசுக் கோளாறு என்று சமையல் அண்ணாவிடம் கை காட்டி விட்டு, சௌகியமா ஓவி?, என்ன சாப்பிடுறே? என்று கேட்டார். (என்னை நிஜத்திலும் ஓவி@ஓவியா என்று அழைபவர்களே இவ்வுலகில் அதிகம்)

"ஓவி ஆல்வேய்ஸ் குட்; இன்று பஜனைகிலாசில் கோவிந்தா போட போகணும், தோசையும் சட்டினியும் போதும். மாம்பழ ஜூஸ் பிலிஸ்" என்றேன். ருபிணியக்காவின் பையன் பிரபு, "சித்தி!" என்று உரிமையுடன் கட்டிக்கொண்டான். அவன் கொழு கொழு கன்னத்தைக் கிள்ளி விளையாடினேன்.

"பஜனையா?? அப்ப அந்த வங்காளிப் பையன் வருவானே! " குசும்பாக சிரித்தார் ரூபிணியக்கா,

எனக்கும் மனதில் அவனின் அழகிய முகம் வந்து போனது. பெருமூச்சுடன், "யப்பா என்ன அழகுடா அவன் " என்றேன் மனதினுள். ஒவ்வொரு முறையும் அவன் என்னையே ஓரக்கண்ணால் பார்க்கும் பொழுது நான் வெடுக்கென்று திரும்பி அவன் முகம் காணுவேன். நாணிப்போவான் அந்த ஆணழகன். அனைவரிடமும் நன்றாக தமிழ் பேசுவான். (என்னிடம் பேசியதில்லை) அடக்கமானவன், மிகவும் நல்லவன். நல்ல பக்தியுள்ள சீமான்.


அவன் என்னை சைட் அடிப்பதை என் தோழிகளும் பல முறை கவனித்துள்ளனர். அப்பொழுதெல்லாம், "வங்காளி பார்ட்டி பார்க்குறான், பங்கரா ஆடு ஓவி!" என்று கிண்டலடித்திருக்கிறார்கள். நான் கண்டு கொள்ளமாட்டேன், ஏனோ ஆத்திரப்படவும் மாட்டேன்..... மௌனியாவேன்... எல்லா பெண்களிடமும் பேசுவான், என்னிடம் மட்டும் பேச மாட்டான்.
ஒரு வேலை வெட்கமோ!! ஆண்களுக்கு வெட்கமா!! ச்சே ச்சே நான் கூந்தலில்தான் பூ சுத்துவேன் காதில் அல்ல.

" இருந்தாலும் நம்ப பொண்ணு இன்றுவரை சிங்கிடம் 'ஹை'னு ஒரு வார்த்தை கூட பேசினதில்லையாம் ", ரூபினியக்காவின் கணவர் ராம் அண்ணா ஜால்ரா போட்டார். ராம் அண்ணாதான் கடையின் முதலாளி, சமயலண்ணாவும் ஜாடையில் அப்படியா, இப்படியா என்று கலாய்க்க, சிரித்துகொண்டே ரசித்தேன், தோசையையும் ருசித்தேன்.

எதிர் மேசையில் ராமண்ணாவின் தோழர் ரகு, வாடிய முகத்துடன் அமர்ந்திருந்தார். அவரைக்கண்டதும், தோசையின் ருசி மறந்தே போனது. சாப்பிட்டு விட்டு அவசரமாக கிளம்பினேன். கடையின் வழிதான் கோவிலுக்கும் போக வேண்டும். வீட்டிற்க்குச் சென்று குளித்து, புடவையை கட்டிக்கொண்டு, கழுத்துவரை கூந்தல் காற்றில் அலைபாய காட்டன் சாரியில் ஒய்யாரமாக வந்தேன். (எல்ல பெண்களும் பிலிம் காட்டும் பொழுது செய்யும் ஒரு செயல் இது, ஓவியா ஒரு சாதாரண பெண், கொஞ்சமாவது இருக்காத பின்னே?)


அப்பொழுதும் ரகு வாடிய முகத்துடன்தான் புன்னகைத்தார். என்னை கண்டதும் கடையில் பசங்க...... ஆ ஆஹ ஓ ஓஹொ என்று கிண்டலடிக்க, ரூபினியக்கவோ, " ஓவி! இப்படி போனா, அவன் சைட் அடிக்காம என்ன செய்வான். பாவம் அந்த வங்காளிப்பையன் அவனைக்கொடுமை பண்ணதே!" என்றார், புன்னகைத்தவாறே நடையைக் கட்டினேன்.........மனதில் ஒன்றுமில்லா விட்டாலும், வேண்டுமென்றே தழைய தழைய சாரிய கட்டிகிட்டு, 1/2 மீட்டர் துணியில்......அதுக்கு கதவு வச்ச ஜாகிட்வேற, அவன் முன் குறுக்கும் நெடுக்கும் நடந்து அவன் உயிரை வாங்குவது எனக்கு ஒரு சாகச செயல். எல்லாம் வயசு கோளாறுதான். முகம் சுளிக்காதீங்க, உண்மையை உண்மையாகதான் சொல்லுறேன்.


தீடிரென்று முதலாளியின் தோழர் ரகு, "மேடம் எனக்கு ஒரு உதவி வேண்டும் கேட்கலாமா ? என்றார்,

நானும் யோசிக்காமலே, "ம்ம்ம் சொல்லுங்க சார் " என்றேன்.

"உங்களுக்கு யாராவது ரத்தானம் செய்யறவங்களைத் தெரியுமா?

"ஏன்"

"இல்ல, எனக்கு ஒரே தாய்மாமா அவருக்கு பய்பாஸ் ஆப்ரேசனாம்; பல வருசமா எங்களுக்குள்ள பேச்சு வார்த்தையில்லை, இன்னிக்கி காலையில என்னோட போனுக்கு கூப்பிட்டாங்க, சில ரத்தானர்கள் வேணுமாம். இது வரை 2 பேர்தான் இருக்காங்களாம். 5 பேர் முக்கியமாம், ரெண்டு பேரு ரிசர்வ்லே இருப்பாங்களாம். யாரையாவது தெரிந்தால் சொல்லுங்களேன், பணம் கேட்டாலும் கொடுக்கத் தயார்"


"ரத்தம் ரத்த வங்கியில் கிடைக்குமே"

"கிடைக்கும் ஆனால் இது இது தனியார் மருத்துவமனை, மற்றும் பாய்பாஸ், வைப்பு ரத்தம் நல்லதில்லையாம் . அதனால்
உடனுக்குடன் ரத்தம் கொடுப்பதுதான் சிறப்பாம் ".

"என்ன குருப் "

"(xY) "

"அட நானும் அந்த குருப்தான், எற்கனவே வங்கிக்கு பல முறை ரத்ததானம் பண்ணியிருக்கேன் , அதனால் என்னால் ரத்தம் தர முடியும்; ஆனால் தானம் கொடுத்து 80-85 நாட்கள்தான் ஆகுது; குறைஞ்சது 90 நாட்கள் இருக்க வேண்டுமே? " என்றேன்.

"அடுத்த வாரம்தானே, பிரச்சனை இல்லை" என்றார்.


உடனே மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு நாளை என் ரத்ததை பரிசோதிக்க அப்பயின்மெண்ட் வாங்கிக்கொண்டார். என்னைக் கேட்காமலே, நாளை 10 மணிக்குப் போக வேண்டுமாம். எனக்கோ டிகிரி ஆண்டு இறுதி பரீட்சைநேரம். கிளாசில் ஆட்டம் போட்டு பாஸ் பண்ணும் மாணவி. 'அடடா மாட்டிகிட்டேனே' என்று யோசித்து அரை மனதுடன் 'சரி' என்றேன். வங்காளியின் பிஎம்டபல்யூ கார் கடந்து செல்லவே, ரூபிணியக்கா ஜாடை காட்டினாள், கண்ணடித்தாள். நான் பஜனை பாடச் சென்று பாடினேன். சிங்கு(!?)


காலை 9 மணிக்கு கிழே கடையில் வந்து அமர்ந்தேன், ரத்தம் பரிசோதிக்கும் முன் உணவு உண்ணக்கூடாது, அதனால் ஒன்றும் சாப்பிடவில்லை. டாக்சி வந்தது. மருத்துவமனைக்குச் சென்றேன். வாசலில் ரகு காத்துக்கொண்டிருந்தார். பரிசோதனை முடிந்ததும், மருத்துவமனையின் தொலைப் பேசி எண்ணை எனது அலைபேசியில் சேமித்துக்கொண்டேன். வாசலில் ஒரு அழகிய பென்ஸு கார், சைவ பிரியாணி கட்டி கொடுத்து விட்டு ஜம்மென்று வீட்டில் விட்டு விட்டு சென்றார்கள். இரவு மருத்துமனையிலிருந்து தகவல் வந்தது. உங்களுடைய ரத்தம் பொருத்தமாக உள்ளது. அறுவை சிகிச்சைக்கான தேதியும் நேரமும் சொல்லிவிட்டு வைத்தார்கள்.

ஒரு காலை நேரம், வகுப்பறையில் பாடம் நடந்துக்கொண்டிருந்தது, தொலைப்பேசி சிணுங்க, வாத்தியார் முறைத்தார். எடுத்தால் மருத்துவமனையின் எண் கண்ணடித்தது, கட் பண்ண முடியாதே; பேசினேன். "நாளை நீங்கள் ரத்தாணம் செய்ய வரவேண்டும். ஒரு முக்கிய விசயம் நீங்கள்தான் முதல் ஆள், முக்கியமான நபர், சரியான நேரத்திற்க்குள் வந்து விடுங்கள்." என்றனர். பேசி முடிக்கும் முன்பே, ஆசிரியர் என்னை 'கெட் லோஸ்ட்' என்று கூவி வெளியில் தள்ளி கதவடைத்தார். பின் வழியில் நுழைந்து வகுப்பில் நல்ல பிள்ளையாய் அமர்ந்துகொண்டேன். நான் ஆசிரியரின் செல்லம்; அதனால் முறைத்து விட்டு, விட்டு விட்டார். ஆனால் நான் வாயாடி என்று டீனுக்கு என்னைப் பிடிக்காது, மற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் என்னை ரொம்பவே பிடிக்கும்.


அடுத்தநாள், குளித்து சாமி கும்பிட்டு கீழே இறங்கினேன், இந்த முறை வீட்டின் முன் பீஜோட் கார் காத்திருந்தது. நேரே மருத்துவமனையடைந்து ரத்தானம் முடிந்து வெளியில் வந்தேன், திடீரென்று யாரோ முதுகில் மெல்ல தட்டினார்கள். ஒரு அம்மா அழுத முகத்துடன், என்னை கட்டிப்பிடித்து "நன்றி" என்றார், கையில் ஏதோ கொடுத்தார். பணம். நான் வாங்கவில்லை
(ஓவியாவை விலைக்கொடுத்து வாங்க முடியுமா என்ன!!) வேண்டாம் என்றுக்கூறி மெல்ல சிரித்து வீட்டு நகர்ந்தேன். யாருக்கு ஆப்ரேசன் என்று துளியும் கண்டுகொள்ளவில்லை. வேகமாக நடந்து கடந்துப்போனேன்.

பின் ரகு சொன்னார். அந்த அம்மாவின் கணவருக்குதான் ஆப்ரேஷனாம். வீட்டிற்க்குச் சென்று நன்கு உண்டு உறங்கினேன். எத்தனையோ முறை ரத்ததானம் செய்தாகி விட்டதால், இந்த விசயத்தை மறந்தும் போனேன்.


சில மாதங்கள் சென்று, ஒரு கடிதம் வந்தது, பிரித்தேன், ஒரு நன்றி அட்டை,அன்பு
ஓவியாவிற்க்கு

'உங்களுடைய விலைமதிக்க முடியாத ரத்தத்தைக் கொடுத்து எனக்கு மறு வாழ்வளித்துள்ளீர்கள்.

மிக்க நன்றி'

இப்படிக்கு
பி.ஸ் மணியம்'என்று எழுதியிருந்தது. பக்கத்தில் கைத்தொலைப்பேசி எண்ணும் எழுதி வைக்கப்பட்டிருந்தது. உடனே அழைத்தேன், எண் போக வில்லை. அட்டையை எங்கோ புத்தக அலமாரியில் போட்டு வைத்தேன், பின் மறந்தும் போனேன்.

ஒரு வருடம் கழித்து தற்செயலாக அட்டை கண்ணில் பட்டது, மீண்டும் தொலைப்பேசியில் அழைத்தேன், மறுமுனையில் "அலோ ஹூயிஸ் ஸ்பீக்கீங்க்" என்று ஒரு கம்பீரக்குரல், வணக்கம் என்றேன்.

அவரும் "வணக்கம் " என்றார்,

"நான் ஓவியா பேசுகிறேன், உங்கள் நன்றி அட்டைக்கு நன்றி. நீங்கள் நலமா " என்றேன்.
ஆச்சரியத்துடன், " ஓவியாவா. எனக்கு ரத்தம் கொடுத்த பெண்ணா" என்றார், நல்ல ஞாபக சக்தி அவருக்கு.., "சுகமா ஓவியா " என்றார்.

" நான் நலம் நீங்கள் சுகமா " என்றேன்.

சிரித்துகொண்டே, " உங்கள் ரத்தம் என் உடலில் ஓடுகிறதே அதனால் நானும் சுகம், மிகவும் தெம்பாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறேன் " என்றார்.

ரொம்ப உற்சாகமாக கலகலப்பாக பேசினார். மருத்துவமனையில் என் முகவரி வாங்கினாராம், பர்சனல் விசயமானதால், முதலில் அவர்கள் தர மறுத்து விட்டனராம். ரகுவும் வெளிநாடு சென்று விட்டாராம். அதனால் மிகவும் சிரமப்பட்டு, குடும்ப வக்கீல் வைத்து பேசி வாங்கினாராம், சில சமயம் அழைப்பார், அம்மா என்று கூப்பிடுவார். கனிவாகப் பேசுவார்.


பின் அவரை சந்திப்பதாக ஒரு நாள் முடிவு செய்து காத்திருந்தேன். சுமார் 68 வயதிலும் சிவந்த முகமும் நல்ல உடற்கட்டும் கும்முனு, சம்மி கபூர் போல அழகாக இருந்தார். முக்கியமாக ஒரு பெண்ணை காணப் போகிறோம் என்று ரொம்ப ஸ்மார்ட்டாக உடையணிந்து வந்திருந்தார், புன்னகையுடன் கையில் ஒரு பெரிய ரோஜாப்பூ கொத்துடன் தோன்றினார்.

"ஹாய் ஓவியம்மா " என்றார்.

"அங்கிள் நீங்க ரொம்ப ஹெண்ட்சம் அண்ட் ஸ்மார்ட்", என்றேன். அதுதான் நான் முதலில் அவரிடம் சொன்ன வார்த்தை, அதன் பின்தான் "கிலேட் டு மீட் யு" என்று சொன்னேன், ஆமாம் சாதாரண மனிதர்களுக்கு முதலில் இளமையும் புற அழகும் தானே தெரியும். அப்படியென்றால் அப்பொழுது நானும் ஒரு சாதாரணப் பெண்தானே?


முதல் வார்த்தையிலேயே "என் தாயே, எனக்கு உயிர் கொடுத்த என் அம்மா நீ , என் தெய்வம் நீ " என்றார்.
ஏனோ கண் கலங்கினார். எனக்குள் ஒரே குஷி, ஒரு வித மகிழ்ச்சி பொங்கியது. ஒருவேளே அம்மா என்றதினால் ஒரு சிறு துளியளவில் தாய்மையை உணர்ந்தேனோ?! தெரியவில்லை. பின்னர் அருமையான இரவு உணவு முடிந்து, செல்லமாக நெற்றியில் ஒரு முத்தமிட்டு பாய் மம்மி என்றும் கிண்டலடித்தும் சென்றார். முக்கியமாக வாயார வாழ்த்தி ஆசியும் வழங்கி சென்றார் பெரியவர்.


சில வாரங்கள் கழித்து, அவரின் இல்லத்தில் எனக்கு அசத்தலான இரவு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். வேலைக்காரி அருமையாக சமைத்திருந்தார். அவரின் மனைவியும் மகளும் மிகவும் அன்பானவர்கள். மிகவும் வயது போன காலத்தில் (மருமணம்) புரிந்தார்களாம், அதனால் அவர்களுக்கு குழந்தையில்லையாம் ; சில வருடங்களுக்கு முன் தன் வீட்டு வேலைக்காரியின் மகளை தத்தெடுத்துக் கொண்டார்களாம், அவள் பெயர் பிருந்தா, ஏழ்மையினால் அவள் ஆரம்பக்கல்வி கற்கவில்லையாம், அதனால் அவளை கராத்தே கற்க்க வைத்து இன்று ஒரு கராத்தே ஆசிரியையாக்கியுள்ளார்கள். பிருந்தாவிற்க்கு 22 வயது ஆனால் நல்ல சுட்டி. அவள் என்னைவிட 2 வயது சின்னவள். அன்றே என்னுடன் நெருக்கமாகிவிட்டாள். மிகவும் நல்லப்பெண். கள்ளமற்ற அப்பாவிப்பெண். ஒரு ஏழைப்பெண்ணுக்கு வாழ்வுதந்த பெருமை இவர்களைச்சாரும்,

பிருந்தா என்னைக் கட்டியணைத்து "யூ சேவ் மை டாடி" என்று கண்ணீருடன் சொன்னாள். பிருந்தா இன்று பல லட்சங்களுக்கு அதிபதி. ஆண்ட்டியோ "யூ சேவ் மை லைஃப்" என்றார். (அங்கிள்தான் அவர்களின் சந்தோஷமாம்) அன்பான குடும்பம். பிருந்தா அவர் மேல் உயிராக இருந்தாள். டாடி மம்மி என்று கொஞ்சி குலவினாள். அவர்களும் பாச மழை பொழிந்தார்கள். இதைக்கண்டு, தாய் தந்தையற்ற எனக்குள், எங்கோ நான் அழும் குரல் கேட்டது. இருப்பினும் நான் காட்டிகொள்ளவில்லை. சில வினாடிகள் ஊமையானேன். நானும் பெண்தானே? பெற்றோரின் பாசத்திற்க்கு ஏங்கும் சராசரி குழந்தைதானே?!

மாலைப்பொழுதில் அங்கிள் ஆர்கன் வாசித்து என்னை சந்தோஷப்படுத்தினார். அவருடைய தோட்டத்தில் அமர்ந்து நன்றாக கதையளந்தேன். பாடினேன். ஆண்ட்டியும் நன்றாக பாடினார். கச்சேரிதான். அவ்வபோது மாம்பழ ஜூசில் மிதந்தேன். நாங்கள் நால்வரும் சந்தோஷமாக பொழுதைக் களித்தோம்.

ஒரு நாள் தங்கி உறவாடி விடைபெற்றேன், விடைபெருமுன் ஆண்ட்டியே ஒரு காட்டன் புடவையும் தங்க சங்கிலியும் கொடுத்தார்கள். புடவையை மட்டும் பெற்றுகொண்டேன். தங்கச்சங்கிலியை தொடவுமில்லை. முற்றிலும் மறுத்து விட்டேன். எவ்வளோ கெஞ்சியும் கொஞ்சியும் ''ம்ம் ம்ம் அது வேண்டாம்'' என்று ஒதுக்கி விட்டேன். அது வேண்டவே வேண்டாம். எதையுமே எதிர்பார்த்து நான் ஒன்றும் செய்யவில்லையே!

லண்டன் வரும் முன் அவர்களைக் கண்டேன். மீண்டும் ஒருநாள் விருந்து உண்டு லூட்டியடித்தேன். இன்றும் எனக்கு வாழ்த்து அனுப்பி என் நலம் விசாரிக்கும் ஒரு நல்ல மனிதர் அவர்,
என் பிறந்தநாளை மறவாமல் நினைத்து வாழ்த்துபவர். இன்றும் அவர்கள் சந்தோஷமாக வாழுகின்றனர், என்றும் வாழ்வார்கள். அவர்களுக்காக என் பிராத்தனை எப்பொழுதும் உண்டு.

அங்கிளோ என்னை அம்மா என்று அழைத்தார், ஆண்ட்டியோ மகளே என்று அழைத்தார்கள். இது என்ன உறவோ!? ஒரு குடும்பத்தினுடைய தலைவரை, பலர் நேசிக்கும் நல்லவரை, ஒரு குழந்தையின் அப்பாவை, ஒரு நல்ல மனைவியின் கணவரை, அவரின் விலை மதிப்பற்ற உயிரைக் காக்க எனக்கு வாய்பளித்த, கடவுளுக்கும் தோழர் ரகுவுக்கும் இத்தருணத்தில் எனது கோடி நன்றிகள் சமர்ப்பணம்.


நன்றி.

அன்புடன்
ஓவியா.

aren
05-08-2007, 05:26 AM
அருமையான பதிவு. உங்கள் தொண்டு இன்னும் தொடரவேண்டும். வாழ்த்துக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

சுட்டிபையன்
05-08-2007, 05:33 AM
என் 5000 பதிவு.


என் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அனுபவ கட்டுரையாக இங்கு பதிக்கிறேன்...Join Date: 27 Apr 2006
Location: LONDON
Posts: 6,261
iCash: 2963.90 Donate Me Awards Showcase

அப்போ ஒரே நாளில் 1261 பதிவா?:sprachlos020: :sprachlos020:
எப்படி அது எனக்கும் கொஞ்சம் சொல்லி கொடுங்க அக்காச்சி

சிவா.ஜி
05-08-2007, 05:35 AM
ஓவியா வாழ்த்துக்கள். உங்கள் எழுத்து வசீகரிக்கிறது.நிஜங்களை நிஜமாக எழுதும்போது அதன் வலிமை அதிகமாகிறது.உங்கள் எழுத்து அதனை காட்டுகிறது. சம்பவத்தை சொன்ன விதம்,அதனுள் நான் இப்படித்தான் என்று கம்பீரமாய் சொன்ன முறை,விவரிப்பு அத்தனையும் சேர்ந்து இந்த பதிவை அழகுபடுத்தியுள்ளது. மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

விகடன்
05-08-2007, 05:50 AM
ஓகோ!!!
பொண்ணுங்க எல்லாம் இப்படித்தானோ?
சைட் அடிக்கிறான் என்று தெரிஞ்சும் கண்டுகொள்லாத மாதிரி இருந்து எல்லத்தையும் இரசிக்கிற வழக்கமோ....

ஆனாப் பாருங்க அக்கா. ஒன்றுமே தெரியாத மாதிரி பார்வையையும் அப்பாவித்தனமான கதையும் கதைத்து தன்னை அப்பாவியாகக் காட்டி கடைசியில எங்களை விசரனாக்கியே விடுவார்கள். நம்மட ஒரு நண்பனுக்கும் இதே நிலைதான். இன்னும் விசரனாகவில்லை. கூடிய விரைவில் ஆகிவிடுவான் என்று நம்புகின்றோம்.

அக்கா. உண்மையிலா பல சுவைகள் கலந்த அமிர்தமாய் கதை இருக்கிறது. ஆனால் அவை அனைத்தும் நெஞ்சைக் கனமாக்கின. ஆரம்பத்தில் ஏதோ கல கலப்பான கதை போல சொல்லி செல்ல செல்ல அதன் பரிமானம் மாறாமல் மாறுவது அழகே.

இரத்ததானம் செய்ததும் அதன் பின் அவர் அம்மா என்று உலகத்திலேயே மிகவும் உயர்ந்த பாத்திரத்திற்கு உங்களை வைத்து ஆசீர்வதித்ததும் குறிப்பிடத்தக்கவை. இருந்தாலும் உங்களுக்கு 22 வயது என்று சொன்னதுதான் ...சரி அதை விடுவோம்.

மொத்தத்தில் தானத்திலே சிறந்த தானம் இரத்ததானம் என்று சொல்லிநிற்கும் உங்களின் அநுபவக் கட்டுரை(என்றுதான் நம்புகிறேன்) சிறப்பே.பாராட்டுக்கள்.

அம்ம நலமா?

aren
05-08-2007, 05:58 AM
Join Date: 27 Apr 2006
Location: LONDON
Posts: 6,261
iCash: 2963.90 Donate Me Awards Showcase

அப்போ ஒரே நாளில் 1261 பதிவா?:sprachlos020: :sprachlos020:
எப்படி அது எனக்கும் கொஞ்சம் சொல்லி கொடுங்க அக்காச்சி

பயப்படாதீங்க. இது 5000 பதிப்பாக வரவேண்டும் என்று முன்பே எழுதிவைத்திருந்தார்கள் ஆனால் பதிக்க முடியவில்லை. இதையே 5000 பதிவாக நினைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான்.

தங்கவேல்
05-08-2007, 06:00 AM
சூப்பர் ஓவியா. வாழும் போது மற்றவரை ச ந்தோசப்படுத்தி பார்ப்பதில் தான் உண்மையான இன்பம் இருக்கிறது..

pradeepkt
05-08-2007, 06:20 AM
பேச்சே வரவில்லை...
ஓவியா, அன்றும் சொன்னேன் இன்றும் சொல்கிறேன், என்றும் சொல்வேன். உங்கள் வாழ்வில் இனி மகிழ்ச்சி மட்டுமே மின்னும்.

ஓவியா
05-08-2007, 06:44 AM
அருமையான பதிவு. உங்கள் தொண்டு இன்னும் தொடரவேண்டும். வாழ்த்துக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

மிக்க நன்றி ஆரேன் அண்ணா.
Join Date: 27 Apr 2006
Location: LONDON
Posts: 6,261
iCash: 2963.90 Donate Me Awards Showcase

அப்போ ஒரே நாளில் 1261 பதிவா?:sprachlos020: :sprachlos020:
எப்படி அது எனக்கும் கொஞ்சம் சொல்லி கொடுங்க அக்காச்சி

முன்பு பதிய முடியாமல் போய்விட்டது,, அதான் இப்போழுது பதிந்தேன் தம்பி. படித்து கருத்திடுபா. நன்றி.

ஓவியா
05-08-2007, 06:53 AM
ஓவியா வாழ்த்துக்கள். உங்கள் எழுத்து வசீகரிக்கிறது.நிஜங்களை நிஜமாக எழுதும்போது அதன் வலிமை அதிகமாகிறது.உங்கள் எழுத்து அதனை காட்டுகிறது. சம்பவத்தை சொன்ன விதம்,அதனுள் நான் இப்படித்தான் என்று கம்பீரமாய் சொன்ன முறை,விவரிப்பு அத்தனையும் சேர்ந்து இந்த பதிவை அழகுபடுத்தியுள்ளது. மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

மிக்க நன்றி சிவா. ஒவ்வொரு முறையும் உங்களின் அழகிய பின்னூட்டம் என் மனதை கொள்ளைக் கொள்கின்றது.
ஓகோ!!!
பொண்ணுங்க எல்லாம் இப்படித்தானோ?
சைட் அடிக்கிறான் என்று தெரிஞ்சும் கண்டுகொள்லாத மாதிரி இருந்து எல்லத்தையும் இரசிக்கிற வழக்கமோ....

ஆனாப் பாருங்க அக்கா. ஒன்றுமே தெரியாத மாதிரி பார்வையையும் அப்பாவித்தனமான கதையும் கதைத்து தன்னை அப்பாவியாகக் காட்டி கடைசியில எங்களை விசரனாக்கியே விடுவார்கள். நம்மட ஒரு நண்பனுக்கும் இதே நிலைதான். இன்னும் விசரனாகவில்லை. கூடிய விரைவில் ஆகிவிடுவான் என்று நம்புகின்றோம்.

அக்கா. உண்மையிலா பல சுவைகள் கலந்த அமிர்தமாய் கதை இருக்கிறது. ஆனால் அவை அனைத்தும் நெஞ்சைக் கனமாக்கின. ஆரம்பத்தில் ஏதோ கல கலப்பான கதை போல சொல்லி செல்ல செல்ல அதன் பரிமானம் மாறாமல் மாறுவது அழகே.

இரத்ததானம் செய்ததும் அதன் பின் அவர் அம்மா என்று உலகத்திலேயே மிகவும் உயர்ந்த பாத்திரத்திற்கு உங்களை வைத்து ஆசீர்வதித்ததும் குறிப்பிடத்தக்கவை. இருந்தாலும் உங்களுக்கு 22 வயது என்று சொன்னதுதான் ...சரி அதை விடுவோம்.

மொத்தத்தில் தானத்திலே சிறந்த தானம் இரத்ததானம் என்று சொல்லிநிற்கும் உங்களின் அநுபவக் கட்டுரை(என்றுதான் நம்புகிறேன்) சிறப்பே.பாராட்டுக்கள்.

அம்ம நலமா?

மிக்க நன்றி விராடன்.

உங்கள் நண்பனை அந்த பெண்ணை நம்ப சொல்லுங்கள், இது பருவ வயதில் பெண்களின் இயற்க்கை குணம்.

ஆம் கதையை எங்கோ தொடங்கி இப்படி முடிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். தலைப்பும் சிங்குக்குதான் என்று யூகிக்கும்படி செய்தேன். ஆனால் அது யாருக்க்கு என்று என்னக்கே தெரியவில்லை!!!! அதான் கட்டுரையின் சிறப்பு.

இது முற்றிலும் என் வாழ்வில் நடந்த ஓரு உண்மை சம்பாவம்.

ஓவியா
05-08-2007, 06:59 AM
பயப்படாதீங்க. இது 5000 பதிப்பாக வரவேண்டும் என்று முன்பே எழுதிவைத்திருந்தார்கள் ஆனால் பதிக்க முடியவில்லை. இதையே 5000 பதிவாக நினைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான்.

நன்றி அண்ணா..சூப்பர் ஓவியா. வாழும் போது மற்றவரை ச ந்தோசப்படுத்தி பார்ப்பதில் தான் உண்மையான இன்பம் இருக்கிறது..

நன்றி அண்ணா, ஆனாலும் ஒருசிலர் பலரின் சந்தோஷதிற்க்காக அவர்களின் சந்தோஷாத்தை வேண்டுமென்றே தொலைத்து விடுகின்றனர்.. இங்குதான் மனிதனின் விவேகம் என்ற குணம் தலை துக்க வேண்டும்.பேச்சே வரவில்லை...
ஓவியா, அன்றும் சொன்னேன் இன்றும் சொல்கிறேன், என்றும் சொல்வேன். உங்கள் வாழ்வில் இனி மகிழ்ச்சி மட்டுமே மின்னும்.

அப்படீங்களா!!! ரோம்ப நன்றி. பதிவின் விமர்சனம் எங்கே??என் எழுத்துக்களின் நிரை−குறைகளை சொன்னால் மகிழ்ச்சி கொள்வேன்..நன்றி.

விகடன்
05-08-2007, 07:06 AM
அக்கா.
உங்களுக்கு ஒன்று தெரியுமோ தெரியாதோ.
அந்த நண்பனும் இங்கேதான் இருக்கிறான். எப்படியுன் இந்த திரியை இன்றே பார்த்தும் விடுவான்.

தகவலுக்கு நன்றி

ஓவியா
05-08-2007, 07:08 AM
அக்கா.
உங்களுக்கு ஒன்று தெரியுமோ தெரியாதோ.
அந்த நண்பனும் இங்கேதான் இருக்கிறான். எப்படியுன் இந்த திரியை இன்றே பார்த்தும் விடுவான்.

தகவலுக்கு நன்றி

அய்யோ அன்னாச்சிக்கு ஆப்புதானா!!!

நாந்தான் சொல்லனும் தகவலுக்கு நன்றினு. :musik010:

leomohan
05-08-2007, 10:43 AM
5000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் ஓவியா. எங்கே ஆளையே காணோம். பரீட்சையா. முடிஞ்சுதா. முட்டைக்கு பக்கத்துல (முன்னேயா பின்னையா) எத்தனை மார்க்கு. :natur008:

இனியவள்
05-08-2007, 11:13 AM
ஓவி

உண்மைச் சம்பவத்தை
நீங்கள் தொகுத்து எழுதிய
விதம் அருமையிலும் அருமை
வாழ்த்துக்கள் தோழியே

அன்புரசிகன்
05-08-2007, 11:23 AM
அழகாக வடித்திருக்கிறீர்கள்.....

பாராட்டுக்களக்கா...

இணைய நண்பன்
05-08-2007, 11:53 AM
மிக மிக நீண்ட நாட்களின் பின் ஓவியா அக்காவை மன்றத்தில் கண்டதில் பெரும் மகிழ்ச்சி.உங்கள் கருணை மனம் அடடா...எல்லோருக்கும் அந்த மனசு வரவேணும்.அழகாக சுவைபட எழுதி இருந்தீங்க.நன்றி

பாரதி
05-08-2007, 11:51 PM
அருமையான பதிவு ஓவியா. பாராட்டுக்கள். சில சம்பவங்களை எப்படி எழுத்தில் வடிப்பது என்பது பலருக்கும் புரியாது. சிரமத்திற்கு பின்னரே ஓரளவுக்கு தெரிந்து கொள்ள முடியும். உங்கள் எழுத்தில் அது தெரிகிறது. உங்கள் உயரிய, பரந்த மனப்பான்மைக்கு நான் தலை வணங்குகிறேன். வாழ்க! வளர்க!!

மதி
06-08-2007, 05:20 AM
அக்கா..

பல உறவுகள் எதிர்பாராத தருணங்களில் தான் கிடைக்கிறது.. தங்கள் நல்ல உள்ளம் தங்களுக்கு விலைமதிக்க முடியாத பல நல்ல உறவுகளைத் தந்துள்ளது.

என்றும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்..

ஷீ-நிசி
06-08-2007, 05:44 AM
ஒரு மிக உணர்வுபூர்வமான் நிகழ்வு ஓவி!....

ரத்ததானம் என்பது அந்த நோயாளியை மட்டும் காப்பாற்றவில்லை.. அவரை நம்பியிருக்கும் அத்தனை ஜீவன்களையும் மனதளவில் காப்பாற்றுகிறது... அருமையான கட்டுரை..


(சரி! அந்த சிங்கு பார்ட்டி என்ன ஆனார் :) )

பென்ஸ்
06-08-2007, 09:10 AM
ஓவி.... நல்ல நினைவுகளை பகிர்ந்து கொள்வதில் கிடைக்கும் சுகம் தனிதான்.....

பரம்ஸ் , ஒரு நல்ல கதை சொல்லி.... அதே போல் நீங்களும் அருமையாக சொல்லியிருப்பது சிறப்பு...
சம்பவங்களை கோர்த்திருப்பதில் சிறிது கவணம் எடுத்திருக்கலாம்... முக்கியமா அந்த வங்காளியை பற்றி தனியா ஒரு பதிவே போட்டிருந்திருக்கலாம்... இந்த பதிவோடு இனைத்தது ஒட்டவில்லை....

அந்த வங்காளி என்ன ஆனாப்புல... (தனி மடலிலாவது சொல்லவும்)

pradeepkt
06-08-2007, 09:47 AM
அப்படீங்களா!!! ரோம்ப நன்றி. பதிவின் விமர்சனம் எங்கே??என் எழுத்துக்களின் நிரை−குறைகளை சொன்னால் மகிழ்ச்சி கொள்வேன்..நன்றி.
இதை எழுதிய*து நிஜ*மாவே நீங்க*தானா???
ரொம்ப* வித்தியாச*மாக* இருக்கிற*தே... ந*ன்றி, அது இதுன்னு...

இதயம்
06-08-2007, 09:54 AM
மனதிற்கு பெரும் திருப்தியை கொடுத்த ஒரு பதிவு இது. பொதுவாக பகிர்தல் கொடுக்கும் சுகமே அலாதியானது. அது பகிர்பவருக்கும், பகிர்ந்து கொள்பவருக்கும் பொருந்தும். உங்கள் எழுத்தில் இருக்கும் பக்குவத்தை கொண்டு நான் உங்களை கொஞ்சம் வயது முதிர்ந்தவராகவே கற்பனை செய்து வைத்திருந்தேன், உங்கள் வயது எனக்கு முன்பே தெரியும் என்றாலும் கூட..! ஆனால், இந்த அனுபவ குறிப்பில் உங்கள் எழுத்தில் தெறிக்கும் இளமை உங்களை குறும்பு நிறைந்த ஒரு பெண்ணாகவே காட்டுகிறது. அதுவும் ஆண்கள் குறித்த ஒரு இளம்பெண்ணின் எண்ண ஓட்டங்கள் பெண்களை நாங்கள் புரிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது போன்ற வாய்ப்புகள் எங்களுக்கு மிக அரிது. ஒரு நல்ல தோழியாக இருந்து பெண்களின் மனநிலையை எங்களுக்கு புரிய வைக்கும் உங்களுக்கு நன்றிகள் பல. நீங்கள் குறிப்பிட்டவற்றிலிருந்து பெண்கள் தான் விரும்பும் நிறைய விஷயங்களை மனதிற்குள்ளேயே புதைத்துக்கொள்கிறார்கள், ஆண்களை போல் ஓட்டைவாயாக இருப்பதில்லை என்பது தெளிவாகிறது. இந்த பதிவில் நீங்கள் குறிப்பிட்ட வங்காளி இளைஞன் பற்றிய நிகழ்வுகள் இரத்த தான நிகழ்வோடு ஒட்டாமல் தனியாக நிற்கிறது. அவருக்கும் உங்களுக்குமான உறவு நட்பா, காதலா, ஒருதலைக்காதலா என்பதை சொல்லாமல் அந்த வங்காளி இளைஞனைப்போலவே நீங்களும் எங்களை குழப்பிவிட்டீர்கள். ஒரு வேளை அருமையான ஒரு காதல்கதையை விரைவில் உங்களிடமிருந்து எதிர்பார்க்கலாமோ..? சரி.. நான் நிகழ்வின் முக்கிய விஷயத்திற்கு வருகிறேன்.

இரத்த தானம் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகச்சாதாரணமான உதவி என்றாலும் அதை செய்த நேரம் இங்கே குறிப்பிடத்தகுந்தது. திருவள்ளுவர் தன் குறளில்..

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

என்கிறார்.

இதன் பொருள் தேவையான நேரத்தில் செய்யப்படும் உதவி, சிறியதாக இருந்தாலும் அது இந்த உலகத்தில் அனைத்தையும் விட பெரியதாக, உயர்ந்ததாக கருதப்படுகிறது. உங்கள் உதவி இமாலய உயரத்திற்கு போனதன் காரணம், அவசியப்பட்ட நேரத்தில் செய்த உங்கள் உதவியே..! இந்த உலகில் உங்களிடம் இரத்தம் பெற்ற அந்த மனிதர் வாழும் ஒவ்வொரு நிமிடமும் தான் உயிரோடு இருக்க காரணம் நீங்கள் தான் என்று நினைக்கும் போது உங்களை அவர் தாய் என்று எண்ணுவதில் தவறில்லை. காரணம், இரத்த தானம் செய்வதன் மூலம் அவர் மறுபடி ஒரு குழந்தையாக பிறந்திருக்கிறார். அந்த மறு உயிரை பிறப்பிக்க வைத்த உங்களை தாய் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்..? கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி போல் திருமணம் ஆகாமல் ஒரு பெரியவரை பெற்றெடுத்த நீங்கள் மிக, மிக அதிருஷ்டசாலி..! பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்பார்கள். நீங்கள் இட்ட பிச்சை மிகவும் நன்றிக்கடன் மிக்க பாத்திரத்தில் தான் விழுந்திருக்கிறது. இல்லையென்றால் உங்கள் உதவியின் மதிப்பு யாருக்கும் தெரியாமல் உதாசீனப்படுத்தப்பட்டிருக்கும்.

மனித வாழ்க்கையின் அர்த்தமே இன்னொரு உயிரை வாழ்விப்பதில் இருப்பதாக உணர்கிறேன். நாம் செய்யும் ஒரு செயல் மூலம் ஒரு மனிதனோ, குழுவோ சந்தோஷமாக வாழ்ந்தால் அதைவிட உலகத்தில் வேறு சந்தோஷம் என்ன இருக்கிறது.? குடும்பத்திற்காக தன் கஷ்டம் மறந்து, உயிரைக்கொடுத்து உழைக்கும் ஒவ்வொருவருக்கும் பின் இந்த அடிப்படை தானே அமைந்திருக்கிறது..? இந்த பதிவில் நீங்கள் தாய், தந்தையற்றவர் என்ற போது என் மனதின் ஓரத்தில் ஒரு சிறு வலி ஏற்பட்டது உண்மையோ உண்மை. ஆனால், இயற்கையாக இறக்கும் பெரும்பாலான மனிதர்கள் தாய் தந்தையற்று தான் இறுதியில் இறக்கிறார்கள். ஆனால், பெற்ற தாய் தந்தை இறந்த பிறகு, இந்த உலகில் வாழும் போதே இன்னொரு பெற்றோரை உங்களை போல் பெறுபவர்கள் எத்தனை பேர் இந்த உலகில்..? இந்த பேறு பெற நாம் எதையும் தியாகம் செய்யலாமே..?!! அது மட்டுமல்லாமல், இரத்த தானம் கொடுத்த ஒரு நிகழ்வு, உங்களுக்கு பல குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒரு குடும்பத்தை தந்திருக்கிறது. உண்மையில் நீங்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்..! நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்..!!

அமரன்
06-08-2007, 10:09 AM
உங்கள் வாழ்வில் நடந்த நெகிழ்வான சம்பவங்களில் ஒன்றை தந்துள்ளீர்கள் அக்கா. வாழ்க.

lolluvathiyar
06-08-2007, 12:59 PM
கற்பனை கதை எழுத அறிவு வேண்டும், ஆனால் சொந்த அனுப்வங்களை எழுத அது வேண்டியதில்லை.
ஆனால் அதை எழுதும் போது ஏற்படும் உனர்ச்சிகள், நினைவுகளின் தாக்கங்கள் மிகவும் இன்பமயமனாது. இதை எழுதும் போது அந்த அனுபவம் உங்களுக்கு கிடைத்திருக்கும். அதை அப்படி நாங்களும் உனரும் படி அமைந்தது உங்கள் திறமை.
வாழ்த்துகள்.

aren
06-08-2007, 02:26 PM
ஆனால் அந்த பெங்காளி பையான் என்ன ஆனான் என்று சொல்லவேயில்லை. ஜொல்லு விட்டதோ சரியாகிவிட்டதா.

ஓவியா
07-08-2007, 01:48 AM
5000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் ஓவியா. எங்கே ஆளையே காணோம். பரீட்சையா. முடிஞ்சுதா. முட்டைக்கு பக்கத்துல (முன்னேயா பின்னையா) எத்தனை மார்க்கு. :natur008:

வாழ்திற்க்கு நன்றி. விமர்சனம் எங்கே!!! என் பல பதிவிற்க்கு தாங்கள் விமர்சனம போடவில்லை. போடுவதுமில்லை, அதுபோல் இதையும் விட்டு விட்டீர்களா!!


பரிட்சையின் முடிவா, பல்கலைகலகம் திறந்தவுடன் ஆராய்ச்சியின் 'வாய்வா' விற்க்கு காத்திருக்கிறேன்.
ஓவி

உண்மைச் சம்பவத்தை
நீங்கள் தொகுத்து எழுதிய
விதம் அருமையிலும் அருமை
வாழ்த்துக்கள் தோழியே

நன்றி தோழி, இருப்பினும் உங்களின் சிந்தனைக்கு நான் சிறிது தூரம்தான்.

அழகாக வடித்திருக்கிறீர்கள்.....

பாராட்டுக்களக்கா...

நன்றி தம்பி.மிக மிக நீண்ட நாட்களின் பின் ஓவியா அக்காவை மன்றத்தில் கண்டதில் பெரும் மகிழ்ச்சி.உங்கள் கருணை மனம் அடடா...எல்லோருக்கும் அந்த மனசு வரவேணும்.அழகாக சுவைபட எழுதி இருந்தீங்க.நன்றி

நன்றி நண்பா, இது கருணையல்ல சாதரணமாக அனைவருக்கும் இருக்க வேண்டிய ஒரு குணம். என் உயிர் தோழன் ஆகிசிடென்டில் பி+ ரத்தம் பற்றாக்குறையால் உயிர் விட்டான்.

ஓவியா
07-08-2007, 01:55 AM
அருமையான பதிவு ஓவியா. பாராட்டுக்கள். சில சம்பவங்களை எப்படி எழுத்தில் வடிப்பது என்பது பலருக்கும் புரியாது. சிரமத்திற்கு பின்னரே ஓரளவுக்கு தெரிந்து கொள்ள முடியும். உங்கள் எழுத்தில் அது தெரிகிறது. உங்கள் உயரிய, பரந்த மனப்பான்மைக்கு நான் தலை வணங்குகிறேன். வாழ்க! வளர்க!!

நன்றி அண்ணா. நிரைய எழுத்துப்பிழை வருவதால் தான் இப்படி ஒன்று ஒன்றாக எழுதி திருத்தி வடிக்கின்றேன், இல்லையேல் இன்னேரம் ஒரு 20சுய பதிவுகளை இங்கிட்டு மன்றத்தை ஒரு கை பார்த்திருப்பேன்.அக்கா..

பல உறவுகள் எதிர்பாராத தருணங்களில் தான் கிடைக்கிறது.. தங்கள் நல்ல உள்ளம் தங்களுக்கு விலைமதிக்க முடியாத பல நல்ல உறவுகளைத் தந்துள்ளது.

என்றும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்..


ந*ன்றி ம*தி. பெங்க*ளூர் ம*ன்ற* ம*க்க*ள் அனைவ*ரும் ஒரே டைல*க் சொல்ல*றீங்க*ளே!! ம*கிழ்ச்சி பொங்க* போகுதா!! :grin: :grin:ஒரு மிக உணர்வுபூர்வமான் நிகழ்வு ஓவி!....

ரத்ததானம் என்பது அந்த நோயாளியை மட்டும் காப்பாற்றவில்லை.. அவரை நம்பியிருக்கும் அத்தனை ஜீவன்களையும் மனதளவில் காப்பாற்றுகிறது... அருமையான கட்டுரை..


(சரி! அந்த சிங்கு பார்ட்டி என்ன ஆனார் :) :)

நன்றி ஷீ−நிஷி. ஒரு விசயம் பல ஆண்கள் ரத்ததானம் செய்ய தயங்குகின்றனர், ஏன் என்று இன்றுவரை எனக்கு புரியவில்லை!!!

ஓவியா
07-08-2007, 02:01 AM
ஓவி.... நல்ல நினைவுகளை பகிர்ந்து கொள்வதில் கிடைக்கும் சுகம் தனிதான்.....

பரம்ஸ் , ஒரு நல்ல கதை சொல்லி.... அதே போல் நீங்களும் அருமையாக சொல்லியிருப்பது சிறப்பு...
சம்பவங்களை கோர்த்திருப்பதில் சிறிது கவணம் எடுத்திருக்கலாம்... முக்கியமா அந்த வங்காளியை பற்றி தனியா ஒரு பதிவே போட்டிருந்திருக்கலாம்... இந்த பதிவோடு இனைத்தது ஒட்டவில்லை....

அந்த வங்காளி என்ன ஆனாப்புல... (தனி மடலிலாவது சொல்லவும்)

அடடே எங்கள் தங்கம் பென்சு, நாங்க வாங்க.

வங்காளியின் கதை இங்கு வந்ததற்க்கு காரணம், கதையை எங்கோ ஆரம்பித்து பின் எங்கோ முடிக்க வேண்டும் என்று எண்ணி, அன்று நடந்த சம்பவத்தை அப்படியே இணைத்தேன். அதான்.


..................................................................................................................

இதயம் அண்ணா உங்களின் பின்னூட்டத்திற்க்கு தலை வணங்குகிறேன். பிரமாதம். நன்றி.

.................................................................................................இதை எழுதிய*து நிஜ*மாவே நீங்க*தானா???
ரொம்ப* வித்தியாச*மாக* இருக்கிற*தே... ந*ன்றி, அது இதுன்னு...


ச*ரிங்க* த*ம்பி, கொஞ்ச*ம் பிண்ணூட்ட*ம் போடுங்க*ளேன் சார். ந*ன்றியில்லை.

ஓவியா
07-08-2007, 02:07 AM
உங்கள் வாழ்வில் நடந்த நெகிழ்வான சம்பவங்களில் ஒன்றை தந்துள்ளீர்கள் அக்கா. வாழ்க.

நன்றி அமர்.
கற்பனை கதை எழுத அறிவு வேண்டும், ஆனால் சொந்த அனுப்வங்களை எழுத அது வேண்டியதில்லை.
ஆனால் அதை எழுதும் போது ஏற்படும் உனர்ச்சிகள், நினைவுகளின் தாக்கங்கள் மிகவும் இன்பமயமனாது. இதை எழுதும் போது அந்த அனுபவம் உங்களுக்கு கிடைத்திருக்கும். அதை அப்படி நாங்களும் உனரும் படி அமைந்தது உங்கள் திறமை.
வாழ்த்துகள்.

நன்றி அண்ணா. எல்லாம் உங்க ஆசிர்வாதம்தான்.ஆனால் அந்த பெங்காளி பையான் என்ன ஆனான் என்று சொல்லவேயில்லை. ஜொல்லு விட்டதோ சரியாகிவிட்டதா.

கேட்ட அல்லாருக்கு மொத்தமா சொல்றேன் சாமி,

வங்காளி இப்போ வெளிநாட்டில் நன்றாக இருக்கிறானாம். காற்றில் வந்த செய்தி. நான் தான் அவருக்கு இன்றுவரை ஒரு வணக்கம் கூட சொல்லியதில்லையே, பின்னே எப்படி தெரியும்??

ஆனால், லண்டன் வருமுன் நன்கு படி பெரிய ஆளாக வாங்க என்று கண்ணால் விஸ் பண்ணினார். :grin: :grin:

ஷீ-நிசி
07-08-2007, 04:35 AM
:

நன்றி ஷீ−நிஷி. ஒரு விசயம் பல ஆண்கள் ரத்ததானம் செய்ய தயங்குகின்றனர், ஏன் என்று இன்றுவரை எனக்கு புரியவில்லை!!!


த*ய*க்கமா!! ஆண்க*ளுக்கா!! இல்லை ஓவி! எங்க*ள் அலுவ*ல*க*த்தில் வ*ருட*ந்தோறும் ல*ய*ன்ஸ் கிளப் சார்பில் இர*த்த*தான* முகாம் ந*டைபெறும்... எங்க*ள் ஊழிய*ர்க*ள் அனைவ*ருமே ஆர்வ*முட*ன் த*ருகிறோம்.. நானும் ப*ல*முறை த*ந்திருக்கிறேன்.... ஓவி!

ஓவியன்
07-08-2007, 06:35 AM
அக்கா!,

தானத்தில் சிறந்தது இரத்த தானம் என்பார்கள், உங்கள் நினைவுப் பகிர்வு என் நினைவுகளையும் கிளறி விட்டது அப்போது நான் இலங்கையில் உயர் தரம் படித்துக் கொண்டிருந்தேன் (இந்திய கல்வித் திட்டத்தின் + 2 இற்கு சமனானது). அந்தக் காலத்தில் விடுதலைப் போராளிகளுக்கும் இராணுவத்தினருக்கும் கடும் சமர் நடைபெற்றுக் கொண்டிருந்தது (இராணுவத்தின் ஒபிரேசன் ஜெய சிக்குறுக்கு எதிராக போராளிகள் போராடிக் கொண்டிருந்தனர், ஜெய சிக்குறு என்றால் சிங்களத்தில் வெற்றி நிச்சயம் என்று அர்த்தம்). எமது பகுதியில் இளைஞர்கள் முதியவர் பேதமின்றி காயப் பட்ட போராளிகளுக்காக முண்டியடித்து குருதி தானமளிப்பார்கள். குருதி பெறும் இடங்களில் கூட்டம் முண்டியடிக்கும், நான் ஒரு தடவை சென்ற போது உனது நிறைக்கு உன்னிடமிருந்து குருதி பெற முடியாது என்று திருப்பி அனுப்பி விட்டார்கள். அப்போது என்னுடன் ஒரு நண்பனிருந்தான் அவன் அடிக்கடி குருதி வழங்குவான், 90 நாள் என்றெல்லாம் பார்ப்பதில்லை மாதத்தில் இரண்டு மூன்று தடவைகள் கூட குருதி கொடுத்தவன் அவன். குருதி பெறுபவர்களிடம் 90 நாள் ஆகி விட்டது என பொய் சொல்லிக் குருதியளிப்பான். ஓர் நாள் நான் அவனிடம் கேட்டேன் ஏன் இப்படி என்று.....?

அதற்கு அவன் டேய் உனக்குத் தெரியும் தானே எனது அண்ணா ஒரு போராளி, போராட்டத்தில் ஒரு அதிரடி அணியின் தளபதியான அவருக்கு உடலில் காயம் படாத இடங்களே இல்லை எனலாம், ஒவ்வொரு முறை அவர் காயப் படுகையிலும் யாரோ ஒருவர் கொடுத்த குருதி தானே அவரைக் காப்பாற்றுகிறது, என்னால் என் அண்ணனுக்குத் தான் குருதி கொடுக்க முடியவில்லை ஆனால் அண்ணனைப் போன்ற இவர்களுக்குக் கொடுக்கும் போது எனக்கு என் அண்ணாவிற்கே குருதி கொடுத்த நிம்மதி!, எனக் கண் கலங்கினான். எனக்குப் பேச வார்த்தைகளே வரவில்லை.

இது நடந்து ஒரு வாரத்துக்குள் முன்ணணி போர் அரங்கில் அந்த நண்பனின் சகோதரன் வீரச் சாவடைய, எனக்கு என் நண்பனைத் தேற்ற வார்த்தைகள் கிடைக்கவில்லை. ஆனால் தொடர்ந்து அவன் தீவிரமாக குருதித் தானத்தில் ஈடு பட்டுக் கொண்டிருக்கிறான், தன் அண்ணனுக்கு குருதி கொடுக்கும் மன நிறைவிலே.....

அன்புரசிகன்
07-08-2007, 06:45 AM
குருதியை அடிக்கடி தானம் செய்வது அவரின் உடல் நலத்திற்கு பங்கம் விழைவிக்கும். ஆனால் அந்த குருதியைப்பெறுபவருக்கு ஏதாவது நிகழுமா?

தெரிந்தவர்கள் கூறுங்கள்...

ஓவியன்
07-08-2007, 06:49 AM
குருதியைப் பெறுபவருக்கு எந்த பிரச்சினையும் வராது என நம்புகிறேன், என்றாலும் இளசு அண்ணா வந்தால் இன்னமும் தெளிவாகும்.....

இதயம்
07-08-2007, 07:15 AM
குருதியை அடிக்கடி தானம் செய்வது அவரின் உடல் நலத்திற்கு பங்கம் விழைவிக்கும். ஆனால் அந்த குருதியைப்பெறுபவருக்கு ஏதாவது நிகழுமா?

தெரிந்தவர்கள் கூறுங்கள்...

இரத்த தானம் அடிக்கடி செய்வது நிச்சயம் உடலுக்கு பங்கம் விளைவிக்கும். அதனால் தான் நீங்கள் இரத்த தானம் செய்யப்போகும் போது "இறுதியாக எப்போது தானம் செய்தீர்கள்..?" என்ற கேள்வி வரும். குறிப்பிட்ட கால இடைவெளிக்கு குறைவாக இருந்தால் நீங்கள் தானம் செய்வதிலிருந்து நிராகரிக்கப்படுவீர்கள்.

இரத்தம் பெறுபவர் தனக்கு பொருத்தமான இரத்த வகை கிடைக்கும் பட்சத்தில் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை.

அன்புரசிகன்
07-08-2007, 07:20 AM
பல கேள்விகள் கேட்ப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்...

தகவலுக்கு நன்றி இதயமே...

இதயம்
07-08-2007, 07:20 AM
நன்றி ஷீ−நிஷி. ஒரு விசயம் பல ஆண்கள் ரத்ததானம் செய்ய தயங்குகின்றனர், ஏன் என்று இன்றுவரை எனக்கு புரியவில்லை!!!
இந்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. இரத்த தானத்தில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் ஆண்கள் தான். அதற்கான வாய்ப்பும் ஆண்களுக்கு தான் அதிகம் கிடைக்கிறது. உலகெங்கும் நடைபெறும் இரத்த தான முகாம்களில் தானாக சென்று தானம் செய்பவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருக்கிறார்கள். நான் பல முறை இரத்த தானம் செய்திருக்கிறேன். ஆனால், என் மனைவி இதுவரை ஒரு முறை கூட செய்யவில்லை. காரணம், அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

உங்களின் இந்த குற்றச்சாட்டை "ஒடுக்கப்பட்ட ஆண்கள் நலச்சங்கத்தின் உறுப்பினர்" என்ற முறையில் வன்மையாக கண்டிக்கிறேன்..!!

ஆதவா
07-08-2007, 07:35 AM
சில நேரங்களில் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கும் நீங்கள் அழவும் வைக்கிறீர்கள்.

உறவுகள் ரத்தத்தால் உருவாக்கப்படுகின்றன என்பது உங்கள் அனுபவத்தில் தெரிகிறது. மிரட்சி கண்டு போய் கண்கள் படித்த கவிதைகள் பலவுண்டு. அனுபவங்களில் இதுவொன்றே. மாளாத வாழ்வு வேண்டுமென்று கேட்டுத் தொலையும் எத்தனையோ மனங்களுக்கிடையே இது என்ன உறவோ என்று பாசக்குழப்பத்தைத் தேடிக்கொண்டிருக்கும் பெண்ணின் அனுபவம் படிப்பதும் இதுவே முதல்.


தானம் என்றாலே நாடி அதிரும் பலருக்கிடையே ஓடிப்போய் உதவும் உங்களை, சகோதரி என்றழைக்க தவமிருந்திருக்கவேண்டும். தானத்திலோர் சிறந்த தானம் அன்னதானம் என்பார்கள். வயிறுக்குத் தீர்வு அன்னம், உயிருக்குத் தீர்வு தானத்தில் இரத்தம். வாழும் இந்த சொற்ப நாட்களுக்குள் திருப்தி பட ஏதும் செய்ய நினைத்தால், தானத்திற்கு தனமில்லையேல் தாராளமாய் இரத்தம் கொடுக்கலாம்.. கொடுக்க முன்வரவேண்டும்... கொடுக்கவேண்டும்.
சில கடைகளில் (மருந்தகம்) விற்பனை செய்யப்படுகின்றன சிலவகை ரத்தங்கள். தானம் என்ற பெயரில் மனிதாபிமானம் இல்லாமல் வானும் இடிந்துவிழுமளவு விலை நிர்ணயித்து விற்பனை செய்வதை நானும் கண்டிருக்கிறேன்.

கதையில் மிகப்பெரும் ஓட்டை எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிவது. காதல் கதையோ என்று நினைவுக்குக் கொண்டு வந்து திடீரென்று உணர்வுகளைக் கொட்டி கண்களில் திரவம் ஒழுக வைக்கிறீர்கள். காட்சிகளை மனதுக்குள் கொண்டுவரமுடிகிறது. பஜனை போய் பாடுவதாக இருப்பின் உங்கள் குரல் தெளிவாக அழகாகவும், பாடும்போது பாடல் வரிகள் உடையாமலும் இருக்கும் என்று அறிகிறேன். திறமைகள் வெளியேறுகிறது நண்டின் பிரசவம்போலவே..

xy வகையில் இரத்தம் இருக்கிறதா என்ன? :D

நான் இதுவரை நான்கு முறைகள் மட்டுமே ரத்தம் கொடுத்துள்ளேன். அதில் இரண்டு முறை சிறு குழந்தைக்காக. எனது வகையினரை 'யாருக்கும் கொடுக்கும் தாராளமனமுடையவர்' என்று அடைமொழியாக அழைப்பார்கள். தானம் என்ற பெயரில் கூத்தடிக்கும் குழுவினர் ஒருவரிடம் மாட்டிக் கொண்டு ஒருமுறை இரத்தம் கொடுத்ததுண்டு. யாருமே திரும்பிப் பார்த்ததில்லை. நானும் எதிர்பார்த்ததில்லை. ஆனால் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் ரத்தம் கொடுங்கள் என்று யாரும் கேட்டதில்லை. நானும் வரிந்துகட்டிக் கொண்டு கொடுத்ததுமில்லை. அதற்காக கவலைப்பட்டதுமில்லை.

இரத்த தானத்தால் புதிய உறவுகள் இட்ட முடிச்சுக்களோடு வாழ்ந்துகொண்டிருக்க உங்களைப் போன்ற சிலருக்கு நிச்சயம் தேவை. என் தனிப்பட்ட கருத்து இது.

பெற்றால்தான் தந்தையர் தாயாரோ? பெறுவது மனித கடமை, நல்லபடியாய் வளருவது அவரவர் கடமை. ஒரு தாயின் வயிற்றில் பிறக்காவிடினும் பாசம் என்ற மருந்துபோதுமே காயம் ஆற. தாயில்லை என்ற சோகம் தீர. அந்த வகையில் உங்கள் அன்னையருக்கு இணையாக அந்த பெண்மணியையும் உங்கள் தந்தையருக்கு நிகராக அந்த பெரியவரையும் நினைத்துக் கொள்ளூங்கள்.. இரத்தம் பாசம் இதிலும் உண்டல்லவா?

இதயத்தின் விமர்சனமும் ஓவியனும் அனுபவமும் கதைக்கு பலம் சேர்க்கின்றன.

வாழ்த்துக்கள் பஜனை கோயில் ஓவியா அக்கா.

மீனாகுமார்
07-08-2007, 01:30 PM
நல்ல வர்ணனையோடு கூடிய சம்பவம். மிகவும் ரசித்தேன். ஆனாலும் நெஞ்சை நெகிழ வைத்து விட்டது. மலேசியாவில் மாமாக் கடையில் அமர்ந்து எனக்கு எப்பவும் பிடித்த சாய் மில்க் Soya Milk குடித்ததை ஞாபகப் படுத்தி விட்டது....

தொடர்க உங்கள் சேவை...

aren
07-08-2007, 04:12 PM
மாமாக் கடையில் பெஞ்சில் உட்கார்ந்து ரோட்டி சென்னையையும், தே ஆலியாவையும் குடித்து நண்பர்களின் அரட்டையும் சேர்ந்துவிட்டால், கேட்கவே வேண்டாம்.

gayathri.jagannathan
08-08-2007, 11:16 AM
இதத் தான் இரத்த பந்தம்னு சொல்வாங்களோ? (ச்சும்மா...)
உன்னதமான உணர்வுப்பூர்வமான* பதிவு... வாழ்த்துக்கள் ஓவியா...
சில நேரங்களில் இந்த மாதிரி அனுபவங்களைப் பதிவு செய்யும் போது... நம்ம உணர்ச்சி வேகத்துக்கு தட்டச்சு செய்ய முடியாம போயிடும்... அப்போ அந்தப் பதிவு வெறும் சம்பவங்களின் தொகுப்பாகத்தான் அமையும்...
அப்படியில்லாம... அந்த நேரத்திய உணர்வுகளை, உங்கள் நடையின் மூலம் வாசிப்பாளர்களையும் உணரச் செய்து விட்டீர்கள்....வாழ்த்துக்கள் ஓவியா...

ஓவியா
09-08-2007, 05:48 AM
ஓவியனின் பதிவு மனதை நேகிழச்செய்கிறது. அனுதாபங்களுடன், நன்றி தம்பி.

................................................

ஆதவா உங்கள் விமர்சந்திற்க்கு மிக்க நன்றி. அற்ப்புதம்.

ஒரு விசயம் இது கதையல்ல, இது ஒரு உண்மை சம்பவம். எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிக்க வேண்டும் என்ற என்னத்தில்தான் அன்று நடந்த அனைத்து சம்பவங்களையும் அப்படியே எழுதினேன், அதற்க்கு தகுந்தாற்போலதான் 'என்ன உறவோ;' என்று பெயரும் வைத்தேன்....உங்களின் அனுபவத்தியும் விமர்சிக்கலாமே!!!

............................................................................................

நான் முற்றிலும் எதிர்ப்பாராத* ஒரு விம*ர்ச*ன*ம் உங்க*ள*து. ந*ன்றி மீனாக்குமார் அண்ணா.


......................................................................................

ஆரேன் ஆண்ணாவும், மீனா அண்ணாவும் இப்ப*வே தே அலியாவிற்க்கு ரெடியா!!!! ஹி ந*ல்ல*து,


..............................................................

நன்றி காயத்திரி.

ஓவியா
09-08-2007, 05:53 AM
ஓவியன், அன்பு மற்றும் இதயத்தின் கேள்வி பதிலுக்கு டாகடர் இளசு தயவுகூர்ந்து பதிலளிக்க மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

ஓவியா
09-08-2007, 07:05 AM
என் பதிவிற்க்கு எழுத்துப்பிழை திருத்தம் செய்து வழங்கிய தமிழ் சேவையாளர்,
தமிழடிமை ஆதவாவிற்க்கு என் மனமார்ந்த நன்றிகள்.

ஓவியா
14-09-2007, 03:19 AM
மீண்டும் ஒரு முறை

இளசு அவர்களை பணிவன்புடன் நேரம் இருக்கும் பொழுது விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.

பிச்சி
15-09-2007, 12:21 PM
அக்கா, மீண்டும் வந்துவிட்டீர்களா.. பேரின்பம்.... கலக்குங்க அக்கா

பொலிவுடன்
பிச்சி

க.கமலக்கண்ணன்
15-09-2007, 04:03 PM
அன்பு தங்கை ஓவியா மீண்டும் களத்தில் இறங்கியதற்கு நன்றி

அனைவருக்கும் ரத்ததானம் கொடுப்பதால் நமக்கு ஒன்றும் தீமையில்லை

அதை ஏற்றபவர்களுக்கும் தீமையில்லை. ஏன்றும் முன்னர் நன்றாக பரிசோதனை செய்தபின்பே

அந்த ரத்தத்தை குளர்சாதன அறையில் பாதுகாக்கிறார்கள். எனவே பயப்பட தேவையில்லை. எனக்கு

அற்புதமான O+ வகை ரத்தம் அதனால் இது வரை 36 முறை ரத்ததானம் கொடுத்திருக்கிறேன். ஒரு முறை

அந்த மருத்துவமணையில் எனது நண்பனை பார்த்து விட்டு திரும்பினேன். அப்போது 22 வயது என்று என்று நினைக்கிறேன்.

அப்போது ஒரு இளம் பெண் (28வயது இருக்கலாம்) கதறி கதறி

அழுது கொண்டிருந்தாள். என்வென்று விசாரித்த போது O+ ரத்தம் வேண்டுமாம், அறுவை சிகிசை செய்து

அவர்களுடைய கணவர் பிழைக்க, நான் உடனே மருத்துவரை

அணுகி ரத்தம் எடுத்துக் கொள்ளுமாறு சொல்லி ரத்தத்தை அளித்து விட்டு திரும்பினேன்.

அதன்பின் அந்த நிகழ்ச்சியை மற்தே போய்விட்டேன். கிட்டதட்ட 3 மாதம் கழித்து, நான்

அலுவலகத்தில் பணியில் இருந்தபோது எனது உதவியாளர் வந்து யாரோ ஒரு கணவனும் மனைவியும் வந்திருக்கிறார்கள் என்றார்.

அவசரபணியை முடித்து விட்டு வந்து விருந்தினர்

அறையில் வந்து பார்த்தபோது அந்த ஓடி வந்து என் காலில் விழுந்து உங்களால் தான் நாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்றார்.

அவருடைய கணவனும் விழுந்து விட எனக்கு தர்மசங்கடமாகி போனது(என்னைவிட வயதில் பெரியவர்

அந்த பெண்) எதற்கு என் காலில் விழுறீங்க யார் நீங்க என்றேன்.

அதற்கு அப்பெண் ஒரு முறை உங்கள் நண்பனை பார்க்க ------------ மருத்துவ மணைக்கு வந்த போது ஒருவருக்கு ரத்த கொடுத்தீங்களே

அது இவருக்குதான், உங்களின் உதவிக்கு நன்றி என்று வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியாது

அதனால் காலில் விழுந்தேன், உங்களை எங்கள் வாழ்நாள்முழுவதும் மறக்க மட்டோ ம், என்றார்.

அந்த மாதிரி நல்ல உள்ளங்களால் தான் நான் இன்னும் நலமா இருக்கிறேன் என்று நம்புகிறேன்.

அன்புடையோர்களே, இயன்றவரை அன்னதானம், இருக்கும் வரை ரத்ததானம், இறந்த பின் கண்தானம் செய்யுங்கள்....

பூமகள்
16-09-2007, 02:22 PM
ஓவி அக்கா...
உங்கலோடு கற்பனையில் நிகழ்வுகளோடு பயணித்த உணர்வு... இனிய அனுபவமாய் அமைந்தது உங்களின் இயல்பான வரிகளின் நடை.:icon_b:
உங்களின் மேல் மிகுந்த அன்பை இந்த படைப்பு ஏற்படுத்திவிட்டது. ஓவி அக்காவிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.
இன்னும் கொடுங்கள் சகோதரி. என் கண்களும் பனித்தன உங்களை அந்த அங்கிள் அம்மா என்று அழைத்ததும்....

பாராட்டுக்கள் அக்கா.:icon_rollout:

அகர வரிசையில் வாழ்வின் அர்த்தம் சொன்ன கமல் அண்ணாவிற்கு நன்றிகள்.

ஜெயாஸ்தா
17-09-2007, 04:07 PM
ஓவியாவின் சொந்தக்கதை படித்து நெகிழ்ந்து போயிருந்த நான் ஓவியன் எழுதியிருந்த விசயத்தை பார்த்து கண்கலங்கிவிட்டேன். அதை முடித்து நண்பர் கமலக்கண்ணின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சியும்உள்ளத்தை நெகிழ வைத்தது. ஏதேது... இந்த திரிக்கு வந்தால் கண்கலங்காமல் போகவிடமாட்டீர்களோ?

மனோஜ்
17-09-2007, 08:09 PM
ஓவியா அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவம அருமை உண்மை என்றும் இனிக்கும்
இரத்ததானம் பற்றிய அனைவரது அலசல் அனுபவங்களும் அருமை இதுவரை நான் கொடுத்ததில்லை இனி கொடுக்க தீர்மானித்தேன் நன்றி அனைவருக்கும்

இளசு
17-09-2007, 08:38 PM
அனைவரும் மன்னிக்கவேண்டும்...

இப்பதிவுக்கு பின்னூட்டம் இதுவரை இடாமைக்கு..

முன்னர்போல் எல்லா பதிவுகளையும் படித்துப் பின்னூட்டம் தர இப்போதெல்லாம் என்னால் இயலவில்லை..

பணிப்பளு, நேரக்குறைவு ஒரு பக்கம்..
தினம் பெருகும் மன்றப்பதிவுகள் மறுபக்கம்..
இடவெளி அதிகரிப்பது இயல்புதானே?ஓவியாவின் நவரசங்கள் ததும்பும் சுவையான பதிவு..

பாரதி, காயத்ரி, சிவா, இதயம் - மிக நறுக்காக இந்தப்பதிவை விமர்சித்துவிட்டார்கள்.. அதை அப்படியே வழிமொழிகிறேன்..

வாழ்த்துகள் ஓவியா!


மீண்டும் ஒரு முறை

இளசு அவர்களை பணிவன்புடன் நேரம் இருக்கும் பொழுது விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6502
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6643

இனியவன் தந்த மேற்கண்ட இரு பதிவுகளில்
இதற்கான விளக்கங்கள் இருக்கின்றன..

முன்னர் திஸ்கியில் இதைப்பற்றி நானும் எழுதியதாய் நினைவு..

சுருக்கமாக -

1)தக்க ஆலோசனைப்படி குருதி தானம் செய்வதில் ஆபத்து ஏதுமில்லை!

2) அவசியம்..மிக..மிக.. என்றால் மட்டுமே நோயாளிக்குக் குருதி ஏற்ற வேண்டும்.

3)நல்ல தரமான சோதனைச்சாலை - நோயாளிக்குப் பின்னாளில் தொல்லை தரும் குருதி ஏற்றப்படுவதைத் தடுக்கும்..
4) 1970களில் நல்ல ரத்தம் என எண்ணி ஏற்றப்பட்டதில் சிலருக்கு
ஹெப்பட்டைடிஸ் சி வந்தது -பின்னாளில்..

1960களில் எயிட்ஸ் என்றால் என்னவென்றே தெரியாது...

எனவே இன்று நாம் அறியாத நோய்கள் நாளை அறியவரலாம்..

எனவே - மீண்டும் 2 - படிக்க!

ஓவியா
26-11-2007, 05:55 PM
பணிப்பளுவிலும் அருமையாக பதிலளித்தமைக்கு அடியேனின் நன்றிகள் டாக்டர் ஐயா.

தாமரை
24-07-2008, 01:10 PM
பெருமையா இருக்கு ஓவியா!

மதுரை மைந்தன்
24-07-2008, 02:53 PM
அன்பு ஓவியா

உங்களது உண்மைக் கதை உண்மையிலேயே என்னைக் கவர்ந்து விட்டது. நான் அந்த வங்காளிப் பையனாக இருந்திருக்கக் கூடாதா என்று ஜொள்ளு விட வைத்து விட்டீர்கள். பாராட்டுக்கள்.

poornima
24-07-2008, 03:26 PM
மற்றவர்க்கு உதவி செய்வதற்கு அதுவும் காலத்தினால் செய்த உதவிக்கு இன்னமும் அதிமுக்கிய நேரத்தில் உதவி செய்ய நேர்ந்தமைக்கு - அதற்கு ஒரு வாய்ப்பு தந்தமைக்கு இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

ஆசீர்வதற்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இத்தகைய்ய வாய்ப்புகள் அமையும் அம்மா அடிக்கடி சொல்வது நினைவுக்கு வருகிறது..

அதையும் ஒரு பதிவாக்கிய விதத்தில் உங்கள் எழுத்துவீச்சும் தெரிகிறது.

mukilan
24-07-2008, 03:36 PM
இப்படியெல்லாம் யாராவது மேலெழுப்பினால்தான் சில முத்துக்களைக் கண்டு கொள்ள முடிகிறது.

ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்த தாமரை'ச்'செல்வருக்கு நன்றி!

நம் சொந்தங்களின் பின்னூட்டங்களை வழி மொழிகிறேன்.

செல்வரின் பெருமிதத்திலும் பங்கு கொள்கிறேன்.

நல்ல மனம் வாழ்க!

சூரியன்
24-07-2008, 03:44 PM
படிக்கும் போதே புல்லரிக்கின்றது ஓவியா அக்கா.
யு ரியலீ கிரேட்.

அறிஞர்
24-07-2008, 03:48 PM
புது உறவுகளை உருவாக்கும் நல்ல செயல்...
இன்னும் பல உருவாகட்டும்....
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.. ஓவியா..

தீபன்
25-07-2008, 06:44 AM
ஓவியத்தை இன்னொரு கோணத்தில் புரிந்துகொள்ள உதவும் ஓவியம்... பாராட்டுக்கள் ஓவியா.
(மதுரை வீரரெ... இது கொஞ்சம் ஓவர் ஜொள்ளுங்கோ...)

meera
25-07-2008, 08:48 AM
ஓவி, இந்த பதிவை நான் இன்றே கண்டேன்.அருமையான பதிவு + உறவு.ஓர் உயிர் காத்த விதம்:icon_b: :icon_b:என்றும் என்னுல் பெருமை என் தோழியை நினைத்து.

நானும் B.Sc படிக்கும் போது என்னோட நண்பிகள் சிலர் ரத்ததானம் செய்யும் சேவை அமைப்பில் சேரசென்றோம். அவர்களை சேர்த்துக்கொண்டு என்னை மட்டும் விரட்டிவிட்டுவிட்டார்கள்.

காரணம் நான் ரொம்ப குண்டுனு சொல்லிட்டாங்க. :traurig001::traurig001:

தீபா
25-07-2008, 09:29 AM
காரணம் நான் ரொம்ப குண்டுனு சொல்லிட்டாங்க. :traurig001::traurig001:


குண்டாக இருந்தால் எடுக்கமாட்டார்களா? யார் சொன்னார்கள்? நீங்கள் எங்கள் ஊருக்கு வாருங்கள் குடம் குடமாக எடுக்க ஆவன செய்கிறோம். :D

meera
25-07-2008, 09:40 AM
குண்டாக இருந்தால் எடுக்கமாட்டார்களா? யார் சொன்னார்கள்? நீங்கள் எங்கள் ஊருக்கு வாருங்கள் குடம் குடமாக எடுக்க ஆவன செய்கிறோம். :D

ஹி ஹி வரேனே.ஆனா என்னை பார்த்துட்டு நீங்களும் விரட்டக்கூடாது சரியா??:aetsch013::aetsch013:

ஓவியா
28-07-2008, 01:54 PM
பெருமையா இருக்கு ஓவியா!

:D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D ந :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D ன் :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D றி :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D அண்ணா. :D:D:D

ஓவியா
28-07-2008, 02:00 PM
அன்பு ஓவியா

உங்களது உண்மைக் கதை உண்மையிலேயே என்னைக் கவர்ந்து விட்டது. நான் அந்த வங்காளிப் பையனாக இருந்திருக்கக் கூடாதா என்று ஜொள்ளு விட வைத்து விட்டீர்கள். பாராட்டுக்கள்.

அடடே :lachen001::lachen001:

பின்னூட்டத்திற்க்கு நன்றியண்ணா. :)மற்றவர்க்கு உதவி செய்வதற்கு அதுவும் காலத்தினால் செய்த உதவிக்கு இன்னமும் அதிமுக்கிய நேரத்தில் உதவி செய்ய நேர்ந்தமைக்கு - அதற்கு ஒரு வாய்ப்பு தந்தமைக்கு இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

ஆசீர்வதற்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இத்தகைய்ய வாய்ப்புகள் அமையும் அம்மா அடிக்கடி சொல்வது நினைவுக்கு வருகிறது..

அதையும் ஒரு பதிவாக்கிய விதத்தில் உங்கள் எழுத்துவீச்சும் தெரிகிறது.

இறைவனுக்குதான் பதிவின் கடைசி வரியில் நன்றிசொல்லியுள்ளேனே!!! :)

உங்கள் பாராட்டிற்க்கு நன்றி தோழி.இப்படியெல்லாம் யாராவது மேலெழுப்பினால்தான் சில முத்துக்களைக் கண்டு கொள்ள முடிகிறது.

ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்த தாமரை'ச்'செல்வருக்கு நன்றி!

நம் சொந்தங்களின் பின்னூட்டங்களை வழி மொழிகிறேன்.

செல்வரின் பெருமிதத்திலும் பங்கு கொள்கிறேன்.

நல்ல மனம் வாழ்க!

எல்லாருக்கும் சொந்தமா பின்னூட்டம் போடுவீங்க, எனக்கு மட்டும் வழிமொழிவீங்க :cool:. அப்படிதானே நண்பா.

பாராட்டிற்க்கும் வாழ்த்தியதற்க்கும் நன்றிகள் கோடி.

ஓவியா
28-07-2008, 02:05 PM
படிக்கும் போதே புல்லரிக்கின்றது ஓவியா அக்கா.
யு ரியலீ கிரேட்.

ஓ அப்படியா கதை, :lachen001: ரொம்ப நன்றி சூரியன்.


புது உறவுகளை உருவாக்கும் நல்ல செயல்...
இன்னும் பல உருவாகட்டும்....
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.. ஓவியா..

உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் சார். நன்றிகள்.


ஓவியத்தை இன்னொரு கோணத்தில் புரிந்துகொள்ள உதவும் ஓவியம்... பாராட்டுக்கள் ஓவியா.
(மதுரை வீரரெ... இது கொஞ்சம் ஓவர் ஜொள்ளுங்கோ...)

நன்றி தீபன், எழுத்துலகில் சிறக்க வேண்டும் என்ற ஆசையிருந்தாலும், பள்ளிப்பருவம் மலாய் மொழியில், பல்கலைகலகம் ஆங்கிலத்தில், இப்படி வேற்று மொழியிலே படித்து வளர்ந்ததால் தமிழ் மொழியில் எழுத சிரமம் கொள்கிறேன், அதனால் அப்படியே தயக்கம் என் திறமையை கொன்றுவிடுகிறது. :)

தீபா
28-07-2008, 02:10 PM
:D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D ந :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D ன் :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D றி :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D :D:D:D:D:D:D:D அண்ணா. :D:D:D


நல்லா சிரிக்கிறீங்க தோழி. :D அதெல்லாம் சரிதாங்க... நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டதில உள்குத்து இருக்குன்னு புலனாய்வு சொல்லுதே!!! உண்மையா? :cool:

ஓவியா
28-07-2008, 02:12 PM
ஓவி, இந்த பதிவை நான் இன்றே கண்டேன்.அருமையான பதிவு + உறவு.ஓர் உயிர் காத்த விதம்:icon_b: :icon_b:என்றும் என்னுல் பெருமை என் தோழியை நினைத்து.

நானும் B.Sc படிக்கும் போது என்னோட நண்பிகள் சிலர் ரத்ததானம் செய்யும் சேவை அமைப்பில் சேரசென்றோம். அவர்களை சேர்த்துக்கொண்டு என்னை மட்டும் விரட்டிவிட்டுவிட்டார்கள்.

காரணம் நான் ரொம்ப குண்டுனு சொல்லிட்டாங்க. :traurig001::traurig001:


அஹஹஹ் அன்புத்தொழியே, பின்னூட்டத்தில் நெகிழ்ந்தேன்.

ஆமாமா உங்க வேய்ட்டுக்கு உங்கள பிழிந்து ஒருகிலாஸ் ஜூசுகூட எடுக்க முடியாது :lachen001:
குண்டாக இருந்தால் எடுக்கமாட்டார்களா? யார் சொன்னார்கள்? நீங்கள் எங்கள் ஊருக்கு வாருங்கள் குடம் குடமாக எடுக்க ஆவன செய்கிறோம். :D
:lachen001::lachen001::lachen001:ஹி ஹி வரேனே.ஆனா என்னை பார்த்துட்டு நீங்களும் விரட்டக்கூடாது சரியா??:aetsch013::aetsch013:

:lachen001::lachen001::lachen001:

mukilan
28-07-2008, 02:13 PM
எல்லாருக்கும் சொந்தமா பின்னூட்டம் போடுவீங்க, எனக்கு மட்டும் வழிமொழிவீங்க :cool:. அப்படிதானே நண்பா.

பாராட்டிற்க்கும் வாழ்த்தியதற்க்கும் நன்றிகள் கோடி.

