PDA

View Full Version : மறதிக்குள் மறதி

இனியவள்
04-08-2007, 10:23 AM
விழி கொண்டு உன்னைத்
தேடுகின்றேன் காற்றாய்
மாறிச் சென்றுவிட்டாய்....

கடலில் விழுந்த மழைத்துளியைத்
தேடுவது போல் உன்னைத்
தேடுகின்றேன் என*க்குள்...

உயிரை இழந்து உருவம்
ஒன்று காத்திருக்கின்றது
எமனாய் கவர்ந்து சென்ற
என் உயிரைத் திருப்பிக்
கொடுத்து விடு....

உன்னை மறக்க நினைக்க
நினைக்க கிணற்று நீர் போல்
ஊற்றெடுக்கும் நினைவுகளுக்கு
அணைபோட முடியவில்லை...

போலி வாழ்க்கை வாழ்கின்றேன்
கடலோடு கலந்து விட்ட நீரைப்
போன்ற உன்னை நினைத்து...

என் வாழ்க்கை என்னும்
சோலைவனத்தில் பூத்துக்குலுங்கிய
இன்பம் என்னும் நீருற்றை
பிரித்துச் சென்று விட்டாயே.......

உன் நினைவுகளை மறக்க நினைக்க
நினைக்க நான் மறந்து போகின்றேன்
உன்னை மறக்க நினைப்பதே
உன் நினைவு தான் என்று
என் மறதிக்குள்
மறதியாய் நீ இருப்பதால்......

விகடன்
04-08-2007, 10:32 AM
உன் நினைவுகளை மறக்க நினைக்க
நினைக்க நான் மறந்து போகின்றேன்
உன்னை மறக்க நினைப்பதே
உன் நினைவு தான் என்று
என் மறதிக்குள்
மறதியாய் நீ இருப்பதால்......

அழகான வரிகள். கவிதைக்கு விதையாகவும் வீரியமூட்டுவதாகவும் அமைந்திருக்கிறது. பாராட்டுக்கள் இனியவள்.
உங்களின் கவிதை எனும் யாத்திரை இனிதே தொடர வாழ்த்துக்கள்.

இனியவள்
04-08-2007, 01:23 PM
அழகான வரிகள். கவிதைக்கு விதையாகவும் வீரியமூட்டுவதாகவும் அமைந்திருக்கிறது. பாராட்டுக்கள் இனியவள்.
உங்களின் கவிதை எனும் யாத்திரை இனிதே தொடர வாழ்த்துக்கள்.

நன்றி விராடன்
உங்கள் வாழ்த்துக்கு

aren
04-08-2007, 01:27 PM
வார்த்தை ஜாலங்கள் அற்புதம் இனியவள் அவர்களே. உங்களிடம் வந்து வார்த்தைக் கோர்வைகளை எப்படி கொடுப்பது என்று டியூஷன் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று தோன்றுகிறது. அப்படி அற்புதமாக ஜோடிக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

அமரன்
04-08-2007, 03:30 PM
சிலர் பேசுவது கவித்துவமாக இருக்கும் என்பார்கள்
இனியவள் எழுதுவது எல்லாமே கவிதையாக இருக்கிறது.
பாராட்டுக்கள். தொடருங்கள்.

இனியவள்
05-08-2007, 10:46 AM
வார்த்தை ஜாலங்கள் அற்புதம் இனியவள் அவர்களே. உங்களிடம் வந்து வார்த்தைக் கோர்வைகளை எப்படி கொடுப்பது என்று டியூஷன் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று தோன்றுகிறது. அப்படி அற்புதமாக ஜோடிக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

நன்றி ஆரென் அண்ணா...

இனியவள்
05-08-2007, 10:46 AM
சிலர் பேசுவது கவித்துவமாக இருக்கும் என்பார்கள்
இனியவள் எழுதுவது எல்லாமே கவிதையாக இருக்கிறது.
பாராட்டுக்கள். தொடருங்கள்.

நன்றி அமர்