PDA

View Full Version : காதல் புலி........!ஓவியன்
04-08-2007, 07:11 PM
காதலும் ஒரு
புலி தானோ.......?
பிடித்த வாலை
விட முடியவில்லையே.........?

அன்புரசிகன்
04-08-2007, 07:20 PM
காதலித்து புலியானால்
வெற்றியடா தோல்வியடா
பலியானால் காதல் அல்ல
உணர்வு...

ஓவியன்
04-08-2007, 07:21 PM
புலிவால் என்று
தவறி நினைத்தேன்
காதலை.........

அது
அனுமார் வாலாய்
நீளும் என்றறியாமல்.......!

அன்புரசிகன்
04-08-2007, 07:23 PM
அது
அனுமார் வாலாய்
நீளும் என்றறியாமல்.......!

புலிவாலில் வேகமுண்டு
அனுமார்வாலில் விவேகமும் உண்டு
விவேகத்துடன் விவாகமாக
இவனின் வாழ்த்து...

ஓவியன்
04-08-2007, 07:23 PM
காதல் புலியால்
பலியானது
நான் மட்டுமல்ல
அம்பிகாபதி தொடங்கி
ஆயிரமாயிரம் பேர்..........

ஆனால்
இன்னமும் தொடர்கதை
புலி கேட்கும் பலிகள்......

விகடன்
04-08-2007, 07:24 PM
காதல் ஒரு மனதை பற்றும் எயிட்ஸ்
ஒருமுறை பற்றிக்கொண்டால்
உயிர் பிரியும்வரை
மனதை விட்டு அகலாது.

அமரன்
04-08-2007, 07:45 PM
பலருக்குக் காதல் புளியானதன் காரணம் இதுதானோ. பாராட்டுக்கள் ஓவியன். கலக்கிறீங்க..
அன்புரசிகன் விராடன் கூட்டணியமைத்து ஜமாய்க்கிறீங்க.

விகடன்
04-08-2007, 07:47 PM
புலியுடன் காதலை ஒப்பிட்டு புலியின் வலிமையை கூட்டியே விட்டீர்கள். பலே பலே

சிவா.ஜி
05-08-2007, 07:04 AM
ஓவியன் பிடித்துக்கொண்ட கருவில் தொடர்ந்து குறுங்கவிகளை அள்ளி விட்டு
எங்கள் மனங்களை கிள்ளிவிட்டீர்கள்.நீர் கவிப்புலி.
காதல் புலியா,புளியா தெரியாது ஆனால் களி(மலையாளத்தில் விளையாடு என்று அர்த்தம்) என்பது பல பேரின் காதலைக் காணும் போது தெரிகிறது.
அன்புரசிகனும்,விராடனும் அழகாய் வாலைப்பிடித்துக்கொண்டு கவிதையில் கலக்குகிறார்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

விகடன்
05-08-2007, 07:07 AM
அன்புரசிகனும்,விராடனும் அழகாய் வாலைப்பிடித்துக்கொண்டு கவிதையில் கலக்குகிறார்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அப்படியென்றால் ஓவியன் திண்டாடுகின்றார் என்கிறீர்கள்!

சிவா.ஜி
05-08-2007, 07:34 AM
அப்படித்தான் நினைக்கிறேன் விராடன். ரொம்ப நேரமா ஆளக்காணலியே......

aren
05-08-2007, 07:40 AM
காதலுக்குக் கண்ணில்லை என்றே கேள்விப்பட்டிருக்கிறேன். இது ஒரு புதிய உவமை புலிவால். பார்த்து கண்ணைத் திறந்துகொண்டேயிருங்க. கடித்து குதறிடப்போகுது.

கவிதை கலக்கல் ஓவியன். தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

இனியவள்
05-08-2007, 09:42 AM
புலியைக் கூட பூனையாக்கி
பூனையாக்கி
எலியைக் கூட புலியாக்கி
விடும் காதல்....

இனியவள்
05-08-2007, 09:43 AM
புள்ளியாய்த் தோன்றிய
காதல்க் கோடு
பூகோலமாய் மாறி
என்னைச் சுற்றியே
வட்டமிடுகின்றது
பூமியைச் சுற்றும்
நிலவாய்

ஓவியன்
05-08-2007, 03:17 PM
ஓவியன் பிடித்துக்கொண்ட கருவில் தொடர்ந்து குறுங்கவிகளை அள்ளி விட்டு
எங்கள் மனங்களை கிள்ளிவிட்டீர்கள்.நீர் கவிப்புலி.

மிக்க நன்றிகள் சிவா.ஜி!

இவ்வகைக் குறுங்கவிகளில் நான் என்னை மேன் மேலும் வளர்க்கலாம் என்ற நம்பிக்கை எனக்குண்டு, அதனாலேயே இவ்வாறான முயற்சிகள்!. :natur008:

ஓவியன்
05-08-2007, 03:19 PM
புலியைக் கூட பூனையாக்கி
பூனையாக்கி
எலியைக் கூட புலியாக்கி
விடும் காதல்....

காதலிலும்
கரும் புள்ளிகள்
பசுத் தோற்
புலிகளாய்.........!

ஓவியன்
05-08-2007, 03:21 PM
காதலுக்குக் கண்ணில்லை என்றே கேள்விப்பட்டிருக்கிறேன். இது ஒரு புதிய உவமை புலிவால். பார்த்து கண்ணைத் திறந்துகொண்டேயிருங்க. கடித்து குதறிடப்போகுது.

ஆமா அண்ணா!

பிடித்து விட்டேன்,
இப்போது விடவும் முடியாமல்...........
பிடிக்கவும் முடியாமல்..............