அச்சச்சோ! கோபம் கொள்ளாதீர்கள் அன்பு தாதா:fragend005:. நான் இந்த பதிவைக் கண்டது இப்பொழுதுதான். ஏற்கனவே நம் நண்பர்கள் நான் கூறவேண்டிய அனைத்தையுமே கூறிவிட்டார்கள். அதனால்தான். இனி பதிவிடுவதற்கு முன் எனக்கு மட்டும் சொல்லிடுங்க. வலைப்பதிவினர் சொல்வது போல "மீ த ஃபர்ஸ்ட்டு" சொல்லிட்டு அப்புறமா வந்து பின்னூட்டத்தை மாத்திடறேன்:icon_b:

ஓவியா
28-07-2008, 02:16 PM
ஹெய் முகி, சும்மா சொன்னேன்.

இளசு போற்றும் எழுத்து உங்களது, அதில் நீங்கள் எங்களுக்கு ஒரு வார்த்தை சொன்னாலும், தெ பெஸ்ட் என்று நான்/நாங்கள் எடுத்துக்கொள்வோம்.

மன்மதன்
28-07-2008, 03:16 PM
ஓவியின் இன்னொரு பக்கத்தை படிக்க முடிந்தது..

இந்தப்பதிவில்தான் எத்தனை
வாழ்க்கை பாடங்கள்...எத்தனை
உணர்ச்சிகள்..

தாமதமாக படிக்க நேர்ந்தாலும்
படித்து முடித்தத்ம் 'நல்லவேளை இந்தப்பதிவை
மிஸ் பண்ணிடவில்லை' என்ற திருப்தி வந்தது..

இளமை ஊஞ்சலாடியதில்
ஆரம்பித்து - ரத்த பாசத்தில்
முடிச்சிருக்கீங்க..

நீண்ட பதிவாக இருந்தாலும்..நீங்க பேசுவதை
கேட்பது போல்தான் இருக்கு எழுத்து நடையும்..

நீங்க நல்லாயிருக்கணும் தாயி..!!

மன்மதன்
28-07-2008, 03:17 PM
இது முற்றிலும் என் வாழ்வில் நடந்த ஓரு உண்மை சம்பாவம்.

அந்த வங்காளி பையன் தான் பாவம்..
அப்புறம் என்ன ஆச்சுன்னு சொல்லவே இல்லையே..:rolleyes:

மன்மதன்
28-07-2008, 03:22 PM
மாமாக் கடையில் பெஞ்சில் உட்கார்ந்து ரோட்டி சென்னையையும், தே ஆலியாவையும் குடித்து நண்பர்களின் அரட்டையும் சேர்ந்துவிட்டால், கேட்கவே வேண்டாம்.

ரொட்டி சன்னாவைத்தான் சொல்றீங்க இல்லே..
இல்லை சென்னைனு புது அயிட்டம் இருக்கா என்ன??

ஹோட்டலை சுற்றிலும் சின்ன சின்ன ஸ்டால்களாக போட்டிருப்பார்கள்.. நான் மலேசியா வந்த போது ஒரு ஸ்டாலில்(THAI) ஏதோ சூப் இருந்தது. நான் குடிக்கலாம் என்றேன். என் நண்பன் அது 'தவளை' சூப்' என்று சொன்னதும்,, நான் அந்தப்பக்கம் திரும்பி கூட பாக்கல..;)

மன்மதன்
28-07-2008, 03:22 PM
ஓவி,
காரணம் நான் ரொம்ப குண்டுனு சொல்லிட்டாங்க. :traurig001::traurig001:ஆமாமா உங்க வேய்ட்டுக்கு உங்கள பிழிந்து ஒருகிலாஸ் ஜூசுகூட எடுக்க முடியாது :lachen001:

வெயிட் ஜோக்கு இது..:lachen001:

ஓவியா
28-07-2008, 03:26 PM
நல்லா சிரிக்கிறீங்க தோழி. :D அதெல்லாம் சரிதாங்க... நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டதில உள்குத்து இருக்குன்னு புலனாய்வு சொல்லுதே!!! உண்மையா? :cool:

அப்படிதான். உள்குத்து இருக்குலே, சிரித்தே கொல்வது. :lachen001:
ஓவியின் இன்னொரு பக்கத்தை படிக்க முடிந்தது..

இந்தப்பதிவில்தான் எத்தனை
வாழ்க்கை பாடங்கள்...எத்தனை
உணர்ச்சிகள்..

தாமதமாக படிக்க நேர்ந்தாலும்
படித்து முடித்தத்ம் 'நல்லவேளை இந்தப்பதிவை
மிஸ் பண்ணிடவில்லை' என்ற திருப்தி வந்தது..

இளமை ஊஞ்சலாடியதில்
ஆரம்பித்து - ரத்த பாசத்தில்
முடிச்சிருக்கீங்க..

நீண்ட பதிவாக இருந்தாலும்..நீங்க பேசுவதை
கேட்பது போல்தான் இருக்கு எழுத்து நடையும்..

நீங்க நல்லாயிருக்கணும் தாயி..!!

நீங்கள் வஞ்சனையில்லாமல் பாராட்டுபவர் என்பதை இங்கு சுட்டிக்காட்டி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டீர்க்கள். மிக்க நன்றி மன்மு.

ஓவியா
28-07-2008, 03:31 PM
அந்த வங்காளி பையன் தான் பாவம்..
அப்புறம் என்ன ஆச்சுன்னு சொல்லவே இல்லையே..:rolleyes:

ம்ம்ம் இருக்கான், அப்படியே. ;) பார்த்து 4 வருடங்கள் ஆகிவிட்டன. :)ரொட்டி சன்னாவைத்தான் சொல்றீங்க இல்லே..
இல்லை சென்னைனு புது அயிட்டம் இருக்கா என்ன??

ஹோட்டலை சுற்றிலும் சின்ன சின்ன ஸ்டால்களாக போட்டிருப்பார்கள்.. நான் மலேசியா வந்த போது ஒரு ஸ்டாலில்(THAI) ஏதோ சூப் இருந்தது. நான் குடிக்கலாம் என்றேன். என் நண்பன் அது 'தவளை' சூப்' என்று சொன்னதும்,, நான் அந்தப்பக்கம் திரும்பி கூட பாக்கல..;)

ஆமாம் ரொட்டி சானாய்தான், ஆனாலும் தவளை சூப்பெல்லாம் பகிரங்கமாக விற்க்க மாட்டார்களே!!! கொஞ்சம் அதிர்ச்சியா இருக்குலே :)வெயிட் ஜோக்கு இது..:lachen001:

வெய்ட்டான பார்ட்டிக்கு வெய்ட்டாதான் பதில் போடனும். :)

மன்மதன்
28-07-2008, 03:43 PM
ம்ம்ம் இருக்கான், அப்படியே. ;) பார்த்து 4 வருடங்கள் ஆகிவிட்டன.

"4 வருடங்கள் ஆகிவிட்டன... இருக்கான் அப்படியே.." எப்படி..:smilie_abcfra::rolleyes:ஆமாம் ரொட்டி சானாய்தான், ஆனாலும் தவளை சூப்பெல்லாம் பகிரங்கமாக விற்க்க மாட்டார்களே!!! கொஞ்சம் அதிர்ச்சியா இருக்குலே

ஒருவேளை என் நண்பன் பொய் சொல்லி இருப்பானோ.. மனோ.ஜி அண்ணாவை கேட்டாத்தான் தெரியும்..:)வெய்ட்டான பார்ட்டிக்கு வெய்ட்டாதான் பதில் போடனும். :)
ஆஹா.. ஆனா இப்ப பொருந்துமோ என்னவோ..:rolleyes::D

ஓவியா
28-07-2008, 03:47 PM
"4 வருடங்கள் ஆகிவிட்டன... இருக்கான் அப்படியே.." எப்படி..:smilie_abcfra::rolleyes:
ஒருவேளை என் நண்பன் பொய் சொல்லி இருப்பானோ.. மனோ.ஜி அண்ணாவை கேட்டாத்தான் தெரியும்..:)ஆஹா.. ஆனா இப்ப பொருந்துமோ என்னவோ..:rolleyes::D


CBI தோழிகளின் அன்பு பரிசு அப்பப்ப வரும்.


ஆனால் சீனா டவுன் என்றால் ஏற்றுக்கொள்ளலாம்.

இப்பதான் பொருந்தும் :icon_rollout:

மன்மதன்
29-07-2008, 03:26 PM
CBI தோழிகளின் அன்பு பரிசு அப்பப்ப வரும்.


ஆனால் சீனா டவுன் என்றால் ஏற்றுக்கொள்ளலாம்.

இப்பதான் பொருந்தும் :icon_rollout:

பரிசா...........கிஸுகிஸா? :rolleyes:

சீனா நாடுதானே.. டவுன்-னு சொல்றீங்க...:D

கண்டிப்பா..:rolleyes::D

ஓவியா
29-07-2008, 03:27 PM
பரிசா...........கிஸுகிஸா? :rolleyes:

சீனா நாடுதானே.. டவுன்-னு சொல்றீங்க...:D

கண்டிப்பா..:rolleyes::D

:lachen001::lachen001::lachen001:

shibly591
29-07-2008, 07:10 PM
நன்றி ஓவியா...

சம்பவங்களும் அது சொல்லப்பட்ட பாணியும் அபரிதம்..

தொடர்க இன்னும்

அகத்தியன்
05-08-2008, 06:03 AM
ஒரு நெகிழ்ச்சியான சம்பவம். கொஞ்ச நேரம் ஒரு அமைதி என்னுள் ஏற்பட்டது. நல்லவர்களுக்கு என்றும் நல்லதே நடக்கும் அக்கா.


அது சொல்லப்பட்ட பாணியும் அருமை.

ஓவியா அக்காவிற்கு என் அன்பளிப்பு௨ 200 ஐ கேஷ்

ஓவியா
09-12-2008, 12:14 AM
நன்றி ஓவியா...

சம்பவங்களும் அது சொல்லப்பட்ட பாணியும் அபரிதம்..

தொடர்க இன்னும்

தாமதத்திற்க்கு மன்னிக்கவும்.

கருத்துக்கு மிக்க நன்றி.*********************************************************************************
ஃ ஆமாம் ஷிப்லி எங்கே? கொஞ்ச நாட்களாக காணவில்லையே!!


*************************************************************************************
ஒரு நெகிழ்ச்சியான சம்பவம். கொஞ்ச நேரம் ஒரு அமைதி என்னுள் ஏற்பட்டது. நல்லவர்களுக்கு என்றும் நல்லதே நடக்கும் அக்கா.


அது சொல்லப்பட்ட பாணியும் அருமை.

ஓவியா அக்காவிற்கு என் அன்பளிப்பு௨ 200 ஐ கேஷ்


200 ஐ-கேஸ்ஸா, மனம் மகிழ்ந்தேன். ரொம்ப நன்றி அகத்தியா.

இது போல் பல சம்பவங்கள் முடக்கில் இருக்கு எழுததான் அடியேனுக்கு நேரமில்லை.

arun
09-12-2008, 05:40 PM
இவ்வளவு நாட்கள் இந்த திரி எனது கண்ணில் படாமல் இருந்த காரணம் என்னவோ...

முதலில் திரியை உயிர்ப்பித்த நண்பருக்கு நன்றி

உண்மையில் நெகிழ வைத்த நிகழ்வு தான் அதுவும் தங்களின் எழுத்துக்களில் அந்த காட்சியை கண் முன்னே கொண்டு வந்துள்ளீர்கள் சூப்பர் பாராட்டுக்கள் :icon_b:

ஓவியா
10-12-2008, 01:53 PM
மிக்க நன்றி அருண்.

உங்க பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சிதான் வந்தது.

tamilkumaran
24-04-2011, 03:58 PM
சகோதரி ஓவியாவிற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

Ravee
30-04-2011, 08:25 AM
ஓவியா ஓவியா என்று எல்லோரும் பாசமழை பொழிவதை கண்டு இருக்கிறேன் .... உங்கள் எழுத்தில் தான் தெரிந்தது நீங்கள் இத்தனை ஓவியமான பெண் என்று ...... உங்கள் ராக்கிக்காக ஏங்கும் அண்ணன் ..... :)