ஹீ!,ஹீ!!! :icon_03:

மிக்க நன்றிகளண்ணா உங்கள் பின்னூட்டத்திற்கு........

இனியவள்
05-08-2007, 04:01 PM
புலியாக இருந்த*
என்னை
புளியாக கரைத்து
விட்டாயே

விகடன்
05-08-2007, 04:05 PM
அப்படித்தான் நினைக்கிறேன் விராடன். ரொம்ப நேரமா ஆளக்காணலியே......

என்ன செய்வது சிவா.
வேலை முடிந்தால் கூட்டை நாடவேண்டியது வழமைதானே. அந்த இடைவெளியில் மன்றத்தில் விளித்திருப்பது எப்படி?

இப்பதான் வந்திட்டோமில்லே. :ernaehrung004:

இன்பா
05-08-2007, 04:13 PM
ஆம், காதலும் புலி தான்
பதுங்கி பதுங்கி பாயுமே....

விகடன்
05-08-2007, 04:14 PM
பல இடங்களில் பதுங்குயே இருந்துவிடும்.

இன்பா
05-08-2007, 04:19 PM
பல இடங்களில் பதுங்குயே இருந்துவிடும்.

எல்லாப் புலியும் என்னைப் போல அல்ல... விராடன்..

ஓவியன்
06-08-2007, 05:28 PM
புலியாக இருந்த*
என்னை
புளியாக கரைத்து
விட்டாயே

ஹீ!,ஹீ இனியவள்!

புலியாக இருந்த
உங்களை
புளியாக கரைத்த
புலி தான் காதலோ?

ஓவியன்
06-08-2007, 05:29 PM
ஆம், காதலும் புலி தான்
பதுங்கி பதுங்கி பாயுமே....

காதல் புலி
இந்த
வரிப் புலியையும்
புளியாக கரைத்து விட்டதோ? :D

இனியவள்
06-08-2007, 05:37 PM
ஹீ!,ஹீ இனியவள்!

புலியாக இருந்த
உங்களை
புளியாக கரைத்த
புலி தான் காதலோ?

ஹீ ஹீ ஓவியரே

புலியைக் கண்டு பயந்தவள்
காதல்வேடம் தாங்கி
வந்த புலியை இருகரம்
நீட்டி அழைத்தேன்..

புலியாய் இருந்தவன்
பூனையாய் மாறிவிட்டான்
அன்பெனும் மழையில்
நனைந்து...

ஓவியன்
06-08-2007, 05:50 PM
புலியாய் இருந்தவன்
பூனையாய் மாறிவிட்டான்
அன்பெனும் மழையில்
நனைந்து...

மழையில் நனைந்த
புலி..!
மழை நீரால்
ஆனது
ஜல தோசப் புலி...........! :D

இனியவள்
06-08-2007, 05:51 PM
மழையில் நனைந்த
புலி..!
மழை நீரால்
ஆனது
ஜல தோசப் புலி...........! :D

புலியாய் இருந்த பூனை
எலியாய் மாறி விட்டது
காதல் என்னும் பொறியில்
மாட்டி

ஹீ ஹீ ஓவியரே இப்பொழுது தான் தெரியும்
ஜலதோசம் ஒரு புலி என :D

ஓவியன்
06-08-2007, 05:55 PM
ஹீ ஹீ ஓவியரே இப்பொழுது தான் தெரியும்
ஜலதோசம் ஒரு புலி என :D

புலிக்கு ஜலதோசம் பிடித்தால்

ஜலதோசப் புலி தானே.............! :D

ஓவியன்
06-08-2007, 05:57 PM
எலியும் புலியும்
ஒன்று சேர
வைத்த காதலும்
வெற்றிப் புள்ளிதான்
பலர் வாழ்க்கையில்........!

இனியவள்
06-08-2007, 05:59 PM
எலியும் புலியும்
ஒன்று சேர
வைத்த காதலும்
வெற்றிப் புள்ளிதான்
பலர் வாழ்க்கையில்........!

பூனையை புலியாகவும்
புலியை எலியாகவும்
மாற்றிய காதல் ஏனோ
திருமணத்தின் பின் போடுகின்றது
பிரிவென்னும் கோலம்

ஓவியன்
06-08-2007, 06:01 PM
பூனையானது
புலி,
உன்
காதல் ரசவாதத்தால்....!

இனியவள்
06-08-2007, 06:08 PM
பூனையானது
புலி,
உன்
காதல் ரசவாதத்தால்....!

புலிபோல் பாய்ந்து
வந்த உன் அன்பெனும்
கனையிலே காதல் கொண்டது
இந்த எலி :D

ஓவியன்
06-08-2007, 06:16 PM
எலி கூட
புலியாகும்
காதலித்தாலல்ல........
ஓர்
எழுத்தை மாற்றினால்............! :D

இனியவள்
06-08-2007, 06:22 PM
எலி கூட
புலியாகும்
காதலித்தாலல்ல........
ஓர்
எழுத்தை மாற்றினால்............! :D

ஓர் எழுத்தின் மாற்றம்
ஓர் உயிரின் மாற்றம்
எழுத்தை மாற்றுவதால்
புலியாகும் எலியால்
முடியவில்லை புலியின்
பலத்தைப் பெற

ஓவியன்
06-08-2007, 06:24 PM
ஓர் எழுத்தால்
புலியான எலி
புலியாகவே ஆனது
காதலித்து.............!

இனியவள்
06-08-2007, 06:29 PM
ஓர் எழுத்தால்
புலியான எலி
புலியாகவே ஆனது
காதலித்து.............!

காதலித்து புலியான எலி
கல்யாணத்தின் பின்
பூனையாய் பதுங்குகின்றேதே :sport009: